WEBVTT

00:10.552 --> 00:13.387
உங்கள் பழைய கழிவறைக்கு
குட்பை சொல்லிவிட்டு,

00:13.388 --> 00:15.765
ஆடம்பரத்திற்கு ஹலோ சொல்லுங்கள்.

00:15.766 --> 00:19.060
லக்ஸோஸ் எம்டியை அறிமுகப்படுத்துகிறோம்.

00:19.061 --> 00:21.812
உலகின் மிகவும் மேம்பட்ட ஆடம்பர வசதி.

00:21.813 --> 00:22.981
லக்ஸோஸ் எம்டி
அடுத்த புரட்சி

00:25.609 --> 00:28.528
இது பாத்ரூம் பற்றிய உங்கள் கருத்தை மாற்றும்.

00:28.529 --> 00:30.029
- சரிதானே, சிண்டி?
- சரிதான்.

00:30.030 --> 00:31.113
லக்ஸோஸ் எம்டி

00:31.114 --> 00:33.324
இது வெப்பமாக்கும், சுத்தப்படுத்தும்,
துர்நாற்றத்தை அகற்றும்.

00:33.325 --> 00:37.495
லக்ஸோஸின் மூன்று டொர்னாடோ ஃபிளஷ்
அமைப்புடன் ஸ்டாண்டர்டில் வருகிறது,

00:37.496 --> 00:39.622
மேலும் இது ஸ்மார்ட் வீட்டுடன் இணங்கும்.

00:39.623 --> 00:43.417
இதைப் பற்றி மேலும் கூற வருகிறார்,
லக்ஸோஸ் பிராண்ட் தூதர்

00:43.418 --> 00:47.923
மூன்று முறை என்பிஏ ஆல்-ஸ்டார்,
நிக் பிராண்டஸ்.

00:51.844 --> 00:53.679
முழுவதும் தன்னியக்கமானது

00:54.513 --> 00:56.890
நிக் பிராண்டஸ்
லக்ஸோஸ் பிராண்டு தூதர்

01:01.687 --> 01:03.354
அருமையான பார்வையாளர்கள்.

01:03.355 --> 01:05.606
- உங்களை நேசிக்கிறேன், நிக்!
- நானும்தான்.

01:05.607 --> 01:09.026
- நன்றி, சிண்டி. ஜிம், நண்பா.
- கண்டிப்பாக. ப்ளீஸ்.

01:09.027 --> 01:10.570
இங்கே வந்ததில் மகிழ்ச்சி.

01:10.571 --> 01:14.240
நீங்கள் என்பிஏ சாம்பியன், பணக்காரர்,
ஆணழகன்,

01:14.241 --> 01:15.867
அனைவரும் உங்களை நேசிக்கின்றனர்...

01:15.868 --> 01:17.451
மன்னிக்கவும். அதில் எதுவும் கேள்வி உள்ளதா?

01:17.452 --> 01:19.454
ஏனெனில் இதுவரை கூறிய எதையும்
என்னால் மறுக்க முடியாது.

01:21.164 --> 01:23.457
தொடர்ச்சியான வெற்றிகரமான
பிசினஸ்கள் உள்ளன.

01:23.458 --> 01:26.294
சொல்லுங்கள், ஏன் கழிவறை?

01:26.295 --> 01:29.422
- ஸ்னீக்கர்ஸ் அல்லது டக்கீலாவுக்கு பதிலாகவா?
- அதேதான்.

01:29.423 --> 01:30.840
ஏனெனில் அவற்றை ஏற்கனவே செய்துள்ளனர்.

01:30.841 --> 01:32.258
நான் எப்போதும் கூறும்போது,

01:32.259 --> 01:35.428
”நாமே பார்ட்டி நடத்த முடியும்போது, ஏன்
பார்ட்டிக்கு தாமதமாக வர வேண்டும்?”

01:35.429 --> 01:36.555
கோ.

01:39.016 --> 01:40.308
பார்ட்டி என்றோம்.

01:40.309 --> 01:42.685
- இசை அதிலிருந்து வருகிறதா?
- ஆம்.

01:42.686 --> 01:45.563
சரிதான். அதிலுள்ள ப்ளூடூத் ஸ்பீக்கர்களில்
இருந்து இசை வருகிறது.

01:45.564 --> 01:46.647
உள்ளமைந்த ப்ளூடூத்
ஸ்பீக்கர்கள்

01:46.648 --> 01:49.108
- ஓ, இல்லை!
- உங்களால் முடியுமா?

01:49.109 --> 01:51.903
ஹேய்!

01:51.904 --> 01:53.363
உங்கள் திறமையைக் காட்டுங்கள்.

01:56.658 --> 01:59.536
இல்லை, அவள் இல்லை!

02:02.039 --> 02:05.791
அடிப்படையில், லக்ஸோஸ் எம்டி
இந்தத் துறையையே மாற்றப் போகிறது.

02:05.792 --> 02:07.835
இதில் அமர்வது என்பது, உங்களுக்காக
நீங்கள் தினமும் பதிவுசெய்யக்கூடிய

02:07.836 --> 02:09.669
விடுமுறை போல இருக்கும்.

02:09.670 --> 02:11.423
நிக் பிராண்டஸ், மக்களே!

02:24.645 --> 02:25.812
ஹேய்.

02:27.314 --> 02:28.815
நீ இங்கே என்ன செய்கிறாய்?

02:29.733 --> 02:31.360
எனக்கு கழிவறைகள் மிகவும் பிடிக்கும்.

02:31.985 --> 02:34.863
- சரி, நான் வேலையில் இருக்கிறேன்.
- தெரியும். பார், நான்...

02:36.865 --> 02:40.618
அந்த பார்ட்டி. அது மிகையானது.
நான் மோசமாக நடந்துகொண்டேன்.

02:40.619 --> 02:42.329
ஆம், இங்கே விவாதம் வேண்டாம்.

02:43.121 --> 02:44.122
ஹேய்.

02:46.750 --> 02:48.168
என்னை மன்னித்துவிடு.

02:49.127 --> 02:51.213
அதுதான் நான் உனக்கு கடைசியாக
பார்ட்டி நடத்தியது.

02:55.259 --> 02:58.094
என்னைப் பார்த்துக்கொள்ள முயற்சி
செய்வதைப் பாராட்டுகிறேன்,

02:58.095 --> 03:02.307
சில நேரம் அதை வைத்து என்ன செய்வது என்று எனக்குத்
தெரியவில்லை என்றாலும்.

03:06.854 --> 03:09.981
நீ என்னை எச்சரிக்கை செய்தாய்தான்.

03:09.982 --> 03:11.399
ஆம்.

03:11.400 --> 03:16.737
இது, நாம், நமக்குள் இது நடந்திருக்கக் கூடாது
எனத் தெரியும்.

03:16.738 --> 03:18.824
அல்லது, குறைந்தது, இது நடந்த விதத்தில்.

03:19.408 --> 03:21.868
- உனக்கு கண்டிப்பாக வருத்தங்கள் இருக்கும்.
- நிக், நான்...

03:21.869 --> 03:24.620
இல்லை. நான் அவற்றை உணர்கிறேன்.

03:24.621 --> 03:27.582
என்னை நம்பு, இது வேறுவிதமாக நடந்திருக்க
விரும்புகிறேன், ஆனால்,

03:27.583 --> 03:31.753
இது சரியாகத் தொடங்கவில்லை என்பதால்,
இது சரியானது இல்லை என்றில்லை.

03:33.130 --> 03:34.631
இது எனக்கு நிஜம்தான், மெல்.

03:35.132 --> 03:37.967
நீ மிகவும் முயற்சி செய்கிறாய் என்று
உணர்ந்திருக்க வேண்டாம் என விரும்புகிறேன்.

03:37.968 --> 03:40.595
ட்ராஃப்ட்டில் இரண்டாவது சுற்றுக்கு தரம்பிறங்கும்போது
அப்படித்தான் நடக்கும்.

03:40.596 --> 03:43.764
அதைச் சரிசெய்ய நம் தொழில் வாழ்க்கை மற்றும்
வாழ்க்கை முழுவதையும் கழிக்க வேண்டும்.

03:43.765 --> 03:45.934
நீ என்னிடம் அதைச் செய்ய வேண்டாம்.

03:51.648 --> 03:54.275
உனக்கு உடைமாற்றும் அறை உள்ளதா?

03:54.276 --> 03:56.069
ஆம். நன்றாக இருக்கும்.

03:57.863 --> 03:59.156
அதைக் காட்டு.

05:45.762 --> 05:47.430
என்ன இது?

05:47.431 --> 05:50.057
இது யாரோ தங்களது பிரஷ்ஷைத்
துடைத்தது போலுள்ளது புரிகிறது,

05:50.058 --> 05:52.101
ஆனால் இது லிக்டென்ஸ்டைன் ஓவியம்.

05:52.102 --> 05:54.437
லிக்டென்ஸ்டைன் யார் என்று எனக்குத் தெரியும்,
முட்டாள்.

05:54.438 --> 05:57.315
நான் கேட்டது, நான் ஏன் அதன் மோசமான
படத்தைப் பார்க்கிறேன்?

05:57.316 --> 05:59.567
- ஏனெனில் இதை நான் திருட வேண்டும்.
- நான் கலையுடன் விளையாடுவதில்லை.

05:59.568 --> 06:01.068
- நீயும் விளையாடக் கூடாது.
- கமான்.

06:01.069 --> 06:03.279
நகைகளும் வாட்சுகளும்
ஓரளவுக்குத்தான் பணம் கொடுக்கும்.

06:03.280 --> 06:06.741
இதுபோன்ற திருட்டில், அதே அளவு ரிஸ்க் எடுத்தால்
அதிக பணம் கிடைக்கும்.

06:06.742 --> 06:10.244
திருட்டா? யார் நீ, திடீரென
ஜேம்ஸ் கான் ஆகிவிட்டாயா?

06:10.245 --> 06:12.079
இதை விற்க யாரையாவது உங்களுக்குக்
கண்டிப்பாகத் தெரியும்.

06:12.080 --> 06:16.168
- ராக்கோ, ஓவியங்களில் என் கொள்கை என்ன?
- ஓவியங்கள் கூடாது!

06:16.793 --> 06:18.754
இந்த கலை நபர்கள்,
வித்தியாசமானவர்கள்.

06:19.338 --> 06:21.297
நான் கூறுகிறேன்.
அவர்கள் மோசமானவர்கள்.

06:21.298 --> 06:24.134
கடைசியாக இது ஏலத்தில்

06:24.927 --> 06:27.053
ஒரு மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

06:27.054 --> 06:28.347
அது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு.

06:29.139 --> 06:30.890
இது இருக்கும் வீட்டுக்குள் ஏற்கனவே
நான் சென்றிருக்கிறேன்.

06:30.891 --> 06:33.351
இதைத் திருடிவிட்டு, போலியை அங்கே வைத்தால்,
யாருக்கும் வித்தியாசம் தெரியாது.

06:33.352 --> 06:35.770
- சுலபம்.
- அது ஏற்கனவே போலியில்லை என்று எப்படி தெரியும்?

06:35.771 --> 06:39.232
ஏனெனில் அதன் உரிமையாளர் அதை நேரடியாக
லேரி ககோசியனிடமிருந்தே வாங்கியிருக்கலாம்.

06:39.233 --> 06:43.486
அவன் ஒரு பாதுகாப்பற்ற சுயநலவாதி, அவனுடைய
மதிப்பே அவனுக்குச் சொந்தமானவற்றில்தான் உள்ளது.

06:43.487 --> 06:46.781
அது அழகாக உள்ளதா என்று கவலைப்பட மாட்டான்,
அது நிஜமானதா என்றுதான் கவலைப்படுவான்.

06:46.782 --> 06:48.325
எனக்கு அதுபோன்ற நபர்களைத் தெரியும்.

06:49.451 --> 06:52.120
கமான். உங்களுக்கு கூடுதலாக
பத்து சதவீதம் தருகிறேன்.

06:52.663 --> 06:54.706
நீங்கள் விரல் கூட அசைக்க வேண்டாம்.
அறிமுகப்படுத்தினால் போதும்.

06:58.210 --> 07:01.671
நான் விரல் அசைக்க வேண்டும், அதற்கு
எனக்கு கூடுதலாக 20 சதவீதம் வேண்டும்.

07:01.672 --> 07:04.131
அது தோல்வியடைந்தால், எனக்கு
உன்னைத் தெரியாது.

07:04.132 --> 07:08.261
ஆனால் இதைக் கேள். இதைச் செய்வதாக இருந்தால்,
நான் சொல்லும்படி செய்ய வேண்டும்.

07:08.262 --> 07:10.596
பிக் பாக். புதுமையாக எதுவும் கூடாது.

07:10.597 --> 07:12.849
- சரி, புரிந்தது.
- சொல்.

07:12.850 --> 07:15.059
- பிக் பாக்.
- புத்திசாலி என்ற நினைப்பு.

07:15.060 --> 07:16.728
புதுமையாக எதுவும் கூடாது.

07:19.815 --> 07:21.024
சரி. என் கடையிலிருந்து வெளியேறு.

07:21.692 --> 07:23.360
தயாரானதும் சொல்கிறேன்.

07:24.945 --> 07:25.988
ராக்கோ.

07:28.115 --> 07:32.785
- பாறை அடுக்கு இருப்பது போலத் தெரிகிறது.
- அதற்கு என்ன அர்த்தம்?

07:32.786 --> 07:36.080
அதை உடைத்து வெளியே எடுக்க,
என் ஆட்கள் இன்னும்

07:36.081 --> 07:37.164
சில வாரங்கள் வேலை செய்ய வேண்டும்.

07:37.165 --> 07:39.750
அதைச் சுற்றி தோண்ட முடியாதா?

07:39.751 --> 07:41.085
முடியும். நிச்சயமாக.

07:41.086 --> 07:43.797
உங்கள் வீட்டை அந்தப் பக்கம் 100 அடிக்குத்
தள்ளி வைப்பதாக இருந்தால்.

07:44.673 --> 07:45.798
விளையாடினேன்.

07:45.799 --> 07:48.968
ஆனால் திடமான பாறைக்குள் என்னால்
அடித்தளம் நோண்ட முடியாது. அதை எடுத்தாக வேண்டும்.

07:48.969 --> 07:51.012
ஹேய், ஃபில், இந்த
லோடரை எங்கே வைப்பது?

07:51.013 --> 07:53.514
- ஆம், கொஞ்ச நேரத்தில் வருகிறேன்.
- எனவே... ஃபில்,

07:53.515 --> 07:55.392
இதற்கு எவ்வளவு செலவு ஆகும்?

07:56.852 --> 07:59.562
வேலையைத் தொடங்கும் வரை எவ்வளவு
ஆகும் என்று சரியாக சொல்ல முடியாது,

07:59.563 --> 08:01.939
இந்த அடுக்கு எவ்வளவு தூரம் போகிறது
என்று பாருங்கள்.

08:01.940 --> 08:04.108
இதற்கு பெரிய இயந்திரங்கள் தேவைப்படும்.
வெடிப்பும் தேவைப்படலாம்.

08:04.109 --> 08:05.735
என் கொல்லையை வெடிக்க வைக்கப் போகிறீர்களா?

08:05.736 --> 08:08.279
நான் இல்லை. சில நிபுணர்களை
நான் அழைத்து வருவேன்.

08:08.280 --> 08:09.655
தோராயமாக எவ்வளவு ஆகும், ஃபில்?

08:09.656 --> 08:12.910
அது... எங்கள் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது?

08:15.120 --> 08:17.538
இரண்டு லட்சம். தோராயமாக.

08:17.539 --> 08:20.583
சரி.

08:20.584 --> 08:22.376
சரி, நாம் கொஞ்சம் இதை நிறுத்தி வைக்கலாம்,
சரியா?

08:22.377 --> 08:24.462
சர்வேயரை அனுப்பி, கட்டடக் கலைஞர்
வைத்துச் சரிபார்ப்போம்.

08:24.463 --> 08:26.172
- அதைச் செய்யலாம்...
- இல்லை.

08:26.173 --> 08:27.840
ஹேய், அது உங்கள் முடிவு.

08:27.841 --> 08:32.135
ஆனால் நாங்கள் வேலையை நிறுத்தினால், என் ஆட்களை
அடுத்த வேலைக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.

08:32.136 --> 08:36.225
அது அவசியமில்லை, ஃபில். விலைப்பட்டியலை
மின்னஞ்சல் அனுப்புங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

08:38.059 --> 08:39.061
சரி.

08:57.871 --> 08:58.871
ஹேய்.

08:58.872 --> 09:01.416
- உன்னைப் பார்க்கவேயில்லை.
- ஆச்சரியம்தான்.

09:04.586 --> 09:06.088
இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும்.

09:19.351 --> 09:21.478
- எங்கே போகிறாய்?
- வேதியியல்.

09:27.025 --> 09:28.442
வேதியியலை விடு.

09:28.443 --> 09:29.736
நீ என்னுடன் வா.

09:39.705 --> 09:41.747
ஆம், அப்படித்தான். வேகமாக.

09:41.748 --> 09:43.499
நீ சிறப்பாகச் செய்கிறாய்.

09:43.500 --> 09:46.169
அடச்சே! வேகமாக.

09:46.170 --> 09:48.797
நான் உச்சத்தை அடைகிறேன்!

09:53.260 --> 09:54.261
அருமை!

10:06.148 --> 10:07.982
சனிக்கிழமை ஹென்ரியோட
பிறந்தநாள்.

10:07.983 --> 10:10.402
ஓ, சரி. அவனுக்கு என்ன,
ஆறு வயதா?

10:11.987 --> 10:12.987
ஐந்து.

10:12.988 --> 10:15.573
ஆம், அது வேடிக்கையான வயது.
பார்ட்டி இருக்கிறதா?

10:15.574 --> 10:17.950
நான் அவனை பாஸ்டனில் இருக்கும்
என் பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்.

10:17.951 --> 10:20.037
அருமை. எப்போது திரும்ப வருவாய்?

10:20.537 --> 10:21.830
உறுதியாகத் தெரியவில்லை.

10:23.207 --> 10:25.792
அனைத்திலிருந்தும் கொஞ்ச நாள்
விலகியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

10:27.503 --> 10:30.755
நீ திரும்பி வரும்போது, நீ விரும்பினால், நாம்
நகரத்திற்குச் சென்று,

10:30.756 --> 10:34.384
ஏதாவதொரு இடத்தில் தங்கி, ஒன்றாக அனைத்திலிருந்தும்
விலகியிருக்கலாம்.

10:35.636 --> 10:37.763
பரவாயில்லை.
நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை.

10:39.389 --> 10:41.974
அதாவது, செய்ய வேண்டியதில்லை எனத் தெரியும்,
இது எதையுமே செய்ய வேண்டியதில்லைதான்.

10:41.975 --> 10:43.435
உண்மைதான்.

10:44.478 --> 10:46.480
நாம் செய்யக் கூடாது என நினைக்கிறேன்.

10:47.272 --> 10:48.357
என்ன பேசுகிறாய்?

10:49.066 --> 10:51.567
நாம் நம் உறவை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

10:51.568 --> 10:53.654
எதுவும் பிரச்சினை வரும் வரை
இதை நீட்டிக்க வேண்டாம்.

10:55.030 --> 10:57.366
எனக்கு உன்னைப் பிடிக்கும், கூப்.
ரொம்பவே.

11:00.536 --> 11:01.954
மிகவும் அதிகமாகப் பிடிக்கிறது போல.

11:03.497 --> 11:06.165
விஷயம் என்னவெனில், நான் உன்னுடன் இருக்கும்போது
எனக்கு என்னைப் பிடிப்பதில்லை.

11:06.166 --> 11:07.250
ஹேய்.

11:07.251 --> 11:11.462
சாம், நான் கடந்த சில நாட்களாக
கொஞ்சம் பிசியாக இருக்கிறேன் எனத் தெரியும்.

11:11.463 --> 11:14.090
நீ நிஜமான எதற்கும் தயாராக இல்லை.
குறைந்தது என்னோடு.

11:14.091 --> 11:17.635
நான் வழிதவறிய ஒரு பேச்சுலரின் நடுத்தர வயது
கள்ளக் காதலியாக எப்போதும் இருக்க விரும்பவில்லை.

11:17.636 --> 11:20.221
நான் உன்னை அப்படி நினைக்கவில்லை.

11:20.222 --> 11:23.432
கமான், கூப். குற்ற உணர்ச்சியில்லாமல்
வெளியேறும் வழியை உனக்குக் கொடுக்கிறேன்.

11:23.433 --> 11:24.725
அதை எடுத்துக்கொள்.

11:24.726 --> 11:26.895
எனக்கு வேறு வழி இல்லாதது போலத் தோன்றுகிறது.

11:27.980 --> 11:29.147
மீண்டும் தவறு.

11:30.524 --> 11:31.650
சாம்...

11:41.243 --> 11:42.326
ஹேய்.

11:42.327 --> 11:45.204
சாமுடன் மதிய நேர சல்லாபமா?

11:45.205 --> 11:49.959
ஆம். இதுதான் அதன் முடிவு
என நினைக்கிறேன்.

11:49.960 --> 11:51.253
அது மோசம்.

11:53.046 --> 11:55.840
- சரியா?
- அதாவது, பரவாயில்லை.

11:55.841 --> 11:57.175
சரி.

11:57.176 --> 11:59.469
நான் அந்த சத்தங்களை மிஸ் செய்ய மாட்டேன்.

12:01.180 --> 12:02.680
- அடக் கடவுளே! அப்படித்தான்.
- சரி.

12:02.681 --> 12:03.890
- நாம் வேறு எதையாவது...
- அப்படித்தான்.

12:03.891 --> 12:05.142
- ஆஹா!
- ...பற்றிப் பேசலாமா?

12:07.895 --> 12:10.105
சரி, எதைப் பற்றிப்
பேச வேண்டும்?

12:11.315 --> 12:13.191
- வேறெதாவது. உன் புதிய நிகழ்ச்சி எப்படி உள்ளது?
- நன்றாக உள்ளது.

12:13.192 --> 12:17.653
அதாவது, மிகவும் நன்றாகவே உள்ளது. அவர்கள்
எனக்கு வழக்கமான ஸ்லாட் கொடுத்துள்ளனர்.

12:17.654 --> 12:21.324
தி டேப்பில் வாரத்திற்கு நான்கு இரவுகள்,
முக்கியமான நேரத்தில், ஜன்னலில் போஸ்டருடன்.

12:21.325 --> 12:23.284
- அதாவது, முழுமையான விளம்பரம்.
- அது அற்புதமானது.

12:23.285 --> 12:24.785
உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
வாழ்த்துகள்.

12:24.786 --> 12:27.414
- நன்றி.
- நம்மில் ஒருவருக்காவது வேலை உள்ளது.

12:29.249 --> 12:32.794
வேலை இல்லாத ஒருவனுக்கு,
நீ பிசியாகத்தான் இருக்கிறாய்.

12:33.629 --> 12:37.716
எனக்கு நான் இந்த இடத்தில் நாள்
முழுவதும் தனியாக இருப்பது போலத் தோன்றுகிறது.

12:38.717 --> 12:41.636
ஆம், இன்று இல்லை, கண்ணே.

12:41.637 --> 12:43.388
டிசிஎம் பெக்கன்ஸ்.

12:44.348 --> 12:45.890
நான் ஒரு கொலையைப் புகாரளிக்க வேண்டும்.

12:45.891 --> 12:47.726
- சரி. அருமை.
- உட்காரு.

12:49.228 --> 12:52.731
நான் பிறந்ததற்கு பிறகு எடுத்த
எதையாவது பார்க்கலாமா?

12:55.484 --> 12:56.734
இல்லை.

12:56.735 --> 12:59.655
- யார் கொலை செய்யப்பட்டது?
- நான்தான்.

13:00.906 --> 13:03.242
ஹன்டர் கூப்பர்
ஆம்ஃபெட்டமைன்

13:20.551 --> 13:21.510
ஆம்.

13:27.558 --> 13:28.642
மேலே பார்.

13:29.268 --> 13:30.393
ஓராண்டுதான் ஆகிறது.

13:30.394 --> 13:32.270
நீ இன்னும் துயரத்தில்தான் இருக்கிறாய், சரியா?

13:32.271 --> 13:33.896
அவர்கள் மீண்டும் சேருவார்கள்,

13:33.897 --> 13:35.356
எல்லாம் பழைய மாதிரி ஆகிவிடும்
என்று நம்பிக்கொண்டிருக்கிறாய்.

13:35.357 --> 13:39.694
அந்தக் கற்பனையை விட்டுவிட்டால், விவாகரத்தில்
இருக்கும் நன்மைகள் புரியும்.

13:39.695 --> 13:40.778
எதுபோல?

13:40.779 --> 13:42.446
இரண்டு பெற்றோர் இருந்தால்,
நமக்கு எதிராக இருவர் இருப்பார்கள்.

13:42.447 --> 13:44.991
ஒருவர் என்றால், அவர்களுக்குத் தெரியாமல்
விஷயங்களைச் செய்வது எளிது.

13:44.992 --> 13:48.536
ஆனால் உண்மையான தந்திரம் உனக்கு வேண்டியதைப்
பெற இருவரையும் ஏமாற்றுவதுதான்.

13:48.537 --> 13:50.664
அவர்கள் ஒன்றாக இருக்கும்போதே
அதைச் செய்வேன்.

13:52.499 --> 13:54.876
பார்ப்பதைவிட நீ வித்தியாசமானவன்,
ஹன்டர் கூப்பர்.

13:54.877 --> 13:56.587
கடவுளே, நானும் அப்படியிருக்க நம்புகிறேன்.

13:57.462 --> 13:58.296
உள்ளே யார் இருக்கிறீர்கள்?

13:58.297 --> 14:01.383
- அடச்சே.
- உடனே கதவைத் திறங்கள்.

14:05.637 --> 14:09.390
வகுப்பைத் தவிர்ப்பதும், அத்துமீறி
நுழைவதும் பிரச்சினைதான், ஆனால்...

14:09.391 --> 14:11.350
சரி, அத்துமீறி நுழைவதா? கமான்.

14:11.351 --> 14:13.811
அவன் முகமூடி அணிந்து, போல்ட் கட்டரை
வைத்து நுழைந்தது போலச் சொல்கிறீர்கள்.

14:13.812 --> 14:16.230
அவன் மேடைக்குப் பின்னால் நண்பர்களுடன்
இருந்தான்.

14:16.231 --> 14:18.192
இது அதைவிடப் பெரிய விஷயம்.

14:19.067 --> 14:21.027
ஹன்டர் தன் நண்பர்களுக்கு போதை மருந்து
விநியோகித்துள்ளான்.

14:21.028 --> 14:22.111
- என்ன?
- என்ன?

14:22.112 --> 14:24.322
அவர்கள் உடைமாற்றும் அறையில்
அவனது ஆடெராலை உட்கொண்டுள்ளனர்.

14:24.323 --> 14:28.034
கேம்பஸில் போதை மருந்து உபயோகிப்பதை,
மேஃபீல்ட் ஒருபோதும் மன்னிப்பதில்லை.

14:28.035 --> 14:29.994
நான் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.

14:29.995 --> 14:31.829
ஹன்டரை பள்ளியைவிட்டு வெளியேற்ற வேண்டும்.

14:31.830 --> 14:34.790
- ஒரு... ஒரு நிமிடம். ப்ளீஸ்.
- இருங்கள்.

14:34.791 --> 14:37.376
பாருங்கள். எங்கள் மகன் போதை மருந்து
விற்பவன் இல்லை, சரியா?

14:37.377 --> 14:38.628
அவனுக்கு எடிஹெச்டி உள்ளது.

14:38.629 --> 14:41.255
டீனேஜர்கள் தவறான முடிவுகள் எடுப்பார்களா?

14:41.256 --> 14:42.757
ஆம், அவர்கள் எப்போதும் அப்படித்தான்.

14:42.758 --> 14:44.509
ஆனால் அவன் இதற்கு முன் பிரச்சினையில்
மாட்டியதில்லை.

14:44.510 --> 14:45.676
அவனுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

14:45.677 --> 14:48.137
திரு. கூப்பர், இந்த ஆண்டு ஹன்டரின்
நடத்தை பற்றி

14:48.138 --> 14:49.555
இது முதல் சந்திப்பு இல்லை.

14:49.556 --> 14:52.141
- விடுப்புகள், பணிகளை முடிக்காமல் இருப்பது...
- என்ன பேசுகிறீர்கள்?

14:52.142 --> 14:54.268
- அவர் என்ன...
- கூப்...

14:54.269 --> 14:55.520
நான் இல்லாமல் சந்திப்புகளுக்கு வந்தாயா?

14:55.521 --> 14:57.063
அவை உங்கள் காலெண்டரில் இருந்தன.

14:57.064 --> 14:59.398
இந்த மீட்டிங்குகளில் என்ன நடந்தது என்று
ஏன் எனக்கு கால் செய்து கூறவில்லை?

14:59.399 --> 15:01.360
சரி, இப்போது வேண்டாம்.

15:05.656 --> 15:08.866
எங்கள் மகன் உங்களை இந்த நிலைக்குத்
தள்ளியது புரிகிறது.

15:08.867 --> 15:12.328
என் வேலையில் நான் தினமும் இதுபோன்ற
சிறுவர்களைப் பார்க்கிறேன்.

15:12.329 --> 15:15.331
நான் எப்போதும் விளைவைக் குறைக்கும் சூழல்களைக்
கருத்தில்கொள்ள முயல்வேன்.

15:15.332 --> 15:20.461
அவனைவிடப் பெரிய மாணவர்கள் அவன் மருந்தைப் பகிர்ந்து
கொள்ளும்படி கட்டாயப்படுத்தியிருக்கலாம், இல்லையா?

15:20.462 --> 15:21.546
அவன் அவர்களை ஈர்க்க விரும்பியுள்ளான்.

15:21.547 --> 15:24.007
அவன் போதை மருந்து விற்கவில்லை, அவன்
அவர்களுடன் சேர்ந்துகொள்ள முயன்றுள்ளான்.

15:25.342 --> 15:27.093
ஆனால் அவனுக்கு தண்டனை கிடைக்கும்.

15:27.094 --> 15:30.222
இதுபோல எதுவும் இனி நடக்காது என்று
நாங்கள் உறுதியளிக்கிறோம்.

15:31.557 --> 15:33.141
என்னால் எதுவும் செய்ய முடியாது.

15:39.022 --> 15:42.234
சரி. லேலா, கீழே ஹாலில் அந்தப் பெரிய
தெர்மாமீட்டரைப் பார்த்தேன்.

15:43.986 --> 15:46.404
புதிய தடகள மையத்திற்கான இந்த
ஆண்டின் நிதிதிரட்டல்தானே?

15:46.405 --> 15:47.614
நீங்கள் இலக்கை அடையவில்லை.

15:50.242 --> 15:51.951
இலக்கை அடைய எவ்வளவு தேவைப்படும்?

15:51.952 --> 15:54.954
- திருமதி கூப்பர்.
- இல்லை. ஹன்டர் நல்ல பையன்.

15:54.955 --> 15:56.915
அது உங்களுக்குத் தெரியும்.
எங்களுக்குத் தெரியும்.

15:57.958 --> 16:00.209
பள்ளிக்கும் தேவைகள் உள்ளன.
இருவருக்கும் லாபம்.

16:00.210 --> 16:01.961
கமான்.

16:01.962 --> 16:05.340
தவறைக் கண்டுகொள்ளாமல் இருக்க
எவ்வளவு ஆகும்?

16:06.091 --> 16:08.384
மொத்தம் 2,40,000 டாலர், மெல்?

16:08.385 --> 16:09.677
கடவுளே.

16:09.678 --> 16:11.929
நியூ யார்க் மாநிலத்திலேயே மிகச் சிறந்த

16:11.930 --> 16:13.890
பள்ளிகளில் ஒன்றிலிருந்து நம் மகன்
வெளியேற்றப்பட இருந்தான்,

16:13.891 --> 16:16.475
அது அவன் நல்ல கல்லூரிக்குச் செல்வதற்கான
வாய்ப்புகளைக் குறைத்துவிடும்.

16:16.476 --> 16:19.061
ஒன்று தெரியுமா?
அதைச் சரிசெய்ய நீங்கள் எதுவுமே செய்யவில்லை.

16:19.062 --> 16:21.564
நாம் அவரிடம் பேசியிருக்கலாம்.
முறையீடு செய்திருக்கலாம்.

16:21.565 --> 16:23.065
கடவுளே, அவருக்கு நம்மை நீண்டகாலமாகத் தெரியும்.

16:23.066 --> 16:24.650
அவனை அவர் போதை மருந்து விற்பவன் என்றார்.

16:24.651 --> 16:26.694
நீ அவருக்கு கால் மில்லியன் டாலர்
தருவதாகக் கூறியுள்ளாய்.

16:26.695 --> 16:29.989
மன்னிக்கவும். அவர் 20, 30 போல
எதுவும் கூறுவார் என நினைத்தேன்.

16:29.990 --> 16:31.741
எனில் அதிலிருந்து தொடங்கு.
வெற்றுச் செக்கைக் கொடுக்கக் கூடாது.

16:31.742 --> 16:35.453
ஹேய், ஒன்று தெரியுமா?
நீங்கள்தானே ஹெட்ஜ் நிதியில் நிபுணர்.

16:35.454 --> 16:36.829
நீங்கள் ஏன் பேரம் பேசவில்லை?

16:36.830 --> 16:38.581
ஏனெனில் நாம் பேசும்போது
நமக்கு சாதகம் இருக்க வேண்டும்.

16:38.582 --> 16:41.292
நீ பேசத் தொடங்கியவுடனேயே அந்தச்
சாதகம் போய்விட்டது.

16:41.293 --> 16:44.545
”தவறைக் கண்டுகொள்ளாமல் இருக்க
எவ்வளவு ஆகுமா?” கடவுளே.

16:44.546 --> 16:46.964
ஒன்று சொல்லவா? முடித்துவிட்டீர்களா?

16:46.965 --> 16:49.176
ஏனெனில் இன்று சமாளிக்க ஏற்கனவே
ஒரு சிறுவன் இருக்கிறான்.

16:50.135 --> 16:51.136
நீ!

16:54.389 --> 16:55.556
நீ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாய்.

16:55.557 --> 16:56.933
வீட்டிலும் தண்டனை உண்டு.

16:56.934 --> 16:58.226
- நிரந்தரமாக.
- அம்மா...

16:58.227 --> 17:00.729
நீ இப்போது பேசாமல் இருப்பது
புத்திசாலித்தனம்.

17:02.022 --> 17:03.773
போவியா?
உனக்கு அவரைப் பிடிக்கும் எனத் தெரியாது.

17:03.774 --> 17:05.108
அவர் பரவாயில்லை.

17:05.733 --> 17:06.858
வாவ்.

17:06.859 --> 17:09.738
சூழலைப் புரிந்துகொள்ளுங்கள், கூப்.
இப்போது கூலான அப்பாவாக இருக்கும் நேரமில்லை.

17:12.281 --> 17:13.450
குட் லக், நண்பா.

17:25.546 --> 17:27.797
பெண்களே, பாட்டிக்கு
வணக்கம் சொல்லுங்கள்.

17:27.798 --> 17:29.383
அம்மா...

17:29.883 --> 17:31.425
பயணம் நன்றாக இருந்ததா?

17:31.426 --> 17:32.511
ஆம்.

17:33.470 --> 17:35.054
உங்களை மீண்டும்
சந்திப்பதில் மகிழ்ச்சி, அம்மா.

17:35.055 --> 17:36.265
பார்னி.

17:37.057 --> 17:39.685
இவன் இன்னும்
கொரியன் கற்றுக்கொள்ளவில்லையா?

17:40.435 --> 17:42.688
கற்றுக்கொண்டிருக்கிறார்.

17:43.188 --> 17:44.772
மெதுவாக.

17:44.773 --> 17:46.650
- திரு. பார்க், வரவேற்கிறேன்.
- பெண்களே...

17:47.609 --> 17:49.194
உன் பெற்றோர் எப்படி இருக்கின்றனர், பார்னி?

17:49.862 --> 17:51.404
நன்றாக உள்ளனர், சார்.

17:51.405 --> 17:52.905
இப்போதும் ஸ்காட்ச் குடிக்கிறாயா?

17:52.906 --> 17:54.575
அவ்வப்போது.

18:02.457 --> 18:04.667
இது சிறப்பான நிகழ்வுக்காக.

18:04.668 --> 18:07.254
நாற்பது ஆண்டு பழமையான கான்ட்ரல் கோல்ட்.

18:08.630 --> 18:09.631
நன்றி, சார்.

18:13.510 --> 18:14.427
அப்பா...

18:14.428 --> 18:16.972
எல்லாம் நலமா?

18:17.514 --> 18:18.347
ஆம்.

18:18.348 --> 18:19.265
பெண்களே...

18:19.266 --> 18:20.641
நீங்கள் வணக்கம்
சொல்ல வேண்டும்.

18:20.642 --> 18:21.767
நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள்.

18:21.768 --> 18:25.146
சரி, பெண்களே, தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் பக்கவாட்டுக் கதவைக் காட்டுகிறீர்களா?

18:25.147 --> 18:26.480
இப்படி இருப்பதற்கு வருந்துகிறேன்.

18:26.481 --> 18:29.693
கட்டுமானம் நாங்கள் நினைத்ததைவிட
மெதுவாக நடக்கிறது.

18:37.409 --> 18:38.660
என்ன நினைக்கிறீர்கள்?

18:39.786 --> 18:41.495
தெரியவில்லை. அதாவது, இது...

18:41.496 --> 18:45.082
இதுபோன்றவை அர்த்தமுள்ளவையாக
இருப்பதைவிட

18:45.083 --> 18:47.084
எரிச்சலூட்டுபவையாகவே தெரிகின்றன.

18:47.085 --> 18:51.048
இன்னும் ஐந்து ஆண்டுகளில் இதைப் பற்றி
யார் கவலைப்படப் போகிறார்கள், சரியா?

18:51.924 --> 18:53.842
ஆனால் நான் நிபுணர் இல்லை.

18:54.635 --> 18:56.303
இதில் தவறான பதில் என்று எதுவுமில்லை.

18:56.803 --> 18:58.054
அதுதான் கலையின் அழகு.

18:58.055 --> 18:59.139
ஆம்.

19:00.390 --> 19:01.642
யார் அதை உனக்குக் கூறியது?

19:03.352 --> 19:06.896
என் சிறுவயதில், என் அத்தை சான்டோ டொமிங்கோவில்
உள்ள பெல்லாபார்ட்டில் வழிகாட்டியாக இருந்தார்.

19:06.897 --> 19:10.609
கோடைக்காலங்களில் அவருடன் இருக்கும்போது,
அவர் சுற்றுலா அழைத்துச் செல்வதைப் பார்த்துள்ளேன்.

19:15.447 --> 19:17.199
ஹேய், நீ நிச்சயமாக இதைச் செய்ய
விரும்புகிறாயா?

19:17.783 --> 19:18.867
எதை?

19:20.160 --> 19:21.662
இது எதையும். அனைத்தையும்.

19:22.329 --> 19:23.913
அதற்குள் என்னைக் கழட்டிவிட
முயல்கிறீர்களா?

19:23.914 --> 19:25.665
- இல்லை. இல்லவே இல்லை.
- பிறகு என்ன?

19:25.666 --> 19:28.251
நான் சொல்வது, நாம் மாட்டிக்கொண்டால்,

19:28.252 --> 19:30.671
நான் அதிலிருந்து வக்கீல் மூலம்
வெளிவந்துவிடுவேன்,

19:31.839 --> 19:33.465
மாட்டினால் நீ என்ன செய்வாய்?

19:35.259 --> 19:37.093
- நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டியதில்லை.
- நல்லது.

19:37.094 --> 19:38.887
ஏனெனில் அதில் நான் மோசமானவனாக
இருக்கலாம்.

19:40.305 --> 19:42.683
ஆனால் நீ அனைத்தையும்
பணயமாக வைக்கவில்லையா?

19:43.684 --> 19:45.185
நான் எதைப் பணயமாக வைக்கிறேன்?

19:46.603 --> 19:48.480
என்னிடம் இழப்பதற்கு என்ன உள்ளது
என நினைக்கிறீர்கள்?

19:53.902 --> 19:55.153
சரி, பார்ட்னர்.

19:57.281 --> 19:58.490
இது எப்படி உள்ளது?

20:03.704 --> 20:06.206
இதைப் பாராட்டுவது கடினம், இல்லையா?

20:06.748 --> 20:11.127
இந்த ஓவியர் முன்பு டூஸல்டார்ஃபில்
பாதிரியாரின் உதவியாளராக இருந்தார்.

20:11.128 --> 20:13.005
பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம்.

20:13.589 --> 20:15.007
கண்டிப்பாக மோசமானவன்.

20:17.259 --> 20:20.011
நான் கிறிஸ்டியன் டோமஸோன்.
நான்தான் இந்த இடத்தின் உரிமையாளர்

20:20.012 --> 20:22.555
- அது நல்லதோ கெட்டதோ.
- சரி. உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

20:22.556 --> 20:26.225
- நமக்கு பொதுவான நண்பர் இருக்கிறார் அல்லவா?
- சரியாகச் சொல்கிறீர்கள்.

20:26.226 --> 20:28.477
நான் இதைக் கூறியாக வேண்டும்,
அவர் உங்களை துல்லியமாக விவரித்தார்.

20:28.478 --> 20:30.397
- அப்படியா?
- ஆம்.

20:31.231 --> 20:33.941
- உங்கள் காதலி யார்?
- இவரது பார்ட்னர்.

20:33.942 --> 20:35.318
உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

20:35.319 --> 20:36.570
மகிழ்ச்சி.

20:38.488 --> 20:39.615
பார்ட்னரா?

20:40.449 --> 20:41.533
அற்புதம்.

20:43.202 --> 20:45.161
நீங்கள் இதைப் பார்ப்பதை கவனித்தேன்.

20:45.162 --> 20:47.873
ஆம், இது எரிச்சலூட்டுவதாக உள்ளது.

20:48.415 --> 20:50.542
ஆம். பெரும்பாலானவை அப்படித்தான்.

20:51.793 --> 20:53.337
ஆனால் இது கொஞ்சமாவது நன்றாக உள்ளதா?

20:54.379 --> 20:55.756
அது தந்திரமான கேள்வியாகத் தெரிகிறது.

20:57.382 --> 20:59.051
என்னுடன் வாருங்கள். கலை பற்றிப் பேசுவோம்.

21:08.185 --> 21:11.480
இந்த ஓவியம் கிடைப்பது கடினம்.

21:12.105 --> 21:14.065
அதுவும் குறுகிய காலத்தில்.

21:14.066 --> 21:16.692
அதாவது, ஏற்கனவே இது
யாரிடமாவது இருந்ததா?

21:16.693 --> 21:21.197
என்னுடைய பாப் ஓவியங்களை உருவாக்க
புஷ்விக்கில் ஒரு லெஸ்பியன் இருக்கிறார்.

21:21.198 --> 21:23.659
- அருமை.
- அவர்தான் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறாரா?

21:26.662 --> 21:29.331
இது கிட்டத்தட்ட அசல் போன்றது.

21:30.874 --> 21:36.128
லிக்டென்ஸ்டைன் பயன்படுத்திய மாக்னா அக்ரிலிக்
பெயின்டை உருவாக்குவது கிட்டத்தட்ட முடியாதது.

21:36.129 --> 21:39.215
பெரும்பாலான நவீன கால அக்ரிலிக் பெயின்ட்
நீரில் கரையக்கூடியது,

21:39.216 --> 21:42.176
ஆனால் மாக்னா டுர்பென்டைனுடன்
நன்றாகக் கலந்தது.

21:42.177 --> 21:46.557
கோல்டன் ஆர்டிஸ்ட்ஸ் கலர்ஸ் கிட்டத்தட்ட
மாக்னாவின் உயர் கிளாஸ் ஃபினிஷைக் கொடுக்கும்,

21:47.391 --> 21:48.934
ஆனால் அது துல்லியமாகப் பொருந்தாது.

21:50.310 --> 21:53.855
அது பார்த்தால் உண்மையானது போலத் தெரியும்,
ஆனால் வேதியியல் ஆய்வில் கண்டுபிடித்துவிடலாம்.

21:53.856 --> 21:55.566
அதை ஆய்வு செய்ய மாட்டார்கள்.

21:56.191 --> 21:57.525
எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?

21:57.526 --> 21:59.111
உங்களுக்கு உங்கள் வேலை தெரியும்,
எனக்கு என் வேலை தெரியும்.

22:00.237 --> 22:01.988
நீங்கள் இதற்கு முன் இதைச்
செய்ததில்லைதானே?

22:01.989 --> 22:03.865
- நான் விரைவாகக் கற்றுக்கொள்வேன்.
- நீங்கள் அவ்வப்போது இதைச் செய்பவர்.

22:03.866 --> 22:05.700
அவர்கள் என்னைப் பதட்டமாக்குவார்கள்.

22:05.701 --> 22:06.951
ஆனாலும் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்.

22:06.952 --> 22:09.079
ஆம், நான் இங்கே இருக்கிறேன்.

22:10.998 --> 22:12.999
லூ உங்களை நம்புகிறார்,
நான் லூவை நம்புகிறேன்.

22:13.000 --> 22:15.126
ஆனாலும் உங்களால் அதைக் கொடுக்க முடியும்
என்று நான் நம்பவில்லை.

22:15.127 --> 22:18.045
புஷ்விக்கில் இருக்கும் உங்கள் லெஸ்பியனை
அழைத்ததைப் பார்த்தால்,

22:18.046 --> 22:21.591
என்னால் கொடுக்க முடியும் என நீங்கள்
நினைப்பது போலத் தெரிகிறது.

22:21.592 --> 22:26.847
சரி, நாங்கள் போலியை வைத்துவிட்டு,
அசலை உங்களிடம் கொடுக்கிறோம், பிறகு என்ன?

22:27.514 --> 22:32.560
நான் அது உண்மையானதா எனப் பார்த்தவுடன்,
என்னிடம் இரண்டு பேர் வாங்க ஆர்வமாக உள்ளனர்.

22:32.561 --> 22:37.857
உறுதியான உடைமைகளுக்கு மாற விரும்பும்
கிரிப்டோ நபர் ஒருவர்,

22:37.858 --> 22:41.111
இன்னொருவர், அவனது முன்னாள் முதலாளி.

22:42.279 --> 22:43.864
இது மிகவும் சிக்கலானது.

22:44.656 --> 22:46.032
அந்த ஏலம் சூடுபிடிக்கும் என நம்புகிறேன்.

22:46.033 --> 22:47.743
அது உறுதியளிப்பதாகத் தெரிகிறது.

22:52.414 --> 22:53.540
என்னவோ?

22:57.336 --> 22:58.921
எனக்கு உங்களைப் பிடிக்கும்.

23:00.506 --> 23:01.798
அதைப் பாராட்டுகிறேன்.

23:03.300 --> 23:05.259
சரி, என்னைப் போக அனுமதித்தால்

23:05.260 --> 23:08.680
சில கிளையன்டுகளுக்கு நான்
மருந்து வாங்க வேண்டும்.

23:13.936 --> 23:15.145
மகிழ்ச்சியாக இருங்கள்.

23:30.118 --> 23:32.828
இப்போதுதான் நீச்சல் குள
டைல் வந்தது.

23:32.829 --> 23:35.541
அது அழகானது, போர்ச்சுகலில் கையால் செய்யப்பட்டது.

23:36.166 --> 23:38.961
பார்னிதான் அதைத் தேர்வுசெய்தது.

23:40.921 --> 23:44.007
வேலை முடிந்ததும் அது அழகாக இருக்கும், கண்ணே.

23:44.716 --> 23:47.927
ஆனால் பேத்திகள் பற்றிதான் கவலைப்படுகிறேன்.

23:47.928 --> 23:52.431
இந்தச் சத்தமும் தூசியும், அந்நியர்கள்
வந்து போவது.

23:52.432 --> 23:54.977
இது சில மாதங்களுக்குத்தான்.

23:55.561 --> 23:57.144
அம்மாவும் நானும் இதைப் பற்றிப் பேசினோம்.

23:57.145 --> 24:00.732
இந்த வேலை முடிந்ததும் நீங்கள் நகரத்தில் உள்ள
எங்கள் அபார்ட்மென்டில் தங்குங்கள்.

24:03.652 --> 24:05.904
அழைப்புக்கு நன்றி.

24:06.405 --> 24:09.324
ஆனால் அங்கே தங்குவது மகள்களுக்கு
சிரமமாக இருக்கும்.

24:09.950 --> 24:13.370
இந்தக் குப்பையில் வசிப்பதைவிட
சிரமமாக இருக்குமா?

24:14.538 --> 24:17.291
இவன் வேறொரு வீட்டை வாடகைக்கு
எடுத்திருக்க வேண்டும்.

24:18.458 --> 24:22.087
நீயும் குழந்தைகளும் சௌகரியமாக
இருக்க விரும்புகிறோம்.

24:23.589 --> 24:25.007
நாங்கள் மிகவும் சௌகரியமாக இருக்கிறோம்.

24:26.383 --> 24:27.968
சௌகரியமா? இதுதான் சௌகரியமா?

24:28.552 --> 24:31.555
சூரிய அறையில் சாப்பிடுவதா?

24:41.857 --> 24:43.358
நமக்கு விஸ்கி எடுத்து வரவா?

25:11.053 --> 25:14.555
ஆ, அம்மா. உங்களுக்கு
எதுவும் தேவையா?

25:14.556 --> 25:18.726
உங்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை இருப்பதாக
கிரேஸ் கூறினாள்.

25:18.727 --> 25:21.480
- நான் உதவ விரும்புகிறேன்.
- அது அவசியமில்லை.

25:22.481 --> 25:25.067
அவள் கவலைப்பட மாட்டாள்
என்று தெரிந்தால், நான் நன்றாக உணர்வேன்.

25:26.109 --> 25:30.029
கிரேஸ் உங்களிடம் என்ன கூறினாள் எனத் தெரியாது,
ஆனால் கவலைப்பட எதுவுமில்லை.

25:30.030 --> 25:33.033
நான் கொஞ்சம் நிதிப் பொறுப்பை
ஊக்கப்படுத்த முயல்கிறேன்.

25:35.118 --> 25:37.913
நிதி நிர்வாகியை திருமணம் செய்துகொள்வதில்
உள்ள சிக்கல் என நினைக்கிறேன்.

25:45.212 --> 25:46.922
என் மகள் கிளையன்ட் இல்லை.

25:47.631 --> 25:49.007
அவள் உங்கள் மனைவி.

25:49.925 --> 25:50.968
கவலைப்படாதீர்கள்.

25:51.969 --> 25:54.221
இது நமக்குள்ளேயே இருக்கும்.

25:55.013 --> 25:59.141
இதுபோன்ற அவசரங்களுக்காகவே நான்
தனிப்பட்ட கணக்கு வைத்திருக்கிறேன்.

25:59.142 --> 26:05.065
இது உங்கள் பெருந்தன்மை, திருமதி பார்க்,
ஆனால் எந்த அவசரமும் இல்லை, எனவே...

26:08.402 --> 26:11.280
நீங்கள் திரு. பார்க்கிடம் வேலை செய்திருந்தால்
சிறப்பாக இருந்திருப்பீர்கள்.

26:12.239 --> 26:13.240
ஆம்.

26:14.783 --> 26:16.827
உங்களுக்கு கொரியன்
தெரியாதது வருத்தம்.

26:25.627 --> 26:28.046
அவன் கேவலமானவன் என்பதில் வருத்தம்.

26:41.435 --> 26:44.104
ஹேய், ஹன்டர். நாம் பள்ளியில் நடந்தது
பற்றி இன்னும் பேச வேண்டும்.

26:44.771 --> 26:47.690
- ஏன்?
- ஏனெனில் உன்னை வெளியேற்றியிருப்பார்கள்.

26:47.691 --> 26:49.734
- அது உனக்கு கவலையில்லையா?
- ஆம், கவலையில்லை.

26:49.735 --> 26:51.027
ஃபிளேமின் ஹாட் சீட்டோஸைப் பார்த்தீர்களா?

26:51.028 --> 26:52.820
உன் குடலுக்கு பிரச்சினையில்லாத
உணவு வேண்டுமா?

26:52.821 --> 26:54.071
உனக்கு ஸ்மூத்தி போட்டுத் தரவா?

26:54.072 --> 26:56.240
- இல்லை, வேண்டாம்.
- ஹேய்.

26:56.241 --> 26:58.160
நான் என்ன நடந்ததெனப் புரிந்துகொள்ள விரும்புகிறேன்.

26:59.244 --> 27:01.621
நான் வகுப்பைத் தவிர்த்தேன்.
அது அவ்வளவு சிக்கலானது இல்லை.

27:01.622 --> 27:04.040
ஆனால் அந்த மருந்து?
நீ அதை விற்றாயா?

27:04.041 --> 27:05.833
இல்லை! என்ன?

27:05.834 --> 27:09.463
உன் சக மாணவர்களைக் கவர விரும்பினால்,
அது புரிந்துகொள்ளக்கூடியது.

27:10.255 --> 27:12.089
ஆனால் ஆடெரால் என்பது மோசமான போதைப்பொருள்,
அதை நீ எல்லோருக்கும்...

27:12.090 --> 27:14.383
அடக் கடவுளே. நிறுத்துகிறீர்களா?

27:14.384 --> 27:16.511
ஒரு நிமிடம். எங்கே போகிறாய்?

27:16.512 --> 27:18.805
ஹேய்! நான் பேசி முடிக்கவில்லை.

27:40.619 --> 27:42.120
ஹேய். உனக்கு பரிசு
கொண்டு வந்துள்ளேன்.

27:49.920 --> 27:53.507
மேஃபீல்டின் முக்கிய நபராக இருப்பது
எப்படி உள்ளது?

27:54.591 --> 27:57.301
எல்லா சாஃபமோர் பெண்களும்
உனக்கு மெசேஜ் செய்கிறார்களா?

27:57.302 --> 27:58.470
ஆம், கண்டிப்பாக.

28:14.695 --> 28:15.821
இதை நீ உருவாக்கினாயா?

28:16.363 --> 28:17.573
ஆம்.

28:20.492 --> 28:23.287
அருமை, ஹன்டர்.
உனக்கும் ஆன்மா இருக்கிறது போல.

28:26.164 --> 28:27.457
போய்த் தொலை.

28:45.100 --> 28:47.102
நிக்கின் வலிமையான ஜிம்

29:12.544 --> 29:14.171
கூப்பர், ஆண்ட்ரூ
உறுப்பினர் - தற்போது

29:16.173 --> 29:17.174
ஆலி?

29:17.966 --> 29:19.926
ஹேய்,
நீ சேர்ந்தது எனக்குத் தெரியாது.

29:19.927 --> 29:22.053
ஆண்டியுடையதைப் பயன்படுத்துகிறேன்.

29:22.054 --> 29:24.847
அவன் இதைப் பயன்படுத்துவதில்லை, இது
வீணாவதில் விருப்பமில்லை.

29:24.848 --> 29:26.724
மன்னிக்கவும், மெம்பர்ஷிப்களை
பரிமாற்றிக்கொள்ள முடியாது.

29:26.725 --> 29:28.810
மனைவிகளையும்தான், ஆனாலும்...

29:31.563 --> 29:32.563
ஒன்று சொல்கிறேன்.

29:32.564 --> 29:34.524
நீ ஏன் பயன்படுத்திப் பார்க்கக் கூடாது?

29:34.525 --> 29:37.944
நீ பதிவுசெய்ய விரும்பினால், எப்போதும்
நண்பர்கள் குடும்பத்தினருக்கான சலுகை உண்டு.

29:37.945 --> 29:39.570
நன்றி, நிக்.

29:39.571 --> 29:40.656
நான் இரண்டுமே இல்லை.

29:59.508 --> 30:01.926
எந்தவொரு மூளையிருக்கும் நபருக்கு
போலீஸுடன் தகறாரும் ஒரு பெரிய நாய் கடித்த

30:01.927 --> 30:04.303
காயமும், நாம் வேறு வேலையைத் தேட வேண்டும்

30:04.304 --> 30:06.681
என்று உலகமே நமக்குக் கூறும்

30:06.682 --> 30:08.892
பெரிய அறிகுறி என்பதை உணர்ந்திருப்பான்.

30:09.601 --> 30:11.477
ஆனால் எனக்கு வேறு வழியே இல்லை.

30:11.478 --> 30:12.770
என்ன செய்கிறீர்கள் எனத் தெரியுமா?

30:12.771 --> 30:13.897
குறிப்பிட்டுத் தெரியாது.

30:14.439 --> 30:15.649
உங்கள் கான்வாஸ்...

30:17.192 --> 30:20.153
சரி. ஸ்ட்ரெட்ச் பார்கள்
இதுபோல சேர வேண்டும்.

30:21.363 --> 30:22.781
மூலைகளை விரிக்க
இதைப் பயன்படுத்தி...

30:24.199 --> 30:26.118
பின்பக்கக் கதவு திறக்கிறது.

30:34.418 --> 30:37.628
அமெரிக்க பாப் கலையில்,
கலை பற்றி அக்கறையில்லாத, ஆனால்

30:37.629 --> 30:41.090
அதை நல்ல முதலீடாக நினைக்கும் நபர்களுக்குப்
பிடித்தவர்களில் ஜெஃப் கூன்ஸுடன்

30:41.091 --> 30:42.967
ராய் லிக்டென்ஸ்டைன் நல்ல போட்டியில் இருக்கிறார்.

30:42.968 --> 30:45.970
அவர்கள் காயின்ஸ்,
பெயரளவில் சேகரிப்பாளர்கள்.

30:45.971 --> 30:47.972
இங்கிருக்கும் ஓவியம், ஸ்குவேர், 1983 ஐச் சேர்ந்தது,

30:47.973 --> 30:50.474
இதன் கலைத்தன்மைக்காக இல்லாமல்,

30:50.475 --> 30:52.476
இது ஒரு பாராட்டப்படும் சொத்தாக
வாங்கப்பட்டிருக்கும்.

30:52.477 --> 30:53.978
அது வருத்தம்தான்.

30:53.979 --> 30:55.730
எனக்கு எப்போதுமே லிக்டென்ஸ்டைனின்
படைப்பு பிடிக்கும்.

30:55.731 --> 30:57.149
குறிப்பாக காமிக் புத்தக ஓவியங்கள்.

31:00.569 --> 31:03.988
என் செலவுகள் எப்போதும் என்னைத் தாண்டிச்
செல்வது வெளிப்படையாகத் தெரிந்தது.

31:03.989 --> 31:06.532
எனவே இந்த ஓவியம் போன்ற
சில பெரிய திருட்டுகள் செய்தால்

31:06.533 --> 31:08.659
சில கொள்ளைகளில்
அதிக பணம் கிடைக்கும்.

31:08.660 --> 31:10.828
அதிக ரிஸ்க், அதிக லாபம்.

31:10.829 --> 31:12.748
அல்லது எனக்கு இது பிடிக்கத்
தொடங்கியிருக்கலாம்.

31:33.727 --> 31:34.937
ஆம், சரி.

31:46.031 --> 31:48.074
இல்லை, நான்தான், கோழையே.

31:48.075 --> 31:49.992
- நான் கோழை இல்லை.
- ஹேய்.

31:49.993 --> 31:52.829
கொஞ்சம் அமைதியாக இருக்கிறீர்களா?
நாம் தாத்தா பாட்டி வீட்டை நெருங்கிவிட்டோம்.

32:00.170 --> 32:02.964
டிங் டாங்!

32:02.965 --> 32:04.590
அடக் கடவுளே.

32:04.591 --> 32:07.009
- இருங்கள்... ஹேய்.
- ஹேய், கண்ணே.

32:07.010 --> 32:08.553
ஹேய், கண்ணே.

32:08.554 --> 32:09.637
ஹேய்!

32:09.638 --> 32:12.557
நாளை யாருக்கோ பிறந்தநாள் போல!
அதுபற்றி உனக்குத் தெரியுமா?

32:12.558 --> 32:14.350
- இவனுக்கு ஐந்து வயதாகப் போகிறது!
- நிஜமாகவா?

32:14.351 --> 32:16.185
நாம் போய் கேக் இருக்கிறதா என்று பார்ப்போம்.

32:16.186 --> 32:18.063
அங்கே மேசையில் பாருங்கள்.

32:18.689 --> 32:20.065
பரிசுகளும் உள்ளன.

32:24.862 --> 32:26.071
எல்லாம் நலமா?

32:26.905 --> 32:29.241
ஓ, ஆம். நீண்ட பயணத்தின் களைப்பு.

32:30.158 --> 32:31.159
சரி, வா.

32:32.452 --> 32:34.162
- நாயா?
- ஆம்.

32:37.958 --> 32:39.126
ஆ, கண்ணே.

32:51.180 --> 32:53.098
நீ வீட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

32:58.145 --> 32:59.353
அப்படித்தான்!

32:59.354 --> 33:02.023
சரி, குளூட் தசையைப் பயன்படுத்துங்கள்.
மேலே அழுத்துங்கள்.

33:02.024 --> 33:04.234
அதைப் பார்க்க வேண்டும். அருமை. நல்லது.

33:05.319 --> 33:06.904
அனைவரும் சிறப்பாகச் செய்கிறீர்கள்.

33:08.864 --> 33:11.408
ஸ்டிரெட்ச் செய்ய மறக்காதீர்கள்.
அடுத்த வாரம் பார்ப்போம்.

33:13.160 --> 33:14.161
ஆலி?

33:15.829 --> 33:16.955
ஹேய், புரூஸ்.

33:18.248 --> 33:19.458
இங்கே என்ன செய்கிறாய்?

33:19.958 --> 33:21.293
மற்ற அனைவரையும் போலத்தான்.

33:22.044 --> 33:24.630
என் உடலை
இன்னும் அழகாக்க முயல்கிறேன்.

33:27.424 --> 33:29.843
நான் உன்னைப் பின்தொடர்கிறேனோ என நீ நினைத்தால்,
கண்டிப்பாக இல்லை.

33:30.677 --> 33:32.094
கண்டிப்பாக இல்லை.

33:32.095 --> 33:34.138
நான் ஆண்டியுடன் தங்கியுள்ளேன்.

33:34.139 --> 33:36.225
அவன் என்னைத் தங்க அனுமதிப்பான்.

33:36.725 --> 33:38.101
அது விநோதம் இல்லை என நம்புகிறேன்.

33:39.770 --> 33:41.187
நீ நன்றாக இருக்கிறாய்.

33:41.188 --> 33:42.272
ஆரோக்கியமாக.

33:43.023 --> 33:45.442
அதாவது, இல்லை...

33:47.319 --> 33:49.529
அவனுடன் தங்குவது எனக்காக நன்மை
அளிக்கிறது என நினைக்கிறேன்.

33:49.530 --> 33:51.739
நான் ஆண்டியுடன் அதிக நேரம் செலவிடுகிறேன்.

33:51.740 --> 33:53.824
நான் மீண்டும் சில நிகழ்ச்சிகளில்
வாசிக்கிறேன்.

33:53.825 --> 33:55.409
- ஓ, அப்படியா?
- ஆம்.

33:55.410 --> 33:56.953
தி டேப் இருக்கிறதல்லவா?

33:56.954 --> 34:00.998
அதில் பெரும்பாலும் என் பாடலின்போது
நபர்கள் குடித்துக்கொண்டு பேசுவார்கள்.

34:00.999 --> 34:02.291
கனமாக உள்ளது.

34:02.292 --> 34:03.835
ஹேய், நீ உன் வேலையைச் செய்கிறாய்,

34:03.836 --> 34:06.129
என் புல்வெளியில் இல்லாமல்
வேறு இடத்தில் வாசிக்கிறாய்.

34:07.130 --> 34:09.090
அடச்சே. நீ அதைச் சொல்கிறாய்.

34:09.091 --> 34:10.759
உண்மையில், அதை மிஸ் செய்கிறேன்.

34:11.342 --> 34:12.386
கண்டிப்பாக மிஸ் செய்வாய்.

34:13.094 --> 34:14.346
உன் மனைவியும் மிஸ் செய்வார்.

34:14.972 --> 34:18.225
அல்லது, தெரியாது, நான் மீண்டும் வந்து, நீங்கள்
விரும்பும் பாடலை வாசிக்கலாம்.

34:21.270 --> 34:22.813
மன்னிக்கவும், அப்பாவுக்கான வேலை.

34:23.522 --> 34:24.565
உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

34:25.190 --> 34:26.732
முடிந்தால் தி டேப்புக்கு வருகிறேன்.

34:26.733 --> 34:28.110
சரி, அருமை.

34:29.027 --> 34:30.445
ஜிம்மில் சந்திக்கலாம்.

34:31.905 --> 34:34.616
என்ன?
ஜிம்மில் சந்திக்கலாமா?

34:46.460 --> 34:49.296
அடக் கடவுளே. உங்களைத் தவறாக
எடை போட்டுவிட்டேன், நண்பா.

34:49.297 --> 34:50.715
ஆம், அது நிறைய நடக்கும்.

34:50.716 --> 34:53.091
இந்த டூரிஸ்ட்டுக்கு துணிச்சல் உள்ளது!

34:53.092 --> 34:54.803
ஆம்! எனக்குப் பிடித்துள்ளது!

34:56.221 --> 34:57.514
இப்போது என்ன நடக்கும்?

35:00.809 --> 35:02.060
ஒரு நிமிடம்.

35:14.364 --> 35:16.741
- என்ன?
- நீ மிகவும் அழகாக இருக்கிறாய்.

35:16.742 --> 35:19.119
ஏனெனில் இதன்பிறகு என்னை நீங்கள்
டின்னர் கூட்டிச் செல்கிறீர்கள்.

35:24.374 --> 35:25.667
சரி.

35:26.335 --> 35:31.506
என் ஆட்கள் இதைச் சரிபார்க்க
சில மணிநேரம் ஆகும்.

35:31.507 --> 35:32.925
ஆனால் அந்த நேரத்தில்,

35:34.009 --> 35:35.843
நீங்கள் கொண்டாட உடையணிந்திருக்கிறீர்கள்.

35:35.844 --> 35:39.097
எனவே கொண்டாடுவோம்!

36:06.875 --> 36:08.544
ஹேய்!

36:09.920 --> 36:11.630
இந்தாருங்கள்!

36:14.508 --> 36:16.635
- நன்றி.
- கண்டிப்பாக!

36:18.762 --> 36:20.514
மேசையிலேயே.

36:33.485 --> 36:34.318
இப்போது வேண்டாம்.

36:34.319 --> 36:37.113
உங்களைப் போன்ற ஐவி லீக் நபர்களுக்கு
இது பிடிக்குமே.

36:37.114 --> 36:38.198
ஆம்.

36:42.077 --> 36:43.619
ஹேய், உனக்கு எப்படி, அழகியே?

36:43.620 --> 36:44.788
உனக்கு வேண்டுமா?

36:46.456 --> 36:47.749
நிச்சயமாக.

36:56.550 --> 36:58.426
என்ன? நாம் கொண்டாடுகிறோம்தானே?

36:58.427 --> 37:00.512
அப்படித்தான் நினைக்கிறேன்!

37:02.097 --> 37:04.141
கமான்!

37:06.894 --> 37:08.311
அடக் கடவுளே.

37:08.312 --> 37:09.937
ஆம், நன்றாக உள்ளதா?

37:09.938 --> 37:12.357
- ஆம், கண்டிப்பாக.
- நான் நடனமாட வேண்டும்.

37:14.067 --> 37:15.277
மன்னிக்கவும்.

37:19.489 --> 37:20.907
அருமையான இடம்.

37:20.908 --> 37:22.326
அருமை, இல்லையா?

37:23.577 --> 37:25.037
இங்கே வந்து, ரிலாக்ஸ் ஆவது
எனக்குப் பிடிக்கும்.

37:28.707 --> 37:30.626
அருமை! எனக்குப் பிடித்துள்ளது!

37:42.596 --> 37:44.431
ஹேய், நீங்களும் அந்தப் பெண்ணும்...

37:46.642 --> 37:48.935
இல்லை, நாங்கள்
தொழில் ரீதியாக மட்டும்தான் பார்ட்னர்கள்.

37:48.936 --> 37:50.144
சரி.

37:50.145 --> 37:51.855
அதுதான் சிறந்தது.

37:52.689 --> 37:56.318
அதாவது, நீங்கள் அழகான நபர், ஆனால் இதற்கெல்லாம்
கொஞ்சம் வயதானவர், இல்லையா?

37:57.945 --> 37:58.946
என்ன கூறினாலும் சரிதான்.

38:03.033 --> 38:04.367
இன்னொன்று வேண்டுமா?

38:04.368 --> 38:06.118
ஓ, இல்லை. வேண்டாம்.

38:06.119 --> 38:08.205
அதைவிடச் சிறப்பாகவும் இருக்க முடியும்!

38:08.997 --> 38:10.332
ஆம்.

38:15.254 --> 38:16.421
மிகவும் அருமை!

38:17.548 --> 38:19.383
ஆம், நான் போய்...

38:20.175 --> 38:21.468
நடனமாடப் போகிறேன்.

38:27.766 --> 38:29.059
கூப்!

38:34.606 --> 38:36.232
ஹேய்.

38:36.233 --> 38:38.234
- சரி.
- உங்களுக்கு ஓய்வு தேவைப்பட்டது போலத் தெரிகிறது.

38:38.235 --> 38:39.361
அவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிறதா?

38:43.031 --> 38:45.450
ஒருவேளை உங்களைவிட எனக்கு உங்களைப்
பற்றி நிறைய தெரியலாம்.

38:46.618 --> 38:47.828
ஆம். தெரியலாம்.

38:48.787 --> 38:50.246
கமான். என்னுடன் ஆடுங்கள்.

38:50.247 --> 38:52.331
எனக்கு ஆடத் தெரியாது.

38:52.332 --> 38:54.710
சில வாரங்களுக்கு முன் உங்களுக்குத்
திருடவும்தான் தெரியாது.

38:55.335 --> 38:57.962
ஒருவேளை உங்களுக்கு ஆடத் தெரியலாம்,
இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

38:57.963 --> 38:59.047
சரி.

39:16.315 --> 39:19.025
ஹேய். சரி.

39:19.026 --> 39:20.735
உங்களுக்கு ஆடத் தெரிகிறது.

39:20.736 --> 39:23.989
ஆம், அது போதைப் பொருளின்
தாக்கம் என நினைக்கிறேன்.

39:25.908 --> 39:27.242
சோகமாக இருக்காதீர்கள், கூப்.

39:28.619 --> 39:31.830
- என்ன பேசுகிறாய்? நான் சோகமாக இல்லை.
- எப்போதும் சோகமாக உள்ளீர்கள்.

39:33.498 --> 39:34.790
எனக்குத் தெரிகிறது.

39:34.791 --> 39:36.335
உங்கள் கண்களுக்குப் பின்னால்.

39:49.890 --> 39:52.475
ஹேய், நான் இன்னொரு பானம்...
குடிக்கப் போகிறேன்.

39:52.476 --> 39:54.101
உனக்கு வேறெதுவும் வேண்டுமா?

39:54.102 --> 39:57.439
- என் ஷாம்பெய்ன் போதும்.
- சரி. ஆம், இதோ வருகிறேன்.

40:16.625 --> 40:18.252
எலினா!

40:19.294 --> 40:20.379
ஹாய்.

40:22.172 --> 40:23.589
நீ என்னை மறந்துவிடுவாய்...

40:23.590 --> 40:25.049
எனக் கவலைப்படத் தொடங்கினேன்.

40:25.050 --> 40:27.511
கண்டிப்பாக இல்லை. நாங்கள் இங்கே இருக்க
நீங்கள்தான் காரணமே.

40:28.303 --> 40:30.264
நான்தான் காரணம். ஆம்.

40:31.098 --> 40:34.268
ஆனால் நான் நினைக்கிறேன், நீயும் நானும்
இங்கே இருக்க...

40:35.561 --> 40:36.853
வேறொரு காரணமும் இருக்கலாம்.

40:36.854 --> 40:38.437
- ஓ, அப்படியா?
- ஆம்.

40:38.438 --> 40:40.524
- என்ன அது?
- நான் காட்டுகிறேன்.

40:43.277 --> 40:44.611
இல்லை, வேண்டாம்.

40:50.492 --> 40:53.370
சரி. பொறுமை, பெரியவரே. பொறுமை.

40:54.788 --> 40:57.915
ஹேய். பொறுமை என்பது சிறுவர்களுக்கு, அழகியே.

40:57.916 --> 40:59.251
எனக்கு இப்படித்தான் பிடிக்கும்.

41:02.754 --> 41:04.297
- ஹேய்.
- ஹேய்.

41:04.298 --> 41:06.841
ஹேய்!

41:06.842 --> 41:08.134
எதுவும் பிரச்சினையா?

41:08.135 --> 41:09.678
இல்லை, நாங்கள் கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறோம்.

41:10.387 --> 41:11.972
- நீ நலமா?
- ஆம், நலம்தான்.

41:12.764 --> 41:13.931
- நிச்சயமாகவா?
- நான் பார்த்துக்கொள்கிறேன்.

41:13.932 --> 41:16.601
- சரி.
- பதில் சொல்லிவிட்டாள், பெரியவரே.

41:16.602 --> 41:18.227
நாம் அனைவரும் மேலே...

41:18.228 --> 41:19.521
- கடவுளே.
- ...செல்லலாம் என நினைக்கிறேன்.

41:21.273 --> 41:22.274
அடச்சே.

41:22.774 --> 41:25.611
- நாசமாய்ப் போனவனே. வலிக்கிறது.
- அடச்சே.

41:27.821 --> 41:28.946
சரி.

41:28.947 --> 41:30.865
நாசமாய்ப் போ, பெரியவரே.

41:30.866 --> 41:32.408
சரி,
கொஞ்சம் பொறுமையாக இருப்போம்.

41:32.409 --> 41:33.660
ஹேய்!

41:36.705 --> 41:37.748
வாருங்கள்!

41:42.711 --> 41:43.711
சிணுங்காதீர்கள்!

41:43.712 --> 41:45.254
நிறைய ஊற்றுகிறாய்.

41:45.255 --> 41:47.256
- அசையாதீர்கள். தேய்க்காதீர்கள்.
- வலிக்கிறது.

41:47.257 --> 41:48.800
அது இன்னும் மோசமாக்கும்.

41:51.637 --> 41:52.929
பரவாயில்லையா?

41:52.930 --> 41:56.767
- ஆம். கொஞ்சம். தெரியவில்லை.
- என்ன நினைத்துக்கொண்டிருந்தீர்கள்?

41:57.643 --> 41:58.643
நன்றி இல்லையா?

41:58.644 --> 42:01.604
- நான் அவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன்.
- எனக்கு அப்படித் தெரியவில்லை.

42:01.605 --> 42:04.106
அதுபோன்ற இடத்தில் எத்தனை முறை என்னிடம்

42:04.107 --> 42:05.191
அப்படி நடந்துகொண்டுள்ளனர் தெரியுமா?

42:05.192 --> 42:07.443
இல்லை, தெரியாது.
ஏனெனில் நீங்கள் ஓர் ஆண்.

42:07.444 --> 42:09.612
- நான் உதவத்தான் முயன்றேன்.
- சரி, ஒரு உதவி செய்யுங்கள்.

42:09.613 --> 42:11.030
அடுத்த முறை என்னைப் பாதுகாக்க
முயலும்போது,

42:11.031 --> 42:13.199
நமக்கு பணம் கிடைக்கும் வரை காத்திருக்கிறீர்களா?

42:13.200 --> 42:15.368
அதற்குத்தான் கோபப்படுகிறாயா?
விளையாடுகிறாயா?

42:15.369 --> 42:17.286
அது பெரிய விஷயம் இல்லை. நாம்
வேறெதையாவது திருடிக்கொள்ள...

42:17.287 --> 42:18.747
எனக்கு அந்தப் பணம் தேவை!

42:22.793 --> 42:24.335
ஒன்று சொல்லவா?

42:24.336 --> 42:27.004
நீங்கள் பணத்தை இழந்த ஒரு பணக்காரர்,

42:27.005 --> 42:29.549
இப்போது உங்கள் கதை முடிந்தது என நினைக்கிறீர்கள்,
ஆனால் உங்களுக்குத் தெரியாது.

42:29.550 --> 42:32.718
நீங்கள் பசியோடு இருக்கப் போவதில்லை.
உங்கள் குழந்தைகள் பசியோடு இருக்கப் போவதில்லை.

42:32.719 --> 42:36.597
உங்களிடம் பறித்தது உங்களுக்கு வேண்டும், ஏனெனில்
உங்களுக்கு பணக்காரராக இருக்கத்தான் தெரியும்.

42:36.598 --> 42:39.268
- எலினா...
- நிஜமான கஷ்டம் என்னவென்று உங்களுக்குத் தெரியாது.

42:40.269 --> 42:42.062
நீங்கள் குறை சொல்லும் விஷயம்?

42:44.273 --> 42:45.815
பெரும்பாலான மக்கள்...

42:45.816 --> 42:47.567
அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

42:47.568 --> 42:50.362
- அதற்கான பணத்தை உனக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்!
- ஆம், அதுதான் நல்லது.

42:52.030 --> 42:53.490
என்னை இங்கேயே விட்டுச் செல்கிறாயா?

42:54.408 --> 42:57.119
- ஆம்.
- உன்னை மன்னித்துவிடுகிறேன்.

42:58.620 --> 42:59.663
மேஸ் அடித்ததற்கு.

43:00.747 --> 43:01.747
நாசமாய்ப் போங்கள்.

43:01.748 --> 43:03.083
அது பெப்பர் ஸ்ப்ரே.

43:32.613 --> 43:33.864
மெசேஜ்கள்

43:37.826 --> 43:41.371
சமந்தா
விழித்திருக்கிறாயா?

43:49.588 --> 43:53.175
குழந்தைகளுடன் பாஸ்டனில் இருக்கிறேன்.
நினைவுள்ளதா?

43:53.926 --> 43:55.928
சாம் இல்லாதது, எனக்கு ஒரு வாய்ப்பைக்
கொடுத்தது.

43:57.554 --> 43:59.597
நான் என் வீட்டில் அதிகமாக
ஸ்காட்ச் குடித்துவிட்டு

43:59.598 --> 44:02.017
தி க்ரைடீரியன் கலெக்ஷனைப் பார்த்துக்கொண்டே
தூங்கிப் போகலாம்...

44:06.271 --> 44:08.941
அல்லது அவளுடைய வீட்டில்
எதையாவது எடுக்கலாம்.

44:56.655 --> 45:00.659
”இது சிறப்பான தருணங்களுக்காக.”

45:09.710 --> 45:11.712
பார்னி சோய்
சாண்ட்ரா பார்க்

45:49.249 --> 45:50.250
அடச்சே.

45:51.335 --> 45:52.753
அடச்சே.

45:54.546 --> 45:56.715
அடச்சே.

45:58.884 --> 46:01.220
அடச்சே.

46:06.892 --> 46:08.185
அடச்சே.

46:14.191 --> 46:15.442
கமான்!

46:45.681 --> 46:47.723
உங்கள் முன்னாள் காதலியின்
வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது

46:47.724 --> 46:49.768
பல நிலைகளில் சிக்கலானது
எனத் தெரியும்...

46:50.352 --> 46:51.603
எல்லாமேதான், நிஜமாக.

46:53.146 --> 46:55.857
ஆனால் பத்தாண்டுகளில் முதல் முறையாக
கொக்கெய்ன் எடுத்துக்கொள்ளும்போது,

46:55.858 --> 46:57.149
அதிகமாக விஸ்கி குடிக்கும்போது,

46:57.150 --> 46:59.735
அது நடந்து ஒரு மணிநேரத்திற்குள்
பெப்பர் ஸ்ப்ரேவால் அடிவாங்கும்போது,

46:59.736 --> 47:03.365
நல்ல முடிவுகள் எடுக்க வாய்ப்பே
இல்லை எனலாம்.

47:04.491 --> 47:06.492
எனக்குத் தெரிந்ததெல்லாம் சாம் ஊரில் இல்லை,

47:06.493 --> 47:09.579
அந்த ஓவிய சொதப்பலில்
எனக்கு 1,50,000 கிடைக்கவில்லை,

47:09.580 --> 47:12.332
மேலும் சாமின் ஃபிரெஞ்சுக் கதவுகள்
சரியாகப் பூட்டப்படாது.

47:22.634 --> 47:23.635
கடவுளே.

47:24.428 --> 47:25.721
இது உங்களுக்கு நினைவிருக்கும்.

47:29.933 --> 47:31.017
தரையில் நிறைய ரத்தம் இருந்தது,

47:31.018 --> 47:32.810
மேலும் என் தலையில் பலமாக
அடிப்பட்டிருந்தது,

47:32.811 --> 47:35.479
எனவே எனக்கருகில் இறந்து கிடக்கும்
நபர், சாமின் முன்னாள் கணவர்,

47:35.480 --> 47:37.733
பால் லெவிட் என்பதை உணர கொஞ்சம்
நேரம் ஆனது.

47:42.654 --> 47:45.406
இது அனைத்திலும் நான் பின்வாங்குவதைப் பரிசீலித்த
ஒரு தருணம் இருந்ததென்றால்,

47:45.407 --> 47:46.741
இதுதான் அது.

47:46.742 --> 47:49.535
நான் களைத்திருந்தேன், இதுவரை இல்லாதளவுக்குக்
களைத்திருந்தேன்.

47:49.536 --> 47:52.830
எந்தளவுக்கு களைப்பு என்றால், என் கண்களை மூடி,

47:52.831 --> 47:55.583
வாயைத் திறந்து, நுரையீரல்களில் நீர்
நிரம்புவதைப் பரிசீலிக்கும் அளவுக்கு.

47:55.584 --> 47:57.502
அடுத்து நடக்கப் போகும் அனைத்தும்
எனக்குத் தெரிந்திருந்தால்,

47:57.503 --> 47:59.838
அதை நான் செய்திருப்பேன் போல.

48:01.215 --> 48:02.465
ஆனால் உண்மை என்னவெனில்,

48:02.466 --> 48:04.593
இது வருந்தத்தக்க விதத்தில்
தெளிவாகிவிட்டது,

48:05.093 --> 48:06.512
எனக்கு எதுவும் தெரியவில்லை.

49:18.542 --> 49:20.002
அருமை.

49:20.878 --> 49:22.004
நன்றி.

49:22.754 --> 49:24.673
நேற்றிரவு என்ன செய்தாய்?

49:27.259 --> 49:29.219
பெரிதாக எதுவுமில்லை.

49:32.556 --> 49:33.807
நீ என்ன செய்தாய்?

49:36.310 --> 49:37.477
அதேதான்.

49:39.229 --> 49:40.230
அருமை.

50:44.211 --> 50:46.213
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
