WEBVTT

00:00:21.939 --> 00:00:23.398 align:center
அவர் உயிருடன் இருக்கிறார்!

00:00:25.359 --> 00:00:26.360 align:center
ஹேய்!

00:00:29.863 --> 00:00:31.031 align:center
இங்கே வாருங்கள்.

00:00:52.177 --> 00:00:53.637 align:center
போலீஸ்! அசையாதீர்கள்!

00:01:01.103 --> 00:01:04.022 align:center
கனவில் பிடிபடுவது நமக்கு
ஒருவித நிம்மதியைத் தரும்போது

00:01:04.105 --> 00:01:05.899 align:center
நாம் சோகமான நிலையில் இருக்கிறோம் என்று அர்த்தம்.

00:01:11.321 --> 00:01:13.323 align:center
நாம் சிறையில் ஆயுள் தண்டனையைப்
பெறும் சூழலை எதிர்கொள்ளும்போது

00:01:13.407 --> 00:01:14.533 align:center
நமக்கு ஒன்று நடக்கிறது.

00:01:14.616 --> 00:01:17.077 align:center
நாம் அனைத்தையும் இன்னும் துல்லியமான
கவனத்துடனும், அற்புதமான

00:01:17.160 --> 00:01:18.787 align:center
அமைப்பு மற்றும் விவரங்களுடனும்
பார்க்கத் தொடங்குவோம்,

00:01:18.871 --> 00:01:21.206 align:center
அதாவது நம் மூளை ஏற்கனவே நாம்
இழக்கவிருக்கும் அனைத்தின் நினைவையும்

00:01:21.290 --> 00:01:23.542 align:center
படம்பிடித்து, அட்டவணைப்படுத்த
முயல்வது போல.

00:01:27.629 --> 00:01:29.923 align:center
பிறகு மற்ற அனைவரும் நம்மைப் பார்க்கும் விதம்.

00:01:33.135 --> 00:01:34.428 align:center
உங்களுக்கு எதுவும் உதவி வேண்டுமா, நண்பர்களே?

00:01:37.848 --> 00:01:39.141 align:center
இனிய நாளாக இருக்கட்டும்.

00:01:57.284 --> 00:01:58.577 align:center
மார்னிங், திரு. கூப்பர்.

00:01:59.953 --> 00:02:00.996 align:center
லடி.

00:02:03.415 --> 00:02:05.626 align:center
நீங்கள் முடித்ததும்
அலுவலகத்தில் உங்களுடன் கொஞ்சம்

00:02:05.709 --> 00:02:06.835 align:center
பேசலாம் என நினைத்தேன்.

00:02:07.503 --> 00:02:09.630 align:center
- எதைப் பற்றி?
- என்ன?

00:02:10.797 --> 00:02:14.176 align:center
நான் இந்த கிளப்பில் சுமார்
பத்து ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கிறேன்,

00:02:14.259 --> 00:02:15.844 align:center
இதற்கு முன் நீ என்னை உன் அலுவலகத்திற்கு
அழைத்ததே இல்லை.

00:02:15.928 --> 00:02:18.805 align:center
எனவே அது எதைப் பற்றியது என யோசிக்கிறேன்.

00:02:20.641 --> 00:02:22.559 align:center
இந்த உரையாடலை இன்னும் தனிப்பட்ட இடத்தில்

00:02:22.643 --> 00:02:23.810 align:center
பேசலாம் என நினைத்தேன்.

00:02:25.771 --> 00:02:27.981 align:center
நீ கூற வந்ததைக் கூறுகிறாயா, லடி?

00:02:29.233 --> 00:02:30.526 align:center
பாருங்கள்,

00:02:30.609 --> 00:02:32.361 align:center
இது கண்டிப்பாக சென்ஸிடிவான விஷயம்,

00:02:32.444 --> 00:02:36.073 align:center
மேலும் இந்த கிளப்பில் உங்கள் மெம்பர்ஷிப்பை
எவ்வளவு மதிக்கிறோம் என உங்களுக்குத் தெரியும்.

00:02:36.156 --> 00:02:37.366 align:center
அதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

00:02:37.449 --> 00:02:40.118 align:center
விஷயம் என்னவெனில், போர்டு மீட்டிங் நடந்தது…

00:02:41.912 --> 00:02:44.456 align:center
உங்கள் மெம்பர்ஷிப்பை இடைநிறுத்துவது
நல்லது என நினைக்கிறோம்,

00:02:44.540 --> 00:02:45.916 align:center
உங்கள் தற்போதையச் சிக்கல்கள்…

00:02:46.625 --> 00:02:48.168 align:center
தீர்க்கப்படும் வரை.

00:02:48.252 --> 00:02:50.921 align:center
- சரி.
- இதற்காக மிகவும் வருந்துகிறேன், கூப்.

00:02:51.004 --> 00:02:53.674 align:center
என்னை வெளியேற்றுவதற்கான சட்டப்பூர்வ
உரிமையை, கிளப்பின் எந்த விதியை

00:02:53.757 --> 00:02:56.134 align:center
போர்டு கையிலெடுத்தது?

00:02:56.218 --> 00:02:57.928 align:center
கமான், கூப். இது அது இல்லை.

00:02:58.011 --> 00:03:01.181 align:center
ஏனெனில் எனக்கு சரியாக நினைவிருந்தால்,
நான் ஏதேனும் விதிமீறல் செய்திருந்தால்,

00:03:01.265 --> 00:03:04.560 align:center
நான் செய்யவில்லை, கிளப்பானது
எழுத்துப்பூர்வமாக எனக்குத் தெரிவிக்க வேண்டும்,

00:03:04.643 --> 00:03:06.395 align:center
அதுபோன்ற மூன்று அறிவிப்புகளுக்குப் பிறகே

00:03:06.478 --> 00:03:08.605 align:center
என் வெளியேற்றத்தைப் பரிந்துரைக்கும்
ஒழுங்கு நடவடிக்கைகளை

00:03:08.689 --> 00:03:09.690 align:center
அவர்கள் மேற்கொள்ள முடியும்.

00:03:09.773 --> 00:03:11.149 align:center
நீங்கள் கொலைக்காகக் கைதுசெய்யப்பட்டீர்கள்.

00:03:11.233 --> 00:03:12.359 align:center
நான் யாரையும் கொல்லவில்லை.

00:03:12.442 --> 00:03:14.570 align:center
அது எனக்கு எப்படித் தெரியும்?

00:03:16.864 --> 00:03:18.699 align:center
கடவுளே, நீ சொல்வது சரிதான், லடி.

00:03:18.782 --> 00:03:21.076 align:center
தெரிய எந்த வழியும் இல்லை.

00:03:21.743 --> 00:03:23.453 align:center
ஆனால் நீ நினைப்பது போல

00:03:23.537 --> 00:03:25.831 align:center
நான் கொடூரமான கொலைகாரனாக இருக்க
கொஞ்சம் வாய்ப்பு இருந்தாலும்,

00:03:26.957 --> 00:03:29.209 align:center
இப்போது நீ என்னிடம் வம்பு
வைத்துக்கொள்ள விரும்புவாயா?

00:03:32.796 --> 00:03:34.131 align:center
என் பக்கெட்டை காலி செய்யப் போகிறேன்.

00:03:34.214 --> 00:03:35.215 align:center
நன்றி, நண்பா.

00:05:02.052 --> 00:05:03.303 align:center
மெல்.

00:05:05.305 --> 00:05:07.182 align:center
ஹேய். கடவுளே.

00:05:07.266 --> 00:05:08.684 align:center
இன்னும் வலி இருக்கிறதா?

00:05:08.767 --> 00:05:10.602 align:center
நான் வைகடின் டயட்டில் இருக்கிறேன்.

00:05:10.686 --> 00:05:11.979 align:center
ஓ, அருமை.

00:05:12.062 --> 00:05:13.772 align:center
வைகடின்னுக்கு பெர்கொசெட் உதவுகிறது.

00:05:14.940 --> 00:05:16.024 align:center
நீ எப்படி இருக்கிறாய்?

00:05:17.317 --> 00:05:19.987 align:center
அதாவது, இதைவிட நன்றாக இருந்துள்ளேன்.

00:05:20.863 --> 00:05:21.864 align:center
ஆம்.

00:05:21.947 --> 00:05:23.240 align:center
நமக்கு க்ருடிடெ ஆர்டர் செய்தேன்.

00:05:23.323 --> 00:05:24.658 align:center
நன்றி.

00:05:28.495 --> 00:05:32.207 align:center
நான் கூறியாக வேண்டும், நீ மெசெஜ்
அனுப்பியது ஆச்சரியமாக இருந்தது.

00:05:33.834 --> 00:05:37.337 align:center
உனக்கு என்ன தெரியும் என யோசிக்கிறேன்.

00:05:37.880 --> 00:05:39.548 align:center
எதைப் பற்றி என்ன தெரியும்?

00:05:40.424 --> 00:05:43.343 align:center
எனக்கு தெரியாது. எதுவும்.

00:05:44.219 --> 00:05:46.388 align:center
நீ கொஞ்சம் தெளிவாகக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.

00:05:46.471 --> 00:05:48.640 align:center
கடவுளே, உன்னை பணிநீக்கம் செய்யவில்லை, பார்னி.

00:05:54.813 --> 00:05:55.856 align:center
என்ன இது?

00:05:55.939 --> 00:05:57.649 align:center
உங்கள் வீட்டுப் பத்திரம்.

00:05:57.733 --> 00:05:59.735 align:center
அவனது பாதியை உனக்கு எழுதிக்கொடுத்துள்ளான்.

00:05:59.818 --> 00:06:02.154 align:center
இதை வந்து கொடுக்கலாம் என்றிருந்தேன்,
நீ சந்திக்கும்படி கேட்டதால்…

00:06:04.198 --> 00:06:05.532 align:center
அவர் சிறைக்குச் செல்லப் போவதாக நினைக்கிறார்.

00:06:05.616 --> 00:06:09.036 align:center
அவன் குற்றத்தை மறுக்கிறான், சொத்துகளை
பாதுகாப்பாக உன்னிடம் கொடுக்கிறான்.

00:06:09.119 --> 00:06:11.705 align:center
- அதுதான் புத்திசாலித்தனம்.
- நாம் சிறைக்குச் செல்வதாக இருந்தால்.

00:06:12.331 --> 00:06:14.041 align:center
நாம் இங்கே நடுவில் இருக்கிறோம், மெல்.

00:06:14.124 --> 00:06:16.668 align:center
- கடவுளே, என் குழந்தைகள்.
- குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாது, சரியா?

00:06:16.752 --> 00:06:17.961 align:center
உனக்கும்தான்.

00:06:18.045 --> 00:06:19.254 align:center
அவன் சிறைக்குச் சென்றால்.

00:06:19.755 --> 00:06:21.006 align:center
அவனது கல்லூரி டிரஸ்ட்டுகள்,

00:06:21.089 --> 00:06:22.591 align:center
ஓய்வுக்காலச் சொத்துகள் எல்லாம்
உன் பெயரில் இருக்கின்றன.

00:06:22.674 --> 00:06:25.594 align:center
கஷ்டப்படும் காலத்தில், நீ ஹீலாக் உடன்
வீட்டை அடமானம் வைக்கலாம்.

00:06:25.677 --> 00:06:26.887 align:center
விஷயம் என்னவெனில், உங்களுக்கு எதுவும் ஆகாது.

00:06:34.353 --> 00:06:36.063 align:center
அவருக்கு ஏதோ பிரச்சினை.

00:06:36.146 --> 00:06:37.981 align:center
எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியும்.

00:06:39.733 --> 00:06:43.237 align:center
பால் இறப்பதற்கு முன்னாலிருந்தே.
என்னால்… அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

00:06:43.946 --> 00:06:46.365 align:center
அவருக்கு வேலை போனதிலிருந்து
என்ன செய்து வருகிறார்?

00:06:46.448 --> 00:06:47.741 align:center
அதைப் பற்றிக் கூறினானா?

00:06:47.824 --> 00:06:49.868 align:center
ஆம். ஆனால் என்னிடம் கூறாதது என்ன?

00:06:52.538 --> 00:06:54.623 align:center
எனக்குத் தெரிந்தாலும்,
உன்னிடம் நான் கூற மாட்டேன்.

00:06:54.706 --> 00:06:58.043 align:center
- நான் அவருக்கு உதவ முயல்கிறேன்.
- அதற்கான காலம் கடந்துவிட்டது, இல்லையா?

00:06:58.126 --> 00:07:00.045 align:center
இப்போது கூப்புக்கு உதவக்கூடிய
ஒரே ஆள் கூப்தான் என்பதை

00:07:00.128 --> 00:07:03.090 align:center
நாம் இருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

00:07:11.056 --> 00:07:13.475 align:center
- நான் இங்கிருந்து போகணும். என்னால் முடியாது…
- ஆம்.

00:07:14.142 --> 00:07:16.019 align:center
- எதுவும் தெரிந்தால் சொல்.
- நீயும் சொல்.

00:07:18.605 --> 00:07:19.648 align:center
பூ!

00:08:04.443 --> 00:08:08.197 align:center
இந்த அறையில் மயான அமைதி நிலவுகிறது.
யாராவது அதை உணர்கிறீர்களா?

00:08:10.908 --> 00:08:11.950 align:center
ஆலி.

00:08:15.704 --> 00:08:18.248 align:center
இதுபோன்ற சூழல்களில், உரையாடலைத் தொடங்கும்

00:08:18.332 --> 00:08:22.503 align:center
பொறுப்பு பைபோலார் இருக்கும் நபர்
மீதுதான் விழும்.

00:08:23.795 --> 00:08:26.715 align:center
இது பயங்கரமான நேரம் எனத் தெரியும், மேலும்
நம் அனைவருக்கும் அது தெரியும்,

00:08:26.798 --> 00:08:29.801 align:center
எனவே நானே அதைச் சொல்கிறேன்…

00:08:31.929 --> 00:08:34.222 align:center
ஆம், என் முன்னாள் வருங்காலக் கணவனுடன்
நான் செக்ஸ் வைத்துக்கொண்டேன்.

00:08:35.097 --> 00:08:36.140 align:center
மன்னிக்கவும், என்ன?

00:08:37.017 --> 00:08:38.393 align:center
நான் புரூஸுடன் செக்ஸ் வைத்துக்கொண்டேன்.

00:08:38.477 --> 00:08:40.145 align:center
கடவுளே, ஆலி.

00:08:40.229 --> 00:08:41.772 align:center
- தவறாக நினைக்காதே, தம்பி.
- தவறாக நினைக்கவில்லை.

00:08:41.855 --> 00:08:44.983 align:center
- அது மோசமான யோசனை.
- சாம் லெவிட்டுடனான செக்ஸ் புத்திசாலித்தனமா?

00:08:45.067 --> 00:08:46.151 align:center
பார்த்துப் பேசுகிறாயா?

00:08:47.236 --> 00:08:48.904 align:center
என்ன, அவர்களுக்குத் தெரியாதா என்ன?

00:08:48.987 --> 00:08:51.448 align:center
இந்த ஊரில் அது தெரியாத ஆள்
இருப்பதாக நினைக்கிறாயா?

00:08:51.532 --> 00:08:53.242 align:center
- உன் மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லையா?
- ஏன்?

00:08:53.325 --> 00:08:55.118 align:center
நான் செக்ஸ் வைத்துக்கொள்ள என்
மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டுமா?

00:08:55.202 --> 00:08:57.162 align:center
உன் மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லையா?

00:08:57.246 --> 00:09:00.582 align:center
ஆம்! நான் செக்ஸ் வைத்துக்கொள்ள என்
மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது!

00:09:01.416 --> 00:09:02.751 align:center
குறைந்தது நல்ல செக்ஸுக்கு.

00:09:04.503 --> 00:09:06.380 align:center
நல்ல செக்ஸ் வைத்துக்கொள்ள ஏன் உங்கள்
மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது?

00:09:06.463 --> 00:09:09.174 align:center
- கடவுளே, டோரி.
- அது சரியான கேள்வி.

00:09:11.510 --> 00:09:13.011 align:center
நீ இதில் எதுவும் கூறுகிறாயா?

00:09:13.095 --> 00:09:14.471 align:center
- இல்லை.
- புத்திசாலித்தனம்.

00:09:16.473 --> 00:09:18.225 align:center
மருந்துகளுடன் என்னால் உச்சத்தை அடைய முடியாது.

00:09:18.308 --> 00:09:20.185 align:center
- நீ விளையாடுகிறாயா?
- சரி.

00:09:20.269 --> 00:09:22.020 align:center
- நாம் அதைப் பற்றிப் பேச வேண்டும்.
- உன் செக்ஸ் வாழ்க்கை பற்றியா?

00:09:22.104 --> 00:09:24.022 align:center
நீ சிறைக்குச் செல்லக்கூடும்
என்பதைப் பற்றி.

00:09:31.947 --> 00:09:34.491 align:center
- நீ அதைப் பற்றிப் பேச மாட்டாய்.
- அதற்கு நல்ல காரணம் உள்ளது.

00:09:34.575 --> 00:09:36.243 align:center
- என்ன?
- ஏனெனில் நான் பேச விரும்பவில்லை.

00:09:37.828 --> 00:09:39.913 align:center
அது நல்ல முடிவு, ஆண்டி.

00:09:39.997 --> 00:09:42.332 align:center
- எங்கே போகிறாய்?
- இசை நிகழ்ச்சி உள்ளது.

00:09:42.416 --> 00:09:45.294 align:center
- புரூஸ் அங்கே இருப்பானா?
- இல்லை, அவன் என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டான்.

00:09:45.794 --> 00:09:47.796 align:center
- கேடுகெட்டவன்.
- ஆம்.

00:09:48.922 --> 00:09:51.133 align:center
- பிறகு பார்க்கலாம்.
- ஹேய், இல்லை, இருங்கள், நானும் வருகிறேன்.

00:09:52.259 --> 00:09:53.719 align:center
அனைவரும் எங்கே செல்கிறீர்கள்?

00:09:53.802 --> 00:09:55.179 align:center
அப்பா, அவர் வாசிப்பதை நான் பார்க்க வேண்டும்.

00:09:55.262 --> 00:09:56.638 align:center
- கமான்.
- ஆம், நானும்தான்.

00:09:56.722 --> 00:09:57.890 align:center
போகலாம்.

00:09:59.391 --> 00:10:02.561 align:center
ஆம், நல்ல யோசனை. குழந்தைகளை
பாருக்குக் கூட்டிச் செல்வோம்.

00:10:03.437 --> 00:10:09.151 align:center
நான் அதிக கேக் கொண்ட பெண்ணாக
இருக்க விரும்புகிறேன்

00:10:10.194 --> 00:10:13.530 align:center
அவன் அவற்றை மட்டுமே விரும்புவான் ஏனெனில்
அவை உடைவதைப் பார்க்க அவனுக்குப் பிடிக்கும்

00:10:13.614 --> 00:10:14.698 align:center
நன்றாக உள்ளது, இல்லையா?

00:10:14.781 --> 00:10:15.908 align:center
அற்புதமாகப் பாடுகிறார்.

00:10:17.159 --> 00:10:23.290 align:center
நான் மிகவும் நிஜம் போல நடித்தேன்

00:10:23.790 --> 00:10:30.339 align:center
ஒருநாள் என்னைப் போல நீயும்
வேதனைப்படுவாய்

00:10:30.422 --> 00:10:37.054 align:center
ஒருநாள் என்னைப் போல நீயும்
வேதனைப்படுவாய்

00:10:37.137 --> 00:10:43.810 align:center
ஒருநாள் என்னைப் போல நீயும்
வேதனைப்படுவாய்

00:10:43.894 --> 00:10:45.771 align:center
ஒருநாள் என்னை…

00:10:45.854 --> 00:10:47.439 align:center
மன்னிக்கவும். இந்தப் பாடல்…

00:10:47.523 --> 00:10:48.690 align:center
அடச்சே.

00:10:52.528 --> 00:10:54.071 align:center
எனக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும்.

00:10:54.154 --> 00:10:55.656 align:center
அடக் கடவுளே.

00:10:55.739 --> 00:10:57.282 align:center
அது நீண்ட காலத்திற்கு முன்பு.

00:10:57.366 --> 00:10:58.825 align:center
அவர் என்ன செய்கிறார்?

00:10:59.535 --> 00:11:00.702 align:center
அவளுக்குத் தோன்றுவதைச் செய்கிறாள்.

00:11:00.786 --> 00:11:03.247 align:center
அவன் பெயர் புரூஸ்.

00:11:04.748 --> 00:11:06.041 align:center
விஷயம் என்னவெனில்,

00:11:07.709 --> 00:11:10.921 align:center
நான் சொதப்பிவிட்டேன், ஏனெனில்
எனக்கு ஏதோ பிரச்சினை.

00:11:11.463 --> 00:11:12.548 align:center
என் மூளையில்.

00:11:14.341 --> 00:11:18.637 align:center
உண்மையைக் கூற வேண்டுமெனில்,
நான் சரியாக இல்லை.

00:11:20.764 --> 00:11:24.184 align:center
ஆனால் சமீபத்தில், நான் நினைத்த அளவுக்கு
புரூஸும் சரியில்லையோ

00:11:24.268 --> 00:11:25.686 align:center
என நினைக்கிறேன்.

00:11:26.895 --> 00:11:29.898 align:center
ஏனெனில் சரியாக இருக்கும் நபர்
நம் வாழ்க்கைக்குள் மீண்டும் வந்து

00:11:29.982 --> 00:11:30.983 align:center
நம்மைக் கைவிட மாட்டார்.

00:11:31.066 --> 00:11:33.819 align:center
சரியாக இருக்கும் நபர் அவருடைய
ஹோல் லிவ் த்ரூ திஸ் ரெக்கார்டைத்

00:11:33.902 --> 00:11:36.280 align:center
திரும்பக் கொடுக்க அனுமதித்தார்,

00:11:36.363 --> 00:11:39.825 align:center
பத்தாண்டுகளாக நான்
அதை வைத்திருந்தேன்.

00:11:39.908 --> 00:11:43.495 align:center
அந்தப் பத்தாண்டுகளில் எனக்கு இருந்த
அனைத்தையும் நான் இழந்தேன்.

00:11:43.579 --> 00:11:44.872 align:center
உன்னைத் தவிர, ஆண்டி.

00:11:49.751 --> 00:11:50.919 align:center
இது என் அண்ணன்.

00:11:56.758 --> 00:11:58.552 align:center
நீ என்னைக் கைவிட்டது இல்லை.
ஒருமுறை கூட.

00:12:00.637 --> 00:12:01.763 align:center
நீ என் வாழ்க்கையைக் காப்பாற்றினாய்.

00:12:03.056 --> 00:12:05.267 align:center
நீ என்னைப் பார்த்துக்கொண்டது போல
உன்னைப் பார்த்துக்கொள்ள உனக்கு

00:12:05.350 --> 00:12:08.562 align:center
யாரேனும் இருந்திருக்கலாம் என விரும்புகிறேன்,
ஏனெனில் இப்போது உனக்கு அது

00:12:08.645 --> 00:12:09.855 align:center
மிகவும் தேவை.

00:12:13.567 --> 00:12:15.986 align:center
புரூஸ் என் கால்களுக்கு பதிலளிப்பதில்லை.

00:12:16.069 --> 00:12:17.988 align:center
அது சரியில்லை.

00:12:20.365 --> 00:12:21.742 align:center
ஆம், நான் பைத்தியக்காரியாக இருக்கலாம்,

00:12:21.825 --> 00:12:27.289 align:center
ஆனால் மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும்போது,
பைபோலார் இருக்கும் முன்னாள் வருங்கால மனைவியுடன்

00:12:27.372 --> 00:12:28.540 align:center
சகோதரியின் மகன் படுக்கையில்
செக்ஸ் வைத்துக்கொண்டது அவன்தான்.

00:12:28.624 --> 00:12:29.666 align:center
- ஓ, கடவுளே.
- என்ன?

00:12:29.750 --> 00:12:30.876 align:center
அடச்சே.

00:12:31.835 --> 00:12:34.421 align:center
அது சொதப்பலானது மற்றும்
தவறு என்று தெரியும்,

00:12:34.505 --> 00:12:37.716 align:center
ஆனால் அது நேர்மையானது, நிஜமானது
என நினைத்தேன்.

00:12:38.467 --> 00:12:39.635 align:center
ஆனால் இப்போது நான்…

00:12:39.718 --> 00:12:41.553 align:center
அவன் என்னைப் பயன்படுத்திக்கொண்டான்
எனத் தெரிகிறது.

00:12:44.139 --> 00:12:45.432 align:center
அது கிடக்கிறது.

00:12:51.605 --> 00:12:53.315 align:center
நான் யாருடைய ஸ்டெப்னியும் இல்லை.

00:12:53.398 --> 00:12:56.318 align:center
- புரூஸ் ஒழிந்து போகட்டும்.
- சரி.

00:12:57.402 --> 00:12:58.403 align:center
ஆம்.

00:12:58.487 --> 00:13:00.822 align:center
ஆம், அவன் ஒழிந்து போகட்டும்!

00:13:00.906 --> 00:13:03.534 align:center
- அவன் உனக்குத் தகுதியானவன் இல்லை! நீ கனிவானவள்!
- புரூஸ் ஒழிந்து போகட்டும்!

00:13:03.617 --> 00:13:06.119 align:center
ஆம். புரூஸ் ஒழிந்து போகட்டும்!

00:13:06.203 --> 00:13:08.038 align:center
- புரூஸ் ஒழிந்து போகட்டும்.
- புரூஸ் ஒழிந்து போகட்டும்.

00:13:08.121 --> 00:13:12.376 align:center
புரூஸ் ஒழிந்து போகட்டும்!
புரூஸ் ஒழிந்து போகட்டும்!

00:13:12.459 --> 00:13:15.212 align:center
புரூஸ் ஒழிந்து போகட்டும்!
புரூஸ் ஒழிந்து போகட்டும்!

00:13:15.295 --> 00:13:17.965 align:center
புரூஸ் ஒழிந்து போகட்டும்!
புரூஸ் ஒழிந்து போகட்டும்!

00:13:18.048 --> 00:13:19.174 align:center
புரூஸ் ஒழிந்து போகட்டும்!

00:13:25.055 --> 00:13:26.849 align:center
நீ உன் படுக்கையை
எனக்குக் கொடுக்க வேண்டியதில்லை.

00:13:26.932 --> 00:13:29.309 align:center
- நான் சோஃபாவில் தூங்க முடியும்.
- பரவாயில்லை.

00:13:29.393 --> 00:13:31.061 align:center
எப்படியும் நான் கீழேதான் போய்த் தூங்குவேன்.

00:13:31.144 --> 00:13:32.688 align:center
ஆம். நீ கூறினால் சரி.

00:13:34.940 --> 00:13:36.942 align:center
இன்றிரவு பாரில் நடந்தது
அசத்தலானது, இல்லையா?

00:13:37.025 --> 00:13:38.735 align:center
ஆம், ராக் அண்ட் ரோல்.

00:13:38.819 --> 00:13:40.362 align:center
நீ நலமாக இருக்கிறாயா?

00:13:40.445 --> 00:13:42.239 align:center
அது கடினமான விஷயம்தான்.

00:13:49.621 --> 00:13:51.373 align:center
- நானே மருந்தை எடுத்துக்கொள்கிறேன்.
- முடியுமா?

00:13:51.456 --> 00:13:52.457 align:center
இது சுதந்திர நாடு.

00:13:55.586 --> 00:13:58.046 align:center
ஆலி, எனக்கு என்ன நடக்கப் போகிறது
எனத் தெரியாது.

00:13:59.506 --> 00:14:02.092 align:center
அது சிறப்பானதாக இல்லை.

00:14:03.886 --> 00:14:06.930 align:center
நீ நன்றாக இருப்பாய் என எனக்குத்
தெரிய வேண்டும், குழந்தைகள்…

00:14:08.056 --> 00:14:09.433 align:center
குழந்தைகளுக்கு நீ தேவைப்படுவாய்.

00:14:12.060 --> 00:14:13.228 align:center
ஆண்டி…

00:14:14.897 --> 00:14:15.898 align:center
உன் மருந்துகளை எடுத்துக்கொள்.

00:14:18.609 --> 00:14:19.693 align:center
ப்ளீஸ்.

00:14:48.138 --> 00:14:49.556 align:center
- ஹேய்.
- ஹேய்.

00:14:51.433 --> 00:14:52.684 align:center
நீ அதை எழுதினாயா?

00:14:53.477 --> 00:14:55.604 align:center
ஆம், அதை நான் தயார் செய்து வருகிறேன்.

00:14:57.481 --> 00:14:58.732 align:center
அற்புதம்.

00:15:00.442 --> 00:15:01.777 align:center
இன்றிரவு மகிழ்ச்சியாக இருந்தாயா?

00:15:02.277 --> 00:15:04.446 align:center
ஆம், அவர் அற்புதமானவர்.

00:15:06.114 --> 00:15:07.241 align:center
அவள் திறமைசாலிதான்.

00:15:10.160 --> 00:15:11.620 align:center
உனக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.

00:15:14.289 --> 00:15:15.457 align:center
இந்த வாட்ச்சைப் பார்த்தாயா?

00:15:17.042 --> 00:15:19.461 align:center
நீ பிறந்த ஆண்டு இதை வாங்கினேன்.

00:15:20.295 --> 00:15:21.713 align:center
நீ பிறந்து மூன்று மாதங்கள் இருக்கும்.

00:15:24.132 --> 00:15:25.592 align:center
டோரிக்கு மூன்று வயது…

00:15:26.927 --> 00:15:29.763 align:center
வேலையில் எதுவும் சிறப்பாக இல்லை…

00:15:31.932 --> 00:15:35.435 align:center
நான் என்னால் சமாளிக்க முடியாதளவுக்கு

00:15:35.519 --> 00:15:38.313 align:center
பொறுப்பை ஏற்றுக்கொண்டேனோ
என்று பதட்டமாக இருந்தேன்.

00:15:38.397 --> 00:15:41.650 align:center
அழகான இந்தக் குழந்தைகளை இந்த
உலகிற்குள் கூட்டி வந்துள்ளேன்,

00:15:41.733 --> 00:15:45.487 align:center
அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்க
முடியுமா என யோசித்துக்கொண்டிருந்தேன்,

00:15:46.280 --> 00:15:48.991 align:center
உணவளித்து, பாதுகாப்பாக இருக்க வைத்து,
அவை எல்லாவற்றையும்.

00:15:49.074 --> 00:15:52.244 align:center
பிறகு ஒரு நகைக் கடை வழியாகச்
செல்லும்போது, இந்த வாட்ச்சைப் பார்த்தேன்,

00:15:53.036 --> 00:15:57.499 align:center
இது மிகவும் விலையுயர்ந்தது, இதை வாங்கினால்
உன் அம்மா என்னைக் கொன்றுவிடுவாள் எனத் தெரியும்,

00:15:58.083 --> 00:16:00.419 align:center
ஆனாலும் வாங்கினேன்.

00:16:01.461 --> 00:16:05.215 align:center
பயமின்றி உணர்வதற்காகவோ
அது எப்படி இருக்கும் என்று உணர்வதற்காகவோ.

00:16:06.383 --> 00:16:08.510 align:center
சாதிக்கும் வரை நடிப்பது,
சொல்வது புரிகிறதா?

00:16:12.347 --> 00:16:15.267 align:center
இந்தக் கால இளைஞர்கள் வாட்ச்
அணிவதில்லை எனத் தெரியும்,

00:16:15.350 --> 00:16:18.103 align:center
ஆனால் ஒருநாள் நீ அணிவாய்,
எனவே இதை நீ வைத்துக்கொள்.

00:16:27.362 --> 00:16:29.698 align:center
நானும் சில நேரம்
அதைச் செய்வேன்.

00:16:29.781 --> 00:16:31.074 align:center
என்ன?

00:16:31.158 --> 00:16:34.494 align:center
- சாதிக்கும் வரை நடிப்பது.
- சரி.

00:16:34.578 --> 00:16:36.163 align:center
ஒரு கட்டத்தில் உலகில் உள்ள
அனைவருமே அதைச் செய்வதை

00:16:36.246 --> 00:16:38.749 align:center
நீ புரிந்துகொள்வாய்.

00:16:38.832 --> 00:16:40.667 align:center
அப்போதுதான் எல்லாமே
பயங்கரமானதாக மாறும்.

00:16:42.628 --> 00:16:43.629 align:center
இதைப் போட்டுக்கொள்.

00:16:49.384 --> 00:16:50.385 align:center
அவ்வளவுதான்.

00:16:51.220 --> 00:16:52.387 align:center
எனக்குப் பிடித்துள்ளது.

00:16:53.263 --> 00:16:55.516 align:center
நல்லது. உன் அளவுக்கேற்ப இதை மாற்றிக்கொள்வோம்.

00:16:58.393 --> 00:17:00.270 align:center
- கதவை மூடவா?
- ஆம்.

00:17:00.854 --> 00:17:02.689 align:center
- குட் நைட், நண்பா.
- குட் நைட்.

00:17:25.878 --> 00:17:26.880 align:center
உள்ளே வாருங்கள்.

00:17:29.800 --> 00:17:31.218 align:center
- ஹேய்.
- ஹேய்.

00:17:32.094 --> 00:17:33.971 align:center
- எப்படிப் போகிறது?
- நலம்தான்.

00:17:39.101 --> 00:17:40.143 align:center
எனவே…

00:17:41.562 --> 00:17:44.982 align:center
டின்னரில், அதைப் பற்றிப் பேச வேண்டும்
என்று ஆலி கூறினாள்…

00:17:46.191 --> 00:17:48.193 align:center
நாம் அதைப் பற்றிப் பேச வேண்டுமா?

00:17:49.111 --> 00:17:50.195 align:center
நீங்கள் அதைச் செய்தீர்களா?

00:17:50.779 --> 00:17:52.239 align:center
நான் பால் லெவிட்டைக் கொன்றேனாவா?

00:17:52.322 --> 00:17:53.574 align:center
இல்லை.

00:17:55.409 --> 00:17:57.327 align:center
வாழ்த்துகள். நாம் பேசிவிட்டோம்.

00:18:00.163 --> 00:18:01.206 align:center
சரி.

00:18:06.670 --> 00:18:07.671 align:center
குட் நைட்.

00:18:10.007 --> 00:18:11.091 align:center
குட் நைட்.

00:18:17.055 --> 00:18:18.390 align:center
தம்பி, நீ அவனை அடி.

00:18:19.183 --> 00:18:20.184 align:center
சரிதான், ஹென்ரி.

00:18:21.059 --> 00:18:22.060 align:center
அது போதாது.

00:18:25.814 --> 00:18:26.899 align:center
அது நெருக்கமானது.

00:18:29.902 --> 00:18:32.905 align:center
சரி, நண்பர்களே.
வேகமாக இந்த இடத்தை காலி செய்யுங்கள்.

00:18:32.988 --> 00:18:35.365 align:center
இன்றிரவு பூட்ரோவில் உள்ள எட்டியில் உங்கள்
ஸ்பிலிட்களைத் தேர்வுசெய்யலாம்.

00:18:41.288 --> 00:18:42.998 align:center
- அருமை, ஜே.ஜே.
- நான்…

00:18:44.166 --> 00:18:45.167 align:center
வா.

00:18:45.250 --> 00:18:47.419 align:center
நீ உள்ளே வந்தபோது நீ
ஃபெடரல் ஏஜென்ட் என நினைத்தேன்.

00:18:47.503 --> 00:18:50.088 align:center
பிரச்சினை வேண்டாம், ஹென்ரி.
ஸ்னைடர் அதற்காகச் சென்றுள்ளான்.

00:20:20.512 --> 00:20:22.639 align:center
கூப், இங்கே என்ன செய்கிறாய்?

00:20:23.390 --> 00:20:24.641 align:center
இந்த டீல் பற்றிச் சொல்.

00:20:28.604 --> 00:20:30.230 align:center
நாம் கொலையை ஒப்புக்கொள்கிறோம், சரியா?

00:20:30.314 --> 00:20:33.358 align:center
வழக்கமாக அதற்கு பத்து ஆண்டுகள் கிடைக்கும்,
ஆனால் டிஏ உடனடி வெற்றியை விரும்புவதால்

00:20:33.442 --> 00:20:35.110 align:center
எட்டு ஆண்டுகளில் முடிக்க முடியும்.

00:20:35.194 --> 00:20:36.612 align:center
எட்டு ஆண்டுகளா?

00:20:36.695 --> 00:20:38.030 align:center
நீ ஆறு ஆண்டுகளில் வெளியே வந்துவிடுவாய்.

00:20:38.947 --> 00:20:40.324 align:center
அதை சாதாரணமாகச் சொல்கிறாய்.

00:20:40.949 --> 00:20:42.910 align:center
நீ அதை 25 முதல் ஆயுள் தண்டனையுடன்
ஒப்பிட வேண்டும்.

00:20:44.161 --> 00:20:46.413 align:center
நீ வழக்கு விசாரணைக்குச் செல்ல விரும்பினால்,

00:20:46.496 --> 00:20:48.457 align:center
அவர்களது கேஸை உடைக்க என்னால் முடிந்த
அனைத்தையும் செய்வேன்.

00:20:48.540 --> 00:20:49.750 align:center
ஆனால் நீ பாசிட்டிவாக இல்லை.

00:20:49.833 --> 00:20:52.127 align:center
அவர்களிடம் நோக்கம், வாய்ப்பு,
தடவியல் ஆதாரம் உள்ளது

00:20:52.211 --> 00:20:53.921 align:center
மற்றும் அந்தத் துப்பாக்கி உன் காரில் இருந்துள்ளது.

00:20:54.630 --> 00:20:56.882 align:center
சிறந்த சூழல்களில்,
வழக்கு விசாரணை ஆபத்தானது.

00:20:56.965 --> 00:20:59.384 align:center
- இந்த கேஸில்…
- ஆம், ஆபத்துக்கு எதிராக ஹெட்ஜிங் செய்வதில்

00:20:59.468 --> 00:21:00.761 align:center
கடந்த 20 ஆண்டுகளைக் கழித்துள்ளேன்.

00:21:00.844 --> 00:21:01.970 align:center
ஒப்புக்கொள்வதுதான் ஒரே ஹெட்ஜ்.

00:21:02.054 --> 00:21:04.681 align:center
இது வெளியே வரும் வழி இல்லை,
ஆனால் கடப்பதற்கான வழி.

00:21:04.765 --> 00:21:06.642 align:center
நான் நிரபராதி என்று யாரும் நினைக்கவில்லையா?

00:21:06.725 --> 00:21:07.726 align:center
இல்லை.

00:21:09.853 --> 00:21:11.355 align:center
கடவுளே, என் குழந்தைகள்.

00:21:12.189 --> 00:21:14.066 align:center
ஆம். அது மோசமான தேர்வுதான்.

00:21:14.149 --> 00:21:16.360 align:center
இது தேர்வு இல்லைதானே?

00:21:24.493 --> 00:21:25.494 align:center
சரி.

00:21:26.662 --> 00:21:27.829 align:center
சரி, என்ன?

00:21:28.372 --> 00:21:29.456 align:center
மீட்டிங்கை ஏற்பாடு செய்.

00:21:29.998 --> 00:21:32.251 align:center
உன் பேராசிரியர்
நீட்டிப்பு கொடுப்பாரா?

00:21:32.334 --> 00:21:34.586 align:center
ஆம்,
திருமதி டக்ளஸ் மிகவும் கூலானவர்.

00:21:34.670 --> 00:21:35.963 align:center
நான் நாளை அவரிடம் பேசுகிறேன்.

00:21:36.046 --> 00:21:38.465 align:center
இவ்வளவு நடக்கும்போது
அவர் உன்னை இந்த வாரமே

00:21:38.549 --> 00:21:39.925 align:center
கொடுக்கும்படி கேட்க மாட்டார்…

00:21:40.634 --> 00:21:41.927 align:center
ஆம்.

00:21:42.010 --> 00:21:44.096 align:center
- அருமையான வாட்ச்.
- நன்றி.

00:21:46.014 --> 00:21:47.015 align:center
ஹாய்.

00:21:49.643 --> 00:21:51.687 align:center
- ஹாய்.
- நான் மெல்.

00:21:51.770 --> 00:21:53.146 align:center
நான் ஹன்டரின் அம்மா.

00:21:53.230 --> 00:21:55.899 align:center
- இது மார்கன்.
- ஹாய், மார்கன்.

00:21:55.983 --> 00:21:57.276 align:center
மார்கன்.

00:21:57.359 --> 00:21:58.527 align:center
ஆடரால் மார்கனா?

00:21:59.194 --> 00:22:00.696 align:center
- அம்மா.
- மன்னிக்கவும்.

00:22:00.779 --> 00:22:02.030 align:center
இல்லை, பரவாயில்லை.

00:22:02.531 --> 00:22:04.366 align:center
நீ டின்னருக்கு இருப்பாயா?

00:22:05.200 --> 00:22:06.994 align:center
இல்லை. நான் வீட்டுக்குப் போக வேண்டும்.

00:22:07.077 --> 00:22:09.913 align:center
நிச்சயமாகவா? நான்
வெஜ்ஜி பர்கர் செய்யப் போகிறேன்.

00:22:09.997 --> 00:22:12.249 align:center
பரவாயில்லை.
நான் சில நிமிடங்களில் கிளம்பிவிடுவேன்.

00:22:13.667 --> 00:22:15.085 align:center
உன் கையில் என்ன உள்ளது?

00:22:15.169 --> 00:22:17.337 align:center
அப்பா கொடுத்த வாட்ச்.

00:22:17.421 --> 00:22:19.798 align:center
அப்பா தனது டேடோனாவைக்
கொடுத்தாரா?

00:22:19.882 --> 00:22:22.050 align:center
- ஆம்.
- அவர் ஏன் அப்படிச் செய்தார்?

00:22:22.801 --> 00:22:23.927 align:center
தெரியவில்லை.

00:22:27.973 --> 00:22:29.516 align:center
ஆம்.

00:22:35.355 --> 00:22:36.899 align:center
- ஹாய்.
- உள்ளே வரலாமா?

00:22:37.566 --> 00:22:38.567 align:center
நிச்சயமாக.

00:22:44.072 --> 00:22:45.073 align:center
என்ன விஷயம்?

00:22:45.157 --> 00:22:47.367 align:center
நீ இதற்கு முன் இங்கே வந்ததில்லை.

00:22:47.451 --> 00:22:50.746 align:center
குப்பையாக இருப்பதற்கு மன்னித்துவிடு.
ஆலி சவாலானவள்.

00:22:50.829 --> 00:22:52.539 align:center
ஹன்டரிடம் ஏன் உன் டேடோனாவைக் கொடுத்தாய்?

00:22:52.623 --> 00:22:54.041 align:center
ஏனெனில் என்னிடம் பிற வாட்ச்கள் உள்ளன.

00:22:54.124 --> 00:22:55.834 align:center
- உனக்கு பீர் வேண்டுமா?
- இல்லை, எனக்கு பீர் வேண்டாம்.

00:22:55.918 --> 00:22:57.836 align:center
நீ சிறைக்குப் போக மாட்டாய்
என்று சத்தியம் செய்.

00:22:57.920 --> 00:22:59.755 align:center
சரி, நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.
சரியா?

00:22:59.838 --> 00:23:01.715 align:center
அதற்கு என்ன அர்த்தம்? நீ நிரபராதி.

00:23:01.798 --> 00:23:04.718 align:center
ஆனாலும் வீட்டில் உன் பாதியை
எனக்கு எழுதிக்கொடுத்துள்ளாய்.

00:23:04.801 --> 00:23:06.637 align:center
உன் மதிப்புமிக்க பொருட்களைக் கொடுக்கிறாய்.

00:23:06.720 --> 00:23:07.721 align:center
அது ஒரு பழைய வாட்ச்.

00:23:07.804 --> 00:23:10.557 align:center
அப்படிச் செய்யாதே. என்னை நேசிப்பதாக இருந்தால்,
என்னிடம் பொய் சொல்லாதே.

00:23:12.976 --> 00:23:14.269 align:center
அது சிறப்பாக இல்லை.

00:23:16.063 --> 00:23:17.564 align:center
குற்றத்தை ஒப்புக்கொள்ளும் டீல்
கிடைக்கலாம்.

00:23:18.690 --> 00:23:20.901 align:center
- என்ன மாதிரியான டீல்?
- கொலை.

00:23:22.194 --> 00:23:23.612 align:center
ஆறு ஆண்டுகளில் வெளியே வந்துவிடலாம்.

00:23:23.695 --> 00:23:26.615 align:center
விளையாடுகிறாயா? ஆறு ஆண்டுகளா?

00:23:26.698 --> 00:23:28.492 align:center
நான் வழக்கில் தோற்றுவிட்டால்,
ஆயுள் முழுக்க இருக்க வேண்டும்.

00:23:28.575 --> 00:23:30.744 align:center
ஏன் தோற்கப் போகிறாய்?
நீ அவனைக் கொல்லவில்லை.

00:23:30.827 --> 00:23:33.455 align:center
ஏனெனில் உலகம் அப்படி
இயங்குவதில்லை, மெல்!

00:23:34.790 --> 00:23:36.208 align:center
கடவுளே!

00:23:37.918 --> 00:23:39.962 align:center
நிஜ உலகில் எதற்கும் உத்திரவாதம் இல்லை.

00:23:40.838 --> 00:23:43.382 align:center
புரிகிறதா?
கொஞ்சம் கவனம் சிதறினாலும்

00:23:43.465 --> 00:23:45.592 align:center
எல்லாமே மாறிவிடும்.

00:23:45.676 --> 00:23:49.137 align:center
வீட்டை இழப்போம், நம் சொந்த வீட்டிலேயே
குழந்தைகள் அந்நியர்கள் போல இருப்பார்கள்,

00:23:49.221 --> 00:23:51.348 align:center
மனைவியை இழப்போம், நம்மையே இழப்போம்.

00:23:54.685 --> 00:23:56.103 align:center
சரி, சொல்வதைக் கேள்.

00:23:57.145 --> 00:23:59.898 align:center
மேகியின் அப்பா டேவிட் கெல்சனுடன்
கோல்ஃப் ஆடுகிறார்.

00:23:59.982 --> 00:24:02.025 align:center
அவர்தான் நாட்டிலேயே மிகப்பெரிய
டிஃபென்ஸ் வக்கீல்.

00:24:02.109 --> 00:24:04.570 align:center
மருத்துவ நிபுணர்கள் மூலம்
டிஎன்ஏ ஆதாரத்தை மறுப்பதில்

00:24:04.653 --> 00:24:05.863 align:center
அற்புதமான வெற்றிகளைக் கண்டவர்.

00:24:06.697 --> 00:24:08.490 align:center
அவருடன் மீட்டிங் ஏற்பாடு செய்ய முடியும்
என்றாள்…

00:24:08.574 --> 00:24:10.784 align:center
அவரும் கேட் செய்வதையேதான்
செய்யப் போகிறார்.

00:24:10.868 --> 00:24:13.328 align:center
உனக்கு அது தெரியாது. கடவுளே.

00:24:13.871 --> 00:24:16.748 align:center
டோரியும் ஹன்டரும் உன்னை
சிறையில் பார்க்க வேண்டுமா?

00:24:18.166 --> 00:24:20.127 align:center
கொலைக்காக சிறைக்குச் சென்றவரது
குழந்தைகள் என்று அனைவரும் கூற வேண்டுமா?

00:24:20.210 --> 00:24:22.588 align:center
- ஏனெனில் அது அவர்களை நாசமாக்கிவிடும்.
- அது எனக்குத் தெரியாதா?

00:24:22.671 --> 00:24:24.464 align:center
- எனில் அதற்கு எதாவது செய்!
- நான் முயற்சி செய்கிறேன்!

00:24:24.548 --> 00:24:27.176 align:center
கடினமாக முயற்சி செய், சுயநலவாதியே!

00:24:31.180 --> 00:24:32.556 align:center
கடவுளே.

00:24:35.893 --> 00:24:38.145 align:center
நீ எங்களைக் கைவிட்ட தருணம் இருந்தது.

00:24:39.104 --> 00:24:40.898 align:center
இல்லை, அது எப்போது என்று நினைவில்லை,

00:24:40.981 --> 00:24:43.775 align:center
ஆனால் அதுவும் எங்களுக்காக
கடினமாகப் போராடியிருக்க

00:24:43.859 --> 00:24:45.485 align:center
வேண்டிய தருணம் என்று தெரியும்.

00:24:48.488 --> 00:24:52.784 align:center
உன்னை குறை சொல்ல மாட்டேன், நானும் கைவிட்டேன்.
நாம் இருவரும்தான். நாம் தோற்றுவிட்டோம், கூப்.

00:24:53.452 --> 00:24:55.746 align:center
நாம் எப்போதும் அதோடுதான் வாழ வேண்டும்.

00:24:56.580 --> 00:24:58.081 align:center
ஆனால் இது, இப்போது,

00:24:59.791 --> 00:25:03.420 align:center
அதுபோன்ற இன்னொரு தருணம்,
உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன்,

00:25:03.504 --> 00:25:05.172 align:center
உன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொண்டு

00:25:05.255 --> 00:25:07.841 align:center
சண்டை போட வேண்டிய தருணத்தில் கைவிடும்
நபராக இருக்காதே.

00:25:07.925 --> 00:25:10.093 align:center
- மெல்…
- வேண்டாம்.

00:25:32.908 --> 00:25:36.828 align:center
இப்போதுதான் டிஏவுடன் பேசினேன்,
நிறைய யோசித்த பிறகு,

00:25:36.912 --> 00:25:39.414 align:center
நாம் நம்பிய டீலாகத்தான் இது இருக்கும்.

00:25:40.374 --> 00:25:41.458 align:center
அது சரியா?

00:25:42.251 --> 00:25:43.919 align:center
இது மோசம் எனத் தெரியும்.

00:25:44.002 --> 00:25:45.921 align:center
ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலைகள்…

00:25:46.004 --> 00:25:47.297 align:center
நான் செய்யாத குற்றத்திற்காக என் வக்கீல்

00:25:47.381 --> 00:25:50.509 align:center
என்னை சிறைக்குச் செல்லக் கூறுவதுதான்
சூழ்நிலையாகத் தெரிகிறது.

00:25:50.592 --> 00:25:52.219 align:center
நான் அந்த விருப்பத்தைக் கூறுகிறேன், ஆம்.

00:25:52.302 --> 00:25:53.387 align:center
அந்தக் காலத்தில்,

00:25:53.470 --> 00:25:55.514 align:center
நம் விசாரணையாளர்கள் மூலம் போலீஸ்
என்ன தவறவிட்டிருப்பார்கள்

00:25:55.597 --> 00:25:57.099 align:center
என்று தேட வைப்போம்,

00:25:57.182 --> 00:25:59.226 align:center
அந்தத் துறையின் அளவு மற்றும்
வளங்களின் பற்றாக்குறையைப் பார்க்கும்போது

00:25:59.309 --> 00:26:00.310 align:center
அது முக்கியமானதாக இருக்கலாம்.

00:26:00.394 --> 00:26:01.645 align:center
என்னால் டீலை ஏற்க முடியாது.

00:26:03.730 --> 00:26:06.733 align:center
நீ என்னைப் பணியமர்த்திய விதத்தால் என்னால்
முடிந்த அனைத்தையும் செய்யவில்லை என நினைத்தால்…

00:26:06.817 --> 00:26:08.610 align:center
அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

00:26:08.694 --> 00:26:09.778 align:center
எதுவுமில்லை.

00:26:10.988 --> 00:26:12.865 align:center
- உன் குடும்பத்தைப் பற்றி யோசிக்கிறேன், கூப்.
- நானும்தான்.

00:26:13.824 --> 00:26:16.869 align:center
இதை ஏற்றுக்கொள்வது அவர்களிடம்
என்ன சொல்லும்?

00:26:16.952 --> 00:26:18.620 align:center
நீ அவர்களை மிகவும் நேசிப்பதால்
தியாகம் செய்ய…

00:26:18.704 --> 00:26:19.997 align:center
நான் குற்றவாளி என்று.

00:26:20.747 --> 00:26:23.667 align:center
நான் நிறைய குற்றங்களை ஏற்றுக்கொள்வேன்,
ஆனால் இதை இல்லை.

00:26:25.169 --> 00:26:26.211 align:center
டீல் கிடையாது.

00:26:27.004 --> 00:26:28.422 align:center
- கூப்…
- டீல் கிடையாது.

00:26:31.592 --> 00:26:32.718 align:center
சரி.

00:26:33.510 --> 00:26:35.304 align:center
அதுதான் உன் முடிவு எனில்,
அதையே நாம் செய்வோம்.

00:26:37.055 --> 00:26:39.099 align:center
ஆனால் நான் வேலை செய்ய இன்னும் விஷயங்களைக்
கொடுக்க வேண்டும்.

00:26:39.183 --> 00:26:40.601 align:center
சரி, தொடக்கத்திலிருந்து வருவோம்.

00:26:41.685 --> 00:26:43.187 align:center
அந்த இடத்தில் உன் டிஎன்ஏ எப்படி வந்தது?

00:26:45.522 --> 00:26:48.233 align:center
நான் அங்கே அடிக்கடி சென்றுள்ளேன்.
நாங்கள் உறவில் இருந்தோம்.

00:26:48.317 --> 00:26:50.027 align:center
- அதைப் பற்றி பொய் சொன்னாய்.
- அவளும்தான்.

00:26:50.736 --> 00:26:52.404 align:center
அவளை ஏன் அப்படி யாரும் பார்க்கவில்லை?

00:26:54.114 --> 00:26:55.490 align:center
இவை சாமின் ஃபோன் ரெக்கார்டுகள்.

00:26:55.574 --> 00:26:58.410 align:center
சரி. பால் கொல்லப்பட்ட இரவில் அவள்
பாஸ்டனில் இருந்ததாக

00:26:58.493 --> 00:27:00.370 align:center
செல் ஃபோன் டவர்கள் உறுதிசெய்கின்றன.
அவளது பெற்றோர் உறுதிசெய்துள்ளனர்.

00:27:00.454 --> 00:27:02.039 align:center
ஹென்ரியின் பிறந்தநாள் படங்கள் உள்ளன.

00:27:02.122 --> 00:27:04.416 align:center
அவள் அவனைக் கொல்ல யாரையும்
பணியமர்த்தியிருக்கலாம்.

00:27:04.499 --> 00:27:06.084 align:center
அது நீயாக இருக்கலாம்.

00:27:07.294 --> 00:27:09.129 align:center
அவர்கள் மோசமான விவாகரத்தில் இருந்தனர்,

00:27:09.213 --> 00:27:11.173 align:center
உனக்கு பணப் பிரச்சினை இருந்தது,
நீங்கள் காதலித்தீர்கள்.

00:27:11.256 --> 00:27:13.550 align:center
அதாவது, அது எப்படி வேலை செய்யும் என
உனக்கே தெரியும்.

00:27:13.634 --> 00:27:15.302 align:center
எனில் இதில் ஏன் நான் இல்லை?

00:27:15.385 --> 00:27:16.845 align:center
என்ன?

00:27:16.929 --> 00:27:19.389 align:center
நாங்கள் எப்போதும் கால் செய்துகொண்டு,
மெசேஜ் செய்துகொண்டிருந்தோம்.

00:27:19.473 --> 00:27:21.391 align:center
என் எண் இதில் இல்லை.

00:27:23.310 --> 00:27:24.895 align:center
அவளுடைய எந்த எண் உன்னிடம் உள்ளது?

00:27:25.854 --> 00:27:27.105 align:center
இரண்டாவது ஃபோனா?

00:27:27.189 --> 00:27:28.941 align:center
அதேதான். அவள் ஒரு ஃபோனை
பாஸ்டனில் விட்டு வந்திருக்கலாம்.

00:27:29.024 --> 00:27:31.485 align:center
இது ஒரு பர்னர் எண், மற்றும் சில
முகமில்லாத ஆபாசப் படங்கள்.

00:27:31.568 --> 00:27:33.904 align:center
அது யாருடைய மார்பாகவும் இருக்கலாம்.
சரியான ஆதாரம் இல்லை.

00:27:33.987 --> 00:27:35.656 align:center
கமான். அவை சாமின் மார்புகள்தான்.

00:27:35.739 --> 00:27:37.366 align:center
அதற்கு என்ன?

00:27:37.449 --> 00:27:40.202 align:center
தவறான எண் மூலம் அவள் இருந்த இடத்தை
உறுதிசெய்துள்ளீர்கள்.

00:27:40.285 --> 00:27:41.620 align:center
நாங்கள் கணக்கைச் சரிபார்த்தோம்.

00:27:41.703 --> 00:27:43.747 align:center
அவரது பெற்றோர் இருவரும்
உறுதிசெய்துள்ளனர்.

00:27:43.830 --> 00:27:45.582 align:center
எந்தப் பெற்றோர்தான் தங்கள் மகளுக்காக
பொய் சொல்ல மாட்டார்கள்?

00:27:45.666 --> 00:27:47.209 align:center
- அவர்கள் பொய் சொல்லவில்லை.
- நானும்தான்.

00:27:47.292 --> 00:27:49.670 align:center
நினைவூட்டுங்கள், அதிகாரி ஹெர்னாண்டெஸ், நீங்கள்
எத்தனை கொலை வழக்குகளில் பணிபுரிந்துள்ளீர்கள்?

00:27:49.753 --> 00:27:50.796 align:center
சரி, கேளுங்கள், பெண்ணே…

00:27:50.879 --> 00:27:51.922 align:center
என்னைப் பெண்ணே என்று அழைக்காதீர்கள்.

00:27:52.005 --> 00:27:53.215 align:center
உங்களால்…

00:27:54.508 --> 00:27:56.260 align:center
அந்த இன்னொரு எண் சமந்தா லெவிட்டுடையது
என்று நிரூபிக்க முடியுமா?

00:27:56.343 --> 00:27:57.469 align:center
மன்னிக்கவும், அது உங்கள் வேலை இல்லையா?

00:27:57.553 --> 00:28:00.055 align:center
நாங்கள் விரும்பும் எல்லா எண்களையும்
சரிபார்க்க முடியாது.

00:28:00.138 --> 00:28:02.558 align:center
அதற்கான வாரன்டிற்கு நீதிபதியின்
அனுமதி வேண்டும்.

00:28:02.641 --> 00:28:04.226 align:center
- உங்கள் வக்கீலுக்கு அது தெரியும்.
- எனில் அதைச் செய்யுங்கள்!

00:28:04.309 --> 00:28:06.395 align:center
என்னிடம் அந்த ஃபோன் இருந்தால், அதை
அவருடன் தொடர்புபடுத்தி,

00:28:06.478 --> 00:28:09.356 align:center
வாரன்ட் பெற ஒரு கேஸை உருவாக்க முடியும்.
ஆனால் அது என்னிடம் இல்லை.

00:28:09.439 --> 00:28:11.483 align:center
என் கிளையன்டின் வாழ்க்கை பணயமாக உள்ளது.

00:28:12.234 --> 00:28:13.443 align:center
உங்கள் வேலையைச் செய்யுங்கள்.

00:28:15.153 --> 00:28:16.822 align:center
- போகலாம்.
- கிளம்புகிறோமா?

00:28:16.905 --> 00:28:18.240 align:center
ஆம்.

00:28:19.533 --> 00:28:20.617 align:center
சரி.

00:28:25.080 --> 00:28:26.957 align:center
அது… ஹேய்.
நாம் அந்த ஃபோனைக் கண்டறிய வேண்டும்.

00:28:27.040 --> 00:28:28.959 align:center
அந்த ஃபோனை வைத்து முடிந்ததை முயன்றோம்.
அது பலனளிக்காது.

00:28:29.543 --> 00:28:31.003 align:center
என்ன? அவ்வளவுதானா?

00:28:31.086 --> 00:28:33.255 align:center
நம்மிடம் அந்த ஃபோன் இருந்தாலும்,

00:28:33.338 --> 00:28:35.966 align:center
பாலை சாம் கொன்றிருந்தால்தான்
அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

00:28:36.049 --> 00:28:38.051 align:center
நீ செய்யவில்லை என்று நம்பும் அளவுக்கு அவளும்
செய்யவில்லை என நம்புகிறேன்.

00:28:38.135 --> 00:28:41.346 align:center
எனில் சாம் ஏன் அந்த ஃபோனை
முன்பே கொடுக்கவில்லை?

00:28:41.430 --> 00:28:43.807 align:center
நீங்கள் இருவரும் சேர்ந்திருந்ததை நீங்கள்
மறைத்த அதே காரணத்திற்காகத்தான்.

00:28:45.434 --> 00:28:48.437 align:center
நான் விசாரணையாளர்கள் மூலம் விசாரிக்கிறேன்,
ஆனால் அந்த ஃபோன் கிடைக்காது.

00:28:48.520 --> 00:28:49.521 align:center
இதைப் பேசியாக வேண்டும்.

00:28:51.023 --> 00:28:52.024 align:center
ஹேய்.

00:28:52.983 --> 00:28:54.109 align:center
ஆம்.

00:28:56.945 --> 00:28:58.780 align:center
இல்லை, இன்னும் அந்த ஃபைல்கள் வரவில்லை.

00:29:04.369 --> 00:29:07.039 align:center
மூடும் கதவுகள்
அருகே நிற்காதீர்கள்.

00:29:15.506 --> 00:29:17.174 align:center
- எலினா.
- கடவுளே, கூப்.

00:29:17.257 --> 00:29:18.967 align:center
- என்ன இது?
- உன்னிடம் பேச வேண்டும், சரியா?

00:29:19.051 --> 00:29:21.136 align:center
மன்னிக்கவும், நான் கால் செய்ய நினைத்தேன்,
ஆனால் கால் செய்ய விரும்பவில்லை, எனவே…

00:29:21.220 --> 00:29:22.721 align:center
அது நல்ல உள்ளுணர்வு.
நீங்கள் அதையே பின்பற்ற வேண்டும்…

00:29:22.804 --> 00:29:26.099 align:center
சரி! எனக்கு உன் உதவி வேண்டும். ப்ளீஸ்.

00:29:26.183 --> 00:29:27.351 align:center
நான் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும்?

00:29:27.434 --> 00:29:29.686 align:center
தெரியவில்லை, உதாரணத்திற்கு, என்னிடமிருந்து
நீ திருடிய ஒரு லட்சத்து சொச்சம்

00:29:29.770 --> 00:29:31.188 align:center
பணத்திலிருந்து தொடங்கலாம்.

00:29:32.564 --> 00:29:35.275 align:center
என்ன, நீங்கள் வெளியே வரவில்லை எனில் அதை
யாரும் கண்டுபிடிப்பதை விரும்பவில்லை.

00:29:35.359 --> 00:29:36.818 align:center
- தெரியுமா?
- அது கேவலமான காரணம்.

00:29:36.902 --> 00:29:38.779 align:center
- எனக்கு பணம் தேவைப்பட்டது, உங்களுக்குத் தெரியும்.
- சரி, பார்…

00:29:38.862 --> 00:29:40.781 align:center
தெரியும், மன்னித்துவிடு. எல்லாம் கொஞ்சம்
கையை மீறிப் போய்விட்டன, ஆனால்…

00:29:40.864 --> 00:29:43.200 align:center
- கொலைக்காக உங்களைக் கைதுசெய்துள்ளனர்!
- நான் கூறியதுதான், ஆனால் நான்…

00:29:43.283 --> 00:29:44.785 align:center
- நீங்கள் அதைச் செய்தீர்களா? அவரைக் கொன்றீர்களா?
- கண்டிப்பாக இல்லை.

00:29:44.868 --> 00:29:47.246 align:center
- கண்டிப்பாக இல்லையா? தெரியவில்லை.
- நான் போகும்போது அவனது உடல் அங்கிருந்தது.

00:29:47.329 --> 00:29:48.705 align:center
- எனில் அங்கே இருந்துள்ளீர்களா?
- சரியா?

00:29:48.789 --> 00:29:50.791 align:center
- கடவுளே.
- சரி. போய்விடுங்கள், கூப்.

00:29:59.383 --> 00:30:00.384 align:center
கேடுகெட்டவனே.

00:30:00.467 --> 00:30:02.010 align:center
என்ன இது?

00:30:04.054 --> 00:30:05.347 align:center
என் கதவை உடைத்துவிட்டீர்கள்.

00:30:06.223 --> 00:30:07.558 align:center
அதற்கு மன்னித்துவிடு.

00:30:08.684 --> 00:30:09.726 align:center
நீங்கள் நலமா?

00:30:10.310 --> 00:30:12.104 align:center
கடவுளே, இது பார்ப்பதைவிடக் கடினமானது.

00:30:12.187 --> 00:30:13.564 align:center
சரியான தண்டனைதான்.

00:30:17.568 --> 00:30:19.403 align:center
சாமின் வீட்டில் என்ன செய்தீர்கள்?

00:30:20.320 --> 00:30:21.613 align:center
என்ன நினைக்கிறாய்?

00:30:22.447 --> 00:30:23.824 align:center
என்னை அழைக்கவில்லையா?

00:30:23.907 --> 00:30:25.075 align:center
நாம் பார்ட்னர்களாக இருக்க வேண்டும்.

00:30:25.158 --> 00:30:28.078 align:center
ஏனெனில் உன்னிடம் கூறினால் அது தவறானது என்று
கூறுவாய் எனத் தெரியும்.

00:30:28.161 --> 00:30:29.413 align:center
நான் சரியாகக் கூறியிருப்பேன்.

00:30:30.497 --> 00:30:32.833 align:center
உங்கள் காதலியின் வீட்டில் திருடுவதா?
அது தவறானதுதான்.

00:30:32.916 --> 00:30:34.751 align:center
உண்மையில், அவள் ஏற்கனவே
என்னைக் கழட்டிவிட்டுவிட்டாள்,

00:30:34.835 --> 00:30:37.546 align:center
எனவே அது தவறு இல்லை.

00:30:43.051 --> 00:30:44.052 align:center
என்ன?

00:30:47.848 --> 00:30:50.100 align:center
எனக்கு உதவப் போகிறாயா இல்லையா?

00:30:50.184 --> 00:30:51.185 align:center
அது…

00:30:53.729 --> 00:30:54.730 align:center
எலினா, ஹாய்.

00:30:54.813 --> 00:30:57.316 align:center
ஹாய், திருமதி லெவிட். உங்கள்
இழப்புக்கு வருந்துகிறேன்.

00:30:57.399 --> 00:30:58.442 align:center
நன்றி.

00:30:58.525 --> 00:31:01.904 align:center
எனக்கு உதவ வந்தது எவ்வளவு பாராட்டுக்குரியது
என்று என்னால் சொல்ல முடியாது.

00:31:01.987 --> 00:31:03.655 align:center
- அது…
- பாலை அந்த நிலையில் பார்த்தது எஸ்பெரான்ஸாவுக்கு

00:31:03.739 --> 00:31:05.115 align:center
அதிர்ச்சிகரமாக உள்ளது.

00:31:05.199 --> 00:31:08.160 align:center
மேலும் நான்… அவளுக்குத் தேவையான…
காலத்தை எடுத்துக்கொள்ளும்படி கூறினேன்.

00:31:08.785 --> 00:31:11.622 align:center
போலீஸ்
அனைத்தையும் கலைத்துப் போட்டுவிட்டனர்.

00:31:12.539 --> 00:31:14.666 align:center
நீ ஒரு நாள் போகாமல் இருப்பதில் நிக்கிற்கு
எதுவும் பிரச்சினை இல்லையே?

00:31:15.667 --> 00:31:17.252 align:center
நிக் இப்போதெல்லாம் வீட்டில்
அவ்வளவாக இருப்பதில்லை.

00:31:17.336 --> 00:31:18.712 align:center
சரி.

00:31:20.506 --> 00:31:22.216 align:center
நான் சில பொருட்கள் வாங்க வெளியே செல்கிறேன்.

00:31:22.299 --> 00:31:23.800 align:center
நான் சில மணிநேரத்திற்கு இருக்க மாட்டேன்.

00:31:23.884 --> 00:31:25.427 align:center
உனக்கு எதுவும் பிரச்சினை இல்லைதானே?

00:31:25.511 --> 00:31:27.721 align:center
- ஆம், மிஸ் லெவிட். பிரச்சினை இல்லை.
- சரி. பிறகு பார்க்கலாம்.

00:31:27.804 --> 00:31:29.765 align:center
- மீண்டும் நன்றி.
- எனக்குத்தான் மகிழ்ச்சி.

00:31:44.947 --> 00:31:46.865 align:center
- எப்படிப் போனது?
- நலம்தான். நமக்கு சில மணிநேரம் உள்ளது.

00:31:46.949 --> 00:31:48.659 align:center
சரி. தொடங்கலாம்.

00:31:49.451 --> 00:31:51.870 align:center
அவர் அந்த ஃபோனை அப்புறப்படுத்தியிருக்க
மாட்டார் என்று எப்படி நம்புகிறீர்கள்?

00:31:51.954 --> 00:31:53.413 align:center
ஏனெனில் அதுதான் எனக்கான ஒரே வாய்ப்பு.

00:31:56.291 --> 00:31:57.417 align:center
நீ மேலே தேடு.

00:32:22.901 --> 00:32:24.152 align:center
ஹாரிஸ் பர்கர்ஸா?

00:32:25.487 --> 00:32:27.739 align:center
”சாஸை பக்கவாட்டில் வையுங்கள்”
என்று தொடர்ந்து சொல்கிறேன்,

00:32:27.823 --> 00:32:29.408 align:center
ஆனால் அது சுவரிடம் பேசுவது போலுள்ளது.

00:32:29.491 --> 00:32:30.951 align:center
சாஸா? அதுதான் அவர்களது தனித்துவமே.

00:32:31.618 --> 00:32:33.453 align:center
ஆம், ஆனால் அது என் பர்கரை
சொதசொதப்பாக்குகிறது.

00:32:33.537 --> 00:32:34.997 align:center
உங்கள் டெஸ்க்கையும்தான்.

00:32:37.708 --> 00:32:38.709 align:center
எனக்காக என்ன வைத்திருக்கிறாய்?

00:32:38.792 --> 00:32:40.878 align:center
பால் லெவிட்டின் புதுப்பிக்கப்பட்ட
மருத்துவ ரெக்கார்டு வந்துள்ளது.

00:32:41.670 --> 00:32:43.213 align:center
டிவி போலீஸ் போலக் கூறிவிட்டேன்.

00:32:43.297 --> 00:32:44.298 align:center
நீ அதைத் திறக்கவில்லையா?

00:32:44.840 --> 00:32:46.300 align:center
அது உங்களுக்கு வந்துள்ளது.

00:32:46.884 --> 00:32:48.343 align:center
அதில் கெட்ச்சப் சிந்தப் போகிறது.

00:32:50.846 --> 00:32:52.389 align:center
- அது உங்கள் விரல்களில் உள்ளது…
- வாயை மூடு.

00:32:52.472 --> 00:32:53.473 align:center
சரி.

00:32:55.017 --> 00:32:57.102 align:center
மருத்துவப் பரிசோதகரால் செய்யப்பட்ட
விசாரணையின் அறிக்கை

00:32:59.188 --> 00:33:01.565 align:center
- எதுவும் உள்ளதா?
- மூன்றில் இரண்டு துப்பாக்கிச் சூடுகள்

00:33:01.648 --> 00:33:02.649 align:center
அவர் இறந்தபிறகு சுடப்பட்டவை.

00:33:02.733 --> 00:33:03.984 align:center
அதற்கு என்ன அர்த்தம்?

00:33:34.306 --> 00:33:35.599 align:center
ஜே மேக்கினெர்னி,

00:33:35.682 --> 00:33:38.477 align:center
”துரோகத்தின்போது அனைத்தும் குறியீடாக,
வஞ்சப்புகழ்ச்சியாக மாறுகின்றன” என எழுதியுள்ளார்.

00:33:38.560 --> 00:33:40.354 align:center
நீங்கள் எதிர்பார்த்தது சிம்பாலிஸம் எனில்,

00:33:40.437 --> 00:33:42.606 align:center
நான் தகுதியுடையவனா என்று தெரியாத மீட்பைப்
பெறும் தீவிர முயற்சியில்,

00:33:42.689 --> 00:33:44.942 align:center
கிட்டத்தட்ட கண்டிப்பாக என் முன்னாள்
காதலியின் வீட்டில் இருக்காத ஃபோனைக் கண்டறிய

00:33:45.025 --> 00:33:48.111 align:center
அவளது வீட்டில் அத்துமீறி நுழைந்திருந்தேன்.

00:33:50.405 --> 00:33:53.450 align:center
என் கதை முடிந்தது என்பது மட்டுமின்றி,
அதை எனக்கு நானே செய்துகொண்டேன் என்ற

00:33:53.534 --> 00:33:55.285 align:center
கோபமான உறுதித்தன்மையும்
எனக்குள் நிரம்பியிருந்தது.

00:34:27.025 --> 00:34:28.110 align:center
கூப்.

00:34:29.735 --> 00:34:31.487 align:center
கூப். இங்கே வாருங்கள்.

00:34:42.748 --> 00:34:44.001 align:center
அடக் கடவுளே!

00:34:44.083 --> 00:34:45.168 align:center
அடச்சே!

00:34:45.252 --> 00:34:46.420 align:center
கூப்.

00:34:46.503 --> 00:34:48.255 align:center
என்னை பயமுறுத்திவிட்டாய்.

00:34:48.338 --> 00:34:50.549 align:center
பாலை யாரும் கொல்லவில்லை.

00:34:51.884 --> 00:34:53.051 align:center
என்ன?

00:34:53.135 --> 00:34:54.261 align:center
அவனேதான் சுட்டுக்கொண்டான்.

00:34:55.512 --> 00:34:56.513 align:center
பார்…

00:34:56.597 --> 00:34:59.224 align:center
இப்போது நீ என்ன பேசுகிறாய் என்று தெரியவில்லை,
ஆனால் நீ போக வேண்டும்.

00:34:59.308 --> 00:35:01.935 align:center
பிறகு அதைக் கொலையாகக் காட்டுவதற்காக

00:35:02.728 --> 00:35:04.396 align:center
நீ அவனது சடலத்தைச் சுட்டிருக்க வேண்டும்.

00:35:05.022 --> 00:35:06.356 align:center
சரி. உனக்கு
பைத்தியம் பிடித்துவிட்டது.

00:35:06.982 --> 00:35:07.983 align:center
இது நினைவுள்ளதா?

00:35:11.403 --> 00:35:12.821 align:center
”அன்புள்ள சாம். நான் மோசமான
தவறு செய்துவிட்டேன்.

00:35:12.905 --> 00:35:16.408 align:center
உன்னை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு,
நம் திருமணத்தையும் குடும்பத்தையும்

00:35:16.491 --> 00:35:18.577 align:center
உடைத்ததற்கு எவ்வளவு வருந்துகிறேன் என்பதை
விளக்க வார்த்தை இல்லை.

00:35:20.078 --> 00:35:22.831 align:center
உன்னை ஒரு கணவனாகவும் ஆணாகவும்
தோற்கடித்துவிட்டேன்,

00:35:22.915 --> 00:35:24.791 align:center
அது உன்னை நேசிக்காததால் இல்லை,

00:35:24.875 --> 00:35:25.876 align:center
மற்ற எதையும்விட உன்னை அதிகமாக நேசித்தேன்,
என்பதைத் தெரிந்துகொள்,

00:35:25.959 --> 00:35:29.588 align:center
அதுதான் இதை எனக்கு இன்னும்
வலி மிகுந்ததாக்குகிறது.

00:35:29.671 --> 00:35:31.006 align:center
உன்னை நேசிக்கிறேன்.

00:35:31.089 --> 00:35:32.090 align:center
பால்.”

00:35:34.301 --> 00:35:35.302 align:center
மனமுடைந்தேன்.

00:35:36.053 --> 00:35:38.555 align:center
முடிவிலும் அவனைப் பற்றியே கூறியுள்ளான்.
வழக்கமான பால்தான்.

00:35:38.639 --> 00:35:39.681 align:center
என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தாயா?

00:35:39.765 --> 00:35:42.476 align:center
என் காரில் துப்பாக்கியை வைத்திருக்கிறாய்.
அதற்கும் இதற்கும் சரியாகிவிட்டது.

00:35:42.559 --> 00:35:45.521 align:center
பாலின் ஆயுள் காப்பீட்டில்
“தற்கொலை கூடாது” என்ற

00:35:45.604 --> 00:35:47.523 align:center
பிரிவு உள்ளது என நினைக்கிறேன்?

00:35:51.527 --> 00:35:55.155 align:center
அவருக்கு பல அற்புதமான
குணாதிசயங்கள் இருந்தாலும்,

00:35:55.906 --> 00:35:57.908 align:center
பால் பண விஷயத்தில் பலவீனமானவர்.

00:35:58.617 --> 00:36:01.328 align:center
விவாகரத்து வரை எனக்கு முழுமையாகப்
புரியவில்லை.

00:36:02.496 --> 00:36:05.582 align:center
நான் எதிர்பார்த்ததைவிட எனக்குக் குறைவாகக்
கிடைப்பதாக இருந்தது.

00:36:06.375 --> 00:36:07.876 align:center
இதுதான் நடந்தது.

00:36:08.627 --> 00:36:11.880 align:center
நான் ஹை ஸ்கூலில் ஹாட்டான பெண்ணாக இருந்தேன்,
ஆனால் ஆறாண்டுகள் கழித்து வெயிட்ரஸாக இருந்தேன்,

00:36:11.964 --> 00:36:14.007 align:center
ஏனெனில் படிக்கல்லானது
தடைக்கல்லாகியிருந்தது.

00:36:14.675 --> 00:36:16.218 align:center
என் முதலாளியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளத்
தொடங்கினேன்.

00:36:16.718 --> 00:36:20.222 align:center
ஒருவேளை நான் வேலைப் பாதுகாப்பை தேடியிருக்கலாம்,
அல்லது சலிப்படைந்திருக்கலாம்.

00:36:21.557 --> 00:36:23.350 align:center
பிறகு ஒருநாள் அவர் தன்னை
மணந்துகொள்ளும்படி கேட்டார்.

00:36:24.017 --> 00:36:25.102 align:center
அதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

00:36:25.185 --> 00:36:27.771 align:center
ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம்
பெரிய வசதியான வீடு,

00:36:27.855 --> 00:36:31.191 align:center
பொருளாதாரப் பாதுகாப்பு, மேலும்
என் மனதில் தொடர்ந்து கேட்கும்

00:36:31.275 --> 00:36:33.819 align:center
”அடுத்து என்ன வரும்?” என்ற குரல்
அமைதியாவதற்கான வாய்ப்பு.

00:36:38.031 --> 00:36:40.409 align:center
நான் வெஸ்ட்மான்ட் வில்லேஜ் என்ற,
கேள்விப்படாத

00:36:40.492 --> 00:36:41.994 align:center
பிரத்தியேகமான குடியிருப்புப்
பகுதியில் குடியேறினேன்.

00:36:42.077 --> 00:36:44.621 align:center
நான் தெற்கு பாஸ்டனைச் சேர்ந்தவள்,
எனக்கு இந்த கிராம வாழ்க்கை தெரியாது.

00:36:44.705 --> 00:36:45.831 align:center
மற்ற மனைவிகளைச் சந்தித்து,

00:36:45.914 --> 00:36:49.042 align:center
என் தெற்கு பாஸ்டன் உச்சரிப்பைத் தொலைப்பதற்கும்
என் பழைய அபார்ட்மென்ட்டின்

00:36:49.126 --> 00:36:50.794 align:center
ஒரு மாத வாடகையைவிட விலை அதிகமான

00:36:50.878 --> 00:36:53.672 align:center
கிழிந்த ஜீன்ஸ் வாங்கவும் கற்றுக்கொள்ள
என்னையே அர்ப்பணித்தேன்.

00:36:54.506 --> 00:36:56.508 align:center
பிறகு, அந்த ஜீன்ஸ்
இறுக்கமாகத் தொடங்கியது,

00:36:56.592 --> 00:36:59.386 align:center
ஒன்பது மாதங்கள் கழித்து
முதல் குழந்தை பிறந்தது.

00:36:59.469 --> 00:37:00.721 align:center
அதை நான் திட்டமிடாமல் இருந்திருக்கலாம்,

00:37:00.804 --> 00:37:02.973 align:center
ஆனால் பாலுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளத்
தொடங்கிய நேரத்தில்

00:37:03.056 --> 00:37:04.349 align:center
திட்டங்களை நம்புவதையும் நிறுத்தினேன்.

00:37:04.433 --> 00:37:07.936 align:center
அந்தச் சிறிய குழந்தையை யாரையும் நான்
நேசிக்காதளவு நேசித்தேன்,

00:37:08.020 --> 00:37:10.647 align:center
சில ஆண்டுகள் கழித்து இன்னொரு குழந்தை.

00:37:10.731 --> 00:37:12.065 align:center
கொஞ்ச காலத்திற்கு,

00:37:12.149 --> 00:37:14.943 align:center
குடும்பமும் நண்பர்களும் இருந்தனர்,
வாழ்க்கை முழுமையாக இருந்தது.

00:37:15.027 --> 00:37:17.696 align:center
அவ்வப்போது என் மனதில் இருந்த குரல்
பேசிக்கொண்டுதான் இருந்தது,

00:37:17.779 --> 00:37:21.200 align:center
ஆனால் அது ஸானாக்ஸும் விஸ்பெரிங் ஏஞ்சல்
ஒயினும் சரிசெய்ய முடியாதது இல்லை.

00:37:21.283 --> 00:37:25.746 align:center
பெரியளவிலான கற்பனை வீழ்ச்சி மற்றும்
குறைவான தன்மானத்தின் மூலம்

00:37:25.829 --> 00:37:28.248 align:center
என் நண்பர்களும் அண்டைவீட்டாரும்
மகிழ்ச்சியாக இருக்கும் அதே விதத்தில்

00:37:28.332 --> 00:37:29.917 align:center
நானும் மகிழ்ச்சியாக இருப்பதாக
சமாதானப்படுத்திக்கொண்டேன்.

00:37:31.084 --> 00:37:34.963 align:center
சில ஆண்டுகள் கழித்து, என்னைப் போன்ற
இளம் பெண்ணுக்காக பால் என்னைவிட்டுப் பிரிந்தார்.

00:37:36.798 --> 00:37:38.926 align:center
பால் எதுவெல்லாம் இல்லையோ
கூப் அதுவாக இருந்தான்.

00:37:39.009 --> 00:37:44.223 align:center
அழகாக, செக்ஸீயாக, வேடிக்கையாக இருந்தான்,
மேலும் அவன் என்னை நிஜமாக நேசிக்க மாட்டான்.

00:37:44.306 --> 00:37:46.642 align:center
இறுதியில் வெளித்தோற்றம் யாரையும்

00:37:46.725 --> 00:37:48.852 align:center
விவரிப்பது இல்லை எனப் புரிந்தது.

00:37:49.436 --> 00:37:52.189 align:center
எனவே நான் மீண்டும் பாஸ்டனில் இருக்கும்
என் பெற்றோரிடம் சென்றேன்.

00:37:52.272 --> 00:37:54.191 align:center
அனைத்திலிருந்தும் ஒரு ஓய்வு தேவைப்பட்டது.

00:37:54.775 --> 00:37:56.860 align:center
என் மனதில் கேட்ட அந்தக் குரல்
மீண்டும் வந்தது,

00:37:56.944 --> 00:37:59.112 align:center
நான் அனைத்தையும் இழந்து,
அந்த மகிழ்ச்சியான இடத்திலிருந்து

00:37:59.196 --> 00:38:01.156 align:center
அவமானத்துடன் வெளியேற்றப்படுவேன்
என அது அலறியது.

00:38:03.825 --> 00:38:08.330 align:center
பிறகு பால், அதிகப்படியான விஸ்கி மற்றும்
ஆன்டிசைகாடிக்ஸின் அதிக போதையில்

00:38:08.413 --> 00:38:09.748 align:center
என் வீட்டிற்குள் நுழைந்தார்.

00:38:09.831 --> 00:38:12.459 align:center
அந்த வெயிட்ரஸுக்காக அவர் வெளியேறிய
அதே வீட்டிற்குள்.

00:38:12.543 --> 00:38:14.294 align:center
நமக்கு ஒரு வாய்ப்பு கொடு! ப்ளீஸ், பேபி.

00:38:14.378 --> 00:38:15.629 align:center
நான் மீண்டும் உங்களுடன் இணைய மாட்டேன்.

00:38:15.712 --> 00:38:17.798 align:center
- நான் உன்னைப் பார்க்க வேண்டும்.
- நீங்கள் எழுந்ததும் என்னையும்

00:38:17.881 --> 00:38:19.258 align:center
முப்பது வயதுக்கு அதிகமான பெண்களையும்

00:38:19.341 --> 00:38:21.468 align:center
எவ்வளவு வெறுக்கிறீர்கள் என்று நினைவுக்கு வரும்.

00:38:21.552 --> 00:38:24.012 align:center
நீங்கள் என் வீட்டில் இருக்கிறீர்களா?
என் வீட்டில் என்ன செய்கிறீர்கள்?

00:38:24.096 --> 00:38:26.473 align:center
- உனக்காக ஒன்று எழுதியுள்ளேன்.
- என்ன பேசுகிறீர்கள்?

00:38:30.310 --> 00:38:31.603 align:center
இருங்கள், பால்.

00:38:31.687 --> 00:38:33.063 align:center
நான் இப்போதே சுட்டுக்கொள்வேன்!
கடவுள் மீது ஆணையாக!

00:38:33.146 --> 00:38:34.565 align:center
- துப்பாக்கியைக் கீழே போடுங்கள்.
- கடவுள் மீது ஆணையாக!

00:38:34.648 --> 00:38:36.567 align:center
துப்பாக்கியைக் கீழே போடுங்கள்!

00:38:39.695 --> 00:38:43.532 align:center
அப்போதுதான் என் 15 ஆண்டு கால கணவர்
ஃபேஸ்டைமில் தற்கொலை செய்துகொண்டார்.

00:38:43.615 --> 00:38:45.200 align:center
பால்?

00:38:45.284 --> 00:38:46.910 align:center
பால், ஃபோனை எடுங்கள்!

00:38:46.994 --> 00:38:48.954 align:center
பால், ஃபோனை எடுங்கள்!

00:38:50.914 --> 00:38:52.040 align:center
அடக் கடவுளே.

00:38:56.336 --> 00:38:58.338 align:center
பால் 20 மில்லியனுக்கு
ஆயுள் காப்பீடு எடுத்திருந்தார்.

00:38:59.214 --> 00:39:01.508 align:center
போன ஆண்டு அவர் அதைப் புதுப்பித்ததால்
அது எனக்குத் தெரியும்.

00:39:02.342 --> 00:39:05.137 align:center
ஆனாலும் அது தற்கொலையால்
ரத்துசெய்யப்படலாம் என்பதும் அப்படித்தான் தெரியும்.

00:39:10.767 --> 00:39:13.770 align:center
அடுத்த மூன்று அல்லது நான்கு மணிநேரத்திற்கு
நான் நிற்கக் கூடாது,

00:39:14.521 --> 00:39:17.524 align:center
ஏனெனில் நின்றால், துணிச்சலை
இழந்துவிடுவேன்.

00:39:18.734 --> 00:39:20.068 align:center
என் வழக்கமான ஃபோன் பாலின் திட்டத்தில்

00:39:20.152 --> 00:39:22.279 align:center
இருந்ததால் பர்னர் ஃபோனைப் பயன்படுத்தத்
தொடங்கினேன்,

00:39:22.362 --> 00:39:24.656 align:center
அந்தப் பொறாமை பிடித்த பைத்தியக்காரனுக்கு

00:39:24.740 --> 00:39:26.033 align:center
கூப் பற்றித் தெரியக் கூடாது என்று.

00:39:27.034 --> 00:39:29.828 align:center
இப்போது, அந்த பர்னர் ஃபோன்
உதவியாக இருக்கப் போகிறது.

00:39:44.384 --> 00:39:47.596 align:center
இறுதியில், இது தற்கொலையாக
இருக்க விடக் கூடாது.

00:40:01.610 --> 00:40:03.445 align:center
கூப்
விழித்திருக்கிறாயா?

00:40:20.128 --> 00:40:22.965 align:center
குழந்தைகளுடன் பாஸ்டனில் இருக்கிறேன்
நினைவுள்ளதா?

00:40:46.738 --> 00:40:48.907 align:center
இறந்தபோதும், எங்கள் பணத்தைச்
செலவழிக்க அவர் வழியைக் கண்டுபிடித்திருந்தார்.

00:40:50.075 --> 00:40:53.120 align:center
அதை எங்களுக்குச் செய்ய
என்னால் அனுமதிக்க முடியவில்லை.

00:40:53.203 --> 00:40:55.664 align:center
நீ போலீஸிடம் சென்று, உண்மையைக்
கூறியிருக்கலாம்.

00:40:55.747 --> 00:40:57.332 align:center
அந்த ஆயுள் காப்பீடுதான்
என் குழந்தைகளின் எதிர்காலம்.

00:40:57.416 --> 00:40:59.668 align:center
எனவே என் எதிர்காலத்தை நாசமாக்கத்
தீர்மானித்தாய்.

00:41:00.669 --> 00:41:02.337 align:center
நீ என்னிடம் கனிவாக நடந்திருக்க வேண்டும்.

00:41:03.005 --> 00:41:04.423 align:center
இது என் வாழ்க்கை.

00:41:04.506 --> 00:41:05.924 align:center
நீ அதற்குத் தகுதியானவன் இல்லை!

00:41:07.551 --> 00:41:10.137 align:center
நீயும் அந்த மற்ற பணக்காரர்களும்…

00:41:10.220 --> 00:41:12.472 align:center
முக்கியஸ்தர்கள் போல நடப்பீர்கள்,

00:41:12.556 --> 00:41:14.433 align:center
இவ்வளவு பணம் வைத்திருப்பது ஏதோ
அத்தாட்சி போல,

00:41:14.516 --> 00:41:16.351 align:center
ஆனால் அது எல்லாம் உங்களுக்குக்
கொடுக்கப்பட்டது.

00:41:16.435 --> 00:41:21.523 align:center
நான் பல ஆண்டுகளுக்கு அந்த வியர்க்கும் மிருகத்துடன்
செக்ஸ் வைத்துக்கொண்டேன்.

00:41:22.274 --> 00:41:26.403 align:center
என் குழந்தைகளுக்காகவும் எனக்காகவும்
இங்கே வர, இதைப் பெற

00:41:26.486 --> 00:41:29.573 align:center
பல அவமானங்களைத் தாங்கியுள்ளேன்.

00:41:30.324 --> 00:41:31.658 align:center
பால் தன் பணத்தைப் பாதுகாக்கவும்

00:41:31.742 --> 00:41:34.453 align:center
தன் இச்சையைக் கட்டுப்படுத்தவும் தெரியாததால்

00:41:34.536 --> 00:41:35.871 align:center
அதை இழக்கவிருந்தேன்.

00:41:39.708 --> 00:41:40.918 align:center
சோகமான விஷயம் என்னவெனில்,

00:41:41.710 --> 00:41:45.756 align:center
நீ எப்படி உணர்கிறாய் என்று எனக்கு எவ்வளவு
தெரியும் என்று உனக்குத் தெரியாது.

00:41:47.674 --> 00:41:48.800 align:center
எனக்குத் தெரியும்.

00:41:49.551 --> 00:41:52.221 align:center
நீ சொல்வது சரிதான். நான் உன்னிடம்
கனிவாக இருந்திருக்க வேண்டும்.

00:41:53.472 --> 00:41:54.932 align:center
அதற்காக வருந்துகிறேன்.

00:41:55.641 --> 00:41:57.267 align:center
ஆனால் நான் உனக்காக சிறைக்குச் செல்ல முடியாது.

00:41:57.351 --> 00:42:00.145 align:center
இரு, நாம் இதைப் பற்றிப் பேச வேண்டும்.

00:42:00.229 --> 00:42:01.855 align:center
அதைப் பற்றிப் பேசிவிட்டோம்.

00:42:02.606 --> 00:42:03.607 align:center
கூப்.

00:42:04.650 --> 00:42:05.692 align:center
கூ…

00:42:07.778 --> 00:42:09.029 align:center
கூப்!

00:42:10.697 --> 00:42:13.825 align:center
கடவுளே, இங்கே எப்போதிலிருந்து அனைவரிடம்
துப்பாக்கி இருக்கத் தொடங்கியது?

00:42:13.909 --> 00:42:16.328 align:center
- யாராவது அவரைக் கொன்றதாக இருக்க வேண்டும்.
- நீ நிஜமாகச் சொல்லவில்லை.

00:42:16.411 --> 00:42:17.454 align:center
நீ என் வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளாய்.

00:42:17.538 --> 00:42:18.914 align:center
என்னைத் தாக்கினாய்.

00:42:18.997 --> 00:42:21.583 align:center
என் கணவனைக் கொன்றவனிடமிருந்து
என்னைத் தற்காத்துக்கொண்டேன்.

00:42:23.961 --> 00:42:25.420 align:center
நீ ஒன்றை மறந்துவிட்டாய்.

00:42:27.089 --> 00:42:28.090 align:center
என்ன அது?

00:42:28.882 --> 00:42:30.133 align:center
நீயும் கொலைகாரி கிடையாது.

00:42:32.302 --> 00:42:33.303 align:center
கூப்!

00:42:34.763 --> 00:42:36.849 align:center
இரு! கூப்!

00:42:37.558 --> 00:42:39.101 align:center
- கூப்!
- எதுவும் யாரும் வெளியே தெரிவது

00:42:39.184 --> 00:42:40.727 align:center
போல இல்லாத ஊரில்,

00:42:41.270 --> 00:42:44.439 align:center
ஒரு கொலை உண்மையில் கொலையாக
இல்லாமல் இருப்பது அர்த்தமற்றது இல்லை.

00:42:51.572 --> 00:42:55.367 align:center
என்னை கொலையாளியாக மாட்ட வைத்த பெண்ணுக்காக
வருந்துவது விநோதமாக இருந்தது…

00:42:55.993 --> 00:42:57.494 align:center
உங்கள் வலதுபக்கம்.

00:43:00.581 --> 00:43:03.166 align:center
ஆனால் சாம் தன்னுடையதாக இருந்ததைத்
தக்கவைத்துக்கொள்ள முயன்றாள்,

00:43:03.792 --> 00:43:06.378 align:center
அதை என்னைவிட யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

00:43:07.880 --> 00:43:09.965 align:center
நாங்கள் அனைவருமே ஒரே கனவைக் கண்டோம்,

00:43:10.048 --> 00:43:12.050 align:center
புறநகர் சொர்க்கத்தின் உத்திரவாதம்.

00:43:12.134 --> 00:43:14.636 align:center
அங்கே சென்றதும், அது எங்களுக்கானது
என்று நம்பும்படி

00:43:14.720 --> 00:43:15.762 align:center
அனைவரும் ஏமாற்றப்பட்டிருந்தோம்.

00:43:16.430 --> 00:43:18.640 align:center
எங்கள் பெரிய திடமான வீடுகள்

00:43:18.724 --> 00:43:21.226 align:center
நிரந்தரத்தின் ஒரு பகுதியை நாங்கள்
அடைந்ததாக நம்ப வைத்தன.

00:43:21.310 --> 00:43:24.479 align:center
ஆனால் அடித்தளத்தில் கெட்டுப்போயிருந்ததைக்
கண்டறிய அதிகமாகத் தோண்ட வேண்டியிருக்கவில்லை.

00:43:25.856 --> 00:43:27.566 align:center
அது எல்லாமே விரிவான ஒரு மாயைதான்,

00:43:27.649 --> 00:43:29.985 align:center
அதில் மந்திரவாதியும் பார்வையாளர்களும் ஒன்றுதான்.

00:43:30.903 --> 00:43:33.155 align:center
சில நேரம் எது நிஜம், எது வெறும் மாயை

00:43:33.238 --> 00:43:34.907 align:center
என்று கூறுவது கடினமாக இருந்தது.

00:43:47.544 --> 00:43:50.506 align:center
அது கொஞ்சமும் கடினமாக இல்லாத
காலங்களும் இருந்தன.

00:44:06.230 --> 00:44:07.314 align:center
நீயும் வா.

00:44:25.874 --> 00:44:28.335 align:center
நீங்கள் அவரை தண்டிக்க விரும்பினீர்கள் எனத் தெரியும்,
ஆனால் முதலில் இந்த டீலை முடியுங்கள்.

00:44:28.418 --> 00:44:29.419 align:center
ஒரு வாரத்திற்குப் பிறகு

00:44:29.503 --> 00:44:31.338 align:center
உங்களை அழைக்க அவர் எவ்வளவு யோசித்திருப்பார்
என உங்களுக்கே தெரியும்.

00:44:31.421 --> 00:44:33.632 align:center
அவர் லூயன்பர்கரை இழந்தால்,
அடுத்தடுத்த எல்லா கிளையன்டுகளையும் இழப்பார்.

00:44:33.715 --> 00:44:35.926 align:center
அவர் சொதப்பியது அவருக்குத் தெரியும்.
அதாவது, அவர்களது புள்ளிவிவரங்கள் மட்டுமே…

00:44:36.009 --> 00:44:38.595 align:center
- எனக்கு புள்ளிவிவரங்கள் தெரியும்.
- சரி. மன்னிக்கவும்.

00:44:41.974 --> 00:44:43.809 align:center
அவன் வெர்மான்டிலிருந்து வால்டரை
வர வைத்துள்ளானா?

00:44:43.892 --> 00:44:45.269 align:center
நான் கூறுகிறேன்…

00:44:46.228 --> 00:44:47.855 align:center
சரி, நன்றி.

00:44:56.029 --> 00:44:57.990 align:center
பெய்லியும் ரஸ்ஸலும் ஒரே அறையில் உள்ளனர்.

00:44:58.991 --> 00:44:59.992 align:center
எனக்குப் பெருமையாக உள்ளது.

00:45:00.993 --> 00:45:03.161 align:center
- உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, கூப்.
- நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

00:45:03.245 --> 00:45:04.329 align:center
நீ மிகவும் ஆணவத்துடன் இருந்தாய்.

00:45:04.413 --> 00:45:06.498 align:center
- நான் மன்னிப்புக்காக வரவில்லை.
- நல்லது.

00:45:06.582 --> 00:45:07.791 align:center
விஷயத்திற்கு வருவோம்.

00:45:07.875 --> 00:45:09.042 align:center
மிஸ் கிராஸ் உன்னிடம் கூறியது போல,

00:45:09.126 --> 00:45:11.920 align:center
நீ போனதிலிருந்து லூயன்பர்கர் விஷயத்தில்
எங்களால் தொடர முடியவில்லை.

00:45:12.004 --> 00:45:13.172 align:center
யாரை அனுப்பினாலும்,

00:45:13.255 --> 00:45:16.592 align:center
அவர்கள் உடனே தோல்வியுடன்
திரும்பி வந்துவிடுகின்றனர்.

00:45:16.675 --> 00:45:18.886 align:center
ஸ்விஸ் நாதாரிகள் உன்னுடன் மட்டுமே
டீல் செய்வார்கள்.

00:45:18.969 --> 00:45:21.138 align:center
நீ அவர்களுக்கு நன்றாக சோப்பு போட்டிருக்க வேண்டும்.

00:45:22.514 --> 00:45:25.893 align:center
உன் வேலையை மீண்டும் தருகிறோம்,
அதே சம்பளத்தைத் தருகிறோம்,

00:45:25.976 --> 00:45:28.520 align:center
நீ கேட்கும் விதத்தில் சேர்வதற்கான
பெரிய போனஸையும் தருகிறோம்.

00:45:28.604 --> 00:45:30.397 align:center
நீ வேலையைவிட்டு நீங்காதது போலவே இருக்கும்.

00:45:31.398 --> 00:45:36.028 align:center
ஆனால் நான் வேலையில் இல்லை, வால்டர். ஜாக்
அனைவரது முன்னிலையிலும் என்னை வெளியேற்றினார்.

00:45:36.111 --> 00:45:37.654 align:center
ஓ, கமான், கூப்.

00:45:37.738 --> 00:45:40.449 align:center
நான் கேடுகெட்டவன் என்று தெரியாத
யாராவது அங்குள்ளனர் என நினைக்கிறாயா?

00:45:40.532 --> 00:45:43.660 align:center
என்னை நம்பு, நீ இதிலிருந்து நல்ல பெயருடன்தான்
திரும்பி வந்துள்ளாய்.

00:45:43.744 --> 00:45:46.663 align:center
எனக்கு லூயன்பர்கரில் 20% மற்றும்
ஒட்டுமொத்த லாபப் பங்கில் 25% வேண்டும்.

00:45:46.747 --> 00:45:49.041 align:center
நாசமாய்ப் போ. ஸ்விஸ் பங்கில் 12%.

00:45:49.124 --> 00:45:52.711 align:center
அவர்கள் நிறுவனத்திற்கு புதிய கேபிடலைக் கொடுக்கத்
தொடங்கியதும் லாபப் பங்கில் 15%.

00:45:52.794 --> 00:45:55.756 align:center
லூயன்பர்கர் வெளியேறுகின்றனர்,
ஹெல்மன் தயங்குகின்றனர்,

00:45:56.256 --> 00:45:58.467 align:center
டெக்ஸாஸ் எண்ணெய் நிறுவனங்களுக்கு
மற்ற போட்டியாளர்களின் சாதகங்கள் தெரிகின்றன,

00:45:58.550 --> 00:46:00.928 align:center
விமோசனங்கள் உங்களால் சமாளிக்க முடியாதளவுக்கு
வேகமாக வருகின்றன,

00:46:01.011 --> 00:46:02.804 align:center
இந்த இடம் முற்றிலும் வீழ்ந்துவிடும்.

00:46:02.888 --> 00:46:04.848 align:center
உனது கேபிடல் கணக்கு எங்களுடன் இருக்கும்.

00:46:05.349 --> 00:46:07.476 align:center
- நீ அனைத்தையும் இழப்பாய்.
- ஏற்கனவே அனைத்தையும் இழந்துவிட்டேன்.

00:46:08.602 --> 00:46:11.480 align:center
ஸ்விஸ்ஸின் 20%, ஒட்டுமொத்தத்தில் 25%.

00:46:11.563 --> 00:46:14.566 align:center
பேச்சுவார்த்தை எப்படி வேலை செய்யும்
என்று உனக்குப் புரியவில்லை.

00:46:14.650 --> 00:46:15.776 align:center
நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

00:46:15.859 --> 00:46:17.986 align:center
நாசமாய்ப் போ!

00:46:18.987 --> 00:46:20.697 align:center
இது என்னுடைய நிறுவனம்!

00:46:20.781 --> 00:46:23.075 align:center
உன்னால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை
எனில் அது உன்னுடையது இல்லை.

00:46:26.578 --> 00:46:30.332 align:center
சரி. 20 மற்றும் 25. நீ ஸ்விஸ்ஸைக்
கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

00:46:30.415 --> 00:46:31.416 align:center
உடனடியாக.

00:46:31.500 --> 00:46:33.961 align:center
நீயும் ஜாக்கும் இன்றிரவு
சுவிட்ஸர்லாந்து செல்ல வேண்டும்.

00:46:34.670 --> 00:46:35.754 align:center
இன்றிரவு ஒரு நிகழ்வு உள்ளது.

00:46:35.838 --> 00:46:37.881 align:center
ஜெட்டானது டீடர்போரோவிலிருந்து
இன்றிரவு 11 மணிக்குப் புறப்படுகிறது.

00:46:37.965 --> 00:46:39.633 align:center
டெயில் எண்ணை மேரி உனக்கு அனுப்புவாள்.

00:46:39.716 --> 00:46:42.219 align:center
நீயும் நானும் விமானத்தில்
விவரங்களைப் பற்றிப் பேசலாம்.

00:46:42.302 --> 00:46:43.595 align:center
டீலை ஏற்றுக்கொள்கிறாயா?

00:46:49.893 --> 00:46:50.936 align:center
நிச்சயமாக.

00:47:27.806 --> 00:47:30.517 align:center
கூட்டன்பர்க் புற்றுநோய் காலாவானது
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக

00:47:30.601 --> 00:47:31.602 align:center
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில்
பணம் திரட்டுகிறது.

00:47:35.606 --> 00:47:37.941 align:center
பீட்டரும் டையேன் மில்லரும் பல ஆண்டுகளாக
எங்கள் அனைவரையும் டேபிள்களையும் லாட்டரி

00:47:38.025 --> 00:47:40.235 align:center
டிக்கெட்டுகளையும் வாங்கும்படி கட்டாயப்படுத்தி
அதை நடத்தி வருகின்றனர்.

00:47:40.319 --> 00:47:42.779 align:center
காலப்போக்கில் அது வெஸ்ட்செஸ்டர் சமூக காலண்டரில்
மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வுகளில்

00:47:42.863 --> 00:47:44.573 align:center
ஒன்றாக மாறிவிட்டது.

00:47:44.656 --> 00:47:46.950 align:center
இங்கே இருப்பது அனைவரிடமும் நாம்
பெருந்தன்மையானவர் என்பதைக் காட்டும்,

00:47:47.034 --> 00:47:49.244 align:center
அந்தப் பெருந்தன்மைக்கு
அதிக பணம் தேவை,

00:47:49.328 --> 00:47:51.288 align:center
எனவே மருத்துவ அறிவியலின் காரணமானது
சமூக அழுத்தம் மற்றும்

00:47:51.371 --> 00:47:54.625 align:center
கவனத்தை ஈர்ப்பதன் மூலம் மேம்பட்டுள்ளது.

00:47:54.708 --> 00:47:58.003 align:center
நீங்கள் விடுவிக்கப்பட்டதில் எங்களுக்கு எவ்வளவு
நிம்மதி என்று உங்களுக்குத் தெரியாது.

00:47:58.086 --> 00:48:00.631 align:center
நீங்கள் கொலை செய்ததாக நாங்கள் நம்பவில்லை.

00:48:00.714 --> 00:48:02.674 align:center
அது சரியாக வரவில்லை.

00:48:02.758 --> 00:48:05.010 align:center
அடச்சே. எனக்கு இதைப் பற்றி எப்படிப்
பேசுவது என்று தெரியவில்லை.

00:48:05.093 --> 00:48:06.678 align:center
நம் யாருக்கும்தான். பரவாயில்லை.

00:48:06.762 --> 00:48:08.555 align:center
எனில் நாம் அதை நிறுத்திவிடுவோமா?

00:48:08.639 --> 00:48:10.349 align:center
- சரி.
- அது நல்ல யோசனை.

00:48:10.432 --> 00:48:12.059 align:center
- கூப், ஹாய்.
- ஹாய். நன்றி.

00:48:18.690 --> 00:48:21.235 align:center
நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள்.
அடடா!

00:48:21.318 --> 00:48:22.861 align:center
நன்றி.

00:48:22.945 --> 00:48:24.905 align:center
இது அருமையான காட்சி.

00:48:24.988 --> 00:48:26.573 align:center
- உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
- அது எப்படி உள்ளது?

00:48:26.657 --> 00:48:28.033 align:center
- உன்னைப் பார்.
- ஒரு நிமிடம் ஆகிவிட்டது.

00:48:28.116 --> 00:48:30.327 align:center
- உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
- ஓ, ஆம். அருமையான டேபிள்.

00:48:30.410 --> 00:48:31.411 align:center
நல்ல டேபிள்.

00:48:31.495 --> 00:48:33.205 align:center
ஹேய், எப்படி இருக்கிறாய்? பார்னி எங்கே?

00:48:33.288 --> 00:48:34.665 align:center
- எங்கே என நினைக்கிறீர்கள்?
- ஓ, சரி. சரி.

00:48:34.748 --> 00:48:35.791 align:center
ஆம். கண்டிப்பாக.

00:48:36.416 --> 00:48:37.960 align:center
அதோ இருக்கிறான்.

00:48:38.585 --> 00:48:39.753 align:center
டேபிள் 10.

00:48:39.837 --> 00:48:41.839 align:center
ஹாய், தங்கையே. எப்படி இருக்கிறாய்?

00:48:41.922 --> 00:48:44.341 align:center
- இதோ வந்துவிடுகிறேன். ஆம்.
- சரி.

00:48:45.384 --> 00:48:46.510 align:center
ஹாய், நண்பா.

00:48:48.095 --> 00:48:49.221 align:center
சரி,

00:48:49.304 --> 00:48:50.931 align:center
நீதானே இந்தப் பார்ட்டியில்
முக்கியமான நபர்?

00:48:51.014 --> 00:48:53.892 align:center
ஆம். கொலையிலிருந்து விடுபட்டு, சமூக
அந்தஸ்தை அதிகரிப்பது போல் எதுவுமில்லை.

00:48:54.685 --> 00:48:56.854 align:center
கொலை செய்யாததற்கு வாழ்த்துகள்.

00:49:01.483 --> 00:49:04.278 align:center
ஜாக்கை எப்போது சந்திக்கப் போகிறாய்?

00:49:04.361 --> 00:49:05.654 align:center
சந்தித்துவிட்டேன்.

00:49:05.737 --> 00:49:06.905 align:center
சந்தித்துவிட்டாய்.

00:49:06.989 --> 00:49:08.574 align:center
என்னை அழைக்கவில்லையா?

00:49:08.657 --> 00:49:10.075 align:center
உன்னை இங்கே பார்ப்பேன் எனத் தெரியும்.

00:49:10.158 --> 00:49:11.577 align:center
நாசமாய்ப் போ.
அவர் என்ன கூறினார்?

00:49:11.660 --> 00:49:13.370 align:center
அது நல்ல ஆஃபர்தான்.

00:49:14.079 --> 00:49:15.205 align:center
எந்தளவு நல்லது?

00:49:16.206 --> 00:49:18.000 align:center
- அதைப் பற்றி யோசிக்கிறேன்.
- நீ யோசிக்கிறாய்…

00:49:18.083 --> 00:49:19.501 align:center
ஆம். உண்மைதான்.

00:49:19.585 --> 00:49:21.378 align:center
இதில் நமக்கான நேரம் எடுத்துக்கொள்வோம்,

00:49:21.461 --> 00:49:23.672 align:center
அதிகமாக யோசிக்காமல் என்னுடையது உட்பட,
அந்த வருவாய் அனைத்தையும்

00:49:23.755 --> 00:49:26.466 align:center
- மீண்டும் பெற நீ விரும்பவில்லை, சரியா?
- கூப்.

00:49:26.550 --> 00:49:28.552 align:center
- ஹேய்.
- உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி, நண்பா.

00:49:28.635 --> 00:49:30.429 align:center
உன்னை கொஞ்சம் கூட நான் சந்தேகிக்கவில்லை.

00:49:30.512 --> 00:49:32.264 align:center
ஹேய். இவருக்கு பானங்கள் கொடுங்கள், சரியா?

00:49:32.347 --> 00:49:33.473 align:center
ஏற்கனவே உள்ளது.

00:49:33.557 --> 00:49:34.683 align:center
ஆம், என்ன கூறுகிறாய்?

00:49:34.766 --> 00:49:36.435 align:center
ஹேய், இங்கே மெக்கல்லன் வேண்டும், சரியா?

00:49:40.647 --> 00:49:42.232 align:center
- மன்னிக்கவும், நண்பர்களே.
- சரி.

00:49:43.609 --> 00:49:44.902 align:center
ஹாய்.

00:49:44.985 --> 00:49:46.486 align:center
- ஹலோ.
- ஹாய், அப்பா.

00:49:46.570 --> 00:49:48.113 align:center
- ஹாய்,
- வரவேற்கிறேன். வந்ததற்கு நன்றி.

00:49:49.239 --> 00:49:50.657 align:center
- ஹாய்.
- மெல்.

00:49:50.741 --> 00:49:52.451 align:center
நீ அழகாக இருக்கிறாய்.
ஹலோ, நான் ஆண்ட்ரூ.

00:49:52.534 --> 00:49:54.119 align:center
- ஹாய்.
- உன்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

00:50:11.428 --> 00:50:13.347 align:center
எனக்குத் தெரியவில்லை.
இது… இது யார் என்று பார்.

00:50:13.430 --> 00:50:14.890 align:center
- ஹாய்.
- இங்கே…

00:50:14.973 --> 00:50:16.391 align:center
- ஹாய்.
- ஹாய்.

00:50:21.688 --> 00:50:22.689 align:center
நீ நலமா?

00:50:23.232 --> 00:50:24.274 align:center
ஆம்.

00:50:28.445 --> 00:50:29.947 align:center
டென்னிஸ் அணி பற்றி மறந்துவிடு.

00:50:32.157 --> 00:50:34.368 align:center
பிரின்ஸ்டன் பற்றிக் கவலைப்பட
இன்னும் ஒரு வருடம் உள்ளது.

00:50:39.331 --> 00:50:41.834 align:center
நீ தொழில்முறை டென்னிஸ் கோச்சிடம்
பயிற்சி பெற விரும்புகிறாயா?

00:50:43.168 --> 00:50:44.461 align:center
நீங்கள்தான் என் கோச்.

00:50:45.838 --> 00:50:47.589 align:center
நான் இருக்க வேண்டிய அவசியமில்லை.

00:50:48.674 --> 00:50:50.050 align:center
நான் கூறுகிறேன், நீங்கள் இருக்க வேண்டும்.

00:50:56.849 --> 00:50:57.933 align:center
நன்றி.

00:50:59.560 --> 00:51:01.854 align:center
நம் இளைஞனிடம் திறமை இருக்கிறது போல.

00:51:07.359 --> 00:51:08.777 align:center
நீ என்ன செய்கிறாய்?
யாருடனும் டேட் செய்கிறாயா?

00:51:11.280 --> 00:51:13.407 align:center
செய்தேன். அது சிக்கலானது.

00:51:15.409 --> 00:51:16.618 align:center
என்னை சகித்துக்கொள்ள முடியாமல் போகலாம்.

00:51:17.995 --> 00:51:19.746 align:center
அப்படி இருப்பது பரவாயில்லை.

00:51:19.830 --> 00:51:21.582 align:center
அவனால் அதைச் சமாளிக்க முடியவில்லை,
அவன் எக்கேடோ போகிறான்.

00:51:21.665 --> 00:51:23.083 align:center
ஆம்.

00:51:23.166 --> 00:51:24.418 align:center
அவன் எக்கேடோ போகட்டும்.

00:51:24.501 --> 00:51:25.502 align:center
ஆம்.

00:51:29.131 --> 00:51:30.257 align:center
சரி. நான் போக வேண்டும்.

00:51:31.300 --> 00:51:32.593 align:center
ஆனால் இப்போதுதானே வந்தாய்.

00:51:32.676 --> 00:51:33.927 align:center
அதுதான் புறப்படுவதற்கு ஏற்ற நேரம்.

00:51:35.804 --> 00:51:36.972 align:center
ஹேய்.

00:51:37.055 --> 00:51:39.099 align:center
பிறகு பார்க்கலாம். ஆணுறையைப் பயன்படுத்துங்கள்.

00:51:51.278 --> 00:51:52.905 align:center
- ஹேய்.
- ஹேய்.

00:51:52.988 --> 00:51:55.240 align:center
- உன்னுடன் இணைந்துகொள்ளவா?
- கண்டிப்பாக. ஆம்.

00:51:55.324 --> 00:51:57.451 align:center
- சரி.
- நாங்கள் விரைவில் வருகிறோம்.

00:51:57.534 --> 00:51:58.619 align:center
சரி.

00:52:01.371 --> 00:52:03.040 align:center
நான் உன்னைத் தொடர்புகொள்ள
தொடர்ந்து முயன்று வருகிறேன்.

00:52:03.123 --> 00:52:04.208 align:center
தெரியும்.

00:52:04.291 --> 00:52:06.210 align:center
எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

00:52:06.710 --> 00:52:08.128 align:center
கண்டிப்பாக.

00:52:11.507 --> 00:52:12.841 align:center
என்னை மன்னித்துவிடு.

00:52:15.928 --> 00:52:17.596 align:center
நீ என்னைவிட அதிகமாகப் பெறத் தகுதியுடையவன்.

00:52:18.722 --> 00:52:19.723 align:center
ஆம்.

00:52:20.641 --> 00:52:22.226 align:center
ஆனால் இதை நானேதான் செய்துகொண்டேன்.

00:52:26.063 --> 00:52:29.149 align:center
வேறொருவரைக் காதலிக்கும் பெண்ணை
நான் காதலித்தேன்.

00:52:31.485 --> 00:52:32.653 align:center
என்ன பேசுகிறாய்?

00:52:37.574 --> 00:52:38.575 align:center
ஒன்றுமில்லை.

00:53:09.982 --> 00:53:12.067 align:center
சரி. எதுவும் கூறாதே. அவள் வருகிறாள்.

00:53:13.694 --> 00:53:14.736 align:center
நீங்கள் தொடருங்கள்.

00:53:14.820 --> 00:53:16.446 align:center
என்ன? இரு.

00:53:16.947 --> 00:53:18.824 align:center
ஓ, இல்லை.
நீ என்னுடன் மாட்டிக்கொண்டாய்.

00:53:20.534 --> 00:53:21.577 align:center
வாவ்.

00:53:25.539 --> 00:53:26.665 align:center
நீ அழகாக இருக்கிறாய்.

00:53:28.667 --> 00:53:30.544 align:center
அது உண்மை என்பதால்தான் அதைச்
சொல்கிறாய்.

00:53:35.674 --> 00:53:37.176 align:center
எல்லாம் எப்படிப் போனது?

00:53:38.594 --> 00:53:40.137 align:center
நான் மன்னிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

00:53:42.681 --> 00:53:43.849 align:center
அவன் என்னைவிடச் சிறப்பானவன்.

00:53:43.932 --> 00:53:45.058 align:center
கண்டிப்பாக.

00:53:49.062 --> 00:53:51.773 align:center
எப்படியும், நான் கொஞ்ச நாள் தனியாகத்தான்
இருக்கப் போகிறேன்.

00:53:54.067 --> 00:53:55.277 align:center
நீயும் நானும்.

00:53:57.654 --> 00:54:01.200 align:center
சரி, அன்றொரு நாள் ஷாப்பிங்
செய்யும்போது சாமைப் பார்த்தேன்,

00:54:01.283 --> 00:54:03.202 align:center
இது எதுவும் நடக்காதது போல இருந்தாள்.

00:54:04.703 --> 00:54:08.832 align:center
அதாவது, அவள் அவனைக் கொல்லவில்லை,

00:54:10.125 --> 00:54:11.877 align:center
அவள் இன்னும் காப்பீட்டை கிளைம் செய்யவில்லை,

00:54:11.960 --> 00:54:14.171 align:center
எனவே எந்த மோசடியும் நடக்கவில்லை.

00:54:15.464 --> 00:54:20.511 align:center
அவளது வக்கீல் அவளை சமூக சேவை,
அபராதத்துடன் வெளியே கொண்டு வந்துவிடுவார்.

00:54:22.054 --> 00:54:24.139 align:center
இருந்தாலும் அவள் உன்னை
சிறைக்கு அனுப்பவிருந்தாள்.

00:54:26.016 --> 00:54:27.267 align:center
அவளுக்கென காரணங்கள் இருந்தன.

00:54:28.769 --> 00:54:29.811 align:center
நீ அவளை மன்னிப்பாயா?

00:54:31.605 --> 00:54:33.857 align:center
நீ என்னை மன்னிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது.

00:54:35.734 --> 00:54:37.444 align:center
நான் அவளைக் காதலிக்கவில்லை.

00:54:49.331 --> 00:54:51.166 align:center
இப்போதுதான்
நான் புறப்பட வேண்டும்.

00:54:54.795 --> 00:54:56.505 align:center
அவர்கள் இன்னும் டின்னர் கூட
பரிமாறவில்லை.

00:54:56.588 --> 00:54:58.215 align:center
அதுதான் புறப்படுவதற்கான
சரியான நேரம்.

00:55:02.511 --> 00:55:03.512 align:center
ஹேய்.

00:55:04.680 --> 00:55:05.973 align:center
பிரச்சினையில் ஈடுபடாமல் இருப்பாயா?

00:55:13.647 --> 00:55:15.482 align:center
- பிறகு பார்க்கலாம்.
- சரி.

00:55:15.566 --> 00:55:17.860 align:center
சுதந்திரமானவர். இவரைப் பாருங்கள்.

00:55:26.910 --> 00:55:29.496 align:center
- ஜூல்ஸ்.
- ஓ, ஹேய், கூப்.

00:55:29.580 --> 00:55:32.165 align:center
நீங்கள் விடுவிக்கப்பட்டதைக் கேட்டதும்
மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.

00:55:32.958 --> 00:55:35.169 align:center
அதாவது, நாங்கள் நம்பவில்லை,
ஆனாலும் மகிழ்ச்சியடைந்தோம்.

00:55:35.252 --> 00:55:37.880 align:center
ஆம், நான் கொலை செய்தேன் என்று
நீங்கள் பந்தயம் கட்டியதாகக் கூறினார்கள்.

00:55:40.716 --> 00:55:41.717 align:center
உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும்.

00:55:42.301 --> 00:55:44.136 align:center
எனக்கு குறைவான வாய்ப்பை எடுக்கவே பிடிக்கும்.

00:55:45.637 --> 00:55:48.390 align:center
உங்களுக்கு வெல்வதற்கான சாதகம் இல்லாதது
என் அதிர்ஷ்டம்தான்.

00:55:49.183 --> 00:55:50.601 align:center
எஸ்ஏடிஸில் நீங்கள் செய்தது போல.

00:55:53.145 --> 00:55:54.313 align:center
என்ன பேசுகிறீர்கள்?

00:55:54.396 --> 00:55:58.483 align:center
நீங்கள் கவனமாக இருந்ததாக நினைத்திருப்பீர்கள்,
ஆனால் விஷயம் வேகமாகப் பரவும்.

00:56:00.319 --> 00:56:03.655 align:center
மேலும் அது சரியான நபர்களுக்குத்
தெரிந்தால்,

00:56:04.281 --> 00:56:06.742 align:center
செல்ஸீ சமூகக் கல்லூரிக்குச் செல்வதே
அதிர்ஷ்டமாக இருக்கும்.

00:56:07.826 --> 00:56:09.661 align:center
அது உங்களுக்கு எப்படித் தெரியும்?

00:56:11.997 --> 00:56:13.207 align:center
உங்களுக்கு அது தெரிந்திருக்க முடியாது.

00:56:13.290 --> 00:56:15.042 align:center
சூழ்நிலை உங்கள் கையை மீறி உள்ளது, ஜூல்ஸ்.

00:56:16.752 --> 00:56:19.338 align:center
தனக்குத் தெரியாது என்பதைத் தெரியாமல் இருப்பதுதான்
மிகவும் மோசமான விஷயம்.

00:56:19.421 --> 00:56:20.464 align:center
உங்களுக்கு எதுவும் தெரியாது.

00:56:22.382 --> 00:56:25.636 align:center
நீங்கள் தேர்வுசெய்ய அமெரிக்காவில் உள்ள
எல்லாக் கல்லூரிகளும் உள்ளன,

00:56:25.719 --> 00:56:27.638 align:center
ஆனால் அவள் பிரின்ஸ்டன் போகக் கூடாது.

00:56:28.430 --> 00:56:29.681 align:center
என்னை மிரட்டுகிறாயா?

00:56:29.765 --> 00:56:31.266 align:center
நிச்சயமாக.

00:56:47.824 --> 00:56:48.825 align:center
நன்றி.

00:56:55.832 --> 00:56:57.459 align:center
- நன்றி.
- நன்றி, சார்.

00:57:24.319 --> 00:57:25.737 align:center
இதுதான் நடக்கும்.

00:57:25.821 --> 00:57:28.699 align:center
நாம் விரும்புகிறோம் என நினைக்கும் வாழ்வை அமைக்க
கடினமாக உழைப்போம்,

00:57:30.576 --> 00:57:32.619 align:center
பிறகு ஒருநாள் அதை ஒருவர்
நம்மிடமிருந்து பறித்துவிடுவார்.

00:57:33.829 --> 00:57:35.664 align:center
அப்போதுதான் கடினமாக உழைப்பதற்கும்
நம் வாழ்க்கைக்காகப் போராடுவதற்கும்

00:57:35.747 --> 00:57:38.083 align:center
இடையே நிறைய வித்தியாசங்கள்
உள்ளன என்று நமக்குத் தெரியும்.

00:57:39.710 --> 00:57:42.880 align:center
இதற்கு முன் நாம் போராட வேண்டியிருந்திருக்காது.
எப்படி என்று நமக்குத் தெரியுமா என்றும் தெரியாது.

00:57:42.963 --> 00:57:45.966 align:center
ஆனால் அதைச் செய்வீர்கள், நாம் ஆச்சரியப்படும்
விதமாக, அதில் வெல்வோம்.

00:57:46.049 --> 00:57:47.176 align:center
அது இனிமையாக இருக்கும்.

00:57:47.259 --> 00:57:51.221 align:center
அது விமோசனம், அங்கீகாரம் மற்றும் வெற்றி
என அனைத்தும் ஒன்றாக உணர்வீர்கள்.

00:57:51.305 --> 00:57:52.639 align:center
ஆனால் ஒன்று மாறிவிட்டது.

00:57:52.723 --> 00:57:55.642 align:center
உங்கள் பழைய வாழ்க்கை நீங்கள் எடுத்துக்கொள்ள
உங்கள் முன் உள்ளது.

00:57:55.726 --> 00:57:58.437 align:center
அந்த பழைய செக்கில் ஏறிக்கொண்டு
மீண்டும் சுற்றத் தொடங்க,

00:57:58.520 --> 00:57:59.771 align:center
அதில் ஏறுவது மிகவும் சுலபம்.

00:58:06.069 --> 00:58:09.156 align:center
புரூஸ் ஒழிந்து போகட்டும்

00:58:09.239 --> 00:58:10.616 align:center
அடச்சே.

00:58:14.536 --> 00:58:15.787 align:center
சூஸி.

00:58:16.955 --> 00:58:18.248 align:center
நீ என்ன செய்தாய்?

00:58:18.999 --> 00:58:20.501 align:center
- கேள்…
- இல்லை!

00:58:20.584 --> 00:58:22.169 align:center
நீ என்ன செய்தாய்?

00:58:27.758 --> 00:58:29.593 align:center
ஆனால் அவமானத்திலிருந்து
மீண்டு வரும்போதும்

00:58:29.676 --> 00:58:33.680 align:center
உலகத்தின் மீது கோபமாக இருக்கும்போதும், நாம்
நேசிக்கும் அனைவரையும் காப்பாற்ற முயலும்போதும்

00:58:33.764 --> 00:58:35.724 align:center
நாம் கண்ணாடியைப் பார்த்து, நாம் யாராக
இருந்தோமோ மீண்டும்

00:58:35.807 --> 00:58:37.893 align:center
அதுவாக இருக்கச் செல்ல முடியுமா
என்று கேட்டுக்கொள்ள வேண்டும்.

00:58:42.189 --> 00:58:43.607 align:center
ஏனெனில் கடினமான உண்மை என்னவெனில்,

00:58:43.690 --> 00:58:45.734 align:center
திரைக்குப் பின்னால் உள்ள குழப்பத்தைப்
பார்த்த பிறகு,

00:58:45.817 --> 00:58:48.737 align:center
அந்த நிகழ்ச்சியை மீண்டும் அதே விதத்தில்
பார்க்க முடியாது.

00:58:54.368 --> 00:58:55.536 align:center
ஆனால் இப்போது…

00:58:56.453 --> 00:58:58.038 align:center
இப்போது,

00:58:59.623 --> 00:59:00.999 align:center
இது வேலைக்குச் செல்வதற்கான நேரம்.

01:00:02.853 --> 01:00:05.189 align:center
உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவருக்கோ
உதவி தேவைப்பட்டால்,

01:00:05.272 --> 01:00:08.609 align:center
APPLE.COM/HERETOHELP தளத்திற்குச் செல்லவும்

01:01:24.351 --> 01:01:26.353 align:center
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்

