WEBVTT

00:07.174 --> 00:08.425
எல்லாமே புரிகிறது.

00:09.301 --> 00:14.431
கூப்பும் சாமும் பார், பார்ட்டி அல்லது பார்பிக்யூவில்
அடிக்கடி சந்தித்தனர்.

00:15.015 --> 00:16.475
இரண்டு பேருமே ஏமாற்றப்பட்டுள்ளனர்.

00:16.558 --> 00:18.560
அவனும் அழகானவன். அவளும் அழகானவள்.

00:18.644 --> 00:20.854
இருவரும் தனிமையாக இருந்தனர்,
போதையில் இருந்தனர்.

00:21.605 --> 00:22.773
எளிதில் கிடைக்கும் பழம்.

00:23.690 --> 00:26.527
அவர்கள் உடலுறவு கொள்ளவில்லை என்றால்தான்
ஆச்சரியப்பட வேண்டும்.

00:27.611 --> 00:30.364
பிறகு காலம் ஓடியது.
என்ன, ஒரு மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள்.

00:30.447 --> 00:34.284
மெல், பால் மற்றும் அனைவருக்காகவும்
அவர்கள் அதை ரகசியமாக வைத்திருந்தனர்.

00:35.410 --> 00:36.828
ஆனால் பாலுக்கு அது தெரிந்துவிட்டது.

00:37.704 --> 00:40.916
கூப்பை எதிர்கொள்ளச் சென்றான்,
கூப் அவனைக் கொன்றுவிட்டான்.

00:40.999 --> 00:43.460
தற்காப்பு. பேரார்வத்தின் குற்றம். ஏதோ…

00:43.544 --> 00:44.628
அது முட்டாள்தனம்.

00:45.838 --> 00:48.173
வலிமையான ஆதாரத்தை எனக்கு யாரும்
காட்டும் வரை,

00:48.257 --> 00:50.425
கூப் ஒரு கொலைகாரன் என்று நான்
நம்ப மாட்டேன்.

00:50.509 --> 00:52.636
அதாவது, அவனை நமக்கு
பல ஆண்டுகளாகத் தெரியும்.

00:52.719 --> 00:56.014
ஆம், ஆனால் அவனும் சாமும் ஒன்றாக இருந்தது
எப்படியோ நமக்குத் தெரியவில்லைதானே?

00:56.098 --> 00:57.140
ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்.

00:57.224 --> 00:59.309
கூப் பற்றி தெரிய வேண்டிய எல்லாமே
நமக்குத் தெரியாது.

00:59.393 --> 01:01.019
அல்லது சாம் பற்றியும்.

01:01.103 --> 01:02.980
பால் பல ஆண்டுகளாக அவளை
ஏமாற்றிக்கொண்டிருந்தான்.

01:03.063 --> 01:06.191
அவன் விவாகரத்து விஷயத்தில் மோசமாக இருந்தான்.
அவளே கோபத்தில் கொன்றிருக்கலாம்.

01:06.275 --> 01:09.194
அல்லது தொடர்பில்லாத யாரோ கொன்றிருக்க
அதிக வாய்ப்புள்ளது.

01:09.695 --> 01:11.280
அதாவது, பால் எதில் சம்பந்தப்பட்டிருப்பான்
என யாருக்குத் தெரியும்?

01:11.363 --> 01:13.490
அது நடக்கும்போது சாம் தன் பெற்றோருடன்
பாஸ்டனில் இருந்தாள்.

01:13.574 --> 01:15.325
கண்டிப்பாக அவள் இருந்த இடத்தை
போலீஸ் சரிபார்த்திருக்கும்.

01:15.409 --> 01:16.493
கிரேஸ், நீ மெல்லிடம் பேசினாயா?

01:16.577 --> 01:18.537
வாய்ஸ்மெயில் அனுப்பினேன். மிகவும் பிசியாக உள்ளேன்.

01:18.620 --> 01:21.248
அடக் கடவுளே. சரிதான்.
பார்னி எப்படி இருக்கிறார்?

01:21.331 --> 01:24.668
வீட்டில் இருக்கிறார், அது நல்லதுதான்.
அப்படி நினைக்கிறேன்.

01:25.752 --> 01:28.714
தோள்பட்டை நகர்ந்துள்ளது,
விலா உடைந்துள்ளது, இப்போது இது.

01:28.797 --> 01:31.383
நான் நலமாக உணர, அவருக்கு தொடர்ந்து
மயக்க மருந்து கொடுக்கிறேன்.

01:32.009 --> 01:34.386
இந்தப் பகுதியில் வன்முறை அதிகரித்து
வருவதை யாரும் கவனிக்கிறீர்களா?

01:34.469 --> 01:35.345
அதாவது, என்ன இதெல்லாம்?

01:35.429 --> 01:36.972
நேற்றிரவு நான் மெல்லுடன் பேசினேன்.

01:37.598 --> 01:39.975
அவள் அவர் மீது கோபமாக இருக்கிறாள், ஆனால்
அவன் நிரபராதி என்றும் உறுதியாக இருக்கிறாள்.

01:40.058 --> 01:42.102
அவர் அவளது குழந்தைகளின் தந்தை.
கண்டிப்பாக அவள் உறுதியாகத்தான் இருப்பாள்.

01:42.186 --> 01:43.687
அவரை கைதுசெய்யும்போது அவர்
நிரபராதி போல தெரியவில்லை.

01:43.770 --> 01:45.272
கைவிலங்குகளில் யாரும் நிரபராதி போல
தெரிய மாட்டார்கள்.

01:45.355 --> 01:48.901
நான் கூறியது போல, இது முற்றிலும் வேறொருவராக
இருக்கலாம். அல்லது தவறாக இருக்கலாம்.

01:48.984 --> 01:50.360
கொலை எப்போதும் தவறுதான்.

01:50.444 --> 01:53.155
ஒருவர் டின்னருக்குப் பிறகு பேச முடியாத
விஷயத்தை, அவர் செய்யக் கூடாது.

01:53.989 --> 01:54.907
ஆஸ்கர் வைல்ட் அதைக் கூறியுள்ளார்.

01:55.949 --> 01:57.159
என்ன?

01:57.242 --> 01:58.243
நான் கூறுகிறேன்.

01:58.744 --> 02:01.455
அவர்கள் ஒன்றாக இருக்கும்போது பால் வந்ததும்,
பிரச்சினை ஏற்பட்டிருக்கும். அவ்வளவுதான்.

02:01.538 --> 02:03.790
பாலுக்குத்தான் தன் காதலி இருக்கிறாள்.
அவன் ஏன் கவலைப்பட வேண்டும்?

02:03.874 --> 02:06.793
ஆண்கள் தன்னைப் பற்றியே நினைப்பவர்கள்.
ஆண்களுக்கான விதிகள். என்னவோ.

02:06.877 --> 02:09.670
எனில் சாமின் வீட்டில் அவளுடன் கூப்
செக்ஸ் வைத்துக்கொண்டிருந்தார் என்பது உன் தியரி,

02:09.755 --> 02:12.591
அவள் 200 மைல்களுக்கு அப்பால் இருந்தால்
என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல்.

02:12.674 --> 02:16.178
இந்த நீண்ட தூர செக்ஸ் மூலம்
இயற்பியல் விதிகளை அவர்கள் மீறும்போது,

02:16.261 --> 02:19.181
அங்கே வசிக்காத பால்
அவர்களைப் பார்த்திருக்க முடியாது.

02:19.264 --> 02:21.099
நீ உருவாக்கிய இந்தச் சூழலில்

02:21.183 --> 02:23.268
தன் வாழ்க்கையில் துப்பாக்கியைப் பயன்படுத்தாத கூப்,

02:23.352 --> 02:28.357
துப்பாக்கி சொந்தமாகக் கொண்டிருக்காத
அல்லது அருகில் வைத்திருக்காத…

02:28.440 --> 02:30.943
- ஏனெனில் பேன்ட் கூட அணிந்திருக்க மாட்டான்.
- என்னிடம் எல்லா பதில்களும் உள்ளன என்றில்லை.

02:31.026 --> 02:32.653
அவர்கள் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளனர்.

02:33.153 --> 02:34.905
அதற்காக யாரும் கொல்ல மாட்டார்கள்.

02:34.988 --> 02:36.406
அது அதைவிடப் பெரிய விஷயம் இல்லை
என உனக்குத் தெரியாது.

02:36.490 --> 02:38.075
சமந்தா லெவிட்டுடன் கூப் காதலில் இல்லை.

02:38.158 --> 02:39.409
உனக்கு எப்படித் தெரியும்?

02:40.160 --> 02:41.453
ஏனெனில் அவர் மெல்லை இன்னும் நேசிக்கிறார்.

02:42.621 --> 02:47.292
கூப் கொல்ல வேண்டுமெனில், நீண்ட காலம்
முன்பே நிக்கைக் கொன்றிருக்க வேண்டும்,

02:47.376 --> 02:48.585
ஆனால் கொல்லவில்லை.
ஏன் தெரியுமா?

02:48.669 --> 02:50.754
ஏனெனில் கூப் கொலைகாரர் இல்லை.

02:50.838 --> 02:53.340
இது முற்றிலும் விளக்கத்திற்கு அப்பாற்பட்டது.

02:53.423 --> 02:58.220
அந்த நினைவஞ்சலியில் அவர்

02:58.303 --> 03:00.430
எல்லாம் சரியாக இருப்பது போல நின்றார்.

03:00.514 --> 03:01.932
ஏனெனில் அவர் அதைச் செய்யவில்லை.

03:02.015 --> 03:02.850
கண்டிப்பாக.

03:06.395 --> 03:07.646
அல்லது அவர் ஒரு சோஷியோபாத்.

03:08.146 --> 03:10.983
சரி. சூஸ், நிஜமாகவா?
என்ன… நான்…

03:12.734 --> 03:14.903
நாம் மில்லரின் புற்றுநோய்க்கான காலாவுக்குச்
செல்கிறோமா?

03:14.987 --> 03:16.864
- கண்டிப்பாக.
- ஆம்.

05:42.551 --> 05:43.844
திரு. கூப்பர்.

05:44.928 --> 05:46.180
திரு. கூப்பர்.

05:47.514 --> 05:48.724
ஆண்ட்ரூ கூப்பர்.

05:49.933 --> 05:50.934
ஆம், நீதிபதி அவர்களே.

05:51.018 --> 05:53.729
உங்கள் வக்கீலுடன் கலந்துரையாட
உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது,

05:53.812 --> 05:55.272
உங்களுக்கு எதிரான குற்றங்கள்
உங்களுக்குப் புரிகிறதா?

05:55.355 --> 05:56.231
ஆம், நீதிபதி அவர்களே.

05:56.315 --> 05:57.816
நீங்கள் குற்றவாளி இல்லை என்ற மனுவைத்
தாக்கல் செய்கிறீர்கள்.

05:57.900 --> 05:59.610
- ஆம், நீதிபதி அவர்களே.
- பதிவுசெய்யப்பட்டது.

05:59.693 --> 06:03.071
வக்கீல்களே, வழக்குத் தேதியை உறுதிசெய்ய,
அருகில் இருக்கும் என் கிளர்க்கைப் பாருங்கள்.

06:03.155 --> 06:05.490
ஜாமீன் தொகை 2,50,000 டாலர்.

06:31.892 --> 06:32.893
இப்போது என்ன நடக்கும்?

06:32.976 --> 06:36.021
நீதிபதி வுட் விசாரணைக்குச் செல்லும் முன், கண்டறிய
தோராயமாக ஒரு மாதம் கொடுப்பார்.

06:36.104 --> 06:38.982
அரசு வக்கீல் சிறிய ஆள்தான். அவர்கள்
நம்மிடம் டீல் பேசக்கூடும்.

06:39.066 --> 06:40.025
எனக்கு டீல் வேண்டாம்.

06:40.108 --> 06:41.068
உன் விருப்பம்.

06:41.151 --> 06:43.237
- நான் அவனைக் கொல்லவில்லை, கேட்.
- நான் கேட்கவேயில்லை.

06:43.320 --> 06:44.947
ஏன் கேட்கவில்லை?

06:47.157 --> 06:48.200
கொஞ்சம் தனியாக விட முடியுமா?

06:53.455 --> 06:55.374
ஏன் கேட்கவில்லை? ஏன்?

06:55.457 --> 06:56.500
ஏனெனில் அது முக்கியமில்லை.

06:56.583 --> 06:58.877
என்னை மாட்ட வைத்துள்ளனர், சரியா?

06:58.961 --> 07:00.963
நான் சொல்கிறேன். நிறைய பேர்
பாலை வெறுத்தனர்.

07:01.046 --> 07:03.799
அது சாமாக இருக்கலாம், நாங்கள் ஒன்றாக இருந்தது
தெரிந்த வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

07:04.299 --> 07:06.552
அதாவது, நான்தான் சரியான பலியாடு.

07:06.635 --> 07:08.053
நிஜ வாழ்க்கையில் கேஸ்களை
அப்படி ஜெயிக்க முடியாது.

07:08.136 --> 07:09.513
- பிறகு எப்படி?
- வழக்கப்படி,

07:09.596 --> 07:11.014
உன் வக்கீலை பிளாக்மெயில் செய்து இல்லை.

07:12.057 --> 07:16.103
அவர்களது நெறிமுறைகள்,
ஆதாரங்களைக் கையாளுதல்,

07:16.186 --> 07:18.689
சாட்சியின் உண்மைத்தன்மை, நிபுணர்களின்
திறமை ஆகியவற்றைத் தாக்கி

07:18.772 --> 07:21.149
கேஸை வலுவிழக்கச் செய்வோம், அதைச் சரியாகச்
செய்தால், நியாயமான சந்தேகத்தை எழுப்பலாம்.

07:21.233 --> 07:22.776
உன்னால் அவை அனைத்தையும் செய்ய முடியுமா?

07:22.860 --> 07:24.653
உன் காரில் இருந்த துப்பாக்கி
கொஞ்சம் சிக்கலானதாக இருக்கும்.

07:24.736 --> 07:26.029
கேட்.

07:26.113 --> 07:27.698
நான் தோற்க மாட்டேன், கூப்.

07:31.326 --> 07:32.661
உன் ஜாமீன் தொகை
செலுத்தப்பட்டுவிட்டது.

07:32.744 --> 07:34.997
வியாழக்கிழமைக்குள் தொடக்கநிலைக்
கண்டறிதல் இருக்கும்.

07:35.080 --> 07:37.624
அதற்குள், கடவுளே,
எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் இரு.

08:02.566 --> 08:04.276
இவற்றுடன் இருக்கும் கார் கிடைக்குமா?

08:20.876 --> 08:21.877
ஆண்டி.

08:28.967 --> 08:30.052
நன்றி, அப்பா.

08:52.157 --> 08:54.493
இந்தா. உனக்குப் பசிக்கும் என நினைத்தேன்.

08:54.576 --> 08:56.495
உனக்காக வான்கோழி சாண்ட்விச் செய்தேன்.

08:58.372 --> 09:01.959
இப்போதெல்லாம் நீ என்ன சாப்பிடுவாய் என தெரியவில்லை,
ஆனால் முன்பு உனக்கு இதுதான் பிடிக்கும்.

09:12.344 --> 09:13.595
இதெல்லாம் சரியாகிவிடும்.

09:14.179 --> 09:15.556
அப்பா, எனக்கு நம்பிக்கையில்லை.

09:20.561 --> 09:23.230
உன்னை வீட்டில் விடுகிறேன்.

09:24.147 --> 09:26.942
நீ குளித்துவிட்டு, தூங்க வேண்டும்.

09:29.152 --> 09:30.237
என்னை மெல் வீட்டில் இறக்கிவிடுங்கள்.

09:45.294 --> 09:46.378
நான் காத்திருக்க வேண்டுமா?

09:46.461 --> 09:47.963
இல்லை. பரவாயில்லை.

09:48.922 --> 09:51.133
ஹேய், ஜாமீனுக்கு எங்கிருந்து
பணம் கிடைத்தது?

09:51.216 --> 09:52.217
என் ஐஆர்ஏ.

09:53.177 --> 09:56.597
அப்பா, உங்களுக்கு அதிக வரிகள் விதிப்பார்கள்.

09:57.306 --> 09:58.515
நடப்பதுதான் நடக்கும்.

10:00.267 --> 10:02.227
சரி. நான் அதைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்.

10:03.061 --> 10:06.815
ஹேய். உனக்கு இதைவிடப் பெரிய பிரச்சினை உள்ளது.

10:34.927 --> 10:35.886
இங்கே என்ன செய்கிறாய்?

10:35.969 --> 10:36.970
இன்று செவ்வாய்க்கிழமை.

10:39.431 --> 10:42.851
கமான், மெல். நான் பிள்ளைகளிடம்
பேச வேண்டும்.

10:43.977 --> 10:45.103
- எதைப் பற்றி?
- எனக்குத் தெரியவில்லை.

10:45.187 --> 10:46.522
பள்ளி எப்படிப் போகிறது என்று கேட்பதற்கு.

10:46.605 --> 10:48.649
அவர்களது அப்பா ஒரு கொலைகாரன் இல்லை
என்பதற்காக.

10:49.399 --> 10:51.318
- கமான், மெல். உனக்கு என்னைத் தெரியுமா?
- கமான்?

10:51.401 --> 10:53.237
நான் இதுபோல எதையும் செய்ய மாட்டேன்
என உனக்குத் தெரியும்.

10:53.320 --> 10:54.488
எனக்கு எதுவும் தெரியாது.

10:56.448 --> 10:58.700
நீ என்ன செய்து வந்தாய் எனத் தெரியாது. யாருடன்
செக்ஸ் வைத்துக்கொள்கிறாய் எனத் தெரியாது.

10:58.784 --> 10:59.952
- ஏன் சில நாட்களுக்கு முன்…
- நிஜமாகவா?

11:00.035 --> 11:03.455
…உன்னை சாகுமளவுக்கு அடித்ததை நானும்
உன் பிள்ளைகளும் பார்த்தோம் எனத் தெரியாது.

11:04.581 --> 11:06.416
எனக்குத் தெரிந்ததெல்லாம் கொலைக்காக உன்னைக்
கைதுசெய்துள்ளனர்.

11:09.419 --> 11:11.421
எனக்கு வேறுவிதமாகத்
தெரியும் வரை,

11:11.505 --> 11:13.090
நீ அவர்கள் அருகில் இருப்பதை
நான் விரும்பவில்லை.

11:13.173 --> 11:14.466
நீ அவர்களை போதுமானளவு கஷ்டப்படுத்திவிட்டாய்.

11:28.564 --> 11:30.357
இது முன்பு என் வீடாக இருந்தது.

11:32.609 --> 11:35.112
இதுதான் என் உலகமாகவே இருந்தது.

11:39.950 --> 11:40.909
அது நிஜமாகவே அற்புதமாக இருந்தது,

11:40.993 --> 11:44.162
ஒரே விஷயம் நம் இதயத்தை பல முறை
நொறுக்க முடியும் என்பது.

11:49.376 --> 11:50.586
ஹலோ?

11:50.669 --> 11:51.753
ஹலோ?

11:53.046 --> 11:54.173
சீக்கிரம் வந்துவிட்டாய்.

11:55.215 --> 11:59.011
இவற்றை குவியலாக்கி வைத்தால்,
கொஞ்சம் சுத்தமாக இருக்கும் என நினைத்தேன்,

11:59.094 --> 12:03.348
பிறகு சில பழைய ரெக்கார்டுகள் கிடைத்தன…
ஆம், இவை அதிகம்தான்.

12:05.309 --> 12:06.310
நீ எப்படி உணர்கிறாய்?

12:06.935 --> 12:08.937
இரவை சிறையில் கழித்தது போல.
நீ எப்படி இருக்கிறாய்?

12:09.980 --> 12:11.398
வழக்கம் போலத்தான்.

12:12.399 --> 12:16.278
சில குப்பைப் பைகளை எடுத்து,
சுத்தம் செய்யத் தொடங்குவோம்.

12:16.778 --> 12:17.779
சரி.

12:18.780 --> 12:21.658
நாம் பேஸ்மென்டிலிருந்து தொடங்க வேண்டும்,
ஏனெனில் போலீஸ் அதை மிகவும் மோசமாக்கிவிட்டனர்.

12:39.676 --> 12:42.804
போலீஸுக்கு இந்தப் பணம் கிடைத்திருந்தால்,
விசாரணையில் கேட்டிருப்பார்கள்.

12:43.931 --> 12:47.309
கொள்ளையடிக்கப்படுவது பற்றிய முரணைப் பற்றி
யோசிக்க எனக்கு நேரம் இல்லை.

12:47.809 --> 12:49.353
எனக்கு என் பணம் வேண்டும்.

12:51.939 --> 12:53.732
ஹேய். அவர் எங்கே?

12:53.815 --> 12:56.360
- அவர் பிசியாக இருக்கிறார். ஹேய்!
- லூ!

12:56.443 --> 12:57.528
அவர் உன்னைப் பார்க்க விரும்பவில்லை.

12:57.611 --> 12:58.862
அதைப் பற்றி நான் கவலைப்படுவது போலத் தெரிகிறதா?

12:59.571 --> 13:00.906
என்ன விளையாடுகிறாயா?

13:00.989 --> 13:01.990
கமான்.

13:02.491 --> 13:04.243
- கமான்! கமான்.
- அப்படியா?

13:04.326 --> 13:05.827
அதை வைத்து என்ன செய்யப் போகிறாய்?

13:05.911 --> 13:07.371
அதைக் கீழே போடு, கூப்.

13:08.580 --> 13:10.999
உள்ளே வா. நாம் மனிதர்கள் போலப் பேசுவோம்.

13:12.251 --> 13:13.252
இந்தா.

13:18.924 --> 13:20.425
ஐந்து நிமிடங்கள்தான் உள்ளது.

13:20.509 --> 13:23.720
- அடுப்பில் இறைச்சி வேகிறது.
- என்னிடம் கொள்ளையடித்தீர்களா?

13:27.266 --> 13:29.017
நான் மக்களிடம் கொள்ளையடிப்பதில்லை.

13:29.643 --> 13:32.688
நான் இங்கே உட்கார்ந்திருப்பேன், உன்னைப் போன்றவர்கள்
எனக்கு பொருட்களைத் தருவார்கள்.

13:32.771 --> 13:34.189
என் பணம் போய்விட்டது.

13:34.273 --> 13:36.942
நீ பண வியாபாரத்தில் இருக்கிறாய்.
இது நடக்கும்.

13:39.069 --> 13:42.322
- கிறிஸ்டியனா?
- கிறிஸ்டியனுக்கானது கிடைத்துவிட்டது.

13:42.406 --> 13:44.533
- நான் இருக்கும் இடத்தை அவனிடம் கூறியுள்ளீர்கள்.
- ஆம். கொடுத்தேன்.

13:45.367 --> 13:47.536
உன்னைக் கொல்ல வேண்டாம் என கூறிய பிறகு.

13:47.619 --> 13:49.121
அதுதான் நடப்பதாக இருந்தது.

13:49.204 --> 13:51.540
எனக்குத் தெரியும் வரை, உனக்கு
பெரிய காயங்கள் படவில்லை.

13:51.623 --> 13:53.625
- என்னை எச்சரித்திருக்கலாம்.
- எச்சரித்தேன்.

13:53.709 --> 13:57.462
ஓவியங்கள் வேண்டாம் என்றேன், ஆனால் நீ
அதைக் கேட்கவில்லை.

13:57.546 --> 13:59.423
இதில் சில விதிகள் உள்ளன.

13:59.506 --> 14:01.091
நீ அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

14:01.175 --> 14:03.343
நீ கிறிஸ்டியனை அவமதித்தாய்.

14:03.427 --> 14:05.012
அவன் பதிலடி கொடுத்தான்.

14:05.095 --> 14:06.722
வினை, எதிர்வினை.

14:06.805 --> 14:08.432
இப்போது அது முடிந்துவிட்டது.
அவன் இப்போது பிசினஸ் செய்வான்,

14:08.515 --> 14:11.268
ஆனால் நான் கேட்ட வரை, உனக்கு
பெரிய பிரச்சினைகள் உள்ளன.

14:12.895 --> 14:16.190
அதுவும் நீ இப்போதுதான் கொஞ்சம் நம்பிக்கை
அளிக்கத் தொடங்கினாய்.

14:19.234 --> 14:20.444
என் இறைச்சி கருகுகிறது.

14:21.028 --> 14:22.487
ஹேய், நான் யாரையும் கொல்லவில்லை.

14:24.448 --> 14:27.075
அது உன்னை இன்னும் பரிதாபமானவனாக மாற்றுகிறது.

14:28.619 --> 14:29.995
இனி இங்கே வராதே.

15:02.236 --> 15:03.278
எப்படி இருக்கிறாய், ஃபெலிக்ஸ்?

15:03.779 --> 15:05.447
எக்வெடார் நம்மை வீழ்த்துகிறது.

15:06.949 --> 15:08.700
சீவோ உனக்குக் கொடுக்க வேண்டியது.

15:17.042 --> 15:18.043
நல்லது.

15:19.962 --> 15:21.797
வீட்டு வேலையில் இவ்வளவு பணம்
கிடைக்கும் எனத் தெரியாது.

15:21.880 --> 15:23.841
வேண்டுமெனில் உன்னையும் சேர்த்துவிடுகிறேன்.

15:27.928 --> 15:28.929
நமக்குள் பிரச்சினையில்லைதானே?

15:30.681 --> 15:31.557
அடுத்த முறை வரைக்கும்.

15:31.640 --> 15:32.474
இல்லை.

15:32.558 --> 15:33.725
அடுத்த முறை இல்லை.

15:33.809 --> 15:35.310
சீவோ உனக்கு இனி வேலை செய்ய மாட்டான்.

15:38.021 --> 15:40.691
நீ எனக்கு பணத்தைக் கொடுத்துவிட்டால்,
அப்படிப் பேசலாம் என நினைக்கிறாயா?

15:41.441 --> 15:42.276
ப்ளீஸ், ஃபெலிக்ஸ்.

15:42.359 --> 15:44.236
நான் உன் டயபர்களை மாற்றியுள்ளேன்.

15:45.487 --> 15:47.948
என்னிடம் பார்த்துப் பேசு.

15:49.950 --> 15:51.660
நான் பார்த்துதான் பேசுகிறேன்.

15:58.041 --> 15:59.751
உன் அம்மாவுக்கு ஹாய் சொல்லிவிடு.

16:05.507 --> 16:07.217
ஹேய். நீ நலமா?

16:09.219 --> 16:15.392
நம் பிரச்சினையால் நம்மைப் பிறர்
பார்ப்பது இப்போதுதான் நின்றிருந்தது.

16:15.475 --> 16:16.476
இப்போது இது.

16:16.560 --> 16:17.603
அவமானப்படாதே.

16:17.686 --> 16:19.229
நீ எதுவும் தவறு செய்யவில்லை.

16:20.731 --> 16:22.691
அவர்களைப் பள்ளிக்கு அனுப்பியிருக்கக் கூடாது
என நினைக்கிறேன்.

16:22.774 --> 16:24.526
நீ அனுப்பவில்லை. அவர்கள் சென்றுள்ளனர்.

16:24.610 --> 16:25.986
இது ஒரு காஃபி ஷாப்.

16:26.486 --> 16:28.280
ஹை ஸ்கூலில் எப்படி இருக்கும்
என கற்பனை செய்து பார்.

16:29.656 --> 16:31.533
அவர்களை வீட்டுக்கு வரும்படி கூறப் போகிறேன்.

16:31.617 --> 16:33.785
அவர்கள் வீட்டுக்கு வர வேண்டுமெனில்,
அவர்களே வருவார்கள்.

16:43.128 --> 16:46.256
இது அதிக நேரம் ஆகிறது.
கமான், நாம் ஃபில் வீட்டுக்குப் போகலாம்.

16:46.340 --> 16:47.591
நாம் நெருங்கிவிட்டோம்.

16:47.674 --> 16:51.094
பிறகு அந்த காஃபிக்கு இன்னொரு பத்து நிமிடங்கள்
ஆகும். வா, போகலாம்.

16:51.178 --> 16:52.596
ஆம், நன்றி.

16:52.679 --> 16:54.473
அவள் இங்கே இருக்கிறாள். ஆம்.

16:55.557 --> 16:56.850
உங்களை பிறகு சந்திக்கிறேன்.

17:00.437 --> 17:01.438
நான்…

17:02.731 --> 17:06.276
இதைப் பற்றி எப்படிப் பேசத் தொடங்குவது
என்று கூடத் தெரியவில்லை.

17:06.359 --> 17:07.944
நான்…
இது சிக்கலானது எனத் தெரியும், ஆனால்…

17:08.028 --> 17:09.070
இது சிக்கலானதா?

17:10.239 --> 17:11.740
- ஆம்.
- நீ கூப்புடன் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளாய்.

17:12.699 --> 17:13.825
நான் நிக்குடன் செக்ஸ் வைத்துக்கொண்டேன்.

17:13.909 --> 17:15.536
ஒருவேளை நீ நிக்குடனும் நான்
வேறொருவருடனும் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்…

17:15.618 --> 17:17.871
- இதில் உனக்கு அதுதான் புரிந்துள்ளதா?
- …ஏனெனில் நாம் அதைத்தான் செய்வோம்.

17:17.954 --> 17:19.705
மெல், கூப் என் கணவரைக் கொன்றுள்ளார்.

17:19.790 --> 17:20.832
அவர் யாரையும் கொல்லவில்லை.

17:20.915 --> 17:22.125
உனக்குத் தெரியாது.

17:22.209 --> 17:23.585
அவர் மிகவும் கடினமான சூழலில் இருந்தார்.

17:25.002 --> 17:27.422
என் முன்னாள் கணவருடன் செக்ஸ் வைத்துக்கொள்வதால்,
அவரைப் பற்றி உனக்கு எல்லாமே தெரியாது.

17:27.506 --> 17:29.550
இதை ஏற்றுக்கொள்வது உனக்குக்
கடினம் எனப் புரிகிறது,

17:29.633 --> 17:30.968
ஆனால் கூப்பும் நானும் மிகவும்
நெருக்கமாக இருந்தோம்.

17:31.051 --> 17:32.386
- அப்படியா?
- ஆம்.

17:32.469 --> 17:36.098
நான் அவனுடன் செக்ஸ் வைத்தேன், எனவே
நீ நினைக்கும் அளவுக்கு நீங்கள் நெருக்கமில்லை.

17:36.181 --> 17:38.559
- மன்னிக்கவும், என்ன?
- நீ இதைக் கேட்கக் கூடாது, நிக்.

17:38.642 --> 17:40.394
அதற்கு என்ன அர்த்தம்?

17:41.353 --> 17:43.230
- எனில் ஏன் என் மீது கோபப்படுகிறாய்?
- நம்ப முடியவில்லை.

17:43.313 --> 17:44.982
என்ன? நீ என்னிடம் பொய் சொல்லியிருக்கிறாய்!

17:45.065 --> 17:46.567
உன்னிடம் கூற பயந்தேன்.

17:46.650 --> 17:48.068
- அதற்கு வித்தியாசம் உள்ளது.
- என்னிடம் கூற பயந்ததற்கு

17:48.151 --> 17:49.820
- காரணம் உள்ளது.
- நாம் வேறெங்காவது பேசலாமா?

17:49.903 --> 17:51.405
என்னிடம் கூற ஏன் பயந்தாய்?

17:51.488 --> 17:53.866
மெல். நான் இன்னும் உன் தோழிதான்.

17:53.949 --> 17:55.993
நீ என் தோழி இல்லை.
நீ வெறுத்த, இறந்துபோன உன் கணவன் மூலம்

17:56.076 --> 17:58.453
முடிந்தளவு அனுதாபத்தைப் பெற முயலும்

17:58.537 --> 18:00.080
பணத்துக்காக எதையும் செய்யும் விதவை நீ.

18:01.081 --> 18:02.082
அடச்சே.

18:03.542 --> 18:04.710
இல்லை, மெல்.

18:04.793 --> 18:07.045
- நாசமாய்ப் போ!
- மெல், நிறுத்து.

18:12.718 --> 18:14.094
- நிக்.
- நாசமாய்ப் போ, மெல்.

18:24.730 --> 18:25.731
கதவு?

18:29.151 --> 18:30.152
நீதான் என்னைக் கூட்டி வந்தாய்.

18:31.653 --> 18:32.654
கூப்பைக் கூப்பிடு.

18:51.465 --> 18:52.716
என்ன? அவர்கள் என்ன பார்க்கின்றனர்?

18:53.759 --> 18:54.760
என்ன? என் அப்பாவுடையதா?

18:57.012 --> 18:59.056
இல்லை. உன் அம்மாவுடையது.

19:01.725 --> 19:03.936
…பணத்துக்காக எதையும் செய்யும்
விதவை நீ.

19:04.019 --> 19:05.229
அடச்சே.

19:06.855 --> 19:08.232
இல்லை, மெல்.

19:08.315 --> 19:09.566
- நாசமாய்ப் போ.
- மெல்.

19:35.008 --> 19:36.009
நீ வீடியோவைப் பார்த்தாயா?

19:36.635 --> 19:37.636
ஆம்.

19:40.514 --> 19:41.890
என் அப்பா ஜாமீனில் வந்துவிட்டார்,

19:42.933 --> 19:45.102
என் அம்மா காஃபி ஷாப்களில் சண்டையிடுகிறார்.

19:46.395 --> 19:48.981
இதில் நல்ல விதமாக, உனக்கு கல்லூரிக்கு
எழுத அருமையான கட்டுரை கிடைத்துள்ளது.

19:52.985 --> 19:54.778
இது ஆறுதலளிக்குமெனில்,

19:55.362 --> 19:58.198
அனைவரது பெற்றோரும் ஏதோவொரு வகையில்
பைத்தியக்காரர்கள்தான்.

20:00.325 --> 20:01.785
ஆனால், நீ அப்படியில்லை.

20:04.204 --> 20:05.205
நீ என்னைச் சந்தித்துள்ளாயா?

20:12.045 --> 20:14.339
மன்னித்துவிடு. நீ என்னை…

20:14.423 --> 20:15.424
முட்டாள்.

20:35.569 --> 20:37.487
ஆலி. என்ன இது?

20:37.571 --> 20:39.698
நான் சுத்தம் செய்யும்போது இது கிடைத்தது.

20:40.699 --> 20:41.700
இது உன்னுடையது.

20:42.618 --> 20:44.286
இதை உன்னிடம் கொடுக்கலாம் என நினைத்தேன்.

20:44.912 --> 20:46.830
இது உன்னிடம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக உள்ளது.

20:47.623 --> 20:48.707
ஆம்.

20:48.790 --> 20:50.250
மேலும் நாம் பேசலாம் என்றும் நினைத்தேன்.

20:51.001 --> 20:53.795
இங்கே முடியாது. எனக்கு கால் செய்.

20:53.879 --> 20:55.380
நான் கால் செய்தேன்.

20:55.964 --> 20:57.007
மெசேஜும் அனுப்பினேன்.

20:58.300 --> 20:59.718
ஆலி, எனக்கு குடும்பம் உள்ளது.

21:00.302 --> 21:01.929
நான் விரும்பும்போதெல்லாம்
என்னால் பேச முடியாது.

21:02.012 --> 21:04.139
நீ என்னை மிகவும் அசௌகரியமான
நிலைக்குத் தள்ளுகிறாய்.

21:06.433 --> 21:07.643
ம்,

21:08.644 --> 21:10.020
உன் ரெக்கார்டு வேண்டுமா?

21:10.521 --> 21:11.480
என்ன?

21:11.563 --> 21:13.607
இல்லை, நீயே வைத்துக்கொள். அது…

21:14.691 --> 21:15.734
நான் உனக்கு கால் செய்கிறேன்.

21:16.527 --> 21:17.819
ஆனால் இனி இங்கே வராதே.

21:44.638 --> 21:47.015
உன்னைக் கடைசியாகக் கொல்வேன் என உறுதியளித்தது
நினைவிருக்கிறதா, சல்லி?

21:47.099 --> 21:48.934
ஆம், மேட்ரிக்ஸ்! நீ உறுதியளித்தாய்!

21:49.017 --> 21:49.977
நான் பொய் கூறினேன்.

21:55.649 --> 21:57.025
இப்போது உன்னிடம் கார் இல்லையா?

22:06.618 --> 22:08.370
ஓ, நிக். நீ இங்கே என்ன செய்கிறாய்?

22:08.996 --> 22:12.332
ஒவ்வொரு முறை என் கஷ்டங்களை பொறுத்துக்கொள்ளும்போதும்
அவர்களில் ஒருவர் என் வாழ்க்கையை நாசமாக்குகின்றனர்.

22:12.833 --> 22:15.294
- அவர்களுக்கு என்ன பிரச்சினை?
- ஆம்.

22:15.377 --> 22:18.589
நாம்தான் பக்குவமடைந்தவர் என்பதை உணரும்போது
அது பயங்கரமாக இருக்கும்.

22:18.672 --> 22:21.049
ஆனால் நான் அப்படி இல்லை.
அதுதான் விஷயமே.

22:21.133 --> 22:23.385
அவர்கள் இப்போதும் எனக்குப் பெற்றோராக
இருக்க விரும்புகிறேன்.

22:24.219 --> 22:27.598
அந்த வேலையைச் செய்ய முடியாதளவுக்கு
அவர்களது டிராமாவில் பிசியாக உள்ளனர்.

22:27.681 --> 22:30.601
அவர் குற்றவாளி என நினைக்கும் அனைவரும்
ஒழிந்து போகட்டும்.

22:31.101 --> 22:33.896
என் அப்பா முட்டாள்தனமானவர்தான்,
ஆனால் அவர் கொலைகாரர் இல்லை. கடவுளே!

22:38.108 --> 22:39.526
- என்ன?
- என்ன?

22:40.319 --> 22:41.820
- என்ன?
- அவர் அதைச் செய்யவில்லை.

22:42.321 --> 22:45.240
நீ அப்படி நினைப்பது இயல்பானதுதான்,

22:45.324 --> 22:46.950
ஆனால் அது உனக்குத் தெரியாது, சரியா?

22:47.034 --> 22:47.951
எனக்கு என் அப்பாவைப் பற்றித் தெரியும்.

22:48.035 --> 22:49.745
அவர் அதைச் செய்திருப்பார் என பிறர்
ஏன் நினைக்கின்றனர்

22:49.828 --> 22:53.165
என நீ புரிந்துகொள்வது முக்கியம்.

22:53.248 --> 22:55.167
அவர் அந்த ஆளுடைய மனைவியுடன்
செக்ஸ் வைத்துள்ளார்.

22:55.250 --> 22:56.960
சரி, என் அப்பாவுடைய செக்ஸ் வாழ்க்கை
பற்றிப் பேசாமல் இருக்கலாமா?

22:57.044 --> 22:59.838
உறுதியான ஆதாரம் இல்லாமல், உன் அப்பா
போன்ற ஒரு பணக்கார வெள்ளையினத்தவரை

22:59.922 --> 23:01.798
- போலீஸ் கைதுசெய்ய மாட்டார்கள்.
- நீ நிஜமாகக் கூறவில்லை.

23:01.882 --> 23:04.593
மேலும், அவர் ஏற்கனவே வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

23:04.676 --> 23:05.844
அவர் வன்முறையானவர் இல்லை.

23:07.513 --> 23:09.139
என்னை என் ஆணுறுப்பில் குத்தினார்.

23:11.683 --> 23:12.684
நீ நம்ப முடியாதவன்.

23:13.685 --> 23:14.686
கமான்.

23:14.770 --> 23:16.522
- ஹேய், அவர் உன் அப்பா.
- வழியை விடு.

23:16.605 --> 23:20.776
நீ அவருக்கு ஆதரவாக இருக்கிறாய், நான்
உனக்கு ஆதரவாக இருக்கிறேன். என்னை நம்பு.

23:20.859 --> 23:22.945
ஆம், ஹை ஸ்கூல் பெண்ணை டேட் செய்யும்
கல்லூரிப் பையனை நம்ப வேண்டும்.

23:23.028 --> 23:25.405
- வழியை விடு.
- டோரி, ரொம்ப டிராமா செய்யாமல்…

23:41.922 --> 23:43.632
- ஹாய். டோரிக்கானதா?
- ஆம்.

24:06.321 --> 24:07.906
ஹேய், நண்பா, குத்தியதற்கு வருந்துகிறேன்.

24:08.407 --> 24:11.535
பரவாயில்லை. நான் இதற்குத் தகுதியானவனாக
இருக்க வாய்ப்புள்ளது.

24:12.411 --> 24:13.412
ஆம்.

24:17.457 --> 24:18.458
திறந்துதான் உள்ளது!

24:23.046 --> 24:24.298
நிக், இங்கே என்ன செய்கிறாய்?

24:25.382 --> 24:27.050
நான் கூப்பை முகத்தில் குத்த வந்தேன்.

24:27.134 --> 24:28.468
நாம் இருவரும்தான்.

24:29.136 --> 24:31.972
இல்லை. பொய். உன் வலிமையான
கைதான் தொங்குகிறதே.

24:32.556 --> 24:34.099
அதை உனக்காக வீணடிக்க மாட்டேன்.

24:37.561 --> 24:39.313
நண்பர்களே, நடப்பதெல்லாம் நடக்கட்டும்,

24:39.396 --> 24:43.192
நாம் வெளியே சென்று போதையாவோம்
என்று பரிந்துரைக்கிறேன்.

25:12.304 --> 25:14.223
ஆம், இன்றிரவு நம்ப முடியாததாக உள்ளது.

25:18.810 --> 25:20.062
நான் போகும் எல்லா இடத்திலும் இது நடக்கிறது.

25:20.812 --> 25:22.981
அவன் ஏன் எப்போதும் நல்ல மனநிலையில்
இருக்கிறான் என யோசிப்பாயா?

25:23.065 --> 25:23.899
அதனால்தான்.

25:24.483 --> 25:26.777
- உங்களுக்குள் பேசி முடித்துவிட்டீர்களா?
- இல்லவே இல்லை.

25:26.860 --> 25:28.946
ஆனால் தற்போது எனக்கு நண்பர்கள்
குறைவாக உள்ளனர்.

25:29.029 --> 25:30.697
அவர்களை காரில் அடிபட அனுமதிக்காதே.

25:36.078 --> 25:39.831
இதைக் கூறியாக வேண்டும், என் வைகோடின்னுடன்
இந்த சரக்கு நன்றாகக் கலக்கிறது.

25:39.915 --> 25:41.625
சரி. மன்னிக்கவும்.

25:41.708 --> 25:42.709
சரி, நண்பர்களே.

25:43.210 --> 25:44.461
- அடடா.
- இதோ.

25:44.545 --> 25:45.671
அவர்கள் வாங்கித் தந்துள்ளனர்.

25:45.754 --> 25:47.214
- நன்றி, பெண்களே.
- ஹலோ, பெண்களே.

25:47.297 --> 25:48.507
ஹலோ. நன்றி.

25:49.174 --> 25:50.801
உயர்த்திப் பிடித்து, கவிழ்த்துக் குடியுங்கள்.

25:50.884 --> 25:52.135
சரி. குடிப்போம்.

25:54.263 --> 25:55.264
ஓ, ஆம்.

25:55.764 --> 25:56.849
அருமை.

25:56.932 --> 25:58.559
ஹேய் பி, கூப்பிடம் அந்த பூல் பற்றிக் கூறினாயா?

25:59.393 --> 26:00.435
இல்லை.

26:00.519 --> 26:02.938
- மன்னிக்கவும், என்ன இது?
- இது அதைவிட மோசமானதாக இருக்கும்.

26:03.021 --> 26:04.731
- கூப் குற்றவாளி பூல் நடக்கிறது.
- வாவ்.

26:04.815 --> 26:07.359
உண்மையில், இப்போது அதைச் சத்தமாகக் கூறும்போது,
இது இன்னும் மோசமானதாகத் தெரிகிறது.

26:07.442 --> 26:09.403
சரி. என்ன நினைக்கின்றனர்?

26:09.486 --> 26:11.822
தெரியவில்லை. நீ என் நண்பன்.
நான் அதில் கலந்துகொள்ளவில்லை.

26:11.905 --> 26:14.408
- பார்னி?
- என்ன? நானும் நிக் போலத்தான்.

26:16.118 --> 26:18.328
- சரி, நீ நிரபராதி என்றேன்.
- அதேதான்.

26:18.412 --> 26:19.955
ஆனாலும் நியாயமான சந்தேகத்துடன்
எதிர்த்துப் பேசினேன்.

26:20.038 --> 26:22.332
- புத்திசாலித்தனம்தான்.
- ஜூல்ஸ் நீ கொலை செய்தாய் என்பதில் சேர்ந்தாள்.

26:22.416 --> 26:24.084
- கடவுளே.
- அவளுக்கு தைரியம்தான்.

26:24.168 --> 26:27.754
- கூப். நான் அதை நம்பவில்லை.
- அடக் கடவுளே.

26:27.838 --> 26:28.797
யார் வந்துள்ளனர் என்று பாருங்கள்.

26:28.881 --> 26:31.175
ஹேய், கூப். உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.

26:31.258 --> 26:32.176
எப்படி இருக்கிறீர்கள்?

26:32.259 --> 26:33.886
கடவுளே. நீங்கள் நிக் பிராண்டஸ்.

26:33.969 --> 26:36.054
- ஆம்.
- டோபியும் ஜோஷும் எனக்கு வேலை செய்தனர்.

26:36.138 --> 26:38.307
நீங்கள் இல்லாமல் அந்த இடமே மோசமான
நிலையில் உள்ளது.

26:38.390 --> 26:39.808
ஓ, கமான். அது உண்மையாக இருக்காது.

26:39.892 --> 26:41.143
இல்லை, நிஜமாகத்தான்.

26:41.226 --> 26:43.312
நீங்கள் என்ன கேள்விப்பட்டீர்கள் எனத் தெரியவில்லை,
ஆனால் அந்த இடமே பற்றி எரிகிறது.

26:43.395 --> 26:44.605
ஸ்விஸ் நபர்கள் வெளியேறுவதாக மிரட்டுகின்றனர்.

26:44.688 --> 26:45.522
- அப்படியா?
- ஆம்.

26:45.606 --> 26:47.524
அதனால் ஜாக் பித்துப் பிடித்து இருக்கிறார்.

26:47.608 --> 26:48.775
நண்பா, இது அற்புதமானது.

26:48.859 --> 26:50.068
கல்லூரியில் உங்கள் எண்ணைத்தான்
அணிந்திருந்தேன்.

26:50.152 --> 26:52.029
- சரி, நீங்கள் விளையாடினீர்களா?
- ஆம், டி3.

26:52.112 --> 26:53.488
நான் மிகவும் வெள்ளை.

26:53.572 --> 26:56.909
ஆனால் நான் உங்கள் கழிவறைகளை இரண்டு
வாங்கினேன். என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

26:57.743 --> 26:58.827
நண்பா.

26:59.870 --> 27:02.372
இங்கே வெயிட்டர் வர முடியுமா?
இவர்களுக்கு நாங்கள் சில பானங்கள்

27:02.456 --> 27:03.457
- வாங்கித் தருகிறோம்.
- நண்பர்களே.

27:03.540 --> 27:04.833
- வந்துகொண்டே இருக்கட்டும்…
- ஹேய்!

27:06.210 --> 27:09.588
உங்கள் ஆர்வத்தை வைத்துப் பார்க்கும்போது,
நீங்கள் கொக்கெய்ன் எடுத்துள்ளீர்களா?

27:14.843 --> 27:16.678
ஆம், அது அருமையான சரக்கு.

27:16.762 --> 27:19.515
அதாவது, அவள் என்னை ஏமாற்றியதை
என்னால் கடந்துவிட முடியும்,

27:19.598 --> 27:23.310
ஆனால் அவள் ஏமாற்றியதற்கு என் மீது கோபமாக
இருப்பது போலத் தெரிகிறது, புரிகிறதா?

27:23.393 --> 27:24.561
ஓ. யா.

27:25.062 --> 27:27.523
ஹேய், அந்தக் கொலைக்
குற்றம் அகற்றப்பட்டுவிட்டதா?

27:28.148 --> 27:29.149
வேலை போய்க்கொண்டிருக்கிறது.

27:29.233 --> 27:31.360
இதோ, எவன், வரி ஏய்ப்புக்காக
ஆறு மாதம் சிறையில் இருந்தான்.

27:31.443 --> 27:33.654
ஒன்பது மாதங்கள், ஆனால் அது மதிப்புடையது.

27:34.154 --> 27:36.823
அது ஆடிஸ்வில்லில்தான், எனவே
அது கோடை முகாம் போலத்தான் இருந்தது.

27:37.324 --> 27:38.534
ஆம், என் டென்னிஸ் திறமையை வைத்து,

27:38.617 --> 27:40.953
சில பெரிய தொடர்புகளுடன் வெளியே வந்தேன்.

27:41.036 --> 27:43.455
அங்கே முக்கியமானவர்கள்தான் இருக்கின்றனர்.
இப்போது அவர்களில் மூவருடன் டீல்கள் செய்கிறேன்.

27:43.539 --> 27:46.416
அடச்சே, ஆம் கூப். நீங்கள்
ஆடிஸ்வில்லுக்குச் செல்ல வேண்டும்.

27:46.500 --> 27:48.669
ஆம். அல்லது நான் விடுவிக்கப்படலாம்.

27:49.670 --> 27:52.005
நீண்ட காலத்தில் இப்போதுதான் சிறப்பாக உணர்கிறேன்.

27:52.756 --> 27:54.675
ஹேய், நண்பா. பொறுமை.

27:54.758 --> 27:56.218
பொறுமையா? இல்லை.

27:56.301 --> 27:59.012
இதில் பொறுமையே இல்லை.

28:01.014 --> 28:02.808
- மீண்டும் வந்துவிட்டேன்.
- சரி.

28:02.891 --> 28:06.144
சோய் பாய் வந்துவிட்டான்,
சோய் பாய் வந்துவிட்டான்,

28:06.228 --> 28:08.355
சோய் பாய் மீண்டும் வந்துவிட்டான்.

28:08.438 --> 28:09.773
சோய் பாய் வந்துவிட்டான்…

28:11.358 --> 28:12.442
அடச்சே, பார்னி.

28:12.943 --> 28:14.278
நண்பா?

30:24.157 --> 30:25.993
இந்தக் கொலை விஷயம்.

30:28.287 --> 30:30.831
- ஆம்?
- இதைக் கூறியாக வேண்டும், இதை எதிர்பார்க்கவில்லை.

30:33.166 --> 30:35.752
நீ இதிலிருந்து விடுபடுவாய்
என நினைக்கிறாயா?

30:42.301 --> 30:43.343
பார்னி.

30:44.887 --> 30:47.514
நாம் நள்ளிரவில் போதையில்
கோல்ஃப் கோர்ஸில் இருக்கிறோம்,

30:47.598 --> 30:51.727
நீ உண்மையாகக் கேட்க விரும்புவதைக்
கேட்டுவிடு.

30:51.810 --> 30:53.812
ஏனெனில் நான் அதைக் கேட்க விரும்பவில்லை.

30:55.147 --> 30:57.232
இதுதான் அந்த பயமுறுத்தும் விஷயம்.

30:59.318 --> 31:00.986
நான் அக்கறைப்படுகிறேனா
என்று தெரியவில்லை.

31:04.531 --> 31:06.658
- நீ அதைச் செய்திருந்தால்…
- சரி, நான் கொல்லவில்லை.

31:06.742 --> 31:08.952
சரி.
சரி, அது நல்லது.

31:09.036 --> 31:11.038
நல்லது.

31:12.873 --> 31:16.043
ஆனால், நினைவிருக்கட்டும், நான் கேட்கவில்லை.

31:23.300 --> 31:24.468
நீ பயப்படுகிறாயா?

31:25.928 --> 31:29.389
அது முட்டாள்தனமான கேள்வி, மன்னித்துவிடு.

31:33.727 --> 31:34.895
வீட்டுச் சீரமைப்பு எப்படிப் போகிறது?

31:36.522 --> 31:38.941
அன்று இரவு அதைக் கிட்டத்தட்ட
எரித்திருப்பேன்.

31:39.024 --> 31:41.443
நீ அதற்காக பிரச்சினையில் இருக்கிறாயா?
என்ன?

31:42.903 --> 31:44.321
உண்மையில் என்னால் சொல்ல முடியவில்லை.

31:45.030 --> 31:47.407
நாங்கள் ஒருபோதும் பயன்படுத்தாத
அறைகள் இந்த வீட்டில் உள்ளன.

31:47.491 --> 31:48.700
இப்போது இன்னும் அதிகமாகக் கட்டுகிறோம்.

31:51.119 --> 31:52.496
கிரேஸ்
அதிகமாக செலவு செய்கிறார்.

31:53.789 --> 31:56.333
நான் அதிகமாக செலவு செய்கிறேன். இந்தக் கட்டத்தில்
அது உடலின் இயக்கம் போல ஆகிவிட்டது.

31:56.416 --> 31:59.628
நாங்கள் சாப்பிடுகிறோம், குடிக்கிறோம்,
இதையெல்லாம் வாங்குகிறோம்.

32:00.671 --> 32:02.005
பிறகு வாங்கிய பொருட்களைப் பற்றிப் பேசுவோம்,

32:02.089 --> 32:04.466
பிறகு வாங்க வேண்டிய பொருட்கள் பற்றிப்
பேசுவோம்,

32:04.550 --> 32:05.884
பிறகு அதை வாங்குவோம்.

32:10.848 --> 32:12.599
சில நேரம் நான் வீட்டுக்குள் சுற்றி வந்து…

32:13.141 --> 32:18.564
எங்களிடம் இருக்கும் அதிகப்படியான பொருட்களைப்
பார்க்கும்போது, அது என்னைக் குழப்புகிறது.

32:19.273 --> 32:22.484
அதாவது, நாங்கள் எப்போது இந்த நபர்களானோம்,
எப்போது…

32:22.568 --> 32:26.530
எங்கள் வாழ்க்கை
எப்போது இந்தப் பொருட்களால்…

32:29.116 --> 32:32.202
தொடர்ந்து நிரப்ப வேண்டிய அளவுக்கு
இவ்வளவு வெறுமையானது என்று.

32:38.500 --> 32:40.002
எனக்கு என்னவானது என்று தெரியவில்லை.

32:40.085 --> 32:41.461
நம் யாருக்கும் தெரியவில்லை, நண்பா.

32:46.466 --> 32:49.011
உனக்கு ஏதோ நடக்கிறது.
அது என்னவென்று என்னிடம் சொல்ல வேண்டியதில்லை.

32:51.930 --> 32:56.268
ஆனால் எனக்குத் தெரியும்
என்று உனக்குத் தெரிய வேண்டும்.

32:58.478 --> 33:00.022
என்ன தெரியுமென்று தெரியாது.

33:03.442 --> 33:04.526
ஆனால் எனக்குத் தெரியும்.

33:05.777 --> 33:07.404
எனக்கு ஏதோ ஆகிவிட்டது, நண்பா.

33:07.946 --> 33:10.407
என்னால் விளக்க முடியுமா என்று கூட
தெரியவில்லை. அது…

33:10.490 --> 33:13.702
எனக்கு வேலை போனதும்,
நிலைமையே மாறிவிட்டதும்.

33:13.785 --> 33:19.750
எனக்குத் தெரியும் என நினைத்த, திடமானது,
நிரந்தரமானது எல்லாம்…

33:20.334 --> 33:22.044
தெரியவில்லை.

33:23.170 --> 33:24.171
தெரியவில்லை.

33:25.005 --> 33:26.632
எல்லா விதிகளையும் பற்றி தவறாக
நினைத்துக்கொண்டிருந்தேன்.

33:28.008 --> 33:29.426
ஆனால் எந்த விதியும் இல்லை.

33:35.432 --> 33:37.309
நான் பிறரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து,

33:37.392 --> 33:38.519
அவர்களிடம் பொருட்களைத் திருடி வந்தேன்.

34:02.084 --> 34:04.253
ஓ, அடச்சே. என் கார்.

34:04.753 --> 34:05.754
அது எங்கே?

34:06.421 --> 34:07.589
அது பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.

34:07.673 --> 34:09.591
இன்று கேட்டைப் பார்க்க நகரத்திற்குச் செல்ல வேண்டும்.

34:09.675 --> 34:12.511
அருமை. என்னை இறக்கி விட்டதும்
வாலியை உனக்கு அனுப்புகிறேன்.

34:14.096 --> 34:15.097
நிச்சயமாகவா?

34:15.179 --> 34:16.431
வாலி, இன்று வேலை செய்வது
உனக்குப் பிரச்சினையில்லையே?

34:17.014 --> 34:18.891
- ஆம், கண்டிப்பாக, நிக்.
- பிரச்சினை முடிந்தது.

34:18.976 --> 34:20.018
கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்.

34:20.518 --> 34:21.645
சரி, நண்பர்களே.

34:24.022 --> 34:27.400
நன்றி. நேற்றிரவு அற்புதமாக இருந்தது.

34:27.484 --> 34:29.570
ஆம். இதை இனி செய்ய வேண்டாம்.

34:56.096 --> 34:57.431
ஹன்டருக்கு நான்கு வயது இருக்கும்போது,

34:57.514 --> 34:59.808
அவன் நள்ளிரவில் நான்கு வயது சிறுவனின்
கனவில் என்ன பேய் வருமோ

34:59.892 --> 35:02.060
அதை நினைத்து பயந்துகொண்டு

35:02.144 --> 35:03.187
எங்கள் படுக்கையறைக்குள் ஓடி வருவான்.

35:04.521 --> 35:07.441
அவனை என்னுடன் படுக்க வைப்பேன்,
என் கைகளிலேயே தூங்கிவிடுவான்.

35:09.443 --> 35:11.403
அவனைப் பாதுகாப்பாக உணர வைக்க
அவ்வளவுதான் தேவைப்பட்டது.

35:12.613 --> 35:14.114
அவர்கள் வளரும்போது அவர்களை பயமுறுத்தக்கூடிய

35:14.198 --> 35:16.241
அல்லது காயப்படுத்தக்கூடியவற்றிலிருந்து

35:16.325 --> 35:17.451
அவர்களைப் பாதுகாப்பது கடினமாகிறது.

35:19.036 --> 35:20.329
ஆனால் நாம் முயல்வதை நிறுத்தக் கூடாது.

35:21.288 --> 35:24.583
பிறகு அவர்களைக் காயப்படுத்துவது
நாம்தான் என்று ஒருநாள் உணர்வோம்.

35:25.792 --> 35:26.960
உங்களுக்கு என்னவானது?

35:31.340 --> 35:32.382
அது ஒரு பெரிய கதை.

35:34.218 --> 35:35.844
நான்…

35:36.470 --> 35:38.138
நேற்று உன்னைப் பார்க்க வந்தேன்.

35:38.222 --> 35:39.348
அம்மா கூறினார்.

35:39.431 --> 35:40.641
அவள் கனிவானவள்தான்.

35:41.225 --> 35:43.018
உங்களை உள்ளே அனுமதித்திருந்தால்
இன்னும் கனிவாக இருந்திருக்கும்.

35:43.101 --> 35:44.394
அவள்…

35:46.396 --> 35:49.233
அவளுக்கு சிறந்தது என்று தோன்றுவதைச்
செய்கிறாள், சரியா?

35:52.486 --> 35:54.446
ஆனால் ஹேய், நண்பா.

35:54.530 --> 35:55.906
உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

35:56.490 --> 35:58.283
இந்த முட்டாள்தனங்கள் அனைத்திற்கும்.

35:58.367 --> 36:02.704
முதலில் விவாகரத்து, இப்போது இது.

36:03.747 --> 36:05.916
இது எதுவும் நடக்க நான் விரும்பவில்லை.

36:05.999 --> 36:07.793
ஆனால் அது உனக்கு எதையும்
எளிதாக்காது எனத் தெரியும்,

36:07.876 --> 36:11.421
எனவே நான் மன்னிப்பு கேட்கிறேன்.

36:11.505 --> 36:14.967
அப்பா. நீங்கள் சிறைக்குச் செல்கிறீர்களா?

36:16.802 --> 36:18.220
சரி, ஹன்டர்.

36:19.513 --> 36:20.514
இது முக்கியமானது.

36:20.597 --> 36:23.392
என்ன நடந்தாலும் நீ இதைக் கேட்க வேண்டும், சரியா?

36:24.101 --> 36:28.689
நான் பாலைக் கொல்லவில்லை.
அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

36:28.772 --> 36:29.690
நீங்கள் கொல்லவில்லை எனத் தெரியும்.

36:30.858 --> 36:32.568
அதனால்தான் அதைக் கூற இங்கே வந்தேன்.

36:34.152 --> 36:35.404
அதைப் பாராட்டுகிறேன்.

36:38.657 --> 36:42.536
நான் செய்யாத விஷயத்திற்காக
நான் சிறைக்குச் செல்ல மாட்டேன்.

36:43.161 --> 36:44.162
சரியா?

36:44.705 --> 36:47.499
இன்று கேட் ரெஸ்னிக்குடன் எனக்கு
சந்திப்பு இருக்கிறது,

36:47.583 --> 36:49.960
அவர்தான் இந்த வேலையில் சிறந்தவர்.

36:51.920 --> 36:54.464
நாங்கள் இதைச் சரிசெய்வோம். சரியா?

36:56.884 --> 36:59.803
நீங்கள் முதலில் குளிக்க வேண்டும்.

37:00.721 --> 37:02.890
- நாறுகிறது.
- நன்றி. நல்ல கருத்து.

37:05.309 --> 37:06.310
வேறெதுவும் உள்ளதா?

37:08.395 --> 37:09.855
எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்.

37:35.255 --> 37:37.633
- குட் மார்னிங்.
- அடச்சே.

37:42.012 --> 37:43.013
மோசமான இரவா?

37:54.107 --> 37:56.693
அந்த காஃபிக்கு உனக்கு ஆயிரம் டாலர் கொடுப்பேன்.

38:01.740 --> 38:03.408
அடச்சே, கிரேஸ்.

38:03.992 --> 38:05.827
நீங்கள் மருத்துவமனையில் மோசமாக
இருந்ததாக நினைத்தேன்.

38:17.464 --> 38:18.799
சரி, நீ என்ன சொல்லப் போகிறாய் எனத் தெரியும்.

38:18.882 --> 38:20.676
எனில் அதைக் கூறுவது மதிப்பில்லை.

38:20.759 --> 38:23.011
அவன் என் உற்ற நண்பன், கிரேஸ்.

38:28.016 --> 38:29.935
உங்கள் உற்ற நண்பர் கொலைக்காக
சிறைக்குச் செல்லலாம்

38:30.018 --> 38:34.022
என்பதை நீங்கள் உணர வேண்டும்
என நினைக்கிறேன்.

38:34.106 --> 38:35.107
அவன் அதைச் செய்யவில்லை.

38:35.190 --> 38:36.775
- உங்களுக்குத் தெரியுமா?
- உனக்குத் தெரியாதா?

38:39.653 --> 38:41.113
உங்களுக்கு எல்லாமே தெரியாது, பார்னி.

38:41.613 --> 38:43.031
எனக்கு போதுமானது தெரியும்.

38:48.495 --> 38:49.746
உனக்கும் தெரியும்.

38:54.918 --> 38:56.587
எனக்கு உங்களைப் பற்றி கூட போதுமானளவு
தெரியாது.

38:57.254 --> 38:58.589
அதற்கு என்ன அர்த்தம்?

39:07.931 --> 39:09.516
உங்கள் ஸ்வெட்டர் டிராயரில் கிடைத்தது.

39:11.852 --> 39:14.062
இதற்கும் கூப்புக்கும் சம்பந்தம் இல்லை
என்று சொல்லுங்கள்.

39:24.781 --> 39:25.908
நீங்களும் நானும், பார்னி, சரியா?

39:29.203 --> 39:32.789
யாரையும் விட நாம்தான் முக்கியம்.

39:34.666 --> 39:35.751
நீயும் நானும்.

39:45.594 --> 39:47.012
குடியுங்கள்.

39:55.020 --> 39:56.188
குளிக்க ஏற்பாடு செய்கிறேன்.

40:01.610 --> 40:02.736
- மார்னிங்.
- மார்னிங், மெல்.

40:06.573 --> 40:08.242
- ஹாய்.
- எப்படி இருக்கிறாய், மெல்?

40:09.201 --> 40:10.202
சரி.

40:10.702 --> 40:11.954
நாம் பேசலாம் என நினைத்தேன்.

40:12.454 --> 40:14.790
எனக்கு 11 மணிக்கு அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறது.

40:15.290 --> 40:17.125
அது ரத்துசெய்யப்பட்டுவிட்டது.

40:18.961 --> 40:20.671
உங்களின் பல பேஷன்டுகள்
ரத்துசெய்துவிட்டனர்.

40:24.716 --> 40:25.717
எத்தனை பேர்?

40:30.097 --> 40:31.348
கூப் விஷயத்தாலா?

40:31.431 --> 40:33.892
இல்லை. கூப் விஷயத்தால் இல்லை.

40:35.727 --> 40:37.813
…பணத்துக்காக எதையும் செய்யும் விதவை நீ.

40:37.896 --> 40:39.147
அடச்சே.

40:40.816 --> 40:42.985
- இல்லை, மெல். கமான்.
- நாசமாய்ப் போ!

40:43.694 --> 40:45.320
கடவுளே. சரி. ஆம்.

40:45.404 --> 40:47.698
நீயும் உன் குடும்பத்தினரும் இருக்கும்
மன அழுத்தம் பற்றி

40:47.781 --> 40:49.783
- என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
- நான் நலம்தான், டெப்.

40:49.867 --> 40:50.826
எனக்கு அப்படித் தோன்றவில்லை.

40:52.077 --> 40:53.161
நான் கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கிறேன்,

40:53.245 --> 40:54.580
- ஆனால் நான் நலமாக…
- நீ அந்தப் பெண்ணை அடித்துள்ளாய்.

40:54.663 --> 40:55.664
அவள்தான் முதலில் அடித்தாள்!

40:55.747 --> 40:59.126
வ்வோ. நம் பேஷன்டுகளின் பெற்றோரிடம்
நான் அதைத்தான் கூற வேண்டுமா?

40:59.209 --> 41:01.879
”அவள் தொடங்கியதால்” எல்லாம்
நலம்தான் என்றா?

41:01.962 --> 41:03.255
அது தற்காப்பு.

41:03.338 --> 41:04.715
அது அறிவாற்றல் சார்ந்த தாக்குதல்.

41:04.798 --> 41:05.966
- சரி, அதைச் செய்யாதீர்கள்.
- எதை?

41:06.049 --> 41:07.467
எனக்கு தெரபி கொடுக்காதீர்கள்.

41:08.677 --> 41:10.220
நான் உன்னுடன் பேச முயல்கிறேன்.

41:10.304 --> 41:11.305
கமான், டெப்.

41:12.347 --> 41:16.226
உங்கள் வாழ்க்கையில் ஒருவரை அடிக்க
விரும்பியதே இல்லையா?

41:16.310 --> 41:18.061
கண்டிப்பாக விரும்பியிருக்கிறேன்.
ஆனால் நான் அடித்ததில்லை.

41:18.145 --> 41:19.271
நீங்கள் அடித்திருக்க வேண்டும்.

41:19.354 --> 41:23.025
ஏனெனில் நான் சொல்கிறேன், அது விரும்புவதைவிட
மிகவும் பெரிய தெரபியாக இருக்கும்.

41:23.817 --> 41:25.652
உண்மையில், சுய ஒத்திசைவின் தருணம்.

41:25.736 --> 41:27.988
அதைத்தானே நாம் விதைக்க முயல்கிறோம்?
நம் பேஷன்டுகளுக்குள்?

41:28.071 --> 41:30.532
- மெல்.
- அவள் என் கணவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டாள்.

41:30.616 --> 41:31.700
அவரை கொலைகாரன் என்றாள்.

41:31.783 --> 41:33.035
உன் முன்னாள் கணவர்.

41:33.118 --> 41:34.119
என்ன?

41:34.203 --> 41:36.371
என்னவோ?

41:36.455 --> 41:39.124
மெல், இப்போது உனக்கு உதவி தேவை.

41:39.958 --> 41:40.959
இல்லை.

41:43.003 --> 41:44.004
உனக்கு நீண்ட விடுப்பு தருகிறேன்.

41:48.509 --> 41:49.510
நான் வருந்துகிறேன்.

41:52.888 --> 41:53.889
என்ன, இப்போதேவா?

42:04.316 --> 42:05.609
“நான் தோற்க மாட்டேன்”
என்று கூறியது என்னவானது?

42:05.692 --> 42:07.194
சில நேரம் குற்றத்தை ஒப்புக்கொள்வது
வெற்றிதான்.

42:07.277 --> 42:08.737
நான் செய்யாதபோது அது வெற்றியில்லை.

42:09.321 --> 42:12.115
கமான், கேட். இது நான் உன்னைக்
கட்டாயப்படுத்துவது பற்றியது எனில்…

42:12.199 --> 42:13.951
நீ என்னைக் கட்டாயப்படுத்தவில்லை,
என்னை பிளாக்மெயில் செய்கிறாய்.

42:14.535 --> 42:18.830
இல்லை, நீ எவ்வளவு மோசமானவன் என்றாலும்,
நான் எவ்வளவு ஒழுக்கக்கேடானவள் என்றாலும்,

42:18.914 --> 42:21.959
நாம் நம் பிள்ளைகளை ஒன்றாக வளர்த்துள்ளோம்,
நீ பாலைக் கொன்றதாக நான் நினைக்கவில்லை.

42:22.543 --> 42:24.837
ஆனால் உனக்கான விருப்பங்களை
நான் கூறியாக வேண்டும்.

42:25.420 --> 42:27.297
- நான் கண்டறிதலைக் கடந்துவிட்டேன்.
- சரி?

42:27.381 --> 42:30.717
உன் வக்கீலாக, நீ குற்றத்தை ஒப்புக்கொள்வதை
நாம் பரிசீலிக்க வேண்டும்.

42:31.844 --> 42:34.638
சம்பவ இடத்தில் உன் டிஎன்ஏ இருந்ததை
இரண்டு லேப்கள் உறுதிசெய்துள்ளன.

42:34.721 --> 42:36.014
உன் கார் டிக்கியில் கொலை செய்த
ஆயுதம் இருந்துள்ளது.

42:36.807 --> 42:39.810
இதில் எதையாவது விளக்குவதற்கு
என்னிடம் கூற எதுவும் உள்ளதா?

42:42.312 --> 42:43.897
சாமுடனான உன் உறவு பற்றி
பொய் சொல்லியிருக்கிறாய்.

42:43.981 --> 42:45.858
- அவளும்தான் பொய் சொல்லியிருக்கிறாள்.
- அவள் பாஸ்டனில் இருந்தாள்.

42:45.941 --> 42:47.150
அது ஹென்ரியின் பிறந்தநாள்.

42:47.234 --> 42:48.694
- என்ன?
- ஒன்றுமில்லை.

42:48.777 --> 42:49.611
கூப்.

42:50.654 --> 42:53.323
நாம் ஒப்புக்கொண்டால், ஹன்டர் கல்லூரியை முடிக்கும்
முன் நீ வெளியே வந்துவிடலாம்.

42:53.407 --> 42:54.449
விளையாடுகிறாயா?

42:54.533 --> 42:55.742
நான் உனக்கு உதவ முயல்கிறேன்.

42:55.826 --> 42:57.119
என்னை சிறையில் தள்ளுவதன் மூலமா?

42:58.078 --> 42:59.788
கமான், கேட், என்னை இந்த
நிலைக்குத் தள்ளாதே.

42:59.872 --> 43:01.331
நீதான் அதைச் செய்துகொண்டாய்.

43:09.548 --> 43:13.802
கூப். நான் தினமும் இதுபோன்ற
பேச்சுவார்த்தைகளை நடத்துகிறேன்,

43:14.303 --> 43:15.429
நான் உன்னிடம் கூறியாக வேண்டும்,

43:16.013 --> 43:18.724
நீ உண்மையானவன் என்று ஜூரி
நபர்கள் நம்ப மாட்டார்கள்.

43:19.224 --> 43:21.476
- ஏன்?
- ஏனெனில் நீ உண்மையைக் கூறவில்லை.

43:21.560 --> 43:23.020
- எதைப் பற்றி?
- அனைத்தையும் பற்றித்தான்.

43:23.103 --> 43:24.813
நீ அந்த நைட்கிளப்பில் தனியாக
இருந்தாய் என நம்பவில்லை,

43:24.897 --> 43:27.649
அதன்பிறகு உன் தங்கையுடன் இருந்ததை
நம்பவில்லை,

43:27.733 --> 43:31.361
நீ சாமுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதால்தான் உன்
ரத்தம் அந்தத் தரையில் உள்ளது என்று நம்பவில்லை.

43:32.279 --> 43:34.323
நீ என்னிடம் கூறாதது எதுவாக இருந்தாலும்,

43:34.406 --> 43:36.491
இது அதைச் சொல்வதற்கான சரியான நேரம்.

43:41.538 --> 43:43.248
- அது சிக்கலானது.
- ஆம்.

43:43.832 --> 43:46.126
ஏனெனில் நான் மிகவும் சுலபமான
கொலை கேஸ்களை மட்டும்தான் கையாளுகிறேன்.

43:48.003 --> 43:49.296
துப்பாக்கி எப்படி உன் காரில் வந்தது?

43:49.379 --> 43:51.131
- தெரியவில்லை.
- பொய், கூப்.

43:51.798 --> 43:53.091
ஏதாவது சொல்.

43:57.095 --> 43:58.138
நான் அவனைக் கொல்லவில்லை என்றேன்.

43:58.222 --> 43:59.598
அது முக்கியமில்லை என்றேன்.

44:03.101 --> 44:04.394
அடச்சே.

44:28.544 --> 44:30.337
நன்றி, நண்பா. சரி.

44:37.177 --> 44:38.220
ஹேய்.

44:39.096 --> 44:40.514
- அது நிக்கின் காரா?
- ஆம்.

44:40.597 --> 44:45.477
என் கார் எனக்கு எதிரான ஆதாரமாகப் பயன்படுத்தப்பட
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

44:47.896 --> 44:51.358
ஹேய், இது ஹன்டர் இங்கே பேச வந்தது பற்றியது
என்றால், நான் அவனிடம் கூறவில்லை…

44:51.441 --> 44:53.861
இரு, ஹன்டர் பேச வந்தானா?

44:55.404 --> 44:56.446
இல்லை.

44:59.074 --> 45:00.951
அவனிடமிருந்து என்னால் இரண்டு
வார்த்தைகள் கூட வாங்க முடியவில்லை.

45:02.077 --> 45:06.498
ஆம். என்ன சொல்வது.
அது என் கிஃப்ட்.

45:18.427 --> 45:19.928
இன்று எனக்கு வேலை போய்விட்டது.

45:21.972 --> 45:23.140
அடச்சே. என்னாலா?

45:24.016 --> 45:27.895
என்னால் சுயமாக என் வேலை
போகுமளவுக்குச் செய்துகொள்ள முடியும்.

45:29.313 --> 45:30.480
நான்…

45:32.316 --> 45:33.984
நான் சாமுடன் சண்டை போட்டேன்.

45:35.444 --> 45:36.862
விவாதம் போலவா?

45:37.988 --> 45:39.239
ஆம், அது போலத்தான்.

45:39.323 --> 45:40.657
பிறகு அவளது முகத்தில் குத்தினேன்.

45:44.703 --> 45:45.829
ஆம், தெரியும். நான் வீடியோவைப் பார்த்தேன்.

45:45.913 --> 45:47.497
எனில் ஏன் அதைக் கேட்டாய்?

45:47.581 --> 45:50.459
ஏனெனில் நீ அதைக் கூற
வேண்டும் என விரும்பினேன்.

45:51.043 --> 45:52.044
என் பெருமையைக் காப்பாற்றினாயா?

45:53.253 --> 45:54.588
உன்னை கொலைகாரன் என்றாள்.

45:55.631 --> 45:58.175
ஆம். இங்கே நாம் இருவருமே நம் முகங்களைக்
காட்ட முடியாத நிலைக்கு

45:58.258 --> 45:59.092
நாம் தள்ளப்படுகிறோமா?

46:05.849 --> 46:06.850
நீ அப்படியில்லைதானே?

46:07.434 --> 46:08.435
கொலைகாரனா?

46:09.645 --> 46:11.271
இல்லை.

46:12.189 --> 46:13.190
கேட்டதற்கு வருந்துகிறேன்.

46:14.024 --> 46:15.025
கேட்டதில் மகிழ்ச்சி.

46:16.777 --> 46:18.320
கேட் என்ன கூறினாள்,
இதில் வெல்ல முடியுமா?

46:18.403 --> 46:22.115
அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கூறினாள்,
“நாசமாய்ப் போ” என்று கூறிவிட்டேன்.

46:22.199 --> 46:23.283
நல்லது.

46:27.663 --> 46:30.624
இது எப்படி நம் வாழ்க்கையானது?

46:44.388 --> 46:46.932
நாம் ஒரே தருணத்தில் நம் வாழ்க்கையை
அழித்துக்கொள்வது என்பது அரிதானது.

46:49.893 --> 46:53.188
அது வழக்கமாக, காலப்போக்கில்
தொடர் தருணங்களாக இருக்கும்.

46:55.983 --> 46:58.151
நிஜம் இறுதியாக என் மீது விழும்போது,
அது எல்லாமே என் டிசைன் போல

46:58.235 --> 47:00.237
அந்தத் தருணங்கள் எல்லாம் கச்சிதமாக

47:00.320 --> 47:02.614
வரிசைப்படுத்தப்பட்டிருப்பதை
என்னால் பார்க்க முடிந்தது.

47:26.972 --> 47:29.391
”இது எப்படி எனக்கு நடந்தது?”
என்பது கேள்வியில்லை.

47:29.975 --> 47:32.769
நிஜமான கேள்வி என்னவெனில்,
“இதை எப்படி நான் எதிர்பார்க்கவில்லை?”

48:40.921 --> 48:42.923
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
