WEBVTT

00:07.480 --> 00:10.280
சாம் ஓ'ட்வயர்தான் முதல் பலி.

00:10.360 --> 00:13.120
உன் காயங்களின் படங்கள்.
உடைந்த இடுப்பெலும்பு.

00:13.200 --> 00:15.440
உடைந்த மணிக்கட்டுகள்.
உடைந்த தோள்பட்டை.

00:15.520 --> 00:19.360
விக்டோரியாவுக்கு சாம் செஞ்சதை தெரிஞ்சு
அதுக்காக அவனை கொன்றிருக்காங்க.

00:19.400 --> 00:22.920
எனக்கு அவ பணம் வேண்டாம், அலேய்னா.
எங்க நிலத்தை அவ திருப்பி கொடுக்கணும்.

00:23.000 --> 00:24.960
இது மிராண்டாவின் காதணி,

00:25.040 --> 00:27.120
அவள் அத்துமீறி நுழைந்திருக்கிறா.

00:27.200 --> 00:28.200
போலிஸ்

00:28.280 --> 00:31.360
நேற்றிரவு, டெட்லோக் ஏரியிலிருந்து ஆறு
உடல்கள் எடுக்கப்பட்டன.

00:31.440 --> 00:33.680
ஏரிலருந்து ஒரு காரை வெளியே எடுத்தாங்க.

00:33.840 --> 00:36.920
மிதக்கும் உடல்கள் காரின்
உரிமையாளர் வில்லியம் கருதரஸ்.

00:37.000 --> 00:38.560
மார்கரெட்டின் சகோதரனா?

00:38.640 --> 00:40.560
இதை சீட் அடியில் கண்டெடுத்தேன்.

00:40.640 --> 00:42.840
அது விக்டோரியா ஓ'ட்வயரின் தொலைந்த
காலணி.

00:42.920 --> 00:45.160
ஊரு பூரா ஆன்-வெறுப்பு பியன்கள் இருக்காங்க.

00:45.240 --> 00:46.120
எல்லோரும் கீழே.

00:46.240 --> 00:48.120
அந்த சைக்கோ நாய்களை கைது
செய்றேன்.

00:48.200 --> 00:49.080
ஐயோ!

00:49.880 --> 00:52.320
தேடினால் என்ன கிடக்கும் என்பது வியப்பானது.

00:52.400 --> 00:55.000
நாக்குகள். உன் தோழிகளின் ஃப்ரீசர்களில்.

00:55.080 --> 00:58.600
டெட்லாக்கின் 17 வயதுக்கு மேல் உள்ள
எல்லா ஆண்களையும் எங்கோ

00:58.680 --> 01:00.920
பாதுகாப்பான ரகசிய இடம்
கொண்டு போறாங்க.

01:01.000 --> 01:03.200
கொலையாளி மட்டமானவரை
குறி வைக்கறான், ஜேம்ஸ்.

01:03.280 --> 01:05.360
பார்த்ததிலேயே மிக மட்டமானவன்
நீதான்.

01:06.120 --> 01:07.680
நீ பஸ்ஸில் போகணும்!

01:08.240 --> 01:10.760
பெண் கொலையாளிகள் கெட்ட பெயர்
வாங்க கொல்வதில்லை.

01:10.840 --> 01:11.920
அது ஒரு ஆண்!

01:12.000 --> 01:12.920
போலிஸ்

01:40.920 --> 01:43.560
லேனா ராலா வார் ஃபால்ஸ்

01:43.640 --> 01:46.200
க்ளோ வோர்ம் ட்ரெயில்

01:46.280 --> 01:48.640
மவுண்ட் மவுண்டன் லுக்அவுட்

01:52.280 --> 01:54.400
சரி. ஆமா, ஆமா.

01:54.800 --> 01:56.720
கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா?

01:56.800 --> 01:59.760
நான்தான் கொலையாளினு ஒப்புகிட்டேனே.

01:59.840 --> 02:01.000
பறவைக்கூடா இருக்கே.

02:01.080 --> 02:04.440
இது சரியில்லைதான், ஆனா ஜெயிலில்
உங்க எல்லாருக்கும் இடம் இல்ல.

02:04.520 --> 02:06.560
மார்டீ க்ராக்கு நீ வர வேண்டாம்.

02:06.640 --> 02:08.600
ஃபெர்ன், ஏஞ்சலா இரண்டும் பசியாருக்கும்.

02:08.760 --> 02:10.680
அவ குழந்தைங்க பட்டினி கிடக்கறாங்க.

02:10.760 --> 02:12.600
அவங்க குழந்தைங்க இல்ல. நாய்கள்.

02:13.400 --> 02:14.760
நாடியா கவலையா இருக்கா.

02:14.840 --> 02:17.000
செல்லங்களே, என் லாயர் எல்லாம் சரி செய்வா.

02:17.080 --> 02:18.800
கர்ப்பமா இருக்கேன்.

02:18.880 --> 02:21.840
-உன் குப்பை லாயர் எனக்கு வேண்டாம்.
-நீ கர்ப்பமா? கடவுளே.

02:21.960 --> 02:23.520
எல்லாரும் வாயை மூடறீங்களா?

02:25.360 --> 02:26.680
நன்றி. நன்றி.

02:27.040 --> 02:28.280
-டல்சீ?
-என்ன?

02:28.360 --> 02:29.560
என்ன நடக்குது?

02:29.600 --> 02:32.520
நீங்க சேர்ந்து ஆண்களை கொல்றீங்கனு
ஹேஸ்டிங்ஸ் நினைப்பு.

02:32.600 --> 02:35.400
-தொடர் கொலையாளிகளின் அணி மாதிரி.
-என்ன?

02:35.440 --> 02:36.880
-நாங்களா?
-இது அபத்தம்.

02:36.960 --> 02:39.880
கவலைப்படாதீங்க, உங்களில் யாரும்
செய்யலேன்னு தெரியும்.

02:40.600 --> 02:44.160
விக், சாம் செத்த இரவு உங்க தொலைஞ்ச
செருப்பை ஆபி கண்டு பிடிச்சா.

02:44.240 --> 02:47.400
ஏரி உடல்களை வைக்க உபயோகித்த
காரில் அது இருந்தது.

02:47.480 --> 02:51.480
நடந்து போனப்ப கொலையாளி உங்களை
ஏத்திகிட்டு, அலேய்னா வீட்டில் விட்டுட்டு,

02:51.560 --> 02:53.720
திரும்பி போய் சாமை கொலை செஞ்சிருக்காங்க.

02:53.800 --> 02:56.880
-யார் உங்களை கொண்டு போனதுனு நினைவிருக்கா?
-ஏதாவது?

02:56.960 --> 02:59.160
துணி, வாசனை, அவங்க குரல்கள்?

02:59.840 --> 03:00.680
இல்ல.

03:01.520 --> 03:03.240
எனக்கு கடைசியா ஞாபகம் இருக்கறது

03:03.320 --> 03:05.800
ஷாக்ல சாம் தண்ணீரில் விழறதுதான்.

03:06.840 --> 03:11.200
திடீர்னு, அடுத்த நாளா இருக்கு,
ஒரு நர்ஸ் எனக்கு சேண்ட்விச் குடுக்கறா.

03:11.280 --> 03:15.000
கார் பதிவு எண்லேருந்து விக்டோரியாவை
கூட்டிட்டு போன நபர் யார்னு

03:15.080 --> 03:16.760
கண்டு பிடிக்க முடியாதா?

03:16.840 --> 03:19.240
அந்த கார் உங்க தம்பி பேர்ல இருக்கு.

03:20.320 --> 03:23.040
-வில்லியமா?
-அவரை கடைசியா எப்ப பார்த்தீங்க?

03:23.120 --> 03:26.120
அவர், இல்லே அவரோட பளபளா வண்டி.

03:26.200 --> 03:28.320
என்ன, அஞ்சு, ஆறு இருக்குமா?

03:28.840 --> 03:30.560
ஆமா, ஆறு வருஷம் முன்பு.

03:31.080 --> 03:34.440
கருதர்ஸ் தீவு பத்தி சண்டை
அப்புறம் அவன் உபுட் போய்ட்டான்.

03:35.080 --> 03:37.600
போறதுக்கு முன்
காரை வித்துட்டார்னு நினைக்கிறேன்.

03:37.680 --> 03:40.160
-அதுக்குப் பிறகு தொடர்பு இல்லையா?
-இல்லை.

03:41.400 --> 03:43.480
அவன் உபுட்ல இருக்கான், இல்லையா?

03:44.040 --> 03:47.080
இந்தோனேசியன் தூதரகம் கூட
ஸ்வென் இப்ப பேசறார், மேடம்.

03:47.160 --> 03:49.880
-சரி, அன்பே, நன்றி.
-இரு. ஸ்கை எங்கே?

03:49.960 --> 03:52.200
அவளுக்கு பெயில்னா, செம கோபம் வரும்.

03:52.280 --> 03:54.000
-அவ போய்ட்டா.
-என்ன?

03:54.080 --> 03:57.680
ஆமா, அவளை வெளியே விட்டபின்,
டாம், விக், நான் டெட்லாக்கை விட்டுபோய்

03:57.760 --> 04:01.440
திரும்பியே வரக்கூடாதுன்னா,
நாங்க "வேண்டாம்"னோம்,

04:01.520 --> 04:04.440
அவ கோபப்பட்டு கிளம்பிட்டா.
அதிலிருந்து நல்ல இரவு.

04:04.520 --> 04:05.520
புத்திசாலித்தனம்.

04:05.600 --> 04:08.280
இப்ப ஹேஸ்டிங்ஸ்
அவளுக்கு குறி வெச்சிருக்கார்.

04:08.360 --> 04:10.960
ஆபி, ஸ்கை கூட தொடர்பு கொள்ள
முடியுமான்னு பாரு.

04:11.040 --> 04:13.200
-சரி, மேடம்.
-நீ, டாக்டர்-மேயர்?

04:13.280 --> 04:15.360
சாம் இறந்த இரவு விக்கை யார்
கொண்டு வந்தது?

04:15.440 --> 04:16.880
நடந்து வந்தான்னு நினைச்சேன்.

04:16.960 --> 04:20.480
எனக்கு மாலைக்கண், அதனால்,
வவ்வால் மாதிரி, காதாலதான் பார்ப்பேன்.

04:20.560 --> 04:23.760
-மார்கரெட், உங்களுக்கு?
-நான் அங்க ரொம்ப நேரம் இருக்கல.

04:23.800 --> 04:26.120
-ஷரெல், உனக்கு?
-போலீஸ் நாசமா போங்க.

04:26.200 --> 04:27.600
-சரி, நல்லது.
-ஆமாம்.

04:27.760 --> 04:28.920
ஒரு பாட்டு கேட்டது.

04:31.000 --> 04:32.200
அது என்ன, விக்?

04:32.880 --> 04:35.000
கார்ல இருந்தது ஞாபகம் இருக்கு.

04:36.080 --> 04:38.000
ஒரு பாட்டு பாடிகிட்டு இருந்தது.

04:45.160 --> 04:51.000
டெட்லாக்

05:12.040 --> 05:14.000
இல்லே, இல்லே.

05:23.360 --> 05:25.920
அது ராபி வில்லியம்ஸ்,
கைலி மிநோக் பாட்டா?

05:26.040 --> 05:27.120
-கிட்ஸ்!
-கிட்ஸ்.

05:27.200 --> 05:29.360
-அது கிட்ஸ்?
-இல்லே, அந்த பாட்டு இல்லே.

05:29.440 --> 05:31.320
இன்னொரு கைலி பாட்டு, அதுவா?

05:31.400 --> 05:33.720
லோகோ-மோஷன்? ஐ ஷுட் பி சோ லக்கி?

05:33.800 --> 05:35.720
கேன்ட் கெட் யு அவுட் ஆப் மை ஹெட்?

05:35.800 --> 05:37.240
ஸ்டெப் பேக் இன் டைம்.

05:37.320 --> 05:39.600
கன்ஃபைட் இன் மி,
அது ஒரு பிரபலமாகாத பாட்டு.

05:39.680 --> 05:42.640
அவகிட்ட கத்தாதே,
அவ கல்யாண பார்ட்டி டிஜே இல்ல.

05:42.720 --> 05:44.120
ஆமா, அது மறந்து போச்சு.

05:44.240 --> 05:46.640
ரெட்கிளிஃப்! கானல்! வெளியே போங்க.

05:46.720 --> 05:48.600
-நாங்க பெண்கள் கூட பேசணும்.
-வெளியே!

05:48.680 --> 05:51.480
தவறான உறவுகளுக்காக
உன்னை கைது செய்வதற்கு முன்.

05:51.560 --> 05:55.240
அது ஒரின வெறுப்பு. டல்சீக்கும் எனக்கும்
"தவறான" விஷயம் எதுவுமில்ல,

05:55.320 --> 05:56.520
நாங்க பிரியப் போறோம்--

05:56.600 --> 05:58.720
கேத், சும்மா இரு! இது பயன்படாது.

05:58.800 --> 06:00.120
வெளியே போ. இப்பவே.

06:00.200 --> 06:01.440
போறோம், ஷேன்.

06:01.520 --> 06:04.120
கமிஷனர், நான் மார்கரெட் கருதர்ஸ்.

06:04.240 --> 06:06.120
இது எவ்வளவு நேரம் எடுக்கப் போகுது?

06:08.480 --> 06:12.640
சாம் ஓ'ட்வயர் தன் மனைவியை தாக்கினான்
அது கொலையாளிக்கு தெரியும் மேலும்--

06:12.760 --> 06:16.560
அவளுக்கு தெரியும், ஏன்னா ஸ்கைதான் கொலையாளி
அவ ஓடிப் போய்ட்டா.

06:16.640 --> 06:19.880
-ரெய்ட் பத்தி அவகிட்டே சொன்னயா?
-என்ன? நான் சொல்லல.

06:19.960 --> 06:21.920
உன்னிடம் ஓ'ட்வயர் எண் இருக்கு.

06:22.000 --> 06:24.800
அவ போன் வேலை செய்யறதே கம்மி.
ஒரு பார்தான் இருக்கு.

06:24.880 --> 06:26.040
-சர்--
-இது குப்பை போன்.

06:26.120 --> 06:27.800
இதை நான் முன்பே செஞ்சிருக்கணும்.

06:27.920 --> 06:30.120
இந்த பெண்களுக்காக நீ ரொம்ப உருகறே,

06:30.200 --> 06:32.320
அவங்க என்ன செஞ்சாலும் உனக்கு தெரியாது.

06:32.400 --> 06:35.120
கானல், உன்னை தற்காலிக வேலை நீக்கம்
செய்யறேன்.

06:35.560 --> 06:37.000
-நீ என்ன கருமம்?
-சர்--

06:37.080 --> 06:39.200
-இதை செய்யாதீங்க.
-வேற பேச்சே இல்ல.

06:39.280 --> 06:40.760
வெளியே போ. வீட்டுக்கு போ.

06:40.840 --> 06:43.640
போய் என்ன கருமம் வேணாலும் செஞ்சுக்கோ.

06:46.640 --> 06:50.360
டெட்லாக்குக்கு நல்வரவு
பாப். 2395

06:53.120 --> 06:56.520
டெட்லாக் உணவுத் திருவிழா
கொலை இல்லம்

06:56.600 --> 06:59.080
உங்களை மீண்டும் கண்டுபிடியுங்கள்

07:07.160 --> 07:09.800
சரி. உங்களில் யார் கொலையாளி?

07:12.280 --> 07:15.120
என்னை உள்ள போடலாம்னு பாக்கறாங்க
நான் ஒப்புக்க மாட்டேன்.

07:15.200 --> 07:16.440
எனக்கு குழந்தை இருக்கு.

07:16.520 --> 07:18.640
-எல்லாருக்கும்தான், ஷரெல்.
-எனக்கு இல்ல.

07:18.720 --> 07:22.400
எனக்கும் இல்லை, ஆனா என் நாய்களிடம்
எனக்கு தாய்மை உணர்வு இருக்கு.

07:22.480 --> 07:25.920
-அதாவது, நான் அவற்றை பெக்கல,
-நிறுத்தேன், கேத்!

07:26.000 --> 07:29.320
எல்லாத்துக்கும் மூக்கை நுழைக்கிறதை
நிறுத்து, அழுமூஞ்சி பன்றி.

07:30.280 --> 07:31.600
என்னது?

07:31.680 --> 07:33.880
இந்த கொலைகள் நடந்த நேரம் எல்லாம்,

07:33.960 --> 07:36.920
உன்னை எப்படி அவை பாதிச்சதுன்னு
மட்டும்தான் உன் கவலை.

07:37.000 --> 07:38.960
உண்மையில்ல. டெட்லாக் பிடிக்கும்.

07:39.040 --> 07:43.280
அப்படியா? ஏன்னா டல்சீ மக்கள் சாவறதை
தடுக்க முயற்சி செஞ்சுகிட்டே இருக்கா.

07:43.360 --> 07:45.240
அதனால் நீ அவகூட முறிச்சுகிட்டே.

07:45.880 --> 07:50.200
நேசங்களே, இப்ப வாங்க. மற்ற பெண்களுக்கு
பெண்கள்தான் ஆதரவு குடுக்கணும்.

07:50.320 --> 07:51.800
வீணாப் போனவ.

07:51.880 --> 07:55.280
என் அம்மா ஜெயிலில் இருப்பது
நீ ஏதோ கதை கட்டினதால்,

07:55.360 --> 07:56.720
"பழைய துப்பாக்கி திருடினா"

07:56.800 --> 07:59.880
உன்னால் என் குழந்தை பாட்டி இல்லாம வளருது.

07:59.960 --> 08:02.120
ஒ, கடவுளே. உண்மையா, மார்கரெட்?

08:02.200 --> 08:04.120
ஷரெல், நான் எப்படி உதவட்டும்?

08:04.200 --> 08:06.760
நீ வேற இடம் போகலாம். இடம் மாறிகள் உங்களால

08:06.840 --> 08:09.920
இங்கே வாழறதுக்கே அஞ்சு வேலை
செய்ய வேண்டிருக்கு.

08:10.080 --> 08:13.360
நீங்க லெஸ்பியன்ஸ் வந்ததிலேருந்து
டெட்லாக் சீரழிஞ்சு போச்சு.

08:13.440 --> 08:15.600
நெஸ்ஸா. நீ அதை சொல்ல கூடாது.

08:15.680 --> 08:17.680
-உன் பையன் கேள்விப்பட்டா?
-அதனால்?

08:17.760 --> 08:19.120
அவன் கே.

08:19.200 --> 08:22.880
-டால்ஃபி கே இல்ல.
-என்ன? நிச்சயமா அவன் அதான்!

08:23.680 --> 08:26.600
யாருக்கும் தெரியாதா?
இதைத்தான் பேசிகிட்டு இருக்கேன்.

08:26.680 --> 08:30.040
பண்போட இருக்கிற மாதிரி,
ஆனா உங்க நடுவில் ஒத்துமை இல்லே.

08:30.120 --> 08:32.160
நீ, நாய் தாயே, நீயும் கேவலம்தான்.

08:32.240 --> 08:34.040
உதவாத மேயர். நீயும் கேவலம்தான்.

08:34.120 --> 08:36.440
காலை வாந்தி, நீயும் அரைகுறைதான்.

08:36.960 --> 08:40.000
நீ, மார்கரெட் நாய் கருதர்ஸ்,

08:40.080 --> 08:42.960
உலக பீத்தல், உன்னைத்தான்
ரொம்ப வெறுக்கறேன்.

08:43.040 --> 08:45.880
நான் சொல்லிடறேன். நாம் ஒரு
கொலையாளியை தேடறோம்னா,

08:45.960 --> 08:48.040
ஷரெலுக்கு குற்ற பின்னணி இருக்கு.

08:48.120 --> 08:52.080
எனக்கு ஒண்ணும் இல்ல. நான் ஒரு பழங்குடி.
கொல்ல எப்ப நேரம் இருக்கு?

08:52.160 --> 08:55.240
நேரம் இருந்தா என் குழந்தையை
குளத்துக்கு கூட்டி போவேனா,

08:55.320 --> 08:56.400
அவ அப்பனை கொல்வேனா?

08:56.480 --> 09:00.280
அந்த ஆளுங்களை மயக்கி, துணியை கழட்டி
அங்கே இங்கே இழுத்துட்டு போக,

09:00.360 --> 09:02.040
யாருக்கு நேரம் இருக்கு?

09:02.120 --> 09:04.600
என்கிட்ட இல்ல.
எதுக்குமே என்கிட்ட நேரம் இல்ல.

09:05.960 --> 09:07.200
என்னது அது?

09:11.600 --> 09:16.640
சிக்கனா? டேமி, நான் ஏற்கனவே ஜெயிலில்
இருக்கேன், வெறுப்பேத்தாதே.

09:16.760 --> 09:18.760
என் தப்பு. இந்தா கொஞ்சம் சீசல்ஸ்.

09:18.880 --> 09:21.600
சட்ட உதவி பெற ஆன்ட்டி ஃபே
ஃபோனில் பேசறாங்க

09:21.640 --> 09:24.840
இங்கே கழிவறை வசதி
எப்படியிருக்குன்னு கேட்கறாங்க.

09:24.880 --> 09:26.120
டேமி? மிராண்டா?

09:26.200 --> 09:28.400
-சிப்ஸ், ஆபி.
-சிப்சாவது குடுக்கலாமில்ல!

09:28.480 --> 09:30.200
இல்ல, இது சிப்ஸ் பத்தியில்லே.

09:31.000 --> 09:33.320
மார்கரெட் இதை தீவில் கண்டுபிடிச்சா.

09:34.280 --> 09:36.200
அந்த காதணி நல்லாயிருக்கே.

09:36.280 --> 09:38.840
-இது மாதிரி காதணியை பாத்ததில்லை.
-பாத்திருக்கே.

09:38.880 --> 09:42.880
ட்ரென்ட் உடலை நீ கண்டுபிடிச்சப்ப
இது மாதிரி போட்டிருந்தே.

09:43.480 --> 09:45.160
அங்க என்ன நடந்ததுன்னு தெரியுமா?

09:45.240 --> 09:47.040
அது அந்த மகாப்பெரிய கடல்புறா.

09:47.120 --> 09:50.000
இதை எடுத்து பறந்து போய்
அந்த தீவில் போட்டிருக்கும்.

09:50.080 --> 09:52.120
எனக்கு நீ அங்க போறதைப் பத்தி கவலையில்ல

09:52.240 --> 09:56.080
ஆனா மார்கரெட்டுக்கு தெரிஞ்சா,
எச்சரிக்கையை தாண்டி ஏதாவது செய்வா.

10:02.640 --> 10:06.160
அந்த தீவில் வேற யாரையாவது
நீங்க ரெண்டு பேரும் பாத்தீங்களா?

10:06.240 --> 10:07.480
நாங்க அங்க போனதே இல்ல.

10:07.520 --> 10:09.960
கடவுளே. சரி, என்னவோ. வீட்டுக்குப் போங்க.

10:10.040 --> 10:13.040
-ஏதோ சிப்ஸ். கண்றாவி சிக்கன்.
-நன்றி.

10:14.600 --> 10:17.720
-சே, டேமி.
-ஒண்ணும் ஆகாது. நடக்கலாம் வா.

10:22.240 --> 10:24.520
ஜான்சன், ஸ்கை ஓ'ட்வயர் பத்தி
தகவல் வந்திருக்கு.

10:24.640 --> 10:27.160
-நான் சொல்றேன், செஞ்சது அவ இல்ல.
-வெளியே போ.

10:28.520 --> 10:29.880
-கடவுளே! சே, சே!
-சே!

10:29.960 --> 10:32.200
சே. என்ன பண்றது.

10:34.760 --> 10:37.000
-கடவுளே, சே--
-ஒ, கடவுளே.

10:37.120 --> 10:39.480
உள்ளேருந்து டாக்டர் ராமியை
வர சொல்லுங்க!

10:39.520 --> 10:42.320
ஃபில்! ஃபில், என்ன ஆச்சு, நண்பா?
ரத்தம் வடியுது!

10:42.400 --> 10:44.120
-அவன் ஏன் பஸ்ஸில் இல்ல?
-தெரியாது.

10:44.200 --> 10:45.600
பஸ்சுக்கு ஏதாவது ஆச்சா?

10:45.640 --> 10:48.040
-பயணிகள் பட்டியலை வாங்கு.
-சரி.

10:48.120 --> 10:51.160
-சுட்டிருக்காங்க. மார்பு காயம்.
-நாக்கிலேருந்து ரத்தம்.

10:51.240 --> 10:53.200
அவன் நாக்கை வெட்டியிருக்காங்க.

10:53.280 --> 10:56.080
-அந்த சைக்கோ நாய்!
-கவலைப்படாதே. பேச வேண்டாம்,

10:56.160 --> 10:59.040
-தலை ஆட்டு, பஸ்லேர்ந்து நடந்து வந்தயா?
-போ, கானல்.

10:59.120 --> 11:00.480
நீ இதில் இல்லே.

11:00.560 --> 11:03.800
ஷேன், அவன் நடந்து வந்திருந்தான்னா,
பஸ் கிட்டதான் இருக்கும்!

11:03.880 --> 11:05.840
எந்த நாய் இதை செஞ்சது, நண்பா?

11:05.920 --> 11:08.440
-கொலையாளி பஸ்லே இருக்கலாம்.
-வரேன்.

11:08.520 --> 11:11.480
அவளை போகச்சொல்லு!
மிச்ச கதையையும் காலி பண்ணிடுவா.

11:11.560 --> 11:15.000
எனக்கு டாக்டர் என்ற கடமை இருக்கு,
ஃபில் மெக்காங்கஸ்க்கு கூட!

11:15.080 --> 11:17.600
தலையை முன்னே கொண்டு வா,
மூச்சு விட்டுகிட்டே இரு.

11:17.680 --> 11:20.200
பஸ் போக வேண்டிய இடத்துக்கு
போய் சேரல.

11:20.280 --> 11:22.120
ஸ்கை ஓ'ட்வயர் பஸ்சை கடத்தினாளா?

11:22.200 --> 11:23.640
டிடக்டிவ்! ரேவை கூப்பிடு.

11:23.720 --> 11:27.720
கொலையாளி ஒரு ஆண், ஷேன்.
அவன் ஏற்கனவே பஸ்ல இருக்கான்.

11:27.800 --> 11:30.520
-ஸ்கை ஓ'ட்வயர் பஸ்ல இருக்காளா?
-அவனால் பேச முடியாது!

11:31.600 --> 11:33.680
உன் போன்ல டைப் அடிக்க சொல்லு, சீக்கிரம்!

11:33.760 --> 11:36.320
எப்படினு தெரியல.
வொர்க் கேலக்சிக்கு மாத்திடிச்சு.

11:36.400 --> 11:37.920
ஓ, நான் அணைச்சு வெச்சுட்டேன்.

11:38.000 --> 11:40.320
ஃபில், என் போன்ல டைப் செய்.

11:40.440 --> 11:41.840
பஸ் எங்கே, ஃபில்?

11:41.920 --> 11:43.200
அவ ஆண்களை கொல்றாளா?

11:43.320 --> 11:44.880
-அட, டாம்.
தாக்குப் பிடி, ஃபில்.

11:45.400 --> 11:47.480
எழுந்திரு, தூங்காதே, நாயே!

11:48.280 --> 11:49.480
இது டாம், டெக்ஸ்ட் செய்.

11:49.560 --> 11:51.120
பஸ் எங்க இருக்கு, ஃபில்?

11:51.200 --> 11:53.560
நல்ல நாள், இது ரே.
வாய்ஸ்மெயிலில் இருக்கேன்.

11:53.640 --> 11:56.720
அவன் மயக்கமாயிட்டான்,
யாராவது ஆம்புலன்ஸ் கூப்பிட்டாச்சா?

11:56.840 --> 11:58.680
நாம் பஸ்சை கண்டு பிடிக்கணும்!

11:58.800 --> 12:00.120
-தாக்குப் பிடி.
-ஒ, கடவுளே!

12:00.200 --> 12:01.280
அட சனியனே!

12:02.640 --> 12:03.640
கவனிங்க.

12:04.920 --> 12:07.600
1930 மணிக்கு, 18 ஆண்களும் சிறுவர்களும்

12:07.680 --> 12:10.480
பாதுகாப்புக்காக டெட்லாக்கிலிருந்து
ஒரு பஸ்ல ஏறினாங்க.

12:11.440 --> 12:13.720
நடுவில், நம் முக்கிய சந்தேக நபர்,

12:13.800 --> 12:16.400
ஸ்கை ஓ'ட்வயர் பஸ்சை ஹைஜாக்
பண்ணிட்டா.

12:17.000 --> 12:19.720
பஸ் உள்ள இடத்தை போன்கள் மூலம்
கண்டு பிடிக்கறோம்.

12:19.800 --> 12:23.200
ஆனா, மக்களே, மிக மோசமான
விளைவுக்கு தயாரா இருக்கணும்.

12:23.880 --> 12:25.960
தயார் நிலையில் இருக்கணும்.

12:26.040 --> 12:29.040
அந்த பஸ்ல என்ன
கண்டுபிடிக்கப் போறோம்னு தெரியாது.

12:29.120 --> 12:32.200
ஹோஷியார்பூர் பஸ் படுகொலை
போல இருக்கலாம்.

12:32.280 --> 12:34.040
-கடவுளே.
-கிளம்புங்க.

12:34.120 --> 12:35.880
எல்லோரிடமும் ஆயுதம் இருக்கணும்.

12:36.920 --> 12:39.640
அந்த சைக்கோ பெண் நாய்
என்ன பண்ணுவான்னு தெரியாது.

12:39.720 --> 12:43.760
சரி, மக்களே. இடம் தெரிஞ்சவுடன்
கிளம்ப தயாரா இருக்கணும்,

12:43.840 --> 12:46.920
அதனால் தயார் ஆகுங்க,
ஏன்னா இது பயங்கரமா இருக்க போகுது.

12:48.680 --> 12:50.560
நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?

12:50.640 --> 12:52.040
இங்கே நீ மாட்டிக்கப் போறே!

12:52.120 --> 12:54.680
யாரும் இங்கே வர மாட்டாங்க.
பெண் மூத்திர பயம்.

12:54.760 --> 12:57.440
எனக்கு ஆய் போகணும்னா?
நீ அதை கேட்கக் கூடாது.

12:57.520 --> 12:59.080
அப்ப ஒரு பாட்டு போடறேன்.

12:59.680 --> 13:01.600
எடுப்பா, டாம், போனுக்கு பதிலளி.

13:01.680 --> 13:03.480
இந்த பஸ் சைக்கோவுக்கு என்ன வேணும்?

13:03.560 --> 13:07.040
அவன் என்ன அவங்களை
ஒரு ஜாலி டூர் கூட்டிட்டு போறானா?

13:08.840 --> 13:10.240
நான்தான், மேடம்களே.

13:10.320 --> 13:12.560
பஸ்ஸில் உள்ள பயணிகளின் பட்டியல்.

13:12.640 --> 13:15.160
நான் நாடியா போனை
ஸ்டேஷன்லேர்ந்து திருடிட்டேன்.

13:15.240 --> 13:16.720
போனை திருடக் கூடாது.

13:16.800 --> 13:19.800
ஆமா, அதே போல் நீங்க
கழிவறையிலிருந்து ஒரு சட்டவிரோத

13:19.880 --> 13:21.400
விசாரணை செய்யக் கூடாது.

13:22.080 --> 13:23.040
அப்ப சரி.

13:23.680 --> 13:27.080
டாமை ட்ராக் செய்ய நாடியா ஆப்
வெச்சிருப்பா, ஜேம்ஸ் மாதிரி.

13:30.320 --> 13:33.560
இது பெண்கள் கழிப்பறை.
இல்ல, எனக்கு தெரியாது.

13:33.640 --> 13:37.040
வில்லியம் கருதர்ஸ் பாஸ்போர்ட்
2016லேருந்து உபயோகத்தில் இல்ல.

13:37.120 --> 13:39.040
-என்ன?
-ஆமா, விசித்திரமா இருக்கு.

13:39.120 --> 13:42.440
முட்டை கண்ணி, மிதக்கும் உடல்களில்
வில்லியம் இல்லைதானே?

13:42.520 --> 13:45.200
கொலையாளி கொல்ல தொடங்கும்
முன் அவன் காணாம போய்ட்டான்.

13:45.280 --> 13:46.440
சரி, சரி.

13:46.520 --> 13:49.480
வில்லியம் இருக்கிற இடத்தை
கண்டுபிடிக்க பார்.

13:49.560 --> 13:52.240
முதலில் பஸ்சில் இருப்பவங்களை
கண்டு பிடிக்கணும்.

13:52.320 --> 13:54.760
போனை கொடு,
நீ பாஸ்வேர்ட் கண்டுபிடிக்க முடியாது.

13:54.840 --> 13:56.800
69-69-69 லேருந்து போட்டு பாரு...

13:56.880 --> 13:59.160
-அது டாம் பிறந்த நாள்.
-அழகு.

13:59.240 --> 14:01.360
-நாடியா அவ்வளவு நல்ல பெண்.
-ஆமா.

14:01.440 --> 14:03.560
அவகிட்ட ட்ராக்கிங் ஆப் இருக்குமா தெரியல.

14:03.640 --> 14:05.560
சரி, இருக்கு, இதோ இருக்கு.

14:05.640 --> 14:07.120
கவலை இணைப்பு பாணி.

14:07.200 --> 14:09.840
கடவுளே, இங்கே சிக்னல் மோசமா இருக்கு.

14:09.920 --> 14:11.960
பயணிகள் பட்டியலைப் பார்ப்போம்.

14:12.040 --> 14:16.480
இங்கே என்ன இருக்கு?
மைக், ஹன்டர், டால்ஃப், ரே இருக்காங்க...

14:18.520 --> 14:21.320
-டாம் போனில் இடம் கண்டுபிடிச்சேன்.
-கவனிங்க.

14:21.400 --> 14:23.200
சீக்கிரம், ஏதோ நடக்குது.

14:23.280 --> 14:26.120
என்ன? இரு, இது சரியில்ல. என்ன?

14:26.840 --> 14:30.480
டெல்கோ கோஆர்டினேட்கள் அவங்க
கடலில், மெல்பர்ன் நோக்கி போறதா காட்டுது.

14:30.560 --> 14:33.960
சந்தேகப்பட்ட மாதிரி,
ஸ்கை ஓ'ட்வயரும் அங்கேதான்.

14:34.040 --> 14:37.240
-அவ போன் படகில் இருக்கு.
-கடவுளே.

14:37.320 --> 14:38.440
அது சரிதான்.

14:38.520 --> 14:43.400
ஆண்-கடத்தி ஸ்கை ஓ'ட்வயர் பஸ்சை
பாஸ் ஸ்ட்ரெய்ட் ஃபெர்ரில ஏத்தியிருக்கா.

14:44.160 --> 14:46.160
அடக் கடவுளே.

14:46.840 --> 14:48.840
எனக்கு தெரியும். அவ கொடூரமானவ.

14:49.280 --> 14:53.440
அவகிட்டேருந்து ஆண்களை காப்பாத்த
நமக்கு ஹெலிகாப்டர் தயாரா இருக்கு.

14:53.520 --> 14:55.480
சரி, மக்களே, கிளம்பலாம்.

14:55.560 --> 14:56.760
போலாம் வாங்க!

14:58.680 --> 15:01.040
எனக்கு இது வேண்டாம்.
எனக்கு எதுவுமே வேண்டாம்.

15:01.120 --> 15:02.880
-வா, ஸ்வென்.
-வாங்க, மக்களே.

15:02.960 --> 15:04.400
என்னைக் கூப்பிடு.

15:05.400 --> 15:07.000
-போ, சீக்கிரம் போ.
-சரி.

15:21.160 --> 15:24.720
ஸ்கையின் போன் டேட்டாபடி அவ
டெட்லாக்கை விட்டு கிளம்பி உள்ளே போனா.

15:24.800 --> 15:27.320
டாமை கூப்பிட்டுட்டு கடற்கரை நோக்கி போனா.

15:27.400 --> 15:30.480
செட்லர் ஹைவே கிட்டே அவள் கைபேசி
இணைப்பு குறைஞ்சு போச்சு

15:30.560 --> 15:33.040
பஸ்ஸில் உள்ள போன்களின் டவர்கள் போலவே.

15:33.120 --> 15:38.240
அதனால் என்ன? ஸ்கையின் சூபரு பஸ்ஸை
வழி மறிச்சு அவளும் பஸ்ஸில் ஏறிட்டாளா?

15:38.320 --> 15:39.800
அப்படித்தான் தெரியுது.

15:39.920 --> 15:42.600
-அப்ப ஸ்கை பஸ்சை ஹைஜாக் பண்ணாளா?
-இல்ல, இல்ல.

15:43.480 --> 15:44.760
இருக்கலாம்.

15:44.960 --> 15:47.520
இல்ல, இல்ல. ஸ்கை ஒரு கோபக்காரி.

15:47.600 --> 15:50.800
அவ... அவ கோபத்தோட கிளம்பி போய்,
கோபம் தணிஞ்சு,

15:50.880 --> 15:54.600
டாமை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு
பஸ் எங்கிருக்கோ அங்கே போனா.

15:55.840 --> 15:57.920
அவ எதுக்கு பஸ்ஸில் ஏறணும்?

15:58.320 --> 16:00.240
ஒருவேளை அவ-- தெரியல.

16:00.320 --> 16:03.040
அவ வழிமறிச்ச இடம்
கேள்விக்கு பதில் சொல்லும்.

16:03.120 --> 16:05.560
ஏன்னா இப்போதைக்கு, அது ஏன்னு புரியல.

16:06.080 --> 16:10.040
டெட்லாக் வந்ததிற்கு நன்றி.

16:21.200 --> 16:23.880
ட்ரென்ட் 4 நெஸ்ஸா
மட வேசி

16:26.240 --> 16:28.200
இல்ல. அது என்ன ட்யூன்?

16:28.720 --> 16:30.960
அது மீண்டும் "ஹேப்பி பர்த்டே," அன்பே.

16:31.040 --> 16:33.480
பாடிகிட்டே இரு, நல்லா பாடறே.

16:35.840 --> 16:37.880
உங்களை விட்டாச்சு. நீங்க போகலாம்.

16:41.400 --> 16:42.680
இல்ல. நீங்க மட்டும்.

16:43.360 --> 16:45.840
இல்லேப்பா, எல்லாரும்தானே?

16:45.920 --> 16:49.040
கடவுளே. எனக்கு எப்படி--
ஏதோ தப்பு இருக்கு.

16:49.120 --> 16:50.600
-விடுவிக்கிறேன்.
-கருமம்.

16:50.680 --> 16:52.240
அது நடக்கும் வரை விட மாட்டேன்.

16:54.240 --> 16:55.560
அந்த அசிங்க நாய்.

16:57.360 --> 16:58.880
எங்கேன்னு தெரியலயா?

16:58.960 --> 16:59.960
சரி. நன்றி.

17:02.320 --> 17:04.400
வேண்டாம். என் கார் நிக்குது.

17:07.560 --> 17:08.560
மன்னிக்கணும்.

17:08.640 --> 17:10.080
திருமதி கருதர்ஸ்?

17:11.080 --> 17:12.320
திருமதி கருதர்ஸ்?

17:12.880 --> 17:14.400
வில்லியம் உபுட்ல இல்ல.

17:16.160 --> 17:18.680
அவர் டெட்லாக் விட்டே போகாம
இருக்க வாய்ப்புண்டா?

17:21.200 --> 17:22.920
அது, நான்... எப்படின்னு தெரியல.

17:24.560 --> 17:26.640
அவனும் தொடர்
கொலையாளியின் பலியா?

17:27.560 --> 17:28.800
அப்படித்தானா?

17:29.400 --> 17:30.320
வாய்ப்பு இருக்கு.

17:31.560 --> 17:32.920
பாவம் வில்லியம்.

17:37.560 --> 17:38.920
சொன்னதுக்கு நன்றி.

17:42.320 --> 17:46.880
சாரி, மேடம். முழு ஏரியை தேட எங்ககிட்ட

17:46.960 --> 17:49.920
-ஆள் பலம் இல்ல.
-புரிஞ்சது. மன்னிப்பு கேட்க வேண்டாம்.

17:50.000 --> 17:53.040
ஆனா ஒரு தேடலுக்கு நிதி
தந்தீங்கனா, நீங்க அப்ப--

17:53.080 --> 17:54.720
நான் நினைப்பது--

17:54.800 --> 17:58.280
ஏரி, ரொம்ப ஆழம், மேலும்...

17:58.760 --> 18:00.640
அதுக்கு தேவைப்படும் விஷயம்...

18:00.720 --> 18:02.640
அவரை கண்டுபிடிக்க
முடியாமலே போகலாம்.

18:02.720 --> 18:05.560
சரி, நீங்க என்ன சொல்றீங்களோ அது.
ஆனா, நீங்க--

18:18.760 --> 18:23.240
காலின்ஸ், இந்த இடம்தான் ஸ்கை அவங்களை
சந்தித்து ஹைஜாக் பண்ணின இடமா?

18:23.320 --> 18:25.080
ஆமா, டெல்கோஸ் சொல்றபடி.

18:26.280 --> 18:27.240
என் இணைப்பு.

18:30.000 --> 18:33.560
-அப்ப, அவ கார் எங்கே?
-அது நல்ல கேள்வி.

18:35.640 --> 18:38.000
பஸ்சை பாஸ் ஸ்ட்ரெய்ட்
ஃபெர்ரிலே ஏத்த முடியாது.

18:38.080 --> 18:39.520
-என்ன?
-பார்.

18:39.560 --> 18:41.080
-கொஞ்சம் இரு.
-சரி.

18:41.200 --> 18:44.240
"குதிரை மிதவை, ஜெட் ஸ்கை, நீர்நில
கார்கள் கொண்டு போலாம்,

18:44.320 --> 18:46.280
ஆனா முழு பஸ்சை கொண்டுபோக முடியாது."

18:47.080 --> 18:48.680
பஸ் படகில் இல்லை.

18:52.440 --> 18:54.960
-என்ன சொல்ல போறே?
-பயணிகளுக்கு அறிவிப்பு...

18:55.040 --> 18:57.080
என் பேட்டரி தீர போகுது, சீக்கிரம்.

18:57.160 --> 18:59.720
ஹேஸ்டிங்ஸ் ஃபெர்ரில நுழைந்தார்,
நம்ப மாட்ட...

18:59.800 --> 19:02.760
-பஸ் படகில் இல்லையா?
-பஸ் படகில் இல்லை

19:02.800 --> 19:04.080
சே!

19:04.160 --> 19:06.880
-போன் சார்ஜர் இல்லையா?
-இல்ல, சாரி. கார்ல இருக்கு.

19:06.960 --> 19:08.720
எல்லாருக்கும் அதனால் அதிர்ச்சி.

19:08.800 --> 19:13.080
ஒரு போலீஸ்காரன் ஒரு வண்டியை
குத்தினான், செமையா இருந்தது.

19:13.200 --> 19:16.280
ஸ்கை காரை கண்டுபிடிச்சாங்க.
டிக்கிலே என்ன இருந்தது சொல்லு?

19:16.320 --> 19:19.280
-19 மொபைல் ஃபோன்களா?
-அதேதான், ஆமா.

19:19.800 --> 19:21.040
ஆம்பிளைங்க எங்க?

19:21.080 --> 19:22.720
கப்பலில் தேடறாங்க.

19:22.800 --> 19:25.000
ஆன்போர்ட் சினிமாவையும்
நல்லா தேடறாங்க.

19:25.080 --> 19:28.160
சினிமாவா? எங்க ஒளிஞ்சிருக்காங்கனு
ஹேஸ்டிங்ஸ் நினைக்கிறார்?

19:28.240 --> 19:30.400
கேனயங்க மாதிரி சீட்டுக்கு அடியிலா?

19:31.960 --> 19:33.960
-ஸ்வென்? ஸ்வென்?
-ஸ்வென்?

19:34.320 --> 19:36.640
-அவன் பேட்டரி போச்சு.
-சே. சே, கருமம்!

19:36.720 --> 19:38.280
கதை முடிஞ்சுது, காலின்ஸ்.

19:39.200 --> 19:40.080
கெடுத்தோம்!

19:40.200 --> 19:43.400
நான் ரேகூட இருந்திருக்கணும்.
மீண்டும் புஷ்ஷி மாதிரிதான்.

19:43.480 --> 19:46.240
-புஷ்ஷி மாதிரி இல்ல.
-கொலையாளி கடலில் போட்டான்.

19:46.320 --> 19:50.000
ரேயோட உடல் சுறாக்கு தீனி,
புஷ் உடல் முதலைக்கு ஆன மாதிரி!

19:50.080 --> 19:52.440
-ரே தீனி ஆக மாட்டான்.
-ஆவான்!

19:52.520 --> 19:55.920
சுறாக்கள் என் ஆளை, அவன் பின்னாடியை,
அழகான கெண்டைக்காலை

19:56.000 --> 19:57.680
நல்லா கடிச்சு மென்னு சாப்பிடும்,

19:57.760 --> 20:00.760
என்கிட்டேருந்து தள்ளியிரு, காலின்ஸ்.
நீயும் தீனிதான்,

20:00.800 --> 20:03.200
எனக்கு பிடிச்சவங்க எல்லாரும் தீனியா
ஆயிடறாங்க.

20:03.280 --> 20:04.760
-தீனினு சொல்லாத.
-தீனி!

20:04.800 --> 20:06.240
-நிறுத்து!
-தீனி!

20:09.880 --> 20:11.760
ஸ்கையின் சூபருல 18 ஆண்களை கடத்தி

20:11.800 --> 20:15.240
ஃபெர்ரில கொண்டு போயிருக்க
முடியும்னு நினைக்கறயா?

20:15.320 --> 20:17.720
தெரியல. அவ டிக்கில கிடைச்சிருக்கே.

20:17.800 --> 20:20.040
சூபரு பெரிசுதான்,
ஆனா அவ்வளவு பெரிசில்ல.

20:20.720 --> 20:21.800
கவனி.

20:27.280 --> 20:28.440
என்னைப் பார்.

20:30.560 --> 20:32.320
போன்கள் ஸ்கை கார்ல இருக்கு.

20:32.480 --> 20:36.400
மக்கள் பஸ்ஸில் இருக்காங்க பஸ்
படகில் இல்லே.

20:42.960 --> 20:47.080
ஃபில் நடந்து ஊருக்கு வந்திருக்கான்
முழு நிர்வாணமா.

20:48.280 --> 20:50.000
பஸ் அவ்வளவு தூரத்தில் இருக்காது.

20:52.680 --> 20:55.040
மோனா கடை அங்கதான்
இருக்கு. அது பெட்ரோல் பங்க்.

20:55.080 --> 20:57.800
ரெண்டாவது பை சாப்பிட மனசில்ல,
காலின்ஸ். சோகம்.

20:57.920 --> 21:00.000
அவங்களுக்கு சாலை தெரிஞ்சிருக்கும்.

21:00.080 --> 21:01.440
வா, சீக்கிரமா.

21:01.520 --> 21:03.720
-எனக்கு தண்ணியடிக்கணும்.
-வீட்டுக்கு போய்.

21:08.000 --> 21:10.240
என்னை கைது செஞ்சா, இண்டி கூட நீதான்

21:10.320 --> 21:11.640
இருக்கணும், யாரும் இல்லை.

21:11.720 --> 21:13.480
ஃபே, உன்னை கைது செய்ய வரலே.

21:13.560 --> 21:16.640
மார்கரெட் தம்பி பத்தி
சில கேள்விகள் கேட்க வந்தேன்.

21:17.240 --> 21:19.800
அந்த நடை பிரயோஜனம் இல்ல.
எனக்கு பதட்டமா இருக்கு.

21:19.920 --> 21:22.560
அவ உதவி தொகையை மறுத்ததால்
மார்கரெட் கோபமா இருக்கா.

21:22.720 --> 21:24.240
என் வாழ்க்கையை நாசம் செய்வா.

21:24.320 --> 21:26.800
அவ ஒண்ணும செய்ய மாட்டா,
அவ சிறையில் இருக்கா.

21:26.880 --> 21:30.520
2019 ஏஎஃப்எல்டபிள்யு இறுதி போட்டியை
பாக்கலாம். அது உனக்கு உதவும்.

21:30.560 --> 21:32.080
மார்கரெட் கண்டுபிடிச்சா.

21:32.160 --> 21:34.560
-குரோஸ் எதிர் கார்ல்டன்ஸ்--
-அங்க போயிருக்காங்க.

21:34.680 --> 21:35.680
விளையாடறயா?

21:35.760 --> 21:39.160
இல்ல, என் பசங்க அங்கே போகலே.
அது அந்த கெல்ப் கடல்புறா.

21:39.240 --> 21:41.480
போயிருந்தா, எங்களுக்கு தெரியணும்.

21:41.560 --> 21:43.080
நாங்க வில்லியமை தேடறோம்.

21:43.160 --> 21:46.200
ஃபே, நீ கடைசியா
வில்லியம் கருதர்ஸை எப்ப பார்த்தே?

21:46.320 --> 21:48.920
தீவு பத்தி ஆறு வருஷத்துக்கு முன் நடந்த

21:49.640 --> 21:51.920
மீட்டிங்குக்கு அப்புறம் வில்லியம் தென்படல.

21:52.000 --> 21:55.000
ஏன்? அவன்தான் கொலை செய்யறவனா?

21:55.080 --> 21:56.640
அவன் ஃபில்லை தாக்கினானா?

21:56.720 --> 21:59.080
ஃபில் கூடாரம் தாண்டி ஓடறதை
டெட் பார்த்தான்.

21:59.160 --> 22:01.600
மனித பலி ஆள் மாதிரி
இருந்தான்னு சொன்னான்.

22:02.120 --> 22:06.040
சரி. கொலையாளி பஸ்சை ஹைஜாக்
பண்ணிருப்பான்னு நினைக்கிறோம்.

22:06.960 --> 22:10.280
-ஐயோ! டாம் அந்த பஸ்ஸில் இருக்கான்.
-டேம், ஐயோ!

22:10.720 --> 22:15.000
ட்ரென்ட் இறந்த அன்னிக்கு நாம தீவில்
பாத்த மூச்சா போன ஆள்

22:15.080 --> 22:16.680
வில்லியம் கருதர்ஸா இருந்தா?

22:16.760 --> 22:19.480
இல்ல, ஒரு ஆபத்தான ஆபலோனி
நீர்மூழ்கியா இருக்கலாம்.

22:19.600 --> 22:21.840
கொலையாளி படகு அங்க இருக்குனு ஃபே சொன்னா.

22:21.920 --> 22:24.200
இல்ல, அது-- அது வந்து--

22:26.280 --> 22:29.200
ஐயோ! நாம் ஒரு கொலையாளி மூச்சா
போறத பார்த்தோமா?

22:29.360 --> 22:30.680
சே! சும்மா இரு.

22:30.760 --> 22:33.800
-அவங்களை அவன் தீவில் வெச்சிருக்கலாம்.
-எங்க போறே? டேமி!

22:34.440 --> 22:36.520
ஃபே, கேட்கலாமா? வில்லியமுக்கும்

22:36.600 --> 22:39.280
மார்கரெட்டுக்கும்
சண்டை வர காரணம் அந்த தீவா?

22:39.400 --> 22:41.160
ஆமா, மார்கரெட் சொல்றபடி.

22:41.240 --> 22:44.720
எங்களை தீவுகிட்ட போகவும் விடாம
கொடுக்கவும் இல்லாம தடுத்தான்.

22:44.800 --> 22:46.160
ஏன் கேட்கறே?

22:48.760 --> 22:51.480
இதை வில்லியம் கருதர்ஸ்
கார்லேருந்து எடுத்தோம்.

22:51.960 --> 22:53.520
அது ஆண்ட்டி ஜாயோடது.

22:54.360 --> 22:57.680
அவங்களோடதை எதுக்கு
வில்லியம் கருதர்ஸ் வெச்சிருந்தான்?

22:57.760 --> 22:59.680
அவனுக்கு நம்மை பிடிக்காதாம்.

22:59.760 --> 23:03.480
தீவை திருப்பித் தர வில்லியம் நினைச்சான்,
சகோதரி நினைக்கல.

23:03.920 --> 23:07.040
மார்கரெட் வருஷக்கணக்கா
புளுகிகிட்டே இருந்திருக்கா.

23:07.160 --> 23:08.240
சொல்லாதே.

23:09.880 --> 23:12.040
இது டிடக்டிவ் காலின்ஸ், செய்தி அனுப்புங்க.

23:12.120 --> 23:13.440
ஹை, மேடம்களே.

23:13.520 --> 23:17.400
வில்லியம் கருதர்ஸ் இந்த கொலைகளை செய்யல.

23:17.480 --> 23:20.720
அவன் எங்கேன்னு எனக்கு தெரியல,
ஆனா... மார்கரெட்டுக்கு தெரியும்,

23:20.800 --> 23:23.000
அவளுக்கு அவன் திரும்பி வர வேண்டாம்.

23:23.080 --> 23:25.600
எப்படியோ, அவன் நம் ஆள் அல்ல.

23:39.600 --> 23:41.080
கேள்விக்கு பதில் சொல்.

23:41.160 --> 23:44.320
இந்த இடத்தை சுத்தி பாதுகாப்பு
கேமிரா இருக்கா?

23:44.400 --> 23:46.760
எனக்கு பாதுகாப்பு கேமரா பத்தி
ஒண்ணும் தெரியாது.

23:46.840 --> 23:50.520
சென்ற 15 மணி நேரத்தில் டெட்லாக் விட்டு
கிளம்பின பஸ்சை பார்த்தயா?

23:50.600 --> 23:52.600
நீல கோடு போட்ட வெள்ளை பஸ்?

23:52.680 --> 23:55.880
-வெள்ளை கோடு போட்ட நீல பஸ்?
-நீல கோடு போட்ட வெள்ளை பஸ்?

23:55.960 --> 23:58.680
வெள்ளைதானா? அதை சுத்தமா
வெச்சுக்கறது கஷ்டம்.

23:58.760 --> 24:01.560
நான்... எனக்குத் தெரியும், மோனா. ஆமாம்.

24:01.640 --> 24:03.960
நேத்து ராத்திரி எந்த பஸ்சையும் பார்க்கல.

24:04.040 --> 24:05.520
-சரி. சரி.
-சே!

24:06.120 --> 24:10.040
நேத்து ராத்திரி டெட்லாக் நோக்கி
வேகமா போன ஒரு வெள்ளை பஸ் தவிர.

24:11.600 --> 24:14.200
-ஐயோ, மோனா.
-இரு, எதை நோக்கி? எதை நோக்கி?

24:14.280 --> 24:18.000
ஞாபகம் இருக்கு ஏன்னா டிரைவர்
ஒரு வித்யாசமான ஆடையில் இருந்தான்.

24:18.080 --> 24:19.720
என்ன வித்தியாசமான ஆடை?

24:19.800 --> 24:21.920
சாரி, ரூத். நான் ரூத்தை கவனிக்கணும்.

24:22.000 --> 24:24.120
முடியாது! ரூத், கொஞ்சம் இரு.

24:24.200 --> 24:25.600
ரூத், எப்படி இருக்கே?

24:25.720 --> 24:27.800
பெட்ரோலுக்கு மட்டும். நன்றி, மோனா.

24:27.880 --> 24:30.240
நீ பழ மிட்டாய் விக்கறயா?

24:30.320 --> 24:31.400
ஆர்டர் போட்டேன்.

24:31.480 --> 24:35.160
ஆனா, போன வாரம் மிட்டாய் வண்டி
வளைவில் விழுந்திடுச்சு.

24:35.240 --> 24:37.280
-கிளிங்கர்ஸ் இருக்கா?
-பேசாதே, ரூத்.

24:37.360 --> 24:39.560
"அவன் வித்தியாசமான ஆடையில்
இருந்தான்"னா?

24:39.640 --> 24:41.800
அவங்க முகமூடி போட்டிருந்தாங்க,
இல்லையா?

24:42.640 --> 24:45.200
-நீ சொல்.
-எந்த மாதிரி முகமூடி? விலங்கு முகமூடி?

24:45.280 --> 24:47.040
ராட்சசன் பட முகமூடி, மோடி முகமூடி?

24:47.120 --> 24:49.560
முகமூடி படத்தில் வருமே, அதா?
என்ன முகமூடி?

24:49.920 --> 24:51.000
அது ஒரு வாயு முகமூடி.

24:51.080 --> 24:53.680
-அதை நாம அதிகமா பாக்கிறது இல்ல.
-சரிதான், ரூத்.

24:54.560 --> 24:57.960
வாயு அடிச்சிருக்கான். அதுதான்
அவங்களை மயக்கமாக்க வேகமான வழி.

24:58.520 --> 25:00.440
ஓய், பெட்ரோல் காரம்மா.

25:01.000 --> 25:05.240
நீ பார்த்தப்ப, பஸ்ஸில் இருந்தவங்க
முழிச்சிருந்தாங்களா,

25:05.320 --> 25:07.160
இல்லை... முழிச்சிருக்கலையா?

25:07.240 --> 25:10.240
தெரியாது. நெருப்பு கிண்டறதை
தேடிகிட்டு இருந்தேன்.

25:10.920 --> 25:12.800
ஹோபார்ட் வரை வெடிச்சது.

25:14.000 --> 25:16.120
எங்க செக்யூரிட்டி கேமிரா பாக்கணுமா?

25:16.680 --> 25:20.440
செக்யூரிட்டி கேமிரா பத்தி ஒண்ணும
தெரியாதுன்னு சொன்னே!

25:20.520 --> 25:23.960
எனக்கு தெரியாது. என் கணவர் ஆலனுக்கு
கேசட் வெளிய எடுக்க தெரியும்,

25:24.040 --> 25:27.760
ஆனா டெட்லாக்கில் தொடர் கொலையாளி
இருக்கிறதால் தங்கை கூட தங்கியிருக்கார்.

25:28.280 --> 25:29.680
நீ கேள்விபபடலயா?

25:29.760 --> 25:31.640
ஆபி, கேஸ் அண்ட் மில்கிற்கு வா.

25:31.720 --> 25:34.040
மோனா செக்யூரிட்டி கேமிரா
போட்டோ பாக்கணும்.

25:37.840 --> 25:41.240
ஒரு வெள்ளைக்கார ஆண் கூட்டத்தை
தேடறது என் வேலையா போச்சே?

25:42.120 --> 25:44.520
போலீஸ்கிட்ட சொல்லலாமா?
அவங்க பாத்துக்கட்டுமே?

25:44.600 --> 25:47.720
வேண்டாம்! அத்துமீறி நுழைஞ்சதுக்கு
நாம மாட்டுவோம்,

25:47.800 --> 25:52.240
இப்போதைக்கு, உன்னை, ஆன்ட்டிகளை
சீல் கெவினை மட்டும்தான் நம்புவேன்.

25:52.320 --> 25:54.640
உண்மை. தவிர நாம
ஆண்களை இப்ப காப்பாத்தறோம்.

25:54.800 --> 25:56.080
ஆமா, ஆமா, நிச்சயமா.

25:56.160 --> 25:57.720
ஆமா, எல்லோர் வாயையும் மூடலாம்.

26:00.600 --> 26:02.680
இது நாம் செய்யும் ரொம்ப நல்ல வேலை.

26:14.720 --> 26:17.280
அவன் கேஸ் அடிச்சிருந்தா,
இன்னும் உயிர் இருக்கும்.

26:17.360 --> 26:21.000
ஊருக்குள் வர போக ஒரே வழிதான் இருக்கு,
அப்ப எங்க கூட்டிட்டு போறான்?

26:21.080 --> 26:24.000
மோனா பாத்த பஸ்
டெட்லாக் நோக்கிதான் போனது.

26:24.080 --> 26:26.080
அது திரும்பி வந்த வழியே போயிருக்கு.

26:26.160 --> 26:29.480
-அதுக்கு என்ன அர்த்தம்?
-தெரியல. எனக்கு பதட்டமா இருக்கு.

26:29.560 --> 26:31.440
டெட்லாக்கில் பஸ் காணோம்.

26:31.520 --> 26:34.000
மோனா கடை, ஊருக்கு
நடுவில்தான் பஸ் இருக்கு.

26:34.080 --> 26:38.400
எங்க, காலின்ஸ்? ஒரு பக்கம் புதர்
இன்னொரு பக்கம் மலை முகடும் கடலும்.

26:39.560 --> 26:40.640
-ஸ்வென்.
-ஹை.

26:40.720 --> 26:43.080
ஒரு அழகான பெண் அவ சார்ஜரை
குடுத்தா. ரொம்ப நன்றி.

26:43.160 --> 26:44.000
பிரச்சினை இல்ல!

26:44.080 --> 26:46.120
ஹேஸ்டிங்ஸ் ஆள்
பாஸ் ஸ்ட்ரெய்ட் ஃபெர்ரில

26:46.200 --> 26:48.520
ஸ்கை அந்த ஆளுங்க பத்தி
ஒண்ணும் கண்டுபிடிக்கல.

26:48.640 --> 26:51.400
அவங்க பஸ்லதான் இருக்காங்கனு
ஹேஸ்டிங்ஸ் சொல்றார்.

26:51.520 --> 26:52.720
ஆமா. ஆமா.

26:52.800 --> 26:53.960
நான் லிஃப்ட் தரேன்.

26:54.040 --> 26:55.840
-வேண்டாம், ஸ்வென்.
-அந்த வழியா வரேன்.

26:55.920 --> 26:58.840
ஃபெர்ரில பஸ்ஸை கொண்டு போக
முடியாதுனு புரிஞ்சுகிட்டாங்க.

26:58.920 --> 27:01.920
இது நாம் முன்னாடியே பேசினது மாதிரி
இருக்கு, ஆனா...

27:02.440 --> 27:04.520
ஹேஸ்டிங்ஸ் அவர் ஆட்களிடம் பேசறார்.

27:04.600 --> 27:06.400
இன்ஃப்ராரெட் கேமரா கொண்டு வராங்க...

27:06.480 --> 27:09.240
-அங்கே என்ன நடக்குது?
-...மோப்ப நாய்கள்.

27:09.320 --> 27:12.880
ஏர்போர்ட் பயோ-செக்யூரிட்டி பீகல் நாய்,
பீன்ஸை கொண்டு வர்றாங்க.

27:13.000 --> 27:15.920
ஆமா டல்சீ, ஹேஸ்டிங்ஸ்சும் அவர் போலீசும்

27:16.000 --> 27:18.280
வான் வழியா தேடப போறாங்க.

27:19.280 --> 27:22.520
கடல் ஓரமா பஸ்ஸை தேடப் போறாங்க.
இப்ப ஆரம்பிக்கிறாங்க.

27:24.040 --> 27:25.480
ஆமா, அதனால...

28:12.000 --> 28:15.560
"1987ல பிறந்தேன், என் முதல் ராப் ஆல்பம்
13 வயசில் செஞ்சேன்...

28:15.640 --> 28:16.640
லில் பௌ வௌ.

28:17.960 --> 28:19.560
எப்படி உனக்கு தெரியும்?

28:25.160 --> 28:26.360
சிப்?

28:28.040 --> 28:31.360
என் விலங்கு நோயாளிகளுக்கு வயிற்று
குழப்பம் வந்தா சிபஸ் உதவும்.

28:32.000 --> 28:36.560
-பிரச்சினையில்ல. உனக்கு வேண்டாம்னா.
-பரவாயில்ல குடு. நன்றி, கேத்,

28:42.000 --> 28:44.040
நான் இன்னும் கூட எடுத்துப்பேன்.

28:44.120 --> 28:48.120
-சாரி, நீ பூனை இல்லன்னு மறந்துட்டேன்.
-இல்ல. நன்றி.

28:56.280 --> 28:58.760
நீங்க மறுபடியும் என் விசாரணைல
குறுக்கே வந்தா,

28:58.840 --> 29:01.240
உங்களை வேலையை விட்டு தூக்கிடுவேன்!

29:01.880 --> 29:03.640
டெட்லாக்குக்கு திரும்பி போங்க!

29:04.520 --> 29:05.520
உடனே!

29:06.520 --> 29:08.440
ஒரு நிமிஷம் குடுக்க முடியுமா, ஷேன்?

29:12.200 --> 29:15.480
-நாம் போகணும்.
-ரேவை கண்டுபிடிக்கற வரை இருக்கேன்.

29:16.240 --> 29:18.120
இந்த முறை உடலை பார்க்கணும்.

29:22.280 --> 29:25.200
மோனாவின் செக்யூரிட்டி காட்சிலே
ஆபி ஏதோ பார்த்திருக்கா.

29:25.320 --> 29:26.800
அதில் என்ன மீதம் இருக்கோ,

29:26.880 --> 29:30.320
அந்த சுறாக்கள் தின்னு முடிச்ச பிறகு.

29:31.360 --> 29:35.760
எட்டி, எட்டி, அந்த பஸ் மோனா கடைய
ரெண்டு முறை தாண்டி போயிருக்கு.

29:36.440 --> 29:39.520
வண்டி நிறைய ஆளுங்க ஜன்னலில்
தலையை சாச்சுகிட்டு

29:39.600 --> 29:42.280
அரை மணி கழிச்சு, திரும்ப
தாண்டி போயிருக்கான்.

29:42.360 --> 29:43.880
பார், இப்ப அவன் மட்டும்தான்.

29:43.960 --> 29:48.360
பயணிகள் யாரும் இல்ல. அவன் பயணிகளை
எங்கயோ இறக்கிட்டான்.

29:50.400 --> 29:53.280
அவன்... இங்க திரும்பி வந்து...

29:53.600 --> 29:55.080
எட்டி குதிச்சிட்டான்.

29:55.240 --> 29:59.160
வெறும் பஸ்சதான் உள்ளே தள்ளியிருக்கான்,
இது வெறும் ஏமாத்து வேலைதான்.

30:04.040 --> 30:05.960
அவன் மலைக்குள் கொண்டு போயிருக்கான்.

30:06.840 --> 30:08.360
சவுன்ட் ஆப் மியூசிக் மாதிரி.

30:08.440 --> 30:10.200
ஆமா, நிச்சயமா.

30:10.280 --> 30:12.040
அவங்க இருக்கக்கூடிய இடம் அதுதான்.

30:14.720 --> 30:18.680
ஆபி, ஸ்வென். இப்ப உங்க போன்கள்
இணைந்திருக்கு. பேசறது கேட்குதா?

30:18.760 --> 30:20.200
-கேட்குது மேடம்.
-அட்டகாசம்!

30:20.280 --> 30:23.840
நாங்க க்ரிம் ஹில் ரோட்டில்
மவுண்ட் மவுண்டன் பார்பெக்யூக்கு போறோம்.

30:23.920 --> 30:26.280
அங்கிருந்து நாம் தேடலை ஒருங்கிணைக்கலாம்.

30:26.360 --> 30:28.320
புரிஞ்சது. அங்கேதான் வரேன்.

30:28.400 --> 30:30.240
நான் சீக்கிரமா வரேன்.

30:30.320 --> 30:31.880
ஒரு ஆளை விட போயிருக்கேன்.

30:33.240 --> 30:34.520
மன்னிச்சுக்கோங்க.

30:34.600 --> 30:36.360
இல்ல, இல்ல. பரவாயில்ல, ஸ்வென்.

30:36.440 --> 30:38.160
கொஞ்சம் அயர்வு மாதிரி இருந்தது.

30:38.240 --> 30:41.840
கடவுளே. இது...
கொஞ்சம் அதிகமாயிடுச்சு, நானும்--

30:41.920 --> 30:44.560
நான் செய்யற வேலை பிடிச்சா
பரவாயில்ல, ஆனா பிடிக்கல.

30:44.640 --> 30:46.920
பிடிக்க போறதில்லன்னு தெரிய ஆரம்பிக்குது,

30:47.040 --> 30:49.560
நேரம் வந்தாச்சுன்னு தோணுது.
நேரம் வந்தாச்சு.

30:49.640 --> 30:51.200
வேற இடம் போக நேரம் வந்தாச்சு.

30:59.680 --> 31:01.040
மவுண்ட் மவுண்டன் நேஷனல் பார்க்
லேனா ராலா வார் ஃபால்ஸ்

31:01.920 --> 31:04.720
மோனாவின் செக்யூரிட்டி காட்சிகளில் உள்ள
காலப்பதிவின்படி,

31:04.800 --> 31:08.440
எல்லாரையும் இறக்கி விட்டு பஸ்ஸை
ஒழிக்க அவனுக்கு இருந்தது 30 நிமிடங்கள்.

31:08.520 --> 31:11.200
சுற்றியுள்ள பாதைகளுக்கு பஸ்ஸில்
போக வழியில்லை,

31:11.320 --> 31:14.200
அதனால இந்த க்ரிம் ஹில்
ரோடிற்கு கிட்டதான் விட்டிருப்பான்.

31:14.280 --> 31:15.120
ஆமா.

31:21.040 --> 31:22.040
மேடம்களே!

31:23.960 --> 31:25.720
இது ஜேம்ஸின் சைக்கிள்.

31:25.800 --> 31:30.280
மோனா கடையிலிருந்து வரும்போது
செட்லர் ஹைவே வழியில் கண்டு பிடிச்சேன்.

31:31.680 --> 31:33.520
ஜேம்ஸின் போன் ஃபெர்ரில இருந்தது.

31:34.520 --> 31:37.040
அப்பா, ஸ்மார்ட்வாச்சும் பஸ்ஸில்
போயிடுச்சா?

31:37.120 --> 31:39.440
ஓ, கடவுளே, மேடம்களே, அது ஜேம்ஸா இருந்தா?

31:39.520 --> 31:41.480
லாக் நெஸ்சீ கொடிமரத்தை
திருடினது அவனா?

31:41.560 --> 31:43.360
தடயத்தை எல்லாம் குழப்பி விட்டான்.

31:43.440 --> 31:46.240
தப்பு தப்பா செஞ்சும் பதவியில்
மேலே மேலே போனான்

31:46.320 --> 31:47.840
ஆனா அவன் கொலையாளியா இருந்தா?

31:47.920 --> 31:52.520
என் முன்னாள் காதலன் உங்க இந்நாள்
காதலனை கொல்ல முயல்வதற்கு சாரி.

31:52.600 --> 31:54.680
-இல்ல. இருக்காது.
-பரவாயில்லே, ஆபி.

31:54.800 --> 31:58.880
மாட்டிக்க போறோம்னு தெரிஞ்சவுடன்
பஸ்ஸை நிறுத்தியிருக்கான்.

31:59.080 --> 32:01.400
அவனை மட்டமானவன்னு சொன்னேன்.
அவன் மட்டம்தான்.

32:01.520 --> 32:04.720
அப்படி சொல்லலேன்னா,
அவன் பஸ்ஸில் ஏறியிருக்க மாட்டான்.

32:04.800 --> 32:07.400
பிழைச்சான்னா,
என்னை குற்ற உணர்வில் தள்ளுவான்.

32:07.520 --> 32:09.960
அப்படி செஞ்சான், நானே அவனை
கொன்னுடுவேன்.

32:10.040 --> 32:13.080
சொன்னதில் சந்தோஷம் மேடம்
ஆனா நீங்க அதை செய்ய தேவையில்ல.

32:13.160 --> 32:16.160
கொலையாளி அவன்
கட்டுப்படுத்தக் கூடிய, அவனுக்கு

32:16.240 --> 32:18.680
தெரிஞ்ச இடத்தில்தான் இருப்பான்.

32:18.760 --> 32:21.600
அவங்களை க்ரிம் ஹில் ரோடு
வீட்டில்தான் வெச்சிருக்கான்.

32:21.680 --> 32:22.520
அதான் தோணுது.

32:22.600 --> 32:24.040
"ப்ளட் ரிட்ஜ் வைனரி" உண்டு.

32:24.120 --> 32:25.920
"ப்ரோக்கன் நெக் மைக்ரோப்ரூவரி."

32:26.000 --> 32:27.600
"கேஸ்கட் ஃபில்லர்ஸ் சைடரி"...

32:27.680 --> 32:30.080
-என்ன கண்றாவி பேருப்பா இது?
-சரி.

32:30.200 --> 32:33.080
காலின்ஸ், என்ன செய்யலாம்?
எல்லாத்தையும் தேடலாமா?

32:33.160 --> 32:35.840
நிறைய நேரம் ஆகும்.
நமக்கோ நேரம் இல்லே.

32:35.920 --> 32:37.720
எனக்கு... எனக்கு ஒரு யோசனை.

32:37.840 --> 32:41.000
ஆனா உங்களின் ஒரு போன்
டேட்டாவோட இணைக்க வேணும்.

32:47.680 --> 32:51.880
தற்போதைக்கு நான் டாமை காப்பாத்தினாலும்,
அந்த நாயை மன்னிக்கிறேனு அர்த்தமில்ல.

32:51.960 --> 32:54.360
டேம், வில்லியமை நாம் கண்டு பிடிச்ச பிறகு?

32:54.440 --> 32:57.880
அவனுக்கு போக்கு காட்டி,
அவனை மடக்குவோம், இல்லே?

32:57.960 --> 32:58.920
நடக்கறதை பாரு.

33:09.040 --> 33:10.000
குதிரை சாணம் - $2

33:10.080 --> 33:12.280
மரைன் பயாலஜியில் ஒரு முதுநிலை.

33:12.400 --> 33:14.440
ஆமா, ஆமா. அதை ரொம்ப அனுபவிச்சேன்.

33:14.520 --> 33:16.160
அதுதான் முக்கியம், ஸ்வென்.

33:16.240 --> 33:18.280
-உனக்கு பிடிச்சதை நீ செய்யணும்.
-ஆமா.

33:18.360 --> 33:20.600
அதனாலதான் ஏர்டாஸ்க் செய்றேன்.
இல்லையா, நிக்?

33:20.680 --> 33:22.240
-ஆமா, ஆமா.
-ஆமா, ஆமா.

33:22.360 --> 33:23.200
அது நல்லது.

33:23.760 --> 33:26.800
மெல்பர்னுக்கு நீங்க ஏன்
ஃபெர்ரிலே போறீங்க?

33:26.880 --> 33:29.560
நாங்க ஒரு கார் எடுத்து வர
புக்கிங் செஞ்சோம்.

33:29.640 --> 33:32.640
ஒரு பை நிறைய சாமான்களை
எடுக்கறது மட்டும்தான் இருந்தது,

33:32.720 --> 33:36.120
திடீர்னு நேத்து அதோட
ஒரு காரையும் கஸ்டமர் சேத்துட்டார்.

33:36.200 --> 33:38.280
நீங்க போற வழியில் ரோடு பக்கத்தில் கீழே

33:38.360 --> 33:40.680
நாங்க போய் முழுசையும்
எடுத்து வந்தோம்.

33:41.240 --> 33:42.080
பொறுங்க.

33:43.280 --> 33:44.440
நீ நலம்தானே, அன்பே?

33:44.560 --> 33:46.200
எந்த மாதிரி கார் அது?

33:46.320 --> 33:47.720
-ஒரு சூபரு.
-ஒரு சூபரு.

33:54.360 --> 33:56.240
ஹலோ, இது ப்ளட் ரிட்ஜ் வைனரியா?

33:56.320 --> 33:58.520
-கேஸ்கட் ஃபில்லர்ஸ்?
-ப்ரோக்கன் நெக்?

33:58.600 --> 34:00.960
நாங்க 18 ஆட்களையும்
பசங்களையும் தேடறோம்.

34:01.040 --> 34:03.200
இல்ல, அவங்க புக்கிங் செய்யல.

34:03.280 --> 34:04.480
நாசமாப் போக!

34:05.440 --> 34:08.040
நீல நிற கோடு உள்ள வெள்ளை பஸ்.

34:08.120 --> 34:09.440
ஒரு முகமூடி.

34:09.520 --> 34:12.640
இல்ல, எலி இல்லே.
உன் காதை கொஞ்சம் கவனிப்பா.

34:12.720 --> 34:15.480
என்கூட பேச வேற யாரும் இல்லையா?

34:15.560 --> 34:18.120
இல்லே, எனக்கு வைன் நிபுணரிடம்
பேச வேண்டாம்.

34:18.160 --> 34:20.800
ஆமா, உங்க பானத்தில் எனக்கு விருப்பம் தான்.

34:20.880 --> 34:23.840
ஆனா இப்போ நான் என் காதலனை
தேடிகிட்டு இருக்கேன்.

34:27.280 --> 34:29.320
ஹாலி

34:32.880 --> 34:33.840
நல்ல நாள்.

34:35.040 --> 34:38.760
இல்ல, அடுத்த வாரத்துக்கான உன்
வைன் தயாரிப்பு கோர்சுக்கு நான் வரலே.

34:38.840 --> 34:39.840
அது இல்ல--

34:40.640 --> 34:43.200
ஆமா, சரி, என்னையும் சேத்துக்கோ.

34:43.320 --> 34:46.080
நல்லது. என் பெயர் கார்த். நன்றி.

34:46.160 --> 34:47.480
நன்றி. நன்றி.

34:53.760 --> 34:54.840
ஐயோ!

35:12.600 --> 35:14.440
அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியல.

35:15.160 --> 35:17.600
வேற எங்கே இருக்கலாம்னு தெரியலே.

35:18.160 --> 35:19.680
எனக்கு ஒண்ணும் தோணலே.

35:20.480 --> 35:22.680
நாம் இதை மறுபடியும் யோசிக்கணும்.

35:22.800 --> 35:26.200
ஒருவேளை... ஹேஸ்டிங்ஸ் சரியா இருந்து
நாம் தப்பா இருக்கலாம்.

35:26.320 --> 35:29.400
அவங்க பஸ்ல இருந்து
நாம் அதை பார்க்காமல் இருக்கலாம்.

35:32.480 --> 35:33.880
புஷ்ஷி தீனி இல்ல.

35:36.160 --> 35:37.280
என்ன?

35:40.320 --> 35:43.640
அவங்க... அவங்க உடலை
கண்டுபிடிச்சாங்க. அவன்...

35:44.800 --> 35:46.920
அவன் முதலையால் தின்னப்படலே. அவன்...

35:48.120 --> 35:51.000
தலையில் சுடப்பட்டு இருந்தான்.

35:53.440 --> 35:55.200
எட்டி, ரொம்ப வருத்தமா இருக்கு.

35:56.200 --> 35:57.960
நான் சொன்னேன், காலின்ஸ்.

35:58.800 --> 36:02.360
அவன் காணாம போனவுடன்
ஏதோ சந்தேகமா இருந்தது. ஆனால் நான்--

36:02.440 --> 36:06.280
நான் மட்டை ஆனதா அந்த டார்வின்
பசங்க சொன்னாங்க. ஆனா நான் அப்படி ஆகல.

36:07.160 --> 36:08.760
நான் சொன்னது சரி, அதனால் நான்

36:08.840 --> 36:11.680
உண்மையை தேட வேண்டாம்னு என்னை
இங்கே அனுப்பிச்சாங்க.

36:16.880 --> 36:18.480
நாம இப்பவும் சரிதான்.

36:18.560 --> 36:20.880
-தெரியல. நாம்--
-இல்ல, இல்ல, இல்ல,

36:20.960 --> 36:23.160
நீ கொஞ்சம் பொத்து. உனக்குத் தெரியும்.

36:23.280 --> 36:28.080
உனக்குத் தெரிஞ்சுது, எனக்கும் தெரியும்,
ஏன்னா உன்னை நான் கவனிச்சுகிட்டு இருக்கேன்.

36:29.000 --> 36:32.480
இப்ப, இந்த நாய், அவனுக்கு பிடிக்குது...

36:33.160 --> 36:36.600
அவங்களை உயிரோட வெச்சிருக்கறது
சாகடிக்கு முன் ஜாலி பண்ணலாம்னு.

36:36.640 --> 36:37.840
-ஆமா.
-ஆமாவா?

36:37.960 --> 36:40.080
உன் தொழில் சார்ந்த கருத்தில்,

36:40.160 --> 36:43.600
18 பேரை மேலிருந்து தள்ளி விடறதோட
அவன் விடுவான்னு நினைக்கிறயா?

36:43.640 --> 36:45.200
-இல்ல.
-இல்ல.

36:45.360 --> 36:47.920
இல்ல. ஒரு விபரீத
மனுஷ பூனை மாதிரி நம்மிடம்

36:48.000 --> 36:51.160
காட்டிக்க அவனுக்கு இன்னும்
பெரிசா ஏதோ வேணும்.

36:51.280 --> 36:52.560
எதனால அப்படி?

36:52.640 --> 36:55.320
-ஏன்னா அவன் ஒரு தன்னாணவம் உள்ளவன்.
-ஒரு கசமாலம்!

36:55.400 --> 36:56.840
-ரொம்ப பெரிய கசமாலம்!
-சரி.

36:56.960 --> 36:59.840
அவங்க உயிரோட அங்க வெளியே
இருக்காங்க, காலின்ஸ்.

37:01.160 --> 37:02.120
சரியா?

37:05.480 --> 37:06.520
சரியா?

37:07.520 --> 37:08.560
ஆமா.

37:09.520 --> 37:11.520
ஆமா, சரி.

37:13.920 --> 37:16.600
மேடம்களே? ஸ்வென்
உங்களை கூப்பிட முயற்சி செய்யறான்.

37:17.680 --> 37:19.200
ஸ்வென், நீ ஸ்பீக்கரில் இருக்க.

37:19.360 --> 37:21.520
கொலையாளி ஏர்டாஸ்கரை பயன்படுத்தினான்.

37:21.600 --> 37:23.360
என்ன? என்னங்கறான்?
ஏர்பாஸ்கெட்டா?

37:23.440 --> 37:25.800
-ஏர்பாஸ்கெட்னா?
-ஏர்டாஸ்கர். என்ன?

37:27.160 --> 37:30.160
பேசறது சரியா கேட்கலே, நான்
போய்கிட்டே இருக்கேன்.

37:30.280 --> 37:33.440
கொலையாளி ஸ்கையின் சூபருவையும்
போன்களையும் அங்கிருந்து

37:33.520 --> 37:36.880
ஃபெர்ரிக்கு கொண்டு போக ஒரு
ஏர்டாஸ்கர் புக் செஞ்சிருக்கான்

37:36.960 --> 37:38.840
யார் ஏர்டாஸ்கரை புக் செஞ்சா?

37:38.920 --> 37:43.200
நான் ஏர்டாஸ்கரை கேட்டதுக்கு
லூயிஸ் மெக்யூவன்னு சொன்னாங்க.

37:45.640 --> 37:48.000
பழக்கதோஷத்துல திரும்ப
டெட்லாக் வந்ததேன்.

37:48.080 --> 37:50.160
மவுண்ட் மவுண்டன் பிக்னிக் இடம் இல்ல.

37:50.200 --> 37:51.360
சாரி, அது என் தப்பு.

37:51.440 --> 37:53.760
சாரி, ஸ்வென்,
லூயிஸ் மெக்யூவன்னா சொன்னே?

37:53.840 --> 37:56.680
லூயிஸ் மெக்யூவனை கூகிளில்
தேடி அவ கொலையானான்னு...

37:56.800 --> 37:57.880
கண்டுபிடிச்சேன்.

37:57.960 --> 38:01.600
...அவ சிட்னில ஏழு வருஷம்
முன்னாடி கொலையானா.

38:01.640 --> 38:04.680
துப்பறியும் அதிகாரி டிடக்டிவ்
ஹானா சேம்பர்ஸ்.

38:04.800 --> 38:06.280
அவளை தெரியுமா, டல்ஸ்?

38:07.160 --> 38:08.480
எனக்கு தெரியும். நான்...

38:09.280 --> 38:10.600
எனக்கு ஹானாவை தெரியும்.

38:11.560 --> 38:14.520
கேட்கல, உங்களுக்கு அவளை
தெரியும்னு நினைக்கிறேன், டல்ஸ்.

38:15.080 --> 38:16.080
டலஸ்?

38:18.400 --> 38:21.680
-டாம்? மைக்?
-இங்க ஏதாவது ஆள் கடத்தல் நடந்ததா?

38:21.800 --> 38:23.080
மத்த மக்கள்?

38:23.160 --> 38:24.880
வா, இங்கே யாரும் இல்ல.

38:24.960 --> 38:27.880
ஒரு புராதன பேய்
நம்மை பிடிக்கும் முன் போயிடலாம்.

38:27.960 --> 38:29.640
கண்ணுங்களா.

38:30.600 --> 38:32.320
ஐயோ! திருமதி கருதர்ஸ்.

38:33.040 --> 38:34.760
அக்கா, அக்கா பாரு!

38:35.200 --> 38:36.200
வரிப் பாம்பு!

38:36.360 --> 38:37.800
ஐயோ, அவளை கடிச்சிருக்கு!

38:37.880 --> 38:39.480
உன் போனுக்கு இணைப்பு இருக்கா?

38:40.080 --> 38:41.400
இல்லே, ஒண்ணுமே இல்லை.

38:41.480 --> 38:42.680
உதவுங்க.

38:42.800 --> 38:45.520
-விஷத்தை உறிஞ்சி வெளியே எடு!
-நான் மாட்டேன்.

38:45.600 --> 38:48.320
-நான் உறிஞ்ச மாட்டேன்.
-விஷத்தை உறிஞ்சுவதில்லை.

38:48.400 --> 38:50.000
அவள் மேல் மூத்திரம் போலாமா?

38:50.080 --> 38:52.440
இல்லே, அவளை உதவி வரும்வரை
அசையாம வைக்கணும்.

38:52.520 --> 38:54.840
யார் நமக்கு உதவுவா? இந்த ஆளா?

38:56.000 --> 38:59.360
திருமதி கருதர்ஸ்,
உங்களை வரிப்பாம்பு கடிச்சிருக்கு.

38:59.760 --> 39:01.080
அமைதியா இருங்க.

39:02.000 --> 39:03.960
எப்படி அவங்களை படகுக்கு
கொண்டுபோறது?

39:04.120 --> 39:05.360
நான் கொண்டு போறேன்.

39:07.440 --> 39:08.280
வாங்க.

39:11.800 --> 39:15.520
மூட்டை மாதிரி உங்களை படகுக்கு
கொண்டு போறேன்.

39:15.600 --> 39:16.640
டேமி, முடியாது.

39:16.680 --> 39:19.520
முடியும், ஏன்னா நான் பலசாலி.

39:19.600 --> 39:22.760
மேலும் நான் ஒரு பிரமாதமான இளம் பெண்.

39:22.840 --> 39:25.280
-இல்லையா, திருமதி கருதர்ஸ்?
-டேமி...

39:26.800 --> 39:27.880
அந்த ஓட்ட காலணிகள்.

39:29.280 --> 39:33.320
அவங்க வீட்டு படத்தில் இருக்கறது
போல. வில்லியம் கருதர்ஸ் காலணிகள்.

39:36.560 --> 39:39.200
இங்கே என்ன பண்ணிட்டிருந்தீங்க,
மார்கரெட்?

39:39.320 --> 39:41.800
என்ன கண்றாவி? அவரை
தோண்ட பார்த்திருக்காங்க.

39:43.120 --> 39:44.840
கேவலமான வேலை, மார்கரெட்!

39:51.800 --> 39:54.680
நாம் இங்கே வரக் கூடாதுன்னு
சொன்னது அவர் இல்லே.

39:55.200 --> 39:56.160
அது நீங்க.

39:58.640 --> 40:04.080
நிலத்தை திருப்பிக் குடுக்காம, உங்க
சொந்த சகோதரனை கொன்னுருக்கீங்க.

40:05.160 --> 40:07.360
எங்களுக்கு முழுசா கூட வேண்டாம்!

40:07.680 --> 40:10.160
அதாவது, எங்களுக்கு முழுசா வேணும், ஆனா,

40:10.200 --> 40:12.000
நாங்க பகிர தயாரா இருந்தோம்!

40:12.600 --> 40:13.440
ஜாக்கிரதை!

40:27.840 --> 40:32.120
என் நிலம்.

40:40.640 --> 40:42.000
அவ...

40:43.800 --> 40:44.760
ஆமா, அவ்வளவுதான்.

40:45.840 --> 40:47.040
இனவெறிக்காரி செத்தா.

40:55.600 --> 40:57.320
ஆமா. நன்றி, ஹானா.

40:58.920 --> 41:00.960
அப்ப அது லூயிஸ் மெக்யூவன்.

41:01.800 --> 41:04.400
-அங்கே என்ன நடக்குது?
-தெரியல, மேடம்.

41:04.480 --> 41:07.640
-இல்ல, எனக்கு ஞாபகம் வருது.
-அது காலின்ஸின்...

41:09.480 --> 41:10.640
அப்படித்தான் தோணுது.

41:11.640 --> 41:13.080
சரி, நன்றி.

41:13.160 --> 41:14.840
நன்றி. பை, பை.

41:21.840 --> 41:24.440
-புதிய அடெல் ஆல்பம்!
-ஆமா, சரிதானே?

41:24.520 --> 41:26.200
-ரொம்ப பிடிக்கும்.
-அருமை.

41:26.320 --> 41:28.440
என் தோழி, ஹானா...

41:29.680 --> 41:33.640
ஆமா, ஆமா, அவகூடதான் நான் உறவில்
இருந்தேன், சரியா? வாங்க போகலாம்.

41:34.800 --> 41:37.200
அப்ப, லூயிஸ் மெக்யூவன்
ஒரு பாலியல் தொழிலாளி.

41:37.320 --> 41:40.320
இங்க போலவே மயக்க மருந்து
கொடுத்து கழுத்து நெறிக்கப்பட்டா.

41:40.400 --> 41:42.400
வழக்கு கிடப்பில் இருக்குனு நினைச்சேன்,

41:42.480 --> 41:46.080
ஆனா, சில வருஷம் முன், இன்னொரு
பாலியல் தொழிலாளி வந்து சொன்னா.

41:46.160 --> 41:48.760
அவளும் அதே சமயம் அதே போல
தாக்கப் பட்டிருக்கா.

41:48.840 --> 41:52.640
ஆனா எப்படியோ தப்பிச்சு,
தாக்கினவன் உருவ வடிவை கொடுத்திருக்கா.

41:52.760 --> 41:55.080
அந்த பெயர் மெக்யூவன்
ஒரு தற்செயலா இருக்கலாம்,

41:55.160 --> 41:57.480
ஆனா ஹானா ஒரு அடையாள
வடிவம் அனுப்பியிருக்கா.

41:57.560 --> 42:00.760
உன் போனுக்கு, ஆபி,
என் இணைப்பு மோசமா இருக்கு.

42:00.840 --> 42:04.160
ஆனா, சிட்னியில் உள்ள "ஜேக் ரிப்பர்"
போல நம் கொலையாளி

42:04.280 --> 42:07.160
பெண் பாலியல் தொழிலாளிகளை
குறி வைக்கல.

42:07.280 --> 42:09.520
அவன் கேவலமான ஆண்களை குறி
வைக்கறான். எனவே...

42:11.600 --> 42:12.520
என்ன?

42:13.560 --> 42:15.960
-என்ன?
-அவங்களும் வெறுக்கத் தக்கவங்கதான்.

42:16.080 --> 42:17.400
அதேதான், மேடம்.

42:17.520 --> 42:20.880
ஓய், மன ஆற்றல் கொண்ட இரட்டையர்களே,
என்கிட்டேயும் சொல்லுங்க.

42:21.360 --> 42:24.960
பாலியல் தொழிலாளர்களை குறி வைக்கும்
தொடர் கொலையாளிகள் சமூக

42:25.040 --> 42:26.840
சுத்திகரிப்பு தம் பணினு நம்புவாங்க.

42:26.920 --> 42:30.680
பாரம்பரியமா அறநெறிப்படி
வெறுக்கத்தகுந்தவர்கள்,

42:30.800 --> 42:32.840
-பாலியல் தொழிலாளர்கள், கே மக்கள்.
-சரி.

42:32.920 --> 42:34.280
ஆனா சமூகம் மாறுது.

42:35.080 --> 42:37.760
நம் கொலையாளி ஒரு புது பணி
எடுத்துக்கிட்டான் போல.

42:39.160 --> 42:40.640
-கசமாலங்கள்!
-கேவலமான ஆண்கள்.

42:43.880 --> 42:44.960
இவன் எப்ப...

42:45.960 --> 42:47.960
இந்த சிட்னி வேலை எப்ப நடந்தது?

42:48.440 --> 42:51.800
பல வருஷம் முன், அப்ப நான் ஒரு
பலவீனமான மனநிலையில் இருந்தேன்--

42:51.880 --> 42:54.640
-கொலைகள் பத்தி, உன் உறவு இல்லே!
-சரி, சரி.

42:54.680 --> 42:57.400
கடைசி தாக்குதல் அஞ்சரை வருஷம் முன்பு.

42:57.480 --> 42:59.280
-அந்த காலவரிசை சரியா இருக்கு.
-சரி.

42:59.360 --> 43:03.160
என்ன தோணுது? சிட்னி கொலையாளி,
டெட்லாக்குக்கு குடி பெயர்ந்தான்,

43:03.200 --> 43:06.520
ஒரு புது செய்முறை எடுத்துக்கறான்,
உருவத்தை மாத்திகிட்டானா?

43:06.600 --> 43:08.080
அப்படியா நாம் நினைக்கிறோம்?

43:08.160 --> 43:10.600
டெட்லாக் புதுப்பித்து
கொள்வதற்கான இடம்.

43:14.880 --> 43:16.080
நீ என்ன சொன்ன?

43:17.960 --> 43:19.080
என்னது அது?

43:19.480 --> 43:20.800
காலின்ஸ், உன் டார்ச் எடு.

43:20.880 --> 43:22.600
-உன் டார்ச்சை எடு.
-சரி.

43:25.160 --> 43:27.880
மேடம்களே, அந்த அடையாள வடிவம்
வந்துகிட்டு இருக்கு.

43:28.760 --> 43:29.760
மேடம்களே?

43:40.160 --> 43:41.160
காலின்ஸ்!

43:56.200 --> 43:57.560
அது செத்ததா சொன்னான்.

43:58.680 --> 44:00.680
கேத் அதுக்கு
பெண்டோபார்பிட்டால் தந்தா.

44:02.320 --> 44:03.320
மேடம்களே.

44:15.920 --> 44:17.960
நான் இங்கிருக்கேன்

44:19.320 --> 44:21.360
நான் இங்கிருக்கேன்

44:22.160 --> 44:24.640
-உனக்கு நினைவுறுத்த
-நீ...

44:24.720 --> 44:29.240
நீ விட்டு சென்ற குழப்பத்தை

44:29.320 --> 44:34.160
என்னை மறுப்பது தகாது

44:34.240 --> 44:38.320
என் மேல் சுமத்திய சிலுவையை தாங்குகிறேன்

44:38.400 --> 44:41.360
நீ, நீ, நீ அறிவாய்

44:41.440 --> 44:42.640
அருமையான பாட்டு, இல்ல?

44:45.480 --> 44:48.040
ஃபுல் ஹவுஸின் ஜோயிக்காக அவள் எழுதினா.

44:48.120 --> 44:52.240
மைக், அது உனக்கு தெரியுமா?
அது '95ல வந்தது. ஆமா.

44:53.760 --> 44:55.440
இந்த பொம்பளையை பாருங்க, கைஸ்.

44:56.120 --> 44:57.720
நான் இங்க இருக்க காரணம் இவதான்!

44:58.840 --> 44:59.680
இப்ப, ஸ்கை.

44:59.760 --> 45:03.440
சிட்னில, உன் பேஸ்ட்ரி ஷெஃபா இருந்தப்ப,
எனக்கு பெண்ணியம் பத்தியும்

45:03.520 --> 45:06.400
நச்சான ஆண்மை பத்தியும் சொன்னே,
அது என் பார்வையை மாத்தியது.

45:07.320 --> 45:10.160
என் நம்பிக்கை, நோக்கம் பத்தி
தடுமாறிகிட்டு இருந்தப்ப

45:10.240 --> 45:13.920
நீ சொன்னே, "டெட்லாக்குக்கு குடி போ.
இடத்தை மாத்திக்கோ.

45:14.000 --> 45:16.520
"அம்மா கூட வேலை செய்." ஞாபகம் இருக்கா?

45:16.600 --> 45:18.760
எல்லாம் நடந்த விதம் வேடிக்கையா இருக்கு.

45:19.480 --> 45:23.360
உன் அப்பாதான் என் முதல் குறிக்கோள்,
அது ரொம்ப சிறப்பானது.

45:23.440 --> 45:28.200
ஏன்னா, நீங்க ஓ'ட்வயர்ஸ் என் நண்பர்கள்
மட்டுமில்ல, நான் தேர்ந்தெடுத்த குடும்பம்.

45:30.560 --> 45:31.560
இது பரவாயில்ல.

45:33.760 --> 45:36.600
இதைப் பத்தி பேசறது
எவ்வளவு நல்லா இருக்கு, இல்லே?

45:37.960 --> 45:40.880
நாம் ஆண்கள், நிறைய பேசணும்,
இல்லையா, கைஸ்?

45:40.960 --> 45:42.440
நாம் இன்னும் சீரியஸ் ஆகணும்.

45:47.960 --> 45:49.160
ப்ரன்னே ப்ரௌன்.

45:49.720 --> 45:51.040
ஜெஸ்சுக்கு அவரை தெரியும்.

45:52.120 --> 45:54.400
அவங்க சொல்றாங்க
வலிமையற்ற நிலை என்பது

45:54.480 --> 45:58.040
புதுமை, படைப்பாற்றல்
மற்றும் மாற்றத்தின் பிறப்பிடம்னு.

45:59.200 --> 46:01.200
நாம் ஆண்கள், மாறணும், இல்லையா?

46:02.360 --> 46:03.880
அதாவது, நான் உங்களை சொல்லல.

46:04.400 --> 46:06.040
நீங்க தேறவே முடியாது.

46:06.600 --> 46:08.080
நான் உங்களை ஒழிக்கணும்.

46:15.040 --> 46:18.960
ஸ்வென், அவன் பெண்களுக்கு ஒரு
அஞ்சலி போல விஷத்தை பயன்படுத்தியிருக்கான்.

46:19.040 --> 46:20.520
ஒப்புக்கறேன். அது ரொம்ப--

46:20.600 --> 46:23.440
ஃபுட்பால் க்ளப் போய் பெண்களிடம் பேசு.

46:23.520 --> 46:24.440
காலின்ஸ்?

46:24.520 --> 46:27.040
ரே ஆளுங்களை,
எங்க கொண்டு போனான்னு தெரியுமா கேள்.

46:27.160 --> 46:28.440
-காலின்ஸ்!
-என்ன?

46:28.520 --> 46:30.360
லூ எங்கயோ போகுது.

46:30.480 --> 46:34.040
அதை பாத்துக்க முடியாத
பண்ணையோட இருக்கிற ஒரு விதவையிடம்

46:34.120 --> 46:36.040
அதை வாங்கினதா ரே சொன்னான்,

46:36.120 --> 46:37.600
ஒருவேளை வீட்டுக்கு போகுதோ.

46:37.680 --> 46:39.160
மேடம், அது இந்த பண்ணையோ?

46:39.240 --> 46:43.640
மவுண்ட் மவுண்டன் நேஷனல் பார்கின் அடுத்து.
க்ரிம் ஹில் ரோட் பின்பக்கம்.

46:44.560 --> 46:46.120
-கடவுளே!
-என்ன?

46:47.040 --> 46:49.800
-ஒ கருமம்.
-ஸ்வென், உன் உதவி தேவை.

46:49.880 --> 46:52.120
சரி, டல்ஸ், உங்களை எங்கே சந்திக்கட்டும்?

46:52.200 --> 46:53.800
ஜெஃப் ஹாடிக் பண்ணை.

46:56.240 --> 46:57.920
ஒ, கடவுளே, இந்த வேலையே வேணாம்.

47:06.200 --> 47:07.840
ஹே, ஃபே?

47:10.400 --> 47:11.960
ரே, இதை செய்யாதே.

47:12.080 --> 47:15.160
ஸ்கை, இளைஞர்கள்
என்னல்லாம் செய்ய முடியும் தெரியுமா.

47:15.240 --> 47:16.440
அவங்க அரக்கர்கள்.

47:16.520 --> 47:17.680
அவங்க குழந்தைகள்தான்.

47:17.760 --> 47:21.080
இல்லே, பாவம் செஞ்சாச்சு.
கதை முடிஞ்சுது, டாமுக்கு கூட.

47:21.200 --> 47:23.800
அவன் ஃபுட்பால் க்ளப் சேந்தான்,
சாம் மாதிரியே ஆக.

47:23.880 --> 47:25.200
என் மகன்கிட்ட பேசாதே!

47:27.720 --> 47:32.360
ஜேம்ஸ், நான் ஸ்கை கூட பேசறேன்.
நீ பெண்களை பேச விடணும்.

47:37.480 --> 47:39.000
அகலமா திற.

47:39.440 --> 47:41.000
ஜேம்ஸ், ஜேம்ஸ்.

47:41.440 --> 47:42.680
உன் வாயை மூடணுமே.

47:46.320 --> 47:49.480
பொறுமையா இரு, நண்பா.
இது ரொம்ப ரொம்ப சிக்கலானது.

47:50.400 --> 47:51.480
சரியா?

48:15.680 --> 48:17.440
இதை கேட்க கஷ்டமா இருக்கும். கைஸ்,

48:17.520 --> 48:20.120
ஆனா இதுக்கெல்லாம் பதில்
சொல்லியாகணும், இல்லையா?

48:20.200 --> 48:21.920
எழுந்திரு, பேசு.

48:22.840 --> 48:24.960
ஸ்கை, தோழியே, ரிலாக்ஸ் பண்ணு.

48:25.880 --> 48:27.120
என்ன ஒரு ரகளைக்காரி.

48:27.880 --> 48:29.200
உன் அப்பாவும் அப்படியே்.

48:29.280 --> 48:31.000
என்கிட்டே வராதே!

48:31.080 --> 48:32.200
கத்தியை கீழே போடு!

48:32.280 --> 48:34.440
ஒ, அட்டகாசம்! ஹை, அன்பே.

48:34.920 --> 48:36.760
அப்ப, ஃபில் வந்து சேர்ந்துட்டான்.

48:36.880 --> 48:38.680
ரத்த போக்கு பத்தி கவலைப்பட்டேன்.

48:39.160 --> 48:41.920
கைஸ், இது என் காதலி, எட்டி. சரியா?

48:42.000 --> 48:43.320
அங்கேயே நில்லு.

48:44.000 --> 48:45.560
ஆபி, வாவ்!

48:45.640 --> 48:47.800
பார், உன் சக்தியை நீ புரிஞ்சுகிட்டே.

48:48.360 --> 48:51.480
ஹே, உனக்கு ஒண்ணு வெச்சுருக்கேன். பிடி!

48:56.480 --> 48:58.280
நல்லா பண்ணிருக்கேன், இல்லையா?

48:58.360 --> 49:00.400
ஜேம்ஸோட முறிக்க மாட்டேன்னு தெரியும்,

49:00.480 --> 49:02.000
-அதனால் உனக்காக இது.
-என்ன?

49:02.080 --> 49:04.120
அவன்கூட ஏற்கனவே முறிச்சிட்டேன், ரே!

49:06.560 --> 49:07.440
பண்ணிட்டயா?

49:09.520 --> 49:10.400
சரி.

49:15.600 --> 49:16.600
காலின்ஸ்!

49:17.520 --> 49:20.040
சாரி, டல்ஸ்! நீ செத்தாலும் சாவ.

49:21.480 --> 49:23.280
ஒ, ஐயோ, கால், உன் குடல்!

49:23.400 --> 49:26.040
-இல்லே, நகரு.
-இல்லே, உன்னை விட்டு போக மாட்டேன்.

49:26.120 --> 49:27.480
என்னை விடு. அவனை பிடி!

49:37.640 --> 49:40.680
வா, சீக்கிரம்! அவங்க உள்ள இருக்காங்க.
வெளிச்சம் தெரியுது.

49:40.760 --> 49:42.360
வா, போகலாம். வா.

49:47.920 --> 49:48.760
செக்சி!

49:49.240 --> 49:50.320
கேத்?

49:50.400 --> 49:52.480
கா-மூ-ர-நீ, மக்களே, சரியா!

49:52.560 --> 49:55.920
காத்து, மூச்சு, ரத்த ஓட்டம், நீர் குறைவு!
சரியா, செய்யுங்க!

50:07.080 --> 50:11.640
மவுண்ட் மவுண்டன் நேஷனல் பார்க்
க்ளோ வோர்ம் ட்ரெயில் வரவேற்குது.

50:22.480 --> 50:24.160
இந்த இடம் எவ்வளவு அழகு!

50:27.320 --> 50:28.960
பிக்னிக் மாதிரி வந்திருக்கணும்.

50:33.640 --> 50:36.320
வா, அன்பே!
உனக்கு காண்பிக்க ஒண்ணு இருக்கு.

50:36.400 --> 50:37.680
போடா நாயே!

50:38.160 --> 50:39.120
போய் சாவு.

50:39.200 --> 50:40.040
லேனா ராலா வார் ஃபால்ஸ்

50:40.120 --> 50:41.800
களோவோர்ம் ஒரு வகை ஈன்னு தெரியுமா?

50:44.000 --> 50:46.400
சாகாதே. சாகாதே!

50:48.040 --> 50:50.520
சாவு, சாவு! உனக்கு நீதான் ராணி

50:50.600 --> 50:52.000
நான் சாகணுமா?

50:52.080 --> 50:54.360
இல்லே! வேண்டாம், சாகாதே!

50:56.160 --> 50:57.560
இதெல்லாம் என் தப்பு.

50:57.680 --> 50:58.560
கேத், இல்லே.

50:59.120 --> 51:02.600
ரே கழுதைக்காக மயக்க மருந்து
வெச்சிருந்தான். நான் உன்கிட்ட சொல்லல.

51:02.680 --> 51:04.760
உன்னைவிட நான் அறிவாளின்னு நினைச்சேன்.

51:04.880 --> 51:08.320
ரே நல்லவன்னு நினச்சேன்!
நான் சரின்னு எப்பவும் நினச்சேன்.

51:08.400 --> 51:10.680
நிறைய சமயத்தில் நான் சரிதான்.

51:10.760 --> 51:13.280
சில சமயம், நான் சரியில்லன்னு ஆகுது.

51:13.920 --> 51:15.000
சரி.

51:15.080 --> 51:18.960
கூகுள் கேலண்டர் ஆக்கிரமிச்சதுக்கு சாரி,

51:19.080 --> 51:22.400
பாட்டுக் குழுவில்
உன்னை சேர வெச்சதுக்கு சாரி,

51:22.520 --> 51:25.640
இந்த கொலை பண்ணையை
வாங்கினதுக்கு சாரி.

51:25.720 --> 51:29.440
அந்த கண்றாவி நாய் பத்தி சாரி.

51:29.560 --> 51:33.960
கேத், இதெல்லாம் உண்மையில் நல்ல விஷயம்,
நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன்.

51:34.440 --> 51:36.960
ஆனா இப்போதைக்கு, ரத்தம் போயிட்டிருக்கு.

51:37.040 --> 51:40.440
ஆமா, நீ சொல்றது கேட்குது.
100% நீ சொல்றது கேட்குது,

51:40.520 --> 51:42.840
ஆனா வேகமா, இன்னும் ஒரே ஒரு விஷயம்.

51:43.320 --> 51:45.000
டெட்லாக்கை விட்டு போயிடுவோம்.

51:46.160 --> 51:47.640
உனக்கு இங்க வெறுப்பு, செக்சி.

51:48.560 --> 51:49.960
கிளம்பி போயிடலாம்.

51:54.640 --> 51:56.800
நீ எங்க போறயோ அதான் என் வீடு.

51:58.600 --> 51:59.600
சரி. சரி.

52:06.000 --> 52:08.080
ஹே, என்னனு பார்க்கலாம்.

52:11.480 --> 52:13.480
இவ்வளவுதானா? நானே சரி பண்ணிடுவேன்.

52:14.080 --> 52:15.760
எல்லா பாலூட்டிகளும் ஒரே மாதிரி.

52:15.840 --> 52:17.560
மார்பக அளவில்தான் வித்தியாசம்.

52:30.280 --> 52:31.120
இதோ ஆச்சு.

52:32.760 --> 52:34.560
கடவுளே! எவ்வளவு அழகா இருக்கே.

52:35.560 --> 52:36.720
உன்னால நீந்த முடியாது.

52:36.800 --> 52:38.840
ஆமா, மோசம் இல்ல, உண்மையில்.

52:39.440 --> 52:42.200
என்னை நெருங்கறதுக்கு
லூ பத்தி கதை விட்டே.

52:42.280 --> 52:44.720
பப்பு, உனக்கு புஷ்ஷி பத்தி
பேச வேண்டி இருந்தது.

52:46.400 --> 52:49.720
யோசிச்சிட்டு இருந்தேன், நாம
டெட்லாக் விட்டு போயிடுவோம்.

52:50.560 --> 52:54.360
என் தோழர்களை மிஸ் பண்ணுவேன்,
ஆனா உனக்கு எவ்வளவு சிரமமா இருந்தது,

52:54.440 --> 52:56.280
எனக்கும் எவ்வளவு பிசியா இருந்தது,

52:56.360 --> 52:58.760
புதுசா ஆரம்பிப்போம், நல்லாயிருக்கும்.

52:58.840 --> 53:00.520
ஒரு புது ஊர்ல, பாரம் இல்லாம?

53:01.000 --> 53:02.920
ஒரு நாய் வாங்கி, குடும்பம் தொடங்கி.

53:03.120 --> 53:04.240
குடும்பம் தொடங்கலாமா?

53:06.000 --> 53:08.200
நீ ஒரு தொடர் கொலையாளி, கண்ணா!

53:08.640 --> 53:11.720
அன்பே, உண்மையில் டெட்லாக்கை
பெண்களுக்கு நல்ல இடமா பண்றேன்.

53:11.800 --> 53:15.080
நச்சு ஆண்களை நான் ஒழிச்ச பிறகு இந்த
இடம் நல்லா ஆயிருக்கு!

53:15.160 --> 53:17.680
ஸ்கையும் விக்கும் நல்லா இருக்காங்க,
அலேய்னா மேயர்.

53:17.760 --> 53:20.800
இவங்களில் யாராவது இதை செய்ன்னு
சொன்னாங்களா, ரே?

53:20.880 --> 53:23.600
அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டிருந்தா,

53:23.680 --> 53:27.120
"ரே, பாதி ஊரை கசாப்பு போடு, அதுக்காகத்தான்

53:27.200 --> 53:29.520
பாட்டி போராடினா"னு
சொல்லிருக்க மாட்டாங்க.

53:29.640 --> 53:31.200
அவங்க சொல்லியிருக்க மாட்டாங்க.

53:31.280 --> 53:33.160
பெண்கள் ஆண் வழி மரபின் அடிமைகள்.

53:33.240 --> 53:35.080
அவங்க நசுக்கப்பட்ட அபலைகள்.

53:35.160 --> 53:38.960
அவங்களுக்கு என் போல் தொலைநோக்கு உள்ள
முன் நடத்தும் ஆண் உதவி தேவை!

53:39.040 --> 53:40.280
இது உன் பத்தி இல்ல!

53:40.360 --> 53:42.560
இது என் பத்தி இல்லேன்னு தெரியும், எட்டி.

53:42.640 --> 53:45.880
அதனால்தான் ஆண்களை கொன்றேன்.
பெண்களை கொல்றதை நிறுத்திட்டேன்.

53:47.760 --> 53:49.840
இந்த கொலைகளை நான் செய்ய வேண்டியதில்ல.

53:49.920 --> 53:51.800
எல்லாருக்கும் அது தெரியும், நண்பா.

53:51.880 --> 53:54.240
உன்னைத் தவிர அது எல்லோருக்கும் தெரியும்!

53:55.240 --> 53:57.800
உன் வாழ்க்கை சுலபமானா
என் வாழ்க்கை கஷ்டமாகும்.

53:57.880 --> 54:01.560
இருந்தும் பெண்கள் உங்களுக்கு சரியான
உலகம் ஏற்பட நான் வேலை செய்யறேன்,

54:01.640 --> 54:03.320
நானாவே, பாராட்டுக்காக இல்ல.

54:03.400 --> 54:06.280
-ஆமா, உனக்கு பாராட்டு வேணும்தான்.
-பாராட்டு வேணாம்.

54:06.360 --> 54:10.000
பாராட்டு கேட்கலே என்பதற்காக பாராட்டு,
உங்களுக்கு நல்லது செய்யறதுக்காக!

54:10.080 --> 54:14.040
-அப்ப உனக்கு பாராட்டு வேணுமா?
-இல்ல, நான் ஒரு வெறும் தோழன், எட்டி.

54:14.880 --> 54:16.400
மிகச் சிறந்த தோழன்.

54:17.640 --> 54:18.640
அதை சொல்லு.

54:19.160 --> 54:20.720
நான் உன் உயிர் தோழன்னு சொல்.

54:20.800 --> 54:24.720
ஆறு வருஷம் முன்
நீ பெண்களை கொன்னுட்டு இருந்தே, நாயே!

54:24.800 --> 54:26.840
நான் ஒரு பெண்ணிய பயணத்தில் இருந்தேன்.

54:27.400 --> 54:30.080
இப்ப எனக்கு பெண் தோழிகள் உண்டு.
அவங்ககிட்ட போவேன்.

54:30.160 --> 54:32.480
-நான் மாறிட்டேன்.
-இல்லே, நீ மாறல, சரியா?

54:32.560 --> 54:35.960
எல்லாத்துக்கும் இன்னும் கொலைதான்
உன் பதில், கிறுக்கு பயலே!

54:39.600 --> 54:41.160
அப்ப ஒண்ணு செய்யலாம்.

54:42.480 --> 54:44.560
இது எல்லாத்தையும் மறந்துட்டு,

54:45.120 --> 54:48.200
சோபாவில் உட்கார்ந்து கட்டிக்கிட்டு
பஃப்பி பார்க்கலாமா?

54:50.440 --> 54:54.560
-பக்கத்தில் வராதே.
-கண்ணு, பார், உனக்கு கோபம்தானே?

54:54.640 --> 54:58.480
நம்பு, இன்னொருத்தன் சாவு
உன் பழியா ஆக வேண்டாம்.

54:59.440 --> 55:01.680
-என்ன?
-ஆமா, அதுதான்.

55:01.880 --> 55:04.240
நீ புஷ்ஷி கூட அன்றிரவு இருந்திருக்கணும்.

55:04.320 --> 55:07.000
அவன் உயிரோட இருந்திருப்பான்,
நீ சரியா யோசிக்கல,

55:07.080 --> 55:08.240
அதனால் புஷ்ஷி செத்தான்.

55:08.320 --> 55:10.040
அது அப்படி நடக்கல.

55:10.120 --> 55:12.840
எனக்கு ஒரு அம்மா ஒரு குழந்தை,
எங்கேயோ இருக்காங்க.

55:12.920 --> 55:15.520
இப்ப நீ என்னை ஏதாவது செஞ்சேன்னு வெச்சுக்க,

55:15.600 --> 55:17.400
அவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசி.

55:17.480 --> 55:19.680
பாரு, கண்ணு, துப்பாக்கியை கீழ போடு.

55:24.120 --> 55:25.520
அவளை விடு!

55:26.080 --> 55:27.720
கத்தியை கீழ போடு! போடு.

55:27.800 --> 55:29.800
ஹலோ, டல்ஸ், எப்படி போகுது?

55:30.760 --> 55:32.240
கத்தியை கீழ போடு, ரே!

55:32.920 --> 55:34.600
முடியாது, தோழி, சாரி!

55:34.720 --> 55:38.040
-நான் பார்க்கிற மாதிரி கையை காட்டு.
-சரி.

55:39.040 --> 55:42.080
வேண்டாம், வேண்டாம், செய்யாதே.
வேண்டாம், ரே!

55:43.240 --> 55:46.800
தண்ணியிலேருந்து வெளியே வா. ரே!

55:46.880 --> 55:49.320
அந்த நீரோட்டம் அபாயமானது.

55:49.920 --> 55:50.840
வா, டல்ஸ்.

55:51.720 --> 55:53.800
நான் அருமையான நீச்சல்காரன்.

55:53.880 --> 55:55.000
-ஐயோ!
-ஐயோ!

56:00.040 --> 56:03.680
-எங்கே போனான்? கீழே போனானா?
-தெரியல.

56:56.280 --> 56:59.280
அனைத்து யூனிட்களும் கவனிக்கவும்!
அவர்கள் பஸ்ஸில் இல்லை!

56:59.560 --> 57:02.040
மீண்டும். அந்த ஆண்கள் பஸ்ஸில் இல்லை!

57:02.120 --> 57:05.120
ஸ்கை ஓ'ட்வயயர் ஆண்களை கடலுக்கு
கொண்டு செல்கிறாள்!

57:11.880 --> 57:12.880
நீ நலம்தானே?

57:13.400 --> 57:14.240
ஆமா.

57:15.480 --> 57:17.160
இல்லை. ஒருவேளை...

57:18.240 --> 57:20.480
இது எல்லாத்தையும் ஒரு உளவியல் நிபுணரிடம்

57:20.560 --> 57:24.400
போய் கொட்டி சரி செய்ய வேண்டி வரலாம்.

57:28.320 --> 57:32.600
-உன் காயம் நீ எப்படி இருக்கு, காலின்ஸ்?
-அதிர்ச்சியில் ஒண்ணும் தெரியல.

57:44.800 --> 57:47.280
சரி, இங்கேருந்து உன்னை வெளியே
கொண்டு போகணும்.

57:47.360 --> 57:49.840
கிளம்பு. என் மேல் கை போட்டுக்கோ, வா.

57:51.720 --> 57:52.920
-அப்ப, காலின்ஸ்...
-என்ன?

57:53.720 --> 57:56.080
உனக்கு எப்பவும் பெண்கள் மேல்தான் ஆசையா

57:56.160 --> 57:59.280
இல்ல அது உனக்கு ஒரு பயிற்சி மாதிரியா?

57:59.880 --> 58:04.600
எல்லோரும் ஒரு தடவையாவது முயற்சி செஞ்சு,
எப்படி போகுதுன்னு பார்க்கணும்.

58:04.720 --> 58:06.840
நான் நிறைய செஞ்சிருக்கேன்.

58:07.440 --> 58:09.680
நல்லது. பாதி தூரம் வந்தாச்சு.

58:16.120 --> 58:21.200
இரண்டு மாதங்களுக்குப் பிறகு

58:21.280 --> 58:25.720
இப்போது, நம் அணித்தலைவர்,
டேமி ஹேம்ப்சன்!

58:30.160 --> 58:31.000
டெட்லாக் பேடிமெலன்களின் இல்லம்

58:31.080 --> 58:34.760
ஹே, எல்லோரும். பேக்கரி விக்கிலிருந்து
ஒரு சாசேஜ் வாங்குங்க.

58:34.840 --> 58:38.520
நாம் மிலாய்த்தினா-தா சமுதாய மையத்துக்கு
நிதி திரட்டுகிறோம்,

58:38.600 --> 58:40.440
நம் தீவை திரும்பப் பெறுவோம்.

58:41.160 --> 58:43.720
சரி, நல்லது, செல்க பேடமேலன்ஸ்!

58:53.400 --> 58:55.040
அது என் வானவில் குடும்பம்.

58:55.120 --> 58:57.360
இந்த தொடரை
முன்பே கேட்டிருக்கயா, ஸ்வென்?

58:58.880 --> 59:01.360
இல்லை கேட்டதில்லை. பிரமாதம்!

59:03.160 --> 59:04.960
ஹலோ, உன்னை எப்படி சொல்லிக்கறே?

59:35.160 --> 59:37.200
ஹை, கேட், நான் தடயவியலுக்கு வரேன்.

59:37.840 --> 59:40.000
புழுக்களின் பருமனைப் பார்த்தால்,

59:40.080 --> 59:42.440
இறந்து குறைந்தது 24 மணி நேரமாச்சு.

59:42.880 --> 59:45.880
சரியா? சரியா இருக்கும்னு தெரியும்.

59:59.400 --> 01:00:01.000
உன் செருப்பு பிடிச்சிருக்கா?

01:00:01.520 --> 01:00:03.360
என் கால்கள் நிர்வாணமா இருக்கு.

01:00:03.920 --> 01:00:04.840
ஹே, பாருங்க!

01:00:06.920 --> 01:00:10.720
நான் டவுனுக்குப் போறேன்.
டார்வின் சூடு மண்டை காயுது!

01:00:10.800 --> 01:00:12.720
த ஏர்பிஎன்பி ஹோஸ்ட், தமீன்,

01:00:12.800 --> 01:00:15.720
ஃபங்கல் க்ரீம் பத்தி சொன்னா,
மொத்தமாதான் வருதாம்.

01:00:15.800 --> 01:00:17.360
எல்லோருக்கும் வாங்கறேன்!

01:00:17.480 --> 01:00:20.880
கடவுளே! உள்ளே வியர்வை வழிஞ்சு ஓடுது.

01:00:20.960 --> 01:00:23.360
-அரை மணியில் வரேன்!
-சரி.

01:00:23.440 --> 01:00:26.280
-ஐ லவ் யு, செக்சி!
-லவ் யு. நன்றி.

01:00:26.360 --> 01:00:29.520
-லவ் யு, எட்டி!
-சரி, அது-- சரி!

01:00:29.600 --> 01:00:31.000
என்ன?

01:00:32.840 --> 01:00:34.040
ஐ லவ் யு.

01:00:36.880 --> 01:00:37.760
என்ன?

01:00:37.840 --> 01:00:39.560
-பை!
-பை, அன்பே.

01:00:48.920 --> 01:00:50.120
நீ தயாரா?

01:00:51.960 --> 01:00:53.120
இல்லை.

01:00:54.320 --> 01:00:55.480
போகலாம்.

01:01:16.480 --> 01:01:19.120
-ஹை-யா! நல்ல நாள், ஹாலி.
-ஹை.

01:01:19.760 --> 01:01:21.560
இது என் தோழி, டலீஸ்,

01:01:21.680 --> 01:01:25.000
புஷ்ஷியின் கொலையை கண்டுபிடிக்க
வந்திருக்கோம் இல்லையா?

01:01:25.120 --> 01:01:27.080
-ஆமா! ஆமா! அதுக்குதான்.
-சரி.

01:01:27.560 --> 01:01:30.480
எங்களுக்கு ஒரு நிமிஷம்
தருவீங்களா, ஹாலி?

01:01:35.760 --> 01:01:36.920
டலீஸ்?

01:01:37.000 --> 01:01:37.960
ஆமா!

01:01:39.040 --> 01:01:41.000
என் பெயர் உனக்கு தெரியாதா?

01:03:06.880 --> 01:03:08.880
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கிரண் காஷ்யப்
