WEBVTT

01:07.526 --> 01:08.819
மூன்று துப்பாக்கிச் சூடுகள்.

01:08.902 --> 01:11.405
தலையில் ஒன்று. உடலில் இரண்டு.

01:13.615 --> 01:15.450
இது வீட்டுக்குள் அத்துமீறி வந்தது
தோல்வியடைந்ததால் நடந்ததா?

01:16.702 --> 01:18.954
இப்போதைக்குச் சொல்ல முடியாது,
ஆனால் இது

01:19.037 --> 01:21.123
அதில் இவ்வளவு குண்டு தேவையில்லை,
துல்லியமாகவும் சுட்டிருக்கின்றனர்.

01:21.790 --> 01:25.919
பக்கவாட்டில் இரண்டு,
பிறகு தலையில் ஒன்று.

01:27.754 --> 01:29.089
கொலை போலத்தான் தெரிகிறது.

01:29.673 --> 01:31.800
இதைப் பற்றி கொஞ்சம்
உற்சாகம் குறைவாக இருக்க முடியுமா?

01:34.803 --> 01:35.804
”பால் லெவிட்.”

01:35.888 --> 01:37.681
தபாலின்படி இவர்தான் உரிமையாளர்.

01:37.764 --> 01:39.683
ஆனால் எந்தக் குடும்பப் படத்திலும் இல்லை.

01:40.184 --> 01:41.185
விவாகரத்தா?

01:41.810 --> 01:42.811
ஏதோவொன்று.

01:42.895 --> 01:45.647
டிடெக்டிவ் லின், இங்கே கொஞ்சம்
துப்பாக்கிச் சூட்டின் மிச்சம் இருக்கிறது.

01:45.731 --> 01:46.648
இறந்தவர் சுட்டுள்ளாரா?

01:46.732 --> 01:49.151
இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது,
ஆனால் அப்படித்தான் தெரிகிறது.

01:49.234 --> 01:50.152
ஆனால் துப்பாக்கி இல்லை.

01:50.235 --> 01:52.446
இல்லை. நீங்கள் வரும் முன் முழுமையாகத்
தேடிவிட்டோம்.

01:53.113 --> 01:54.990
ஆதாரம்

01:56.992 --> 01:57.993
உனக்கு அந்த வாசம் வருகிறதா?

01:58.076 --> 02:01.121
- என்ன, பிண நாற்றமா?
- இல்லை. அம்மோனியா.

02:08.794 --> 02:10.547
யாரோ இங்கே சுத்தம் செய்ய முயன்றுள்ளனர்.

02:17.596 --> 02:18.805
தயாராக இரு, ஹெர்னாண்டெஸ்.

02:19.306 --> 02:20.891
நமக்கு ஒரு கொலை கேஸ் வந்துள்ளது.

03:41.471 --> 03:43.307
நாம் வீட்டில் இருந்தபோது இது நடந்துள்ளது
என்பதை நம்ப முடியவில்லை.

03:43.390 --> 03:45.058
நேற்று மாலை 6 மணியிலிருந்து

03:45.142 --> 03:47.311
இன்று காலை 6 மணிக்குள் எதையாவது
பார்த்தீர்களா அல்லது கேட்டீர்களா?

03:47.394 --> 03:50.814
- நாங்கள் வீட்டின் இந்தப் பக்கம் இருப்பதில்லை.
- வீட்டின் முன்பக்கம்?

03:51.773 --> 03:53.317
செக்யூரிட்டி கேமராக்கள் உள்ளதா?

03:53.817 --> 03:54.860
நாங்கள் நேற்றிரவு வீட்டில் இருந்தோம்.

03:54.943 --> 03:57.237
பொதுவாக வீட்டில் இருக்கும்போது அதை
இயக்குவதில்லை.

03:57.321 --> 03:58.780
இது மிகவும் பாதுகாப்பான சுற்றுப்புறம்.

04:00.157 --> 04:02.242
நீங்கள் கடைசியாக திரு. லெவிட்டை
எப்போது பார்த்தீர்கள்?

04:02.326 --> 04:04.369
பால் சில மாதங்களுக்கு முன்
வேறு வீட்டிற்குச் சென்றார்.

04:04.870 --> 04:06.288
அவர்கள் விவாகரத்துக்கு இடையே உள்ளனர்.

04:06.788 --> 04:09.082
எனவே அவர் வீட்டை காலி செய்யும்போதுதான்
திரு. லெவிட்டை கடைசியாகப் பார்த்தீர்களா?

04:09.166 --> 04:10.626
- இல்லை. அவரை ஆங்காங்கே பார்ப்போம்.
- இல்லை.

04:10.709 --> 04:13.128
அவர் கிளப்பில் கோல்ஃப் ஆடுவார், எல்லா
சமூக நிகழ்வுகளுக்கும் வருவார்.

04:16.005 --> 04:17.925
மன்னிக்கவும், அது என்னவென்று பார்க்க வேண்டுமா?

04:18.007 --> 04:19.885
இல்லை. அது நொறுக்கிய ஆய்ஸ்டர் ஓடுகள்.

04:19.968 --> 04:21.720
- பெடான்க் கோர்ட்டுக்காக.
- கண்டிப்பாக.

04:21.803 --> 04:24.139
பால், அவர் உங்கள் நண்பரா?

04:24.223 --> 04:25.766
அப்படிச் சொல்லலாம்.

04:26.934 --> 04:29.978
அவரைக் காயப்படுத்த விரும்பக்கூடிய அல்லது
அவரை அச்சுறுத்தியிருக்கக்கூடிய

04:30.062 --> 04:32.689
யாரையும் உங்களுக்குத் தெரியுமா?

04:32.773 --> 04:34.191
இல்லை. அப்படி யாரும் இல்லை.

04:34.274 --> 04:36.276
இருங்கள், நிக் வீட்டில் அவர் சண்டை
போட்டதாகக் கூறினீர்களே?

04:36.360 --> 04:38.612
- அது ஒன்றுமில்லை.
- நிக் யார்?

04:38.695 --> 04:39.863
நிக் பிராண்டஸ்.

04:41.573 --> 04:42.824
என்பிஏ பிளேயர்?

04:44.451 --> 04:46.411
ஆம், அருகில்தான் அவர் வசிக்கிறார்.

04:47.955 --> 04:51.250
அந்த நிக் பிராண்டஸ் திரு. லெவிட்டுடன்
சண்டை போட்டாரா?

04:51.333 --> 04:53.752
அது நியாயமான சண்டை போலத் தெரியவில்லை.

04:53.836 --> 04:56.380
இல்லை. நிக் வீட்டில் பார்ட்டி நடந்தது.

04:56.463 --> 05:00.425
சரி. எனில் அந்த பார்ட்டியில் திரு. லெவிட்
யாருடன் சண்டையிட்டார்?

05:03.220 --> 05:05.055
இது ஒரே ஒரு விதத்தில்தான்
நடந்திருக்க வேண்டும்.

05:05.138 --> 05:06.640
- ஹேய்.
- ஹேய், கூப்.

05:07.266 --> 05:09.643
அதாவது, சாம்தான் செய்திருப்பாள்
என்கிறேன், சரியா?

05:10.227 --> 05:12.187
இந்த விவாகரத்தில் அவர்கள் இருவரும்
பெரிய மோதலில் உள்ளனர்,

05:12.271 --> 05:13.647
இப்போது சொத்து எல்லாம்
அவளுக்குத்தான் போகும்.

05:14.481 --> 05:16.525
அவளுக்கு நோக்கம், வாய்ப்பு இருந்தது…

05:16.608 --> 05:17.943
சாம் ஊரில் இல்லை என்று கிரேஸ் கூறினாள்.

05:19.611 --> 05:22.781
பாலின் உணவகங்களில் முதலீடு செய்தவர்களுக்கு
பெரிய ரௌடி கூட்டங்களுடன் தொடர்புள்ளது.

05:22.865 --> 05:25.367
- அவன் தவறான ஆளைக் கோபப்படுத்தியிருக்கலாம்.
- அல்லது எவனோ ஒருவனாக இருக்கலாம்.

05:25.450 --> 05:27.578
அருமை. தொழில்முறைக் கொலைகாரன்.
தொடர் கொலைகாரன்.

05:28.370 --> 05:31.373
அடச்சே. நான் துப்பாக்கி வாங்கப் போகிறேன்.

05:31.456 --> 05:32.416
என்ன நினைக்கிறாய், கூப்?

05:32.499 --> 05:33.750
கோர்டி துப்பாக்கி வாங்கியவுடனேயே,

05:33.834 --> 05:35.878
அவன் தன் ஆணுறுப்பையே சுட்டுக்கொள்ள
ரொம்ப நேரம் ஆகாது.

05:38.881 --> 05:39.882
நாசமாய்ப் போ.

05:40.716 --> 05:44.720
மிஸ். லெவிட், பாஸ்டனிலிருந்து விரைவாக இங்கே
வந்ததற்கு நன்றி.

05:45.387 --> 05:47.306
கண்டிப்பாக. நீங்கள் கால் செய்தவுடனேயே
நான் கிளம்பிவிட்டேன்.

05:47.389 --> 05:48.891
உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன்.

05:48.974 --> 05:51.101
என் மகன்களிடம் இதை
எப்படிக் கூறப் போகிறேன் எனத் தெரியவில்லை.

05:53.896 --> 05:57.441
பால் மோசமானவன்தான், ஆனால்,
அவன்தான் அவர்களின் அப்பா.

05:58.025 --> 05:59.651
உங்கள் பெற்றோரிடம் பேசினேன்,

05:59.735 --> 06:04.948
நீங்களும் உங்கள் மகன்களும் நேற்றிரவு
பிறந்தநாள் கொண்டாட்டத்தில்

06:05.032 --> 06:06.033
அவர்களுடன்தான் இருந்தீர்கள் என்று
அவர்கள் உறுதிசெய்தனர்.

06:06.617 --> 06:07.910
நல்லவேளை,
நாங்கள் அங்கே சென்றோம்.

06:07.993 --> 06:09.912
நாங்கள் வீட்டிலிருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்
என யோசிக்க முடியவில்லை.

06:11.205 --> 06:15.209
சரி, திரு. லெவிட் ஏன் உங்கள் வீட்டில்
இருந்தார்?

06:15.292 --> 06:16.627
அவர் இப்போது அங்கே வசிக்கவில்லைதானே?

06:17.211 --> 06:19.588
அவர் பௌண்ட் ரிட்ஜில் ஓர் இடத்தை
வாங்கியிருக்கிறார்,

06:19.671 --> 06:21.965
ஆனால் அவர் முழுமையாக அங்கே
குடிபெயரவில்லை, புரிகிறதா?

06:22.049 --> 06:25.594
எனவே, அவ்வப்போது அவர் எதையாவது
எடுக்க வருவார்.

06:25.677 --> 06:26.929
அது உங்களுக்குப் பரவாயில்லையா?

06:27.930 --> 06:29.223
இல்லை.

06:30.307 --> 06:31.934
ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்?

06:32.017 --> 06:33.560
நான் பூட்டுகளை மாற்றப் போகிறேன் என்றபோது,

06:33.644 --> 06:36.230
அவர் வீட்டுக்கான தவணைத் தொகையைக்
கட்ட மாட்டேன் என மிரட்டினார்.

06:36.730 --> 06:40.150
என்னால் முடிந்தவரை என் குழந்தைகளுக்கு
பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொண்டேன்.

06:40.234 --> 06:42.569
அவர் அதை சுலபமாக்கவில்லை.

06:53.205 --> 06:55.123
உங்கள் கணவர் பெயரில் இருக்கும்
20 மில்லியன் காப்பீடு

06:55.207 --> 06:57.918
உங்களுக்குத்தான் வரும் என்பது
உங்களுக்குத் தெரியுமா?

06:59.378 --> 07:02.047
எனக்கு விவாகரத்து செட்டில்மென்டில்
நல்ல தொகை வருவதாக இருந்தது.

07:02.714 --> 07:04.174
இப்போது எல்லாமே கிடைக்கிறது.

07:08.428 --> 07:11.306
மன்னிக்கவும். நான் இந்தக்
கேள்விகளைக் கேட்டாக வேண்டும்.

07:11.390 --> 07:13.642
- அது கேள்வி இல்லை.
- ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்.

07:15.477 --> 07:20.357
உங்கள் கணவர் ஓர் இளம் பெண்ணுக்காக
உங்களை விட்டுச் சென்றார்.

07:20.440 --> 07:21.650
அது உங்களைக் கோபப்படுத்தியிருக்க வேண்டும்.

07:21.733 --> 07:22.734
இல்லை.

07:23.235 --> 07:24.778
அவர் என்னை திரும்பி வரும்படி கெஞ்சினார்.

07:24.862 --> 07:26.154
அவர் திரும்ப வருவதை
நீங்கள் விரும்பவில்லையா?

07:27.406 --> 07:29.908
இந்த விவாகரத்துதான் எனக்கு நடந்திருக்கக்கூடிய
சிறந்த விஷயமாக இருந்திருக்கும்.

07:30.951 --> 07:32.369
பால் மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கவில்லை.

07:32.452 --> 07:35.581
அதாவது, என் வாழ்வில் முதன்முறையாக
ஒரு ஆணை கவனித்துக்கொள்ளாமல் இருக்கிறேன்.

07:35.664 --> 07:37.082
நீங்கள் வேறு யாருடனும் டேட் செய்யவில்லையா?

07:37.165 --> 07:40.627
இப்போதைக்கு, என் குழந்தைகள் மற்றும் என் மீது
கவனம் செலுத்துகிறேன்.

07:40.711 --> 07:43.046
நீங்கள் கடைசியாக எப்போது
உங்கள் கணவருடன் பேசினீர்கள்?

07:44.047 --> 07:47.217
- நேற்றிரவு.
- அடிக்கடி பேசுவீர்களா?

07:47.301 --> 07:50.095
அவர் அதிகமாக கால் செய்வார்.
அவரால் என்னை விட முடியவில்லை.

07:50.596 --> 07:51.847
அவர் எப்படிப் பேசினார்?

07:52.347 --> 07:56.226
போதையாக, சோகமாக, கோபமாக.
வழக்கம் போலத்தான்.

07:57.936 --> 08:00.606
உங்களுக்குத் தெரிந்து பாலுக்கு
எதிரிகள் உள்ளனரா?

08:00.689 --> 08:01.899
இல்லை.

08:03.692 --> 08:06.236
ஆண்ட்ரூ கூப்பர் பற்றி?

08:07.905 --> 08:08.906
மன்னிக்கவும். என்ன?

08:08.989 --> 08:11.909
சில வாரங்களுக்கு முன் ஒரு பார்ட்டியில்
பாலும் திரு கூப்பரும்

08:11.992 --> 08:13.660
சண்டை போட்டுள்ளனர்.

08:14.786 --> 08:16.747
நீங்கள் ஆச்சரியமாகப் பார்க்கிறீர்கள்.

08:17.497 --> 08:20.334
கூப்பும் மெல்லும் அந்தச்
சுற்றுப்புறத்தில் இருக்கும் நண்பர்கள்.

08:22.169 --> 08:24.546
சண்டை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

08:24.630 --> 08:27.257
மெல் திரு. கூப்பரின் மனைவியா?

08:27.341 --> 08:28.592
முன்னாள் மனைவி.

08:28.675 --> 08:32.804
உங்கள் கணவரின் வணிகங்கள் பற்றிக் கூறுங்கள்.
உணவகங்கள்.

08:32.888 --> 08:35.432
இல்லை, பால் அதைப் பற்றியெல்லாம்
என்னிடம் கூறுவது இல்லை.

08:35.515 --> 08:37.017
நான் அதில் ஈடுபட்டதில்லை.

08:37.100 --> 08:39.645
நீங்கள் அவரது முதலீட்டாளர்களை
விசாரிக்கலாம்?

08:39.727 --> 08:42.940
பால் எப்போதும் அவர்களை நினைத்து
பயந்திருந்தார்.

08:43.023 --> 08:45.400
எனக்குத் தெரிந்த வரை,
அவர்கள் கொஞ்சம் சந்தேகத்திற்குரியவர்கள்.

08:45.484 --> 08:46.693
பாலிடம் துப்பாக்கி இருந்ததா?

08:46.777 --> 08:49.863
ஆம். கூறினேனே,
அவர் பயந்திருந்தார்.

08:51.782 --> 08:52.783
அது என்ன துப்பாக்கி என்று தெரியுமா?

08:52.866 --> 08:55.160
இல்லை. எனக்கு
துப்பாக்கி பற்றி எதுவும் தெரியாது.

08:56.662 --> 08:58.413
அதை அவரது அலுவலகத்தில்
வைத்திருக்கும்படி கூறினேன்.

08:58.497 --> 09:00.582
எனக்கும் ஒன்று வாங்கிக் கொடுத்தார்,
ஆனால் அதை நான் பயன்படுத்தியதே இல்லை.

09:00.666 --> 09:02.668
அது வீட்டின் பின்புறத்தில் லாக்கரில் உள்ளது.

09:04.169 --> 09:05.712
அதன் எண்களைத் தருகிறேன்.

09:08.215 --> 09:10.509
நீங்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.
அதைச் சுட்டதே இல்லை.

09:13.846 --> 09:17.140
அது ஒரு சிறிய துப்பாக்கி.
எனக்குத் தெரியாது.

09:21.478 --> 09:22.479
கேள்விகள் முடிந்ததா?

09:22.563 --> 09:24.314
மன்னிக்கவும், என் மகன்களைப் பார்க்க வேண்டும்.

09:25.232 --> 09:26.441
ஆம், கண்டிப்பாக.

09:27.943 --> 09:29.111
டிடெக்டிவ் லின்

09:31.947 --> 09:34.324
- நீங்கள் அவரை நம்பவில்லையா?
- நீ நம்புகிறாயா?

09:34.408 --> 09:36.785
அவர் நேற்றிரவு அந்த வீட்டில் இல்லை.
அவரது பெற்றோரிடம் பேசினேன்.

09:36.869 --> 09:38.745
அதற்காக அவள் ஈடுபடவில்லை
என்று அர்த்தம் இல்லை.

09:39.454 --> 09:40.998
நீ அந்த லாக்கரில் இருக்கும் துப்பாக்கியைச்
சரிபார்க்கிறாயா?

09:41.790 --> 09:44.501
- புரிந்தது.
- முன்னாள் மனைவி போய், இந்நாள் காதலி வருகிறாள்.

09:45.419 --> 09:47.254
- அவள்தான் காதலியா?
- ஆம்.

09:47.963 --> 09:50.549
பால் விளையாடியிருக்கிறார்.
அதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

09:50.632 --> 09:52.926
- அது பணம் சம்பந்தப்பட்டது.
- உங்களுக்கு எப்படித் தெரியும்?

09:53.010 --> 09:54.386
அவளைப் பார்.

09:54.469 --> 09:56.680
நீங்கள் மிகவும் இழிவானவர்.
யாரேனும் அப்படிக் கூறியுள்ளனரா?

09:56.763 --> 09:58.515
நீ என்ன, ரொமான்டிக்கான ஆளா?

09:58.599 --> 10:00.517
எனக்கு மக்களுக்குள் இருக்கும்
நல்லதைப் பார்க்கப் பிடிக்கும்.

10:00.601 --> 10:02.477
அதுவும் அவர்கள் அப்படி இருக்கும்போது.

10:02.561 --> 10:05.147
- நான் இவரை விசாரிக்கவா?
- உனக்கு விருப்பம்தானே?

10:05.230 --> 10:06.607
நீ ஏன் அந்தத் துப்பாக்கியைப் பார்க்கக் கூடாது?

10:07.482 --> 10:10.068
நான் மீண்டும் சாமுக்கு கால் செய்தேன்.
அவள் இப்போதும் எடுக்கவில்லை.

10:10.152 --> 10:12.446
அதாவது, அவளுக்கு நிறைய கால்கள் வரும்.
நீ கால் செய்ததை அவள் பார்ப்பாள்.

10:13.572 --> 10:16.783
அவளுக்காக மிகவும்
வருந்துகிறேன். அவள் மகன்களுக்காகவும்.

10:16.867 --> 10:19.912
தெரியும். பால் மோசமானவர்தான்,

10:19.995 --> 10:21.163
ஆனால் கெட்டவர் இல்லை.

10:21.246 --> 10:23.498
நிஜமாகவா?

10:25.042 --> 10:26.543
நாளை உன் பயணத்திற்குத் தயாரா?

10:26.627 --> 10:28.921
இப்போது அங்கே போவது
தவறாகத் தோன்றுகிறது.

10:29.004 --> 10:30.797
நான் டோரியையும் கூப்பையும் தனியாகப்
போக விடலாம் என நினைக்கிறேன்.

10:30.881 --> 10:33.133
அதாவது, இந்த கல்லூரிப் பயணங்கள்
முக்கியமானவை.

10:33.217 --> 10:34.635
இரண்டு பெற்றோரும் டோரி மீது

10:34.718 --> 10:37.012
கவனம் செலுத்துவது அவளுக்கு
நன்றாக இருக்கும்,

10:37.095 --> 10:39.097
- அதுவும்…
- அவள் எங்களை வெறுக்கிறாளா?

10:39.181 --> 10:40.724
அவள் உன்னை வெறுக்கவில்லை.

10:41.975 --> 10:45.103
ஹேய், நீ மீண்டும் கூப்புடன் அங்கே செல்வது விநோதமாக
இருக்கும் என நினைக்கிறாயா?

10:45.938 --> 10:46.772
என்ன சொல்கிறாய்?

10:47.648 --> 10:49.107
அங்கேதான் நீங்கள் காதலித்தீர்கள்.

10:49.816 --> 10:50.984
இல்லை.

10:52.819 --> 10:54.947
அது நாளைதான் என்பதை அவர்
மறக்கக் கூடாது என நம்புகிறேன்.

11:08.001 --> 11:11.380
திரு. கூப்பர், நான் டிடெக்டிவ் லின்.
வெஸ்ட்மான்ட் போலீஸ்.

11:12.214 --> 11:13.465
என்ன உதவி வேண்டும், டிடெக்டிவ்?

11:13.549 --> 11:14.550
நேற்றிரவு உங்கள் நண்பர் பால் லெவிட்

11:14.633 --> 11:16.885
சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதைக்
கேள்விப்பட்டிருப்பீர்கள்.

11:17.469 --> 11:20.097
ஆம். அது மோசம். நாங்கள் அனைவரும்
இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறோம்.

11:21.014 --> 11:22.516
நான் கொஞ்சம்
உள்ளே வரலாமா?

11:23.892 --> 11:25.727
கண்டிப்பாக. வாருங்கள்.

11:28.772 --> 11:30.858
குடிக்க எதுவும் வேண்டுமா?

11:31.358 --> 11:32.359
வேண்டாம்.

11:33.235 --> 11:34.987
- தனியாக வசிக்கிறீர்களா?
- ஆம்.

11:35.070 --> 11:37.906
அப்படி இல்லை. இப்போதைக்கு இல்லை.

11:37.990 --> 11:40.534
என் தங்கை தற்காலிகமாகத் தங்கியிருக்கிறாள்.
அதனால்தான் வீடு இப்படி உள்ளது.

11:40.617 --> 11:42.411
திரு. லெவிட் பற்றி.

11:42.953 --> 11:45.122
உங்கள் இருவருக்கும் இடையே ஏதோ
பிரச்சினை என்று கேள்விப்பட்டேன்.

11:46.331 --> 11:48.250
- நான் அப்படிக் கூற மாட்டேன்.
- இல்லையா?

11:49.001 --> 11:51.003
நீங்கள் பார்ட்டியில் சண்டை போட்டீர்கள்
எனக் கேள்விப்பட்டேன்.

11:53.714 --> 11:54.715
அது.

11:55.841 --> 11:57.718
அது சண்டை இல்லை.

11:57.801 --> 11:59.636
அது பால் அவனைப் போல நடந்துகொண்டது.

11:59.720 --> 12:01.096
இப்போது பால் இறந்துவிட்டதால்,

12:01.180 --> 12:03.056
சண்டையின் காரணத்தைக் கேட்க வேண்டும்.

12:03.932 --> 12:05.267
உண்மையில் எனக்கு நினைவில்லை.

12:06.101 --> 12:09.021
நாங்கள் இருவரும் குடித்திருந்தோம், அவனுக்குப்
பிடிக்காத எதையோ நான் கூறினேன்,

12:09.104 --> 12:10.105
அவன் என்னை அடித்தான்.

12:11.523 --> 12:15.277
உண்மையில், நாங்கள் இருவரும்
மிகவும் போதையில் இருந்தோம்.

12:15.360 --> 12:17.070
நீங்கள் அப்படி இல்லாமல் இருக்க
எதுவும் காரணம் இருக்கிறதா?

12:17.154 --> 12:18.822
- போதையிலா?
- உண்மையாக.

12:18.906 --> 12:19.907
எதுவும் இல்லை.

12:21.909 --> 12:23.744
நீங்கள் அடிக்கடி சண்டை போடுவீர்களா,
திரு. கூப்பர்?

12:23.827 --> 12:25.746
- இல்லை.
- ஏனெனில் உங்கள் கையில் உள்ள காயங்கள்

12:25.829 --> 12:28.290
பாலுடன் சண்டை போட்டதால் ஏற்பட்டது
போலத் தெரியவில்லை.

12:28.373 --> 12:30.626
ஆம், நான் கூறியது போல,
அது சண்டை இல்லை,

12:30.709 --> 12:32.044
இது டென்னிஸில் ஏற்பட்ட காயம்.

12:34.087 --> 12:34.922
டென்னிஸ்.

12:36.715 --> 12:38.342
நீங்கள் நினைப்பதைவிட
அடிக்கடி ஏற்படும்.

12:38.425 --> 12:39.843
நேற்றிரவு எங்கே இருந்தீர்கள்?

12:39.927 --> 12:41.970
- நிஜமாகவா?
- உங்களை விலக்க வேண்டும்.

12:44.431 --> 12:47.809
நான் மான்ஹாட்டனில் உள்ள
கியூ நைட்கிளப்பில் இருந்தேன்.

12:47.893 --> 12:49.353
கியூ-யூ-இ-யூ-இ.

12:51.104 --> 12:53.315
- யாருடனாவது சென்றீர்களா?
- இல்லை.

12:53.398 --> 12:54.983
தனியாகச் சென்றீர்களா?

12:55.901 --> 12:57.861
நீங்கள் யாருடனும் செல்லவில்லை
என்றால் யாருடனும்

12:57.945 --> 12:59.404
வெளியேறுவதற்கு வாய்ப்பு குறைவு.

12:59.488 --> 13:01.490
- யாருடனாவது வெளியேறினீர்களா?
- இல்லை.

13:02.032 --> 13:04.034
- அது வழக்கத்திற்கு மாறானதா?
- இல்லவே இல்லை.

13:06.954 --> 13:10.916
- வீட்டிற்கு எப்போது வந்தீர்கள்?
- நள்ளிரவு.

13:10.999 --> 13:13.585
இரவு முழுவதும் என் தங்கையுடன்
நேரம் கழித்தேன்.

13:14.962 --> 13:16.839
ஆனாலும் நைட்கிளப் போக
நீங்கள் சிறுவயது இல்லையே.

13:16.922 --> 13:19.341
இல்லை. நான் புதிதாக சிங்கிளாக இருப்பவன்,

13:19.424 --> 13:22.594
நான் அங்கே யாரையும் சந்திக்கப் போவதில்லை.

13:22.678 --> 13:27.975
சமந்தா லெவிட்டும் புதிதாக சிங்கிளாக இருப்பவர்,
அவர் மிகவும் அழகானவரும் கூட.

13:28.851 --> 13:31.103
- அவர் யாரையாவது டேட் செய்கிறாரா?
- தெரியாது.

13:32.187 --> 13:33.438
அவர் என் முன்னாள் மனைவியின் தோழி.

13:33.522 --> 13:36.692
அவரும் பாலும் மோசமான விவாகரத்து
செயலாக்கத்தில் இருந்ததாகக் கேள்விப்பட்டேன்.

13:36.775 --> 13:38.360
நல்லவிதமான விவாகரத்து உள்ளதா என்ன?

13:38.443 --> 13:41.113
ஆம். உங்களுக்குத் தெரியும் என நினைத்தேன்.

13:42.781 --> 13:45.617
மன்னிக்கவும், டிடெக்டிவ் லின், உங்களுக்கு
என்னுடன் எதுவும் பிரச்சினையா?

13:45.701 --> 13:46.702
இல்லை.

13:47.578 --> 13:49.705
கண்டிப்பாக இல்லை.
ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

13:49.788 --> 13:52.249
உங்கள் எண்ணங்கள் அப்படி என்று நினைக்கிறேன்.

13:52.332 --> 13:54.293
ஆம், நிறைய பேர் அப்படிச் சொல்வார்கள்.

13:54.376 --> 13:55.961
நேரம் ஒதுக்கியதற்கு நன்றி,
திரு. கூப்பர்.

13:56.044 --> 13:58.714
நிச்சயமாக. நான் உங்களை
வழியனுப்புகிறேன்.

14:12.477 --> 14:17.733
குணப்படுத்த முடியும் என
உறுதியாக இருக்கிறாய்

14:19.193 --> 14:24.239
அதை ஒருவழியாகக் கண்டுபிடித்தும் விட்டாய்

14:25.365 --> 14:30.746
ஒரு பானம்

14:31.914 --> 14:36.793
நிலத்துக்கடியில் சென்று
நீ வசிக்கும் வரை

14:36.877 --> 14:38.253
உன்னைச் சுருக்கும் என நினைக்கிறாய்

14:38.337 --> 14:42.925
ஆனால் அது நிற்கப் போவதில்லை

14:44.259 --> 14:48.847
அது நிற்கப் போவதில்லை

14:49.515 --> 14:55.771
நீ புத்திசாலியாகும் வரை

14:57.648 --> 15:00.442
உனக்கு என்ன தேவை என்பதற்கான
பட்டியலைத் தயார்செய்

15:00.526 --> 15:03.403
உனக்கானதை விட்டுக்கொடுக்கும் முன்

15:03.487 --> 15:06.198
ஆனால் அது…

15:09.159 --> 15:12.120
கடைசியாக இதைச் செய்தது உன்னுடன்தான்
என நினைக்கிறேன்.

15:12.704 --> 15:15.123
- இது வளர்ந்தவர்களுக்கான பானம் இல்லை.
- இல்லை.

15:15.207 --> 15:17.960
- ஹேய், அருமையாகப் பாடினீர்கள்.
- நன்றி.

15:22.005 --> 15:23.632
நிஜமாகவே அருமையாகப் பாடினாய்.

15:23.715 --> 15:26.009
- மக்கள் கேட்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.
- நன்றி.

15:28.095 --> 15:30.138
உன்னை இங்கே பார்த்ததும்
ஆச்சரியப்பட்டேன்.

15:30.222 --> 15:32.474
நீ இப்போது பப்புக்கு வர மாட்டாய் என நினைத்தேன்.

15:32.558 --> 15:34.184
அதாவது, இப்போது குடும்பஸ்தன் ஆகிவிட்டாய்.

15:34.268 --> 15:37.771
விளையாடுகிறாயா? இப்போது மட்டும்தான்
நான் நானாக இருக்க முடியும்.

15:37.855 --> 15:39.481
உன் மனைவி இதற்கு
ஒப்புக்கொள்வாரா?

15:41.024 --> 15:42.901
நான் இல்லாததைக் கூட
அவள் கவனித்திருக்க மாட்டாள்.

15:45.779 --> 15:47.197
மன்னிக்கவும். அதிகமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

15:47.281 --> 15:49.366
ஆம், நீ நல்ல மனநிலையைக்
கெடுக்கிறாய்.

15:49.449 --> 15:50.868
- மன்னித்துவிடு.
- வாயை மூடிக்கொண்டு குடி.

15:50.951 --> 15:51.952
சரி.

15:52.995 --> 15:53.996
சீயர்ஸ்.

15:57.666 --> 15:58.667
அமைதியாக இருக்கிறாய்.

15:59.168 --> 16:00.002
பசிக்கிறது.

16:01.420 --> 16:02.796
மீன் சந்தையில் எல்லாம்
எப்படிப் போகிறது?

16:03.672 --> 16:06.300
அவர்கள் என்னை அடையாளம் காணத் தொடங்குகின்றனர்,
ஆனால் அதற்கு நேரம் ஆகும்.

16:06.383 --> 16:08.177
சில நேரம் என்னை இழுப்பார்கள்.
சில நேரம் மாட்டார்கள்.

16:08.260 --> 16:09.094
ஆம், ஆனால்…

16:09.178 --> 16:10.470
இழுக்கும்போது நன்றாக
பணம் கிடைக்கும்.

16:10.554 --> 16:11.847
அது நாறும் பணம்.

16:13.098 --> 16:13.932
அம்மாவிடம் பேசுகிறாயா?

16:14.224 --> 16:15.058
ஆம்.

16:16.226 --> 16:17.561
அடச்சே. இரு.

16:21.857 --> 16:23.692
அடச்சே.

16:24.776 --> 16:26.528
- எல்லாம் நலமா?
- அட…

16:26.612 --> 16:27.863
வெஸ்ட்மான்ட் வில்லேஜ் மேன்ஷனில்
ஒரு நபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்

16:27.946 --> 16:28.947
ஆம். இல்லை.

16:30.240 --> 16:31.491
நான் கால் செய்ய வேண்டும்.

16:32.492 --> 16:33.827
உன்னிடம் ஒரு விஷயம் பேசலாம்
என்றிருந்தேன்.

16:33.911 --> 16:35.704
ஆம். மன்னித்துவிடு.
கொஞ்ச நேரம்.

16:42.628 --> 16:44.129
ஜார்ஜ் க்லூனி

16:45.797 --> 16:47.382
அதாவது, இது மோசமான விஷயம்.

16:47.466 --> 16:48.467
எலினா பெனிடெஸ்

16:48.550 --> 16:51.220
அவர்கள் என் மீது குற்றம் சுமத்தவில்லை, ஆனால்
எப்போதும் மனைவி மீது சந்தேகப்படுவார்கள்.

16:51.303 --> 16:54.473
பாலுடன் சண்டை போட்டதால்
அவர்கள் என்னையும் விசாரிக்கின்றனர்.

16:54.556 --> 16:56.183
ஆம், கேள்விப்பட்டேன்.
அங்கே என்ன நடந்தது?

16:56.767 --> 16:59.937
அது… ஒன்றுமில்லை, நிஜமாக.

17:00.020 --> 17:02.898
என் கௌரவத்திற்காக சண்டை போட்டீர்களா?
அது இனிமையானது.

17:04.066 --> 17:05.233
சரி,

17:05.317 --> 17:07.277
நான் யாரையும் டேட் செய்கிறேனா
என போலீஸ் கேட்டனர்.

17:08.945 --> 17:11.656
- இல்லை எனச் சொல்லியிருப்பாய் என நம்புகிறேன்.
- கண்டிப்பாக அப்படித்தான் கூறினேன்.

17:11.740 --> 17:14.242
மெல்லும் மற்றவர்களும் என்னை
ஒதுக்குவதை நான் விரும்பவில்லை,

17:14.326 --> 17:15.911
ஆனால் உன் கவலைக்கு நன்றி.

17:15.993 --> 17:17.246
நான் கவலைப்படுகிறேன்.

17:17.329 --> 17:18.872
ஆம், ஆனால் எனக்காக இல்லை.

17:18.955 --> 17:20.082
சாம்…

17:28.882 --> 17:30.759
லூ வார்கா

17:38.433 --> 17:39.518
ஹேய்.

17:42.229 --> 17:43.230
பின்னால் திற.

17:46.108 --> 17:47.109
உற்சாகமாக இருக்கிறாயா?

17:47.192 --> 17:48.694
நீங்களும் அம்மாவும் இருக்கும்
அளவுக்கு இல்லை.

17:48.777 --> 17:51.029
- உனக்கு அது பிடிக்கும்.
- என்னை அவமானப்படுத்தாதீர்கள்.

17:51.613 --> 17:52.698
உறுதியளிக்க முடியாது.

17:52.781 --> 17:54.032
ஹேய், அப்பா.

17:54.783 --> 17:57.035
- நீ வந்ததில் மகிழ்ச்சி.
- அது என் முடிவு இல்லை.

17:57.119 --> 17:58.203
அப்படித்தான் இருக்க வேண்டும்.

17:58.287 --> 18:00.289
ஹேய், நீ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாய்.
நீ எங்களுக்கு சொந்தம்.

18:00.372 --> 18:02.541
என்னை நம்பு, வந்ததற்கு மகிழ்ச்சியடைவாய்.

18:02.624 --> 18:04.376
ரோட் ட்ரிப்!

18:05.627 --> 18:07.004
- நல்ல மனநிலையில் இருக்கிறீர்கள்.
- எப்போதும்.

18:07.671 --> 18:08.672
நிஜமாகவா?

18:12.634 --> 18:13.635
ஆம்!

18:19.266 --> 18:21.226
- இடம் வந்துவிட்டதா? சரி.
- முகத்திலேயே குத்துவேன்.

18:27.024 --> 18:30.068
மார்கன்
இருக்கிறாயா?

18:33.447 --> 18:35.574
ஹேய், அம்மா, சாம்தான் பாலைக்
கொன்றிருப்பார் என நினைக்கிறீர்களா?

18:35.657 --> 18:36.700
என்ன?

18:36.783 --> 18:38.285
முட்டாள்தனமாகப் பேசாதே.

18:38.368 --> 18:40.370
அது ஏன் முட்டாள்தனம்? நீங்கள்
அப்பாவைக் கொல்ல நினைத்ததில்லையா?

18:40.454 --> 18:42.331
- ஆம்.
- ஹேய்! நன்றி.

18:42.414 --> 18:45.042
- ஆனால் நான் கொல்லவில்லை.
- இங்குதான் இருக்கிறேன்.

18:45.125 --> 18:46.752
சரி. ஆம், நீங்கள் விவாகரத்து செய்துவிட்டீர்கள்.

18:46.835 --> 18:48.295
- கடவுளே. டோரி, கமான்.
- சரி.

18:48.921 --> 18:50.631
ஜேக்கை என்னுடன் கூட்டி வந்திருக்க வேண்டும்
எனத் தெரியும்.

18:50.714 --> 18:52.966
இது ஏன் குடும்பப் பயணமாக இருக்க வேண்டும்
எனப் புரியவில்லை.

18:53.050 --> 18:54.968
- ஏனெனில் இது கல்லூரி, கண்ணே…
- சரி.

18:55.052 --> 18:56.929
…கல்லூரிக்கு குழந்தைகளைக் கூட்டிச்
செல்வது முக்கியமான விஷயம்.

18:57.012 --> 18:58.680
இன்னும் சில வருடங்களில் உடன் இருக்காத
முட்டாள் காதலனுடன்

18:58.764 --> 19:00.224
அதை வீணடிக்க விரும்ப மாட்டாய்.

19:00.307 --> 19:02.267
ஏன் அவனிடம் மோசமாக நடந்துகொள்கிறீர்கள்?

19:02.351 --> 19:03.310
உள்ளுணர்வு.

19:03.393 --> 19:05.604
சரி, இதைக் கூறுவதை வெறுக்கிறேன்,
ஆனால் ஜேக் எங்கும் போக மாட்டான்.

19:05.687 --> 19:07.397
- ஆனால் நீ போவாய்.
- என்ன கூறுகிறீர்கள்?

19:07.481 --> 19:10.150
- வேறு எதையாவது பற்றிப் பேசலாமா…
- நீ கல்லூரிக்குச் சென்ற இரண்டு வாரங்களில்

19:10.234 --> 19:12.819
நீ அவனை மறந்துவிடுவாய்,
இன்னும் சீக்கிரம் கூட நடக்கலாம்.

19:12.903 --> 19:16.365
மன்னிக்கவும், ஆனால் அனைவரும் தாங்கள்
நேசிப்பவர்களை விட்டுச் செல்ல மாட்டார்கள், அப்பா.

19:16.448 --> 19:17.824
நீ அவனை நேசிக்கவில்லை.

19:17.908 --> 19:20.536
நிஜமாகவா? உங்களுக்கு
காதல் பற்றி என்ன தெரியும்?

19:20.619 --> 19:21.453
ஹேய்!

19:21.537 --> 19:23.288
- இல்லை, பரவாயில்லை. அவள் பேசட்டும்.
- இது சரியில்லை.

19:23.372 --> 19:24.915
- இல்லை, நான் கேட்க வேண்டும்…
- இல்லை, நிஜமாகவே, அப்பா.

19:24.998 --> 19:27.292
- உங்களுக்கு காதல் பற்றி என்ன தெரியும்?
- அது இருக்கும்போது எப்படி இருக்குமென தெரியும்,

19:27.376 --> 19:29.503
அதை இழக்கும்போது எப்படி நம்மை நாசம்
செய்யும் என்றும் தெரியும்.

19:30.504 --> 19:33.632
இது முட்டாள்தனமாகத் தெரியலாம், ஆனால்
காதலைப் பற்றி அது இருக்கும்போது தெரிவதைவிட

19:33.715 --> 19:35.634
அதை இழக்கும்போதுதான் அதிகமாகத் தெரியும்.

19:35.717 --> 19:37.427
தினமும் என் கையைப் பிடித்துக்கொண்டிருந்த
சிறுமி, வளர்ந்து

19:37.511 --> 19:41.223
என்னைப் பார்த்து கண்களை உருட்டிக்கொண்டே,
நான் மூச்சு விடக் கூட முடியாதளவுக்கு

19:41.306 --> 19:44.810
இவ்வளவு அவமதிப்புடன் பேசுவதைப் பார்ப்பது
எப்படி இருக்கும் என எனக்குத் தெரியும்.

19:49.189 --> 19:50.190
அப்பா, நான்…

19:54.611 --> 19:56.238
கடவுளே, கண்ணே,
என்னை மன்னித்துவிடு.

19:58.156 --> 19:59.324
எனக்குத் தெரியவில்லை…

20:00.325 --> 20:02.744
அதை ஏன் கூறினேன் எனத் தெரியவில்லை.
நான் மிகவும் வருந்துகிறேன்.

20:04.538 --> 20:07.749
அதை… மன்னித்துவிடு, கண்ணே.

20:20.554 --> 20:21.638
எனக்குத் தெரியும்.

20:21.722 --> 20:23.765
- தண்ணீர் வேண்டுமா, பசங்களா?
- அங்கே தண்ணீர் உள்ளது.

20:23.849 --> 20:24.850
- இது மிகவும் நன்றாக உள்ளது.
- இல்லையா? சரி.

20:32.357 --> 20:34.151
இது பிரச்சினையில்லை என நம்புகிறேன்.
நான் பயிற்சியெடுக்க வேண்டும்.

20:34.234 --> 20:35.319
தாராளமாக.

20:35.402 --> 20:37.696
ஹாரி நீங்கள் வருவதாகக் கூறினார்.
பால் பற்றிப் பேசுவதற்காக வந்துள்ளீர்கள்.

20:37.779 --> 20:40.115
நீங்கள் அற்புதமான பார்ட்டி
நடத்தியதாகக் கேள்விப்பட்டேன்.

20:40.199 --> 20:41.658
இல்லை.

20:42.659 --> 20:43.744
அது சாதாரணமானதுதான்.

20:43.827 --> 20:46.663
உங்கள் விருந்தினர்களில் ஒருவர் ஆம்புலன்ஸில்
போனதாகக் கேள்விப்பட்டேன்.

20:46.747 --> 20:48.874
ஆம். அதற்காக வருந்துகிறேன்.

20:48.957 --> 20:50.542
அதாவது, யாருடன் விளையாடுகிறேன் என்று
சில நேரம் மறந்துவிடுகிறேன்.

20:50.626 --> 20:52.753
திரு. லெவிட்டுக்கும் ஆண்ட்ரூ கூப்பருக்கும்

20:52.836 --> 20:54.922
ஏதோ சண்டை நடந்ததாகவும் கேள்விப்பட்டேன்.

20:55.005 --> 20:56.632
இல்லை, அது சண்டையில்லை.

20:56.715 --> 20:59.343
அது இரு நடுத்தர வயதுடைய ஆண்கள் தங்கள்
மன அழுத்தத்தை வெளிப்படுத்தியது.

21:00.719 --> 21:02.012
அது எதைப் பற்றியது என்று தெரியுமா?

21:03.639 --> 21:05.015
இல்லை. தெரியாது.

21:05.766 --> 21:08.393
ஆனால் பால், எப்போதும்
கோபக்காரன்தான்.

21:08.477 --> 21:10.646
- திரு. கூப்பர்?
- கூப்பா?

21:12.147 --> 21:14.483
இல்லை. இல்லை, கூப் சண்டையிடுபவன் இல்லை.

21:15.943 --> 21:18.654
அப்படியெனில், நீண்ட காலத்திற்கு முன்பே
என்னை அடித்திருக்க வேண்டும்.

21:18.737 --> 21:21.490
- எதற்காக?
- அவனது முன்னாள் மனைவியை டேட் செய்கிறேன்.

21:21.573 --> 21:22.824
எனினும் அவர் உங்கள் பார்ட்டிக்கு வந்தாரா?

21:23.659 --> 21:25.619
ஆம், நானும் ஆச்சரியப்பட்டேன்.

21:37.464 --> 21:38.298
ஜார்ஜ் க்லூனி

21:42.845 --> 21:44.972
ஹேய், நான் ஆண்ட்ரூ கூப்பர்.
எனக்கு மெசேஜ் அனுப்புங்கள்.

21:54.940 --> 21:56.483
பால் லெவிட் கொலை செய்யப்பட்டுள்ளார்!!!

21:56.567 --> 21:59.820
அனைவருக்கும் வணக்கம்.
பிரின்ஸ்டனுக்கு வரவேற்கிறேன்.

22:00.404 --> 22:01.321
கூப்.

22:02.489 --> 22:04.783
இன்னும் சில வழிதவறியவர்களுக்காகக்
காத்திருக்கிறோம்,

22:04.867 --> 22:06.368
பிறகு நாம் தொடங்கலாம்.

22:09.621 --> 22:11.874
ஹேய், அவர்கள் எனக்கு அணியின்
இடங்களைக் காட்டுவதாகக் கூறினர்.

22:12.457 --> 22:14.376
ஆனால், கண்ணே, இது டூர்.
டூருக்குச் செல்ல வேண்டும்.

22:14.459 --> 22:16.295
- சரி.
- பிறகு சுற்றிக் காட்ட முடியாதா?

22:16.378 --> 22:18.172
சரி. ஆனால் அவர்கள் எனக்குச்
சுற்றிக் காட்டுவதாகக் கூறினர்.

22:20.340 --> 22:22.926
சரி. முடிந்ததும்
எங்களுக்கு கால் செய்.

22:23.010 --> 22:24.428
சரி. அருமை. நன்றி.

22:27.347 --> 22:29.433
ஆம், இனி அவள் நம்மைத் தொடர்புகொள்ள
மாட்டாள்தானே?

22:29.516 --> 22:30.642
- இல்லை.
- இல்லை.

22:32.102 --> 22:34.771
ஹன்டருக்கு இப்போதைக்கு
பிரின்ஸ்டன் டூர் தேவையில்லை.

22:36.190 --> 22:37.608
- அல்லது எப்போதுமே.
- கவலைப்படாதே.

22:37.691 --> 22:39.318
அவனுக்கு வேறு திட்டம் வைத்திருக்கிறேன்.

22:40.068 --> 22:41.069
என்ன?

22:43.614 --> 22:44.615
என்ன?

22:44.698 --> 22:48.702
இங்கே தொழில்முறை ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்
இருக்கும் தொழில்நுட்பங்கள் உள்ளன.

22:48.785 --> 22:53.207
லாஜிக் ப்ரோ, 72 சேனல் அனலாக்
மிக்ஸிங் கன்சோல்,

22:53.290 --> 22:55.751
தனித்துவமான கிரைஃபான் சப்வூஃபர்கள்
அங்கே உள்ளன.

22:55.834 --> 22:57.669
நீங்கள் நினைக்கும் எல்லா
கருவிகளும் இங்கே இருக்கும்,

22:57.753 --> 23:00.088
மேலும் டிஜிட்டல் வங்கிகளில்
இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளன.

23:00.172 --> 23:02.799
அல்ட்ராவயலட் ஸ்டூடியோஸ் வழக்கமாக
மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டது,

23:02.883 --> 23:06.845
ஆனால் இன்று நீங்கள் வந்து உங்கள்
திறமையைக் காட்டலாம்.

23:06.929 --> 23:07.930
நிஜமாகவா?

23:08.013 --> 23:10.390
சில டெமோக்களை உருவாக்க
இரண்டு குழுக்களுக்குப் பயிற்சியளிக்கிறோம்,

23:10.474 --> 23:12.434
விரும்பினால் அதை நீங்கள் பார்க்கலாம்.

23:12.518 --> 23:15.020
அதன் பிறகு, நீங்கள் பயன்படுத்திப் பார்க்க
நேரம் இருக்கும்.

23:15.103 --> 23:17.022
- நல்லதாகத் தெரிகிறதா?
- அற்புதமானது.

23:17.105 --> 23:18.315
- சரி.
- போகலாம்.

23:22.444 --> 23:25.072
- டின்னருக்கு உன்னை அழைக்க வருகிறோம்.
- பை.

23:30.953 --> 23:31.954
எனக்குக் கடன்பட்ட ஒருவர் மூலம் செய்தேன்.

23:33.413 --> 23:35.374
அவனை இங்கே அனுமதிக்க
எத்தனை கடனை திருப்பிக் கேட்டாய்?

23:36.250 --> 23:38.001
இவனை நாம் கல்லூரிக்கு
அனுப்ப வேண்டும். அவ்வளவுதான்.

23:38.085 --> 23:39.628
பிறகு அவனே தெரிந்துகொண்டு, தனக்கான
நபர்களைக் கண்டறிவான்.

23:40.671 --> 23:41.505
நம்மைப் போல.

23:43.507 --> 23:44.508
ஆம்.

23:47.386 --> 23:49.012
இன்று முழுக்க நமக்குத்தான் போல.

23:49.096 --> 23:50.264
அப்படியா?

23:50.347 --> 23:51.390
எதுவும் யோசனைகள் உள்ளதா?

23:53.809 --> 23:54.810
என் பின்னால் வா.

23:59.982 --> 24:01.775
எலினா பெனிடெஸ்
தவறிய அழைப்பு

24:07.865 --> 24:11.201
- எல்லாம் நலமா?
- ஆம். நண்பர்களின் கொலை விசாரணை.

24:12.160 --> 24:15.122
இப்போதைக்கு என்ன தியரி உள்ளது?

24:15.622 --> 24:16.665
கடன் மாஃபியா.

24:16.748 --> 24:19.960
கடவுளே, அது மோசம்.
என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

24:20.043 --> 24:22.504
ஆம். ஒரு டீல்
செய்துகொள்வோம்.

24:23.213 --> 24:26.925
நிஜ வாழ்க்கை பற்றிப் பேசக் கூடாது.
இன்று மட்டும்.

24:28.594 --> 24:29.636
பேசினால்?

24:30.470 --> 24:31.889
பேசினால், ஷாட் குடிக்க வேண்டும்.

24:33.765 --> 24:34.600
அருமை.

24:35.350 --> 24:37.686
- சரி, நமக்கு இன்னொரு…
- இல்லை, ஏற்கனவே ஆர்டர் செய்துவிட்டேன்.

24:37.769 --> 24:38.812
நன்றி.

24:40.522 --> 24:41.523
நன்றி.

24:44.151 --> 24:47.654
ஓய்வெடு, பயணியே, ஓய்வெடு,
கவலைகளை மறந்துவிடு.

24:47.738 --> 24:50.574
உன் நண்பர்களுக்காகக் குடித்து, அவர்களுக்கு
இந்த இடத்தைப் பரிந்துரை செய்.

24:57.789 --> 24:58.874
இது விநோதமானதா?

25:01.043 --> 25:02.085
இது ஒரு காலப் பயணம்.

25:03.420 --> 25:05.506
இந்த இடம் மாறவேயில்லை என்பதை
நம்ப முடியவில்லை.

25:05.589 --> 25:06.840
அதாவது, இதில் எந்தப் பிரச்சினையும்
இல்லையெனில்…

25:08.342 --> 25:11.220
ஹேய், தாமஸ் ஸ்வீட்டில் என் ஃபயர்பால்ஸ்
இன்னும் இருக்குமா?

25:11.303 --> 25:12.804
ஏனெனில் என் பிறந்தநாளுக்கு

25:12.888 --> 25:15.098
- நீ கொடுத்த அனைத்தையும் தின்றுவிட்டேன்.
- அடக் கடவுளே.

25:15.182 --> 25:17.017
அதற்கு நன்றி. அற்புதமாக இருந்தது.

25:18.060 --> 25:21.313
எனக்குத்தான் மகிழ்ச்சி. சரி, நிக்
அந்த பார்ட்டியின் சோகத்தில் இருந்து மீண்டானா?

25:21.396 --> 25:24.024
இரண்டு நிமிடத்திற்குள் நீ உன்
விதியையே மீறிவிட்டாய்.

25:24.107 --> 25:25.400
ஆம், மீறிவிட்டேன்.

25:25.484 --> 25:28.654
மன்னிக்கவும், யேகர்மைஸ்டரின்
ஷாட்ஸ் கிடைக்குமா?

25:28.737 --> 25:30.197
- இரண்டா?
- உண்மையில், ஒன்று சொல்லவா?

25:30.280 --> 25:31.782
- பாட்டிலை எடுத்து வாருங்கள்.
- சரி.

25:31.865 --> 25:34.618
- அது யேகர்மைஸ்டராக இருக்க வேண்டியதில்லை.
- அது தேவைப்படும். அதுதான் விதி.

25:35.118 --> 25:36.370
அடடா.

25:36.912 --> 25:40.415
- இந்தாருங்கள்.
- சரி. நன்றி.

25:40.499 --> 25:41.500
சரி.

25:47.714 --> 25:49.049
நன்றாக உள்ளதா?

25:49.132 --> 25:50.551
- ஆம்.
- நிஜமாகவா?

25:50.634 --> 25:51.635
இல்லை.

26:08.026 --> 26:08.861
அது…

26:18.704 --> 26:19.913
- அருமை… வாவ்.
- ஐந்து நொடியில் எடுக்க வேண்டும்.

26:19.997 --> 26:21.373
- ஐந்து நொடியில் எடுக்க வேண்டும்.
- ஐந்து நொடியில்…

26:21.456 --> 26:24.835
நீ எதையும் எடுக்கவில்லை.
அது அப்படி வேலை செய்யாது.

26:29.089 --> 26:31.425
- நன்றாகத் திற.
- இது சிறிய பை.

26:32.426 --> 26:33.427
அடக் கடவுளே.

26:35.262 --> 26:37.848
சரி. எடுத்துவிட்டோம்.

26:38.682 --> 26:39.975
நன்றி.

26:40.058 --> 26:41.185
மிட்டாய்ப் பை.

26:42.311 --> 26:44.104
ஒரு மிட்டாய்ப் பை…

26:44.897 --> 26:47.357
அடடா, அது அருமையாக உள்ளது.

26:50.235 --> 26:51.069
எடுத்துக்கொள்.

26:52.738 --> 26:54.323
தாமஸ் ஸ்வீட் சாக்லேட்

26:56.825 --> 26:59.953
மன்னிக்கவும்! மேடம், நீங்கள் அந்த
ஜாமுக்கு பணம் கொடுக்க மறந்துவிட்டீர்கள்.

27:01.079 --> 27:01.914
என்ன?

27:01.997 --> 27:04.583
அது சிறிய தவறுதான்,

27:04.666 --> 27:07.711
ஆனால் நீங்கள் பணம் கொடுக்காமல்
அந்த ஜாமை எடுத்து வந்தீர்கள்.

27:08.712 --> 27:11.798
நாங்கள் ஃபயர்பால்ஸ்
மட்டும்தான் வாங்கினோம். நாங்கள்…

27:12.382 --> 27:13.467
நீங்கள் எடுத்ததைப் பார்த்தேன்.

27:14.134 --> 27:16.220
நான் எந்தப் பிரச்சினையையும்
விரும்பவில்லை,

27:16.303 --> 27:18.096
நீங்கள் என் பின்னால்
உள்ளே வந்து…

27:18.180 --> 27:20.724
ஹேய். நண்பா, இவள்
உன் ஜாமை எடுக்கவில்லை.

27:21.808 --> 27:24.811
இங்கே என்ன நடக்கிறது எனத்
தெரியவில்லை,

27:24.895 --> 27:26.355
ஆனால் உங்கள் பர்ஸைக் காட்டுகிறீர்களா?

27:26.438 --> 27:28.857
இவள் எதையும் எடுக்கவில்லை. சரியா?

27:29.816 --> 27:31.860
நீ இப்போது போகலாம்,

27:31.944 --> 27:34.738
அல்லது போயிருக்கலாம் என்று அடுத்த
ஆறு மாதங்களுக்கு வருத்தப்படுவாய்.

27:47.209 --> 27:48.460
யார் நீ?

27:51.088 --> 27:52.548
- யார் அழைப்பது?
- உன் மகன்.

27:54.258 --> 27:55.467
- ஹாய், கண்ணே.
- ஹேய்.

27:56.176 --> 27:57.845
கிரெட்டிக்கும் எக்ஸுக்கும் நான் செய்த
அரேஞ்ச்மெண்ட் பிடித்துள்ளது,

27:57.928 --> 27:59.555
எனவே அதைக் கொண்டாட சில நண்பர்களை அழைத்துள்ளனர்.

27:59.638 --> 28:01.640
நான் டின்னருக்கு வராமல் இருக்கலாமா?

28:01.723 --> 28:03.684
கண்டிப்பாக, ஆனால் கண்டிப்பாக
சாப்பிட்டுவிடு, சரியா?

28:04.434 --> 28:07.813
சரி. அவர்கள் ஏதோ ஃபேட் சாண்ட்விச்
ஆர்டர் செய்கின்றனர் போல?

28:07.896 --> 28:09.064
ஃபேட் சாண்ட்விச்.

28:09.940 --> 28:12.234
சரி, கண்ணே. அது சுவையாக இருக்கும்.

28:12.317 --> 28:13.819
- பிறகு எங்களுக்கு மெசேஜ் அனுப்பு.
- சரி.

28:20.158 --> 28:22.744
ஃபேட் சாண்ட்விச்.

28:23.871 --> 28:28.125
போலீஸ் இன்னும் வீட்டைப் பூட்டி வைத்துள்ளனர்,
எனவே சில அவசியமான பொருட்கள் வாங்குகிறேன்.

28:28.208 --> 28:29.501
ஆம், எங்கே தங்கப் போகிறாய்?

28:29.585 --> 28:32.546
நான் ஓபஸ் ஹோட்டலில் தங்குகிறேன்.
குழந்தைகள் என்ன செய்கின்றனர்?

28:32.629 --> 28:34.965
அவர்கள் விளையாடிக் களைத்துவிட்டனர்.

28:35.048 --> 28:36.884
அப்பா அவர்களைக் குளிப்பாட்டுகிறார்.

28:37.551 --> 28:39.094
நன்றி, அம்மா.
அவர்களை மிஸ் செய்கிறேன்.

28:39.178 --> 28:40.512
அவர்கள் எங்கும் போக மாட்டார்கள், கண்ணே.

28:40.596 --> 28:42.598
நீ செய்ய வேண்டியதை கவனி.

28:44.141 --> 28:45.559
நீ மைக்கேலிடம் பேசுகிறாயா?

28:45.642 --> 28:47.936
இல்லை. நான் அவரிடம்
பொய் சொல்ல வேண்டும்.

28:48.604 --> 28:50.480
- நான்… நாளை கால் செய்யவா?
- சரி.

28:50.564 --> 28:51.815
- சரி.
- பை.

28:51.899 --> 28:52.900
சரி. உங்களை நேசிக்கிறேன்.

28:52.983 --> 28:55.319
ஹாய். எதுவும் உதவி வேண்டுமா?

28:55.402 --> 28:57.196
இல்லை, வேண்டாம். நான் ரீஸ்டாக் செய்கிறேன்.

28:57.279 --> 28:59.948
இப்போது சில புதிய தயாரிப்புகள் வந்துள்ளன.

29:00.032 --> 29:01.909
உங்களுக்கு அந்த ரெட்டினால் கண் பாட்ச்சுகள் பிடிக்கும்.

29:01.992 --> 29:04.745
ஃபைன் லைன்ஸுக்கும், அந்த
வீக்கத்திற்கும் ஏற்றது.

29:04.828 --> 29:06.163
இல்லை வேண்டாம், நன்றி.

29:06.246 --> 29:07.247
சரி.

29:08.624 --> 29:12.211
உங்கள் பருக்களைப் பார்க்கிறேன். மன்னிக்கவும்.
அவை அழகாக உள்ளன.

29:12.920 --> 29:14.922
நீங்கள் மிகவும் நெருக்கத்தில் பார்த்தால்,

29:15.005 --> 29:17.341
மிகவும் சிறிய வயதான ஸ்பாட் உள்ளது.

29:17.424 --> 29:20.511
அந்த டெக் நெக், கவலைப்படாதீர்கள்,
அது எனக்கும் வரும்.

29:20.594 --> 29:22.137
மன்னிக்கவும். உன் பெயர் என்ன?

29:22.221 --> 29:23.222
நான் கீலி.

29:23.305 --> 29:25.766
கீலி, நான் சில நாட்களுக்குத் தேவையானவைதான்
வாங்குகிறேன்,

29:25.849 --> 29:26.934
எனவே, உதவி எதுவும் வேண்டாம்.

29:27.017 --> 29:29.770
- நீங்கள் வெளியூரிலிருந்து வருகிறீர்களா?
- இல்லை, இங்கேதான் வசிக்கிறேன்.

29:29.853 --> 29:31.313
எனில் ஏன் சில நாட்களுக்கு மட்டும்?

29:32.940 --> 29:35.067
கீலி, நீ கேட்டதால் சொல்கிறேன்,

29:36.068 --> 29:38.946
எங்கள் வீட்டின் முன்கூடத்தில்
என் கணவர் கொலை செய்யப்பட்டார்,

29:39.029 --> 29:40.614
அது இப்போது குற்றம் நடந்த இடமாக உள்ளதால்

29:40.697 --> 29:42.449
நான் ஹோட்டலில் தங்குகிறேன்,

29:42.533 --> 29:44.535
அதனால் எனக்கு புதிய தயாரிப்புகள் தேவை,

29:44.618 --> 29:47.788
அதனால், நீ மிகவும் உன்னிப்பாக கவனித்தது போல,

29:47.871 --> 29:51.041
எனக்கு ரெட்டினல் கண் பாட்ச்சுகள்
கண்டிப்பாகத் தேவைப்படலாம்.

29:51.792 --> 29:55.003
நாங்கள் மிகவும் மோசமான விவாகரத்தில்
இருந்தோம்,

29:55.087 --> 29:56.797
எனவே என்னுள் எங்கோ…

29:56.880 --> 30:00.384
அவர் இறந்ததில் அதிகமாக
நிம்மதியடைகிறேன்.

30:00.467 --> 30:04.012
ஆனால், அதாவது, கீலி, அதற்காக
குற்ற உணர்ச்சி அடைகிறேன், ஏனெனில்…

30:05.013 --> 30:07.057
அதாவது, அவர் என் குழந்தைகளின் அப்பா.

30:07.140 --> 30:09.351
அதாவது, அது என்னை எப்படிப்பட்ட
நபராக ஆக்குகிறது?

30:09.434 --> 30:10.769
அது எதையும் உன்னிடம் கூறுவதில்
எனக்குக் கவலையில்லை,

30:10.853 --> 30:12.688
ஏனெனில் யார் நீ, சரியா?

30:13.188 --> 30:14.064
விஷயம் என்னவெனில்…

30:14.731 --> 30:18.318
நான் விவாகரத்தானவள் என்பதை
ஏற்றுக்கொள்ளத் தொடங்கினேன்,

30:18.402 --> 30:20.571
பிறகு திடீரென நான் விதவை ஆகிவிட்டேனா?

30:21.071 --> 30:23.532
அதாவது, எனக்கான அடையாள உணர்வே
இப்போது இல்லை,

30:23.615 --> 30:24.950
கூப்ளர்-ராஸின் உணர்வுகள் மாடலுடன்
அதுவும் போய்விட்டது.

30:25.033 --> 30:28.203
எனவே என் வீட்டில் தங்க முடியாமல் இருப்பதுடன்,

30:28.704 --> 30:31.415
நான் செயலாக்குவதற்கான குற்ற உணர்ச்சி,

30:31.498 --> 30:35.377
துக்கம், குழப்பம் மற்றும் கோபத்தின் கலவை உள்ளது,

30:35.460 --> 30:39.631
நீ இங்கே வந்தபோது அதை மறைக்க முயன்று,
பரிதாபமாகத் தோற்றுப் போனேன்.

30:39.715 --> 30:43.886
நான் உன் இடத்தில் இருந்தால்,
அதிர்ச்சியடையாமல், அங்கே லாரா மெர்சியர்

30:43.969 --> 30:47.222
அருகே இருக்கும் வாடிக்கையாளரைச்
சென்று பார்ப்பேன்,

30:47.306 --> 30:49.349
ஏனெனில் அவருக்கு உன் உதவி தேவைப்படுவது
போலத் தெரிகிறது.

30:50.100 --> 30:52.519
- ஆம். நான் அங்கே…
- ஆம்.

30:57.399 --> 30:58.442
இல்லையா?

30:59.860 --> 31:02.362
மிகவும் அருமை!

31:03.989 --> 31:05.282
மிகவும் அருமை.

31:06.658 --> 31:07.492
இல்லை.

31:07.576 --> 31:09.244
வாய்ஸ்மெயில்
எலினா பெனிடெஸ்

31:12.998 --> 31:14.374
- யார் அது?
- நிஜ வாழ்க்கை.

31:14.458 --> 31:15.792
உன் காதலியா?

31:17.169 --> 31:19.838
- பெண் தோழியா?
- ஆஃப் செய்துவிட்டேன்.

31:22.382 --> 31:24.510
நம் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில், நீ
ஃபோனை ஆஃப் செய்து பார்த்ததேயில்லை.

31:24.593 --> 31:25.802
அது நீடிக்க உதவும்.

31:25.886 --> 31:27.513
- திருமண வாழ்க்கையா?
- பேட்டரி.

31:33.101 --> 31:35.062
உன்னுடன் இருந்த பல ஆண்டுகளில்
இதுதான் அருமையான நேரம்.

31:35.687 --> 31:37.523
ஏனெனில், தோழி, நீ போதையில் இருக்கிறாய்.

31:37.606 --> 31:38.440
ஆம்.

31:40.526 --> 31:41.693
அதே உத்வேகத்தில்…

31:43.612 --> 31:45.155
நான் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.

31:55.832 --> 31:57.042
ஹேய்!

31:58.585 --> 32:01.171
- நான் அவனை மிரட்டினேன்.
- தெரியும். நீ அசத்திவிட்டாய்.

32:02.297 --> 32:03.298
ஏன்?

32:06.969 --> 32:08.387
நீ எதையும் திருட விரும்பியதில்லையா?

32:51.680 --> 32:54.266
அருமை. சரி. இன்னும் வேண்டும்.

33:13.202 --> 33:14.494
நீ புதியவள்.

33:15.245 --> 33:18.874
எப்படித் தெரியுமெனில், எங்களுக்கு
நிஜமான ஆறு ரசிகர்கள்தான் உள்ளனர்.

33:18.957 --> 33:20.501
இந்த கிளப்பின் சௌண்ட் சிஸ்டம்
போன வாரம் பழுதடைந்துவிட்டதால்தான்

33:20.584 --> 33:23.170
எங்களை இங்கே பாட விடுகின்றனர்.

33:23.253 --> 33:25.130
என்ன சொல்கிறாய்?
நீங்கள் நன்றாகப் பாடினீர்கள்.

33:26.423 --> 33:28.634
ஆம். அந்த உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்.

33:32.137 --> 33:36.016
அனைவரும் எப்போதும் சொல்வார்கள்,
ஹை ஸ்கூலில் அடி வாங்க வைக்கும் விஷயங்கள்,

33:36.099 --> 33:37.476
கல்லூரியில் செக்ஸுக்கு வழிவகுக்கும் என்று.

33:38.894 --> 33:40.145
நீ செக்ஸ் வைத்துக்கொண்டாயா?

33:41.855 --> 33:43.690
குறைந்தது என்னை யாரும் உதைக்க மாட்டார்கள்.

33:45.817 --> 33:48.403
- சரி… அவ்வளவுதான். உள்ளே போய்விட்டது.
- ஓ, இப்போது தலைகீழாகிவிட்டது.

33:48.487 --> 33:50.572
இப்போது, பார்.
கொஞ்சம்…

33:52.741 --> 33:57.371
நான் கடவுளின் வீட்டுக்குள்
பூட்டைத் திறந்து போகிறேன்

34:03.961 --> 34:05.212
இது சர்ச்.

34:05.295 --> 34:07.422
இது வழிபாட்டுத் தலம்.
நாம் மரியாதையாக இருக்க வேண்டும்.

34:07.506 --> 34:09.424
நீ இரு.

34:09.507 --> 34:12.052
- இங்கே உட்காரு, சரியா? இரு…
- என்ன செய்கிறோம்?

34:12.135 --> 34:13.344
நான் போகிறேன்.

34:13.428 --> 34:15.764
ஒரு பொருளை எடுத்து வருகிறேன்.
இங்கேயே இரு.

34:17.266 --> 34:18.600
என்ன செய்கிறாய்?

34:31.071 --> 34:32.989
- நீ நரகத்திற்குப் போவாய்.
- ஆம்.

34:33.072 --> 34:34.658
எனக்குத் தெரியாததைச் சொல்.

34:34.741 --> 34:37.452
- உன் ஜாமுக்கான கிராக்கர். சரியா?
- உன்னை நரகத்தில் சந்திக்கிறேன்.

34:37.536 --> 34:39.913
- உனக்கு கிறுக்கு பிடித்துவிட்டது.
- இருக்கலாம்.

34:53.635 --> 34:54.719
இல்லையா?

35:08.358 --> 35:09.902
நான் ஒன்று சொல்லவா?

35:11.612 --> 35:12.738
கண்டிப்பாக.

35:16.283 --> 35:18.785
நான் பெய்லியிலிருந்து வெளியேறவில்லை.
என்னை பணிநீக்கம் செய்துவிட்டனர்.

35:20.370 --> 35:21.371
என்ன?

35:23.248 --> 35:24.541
- ஏன்?
- ஆம்.

35:24.625 --> 35:27.544
கொஞ்சம் அதிகமாக நடந்துகொண்டேன்,
ஜாக் என்னை வெளியேற்றிவிட்டான்.

35:29.713 --> 35:30.923
ஒரு பெண்…

35:31.757 --> 35:33.884
இல்லை. அதனால் இல்லை. அது…

35:34.676 --> 35:37.804
அவன் தனக்கான வாய்ப்பைப் பார்த்தான்,
பயன்படுத்திவிட்டான்.

35:40.724 --> 35:41.975
- அவன் கேடுகெட்டவன்.
- ஆம்.

35:42.059 --> 35:43.977
- நீ எப்போதும் அவனை வெறுத்தாய்.
- சரிதான்,

35:44.061 --> 35:45.270
ஆனால் அந்த பணம் உதவியது.

35:47.064 --> 35:49.107
இப்போது எவ்வளவு மோசமாக உள்ளது?

35:50.192 --> 35:51.193
சிறப்பாக இல்லை.

35:52.236 --> 35:53.862
நமக்கு எந்தப் பிரச்சினையும் வராதுதானே?

35:54.613 --> 35:55.697
ஆம், இது அதைப் பற்றியது இல்லை.

35:55.781 --> 35:58.700
இல்லை, நான் வேறு சில வாய்ப்புகளைப்
பின்தொடர்கிறேன்.

35:58.784 --> 36:00.327
அது… நாம் நலமாக இருப்போம்.

36:03.038 --> 36:05.249
- நான் வருந்துகிறேன், கூப்.
- வேண்டாம்.

36:06.959 --> 36:09.920
- அதைச் சரிசெய்வேன்.
- இல்லை, அனைத்திற்காகவும் வருந்துகிறேன்.

36:16.134 --> 36:17.386
நீ வருந்த வேண்டும்.

36:18.262 --> 36:19.638
ஹேய், ஒன்று சொல்லவா…

36:20.681 --> 36:22.182
இது கிறிஸ்துவின் உடல்.

36:24.476 --> 36:25.686
கவனமாக இரு.

36:29.648 --> 36:31.191
நிஜமாகவே. நான் வருந்துகிறேன்.

36:34.444 --> 36:35.737
நானும் வருந்துகிறேன்.

36:39.491 --> 36:41.326
நிக்குடன் தொடங்குவதற்கு முன்பே…

36:42.703 --> 36:44.580
நான் கவனத்தை இழந்துவிட்டேன்.

36:46.999 --> 36:49.293
இப்போது நீ அதைக் கூறுவதால், என்
குற்ற உணர்ச்சி குறைகிறது.

36:49.376 --> 36:50.794
- அப்படியா?
- ஆம்.

36:53.463 --> 36:54.506
அப்படியெனில்…

36:56.842 --> 36:58.260
உன்னை குற்றத்திலிருந்து விடுவிக்கிறேன்.

37:27.080 --> 37:28.165
என்ன இது?

37:30.417 --> 37:32.419
- என் ஃபோனை விட்டுவிட்டேன்…
- நான்… பிரார்த்தனை செய்கிறோம்…

37:32.503 --> 37:34.129
கிடைத்துவிட்டது. நன்றி.

37:34.213 --> 37:37.007
- நன்றி, ஃபாதர்.
- மிக்க நன்றி. ஆசீர்வாதம் கிடைக்கட்டும்.

37:37.090 --> 37:38.926
ஜார்ஜ் வாஷிங்டன் சூட்

38:44.867 --> 38:45.909
நான் போக வேண்டும்.

38:47.202 --> 38:48.453
ஹேய். அது…

38:51.498 --> 38:54.042
நாம் திரும்பப் போகவில்லையெனில்
என்ன நடக்கும்?

38:54.126 --> 38:57.546
நாம் பிள்ளைகளை காரில் ஏற்றிக்கொண்டு,

38:57.629 --> 38:59.590
எதிர்த்திசையில் வண்டியை ஓட்டிக்கொண்டு,

38:59.673 --> 39:02.259
வேறொரு புதிய இடத்தில் மீண்டும்
தொடங்கினால் எப்படி இருக்கும்?

39:06.054 --> 39:07.055
நன்றாக இருக்கிறது.

39:10.225 --> 39:11.685
என்னுடன் ஓடி வந்துவிடு, மெல்.

39:20.235 --> 39:21.361
எப்போதும் ஒளிந்திருக்க முடியாது.

39:35.459 --> 39:36.627
இப்போதைக்கு இல்லை.

40:30.472 --> 40:32.099
இப்போதே சொல்லிவிடுகிறேன்,
நாம் செக்ஸ் வைத்துக்கொள்ளப் போவதில்லை.

40:32.683 --> 40:34.184
- கன்னிப்பெண்ணா?
- காதலன் இருக்கிறான்.

40:35.102 --> 40:37.271
- காதலன் இருக்கிறானா?
- அது முக்கியமா?

40:39.106 --> 40:40.107
இல்லை.

40:48.073 --> 40:49.825
கமான். நான் ஜென்டில்மேனாக இருப்பேன்.

41:14.641 --> 41:16.268
- நான் உனக்கு பாடுவேன்.
- வேண்டாம்.

41:16.351 --> 41:17.352
ஆம்.

41:27.321 --> 41:28.822
நான் சுய இன்பம் செய்தால் பரவாயில்லையா?

41:30.741 --> 41:32.618
அப்படித்தான். அடக் கடவுளே.

41:32.701 --> 41:35.078
அது… வண்ணமாக உள்ளது.

41:37.080 --> 41:39.124
நேற்றிரவு ஜாலியாக இருந்துள்ளாய் போல?

41:39.625 --> 41:41.251
நீ நல்ல முடிவுகள் எடுத்திருப்பாய்
என நம்புகிறேன்.

41:46.006 --> 41:47.758
ஜேக்குடன் நீடிக்கும் எனத் தோன்றவில்லை.

41:48.634 --> 41:49.760
அது நல்ல முடிவு.

41:51.512 --> 41:52.387
- அப்பா.
- அமைதி.

41:52.471 --> 41:53.555
நான் மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

41:54.264 --> 41:55.807
ஏன் அவனை அவ்வளவு வெறுக்கிறீர்கள்?

41:55.891 --> 41:57.935
அவனை வெறுக்கவில்லை. அவன் என் எதிர்பார்ப்புகளைப்
பூர்த்திசெய்ய மாட்டான் எனத் தெரியும்.

42:00.938 --> 42:03.106
- நீங்கள் அனைவருக்கும் அதைக் கூறுவீர்கள்.
- ஆம்.

42:04.149 --> 42:06.193
ஆனால் கேள், இந்த நாட்களில்
நீ யாரையாவது சந்திப்பாய்,

42:06.276 --> 42:09.363
அவன் உயரமாக, அழகாக, புத்திசாலியாக

42:09.446 --> 42:11.949
மற்றும் உணர்வுப்பூர்வமானவனாக இருப்பான்.

42:12.032 --> 42:13.534
- எல்லாமே இருந்தாலும்… அவனை வெறுப்பீர்கள்.
- ஆம்.

42:13.617 --> 42:15.369
- ஆம்.
- கண்டிப்பாக.

42:16.453 --> 42:17.538
சொல்வதைக் கேள்.

42:18.872 --> 42:22.125
உன் வாழ்க்கை இப்போது தொடர்ந்து
மாறிக்கொண்டே இருப்பது போல இருக்கும்,

42:22.209 --> 42:25.170
அது பயமுறுத்துவதாக இருக்கும் என்று
தெரியும், ஆனால் என்னை நம்பு,

42:25.754 --> 42:27.172
இளம் வயதாக இருப்பதன் சிறந்த விஷயமே

42:27.256 --> 42:30.092
இப்போது நீ செய்யக்கூடிய, மாற்ற முடியாத
சில விஷயங்களே உள்ளன.

42:35.097 --> 42:36.098
ஆம்.

42:36.640 --> 42:38.141
அது எப்போதும் உண்மைதான் போல.

42:40.102 --> 42:42.688
வயதான பிறகு சில விஷயங்களுக்கு
அதிக உழைப்பு தேவைப்படும்.

42:45.941 --> 42:47.860
நீ உன் வயதுக்கு மீறிய அறிவைக்
கொண்டுள்ளாய் என்று யாரும் கூறியுள்ளனரா?

42:48.360 --> 42:49.403
அதற்கு பதிலளிக்கும் முன்,

42:49.486 --> 42:50.946
உன் மீது இன்னும் வாந்தி வாடை வருகிறது
என்று நினைவூட்டுகிறேன்.

42:51.029 --> 42:52.447
- ஆம்.
- கமான்.

42:58.954 --> 43:03.125
அட
நான் உன் காதலியாக இருந்திருக்க விரும்புகிறேன்

43:08.338 --> 43:10.340
மார்கன்
நீ நலமா?

43:19.516 --> 43:21.894
மன்னித்துவிடு! என் பெற்றோர் ஃபோனைப்
பிடுங்கிவிட்டனர், இப்போதுதான் கொடுத்தனர்

43:24.605 --> 43:26.481
திங்கட்கிழமை உன்னைச் சந்திக்க
ஆர்வமாக உள்ளேன்

43:38.702 --> 43:40.996
இந்தப் பாடல் ஏன் உங்களுக்கு
இவ்வளவு பிடிக்கிறது?

43:41.997 --> 43:43.040
கேவலமாக உள்ளது.

43:43.123 --> 43:44.416
- என்ன?
- அடக் கடவுளே.

43:44.499 --> 43:46.543
இவன் ஒரே ஒரு நாள் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்
இருந்துவிட்டு, விமர்சிக்கிறான்.

43:46.627 --> 43:48.587
ஓ, இல்லை. கடவுளே.
அதை ஆஃப் செய்யுங்கள்.

43:48.670 --> 43:50.714
- காது வலிக்கிறது. அவன் கூறுவது சரிதான்.
- ஒலியை அதிகப்படுத்தவா? செய்கிறேன்.

43:50.797 --> 43:52.049
- பரவாயில்லை. ஆம்.
- இல்லை.

43:52.132 --> 43:53.967
- ஆம், இதோ வருகிறது. இன்னும் கொஞ்சம்.
- இல்லை, அப்பா.

43:54.051 --> 43:55.511
இல்லை.

43:55.594 --> 43:58.138
ஆம். உன்னை நன்றாக உணர வைக்கிறதல்லவா?

44:04.603 --> 44:05.604
சாலையைப் பார்.

44:09.691 --> 44:11.318
ஹேய், நாம் டின்னருக்காக நிறுத்த வேண்டும்.

44:12.277 --> 44:13.946
டின்னர் வேண்டுமா? ஆம் என்று சொல்லுங்கள்.

44:14.029 --> 44:15.197
- பசிக்கிறது.
- சரி.

44:18.283 --> 44:19.660
இதுதான் நடக்கும்.

44:20.285 --> 44:21.578
இந்த உலகிற்குள் வந்தவுடன்

44:21.662 --> 44:23.830
நாம் வாழ்க்கை முழுக்க உள்ளுணர்வாகவே
அனைத்தையும் சேகரிப்போம்.

44:24.748 --> 44:29.419
அன்பு, செக்ஸ், குடும்பம், நண்பர்கள், வீடுகள்,
கார்கள், அனுபவங்கள்.

44:29.503 --> 44:30.963
அதை நிறுத்த மாட்டோம்.

44:31.839 --> 44:33.006
நமக்கு வயதாகும்போதுதான்

44:33.090 --> 44:35.968
வந்த வழியில் சிலவற்றை இழந்ததை
உணரத் தொடங்குவோம்.

44:36.051 --> 44:40.013
அப்போதுதான் வருத்தம் வயிற்றில் ஒரு கட்டி
போல வளரத் தொடங்கும்.

44:41.807 --> 44:43.350
ஆனால் உங்கள் வாழ்க்கை உங்கள் கண் முன்னே

44:43.433 --> 44:45.352
கிடக்கும்போது, சில அரிதான
தெளிவுபடுத்தும் தருணங்கள் இருக்கும்.

44:45.435 --> 44:47.980
சிறிய, பெரிய விஷயங்கள் அனைத்தும்.
சரியான, தவறான முடிவுகள்.

44:48.063 --> 44:49.815
வெற்றிகள், வேதனைகள்.

44:49.898 --> 44:51.024
அந்தத் தருணங்களில்,

44:51.108 --> 44:53.068
உண்மையில் முக்கியமான விஷயங்களை
உங்களால் பார்க்க முடியும்.

44:53.151 --> 44:54.486
உங்களை முழுமைப்படுத்தும் விஷயங்கள்.

44:54.570 --> 44:56.488
அவை இல்லாமல், உங்கள் சொர்க்கம்

44:56.572 --> 44:58.699
உங்களாலேயே உடனடியாக
நரகமாக மாறும்.

45:00.701 --> 45:03.787
அந்தத் தருணங்களில், என்ன நடந்தாலும்
நீங்கள் என்ன செய்ய வேண்டும்,

45:04.288 --> 45:07.958
எதைக் காப்பாற்ற வேண்டும் என்று…
உங்கள் மனதிற்குத் தெரியும்.

45:14.673 --> 45:15.841
ஹேய். எங்கே போகிறாய்?

45:16.341 --> 45:18.802
மெல்லின் காரிலிருந்து குடை எடுக்கப் போகிறேன்.
மழை அதிகமாகப் பெய்கிறது.

45:20.137 --> 45:23.599
ஹேய், உன்னையும் மெல்லையும் குடும்பத்துடன்
வெளியே பார்ப்பதை நம்ப முடியவில்லை.

45:23.682 --> 45:26.435
- இப்படி இருந்ததில்லை.
- ஆம். எனவே,

45:27.728 --> 45:30.147
- எதுவும் போய்க்கொண்டிருக்கிறதா?
- இது டின்னர்தான், பார்னி.

45:32.024 --> 45:33.192
நீ கூறினால் சரிதான்.

45:35.152 --> 45:37.279
என் குடும்பத்துடன், மெல்லுடனான
இந்த நேரம் மட்டுமே,

45:37.362 --> 45:41.241
என்னிடம் இல்லை என்று நான் உணராமல் இருந்த
விஷயத்தை எனக்குக் கொடுத்தது.

45:41.825 --> 45:42.910
நம்பிக்கை.

45:44.411 --> 45:45.829
அது திரை விலகியது போல இருந்தது.

45:47.539 --> 45:50.167
நான் இழந்ததைப் பார்த்தேன், அதைத்
திரும்பப் பெற இருந்தேன்.

45:51.919 --> 45:54.046
அது சுலபமாக இல்லை, ஆனால்
என்னால் முடியும் எனத் தெரிந்தது.

45:54.129 --> 45:55.088
ஹேய்!

46:08.727 --> 46:09.728
உடனே 911 ஐ அழை.

46:10.521 --> 46:11.939
ஹேய்!

46:13.065 --> 46:14.316
ஹேய்!

46:17.778 --> 46:18.779
- இங்கேயே இருங்கள்!
- வா!

46:18.862 --> 46:19.905
இங்கிருந்து போகலாம்!

46:20.405 --> 46:22.908
பார்னி!

46:22.991 --> 46:24.368
அடக் கடவுளே.

46:26.537 --> 46:28.664
- என்னைப் பார்.
- கண்களைத் திறங்கள். பேசுவது கேட்கிறதா?

46:28.747 --> 46:30.207
- எங்கே வலிக்கிறது?
- அடக் கடவுளே.

46:30.290 --> 46:32.501
ப்ளீஸ். அடக் கடவுளே.

46:37.214 --> 46:39.424
யாராவது உதவுங்கள்! ப்ளீஸ்!

46:42.302 --> 46:44.805
பார்னி நலமா என்று பார்.

47:57.377 --> 47:59.379
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
