WEBVTT

00:18.101 --> 00:20.811
வைரங்களுக்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லை.
நமக்கு இது தெரியும்.

00:20.812 --> 00:23.022
ஆனாலும், வான் கிளீஃப் & ஆர்பெல்ஸ்
ஸ்னோஃபிளேக் சோக்கர்

00:23.023 --> 00:26.442
கிட்டத்தட்ட ரோல்ஸ் ராய்ஸின் விலைக்கு
விற்கப்படுகிறது.

00:26.443 --> 00:27.902
ஏன் வைரங்கள் இவ்வளவு அதிக விலையில் உள்ளன?

00:27.903 --> 00:30.863
அது ஷெர்மன் சட்டத்தை மதிக்காத,
நவீன வரலாற்றிலேயே

00:30.864 --> 00:32.990
மிகவும் வெற்றிகரமான கார்ட்டெல் மற்றும்

00:32.991 --> 00:34.534
அழுத்தப்பட்ட கார்பனை நிரந்தரக் காதலுடன்

00:34.535 --> 00:37.245
இணைத்த 80 ஆண்டு பழமையான மார்கெட்டிங்
பிரச்சாரத்தின் விளைவாகும்.

00:37.246 --> 00:39.455
அவர்கள் வைரம் நிரந்தரமானது என்கின்றனர்.

00:39.456 --> 00:43.418
ஆனால் நிரந்தரம் என்பது முன்பு இருந்ததைப் போல
இல்லை என்பதை, சமீபத்திய நிகழ்வுகள் காட்டியுள்ளன.

01:36.597 --> 01:38.140
நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?

01:38.765 --> 01:40.809
- நாங்கள் இங்கேதான் வசிக்கிறோம்.
- காலை உணவுக்கு வருகிறாயா, கூப்?

01:41.393 --> 01:42.477
நீங்கள் இங்கே வசிக்கவில்லை.

01:45.814 --> 01:47.316
நீயும்தான்.

01:57.784 --> 01:59.077
பேச்சுவார்த்தை செய்பவன்.

02:03.624 --> 02:05.209
சிரப்பை எடுத்துக்கொடு.

02:06.710 --> 02:07.835
- சிரப்.
- சிரப்.

02:07.836 --> 02:09.295
நாசமாய்ப் போங்கள்.

02:13.967 --> 02:16.053
நீ பகிர்ந்துகொள்வதில் மேம்பட வேண்டும்.

02:16.637 --> 02:17.845
இங்கிருந்து வெளியே போ.

02:17.846 --> 02:20.389
அமைதி, கூப். நாம் அனைவருமே குடும்பம்தான்.

02:20.390 --> 02:21.599
உன்னைக் கொன்றுவிடுவேன்.

02:21.600 --> 02:23.310
உன்னால் என்னைக் கொல்ல முடியாது, கூப்.

02:25.771 --> 02:27.272
ஏனெனில் நீ ஏற்கனவே இறந்துவிட்டாய்.

02:35.280 --> 02:37.574
ஹேய். விழித்துவிட்டான்.

02:39.743 --> 02:40.744
ஹாய், அப்பா.

02:41.578 --> 02:42.620
ஹேய், செல்லம்.

02:42.621 --> 02:44.206
எப்படி இருக்கிறாய்?

02:45.165 --> 02:46.707
மிகவும் அருமை.

02:46.708 --> 02:50.211
ஏனெனில் மருத்துவர்கள் உனக்கு அவ்வளவு
மார்ஃபின்கள் கொடுத்துள்ளனர்.

02:50.212 --> 02:54.090
- கண்ணே.
- என்ன? நான் பார்த்தேன். அது அதிகம்தான்.

02:54.091 --> 02:55.550
உனக்கு எதுவும் வேண்டுமா?

02:55.551 --> 02:57.261
தண்ணீர். தண்ணீர் கொடுங்கள்.

03:01.390 --> 03:03.307
டாக்டர் உங்களைப் பார்க்க வந்தார்,

03:03.308 --> 03:05.477
- ஆனால் உங்களை எழுப்ப விரும்பவில்லை.
- நன்றி, மகனே.

03:06.061 --> 03:07.436
எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தேன்?

03:07.437 --> 03:08.771
பன்னிரெண்டு மணிநேரம்.

03:08.772 --> 03:11.358
கடவுளே. நான் அடிக்கடி இப்படி
அடிவாங்க வேண்டும்.

03:12.192 --> 03:14.485
அங்கே டொரிடோஸ் இல்லை,
ஆனால் நான்...

03:14.486 --> 03:17.154
ஓ, கடவுளே. ஹேய், திரு. கூப்பர்.

03:17.155 --> 03:18.573
நீ இவனைக் கழட்டிவிட்டதாக நினைத்தேன்.

03:18.574 --> 03:19.658
அப்பா.

03:20.242 --> 03:22.034
- இவர் இன்னும் மயக்கத்தில் இருக்கிறார், எனவே...
- ஆம்.

03:22.035 --> 03:24.162
- நான் அருமையாக இருக்கிறேன்.
- எல்லாம் நலம்தான்.

03:27.583 --> 03:28.667
ஹலோ.

03:30.961 --> 03:31.961
தவறான நேரமா?

03:31.962 --> 03:33.379
என்ன உதவி வேண்டும்?

03:33.380 --> 03:35.298
மன்னிக்கவும். நான் டிடெக்டிவ் ரெபெக்கா லின்.

03:35.299 --> 03:38.010
நான் திரு. கூப்பருடன் கொஞ்ச நேரம்
பேச வேண்டும்.

03:38.844 --> 03:40.470
இன்னொரு டென்னிஸ் காயமா?

03:41.471 --> 03:42.471
இல்லை.

03:42.472 --> 03:43.764
இவரை உனக்குத் தெரியுமா?

03:43.765 --> 03:45.641
பால் பற்றி என்னை விசாரித்தார்.

03:45.642 --> 03:47.310
அவரைப் பற்றி என்ன?

03:47.311 --> 03:50.188
நேற்றிரவு பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும்.

03:50.189 --> 03:51.648
உங்களால் முடிந்தால்.

03:52.524 --> 03:54.776
அல்லது நான் பின்னர் வரவா?

03:56.612 --> 03:58.822
நீங்கள் தாத்தா பாட்டியை
மதிய உணவுக்கு அழைத்துப் போகிறீர்களா?

03:59.489 --> 04:01.574
மதியம்தான் மில்லிஸைத் திறப்பார்கள்.

04:01.575 --> 04:03.784
எனில் நாம் அங்கே முதல் ஆளாகப் போகலாம்.

04:03.785 --> 04:06.079
அனைவரும் வாருங்கள். போகலாம்.

04:18.007 --> 04:20.802
வழக்கமாக இந்த விசாரணைகளைத்
தனியாகத்தான் செய்வேன்.

04:27.351 --> 04:28.644
நான் போய் பார்னியைப் பார்க்கிறேன்.

04:29.228 --> 04:30.269
அவன் எப்படி இருக்கிறான்?

04:30.270 --> 04:31.647
உனக்குச் சொல்கிறேன்.

04:36.985 --> 04:38.362
அழகான குடும்பம்.

04:38.946 --> 04:40.863
நீங்கள் மிகவும் கனிவானவர்.
உங்களுக்கு என்ன வேண்டும்?

04:40.864 --> 04:42.908
நேற்றிரவு பற்றிச் சொல்ல முடியுமா?

04:43.408 --> 04:44.868
எனக்கு பெரிதாக எதுவும் ஞாபகம் இல்லை.

04:45.410 --> 04:46.787
என்ன நினைவுள்ளது?

04:47.704 --> 04:49.623
என்னைத் தாக்கியது நினைவுள்ளது.

04:50.332 --> 04:52.960
அது விநோதமானது, இல்லையா?

04:53.710 --> 04:56.045
அதை ஒப்பிட இதுபோல நிறைய
நடக்கவில்லை, எனவே...

04:56.046 --> 04:58.549
முதலில், தாக்கியவர்கள்
எதையும் எடுத்துச் செல்லவில்லை.

04:59.132 --> 05:00.508
அது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானது.

05:00.509 --> 05:01.592
சரி.

05:01.593 --> 05:04.680
பார்னி காரில் அடிபட்டதால் அது
தடைப்பட்டிருக்கலாமா?

05:05.264 --> 05:10.519
உங்களுக்கு கொஞ்சம் நினைவுள்ளது. நான் பிறகு
திரு. சோய் உடன் பேசுவேன்.

05:12.062 --> 05:13.771
உண்மையைக் கூற வேண்டுமெனில், திரு. கூப்பர்,

05:13.772 --> 05:16.191
இந்தத் தாக்குதல் தற்செயலாகத் தெரியவில்லை.

05:16.775 --> 05:18.402
உங்களைக் குறி வைத்துத் தாக்கியுள்ளது
போலத் தெரிகிறது.

05:18.986 --> 05:20.611
என்னை ஏன் குறி வைக்க வேண்டும்?

05:20.612 --> 05:22.113
பால் லெவிட்டை ஏன் யாரேனும் கொல்ல வேண்டும்?

05:22.114 --> 05:23.573
அவற்றுக்கான தொடர்பு புரியவில்லை.

05:23.574 --> 05:26.868
நான் பிரான்க்ஸில் போலீஸாக இருந்தேன்.

05:26.869 --> 05:29.078
அங்கே வன்முறைக் குற்றங்கள் மிகவும் சகஜம்.

05:29.079 --> 05:32.748
ஆனால் இங்கே இல்லை.
இது மிகவும் அமைதியான ஊர்.

05:32.749 --> 05:35.377
இங்கே வன்முறைக் குற்றங்கள்
நடப்பது அரிது.

05:35.961 --> 05:40.256
கடந்த சில நாட்களில், ஒருவர் தன் வீட்டில்
கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

05:40.257 --> 05:42.466
- சமீபத்தில் நீங்கள் சண்டை போட்ட ஒருவர்.
- அது சண்டை இல்லை.

05:42.467 --> 05:46.679
பிறகு எந்த நோக்கமும் இல்லாமல்
மெயின் ஸ்ட்ரீட்டில்

05:46.680 --> 05:48.514
மோசமாகத் தாக்கப்பட்டுள்ளீர்கள்.

05:48.515 --> 05:52.268
உங்கள் நண்பர் கீழே பலமாக
அடிபட்டுக் கிடக்கிறார்.

05:52.269 --> 05:54.979
மீண்டும், எனக்கு இந்தத் தொடர்பு புரியவில்லை.

05:54.980 --> 05:56.607
நீங்கள்தான், திரு. கூப்பர்.

05:57.524 --> 05:58.942
நீங்கள்தான் தொடர்பு.

05:59.735 --> 06:03.654
உங்கள் நண்பராக இருப்பது ஆபத்தானது
எனத் தோன்றுகிறது.

06:03.655 --> 06:05.908
எனில் நாம் இனி நண்பர்களாக இருக்க மாட்டோமா?

06:10.996 --> 06:13.623
ஒரு மாதத்திற்கு முன்பு உங்கள் வேலையை
விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.

06:13.624 --> 06:15.082
அது மிகவும் பொதுவான விஷயம்.

06:15.083 --> 06:18.545
நீங்கள் பிரான்க்ஸில் போலீஸ் வேலையை
விட்டதாகக் கூறினீர்கள். ஏன் அப்படிச் செய்தீர்கள்?

06:19.505 --> 06:22.215
- வாழ்க்கையின் தரத்திற்காக.
- ஹேய். அதேதான்.

06:22.216 --> 06:23.633
ஆனால் உங்களை பணிநீக்கம் செய்துள்ளனர்.

06:23.634 --> 06:24.884
எல்லாம் ஒன்றுதான்.

06:24.885 --> 06:26.512
நேற்றிரவு எங்கிருந்து வந்துகொண்டிருந்தீர்கள்?

06:27.179 --> 06:30.807
கடவுளே. கல்லூரிகளைப் பார்க்க என் மகளைக்
கூட்டிச் சென்றிருந்தேன்.

06:33.810 --> 06:36.355
பாருங்கள், நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

06:37.940 --> 06:39.483
உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது.

06:40.526 --> 06:45.030
உங்கள் நிலைமை மோசமாகப் போகிறது
என்று உங்களைப் பார்த்தால் தெரிகிறது.

06:45.697 --> 06:47.783
உதவி தேவைப்படும் நிலையில் உள்ளீர்கள்.

06:49.368 --> 06:54.623
இப்போது, உங்களுக்கு அந்த உதவியை
வழங்க வந்துள்ளேன்.

06:55.791 --> 07:00.921
நீங்கள் எதில் மாட்டியிருந்தாலும்...
என்னால் உதவ முடியும்.

07:10.931 --> 07:12.015
விஷயம் என்னவெனில்...

07:13.809 --> 07:15.686
ஒரு கட்டத்தில் நீங்கள் வரம்பை மீறுவீர்கள்,

07:16.603 --> 07:18.772
அப்போது என்னால் உங்களுக்கு உதவ முடியாது.

07:19.773 --> 07:25.779
அந்த நேரம் வரும்போது, உங்களை
நான் கைதுசெய்வேன்.

07:30.659 --> 07:34.496
அதைப் பற்றி யோசிக்கிறேன்.
வந்ததற்கு நன்றி, டிடெக்டிவ்.

07:35.247 --> 07:36.456
உங்கள் நேரத்திற்கு நன்றி.

07:48.969 --> 07:50.052
நன்றாகப் போனதா?

07:50.053 --> 07:54.224
ஆம். அதாவது, வழக்கமான விஷயங்கள்தான்.
தேவைப்படும் தகவல்களை வழங்குவது.

07:56.185 --> 07:57.186
பார்னி எப்படி இருக்கிறான்?

07:58.228 --> 07:59.897
அதிகக் காயம் பட்டுள்ளது, ஆனால்
மீண்டுவிடுவார்.

08:01.356 --> 08:03.900
நேற்றிரவு என்ன நடந்தது என்பது பற்றி
நாம் பேசலாமா? நான்...

08:03.901 --> 08:06.737
- நான்...
- இப்போது வேண்டாம்.

08:11.491 --> 08:12.701
சரி.

08:15.287 --> 08:16.371
நான் போகிறேன்.

08:18.165 --> 08:19.957
அவர்கள் உன்னை டிஸ்சார்ஜ் செய்ய
கிட்டத்தட்ட தயாராக உள்ளனர்.

08:19.958 --> 08:21.417
நான் பிறகு வந்து உன்னைக் கூட்டிப் போகிறேன்.

08:21.418 --> 08:25.422
இல்லை, கமான். அது... ஆலி என்னை அழைத்துச்
செல்வாள். நீ பிள்ளைகளுடன் இரு.

08:35.599 --> 08:36.683
ஹேய், மெல்லி.

08:40.437 --> 08:44.066
நாம் தொடர்ந்து எதிர்த் திசையிலேயே
வண்டி ஓட்டியிருந்திருக்க வேண்டும், இல்லையா?

08:46.276 --> 08:47.486
ஓய்வெடு.

10:15.908 --> 10:17.867
- ...வேறு. நான் எதையாவது முயல வேண்டும்.
- அது நல்லது.

10:17.868 --> 10:19.203
- மன்னிக்கவும், நான்...
- சரி.

10:21.288 --> 10:22.289
நீ ஏன் நன்றாக மணக்கிறாய்?

10:23.207 --> 10:25.333
நான் புதிதாக ஒன்றைப் பயன்படுத்திப் பார்க்கிறேன்.
இது பிடிக்கவில்லையா?

10:25.334 --> 10:27.877
இல்லை, நான் அதைக் கூறவில்லை.
நமக்கு என்ன கிடைத்தது?

10:27.878 --> 10:29.420
ஆய்வறிக்கைகள்.

10:29.421 --> 10:32.757
கொலை செய்த ஆயுதம் .38.
ஒரே துப்பாக்கி, மூன்று ஷாட்களும்.

10:32.758 --> 10:34.592
மனைவியின் துப்பாக்கி .22?

10:34.593 --> 10:37.888
ஆம். அவர் கூறியது உண்மைதான்,
அவரது துப்பாக்கி சுடப்படவேயில்லை.

10:39.223 --> 10:40.723
ஆனால் அது என்ன?

10:40.724 --> 10:42.808
- அது டாரஸ் டிஎக்ஸ்22.
- இல்லை.

10:42.809 --> 10:44.519
இந்த மணம். இது கஸ்தூரி.

10:44.520 --> 10:48.272
பால்ஸம் பிரீஸ். இது பால்ஸம் எண்ணெயில்
செய்யப்பட்டது. மற்றும் சீடர்.

10:48.273 --> 10:50.399
சரி. வேறென்ன?

10:50.400 --> 10:52.361
சிட்ரஸ் நோட்ஸ் என நினைக்கிறேன்.

10:54.112 --> 10:54.946
ஆம்.

10:54.947 --> 10:59.493
இறந்தவரும் துப்பாக்கியால் சுட்டதாக
துப்பாக்கிச்சூட்டின் மிச்சம் அறிக்கை காட்டுகிறது.

11:00.035 --> 11:03.079
ஆனால் சம்பவ இடத்தில் கூடுதலாக எந்தத்
தோட்டாவோ கேசிங்கோ இல்லை.

11:03.080 --> 11:06.499
எனவே அவர் எதையாவது சுட்டிருக்க வேண்டும்,
அல்லது தப்பித்த யாரையாவது.

11:06.500 --> 11:07.417
அல்லது...

11:08.752 --> 11:10.087
- எதையோ தவறவிடுகிறோம்.
- ஆம்.

11:10.838 --> 11:12.964
துப்பாக்கிச்சூடு பட்ட எந்த நோயாளியாவது
அட்மிட் ஆகியுள்ளனரா என்று விசாரிக்க

11:12.965 --> 11:15.675
உள்ளூர் மருத்துவமனைகளிடம் விசாரிக்க
அதிகாரிகளிடம் கூறுகிறேன்.

11:15.676 --> 11:18.594
கொலைகாரர்கள் போய் அவசர சிகிச்சையில்
அட்மிட் ஆக மாட்டார்கள்.

11:18.595 --> 11:20.430
கூப்பரை சந்தேகிக்கிறீர்களா?

11:21.181 --> 11:24.643
இதற்காக அவரைச் சந்தேகிக்கவில்லை,
ஆனால் ஏதோவொன்றில் சந்தேகிக்கிறேன்.

11:27.062 --> 11:28.689
உன் மீது கிறிஸ்துமஸ் மர வாசம் வருகிறது.

11:32.234 --> 11:34.819
எனவே அவர்கள் நகரத்தில் உள்ள
எல்லா பெஸ்ட் பைக்கும் செல்வார்கள்.

11:34.820 --> 11:37.071
சென்று வெளிப்புற ஹார்ட் டிரைவ்களை வாங்குவார்கள்.

11:37.072 --> 11:40.616
பிறகு நான் புதிது போல மாற்றிய பழைய
மாடல்களை உள்ளே வைத்து

11:40.617 --> 11:43.160
திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

11:43.161 --> 11:47.331
பிறகு ரீபேக் செய்து, புதியவற்றை, முழு விலையில்
ஆன்லைனில் விற்றுவிடுவார்கள்.

11:47.332 --> 11:51.127
எனவே உன் நண்பன் மிக்கி தன் அம்மாவுக்கு
புதிய வீடு வாங்குவதுடன் இந்தக் கதை முடிகிறதா?

11:51.128 --> 11:53.296
கண்டிப்பாக இல்லை.

11:53.297 --> 11:56.300
அவனது கார்டுக்கான சீரியல் எண்களை
டிரேஸ் செய்து

11:57.009 --> 11:58.176
அவனைப் பிடித்துவிட்டனர்.

11:58.177 --> 11:59.677
நீ ஆச்சரியப்பட்டாயா?

11:59.678 --> 12:01.596
அவன் நீண்ட காலம் இருந்தான்.

12:01.597 --> 12:03.347
வாய்ப்புகளால்தான் அவன் மாட்டினான்.

12:03.348 --> 12:05.309
முட்டாள்தனத்தால் மாட்டினேன்.

12:09.980 --> 12:11.315
அடச்சே.

12:18.822 --> 12:22.034
அருமை, இன்னும் ஹாட்டாக இருக்கிறாய்.

12:22.910 --> 12:23.910
எப்படி இருக்கிறாய், ஈ?

12:23.911 --> 12:24.995
இல்லை.

12:25.621 --> 12:26.954
என்ன?

12:26.955 --> 12:29.081
அமைதி, நான் விளையாடுகிறேன்.

12:29.082 --> 12:30.918
நீ அழகாக இருக்கிறாய்.

12:32.377 --> 12:33.878
உனக்கு என்ன வேண்டும், ஃபெலிக்ஸ்?

12:33.879 --> 12:35.589
ஒன்றுமில்லை. நான் நலம்தான்.

12:36.465 --> 12:38.549
நம் ஆட்டுக்குட்டியிடம் என் பணத்தை
வாங்க வந்தேன்,

12:38.550 --> 12:39.635
அதைக் கொடுத்தால் போதும்.

12:40.802 --> 12:42.053
இவன் என்ன பேசுகிறான்?

12:42.054 --> 12:43.888
உனக்குத் தெரியாதா?

12:43.889 --> 12:45.098
அடச்சே.

12:45.891 --> 12:48.351
நான் சில டீல்கள் செய்தேன். அவ்வளவுதான்.

12:48.352 --> 12:50.603
அவ்வளவுதான்.

12:50.604 --> 12:52.939
ஆனால் உன் தம்பி அந்த டெலிவரியைச்
சொதப்பிவிட்டான்.

12:52.940 --> 12:54.650
போலீஸ் என்னைத் துரத்தி வந்தனர்.

12:57.069 --> 12:59.195
இவன் ஒரே ஒரு சைரன் சத்தத்தைக் கேட்டதும்,

12:59.196 --> 13:02.740
பயந்து போய், மொத்தத்தையும்
தூக்கியெறிந்துவிட்டான்.

13:02.741 --> 13:04.033
எங்கே தூக்கிப்போட்டான்?

13:04.034 --> 13:05.452
அதுதான் சிறந்த விஷயம்.

13:06.411 --> 13:07.412
இவளிடம் சொல்.

13:07.996 --> 13:09.206
கிழக்கு நதியில்.

13:10.374 --> 13:12.918
அந்த ஷாமு ஓர்கா
இந்நேரம் போதையில் இருக்க வேண்டும்.

13:14.044 --> 13:15.754
திருப்பிக் கொடுக்க உன்னிடம் பணம் இல்லை.

13:16.338 --> 13:17.922
சரி, எவ்வளவு?

13:17.923 --> 13:20.425
நீ சொல்கிறாயா நான் சொல்லவா?

13:21.593 --> 13:23.178
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்.

13:24.304 --> 13:25.930
என்னவொரு முட்டாள்.

13:25.931 --> 13:29.016
உண்மையில், 175.

13:29.017 --> 13:32.228
அடுத்த வாரம் அது 200 ஆகிவிடும்.

13:32.229 --> 13:34.772
வட்டி மோசமானது.

13:34.773 --> 13:39.026
அது உனக்கு மிகவும் அதிக பணம்
என்று எனக்குத் தெரியாது.

13:39.027 --> 13:41.904
ஆனால் அதை கண்டுகொள்ளாமல் விட முடியாது.

13:41.905 --> 13:43.198
முடியுமா?

13:44.491 --> 13:45.993
- முடியுமா?
- சரி.

13:47.953 --> 13:49.579
அது பிரச்சினை இல்லை.

13:49.580 --> 13:51.331
நான் பார்த்துக்கொள்கிறேன்.

13:52.416 --> 13:55.169
- நீ பார்த்துக்கொள்கிறாயா?
- ஆம்.

14:01.758 --> 14:05.136
கடைசியாக நான் கேட்ட வரை, நகரத்துக்கு வெளியே
நீ கழிவறைகளைக் கழுவுகிறாய்.

14:05.137 --> 14:07.180
உன்னால் எப்படி அவ்வளவு பணத்தைக்
கொடுக்க முடியும்?

14:07.181 --> 14:09.808
அது உன் பிரச்சினை இல்லை.

14:13.061 --> 14:16.314
எனக்கு எப்போதும் உன்னைப் பிடிக்கும், எலினா.

14:16.315 --> 14:18.817
நம் ஊரில் நீ நேர்மையானவள்.

14:22.196 --> 14:25.574
நாம் நீண்டகாலமாக நண்பர்கள் என்பதால்,
வட்டியைக் கழித்துக்கொள்கிறேன்.

14:26.742 --> 14:28.785
அசலை...

14:30.078 --> 14:31.078
அடுத்த வாரத்திற்குள் கொடுத்துவிடு,

14:31.079 --> 14:34.833
நான் நம் ஆட்டுக்குட்டியை
உயிருடன் விடுகிறேன்.

14:43.008 --> 14:45.385
இவை எப்படி
இவ்வளவு சுவையாக உள்ளன?

14:46.261 --> 14:49.973
ஒரு நாளுக்கு இவற்றை பத்து பில்லியன்
செய்கின்றனர் எனத் தெரியுமா?

14:50.933 --> 14:53.560
அளவு அடிப்படையிலான பொருளாதாரம்.

14:54.102 --> 14:55.687
அதுதான் விஷயம்.

14:56.563 --> 14:58.022
சரி.

14:58.023 --> 15:00.734
உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி, ஆட்டுக்குட்டி.

15:03.195 --> 15:05.196
எலினாவையும்தான்.

15:05.197 --> 15:08.783
நீ நிஜமான பணத்தை சம்பாதிக்க விரும்பினால்,

15:08.784 --> 15:10.953
என்னிடம் உனக்கு எப்போதும் இடம் இருக்கும்.

15:15.499 --> 15:16.500
ம்ம் ஹ்ம்ம்?

15:17.668 --> 15:19.211
போய்த் தொலை, ஃபெலிக்ஸ்.

15:32.724 --> 15:33.934
கோழை.

15:39.815 --> 15:41.441
1,50,000 டாலரா?

15:43.569 --> 15:47.864
நீ என்ன நினைத்துக்கொண்டிருந்தாய்?
உனக்கு என்ன பிரச்சினை?

15:47.865 --> 15:49.699
அதனால் என்ன?

15:49.700 --> 15:52.285
நீ பல ஆண்டுகளாக ஜிஸெல் மற்றும் ராஃபுக்கு
வேலை செய்தாய்.

15:52.286 --> 15:56.414
அது சான்டியாகோவில் நடந்தது.
இங்கே நமக்கு பல வேலைகள் உள்ளன.

15:56.415 --> 15:57.582
முட்டாள்தனம்.

15:57.583 --> 15:59.877
உனக்கு இருக்கலாம்.

16:32.826 --> 16:34.661
ஹாஸ்பிட்டல் உணவு சரியாக இல்லை.

16:37.331 --> 16:39.124
- நீ இதைச் சமைத்தாயா?
- கண்டிப்பாக இல்லை.

16:42.252 --> 16:44.963
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்

16:53.597 --> 16:54.640
ஹேய், ஆண்டி.

16:55.474 --> 16:58.267
ஹேய். வந்ததற்கு நன்றி.

16:58.268 --> 16:59.519
விளையாடுகிறாயா?

16:59.520 --> 17:02.898
இனி என்னால் வண்டி ஓட்ட முடியாது. அது எவ்வளவு
வேடிக்கையானது என்பதை மறந்துவிட்டேன்.

17:03.690 --> 17:05.650
- உன்னிடம் லைசென்ஸ் உள்ளதா?
- கண்டிப்பாக.

17:05.651 --> 17:08.694
அதாவது, அது காலாவதியாகிவிட்டது,
ஆனால் உள்ளது.

17:09.363 --> 17:10.571
நீ வண்டி ஓட்ட வேண்டுமா?

17:11.240 --> 17:12.824
இல்லை.

17:14.409 --> 17:17.454
சாலையிலேயே ஓட்ட முயற்சி செய், சரியா?

17:20.582 --> 17:22.751
- அந்த டிடெக்டிவ்...
- லின், ஆம்.

17:23.502 --> 17:25.877
ஆம். அவர் வீட்டுக்கு வந்தார்.

17:25.878 --> 17:27.548
- அப்படியா?
- ஆம்.

17:28.674 --> 17:31.801
பால் லெவிட் இறந்த அன்றிரவு நீ வீட்டுக்கு
வந்ததாக அவரிடம் கூறினேன்.

17:31.802 --> 17:33.178
நீ என்னுடன் இருந்ததாகக் கூறினேன்.

17:33.929 --> 17:34.930
சரி.

17:35.931 --> 17:38.976
பாலின் மரணத்திற்கும் எனக்கும் சம்பந்தம்
இல்லை என உனக்குத் தெரியும்தானே?

17:39.726 --> 17:41.854
கண்டிப்பாக. நீ கொலைகாரன் இல்லை
எனத் தெரியும்.

17:43.564 --> 17:46.984
அப்படியே இருந்தாலும், உனக்கு நான்
மட்டும்தான் இருக்கிறேன்.

17:51.697 --> 17:53.282
நிறுத்த வேண்டும்.

18:17.347 --> 18:19.182
- ஹாய்.
- ஹேய்.

18:19.183 --> 18:20.725
அடக் கடவுளே. நீ பொய் சொல்லவில்லை.

18:20.726 --> 18:22.769
எனக்குத் தெரியும்.

18:26.273 --> 18:29.108
இறந்தவரைப் புதைப்பதற்குத்
தேவைப்படும் ஆவணங்கள்,

18:29.109 --> 18:30.610
அதிர்ச்சியளிக்கின்றன.

18:30.611 --> 18:32.195
எனக்கு கொஞ்சம் வேலை கொடு.

18:32.196 --> 18:33.405
சரி, அது...

18:34.406 --> 18:36.533
- உங்களுக்குக் குடிக்க எதுவும் வேண்டுமா?
- ஹாய், எனக்கு...

18:37.284 --> 18:38.576
இவர் குடிப்பதையே கொடுங்கள்.

18:38.577 --> 18:41.246
ஒன்று சொல்லவா?
இவை அனைத்தையும் எடுத்துக்கொள்.

18:41.914 --> 18:42.873
ஆம்.

18:43.498 --> 18:45.791
இறப்புச் சான்றிதழ் நாம் விண்ணப்பிக்க
வேண்டும் எனத் தெரியாது.

18:45.792 --> 18:47.710
ஆம். இது குழப்பமாக உள்ளது.

18:47.711 --> 18:50.421
அதாவது, துயரத்தில் இருக்கும் விதவைகளுக்கு
இது நல்ல கவனச்சிதறலாக இருக்கும்,

18:50.422 --> 18:54.300
ஆனால் உண்மையில், நான் துயரத்தில் இல்லை.

18:54.301 --> 18:57.094
நியாயம்தான்.
இங்கே எவ்வளவு நாட்கள் இருக்க வேண்டும்?

18:57.095 --> 18:58.889
வீட்டில் போலீஸ் வேலை இன்னும் முடியவில்லை.

19:01.808 --> 19:02.809
ஹேய்.

19:04.019 --> 19:05.020
நீ எப்படி இருக்கிறாய்?

19:06.230 --> 19:07.563
நான்... நான்...

19:07.564 --> 19:10.108
என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

19:10.776 --> 19:17.658
அதாவது, பாலுக்கும் எனக்கும் இடையே நல்ல
உறவு இல்லை என அனைவருக்கும் தெரியும்.

19:18.951 --> 19:22.495
இப்போது அவனது நினைவஞ்சலியை நான் நடத்த
வேண்டுமா? பிறர் என்னிடம் என்ன சொல்வார்கள்?

19:22.496 --> 19:25.082
”உனக்கு அவனைப் பிடிக்காது எனத் தெரியும்,
ஆனால் இதோ கேசரோல்” என்றா?

19:25.874 --> 19:27.583
எனக்கு கேசரோல் பிடிக்காது.

19:27.584 --> 19:29.294
குறித்துக்கொள்கிறேன். கேசரோல் கிடையாது.

19:30.587 --> 19:31.754
- நன்றி.
- பரவாயில்லை.

19:31.755 --> 19:35.132
போலி விதவை நோய் என்று எதுவும் உள்ளதா?

19:35.133 --> 19:37.927
ஓ, ஆம். போலி எல்லாமே நோய்
உள்ளது என நினைக்கிறேன்.

19:37.928 --> 19:40.596
- அதாவது, என் ஒரு பகுதி சோகமாக இருக்கிறது.
- கண்டிப்பாக.

19:40.597 --> 19:42.182
ஆனால்,

19:43.058 --> 19:45.601
என் மீது அனைவரும் பரிதாபப்படுவார்கள்
என நினைக்கும்போதெல்லாம்,

19:45.602 --> 19:48.480
நான் பஸ்ஸின் முன் போய் விழ வேண்டும்
எனத் தோன்றுகிறது.

19:49.147 --> 19:52.483
அதாவது, எனக்குக் கடைசியாக ஒருமுறை
அவமானப்படுத்தாமல் அவனால் சாக முடியவில்லை.

19:52.484 --> 19:55.570
அதாவது, பாராட்டுகள், பால்.
அருமையான செயல்.

19:55.571 --> 19:58.489
ஆனால்... மன்னித்துவிடு, உன்னிடம் இவற்றைக் கூற
விரும்பவில்லை. எனக்கு தெரியும், ஏனெனில்...

19:58.490 --> 20:00.575
- விளையாடுகிறாயா?
- இல்லை, நான் கூப் பற்றிக் கேள்விப்பட்டேன்.

20:00.576 --> 20:02.410
- விளையாடாதே.
- இல்லை, அவர் எப்படி இருக்கிறார்?

20:02.411 --> 20:05.329
அவருக்கு கொஞ்சம் அடிப்பட்டுள்ளது,
ஆனால் பெரிதாக ஆபத்தில்லை.

20:05.330 --> 20:07.373
கடவுளே. கூப்பை யார் தாக்க விரும்புவார்கள்?

20:07.374 --> 20:08.625
என்னைத் தவிரவா?

20:09.459 --> 20:10.752
இரு, அவர் என்ன செய்தார்?

20:11.295 --> 20:12.337
விளையாடினேன்.

20:12.921 --> 20:17.176
நான் அவருக்காகக் கவலைப்படுகிறேன்.
அவர் ஏதோ கஷ்டப்படுகிறார் என நினைக்கிறேன்.

20:18.302 --> 20:19.802
அதைச் சரிசெய்வது உன் வேலை இல்லை.

20:19.803 --> 20:21.429
தெரியும்,

20:21.430 --> 20:26.267
ஆனால் ஒருவருடன் நீண்டகாலம் வாழ்ந்துவிட்டால்,
நமக்குள் ஒரு தனிப்பட்ட மொழி வந்துவிடும்.

20:26.268 --> 20:28.519
இப்போது நாங்கள் திருமண வாழ்க்கையில்
இல்லை என்பதால்,

20:28.520 --> 20:32.774
அதை எப்படிப் பேசுவது என்பதை
மறந்துவிடுவோம் என்றில்லை.

20:33.817 --> 20:36.611
நாங்கள் டோரியுடன் பிரின்ஸ்டனில்
கல்லூரி டூரில் இருந்தோம்,

20:36.612 --> 20:37.946
அது ஒரு...

20:40.365 --> 20:45.329
சிறிய காலப் பயணம் போல இருந்தது.
“எஸ்எஸ்ஏ-721.”

20:46.705 --> 20:48.247
அது... எனக்குப் புரியவில்லை.

20:48.248 --> 20:51.251
இறுதிச்சடங்கு இயக்குநர்...
அவர்தானே இதைச் செய்ய வேண்டும்?

20:52.211 --> 20:56.548
ஆம். இது அந்தத் தொகுப்பில் இருக்க வேண்டும்.
அது மற்றவர்களின் வேலை.

20:58.759 --> 21:02.720
கடவுளே. பார். இதோ.

21:02.721 --> 21:07.559
உயிலுக்கான மனு.
சட்டப்பூர்வமாகக் கூறினால், இன்னும் ஒயின் வேண்டும்.

21:08.769 --> 21:10.228
ஆம், நான் இதில் கைதேர்ந்தவள்.

21:10.229 --> 21:11.396
எக்ஸ்கியூஸ் மீ?

21:20.739 --> 21:23.283
அதை யாருக்கும் வாசிக்கத் தெரியாது
என்று 50 டாலர் பந்தயம் கட்டுகிறேன்.

21:25.327 --> 21:27.828
உன் முடியை வித்தியாசமாக
எதுவும் செய்தாயா?

21:27.829 --> 21:29.163
பிறகு ஒரு விஷயம் உள்ளது.

21:29.164 --> 21:31.290
அந்த சென்ட்டை மாற்றியது நல்லது.

21:31.291 --> 21:32.667
அதை நீங்கள் வெறுத்தீர்கள் எனத் தெரியும்.

21:32.668 --> 21:33.836
ஆம்.

21:36.839 --> 21:39.215
அந்தக் காதலியுடன் எப்படிப்
போனது? மிஸ்டியா?

21:39.216 --> 21:43.594
பெரிதாக எதுவுமில்லை.
வழக்கமான இரண்டாவது மனைவி போலத்தான்.

21:43.595 --> 21:45.721
இறந்தவரை நினைத்து
வருத்தத்தில் இருக்கிறாள்.

21:45.722 --> 21:50.309
இருந்தாலும், அவள் இனி ஓட்ட முடியாத புதிய
ரேஞ்ச் ரோவருக்காக அழக்கூடும்.

21:50.310 --> 21:51.686
உங்களுக்கு எப்படி? எதுவும் க்ளூ கிடைத்ததா?

21:51.687 --> 21:55.398
அம்மோனியாவில் ரத்தத் தடம் இருப்பதை
தடவியல் கண்டுபிடித்துள்ளது.

21:55.399 --> 21:56.900
பாலுடன் பொருந்தவில்லை.

21:57.651 --> 21:59.778
நமது ஆள் சண்டை போட்டிருப்பார் போல.

22:01.071 --> 22:02.363
ஹாஸ்பிட்டல்கள்?

22:02.364 --> 22:03.657
எந்தத் துப்பாக்கிச்சூடுக் காயமும் இல்லை.

22:05.200 --> 22:07.578
ஆனாலும் இந்த இடத்தில் வேறு யாருக்கோ
ரத்தம் வந்துள்ளது.

22:08.328 --> 22:09.663
பிறகு அதை சுத்தம் செய்துள்ளனர்.

22:12.416 --> 22:15.627
அனைவரும் ஏன் குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர்
என்று புரியவேயில்லை.

22:17.337 --> 22:19.422
கமான். அதைப் பற்றி யோசித்ததே இல்லையா?

22:19.423 --> 22:20.631
இல்லை.

22:20.632 --> 22:22.217
எனக்கு நிறைய குழந்தைகள் வேண்டும்.

22:23.093 --> 22:25.011
முதலில் நீ இரண்டு மாதங்களுக்கு
மேல் உடனிருக்கும்

22:25.012 --> 22:26.095
பெண்ணைக் கண்டுபிடிப்போம்.

22:26.096 --> 22:29.224
அது நியாயமில்லை. சில நேரம்
அவர்கள் என்னைக் கழட்டிவிடுகின்றனர்.

22:31.351 --> 22:33.103
என்ன அது?

22:34.188 --> 22:36.481
அது ப்ளஷ் என நினைக்கிறேன்.

22:42.070 --> 22:43.322
இது நானி கேம்.

22:46.325 --> 22:47.742
அதில் என்ன கிடைக்கும்?

22:47.743 --> 22:50.746
எதுவுமில்லாமல் இருக்கலாம்,
ஆனால் தேடுவது மதிப்புடையது.

23:06.637 --> 23:07.970
ஹலோ, ஹெக்டர்.

23:07.971 --> 23:09.805
ஓ! கடவுளே!

23:09.806 --> 23:11.599
நீ இங்கே என்ன செய்கிறாய்?

23:11.600 --> 23:13.601
நீ என் கால்களை எடுக்கவில்லை.

23:13.602 --> 23:15.770
நான் சமாளிக்கும் பிரச்சினைகள் பற்றி
உனக்குத் தெரியாது.

23:15.771 --> 23:17.271
அந்தக் கொலைக்குப் பிறகு,

23:17.272 --> 23:19.649
அலாரம் அமைப்புகளை மேம்படுத்தும்படி
கால்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

23:19.650 --> 23:21.234
எல்லாமே வெஸ்ட்மான்ட் வில்லேஜிலிருந்து.

23:21.235 --> 23:23.737
எனில் நல்ல பிசினஸ்தான்.

23:24.571 --> 23:26.989
பெண்ணே, எதுவும் நடந்ததா?

23:26.990 --> 23:28.366
எதுபோல?

23:28.367 --> 23:30.826
ஏதோ திருட்டு சொதப்பிவிட்டதாகக்
கூறினர்.

23:30.827 --> 23:32.912
நான் அந்த வீட்டுக்கு அருகில் கூட
செல்லவில்லை.

23:32.913 --> 23:36.416
கண்டிப்பாக, நான் யாரையும் கொல்லவில்லை.
அது முட்டாள்தனம், ஹெக்டர்!

23:37.709 --> 23:39.085
அந்த ஜார்ஜ் க்லூனி பற்றி என்ன?

23:39.086 --> 23:40.169
கண்டிப்பாக இல்லை.

23:40.170 --> 23:42.046
கூப்பும் அதைச் செய்யவில்லை.

23:42.047 --> 23:43.506
உனக்கு எப்படித் தெரியும்?

23:43.507 --> 23:45.132
ஏனெனில் எனக்கு அவரைத் தெரியும்.

23:45.133 --> 23:46.592
நீ அவனுடன் செக்ஸ் வைத்துக்கொள்கிறாயா?

23:46.593 --> 23:48.387
கடவுளே! ப்ளீஸ்.

23:49.304 --> 23:51.931
நீ அந்த வெள்ளையினத்தவனுடன்
என்ன செய்கிறாய் என்று யோசித்து

23:51.932 --> 23:54.225
என்னால் தூங்க முடியவில்லை.

23:54.226 --> 23:57.478
நான் மேலே பார்த்துக்கொண்டே, நீங்கள் எப்போது
சொதப்பி, மாட்டிக்கொள்வீர்கள் என யோசிக்கிறேன்.

23:57.479 --> 23:59.605
நீ என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

23:59.606 --> 24:01.148
உன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை.

24:01.149 --> 24:03.860
என்னை நீ எப்படி இதற்கு ஒப்புக்கொள்ள
வைத்தாய் என்று தெரியவில்லை.

24:03.861 --> 24:05.486
நாம் குற்றவாளிகள் இல்லை, எலினா.

24:05.487 --> 24:07.238
நீ பயந்துள்ளாய் என்று புரிகிறது.

24:07.239 --> 24:09.949
ஆனால் சத்தியமாக இதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

24:09.950 --> 24:12.201
இல்லை, நான் வெளியேறுகிறேன்.

24:12.202 --> 24:15.789
உன் இடத்தில் இருந்தால்,
நானும் வெளியேறிவிடுவேன்.

24:17.374 --> 24:20.961
ஃபெலிக்ஸுக்கு சீவோ
1,50,000 டாலர் கொடுக்க வேண்டும்.

24:21.545 --> 24:22.587
அடச்சே.

24:22.588 --> 24:26.008
உனக்கு அது தெரியும்.

24:27.176 --> 24:29.343
சீவோ அவர்களுடன் மீண்டும் சுற்றுவதாகக்
கேள்விப்பட்டேன். அவ்வளவுதான்.

24:29.344 --> 24:31.679
நீ அதை என்னிடம் கூற வேண்டும்
என்று தோன்றவில்லையா?

24:31.680 --> 24:33.639
நீ நன்றாக இருந்தாய். அதைக் கூறி
உன்னை வருத்தப்பட வைக்க விரும்பவில்லை.

24:33.640 --> 24:36.435
என்னிடம் கூறியிருந்தால் அது
நடக்காமல் தடுத்திருப்பேன்.

24:37.186 --> 24:38.812
எனில் இது தவறா?

24:40.772 --> 24:42.733
வீட்டுக்குப் போ, எலினா.

24:58.540 --> 25:00.333
மிஸ் லெவிட்.

25:00.334 --> 25:03.504
உங்கள் வாக்குமூலத்தை
மாற்ற வேண்டியிருக்கலாம்.

25:17.726 --> 25:20.687
அந்தக் கூப்பை நாம் நெருக்கமாக
கவனிக்கப் போகிறோம்.

25:21.188 --> 25:22.189
ஆம்.

25:26.944 --> 25:28.111
கடவுளே, என்ன நபர்கள் இவர்கள்.

25:28.737 --> 25:30.781
இவர் கூறுவதைவிட இவருக்கு
அதிகமாகத் தெரியுமா?

25:33.116 --> 25:34.117
சரி.

25:45.379 --> 25:46.380
ஹேய்.

25:52.344 --> 25:53.345
ஹேய்.

26:22.332 --> 26:24.710
- ஹேய், அருமையான ஷோ.
- நன்றி.

26:26.378 --> 26:27.671
உனக்கு லிஃப்ட் தரவா?

26:32.134 --> 26:33.385
சரி.

26:37.472 --> 26:39.182
- நிகழ்ச்சி எப்படிப் போனது?
- பரவாயில்லை.

26:39.183 --> 26:40.267
- அப்படியா?
- ஆம்.

27:11.840 --> 27:12.758
பிங்கோ.

27:21.183 --> 27:22.184
ஆம்.

27:22.684 --> 27:26.229
முதலில், அது வெஸ்ட்லேக்.
பைரம் ஹில்ஸ் இல்லை.

27:26.230 --> 27:28.564
- இதெல்லாம் உனக்கு எப்படி நினைவுள்ளது?
- உனக்கு எப்படி நினைவில்லை?

27:28.565 --> 27:29.983
எனக்கு தண்டனை கொடுத்தது நினைவுள்ளது.

27:30.567 --> 27:33.236
என்னைப் பார்க்காதே.
மாட்டிக்கொள்ளும்படி நான் கூறவில்லை.

27:33.237 --> 27:35.948
என் அம்மாவின் கார் டயர்களில்
புற்களும் சேறும் இருந்தது.

27:36.573 --> 27:38.617
உன் அம்மா காட்டிக்கொடுக்காதது
நம் அதிர்ஷ்டம்தான்.

27:39.201 --> 27:41.203
நான் உன்னைக் கெடுக்கிறேன் என்று
அவர் எப்போதும் நினைத்தார்.

27:41.703 --> 27:43.287
அவர் கூறியது சரியாக இருந்ததை
நான் வெறுக்கிறேன்.

27:43.288 --> 27:44.747
ஹேய், அவர் கூறியது சரியில்லை.

27:44.748 --> 27:47.334
நீ அனுபவித்தது, அனுபவிப்பது...

27:49.086 --> 27:50.128
உன் தவறு இல்லை.

27:50.879 --> 27:52.130
அதைக் கூறுவது கனிவானது.

27:53.173 --> 27:54.423
ஹேய், நீ இல்லையெனில்

27:54.424 --> 27:56.844
ஹை ஸ்கூலில் எனக்கு எந்த
மகிழ்ச்சியும் இருந்திருக்காது.

27:57.344 --> 27:59.513
நான் சலிப்பான, கால்பந்தாடும்
கணித மேதையாக இருந்தேன்.

28:00.222 --> 28:01.223
நீ...

28:02.641 --> 28:03.641
பயமின்றி இருந்தாய்.

28:03.642 --> 28:05.268
நான் மருந்துகள் எடுத்துக்கொள்ளாமல்
இருந்தேன்.

28:05.269 --> 28:06.478
நான் உன்னை ரசித்தேன்.

28:07.104 --> 28:08.105
இப்போதும்தான்.

28:08.605 --> 28:11.108
அதனால்தான் என் ஷோக்களுக்கு நீ வருகிறாயா?
என்னை ரசிக்கவா?

28:11.984 --> 28:13.318
உன்னை அங்கே பார்ப்பது
எனக்குப் பிடித்துள்ளது.

28:13.986 --> 28:15.362
நீ மீண்டும் உன்னைப் போலத் தெரிகிறாய்.

28:15.988 --> 28:17.281
அது எப்படித் தெரிகிறது?

28:19.908 --> 28:23.203
நான் செய்ய விரும்பி, ஆனால் செய்ய முடியாததை
எப்போதும் செய்யும் நபர் போல.

29:01.325 --> 29:02.326
ஓ, அடச்சே.

29:09.291 --> 29:10.375
ஓ, அடச்சே.

29:14.046 --> 29:15.672
அடச்சே. கடவுளே.

29:30.103 --> 29:32.688
ஆம். பரிசுக் கடையில் இருந்த மிக விலையதிகமான
பொருள் இதுதான்.

29:32.689 --> 29:34.775
இது அல்லது பலூன் பொக்கே இருந்தது, எனவே...

29:42.533 --> 29:43.909
உனக்கு எதுவும் வேண்டுமா?

29:44.743 --> 29:45.869
அவர்கள் யார்?

29:47.079 --> 29:48.287
எனக்குத் தெரியாது.

29:48.288 --> 29:49.706
நாசமாய்ப் போ.

29:51.416 --> 29:54.252
பார்னி, கமான். என்னை நம்பு. அவர்கள்
யாரென எனக்குத் தெரியாது.

29:54.253 --> 29:55.754
விஷயம் என்னவெனில், கூப்,

29:56.630 --> 29:57.631
நான் உன்னை நம்பவில்லை.

29:58.215 --> 29:59.465
உனக்கு ஏதோ நடக்கிறது, நண்பா.

29:59.466 --> 30:01.468
அது என்னவென்றோ, அதை ஏன் என்னிடம் சொல்ல
மறுக்கிறாய் என்றோ தெரியவில்லை.

30:02.135 --> 30:05.096
ஆனால் நான் உனக்கு உதவ முயல்கிறேன்,
நீ என்னிடம் பொய் சொல்கிறாய்.

30:05.097 --> 30:07.890
- ஹேய், பார், பார்ன், இது அப்படியில்லை.
- என் கையில் கட்டுக்கட்டாக பணத்தைக் கொடுத்தாய்.

30:07.891 --> 30:10.018
- பார்னி, கமான்...
- என்னிடம் பொய் சொல்லாதே!

30:17.651 --> 30:18.985
நான் உன்னைப் பாதுகாக்க முயல்கிறேன்.

30:18.986 --> 30:20.070
அருமை.

30:23.240 --> 30:24.283
நீ போக வேண்டும்.

30:24.867 --> 30:27.828
- என்ன பேசுகிறாய்?
- நீ போனால் சந்தோஷமாக இருப்பேன்.

30:41.216 --> 30:44.093
குட் மார்னிங். அப்பா. ஹெர்னாண்டெஸ்.

30:44.094 --> 30:46.263
- மார்னிங்.
- ரையன் நேற்று டேட் சென்றது உனக்குத் தெரியுமா?

30:46.805 --> 30:48.015
ஓ, ஆம். ஹேர் ஜெல்.

30:49.266 --> 30:50.267
அது எப்படி இருந்தது?

30:51.393 --> 30:53.144
- அவன் போகவில்லை.
- பரவாயில்லை, ஆர்ட்.

30:53.145 --> 30:54.980
சில நேரம் நாங்கள் இரவு தாமதமாக
வேலை செய்ய வேண்டும், அப்பா.

30:56.857 --> 30:58.066
நாம் வேலைக்குப் போகலாமா?

30:59.359 --> 31:00.360
ஹேய்.

31:00.861 --> 31:02.653
நான் முட்டை செய்துள்ளேன். உட்காரு.

31:02.654 --> 31:04.114
அவர் முட்டை செய்துள்ளார்.

31:08.744 --> 31:09.745
எனவே,

31:10.412 --> 31:12.955
அந்தக் குப்பைத்தொட்டி ஆய்வில் எதுவும்
பயனுள்ளது கிடைத்ததா?

31:12.956 --> 31:15.042
ஆம். ரத்த மாதிரி கிடைத்தது.

31:16.043 --> 31:19.087
சம்பவ இடத்தில் அம்மோனியாவில் இருந்த தடத்துடன்
ஆண்ட்ரூ கூப்பரின் ரத்தம் பொருந்துகிறது.

31:21.840 --> 31:24.133
- மீண்டும் சொல்.
- அது பொருந்துவதாக ஆய்வகத்தில் கூறினர்.

31:24.134 --> 31:26.470
நாம் இங்கே உன் டேட் பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறோமா?

31:27.346 --> 31:28.639
நாம் போக வேண்டும். இது முக்கியமானது.

31:29.723 --> 31:31.516
நான் டேட் செல்லவேயில்லை.

31:31.517 --> 31:33.060
ஹெர்னாண்டெஸ், வா.

32:13.350 --> 32:14.685
திருமதி லெவிட்?

32:15.269 --> 32:16.687
விருந்தினர்கள் வரத் தொடங்குகின்றனர்.

32:23.402 --> 32:26.029
ஹாய், அன்பே.
நான் வருந்துகிறேன்.

32:26.864 --> 32:28.657
நான் மிகவும் வருந்துகிறேன்.
நாங்கள் உனக்காக இருக்கிறோம்.

32:30.742 --> 32:32.703
இன்று நாங்கள் துக்கப்படுகிறோம்

32:37.332 --> 32:39.209
உன்னை மிஸ் செய்வோம் பால்!

32:43.297 --> 32:45.215
இது என்னவாக இருந்தாலும் நீ இதைவிடச்
சிறப்பானதைப் பெற்றிருக்க வேண்டும்.

32:52.389 --> 32:54.098
- ஓ, கண்ணே.
- நான் நலம்தான்.

32:54.099 --> 32:55.601
கனிவாக எதுவும் எழுது.

33:16.288 --> 33:18.540
- ஹேய்.
- நீ இங்கே வந்ததில் மகிழ்ச்சி.

33:20.459 --> 33:21.667
நாங்கள் மிகவும் வருந்துகிறோம், சாம்.

33:21.668 --> 33:23.002
- நன்றி, நிக்.
- எப்படி இருக்கிறாய்?

33:23.003 --> 33:24.962
நான் இன்னும்
குடிக்கத் தொடங்கவில்லை.

33:24.963 --> 33:26.507
தாமதமாகக் குடிக்கிறாயா?

33:27.007 --> 33:29.134
பாலின் அம்மா ஃப்ளோரிடாவிலிருந்து
வந்துள்ளார்.

33:29.718 --> 33:31.427
ஒன்று அவருக்கு மிகவும் வயதாகியிருக்க வேண்டும்

33:31.428 --> 33:34.348
அல்லது நாங்கள் விவாகரத்து வாங்கப் போவதை
அவரிடம் பால் கூறவில்லை.

33:35.182 --> 33:37.308
- எதுவாக இருந்தாலும், மிகவும் விநோதமாக உள்ளது.
- கருமம்.

33:37.309 --> 33:38.392
ஆம்.

33:38.393 --> 33:40.561
குறைந்தது நான் சிலரைவிட நன்றாகக்
கையாள்கிறேன்.

33:40.562 --> 33:41.980
நன்றி.

33:43.565 --> 33:45.067
- நீங்கள் கனிவானவர்.
- ஆம்.

33:46.235 --> 33:47.528
மிஸ்டியைக் குறை சொல்ல முடியாது.

33:48.111 --> 33:51.198
அதாவது, இது ஸ்பாட்லைட்டுடன் கூடிய
அதிக இலக்கு இருக்கும் சூழல்.

33:51.740 --> 33:54.909
நம் முன்னாள் காதலன் மீதிருக்கும் மண்
காய்வதற்குள், ஏன் அடுத்த ஆளைத் தேடக் கூடாது?

33:54.910 --> 33:56.870
அந்தத் திறனை நாம் பாராட்டியாக வேண்டும்.

34:00.624 --> 34:03.334
நான் குடிக்கத் தயார் என நினைக்கிறேன்.

34:03.335 --> 34:04.419
இதோ வருகிறோம்.

34:05.170 --> 34:06.463
ஆம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

34:10.634 --> 34:11.635
ஹேய்.

34:57.054 --> 34:58.056
சரியாக உள்ளது.

34:58.640 --> 34:59.641
இல்லை.

35:00.475 --> 35:01.768
அதைக் கழட்டாதே.

35:47.189 --> 35:48.606
இது அழகான சேவை.

35:48.607 --> 35:49.691
நன்றி.

35:51.026 --> 35:52.193
எப்படி இருக்கிறாய்?

35:52.194 --> 35:53.487
நான் சிறப்பாக இருக்கிறேன், கூப்.

35:55.322 --> 35:56.572
உனக்கு எதுவும் வேண்டுமா?

35:56.573 --> 35:57.658
அன்பே.

35:58.450 --> 35:59.951
ஸ்ட்ராங்கான ஆல்கஹால் வேண்டுமெனில்
என்னிடம் சொல்.

35:59.952 --> 36:01.036
- சரி.
- கூப்.

36:02.204 --> 36:04.039
பிறகு என்னுடன் வருகிறாயா?
நாம் பேச வேண்டும்.

36:06.792 --> 36:08.417
- அருமை.
- வந்ததற்கு மிக்க நன்றி.

36:08.418 --> 36:10.003
வருகிறேன்.

36:11.839 --> 36:13.841
அடக் கடவுளே. வருகிறேன்!

36:16.760 --> 36:18.011
மிஸ் கூப்பர்.

36:18.971 --> 36:21.097
- டிடெக்டிவ்.
- திரு. கூப்பர் வீட்டில் இருக்கிறாரா?

36:21.098 --> 36:22.349
இல்லை.

36:23.267 --> 36:25.727
இந்த இடத்தைத் தேட வாரன்டுடன் வந்துள்ளோம்.

36:27.396 --> 36:28.647
நான் பேன்ட் எதுவும் அணியவில்லை.

36:30.315 --> 36:31.650
தெரிகிறது.

36:33.110 --> 36:35.070
- நீங்கள் யார்?
- நான் நண்பர்தான்.

36:36.071 --> 36:37.072
சரி.

36:42.828 --> 36:45.204
- ஆம்.
- வீட்டில் வேறு யாரும் உள்ளனரா?

36:45.205 --> 36:46.999
- இல்லை.
- சரி.

36:48.250 --> 36:49.251
போகலாம்.

37:00.846 --> 37:02.638
நண்பர்களை அழைத்துச் செல்லும் வரை
நான் போக மாட்டேன்.

37:02.639 --> 37:05.141
முழு சூட்டையும் கூட்டிச் செல். எப்படியும்
ஹாம்ப்டன்ஸில் ஆகஸ்ட் செய்கிறோம்.

37:05.142 --> 37:07.810
நீ இதுவரை யான்கீ ஸ்டேடியத்திற்குப் போனதில்லை
என்று நம்ப முடியவில்லை.

37:07.811 --> 37:08.936
நான் ஒரு மெட் ரசிகர்.

37:08.937 --> 37:10.021
வருந்துகிறேன்.

37:10.022 --> 37:11.189
அது நல்லது இல்லை.

37:11.190 --> 37:12.481
- நண்பர்களே.
- கூப்.

37:12.482 --> 37:14.151
- ஹேய்.
- ஓ, நண்பா.

37:15.527 --> 37:16.861
நீ எப்படி இருக்கிறாய்?

37:16.862 --> 37:18.404
முழுவதும் காயத்துடன் இருக்கிறேன்.

37:18.405 --> 37:19.864
ஆம், அடச்சே.

37:19.865 --> 37:22.909
எனக்கு ஒரு இடம் தெரியும்.
கிரையோதெரபி. அற்புதமானது.

37:22.910 --> 37:23.993
அந்த இணைப்பை உனக்கு அனுப்புகிறேன்.

37:23.994 --> 37:25.661
என்ன அது? ஐஸ் குளியல் போலவா?

37:25.662 --> 37:28.748
இல்லை, இன்னும் சிறப்பானது. அதை ஹொக்கய்டோவில்
செய்யத் தொடங்கினேன்.

37:28.749 --> 37:30.417
ஜப்பானியர்களுக்கு விஷயம் தெரிகிறது.

37:31.585 --> 37:33.629
அந்த ரௌடிகள் பார்க்க எப்படி இருந்தனர்?

37:34.129 --> 37:36.339
என்னை வெளுத்து வாங்கியவர்கள்
போல இருந்தனர்.

37:36.340 --> 37:37.924
வரியாக நாம்
செலுத்தும் பணத்திற்கு,

37:37.925 --> 37:39.967
போலீஸ் இதை இன்னும் வேகமாக
விசாரிக்க வேண்டும்.

37:39.968 --> 37:41.512
முதலில் பால், பிறகு இது.

37:42.179 --> 37:43.679
சொத்து மதிப்புகள் குறையப் போகின்றன.

37:43.680 --> 37:46.474
தெரியும். டயேன் ஒவ்வொரு
மணிநேரத்திற்கும் ஸில்லோ ரீஃப்ரெஷ் செய்கிறாள்.

37:46.475 --> 37:47.559
அதுதான் அவளுடைய புதிய விஷயம்.

37:48.060 --> 37:49.436
பார்னி எப்படி இருக்கிறான்
என யாருக்கும் தெரியுமா?

37:49.937 --> 37:52.022
- நீ அவனைப் பார்த்தாயா, கூப்?
- ஆம், அவன் சமாளிக்கிறான்.

37:52.814 --> 37:54.315
நடந்ததைப் பார்க்கும்போது,

37:54.316 --> 37:57.778
சமந்தா அந்தப் பெரிய வீட்டில் இனி
இருக்க விரும்ப மாட்டாள்.

37:58.362 --> 38:01.113
அவள் அதை விற்பாள் என நினைக்கிறாயா?
அது அருமையான வீடு, நண்பா.

38:01.114 --> 38:06.118
தெரியவில்லை, ஆனால் கொலை நடந்த வீடுகள்
மார்கெட்டைவிட 25% குறைவாக வாங்கப்படும்.

38:06.119 --> 38:07.912
- கடவுளே.
- ஆமாம்.

38:07.913 --> 38:11.208
அதாவது, அவர்கள் பிரியும் முன் பேஸ்மென்ட்டில்
அவன் பொழுதுபோக்கு அறையை அமைத்தான்.

38:11.708 --> 38:14.127
கொலை நடந்த இடத்தில் வசிப்பது எனக்கு
விநோதமாக இருக்கும்.

38:14.711 --> 38:17.464
மார்கெட்டைவிட 25% குறைந்த விலைக்கு,
அது உனக்குப் பழகிவிடும்.

38:31.812 --> 38:33.187
- மெக்நீல், ரூஸோ.
- சொல்லுங்கள், மேடம்.

38:33.188 --> 38:35.022
என்னுடன் மேலே வாருங்கள்.
நாம் படுக்கையறையில் தொடங்குவோம்.

38:35.023 --> 38:36.775
- சரி.
- தொடங்குவோம்.

39:29.328 --> 39:30.329
இந்தா.

39:31.997 --> 39:33.290
கடவுளே, நீங்கள் என்னை வெறுக்க வேண்டும்.

39:33.999 --> 39:35.459
அதாவது, நானே என்னை வெறுப்பேன்.

39:38.086 --> 39:40.839
உங்கள் இருவருக்குள்ளும் எதுவும் இல்லை
என்றார். நான்...

39:43.091 --> 39:45.677
நான் அவரை நிஜமாக நேசித்தேன், தெரியுமா?

39:46.261 --> 39:47.261
ஆம்.

39:47.262 --> 39:50.641
எங்கள் வாழ்க்கை முழுவதும் நாங்கள் ஒன்றாக இருப்போம்
என நினைத்தேன். இப்போது அவர்...

39:51.975 --> 39:53.477
ஆம், அது கடினம்தான்.

39:53.977 --> 39:55.395
ஹென்ரி எப்படி இருக்கிறான்?
நான் அவனைச் சந்திக்கலாமா?

39:56.146 --> 39:58.982
சமந்தா, அவர்களிடம் கிட்டத்தட்ட
ப்ரஃபிடரோல்ஸ் காலியாகிவிட்டது.

39:59.483 --> 40:01.817
பால் தன் விருந்தினர்களுக்கு இனிப்பு
கொடுக்க விரும்பியிருப்பான்.

40:01.818 --> 40:03.778
ஆம். நன்றி, பமீலா. நான் அவர்களிடம்
தெரிவிக்கிறேன்.

40:03.779 --> 40:07.199
பமீலா! உங்களை ஒருவழியாகச்
சந்தித்ததில் மகிழ்ச்சி.

40:08.492 --> 40:10.618
உங்கள் மகனை நான் மிகவும் நேசித்தேன்.

40:10.619 --> 40:13.204
நாம் சந்திப்பது தெரிந்தால்
அவர் மகிழ்ச்சியடைவார்.

40:13.205 --> 40:14.289
மன்னிக்கவும், கண்ணே.

40:15.332 --> 40:16.332
நீ யார்?

40:16.333 --> 40:18.501
பமீலா, இது மிஸ்டி,

40:18.502 --> 40:21.046
உங்கள் மகன் இறக்கும் முன்
செக்ஸ் வைத்துக்கொண்டிருந்த பெண்.

40:51.201 --> 40:52.618
பாஸ், எங்கே இருக்கிறீர்கள்?

40:52.619 --> 40:53.704
பேஸ்மென்ட்.

40:54.204 --> 40:55.622
இதை நீங்கள் பார்க்க வேண்டும்.

40:57.291 --> 40:58.625
டிடெக்டிவ் லின்.

41:01.044 --> 41:02.045
என்ன?

41:09.094 --> 41:10.804
அடச்சே.

41:11.305 --> 41:12.306
ஆம்.

41:14.016 --> 41:15.017
- ஹேய், கூப்.
- ஹேய்.

41:16.518 --> 41:17.519
என்னுடன் வருகிறாயா?

41:19.188 --> 41:20.189
சரி.

41:25.527 --> 41:27.738
- அந்த டிடெக்டிவ் எனக்கு கால் செய்தார்.
- அப்படியா?

41:28.572 --> 41:30.073
அது வழிப்பறி என அவர் நினைக்கவில்லை.

41:30.866 --> 41:31.867
ஆம், தெரியும்.

41:33.035 --> 41:34.953
காரில் இருந்தவன் யார், கூப்?

41:35.871 --> 41:37.706
- எனக்குத் தெரியாது.
- சரி.

41:38.415 --> 41:39.999
உனக்கு இப்போது நடப்பது
என்னவாக இருந்தாலும்

41:40.000 --> 41:42.169
இப்போது எனக்குக் கூறாமல் இருப்பதற்கு
இது சரியான நேரம் இல்லை.

41:42.794 --> 41:45.296
நன்றி, ஆனால் நீ என்னைப் பற்றிக்
கவலைப்பட வேண்டியதில்லை.

41:45.297 --> 41:47.089
- உன் பிள்ளைகள்...
- நம் பிள்ளைகள்.

41:47.090 --> 41:49.884
...தங்கள் அப்பா அடிவாங்கியதைப் பார்த்தனர்.

41:49.885 --> 41:52.094
அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள்
விரைவில் மீளப் போவதில்லை.

41:52.095 --> 41:53.930
சரி, என்னைப் பற்றி என்ன?
என் அதிர்ச்சி?

41:53.931 --> 41:55.516
- ஆம், சொல்.
- சரியா?

41:56.475 --> 41:58.268
சொல். என்ன நடக்கிறது?

41:58.769 --> 42:01.230
நான் இங்கே உனக்காக இருக்க முயல்கிறேன்,
ஆனால் நீ ஏதாவது கூற வேண்டும்.

42:01.939 --> 42:02.940
மெல்...

42:04.942 --> 42:05.943
சரி.

42:08.570 --> 42:09.988
- நான் இதைப் பேசியாக வேண்டும்.
- சரி.

42:11.114 --> 42:12.115
கடவுளே.

42:16.912 --> 42:18.789
ஹேய், ஆலி. இது சரியான நேரம் இல்லை.

42:19.373 --> 42:21.041
எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.
அவர்கள் உள்ளே வந்துவிட்டனர்.

42:21.875 --> 42:23.876
யார்? நீ என்ன பேசுகிறாய்?
பொறுமையாகச் சொல்.

42:23.877 --> 42:28.005
போலீஸ். அவர்களிடம் வாரன்ட் இருந்தது...
அடச்சே. எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.

42:28.006 --> 42:30.466
என்ன? போலீஸுக்கு என்ன?

42:30.467 --> 42:31.802
ஆண்டி.

42:32.678 --> 42:33.679
அவர்கள் வருகின்றனர்.

42:39.768 --> 42:40.853
உங்களுக்கு ஃபிஷர் தெரியுமா?

42:41.436 --> 42:42.937
அவனைப் பற்றிய ஏதொவொன்று
வித்தியாசமாகத் தெரிகிறது.

42:42.938 --> 42:44.189
நான்தான் அவனது தாடையில்
அறுவை சிகிச்சை செய்தேன்.

42:46.733 --> 42:47.734
அருமை.

42:48.402 --> 42:50.528
ஹேய், கேட்,
உன்னிடம் கொஞ்சம் பேசலாமா?

42:50.529 --> 42:52.864
நடந்ததைக் கேள்விப்பட்டேன்.
நீ நலமா, கூப்?

42:52.865 --> 42:53.948
ஆம், நான் நலம்தான்.

42:53.949 --> 42:56.952
- உன்னை நன்றாக வெளுத்துள்ளனர், ஹ்ம்ம்?
- ஆம்.

42:58.370 --> 43:00.288
கேட், கொஞ்சம் பேசலாமா?

43:00.289 --> 43:01.497
சரி. என்ன விஷயம்?

43:01.498 --> 43:03.083
இங்கே இல்லை.

43:08.839 --> 43:09.840
என்ன விஷயம்?

43:11.133 --> 43:12.134
எனக்கு ஒரு வக்கீல் வேண்டும்.

43:12.885 --> 43:14.678
பாலின் கொலையில் என்னைச்
சந்தேகிக்கின்றனர்.

43:15.304 --> 43:16.305
அது எப்படி?

43:17.973 --> 43:19.099
அது சிக்கலானது.

43:20.184 --> 43:22.102
- இதுதான் என் தொழிலே, கூப்.
- ஆம்.

43:23.896 --> 43:25.355
நான் சாமுடன் செக்ஸ் வைத்துக்கொண்டிருந்தேன்.

43:26.982 --> 43:27.982
மேலும் பால் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்

43:27.983 --> 43:32.945
அவனுடன் பொதுவில் ஒரு சச்சரவு ஏற்பட்டது.

43:32.946 --> 43:35.072
நிக்கின் பார்ட்டி. அதைப் பற்றி
டாம் கூறினார்.

43:35.073 --> 43:36.575
நீ என் வக்கீலாக இருக்க வேண்டும்.

43:37.075 --> 43:39.076
நான் இதில் அப்பாவி.

43:39.077 --> 43:41.245
- கூப், என்னால் உன் கேஸை எடுத்துக்கொள்ள முடியாது.
- கண்டிப்பாக முடியும்.

43:41.246 --> 43:43.498
இல்லை, நிஜமாகவே. சாமும் நானும் நண்பர்கள்.

43:44.416 --> 43:45.500
நாம் நண்பர்கள் இல்லையா?

43:45.501 --> 43:47.502
- கண்டிப்பாக, ஆனால்...
- எனில் இந்த கேஸை எடுத்துக்கொள்.

43:47.503 --> 43:49.670
நான் உனக்குக் கண்டிப்பாக உதவுகிறேன்.

43:49.671 --> 43:52.632
ஆனால் என்னால் முடியாது.
சரி, நாளை என் அலுவலகத்திற்கு கால் செய்.

43:52.633 --> 43:54.842
என் சக பணியாளரான ராப் மேரோவிடம்
உன்னை அறிமுகப்படுத்துகிறேன்.

43:54.843 --> 43:56.344
இல்லை, அது நீயாகத்தான் இருக்க வேண்டும்.

43:56.345 --> 43:57.678
- கூப்...
- அது...

43:57.679 --> 43:59.055
நீதான் இதில் சிறந்தவள்.

43:59.056 --> 44:00.932
- நீதான் இந்தக் கேஸை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சாமின் தோழியாக,

44:00.933 --> 44:02.433
இது சாத்தியமான கருத்து முரண்பாடு.

44:02.434 --> 44:03.560
சரி, கேட்...

44:04.478 --> 44:05.728
நான் தெளிவாகச் சொல்லவில்லை
என நினைக்கிறேன்.

44:05.729 --> 44:09.106
நீ இந்தக் கேஸை எடுத்துக்கொள்ள வேண்டும் எனும்போது,
நான் கேட்கவில்லை, கூறுகிறேன்.

44:09.107 --> 44:10.399
நீ என் கேஸை எடுத்துக்கொள்ள வேண்டும்

44:10.400 --> 44:11.484
இல்லையெனில்

44:11.485 --> 44:13.862
நீ உன் மகளின் காதலனுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை
டாமிடம் சொல்வேன்.

44:17.282 --> 44:20.285
அதை அலிஸாவும் ஏற்றுக்கொள்வாள்
என்று தோன்றவில்லை, இல்லையா?

44:24.373 --> 44:25.498
நீ என்ன செய்கிறாய், கூப்?

44:25.499 --> 44:26.583
நான் செய்ய வேண்டியதைச் செய்கிறேன்.

44:29.169 --> 44:31.337
மேலும் என்னால் ரீடெய்னர் கட்டணத்தையும்
முன்னராகவே கொடுக்க முடியாது,

44:31.338 --> 44:33.047
ஆனால் இது முடிந்ததும் எனக்கு பில் அனுப்பலாம்.

44:33.048 --> 44:34.299
நாசமாய்ப் போ.

44:36.635 --> 44:38.136
அதை சரி என்று எடுத்துக்கொள்கிறேன்.

44:53.068 --> 44:56.321
ஹேய். அந்த ஸ்காட்ச் கொஞ்சம் கொடு.

44:58.866 --> 44:59.867
அழகாக உள்ளது.

45:02.244 --> 45:03.245
சீயர்ஸ்.

45:39.448 --> 45:40.449
ஆண்ட்ரூ கூப்பர்,

45:40.949 --> 45:43.827
பால் லெவிட்டின் கொலைக்காக உங்களைக்
கைதுசெய்கிறோம்.

46:54.064 --> 46:55.232
வலதுபக்கம் திரும்புங்கள்.

47:17.421 --> 47:18.589
புரூஸ்

47:24.219 --> 47:25.762
வருகிறாயா?

47:32.811 --> 47:35.646
கடந்த சில மாதங்களாக,
ஒவ்வொரு வாரமும் வீடுகளுக்குள்

47:35.647 --> 47:37.023
அத்துமீறி நுழைந்தபிறகு,

47:37.024 --> 47:39.233
நான் செய்யாத குற்றத்திற்காக மாட்டுவது
என்பது முரணாகத் தெரியலாம்.

47:39.234 --> 47:40.359
கொலையில் சந்தேகத்திற்குரியவர்
கைதுசெய்யப்பட்டுள்ளார்

47:40.360 --> 47:42.237
ஆனால் சமீபமாக எனக்கு இந்த
மூழ்கும் உணர்வு வருகிறது.

47:43.155 --> 47:44.155
இப்படித்தான் 2008 இல்

47:44.156 --> 47:46.074
அந்த லீமன் கேடுகெட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள்

47:46.742 --> 47:48.868
அல்லது பேன்க்மேன்-ஃபிரைட், பொருளாதாரத்தில்
அவர் ஏற்படுத்திய எட்டு பில்லியன் டாலர்

47:48.869 --> 47:50.703
ஓட்டையை யாரேனும் கண்டறிவதற்காகக்
காத்திருக்கும்போது, பஹாமாஸில்

47:50.704 --> 47:53.749
ஒளிந்திருந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு
உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்துகொள்வேன்.

47:55.626 --> 47:58.003
கேட் ரெஸ்னிக். நான்தான் திரு. கூப்பரின்
பிரதிநிதி.

48:01.131 --> 48:04.134
இறந்தவரின் நினைவஞ்சலியின்போது
ஆண்ட்ரூ கூப்பர் கைதுசெய்யப்பட்டார்

48:27.950 --> 48:31.202
உங்களிடம் இருப்பது சூழல் சார்ந்த
ஆதாரங்களின் மிகுதியாகும்.

48:31.203 --> 48:33.579
மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம்
நீங்கள் ஒரு வாரன்டை வழங்கியதால்,

48:33.580 --> 48:37.083
அதைப் பெறுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை
என்பதைச் சொல்லவே வேண்டாம்.

48:37.084 --> 48:39.710
அந்த வீட்டின் லீஸ் அவரிடம் இல்லை.
அவர் வாடகை கூட கொடுப்பது இல்லை.

48:39.711 --> 48:42.005
இந்த வாரயிறுதிக்குள் இந்தக் கேஸை
தள்ளுபடி செய்ய வைத்துவிடுவோம்.

48:44.800 --> 48:46.885
இதை திரு. கூப்பரின் காரில்
கண்டறிந்தோம்.

48:48.929 --> 48:50.848
- அது என்னுடையது இல்லை.
- இன்னொரு வார்த்தை பேசாதே.

49:07.656 --> 49:10.826
நாளை நான் பிள்ளைகளைப் பற்றியும்,
மெல்லைப் பற்றியும், 25 ஆண்டுகள் முதல்

49:11.326 --> 49:13.495
ஆயுள் வரையான சாத்தியமான தண்டனை
பற்றியும் நான் யோசிப்பேன்.

49:14.121 --> 49:17.916
ஆனால் நடக்கக்கூடிய மோசமான விஷயம்
நடந்துவிட்டது.

49:19.209 --> 49:21.460
சமீப காலத்தில் அந்த செல்லில்
இரவைக் கழித்ததுதான்

49:21.461 --> 49:23.130
எனக்கு நினைவிருக்கும் முதல் நேர்மையான விஷயம்.

49:24.298 --> 49:27.467
அல்லது அதற்கான முயற்சிகள் அனைத்திலும்
நான் களைப்படைந்திருக்கலாம். தெரியவில்லை.

49:30.470 --> 49:33.765
எப்படி இருந்தாலும், நீண்ட காலம் கழித்து,
அந்த இரவில்தான்...

49:36.018 --> 49:37.769
முதன்முறையாக என்னால்
தூங்க முடிந்தது.

50:47.673 --> 50:49.675
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
