WEBVTT

00:09.635 --> 00:12.971
ஆம், பெய்லியைவிட இங்கே குறைவான
கட்டமைப்புதான் உள்ளது.

00:13.055 --> 00:16.265
கிளையன்ட்களை பிரிவின்படி பிரிப்பதில்லை,
உறவின்படி பிரிக்கிறோம்.

00:16.350 --> 00:18.018
நம் வேலைக்கேற்ற வருவாய் உண்டு,

00:18.101 --> 00:20.854
ஆனால் பெரும்பாலும் ஒரு நிர்வாகிக்கு
குறிப்பிட்ட இலக்கிடம்

00:20.938 --> 00:23.649
வாய்ப்பு இருக்குமென நினைத்தால்,
அவர்களை பார்ட்னராக்கிவிடுவேன்.

00:23.732 --> 00:26.360
- அலுவலகத்தில் வெளிப்படத்தன்மை இருப்பதற்காக.
- ஆம், புரிகிறது.

00:26.443 --> 00:27.444
ம்ம் ஹ்ம்ம்.

00:27.528 --> 00:30.656
நீங்கள் மிகவும் ரகசியமான அணுகுமுறைக்கு
பழகியவர் எனத் தெரியும், கூப்,

00:30.739 --> 00:34.159
ஆனால் இது நமக்கு ஏற்றதாக இருக்கும்.

00:34.993 --> 00:36.078
மேக்ஸ். ஆம், உள்ளே வா.

00:36.161 --> 00:38.872
- கூப், உங்களுக்கு மேக்ஸ் கோனைத் தெரியுமா?
- தெரியாது, தெரியுமா என்ன?

00:38.956 --> 00:40.082
போன ஆண்டு ராபின் ஹுட் டின்னர்.

00:40.165 --> 00:42.084
டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கான சூட்டிற்கு
என்னைவிட அதிகமாக ஏலமெடுத்தீர்கள்.

00:42.167 --> 00:44.336
- ஆம். அதற்கு வருந்துகிறேன். ஆம்.
- ஆம்.

00:44.419 --> 00:47.089
எனக்கு 17 வயது மகள் இருக்கிறாள்,
அதற்கான விளைவுகள் இருக்கும்.

00:47.172 --> 00:49.216
- கண்டிப்பாக.
- மேக்ஸ் ஒரு சூப்பர்ஸ்டார்.

00:49.299 --> 00:51.760
வளர்ந்து வரும் மார்கெட்களில் இவன்
அசத்திக்கொண்டிருக்கிறான்.

00:52.344 --> 00:54.263
அவை அனைத்தையும் பற்றிக்
கேட்க ஆர்வமாக இருக்கிறேன்.

00:54.972 --> 00:57.850
என் ஒப்பந்தம் பற்றித் தெரியும்தானே?

00:57.933 --> 00:59.101
சட்ட ஆலோசகர்கள் கவலைப்படவில்லை.

00:59.184 --> 01:01.895
பெய்லியாக இருந்தாலும் அதற்கெல்லாம்
அதிக செலவாகும்.

01:05.732 --> 01:09.778
சரி, நான் எனக்கென சொந்த புத்தகத்தைக்
கொண்டிருப்பேன், வெளிப்படையாகத்தான்.

01:09.862 --> 01:11.029
வழக்கமானதுதான்,

01:11.113 --> 01:13.156
பங்குகளில் உள்ள சதவீதத்தைப்
பேசுவதுதான் மிச்சம்.

01:13.240 --> 01:14.241
சரியாக உள்ளதா?

01:15.576 --> 01:16.910
அப்படி இல்லை.

01:18.161 --> 01:19.621
அது மேக்ஸின் புத்தகம்.

01:20.205 --> 01:23.208
நீங்கள் ஒரு கட்டணத்திற்காக புதிய கிளையன்ட்களைக்
கண்டறிந்து, அணுகுவீர்கள்.

01:23.292 --> 01:24.501
அது எப்படிப் போகிறது எனப் பார்ப்போம்.

01:24.585 --> 01:26.795
ஆம், முதலீட்டு கேபிட்டலை வர வைக்க
நாம் ஒன்றாகப் பணிபுரிவோம்.

01:27.629 --> 01:29.339
நான் இந்தச் சிறுவனுக்காக கிளையன்டுகளை
வர வைப்பேன்,

01:29.423 --> 01:31.633
அவன் தன் புத்தகத்தை உருவாக்கியதும்,
என்னைக் கழட்டிவிடுவீர்களா?

01:31.717 --> 01:33.510
எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.

01:33.594 --> 01:36.096
மரியாதையுடன் சொல்கிறேன், மேக்ஸ்,
உன் முதலாளி அப்படி நினைக்கிறார்,

01:36.180 --> 01:38.390
அல்லது இந்தப் பேச்சே வந்திருக்காதே?

01:38.473 --> 01:39.558
கூப்.

01:39.641 --> 01:41.935
த்ரீ யான்கீஸ் போன ஆண்டில்
மோசமாக 7% இல் இருந்தனர், பென்.

01:42.019 --> 01:44.730
அதற்கு முந்தைய ஆண்டில் அனைவரும்
மேல்நோக்கிச் சென்றபோது 20% கீழே சென்றீர்கள்.

01:44.813 --> 01:46.315
ஒட்டுமொத்தமாக இண்டெக்ஸ் பங்குகளில்
சிறப்பாகச் செயல்பட்டோம்.

01:46.398 --> 01:49.151
மேக்ஸ், அமைதியாக இரு. யாரும்
இண்டெக்ஸ் பங்கு பற்றி கவலைப்படுவதில்லை.

01:49.234 --> 01:51.486
- இவனது அப்பா யார்?
- என்ன?

01:51.570 --> 01:54.114
இவன் இங்கே ஐந்து நிமிடங்கள் கூட இல்லை, அதற்குள்
இவன் யாருடைய மகனோ என்று தெரிந்துவிட்டது.

01:55.782 --> 01:56.950
என் சகோதரி.

01:57.951 --> 01:59.494
பென் மாமா,

01:59.578 --> 02:02.539
நியூ ஜெர்சியில் கேவலமான காண்டோ விற்க உங்களுக்கு
இன்னும் ஒரு மார்ஜின் அழைப்பு போதும்.

02:02.623 --> 02:05.042
மேலும் இதை அதிர்ஷ்டக்கார
குடும்பத்தில் பிறந்த ஒருவனிடம்…

02:05.125 --> 02:06.710
- ஹேய்.
- …தள்ளிவிடப் பார்க்கிறீர்கள்.

02:06.793 --> 02:08.878
- ப்ரோ, நீங்கள் இங்கே வந்து…
- வாயை மூடு, மேக்ஸ்.

02:08.961 --> 02:10.047
கூப்.

02:10.130 --> 02:12.591
பென், உங்கள் நிறுவனம் மூழ்கிக்கொண்டிருக்கிறது.

02:13.634 --> 02:15.385
நீங்கள் டின்னர் பார்ட்டியில் பேசுபொருளாக உள்ளீர்கள்.

02:15.928 --> 02:18.889
எனக்குத் தெரிந்த வரை, உங்களை ஏற்றுக்கொள்ளும்
ஒரே நிறுவனம் நாங்கள்தான்.

02:20.474 --> 02:22.017
அது உங்களைப் பற்றி என்ன சொல்கிறது?

02:24.269 --> 02:25.437
வாழ்த்துகள்.

02:25.521 --> 02:29.274
தொழில்நுட்பப் பங்குகள் இரண்டாவது காலாண்டுக்கு
அதிவேகத்தில் மீண்டு வருகின்றன

02:37.241 --> 02:39.493
நான் வேலையின்றியும்,
வேலைக்கு எடுக்கப்பட முடியாமலும்

02:39.576 --> 02:41.411
என் 2,00,000 டாலர் காரில், என் சிறந்த சூட்டுடன்,

02:41.495 --> 02:43.997
திருடிய வாட்சுடன்
அமர்ந்துகொண்டிருந்தேன்.

02:44.665 --> 02:47.251
எதுவும் அர்த்தமுள்ளதாக இல்லை,
அப்படி இருக்கும்போது

02:47.835 --> 02:50.420
அது வேறு சில வழிகளைப் பரிசீலிக்கத்
தொடங்கும் நேரமாக இருந்தது.

03:04.935 --> 03:07.521
படெக் ஃபிலிப் நாடிலஸ், 18 கேரட்.

03:08.981 --> 03:10.065
இது அருமையான வாட்ச்.

03:10.941 --> 03:12.234
புத்தகத்தைப் பார்க்க வேண்டும்,

03:12.317 --> 03:16.238
ஆனால் சுமாராக இதற்கு 1,75,000 தரலாம்.

03:17.030 --> 03:18.949
ஆம், இவற்றுக்கு நல்ல மறுவிற்பனை மார்கெட் உள்ளது.

03:19.032 --> 03:20.033
இருநூறு.

03:20.742 --> 03:22.327
நூற்று எண்பத்தைந்து.

03:22.411 --> 03:23.704
சிறந்த விலை, கடைசியும் கூட.

03:26.206 --> 03:27.875
- சரி.
- அருமை.

03:28.667 --> 03:30.752
எனக்கு இதன் பெட்டியும் ஆவணங்களும் வேண்டும்.

03:34.631 --> 03:35.674
இது புதியது இல்லை.

03:35.757 --> 03:37.843
ஆம், தெரியும், ஆனால் இதற்கு ஒரு சீரியல் எண்ணும்

03:37.926 --> 03:40.304
உண்மைத்தன்மைக்கான சான்றிதழும் இருக்கும்,
அது எனக்குத் தேவை.

03:42.055 --> 03:43.515
என்னிடம் எதுவும் இல்லை.

03:43.599 --> 03:46.018
இது பரிசாக வந்தது.

03:47.060 --> 03:48.061
சரி.

03:48.145 --> 03:49.605
மன்னித்துவிடு, நண்பா.

03:49.688 --> 03:51.523
ஆவணங்கள் இல்லாமல் வாங்க முடியாது.

03:52.191 --> 03:54.443
விலையைக் குறைத்தால் வாங்குவீர்களா?

03:59.531 --> 04:00.532
இந்தா.

04:01.992 --> 04:04.036
இங்கே போ, பிரான்க்ஸில் உள்ளது.

04:04.119 --> 04:05.454
லூ என்பவரைப் பார்.

04:06.413 --> 04:07.414
- லூவா?
- ஆம்.

04:07.497 --> 04:09.041
லூவிடம், லிப்ஷிட்ஸ் அனுப்பியதாகச் சொல்.

04:09.124 --> 04:10.250
வார்காஸ் அடகு கடை
வாங்க விற்க டிரேடு செய்ய

04:18.466 --> 04:20.219
வார்காஸ் அடகு கடை

04:54.253 --> 04:55.546
நீங்கள்தான் லூவா?

04:56.630 --> 04:57.881
நீ யார்?

04:59.591 --> 05:01.218
மன்னிக்கவும், லிப்ஷிட்ஸ் அனுப்பினார்.

05:01.301 --> 05:02.344
நான்தான் லூ.

05:04.638 --> 05:07.266
- லிப்ஷிட்ஸை எப்படித் தெரியும்?
- சமீபத்தில் சந்தித்தோம்.

05:08.308 --> 05:11.728
எங்கே? பாரிலா, சினகாகிலா,
ஏஏ மீட்டிங்கிலா, எங்கே?

05:12.312 --> 05:13.689
அவரது கடையில். நான்…

05:13.772 --> 05:15.440
இதை விற்க முயல்கிறேன்.

05:18.986 --> 05:20.696
பின்னால் செல்கிறோம், ராக்கோ.

05:20.779 --> 05:22.573
வா, அதைப் பார்ப்போம்.

05:37.671 --> 05:42.676
மேலே சென்று டிவி பாருங்கள்,
பபிக்கு வேலை உள்ளது, சரியா?

05:42.759 --> 05:44.636
- சரி.
- சரி.

05:47.556 --> 05:51.685
ஆம், என் மனைவி இது மிகவும் ஆடம்பரம்
என நினைக்கிறாள்.

05:52.769 --> 05:54.521
மிகவும் ஆடம்பரமா?

05:56.899 --> 05:59.610
அதனால்தான் திருமண மோதிரம் அணியவில்லையா?

05:59.693 --> 06:01.737
வாட்ச்சை வாங்கப் போகிறீர்களா என்னை
ஆய்வு செய்யப் போகிறீர்களா?

06:01.820 --> 06:04.031
என்னால் இரண்டையும் ஒன்றாகச் செய்ய முடியும்.

06:08.702 --> 06:10.245
இதற்கு
65,000 தரலாம்.

06:10.329 --> 06:12.080
லிப்ஷிட்ஸ் எனக்கு 185 தருவதாகக் கூறினார்.

06:12.164 --> 06:13.332
பிறகு என்னிடம் உன்னை அனுப்பினான்.

06:13.999 --> 06:15.792
நீ நேர்மையாக விற்பதாக இருந்தால்,
இங்கே வந்திருக்க மாட்டாய்.

06:18.253 --> 06:19.254
தொண்ணூற்று ஐந்து.

06:23.717 --> 06:26.428
உன்னைப் போன்றவர்கள் இங்கே
அடிக்கடி வருவதில்லை.

06:26.512 --> 06:28.597
நீ என்ன, டிரேடரா? ஸ்டாக்ப்ரோக்கரா?

06:29.598 --> 06:30.682
என்னவோ.

06:31.183 --> 06:36.104
விஷயம் என்னவெனில், நீ ஒருபோதும் தொடாதவற்றை
வாங்கி விற்பவன்.

06:36.188 --> 06:38.482
நீயாக மதிப்பை உருவாக்குவாய்.

06:39.107 --> 06:42.903
அந்த மதிப்பை பிற பணக்காரர்களிடம்
விற்பதில்தான் உன் திறமை.

06:43.737 --> 06:47.449
இப்போது நீ இங்கே, உன் கையில் வைத்திருக்கும்
பொருளை விற்க வந்துள்ளாய்.

06:47.533 --> 06:48.951
இது உனக்குப் புதிய விஷயம்.

06:49.034 --> 06:53.163
உனக்கு இந்த சந்தை புரியாது, ஆனாலும்
பேச்சுவார்த்தை செய்ய முடியும் என நினைக்கிறாய்.

06:55.290 --> 06:57.376
அது நிபுணத்துவம் இல்லை, முட்டாள்தனம்.

06:59.211 --> 07:01.129
அது வெறும் விரக்தியாக இருக்கலாம்.

07:03.966 --> 07:05.843
அதுதான் நீ கூறிய முதல் உண்மையான விஷயம்.

07:06.343 --> 07:08.303
இப்போது நாம் பிசினஸ் பேசலாம்.

07:08.387 --> 07:09.638
உனக்கு 60 தருகிறேன்.

07:11.181 --> 07:12.432
ஆனால் 65 கூறினீர்கள்.

07:12.516 --> 07:13.767
டீல்.

07:13.851 --> 07:15.936
என் அசல் விலைக்கே வர வைத்துவிட்டாய்.

07:16.019 --> 07:18.272
நீ திறமைசாலிதான்.

08:53.742 --> 08:54.743
ஓ, பேபி.

09:07.256 --> 09:08.382
நேரமாகிவிட்டது, கண்ணே.

09:11.093 --> 09:12.344
நேரமாகிவிட்டது.

09:12.970 --> 09:14.471
- குட் மார்னிங்.
- தாமதமாகிவிட்டது.

09:14.555 --> 09:17.224
ஹேய், உன் அப்பாவுக்கு பதில்
மெசேஜ் அனுப்பினாயா?

09:17.307 --> 09:18.350
விளையாடுகிறீர்களா?

09:18.433 --> 09:20.644
பதில் அனுப்பு, எனக்காக.

09:21.603 --> 09:22.938
ஆம், சரி.

09:23.021 --> 09:24.147
ஹேய்.

09:28.819 --> 09:30.070
பை, அம்மா.

09:32.447 --> 09:36.618
மூச்சிழுக்கும்போது, கையை மேலே
தூக்கி, வலது கையை பின்னால் கீழே இறக்குங்கள்.

09:36.702 --> 09:38.036
அந்த இடது கையை பின்னால் இறக்கி…

09:38.120 --> 09:39.955
என் உள்ளாடை இறுக்கமாகிவிட்டது.

09:40.998 --> 09:41.999
இதோ.

09:44.084 --> 09:44.918
ஹாய்.

09:48.589 --> 09:49.590
நாட்டிலஸ்

09:49.673 --> 09:51.341
ஆரோக்கியம் மற்றும் ஆலோசனை மையம்

09:51.425 --> 09:52.426
நன்றி.

09:54.428 --> 09:58.473
அவள் என் அம்மாவின் காதலனை முட்டாள் என்று கூறும்
வழிகளைக் கண்டறிவதில் திறமைசாலி.

09:58.557 --> 10:01.476
அது வெறும் செல்ஃபிதான், அதை என்
காதலனுடன் பகிர்ந்தேன்,

10:01.560 --> 10:03.395
பிறகு அவன் அதை தனது நண்பர்களுடன் பகிர்ந்தான்…

10:04.521 --> 10:06.190
நான் ரோபாட்டிக்ஸ் கிளப்பிலிருந்து
வெளியேறிவிட்டேன்.

10:06.273 --> 10:07.524
என்ன நடந்தது என்று சொல்லுங்கள்.

10:07.608 --> 10:09.735
என்னைப் பேச வைக்க முடியாது.

10:11.320 --> 10:12.905
இல்லை, அவன் மலர்களுடன் கீழே வருகிறான்,

10:12.988 --> 10:16.366
வந்து என் வாழ்வில் நான் அனுபவித்ததிலேயே
மிகப்பெரிய, கொழகொழப்பான,

10:16.450 --> 10:18.160
அதிகமாக நாக்கைப் பயன்படுத்திய
முத்தத்தைக் கொடுத்தான்…

10:20.621 --> 10:21.955
மார்க்.

10:22.039 --> 10:24.750
ஆம், வழக்கம் போல என் அம்மா
என்னைத் திட்டினார்.

10:24.833 --> 10:28.378
நான் ஆயிரமாவது முறையாக அவர் கூறுவது
சரி என்று நிரூபித்துள்ளேன்.

10:28.462 --> 10:29.588
ஒரு நிமிடம்.

10:29.671 --> 10:32.007
தண்டனை பெறுவதற்கும்
காரில் சாவியால் கீறுவதற்கும்

10:32.090 --> 10:35.511
வித்தியாசம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்வோமா?

10:35.594 --> 10:37.429
ஆம், தெரியும்.

10:38.263 --> 10:40.974
அதுபோல ஒன்றை நீங்கள் செய்தது
அதுதான் முதல் முறையா?

10:41.058 --> 10:42.184
நான் பிடிபட்டது அதுதான் முதல் முறை.

10:44.770 --> 10:47.856
- காரின் உரிமையாளரைத் தெரியுமா?
- இல்லை, அது அப்படி இல்லை.

10:47.940 --> 10:49.149
எனில் ஏன் செய்தீர்கள்?

10:49.233 --> 10:51.985
அதாவது, உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்,
ஆனால் உங்கள் மனதில்

10:53.695 --> 10:55.030
என்ன ஓடிக்கொண்டிருந்தது?

10:56.240 --> 10:59.034
நான் மிகவும் கோபமடைந்தேன்.

11:00.202 --> 11:03.163
அது கோபம் இல்லை,
அது ஒருவித எனர்ஜி,

11:03.872 --> 11:06.708
அது அதிகரித்தது,
எனக்குள் இருந்து

11:06.792 --> 11:08.460
என்னைப் பதட்டமாக்கியது.

11:08.544 --> 11:11.755
நான் அதனால் அதிர்வடைவது போல உணரும்
கட்டத்திற்கு அது வந்தது,

11:11.839 --> 11:16.093
நான் எதுவும் செய்யவில்லை எனில்,
அது வெடித்துவிடும் என்பது போல, புரிகிறதா?

11:18.512 --> 11:20.597
பிறகு நான் ஜன்னலை உடைத்தேன்,

11:20.681 --> 11:22.057
காரில் கீறினேன்.

11:23.642 --> 11:25.060
அது…

11:25.853 --> 11:29.523
அது எனக்குள்ளிருந்து வெளிவந்தவுடன்
என்னால் மீண்டும் சுவாசிக்க முடிந்தது.

11:40.325 --> 11:43.704
நம் அனைவருக்கும் கனவு இருக்கும்,
நாம் கற்பனை செய்யும் ஒருவித மகிழ்ச்சி.

11:43.787 --> 11:45.080
நாம் அடைய விரும்பும் ஓர் இடம்,

11:45.163 --> 11:47.207
நாம் அந்த வெற்றி, மகிழ்ச்சி, அமைதியை
அடைந்துவிட்டோம்

11:47.291 --> 11:49.668
என்று உணர்த்தும் இடம்.

11:50.878 --> 11:52.671
எனக்கு, அது வெஸ்ட்மான்ட் வில்லேஜ்தான்,

11:52.754 --> 11:57.050
அது ஏழு மற்றும் எட்டிலக்க வீடுகள், புல்வெளிகள்
மற்றும் பிரத்தியேக கிளப்புகளுடன் இருக்கும்.

11:57.968 --> 11:59.303
ஆனால் என் கனவுகளும்

11:59.386 --> 12:01.889
என்னைப் போலவே முட்டாள்தனமானவை

12:01.972 --> 12:03.140
என்று சந்தேகிக்கத் தொடங்கினேன்.

12:16.153 --> 12:17.279
ஹேய், கூப்!

12:25.454 --> 12:26.705
தி ஓக்வுட் கன்ட்ரி கிளப்,

12:26.788 --> 12:28.624
ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கொடுத்தால்,
அவர்கள் கொடுக்கும் சாலட், பர்கர்,

12:28.707 --> 12:30.167
காஃபி மற்றும் காக்டெயில் அனைத்தையும்

12:30.250 --> 12:32.961
சந்தையைவிட 40% அதிக விலை கொடுத்து
வாங்கும் சலுகை கிடைக்கும்.

12:33.712 --> 12:34.963
ஆனால் இதில் சேரவில்லை எனில்,

12:35.047 --> 12:37.424
மற்ற அனைவருக்கும் நீங்கள்
இல்லாதது போல தோன்றும்.

12:37.925 --> 12:40.427
இது மிகவும் பழமையான சமூகக் கொள்ளையின்
பொருளாதாரம்தான்,

12:40.511 --> 12:43.180
ஆனால் இதன் உண்மைத்தன்மையைப்
பார்ப்பது, மற்ற முட்டாள்களுடன்

12:43.263 --> 12:44.681
நானும் வரிசையில் நிற்பதைத் தடுக்கவில்லை.

12:45.307 --> 12:46.433
அருமை.

12:48.268 --> 12:49.645
என்னை அதிக உடற்பயிற்சி செய்ய வைக்கிறாய்.

12:49.728 --> 12:51.188
அவள் ஏன் நிக்குடன் ஆடுகிறாள்?

12:51.688 --> 12:52.773
நீங்கள் தாமதமாக வந்ததால்.

12:53.357 --> 12:54.191
அருமை.

12:55.400 --> 12:56.401
டென்னிஸ் எனக்கானது.

12:56.485 --> 12:59.863
அதை விளையாட வேண்டாம் என்று
அவனிடம் சொல்கிறாயா?

12:59.947 --> 13:01.156
சரி, இது திட்டமிடப்படாதது, கூப்.

13:01.240 --> 13:03.534
நீங்கள் எப்போது வருவீர்கள் எனத் தெரியவில்லை,
மேலும் நாளைக்கு போட்டி உள்ளது.

13:03.617 --> 13:05.077
அவள் நன்றாகத்தான் ஆடுகிறாள்.

13:05.160 --> 13:09.248
பிரின்ஸ்டன் இவளைப் பரிசீலிக்கக் கூட,
இவளது UTR 9 வரை இருக்க வேண்டும்.

13:09.331 --> 13:10.791
இவள் 9 இல் இருப்பதாக நினைத்தேன்.

13:10.874 --> 13:12.459
இல்லை, 8.7 இல் இருக்கிறாள்.

13:12.543 --> 13:14.169
இந்தப் போட்டியில் நான்கு அல்லது ஐந்து நட்சத்திர

13:14.253 --> 13:16.171
வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து இரண்டு
போட்டிகளில் வெல்ல வேண்டும்.

13:16.255 --> 13:18.382
அதற்கு கூடைப்பந்தாட்ட வீரர்
எப்படி உதவுவான்?

13:18.465 --> 13:21.051
அவர் நேரத்திற்கு வந்தார்.

13:25.264 --> 13:26.431
சரிதான்.

13:26.515 --> 13:27.724
போகலாம்.

13:28.600 --> 13:29.810
ஹேய்.

13:30.978 --> 13:33.063
ஹேய், கூப், அதற்கு மன்னித்துவிடு,
உதவத்தான் முயன்றேன்.

13:33.146 --> 13:35.691
சரி. யாருக்கேனும் தங்கள் மனைவியுடன்
உடலுறவு கொள்ள வேண்டும் என்றால்

13:35.774 --> 13:37.067
உன்னை அழைக்கிறேன்.

13:40.279 --> 13:42.531
சரி, இப்போது வலை ஆட்டத்தை
ஆடுவோமா?

13:42.614 --> 13:43.824
வலையை ரஷ் செய்ய வேண்டாம்
என்று கோச் கூறுகிறார்.

13:45.117 --> 13:47.369
அது சரிதான் ஆனால்…

13:48.829 --> 13:49.955
…சரியில்லை.

13:52.374 --> 13:54.209
போட்டி நாளைக்கு.
இது அதற்கான நேரமில்லை.

13:55.127 --> 13:57.129
அது அடிப்படை டென்னிஸ்.
வா, நான் காட்டுகிறேன்.

13:57.212 --> 13:58.297
அடி. பலமாக அடி.

14:06.680 --> 14:07.514
நீங்கள் நலமா?

14:08.265 --> 14:09.391
அருமை.

14:10.726 --> 14:12.352
என் காதலனை அந்த இடத்திலேயே குத்தினீர்கள்.

14:13.562 --> 14:15.272
சரி, ஆனாலும் அது மகிழ்ச்சியாக இருந்தது.

14:15.898 --> 14:16.899
ஹேய், டோரி.

14:17.524 --> 14:19.735
- ஹேய், செல்ஸ்.
- நாளைக்கு வாழ்த்துகள்.

14:19.818 --> 14:20.819
உனக்கும்தான். நாயே.

14:23.947 --> 14:26.325
- நீங்கள் நண்பர்கள் என நினைத்தேன்.
- ஆம், ஆனால் டென்னிஸ் அணியில்

14:26.408 --> 14:28.243
உள்வரும் ஃபிரெஷ்மேனுக்கு ஒரே ஒரு
இடம்தான் உள்ளது.

14:28.327 --> 14:30.621
அதிலுள்ள நல்லதைப் பார், அவள்
பிரின்ஸ்டனுக்குப் போகாமல் இருக்கலாம்.

14:30.704 --> 14:31.914
நான் ஒருவேளை போகாமல் இருக்கலாம்.

14:32.789 --> 14:34.082
இப்போது நீ முட்டாள் போலப் பேசுகிறாய்.

14:34.833 --> 14:36.793
கமான், பேஸ்லைனுக்குப் போ.

14:36.877 --> 14:38.003
போகலாம்.

15:08.116 --> 15:09.952
உனக்கும் நிக்கிற்கும் இடையில் எல்லாம்
நன்றாகத் தெரிகிறது போல?

15:10.035 --> 15:11.119
நன்றாக உள்ளன.

15:13.872 --> 15:15.415
இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது.

15:15.499 --> 15:18.168
தொடக்க நிலையா? அவர்
உன்னுடன்தான் வசிக்கிறார்.

15:18.252 --> 15:19.378
என்ன? இல்லை.

15:19.461 --> 15:21.421
எப்போதும் அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன்.

15:21.505 --> 15:23.590
நான் மட்டும் தனியாகப் படுப்பது பிடிக்கும்.

15:23.674 --> 15:26.426
அவரை என்னிடம் அனுப்பு. அவரை
புல்வெட்டும் இயந்திரம் போல கேரேஜில் வைத்துக்கொண்டு,

15:26.510 --> 15:28.428
தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கிறேன்.

15:29.263 --> 15:30.264
அதற்கு என்ன அர்த்தம்?

15:30.347 --> 15:32.349
- மேகியும் நானும் அவரது ஜிம்மில் இணைந்துள்ளோம்.
- ஆம்.

15:32.432 --> 15:34.059
- அருமையான வகுப்புகள்.
- அற்புதம்.

15:35.269 --> 15:36.812
எனக்கு ஈக்வினாக்ஸ்தான் பிடிக்கும்.

15:37.688 --> 15:38.939
ஏனெனில் மெல்லுக்கு தனியாக இருக்க வேண்டும்…

15:39.022 --> 15:40.023
- என்னவோ.
- …இல்லையா?

15:40.649 --> 15:42.568
- அடச்சே. தோழிகளே.
- என்ன?

15:42.651 --> 15:43.986
பால் வந்திருக்கிறார்.

15:46.905 --> 15:49.950
அடடா.
அவள்தான் அந்த வெயிட்ரஸா?

15:50.033 --> 15:51.618
ஆம், நேரடியாக.

15:52.953 --> 15:54.788
தன் உடலைக் காட்டிக்கொண்டிருக்கிறாள்.

15:54.872 --> 15:56.790
அவளை இங்கே அழைத்து வந்திருப்பதை
நம்ப முடியவில்லை.

15:56.874 --> 15:58.125
அதைப் பற்றி ஒரு விதி இருக்க வேண்டும்.

15:58.208 --> 15:59.168
அவள் கிடக்கிறாள்.

15:59.251 --> 16:00.252
ஆம், அவள் கிடக்கிறாள்.

16:00.335 --> 16:02.087
அவளுக்கு என்ன வயது, 16, 17 இருக்குமா?

16:02.171 --> 16:03.380
இருபத்து நான்கு.

16:04.631 --> 16:06.216
- அவள் பெயர் மிஸ்டி.
- கடவுளே.

16:06.300 --> 16:10.888
நான் சவான்னா என நினைத்தேன்,
ஆனால் மிஸ்டி பொருந்துகிறது.

16:10.971 --> 16:11.930
ஆம்.

16:12.014 --> 16:14.057
நீங்கள் அவருடைய உணவகங்களுக்குச்
சென்றுள்ளீர்கள்.

16:14.141 --> 16:16.268
அவரது வெயிட்ரஸ்கள் அனைவரும்
இவளைப் போலத்தான் இருப்பார்கள்.

16:16.351 --> 16:17.644
ஹேய்.

16:17.728 --> 16:18.854
என்ன?

16:20.856 --> 16:23.317
தற்போதைய ஆளைத் தவிர.

16:23.400 --> 16:24.693
பரவாயில்லை.

16:25.569 --> 16:28.572
அவர் என்னை 15 ஆண்டுகளுக்கு முன் தேர்வுசெய்தார்,
அப்போது நானும் இதுபோலத்தான் இருந்தேன்.

16:28.655 --> 16:31.074
இல்லை, சாம். நீ இப்போதும்
அழகாகத்தான் இருக்கிறாய்.

16:31.658 --> 16:33.202
நீ தயார் என்று சொன்னால்

16:33.285 --> 16:36.413
உன்னை ஒரு தகுதியுள்ள பேச்சுலருடன்
இணைத்து வைக்கிறோம்.

16:36.496 --> 16:37.414
ஆம்.

16:37.497 --> 16:39.833
ஓ, ஆம், சாம், உனக்கு மிகவும் அதிகமாகவே
ஆண்கள் கிடைப்பார்கள்.

16:39.917 --> 16:41.043
சரி.

16:41.126 --> 16:42.920
உனக்கு ஆண்கள் பற்றி என்ன தெரியும்?

16:43.003 --> 16:45.422
நன்றி, ஆனால் அவளே அவரை
வைத்துக்கொள்ளட்டும்.

16:47.799 --> 16:49.343
நீ அவரது பணத்தை வைத்துக்கொள்.

16:49.426 --> 16:51.178
ஹேய். அருமை!

16:54.139 --> 16:57.267
கிளப்பில் வாரயிறுதி பிரன்ச்,
அங்கே சிறப்பான உணவு இருக்கும்,

16:57.351 --> 17:01.688
நல்ல துணை மற்றும் முடிவில்லா
வெளிப்படையான நுகர்வோர்வாதம் இருக்கும்.

17:01.772 --> 17:05.901
நான் கவனித்தது இல்லை என்றில்லை, ஆனால்
இப்போது அவற்றை வித்தியாசமாகப் பார்க்கிறேன்.

17:07.819 --> 17:09.154
ஹேய், எப்படிப் போகிறது?

17:09.780 --> 17:11.406
ஹாய், கூப். எங்களுடன் சேர்ந்துகொள்கிறீர்களா?

17:12.241 --> 17:14.034
தெளிவற்றது. ஹன்டரைப் பார்த்தீர்களா?

17:14.117 --> 17:16.537
- யாரேனும்?
- இங்குதான் எங்கேயோ இருந்தார்.

17:17.037 --> 17:18.454
ஜேக், ஹேய்.

17:18.539 --> 17:21.124
- ஹேய்.
- அடச்சே.

17:21.834 --> 17:23.961
ஹேய், ஜேக். எப்படி இருக்கிறாய்?

17:24.545 --> 17:25.462
திரு. கூப்பர்.

17:26.672 --> 17:28.006
அன்று நடந்ததற்கு வருந்துகிறேன்.

17:28.089 --> 17:29.424
திடீரென என்னை பயமுறுத்திவிட்டாய்.

17:29.508 --> 17:32.010
ஆம். நானும்தான்.

17:32.511 --> 17:33.345
கண்டிப்பாக.

17:33.887 --> 17:35.264
நிரந்தரமான சேதம்…

17:36.348 --> 17:38.016
எதுவுமில்லை என நம்புகிறேன்.

17:38.100 --> 17:40.561
மேலும் முக்கியமாக,
கோபம் இல்லை என நம்புகிறேன்.

17:41.812 --> 17:43.564
- கண்டிப்பாக, கோபம் இல்லை.
- நல்லது.

17:43.647 --> 17:45.065
அருமை. வந்து உட்கார்ந்து, கொஞ்சம் சாப்பிடு.

17:45.148 --> 17:46.567
ஆம், ஜேக், வா… உனக்கு…

17:46.650 --> 17:48.610
- அது எப்படி இருந்தது?
- அதை மனதிலிருந்து கூறியிருந்தால்…

17:48.694 --> 17:51.113
அவன் கொஞ்சம் அடக்கிக்கொண்டு இருந்தால்
எனக்குப் பிடிக்கும்.

17:51.196 --> 17:52.739
புரிகிறதா? கமான்.

17:52.823 --> 17:56.410
சரி. ஹன்டரைப் பார்த்தால், நான் அவனைத்
தேடுவதாகச் சொல்.

17:57.411 --> 17:58.453
நன்றி.

18:00.581 --> 18:02.040
- ஹாய்.
- ஹேய்.

18:02.124 --> 18:04.084
- எப்படி இருக்கிறாய்?
- இன்னும் உன் மீது கோபமாக இருக்கிறேன்.

18:04.168 --> 18:06.628
தெரியும், ஆனால் உண்மையில்,
ஏனென்று எனக்கு நினைவில்லை.

18:06.712 --> 18:08.797
- அடச்சே, கூப்.
- ஹேய், விளையாடினேன்.

18:08.881 --> 18:10.591
நான் விளையாடினேன். மன்னித்துவிடு.

18:10.674 --> 18:11.842
சாம், கமான்.

18:11.925 --> 18:13.969
அன்றிரவுக்கு நான் வருந்துகிறேன்,
எனக்கு வேறு வேலை இருந்தது.

18:14.052 --> 18:16.054
வழக்கமாக நான் உன் மீது இன்னும்
கொஞ்ச நாள் கோபமாக இருப்பேன்,

18:16.138 --> 18:18.265
ஆனால் பால் தனது வெயிட்ரஸைக் கூட்டி வந்துள்ளார்,
நான் பலவீனமாக உணர்கிறேன்,

18:18.348 --> 18:20.893
அது என்னைக் கோபப்படுத்துகிறது, எனவே ஆம்.

18:20.976 --> 18:22.352
அவள் அணிந்துள்ளதைப் பார்த்தாயா?

18:23.020 --> 18:24.396
நான் கவனிக்கவில்லை.

18:24.479 --> 18:26.690
ஏனெனில் அவள் குறைவாக
உடையணிந்திருந்தாள்.

18:26.773 --> 18:29.318
விஷயம் என்னவெனில், நான் விரைவில்
செக்ஸியாக உணர வேண்டும்,

18:29.401 --> 18:30.736
அதனால் உன்னை மன்னிக்கிறேன்.

18:30.819 --> 18:33.030
- அதை உனக்கு மதிப்புள்ளதாக்குகிறேன்.
- கண்டிப்பாக செய்ய வேண்டும்.

18:33.113 --> 18:34.615
- ஹேய்.
- ஹேய்.

18:34.698 --> 18:36.074
எப்படிப் போகிறது?

18:36.158 --> 18:37.576
ஹலோ, பெண்களே.

18:37.659 --> 18:39.286
- ஹேய்.
- பிராட், ஜூல்ஸ், எப்படி உள்ளீர்கள்?

18:39.369 --> 18:41.038
ஹேய், கூப்.
புதிதாக என்ன விஷயம் உள்ளது?

18:41.121 --> 18:43.999
கடவுளே, எப்போதும் போலத்தான்.
வங்கியில் எப்படிப் போகிறது?

18:44.082 --> 18:46.585
அவர்கள் விலை உயர்வால்
மிகவும் கோபமாக உள்ளனர்.

18:46.668 --> 18:49.505
- ஆனால் எங்களுக்கு வழி தெரியும்.
- வேலைப் பேச்சை நிறுத்துங்கள்.

18:49.588 --> 18:51.215
செல்ஸீ,
நீ விளையாடியதைப் பார்த்தேன்.

18:51.298 --> 18:52.382
நீ மிகவும் உறுதியாகத் தெரிகிறாய்.

18:52.466 --> 18:54.218
நன்றி, திரு. கூப்பர்.

18:54.301 --> 18:55.844
டோரியுடன் நிக் விளையாடியதைப் பார்த்தேன்.

18:55.928 --> 18:58.388
நீங்கள் உங்கள் சக்திவாய்ந்த
ஆயுதத்தை இறக்குகிறீர்களா?

18:58.972 --> 19:00.974
கூப்தான் ஆயுதம், அன்பே.

19:01.058 --> 19:02.601
அவர் பிரின்ஸ்டனில் ஆடியவர்.

19:03.185 --> 19:04.228
எனக்கு அது தெரியுமா?

19:04.311 --> 19:05.771
அது நீண்ட காலத்திற்கு முன்பு.

19:05.854 --> 19:10.067
போன ஆண்டு போல இருவரும் இறுதிப் போட்டியில்
நம் மகள்கள் ஆடுவதைக் கணிக்கிறேன்.

19:10.150 --> 19:12.236
- என்ன நினைக்கிறீர்கள்?
- அதுதான் புத்திசாலித்தனமான பணம்.

19:12.736 --> 19:14.696
ஹாய். எப்படி உள்ளீர்கள்?

19:14.780 --> 19:15.656
ஹாய்.

19:15.739 --> 19:17.824
நல்லது. வாரயிறுதி மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

19:17.908 --> 19:20.452
- ஹேய், அன்பே. நீச்சல் குளம் எப்படி இருந்தது?
- அற்புதமாக இருந்தது.

19:20.536 --> 19:21.870
புத்திசாலித்தனமான பணம் என்றவுடன்,

19:22.579 --> 19:24.665
உனக்கு அந்த த்ரீ யான்கீஸ் நேர்காணலை ஏற்பாடு செய்ய
நிறைய பேரிடம் உதவி கேட்டேன்.

19:24.748 --> 19:26.208
கமான், அது மட்டமான வேலை.

19:26.291 --> 19:27.960
அந்த மட்டமான வேலை உனக்குக் கிடைத்திருக்கும்.

19:28.877 --> 19:30.420
உன்னை ஒதுக்கிவிட்டனர், நண்பா.

19:30.504 --> 19:31.964
நீ முன்பிருந்த நிலையை அடையும் முன்,

19:32.047 --> 19:33.549
நீ ஏதாவது ஒரு நிலையில் உள்ளே நுழைய வேண்டும்.

19:33.632 --> 19:34.800
நான் அந்த நிலைக்கான வழியை உனக்குத் தந்தேன்.

19:34.883 --> 19:36.635
வேறு ஒருவருக்காக நான்
வேலை செய்ய மாட்டேன், பார்னி.

19:36.718 --> 19:38.428
ஆறு மாதங்கள் கழித்தும் இப்படி
யோசிக்கிறாயா என்று பார்ப்போம்.

19:39.263 --> 19:41.515
உன் 5% பற்றிக் கவலைப்படுகிறாய்
என நினைக்கிறேன்.

19:41.598 --> 19:44.643
கண்டிப்பாக, எனக்குக் கொடுக்க வேண்டிய
40,000 டாலருக்காகவும்தான்.

19:46.186 --> 19:49.064
- ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்.
- ஆம், நான் கூறுவது…

19:49.147 --> 19:50.983
- நான் போக வேண்டும்.
- இப்போதுதான் வந்தாய்.

19:51.066 --> 19:52.359
தெரியும். நான் போக வேண்டும். ஹேய்.

19:54.361 --> 19:55.529
- ஹாய், அப்பா.
- ஹேய்.

19:56.280 --> 19:57.281
நீ போதையில் இருக்கிறாயா?

19:58.532 --> 19:59.575
இல்லை.

20:00.951 --> 20:02.578
- கொஞ்சம்.
- ஹன்டர்.

20:02.661 --> 20:04.037
பரவாயில்லை, ஒரே ஒருமுறைதான் இழுத்தேன்.

20:04.121 --> 20:06.039
அதைக் குறைத்துக்கொள்.

20:06.707 --> 20:08.458
இதற்கெல்லாம் இது வயதில்லை.

20:09.501 --> 20:10.961
நீங்கள் டிரம்ஸை எடுக்கச் செல்லவில்லையா?

20:12.087 --> 20:13.755
அது பெரிய கதை.
அது என் வீட்டில் உள்ளது.

20:14.965 --> 20:16.133
நாம் அவற்றை எடுக்கச் செல்லலாமா?

20:16.758 --> 20:18.051
அம்மாவின் காரில் செல்லலாம்.

20:20.095 --> 20:21.680
அது நல்ல யோசனைதான்.

20:21.763 --> 20:23.265
ஒன்று சொல்லவா? முதலில்
எனக்கு ஒரு வேலை உள்ளது,

20:23.348 --> 20:24.725
பிறகு நாம் டிரம்ஸை எடுக்கலாம்.

20:24.808 --> 20:25.809
டீல்.

20:25.893 --> 20:30.522
சரி, நீ போய் காரை மாற்றுகிறாயா?

20:32.482 --> 20:33.483
உங்களால் முடியுமா?

20:34.318 --> 20:35.903
நான் போதையில் இருப்பதாக நினைத்தால்
அவர் கோபப்படுவார்.

20:35.986 --> 20:38.238
விளைவுகள் பிடிக்கவில்லையெனில்,
தவறு செய்யக் கூடாது.

20:39.990 --> 20:41.533
போய் வாங்கி வா. கமான்.

21:07.476 --> 21:09.728
- அது எப்படிப் போனது?
- நினைத்ததைவிட நன்றாக இருந்தது.

21:09.811 --> 21:12.272
அப்படியா? இந்தா. அது உனக்குத் தேவைப்படும்.

21:15.526 --> 21:17.361
நிக்கின் வலிமையான ஜிம்

21:17.444 --> 21:19.154
என்ன அது?

21:19.863 --> 21:21.281
நீங்கள் இன்னும் ஆஸ்மொபைலைப் பார்க்கவில்லையா?

21:22.241 --> 21:23.367
அது நிக்குடையதா?

21:23.450 --> 21:24.910
அவன் இதை நினைத்துப் பெருமைப்படுவான்.

21:26.995 --> 21:28.121
கண்டிப்பாக.

21:31.333 --> 21:32.543
- நன்றி.
- பரவாயில்லை.

22:08.829 --> 22:10.122
- அதை எடு.
- சரி.

22:10.622 --> 22:11.456
ஸாரி.

22:12.708 --> 22:14.793
ஹலோ. உள்ளே வாருங்கள்.

22:14.877 --> 22:17.296
புதிதாக காஃபி மிஷின் வாங்கியுள்ளோம்.

22:18.380 --> 22:20.174
நம் அனைவருக்கும் காஃபி போடுகிறேன்.

22:22.342 --> 22:23.635
உன்னைத் துரத்திவிட்டனரா?

22:23.719 --> 22:25.554
- அம்மா.
- இல்லை, துரத்தவில்லை.

22:25.637 --> 22:26.597
சும்மா கேட்டேன்.

22:26.680 --> 22:29.391
அந்த இடம் சரியாக இல்லை, இவளுக்கு நல்ல
இடத்தைக் கண்டறிய முயல்கிறோம்.

22:29.474 --> 22:31.935
- ஏன் இவள் உன்னுடன் தங்கவில்லை?
- நன்றி, அம்மா.

22:32.019 --> 22:34.313
இது ஒன்றும் ரிட்ஸ் போல பெரிய ஹோட்டல் இல்லை.

22:34.396 --> 22:36.023
திரும்ப இங்கே ஏன் வர விரும்புகிறாய்?

22:36.106 --> 22:37.232
என்னிடம் கூடுதல் படுக்கையறை இல்லை.

22:38.400 --> 22:41.153
நீ பெரிய வீட்டில் இல்லை
என்பதை மறந்துவிடுகிறேன்.

22:42.571 --> 22:44.656
இது பிரச்சினையாக இருக்குமெனில்,
என்னால்…

22:44.740 --> 22:46.575
கண்டிப்பாக இல்லை.

22:47.659 --> 22:48.952
சும்மா சொல்கிறேன்.

22:49.620 --> 22:51.038
நீங்கள் எதைத்தான் கூறுகிறீர்கள்?

22:52.164 --> 22:55.083
நீங்கள் இருவரும் உங்கள் வாழ்க்கையை
நாசமாக்கிக்கொள்வது ஏன்

22:55.167 --> 22:57.419
- எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
- கடவுளே. அடச்சே.

22:57.503 --> 22:59.171
யாருக்கு டீகாஃப் வேண்டும்?

22:59.254 --> 23:01.048
- எனக்கு.
- நம்மிடம் டீகாஃப் இல்லை, ரோன்.

23:01.131 --> 23:05.260
- வெள்ளி நிற பாட்கள்தான் டீகாஃப்.
- இல்லை, நீல நிறங்கள்தான், அவை காலியாகிவிட்டன.

23:05.886 --> 23:06.887
இப்போதும் வேண்டுமா?

23:06.970 --> 23:09.848
என் கவலையை அதிகரிக்க
இது சரியான நேரமாகத் தெரிகிறது.

23:12.476 --> 23:14.603
உன் பைகளை மேலே வைக்கிறேன்.

23:14.686 --> 23:16.271
ஆண்டி, உன் காஃபி.

23:16.355 --> 23:18.190
சரி, அப்பா, பிறகு குடிக்கிறேன்.

23:40.420 --> 23:44.466
புரூஸையும் அவனது குடும்பத்தையும்
ஸ்டாப் & ஷாப்பில் பார்த்தேன்.

23:44.550 --> 23:48.929
அவனுக்கு அழகான இரண்டு குழந்தைகள் இருந்தனர்,
அழகான சரும நிறம்.

23:49.012 --> 23:52.224
புரூஸைவிட கொஞ்சம் வெளிரானதுதான்,
ஏனெனில் அவனது மனைவியின் நிறம் அப்படி.

23:52.307 --> 23:53.308
அருமை, அம்மா.

23:53.392 --> 23:56.979
அவன் என்னைப் பார்த்ததில் மகிழ்ச்சியாகத்
தெரிந்தான்.

23:57.062 --> 24:00.649
நீ அப்போதே அவனை திருமணம் செய்திருந்தால்
எல்லாம் எப்படி இருந்திருக்கும்

24:00.732 --> 24:02.192
என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

24:02.276 --> 24:04.111
நான் நானாகவே இருந்திருப்பேன்.

24:04.194 --> 24:06.488
- உங்களுக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டியதா?
- அது பெரிய கதை.

24:06.572 --> 24:08.323
இவள் தன் திருமணத்திலிருந்தே
ஓடிவிட்டாள்.

24:08.407 --> 24:10.367
- நான் உளவியல் ரீதியான பிரச்சினையில் இருந்தேன்.
- தெரியும்.

24:10.450 --> 24:13.287
உன்னை குறை சொல்லவில்லை.
சும்மா சொல்கிறேன்.

24:14.788 --> 24:15.914
வேறு திட்டம்.

24:16.874 --> 24:18.208
- நாம் போகலாம்.
- சரி.

24:18.292 --> 24:19.501
இரு, என்ன நடந்தது?

24:19.585 --> 24:20.586
எங்கே போகிறீர்கள்?

24:20.669 --> 24:22.754
இவளது அறையை கூட சரிசெய்ய முடியவில்லையா?
படுக்கையைக் கூடவா?

24:22.838 --> 24:24.131
நான் செய்யலாம் என்று இருந்தேன்.

24:24.214 --> 24:25.591
சரி.

24:25.674 --> 24:27.384
வா, போகலாம்.

24:29.970 --> 24:31.013
உங்களை நேசிக்கிறேன், அம்மா.

24:32.472 --> 24:33.807
உங்களை நேசிக்கிறேன், அப்பா.

24:34.516 --> 24:35.517
வா.

24:36.393 --> 24:37.394
இந்தப் பக்கம்.

24:42.983 --> 24:44.359
காஃபியை யாரும் குடிக்கவில்லை.

24:53.076 --> 24:55.913
பாட்டி மோசமானவர்.

24:55.996 --> 24:57.414
மகனே, உனக்குத் தெரியாது.

24:57.497 --> 24:58.957
நீங்கள் என் அறையில் இருக்கலாம், ஆலி.

24:59.833 --> 25:03.170
அது கனிவானது, கண்ணே, ஆனால்
உன் தனியுரிமைக்குள் வர விரும்பவில்லை.

25:03.253 --> 25:04.588
பரவாயில்லை.

25:04.671 --> 25:06.131
எப்படியும் அங்கே நான் அதிகமாக இருப்பதில்லை.

25:11.803 --> 25:12.804
அடச்சே.

25:22.231 --> 25:24.191
கதவருகே நிற்காதே, பயமுறுத்தும்படி உள்ளது.

25:26.401 --> 25:27.444
மன்னித்துவிடு.

25:27.528 --> 25:30.405
இந்தா, இதுதான் கடைசி.

25:30.489 --> 25:31.949
அருமை. நன்றி.

25:32.533 --> 25:34.409
பார், உன்னை இப்படி
தங்க வைப்பதற்கு மன்னித்துவிடு.

25:34.493 --> 25:35.536
ப்ளீஸ். எனக்குப் பிரச்சினையில்லை.

25:35.619 --> 25:37.746
நான் நிலையாவதற்கு கொஞ்சம் நேரம் தேவை,

25:37.829 --> 25:39.456
பிறகு உனக்கு வேறு இடம்
ஏற்பாடு செய்கிறேன், சரியா?

25:39.540 --> 25:41.959
ஆண்டி, நீதான் என்னை பல ஆண்டுகளாகப்
பார்த்துக்கொள்கிறாய்.

25:42.042 --> 25:43.752
நீ சொதப்பியிருப்பதாக
வேறு எதை நினைத்தாலும்,

25:43.836 --> 25:45.754
நீ எப்போதும் எனக்கு சராசரிக்கு
அதிகமான சகோதரன்தான்.

25:48.048 --> 25:49.424
நீயின்றி நான் தொலைந்து போயிருப்பேன்.

25:52.886 --> 25:53.887
கடவுளே.

25:55.848 --> 25:57.724
சமந்தா லெவிட்
இணைப்பு ஒரு படம்

26:00.978 --> 26:03.564
நான் சில பொருட்கள் வாங்க வேண்டும்.

26:04.106 --> 26:06.275
கொஞ்சம் நேரத்திற்கு நீ பார்த்துக்கொள்வாயா?

26:06.358 --> 26:07.776
என்னை யாரும்
பார்த்துக்கொள்ள வேண்டாம்.

26:07.860 --> 26:09.695
- போய் உன் வாழ்க்கையை வாழு.
- சரி.

26:10.362 --> 26:12.364
இந்த இடத்தை சுத்தம் செய்.
தள்ளி வை. கமான்.

26:14.032 --> 26:16.410
சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்பு,
ஹெர்ஷெல் லெவிட் என்பவர் ஹிட்லரிடமிருந்து

26:16.493 --> 26:18.078
தப்பித்து, அமெரிக்காவிற்கு குடியேறினார்,

26:18.161 --> 26:20.455
இங்கே அவர் போதுமான பணத்தைச் சேர்த்து
இண்டர்ஸ்டேட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில்

26:20.539 --> 26:22.749
அப்ஸ்டேட் நியூ யார்க்கில்
ஒரு சிறிய டைனர் வாங்கினார்.

26:22.833 --> 26:26.086
நீரிழிவு நோயுள்ள அவரது பேரன் பால்,
சமந்தாவின் கணவர், அந்தக் குடும்பத்

26:26.170 --> 26:27.629
தொழிலின் பொறுப்பை ஏற்கும் நேரத்தில்

26:27.713 --> 26:30.465
அது ஒன்பது டைனர்கள் மற்றும்
உயர்ரக உணவகங்களாக மாறியிருந்தது.

26:31.091 --> 26:32.551
இப்போது, ஹெர்ஷெல்லின் தொழில்,

26:32.634 --> 26:34.386
கிட்டத்தட்ட நூறாண்டாக அவரது குடும்பத்திற்கு
உணவளித்த தொழில்,

26:34.469 --> 26:37.264
நியூ யார்க் அரசாங்கத்தின் விவாகரத்துச் சட்டத்தின்
மாறுபாடுகளிடம் வீழ்ந்தது,

26:37.931 --> 26:41.268
எல்லாம் பால் தன் உணர்ச்சிகளை அடக்க முடியாததால்.

26:42.436 --> 26:43.437
ஹேய்.

26:45.022 --> 26:46.273
மன்னிக்கவும்.
என்ன அது?

26:47.441 --> 26:48.317
அது நிக் உடையது.

26:48.942 --> 26:50.777
ஆம். அருமையானதுதான்.

26:50.861 --> 26:52.321
நீ ஏன் நிக்கின் காரில் வந்தாய்?

26:52.404 --> 26:53.697
நான் காரை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது,

26:53.780 --> 26:55.407
ஏனெனில் ஹன்டருடன் ஒரு டிரம் கிட்டை
எடுத்து வர வேண்டியிருந்தது.

26:55.490 --> 26:57.159
திரும்பக் கொடுக்க நேரம் கிடைக்கவில்லை. அது…

26:57.242 --> 26:58.327
கடுப்பான நாள்தான்.

26:58.410 --> 27:00.162
இதை கேரேஜில் வைக்கவா?

27:01.538 --> 27:02.873
இல்லை, ஒரு நல்ல யோசனை உள்ளது.

27:05.584 --> 27:07.920
இரு. இரு,
என் பின்புறத்தைத் தொடு.

27:08.420 --> 27:12.007
ஆம். அப்படித்தான். கடவுளே.

27:12.591 --> 27:13.592
அருமை.

27:13.675 --> 27:16.011
அப்படித்தான். கடவுளே.

27:20.015 --> 27:23.060
இரு. அடச்சே.

27:24.645 --> 27:25.646
அடச்சே!

27:26.522 --> 27:28.440
நிக்கிற்கு இந்தக் காரின் புதிய மணம் பிடிக்கும்.

27:29.858 --> 27:31.818
நீ இன்று கிளப்பிலிருந்து உடனடியாக
கிளம்பிவிட்டாய்.

27:32.486 --> 27:34.446
ஆம். ஒரு குடும்ப விஷயம்.

27:34.530 --> 27:36.240
- சரி, எல்லாம் நலம்தானே?
- ஆம்.

27:36.323 --> 27:38.075
எல்லாம்… நிச்சயமாக. நலம்தான்.

27:39.284 --> 27:42.454
இப்போதெல்லாம் கிளப்பிற்குச் செல்வது
மிகவும் கடினமாகிவிட்டது.

27:42.538 --> 27:44.122
ஒரே ஒரு ஆறுதல் உன்னைப் பார்த்து,

27:44.206 --> 27:47.000
எதுவும் நடக்காதது போல நடிப்பதுதான்.

27:47.084 --> 27:48.836
ஆம். இப்போதைக்கு இன்னொரு கிளப் கிசுகிசுவின்

27:48.919 --> 27:51.421
மையமாக இருப்பதை என்னால்
தாங்க முடியாது.

27:51.505 --> 27:53.423
கடவுளே, இல்லை. உன்னுடையது
பழைய செய்தியாகிவிட்டது.

27:53.507 --> 27:55.592
என்னுடையது டாப் கியரில் போகிறது.

27:55.676 --> 27:57.970
அந்தக் காதலி இன்று என்னிடம்
ஹென்றியின் கவலை பற்றி

27:58.053 --> 27:59.888
என்னிடம் பேச முயன்றாள்.

27:59.972 --> 28:01.139
அது எப்படிப் போனது?

28:01.223 --> 28:03.058
அவள் நம்பிய அளவுக்குப் போகவில்லை.

28:03.141 --> 28:06.603
உண்மையில், அவளை வெறுப்பதா, பரிதாபப்படுவதா
எனத் தெரியவில்லை.

28:08.188 --> 28:10.107
அவனை வெறுத்து, அவள் மீது பரிதாபப்பப்படு.

28:12.442 --> 28:13.443
உன்னுடன் உடலுறவு கொள்வேன்.

28:13.527 --> 28:14.736
அதேதான்.

28:17.322 --> 28:19.491
கடவுளே, இப்போது நான் ஹென்ரியின்
கவலை பற்றிக் கவலைப்படுகிறேன்.

28:20.075 --> 28:22.327
- அவள் உன் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகிறாளா?
- ஆம்.

28:22.411 --> 28:23.912
தெரியும். அது கடுப்பேற்றும்.

28:24.913 --> 28:26.206
நீ கிளம்புகிறாயா?

28:27.124 --> 28:30.711
இன்றிரவு இங்கே தங்கலாம்
என நினைத்தேன்.

28:30.794 --> 28:32.379
குழந்தைகள் எழும் முன் நான் போய்விடுகிறேன்.

28:35.007 --> 28:36.258
அது நல்ல யோசனைதான்.

28:37.801 --> 28:39.928
நாம் ஒரு பாட்காஸ்ட் கேட்கலாம்.

28:41.597 --> 28:42.806
இது மிகவும் அற்புதமானது.

28:44.308 --> 28:47.769
இது வீட்டு ஒழுங்கமைப்பு பற்றியது.

28:47.853 --> 28:49.479
- மேலும்…
- சரி.

28:50.480 --> 28:53.567
…நாம் பானைகளையும் மூடிகளையும்
தனித்தனியாக வைக்க வேண்டும்.

28:53.650 --> 28:55.527
சரி. அது புத்திசாலித்தனம்தான்.

28:56.445 --> 28:57.905
ஆம், பிறகு…

28:58.864 --> 29:01.950
லக்கேஜ் வைக்க ஒரு தனி அறை இருக்கும்.

29:03.535 --> 29:04.786
உன்னிடம் லக்கேஜ் அறை உள்ளது.

29:04.870 --> 29:06.413
அது சௌகரியமானதுதான்.

29:35.526 --> 29:36.777
இல்லையா? சரி.

29:39.112 --> 29:41.365
இன்று உன் அப்பாவுடன் சென்றது
எப்படி இருந்தது?

29:41.949 --> 29:42.908
பரவாயில்லை.

29:42.991 --> 29:44.284
நீங்கள் இருவரும் வேடிக்கையாக எதுவும்
செய்தீர்களா?

29:47.663 --> 29:49.748
அவருடன் வேடிக்கையாக இருப்பது பரவாயில்லை.

29:49.831 --> 29:51.875
அது என் உணர்வுகளைக் காயப்படுத்தாது.
சத்தியமாக.

29:53.252 --> 29:54.253
தெரியும்.

29:58.215 --> 29:59.591
அவரை மிஸ் செய்வதும் பரவாயில்லை.

30:00.801 --> 30:03.136
உண்மையில், முன்பிருந்ததற்கு இப்போது
எதுவும் வித்தியாசம் இல்லை.

31:34.186 --> 31:35.187
ஏன்?

31:45.322 --> 31:46.865
நாம் சிறுநீர் போக வேண்டியிருந்தது.

31:53.288 --> 31:54.289
புரிகிறது.

31:56.708 --> 31:58.418
என்னை படுக்க வைக்க முடியுமா?

31:58.502 --> 31:59.628
நிச்சயமாக, நண்பா.

31:59.711 --> 32:01.129
எங்கே போகிறோம்?

32:01.213 --> 32:03.340
- அங்கே.
- சரி, போய் படு.

32:03.423 --> 32:04.842
அப்படித்தான்.

32:04.925 --> 32:07.553
உனக்குப் போர்த்திவிடுகிறேன். அப்படித்தான்.

32:07.636 --> 32:09.555
சரி, குட் நைட்.

32:11.265 --> 32:12.766
என் டிராகன் வேண்டும்.

32:12.850 --> 32:14.935
- எங்கே உள்ளது?
- டிரஸ்ஸரில்.

32:16.854 --> 32:18.772
ஓ, ஆம், இதோ உள்ளது.

32:20.858 --> 32:23.151
இதுவா? ஆம்.

32:24.194 --> 32:26.321
சரி, நண்பா, இதோ உன் டிராகன்.

32:30.367 --> 32:32.995
நான் தூங்கும் வரை இருக்கிறீர்களா?

32:43.255 --> 32:44.715
நிச்சயமாக, நண்பா.

32:44.798 --> 32:46.341
நான் இங்கே இருக்கிறேன், சரியா?

32:47.134 --> 32:49.219
இங்கேயே இருங்கள்,
நாம் இருவருமே தூங்குவோம்.

32:49.303 --> 32:50.304
சரி.

32:50.387 --> 32:51.763
அப்படித்தான், நண்பா.

32:58.729 --> 33:00.314
இதுபோன்ற தருணங்கள்தான்,

33:00.397 --> 33:02.191
நள்ளிரவில் வேறொருவரின் வீட்டில்

33:02.274 --> 33:05.110
தரையில் உட்கார்ந்துகொண்டு, வேறொருவரின்
குழந்தையைப் படுக்க வைக்கும்போது,

33:05.819 --> 33:08.780
எங்கும் போகாமல், நம் வாழ்க்கையிலிருந்து
விலகி எவ்வளவு தூரம்

33:09.406 --> 33:10.991
போக முடியும் என்பதை உணர்ந்தேன்.

33:29.218 --> 33:30.052
ஹலோ?

33:31.178 --> 33:32.471
குட் மார்னிங்.

33:33.263 --> 33:35.807
உன் கிச்சனில் பழகிக்கொள்வது
கொஞ்சம் சிரமமாக இருந்தது,

33:35.891 --> 33:40.479
எனவே நான் சென்று சிறுவயதில் நமக்குப்
பிடித்தவற்றை வாங்கி வந்தேன்.

33:41.688 --> 33:42.814
பால் வாங்கினாயா?

33:42.898 --> 33:44.274
அடச்சே.

33:44.358 --> 33:46.443
சும்மா கூறினேன். பால் உள்ளது என நினைக்கிறேன்.

33:46.527 --> 33:47.778
முட்டாள்.

33:52.282 --> 33:54.910
சாம் லெவிட் போல.

33:54.993 --> 33:55.911
ஆம்.

33:56.411 --> 33:58.413
அதாவது, இப்போது நீ கூறியதால்,
இது புரிகிறது.

33:59.081 --> 34:02.167
நீங்கள் இருவரும் அழகானவர்கள்,
புதிதாக தனிமையானவர்கள்.

34:02.251 --> 34:03.335
யாரும் இங்கே தனிமையானவர் இல்லை.

34:03.418 --> 34:06.463
ஒன்று சாம் லெவிட் அல்லது
ஒழுக்கக்கேடு.

34:06.547 --> 34:08.632
இதை உன்னிடம் கூறியிருக்க வேண்டாம்
என்று நினைக்கத் தொடங்குகிறேன்.

34:08.715 --> 34:09.925
அதாவது, தவறாக நினைக்காதே.

34:10.759 --> 34:12.052
சாம் அழகானவள்.

34:12.135 --> 34:13.387
என் நினைவுக்குத் தெரிந்த வரை.

34:14.388 --> 34:15.514
நீ அழகற்ற பெண்ணிடம் மாட்டியிருக்கக்கூடும்.

34:17.724 --> 34:19.560
- சரியா?
- பரவாயில்லை.

34:19.643 --> 34:20.643
என்ன?

34:22.855 --> 34:25.983
அதாவது, அவர்கள் டின்னருக்கு
வந்துள்ளனர்.

34:26.065 --> 34:27.442
நாங்கள் அங்கே செல்வோம்.

34:27.525 --> 34:29.820
நிக்கும் ஐவியும் கூட. இப்போது
நிக் மெல்லுடன் இருக்கிறான்,

34:30.404 --> 34:33.239
நான் சாமுடன் உடலுறவு கொள்கிறேன்,
என் வேலை.

34:33.322 --> 34:35.742
யாரோ இந்தப் பிரபஞ்சத்தை
கலைத்துப் போட்டு,

34:35.826 --> 34:38.036
அதில் நான் தொலைந்தது போல உணர்கிறேன்.

34:40.038 --> 34:41.373
என் வாழ்க்கைக்கு வரவேற்கிறேன்.

34:44.793 --> 34:45.878
நான் இதை சுத்தம் செய்கிறேன்.

34:47.212 --> 34:49.590
- நிஜமாகவா?
- வாய்ப்பில்லை.

34:52.050 --> 34:54.428
நிக் பிராண்டஸ்
ஹேய் அன்பே. எங்கே இருக்கிறாய்?

34:54.511 --> 34:59.266
மளிகை பொருட்கள். தாமதமாகிவிட்டது.
டோரியின் போட்டிக்கு கிளப்பில் சந்திக்கிறேன்

35:02.102 --> 35:03.187
உன் வயது என்ன, டோனி?

35:04.938 --> 35:06.815
எனக்கு இப்போதுதான் 41 வயதானது.

35:06.899 --> 35:08.192
நாற்பத்து ஒன்று.

35:08.692 --> 35:10.402
நல்ல வயதுதான். எனக்கு
அந்த வயது நினைவுள்ளது.

35:10.485 --> 35:14.907
நம் முப்பதுகளில் செழிப்படையும்
முட்டாள்தனங்களைத் தாண்டி,

35:15.908 --> 35:18.368
நிஜமான பெரியவராக உணரத் தொடங்கும் வயது.

35:18.452 --> 35:20.495
பிறகு நமக்கு வயதாகி, யாரும்
பெரியவர்கள் இல்லை என்பதை உணர்வோம்.

35:20.579 --> 35:22.289
நாம் என்ன செய்வோம் என்று
நமக்குத் தெரியாது.

35:23.415 --> 35:25.375
பகலிலேயே பாரில் குடித்துக்கொண்டிருப்போம்.

35:25.459 --> 35:27.127
எதையோ எதிர்நோக்கிக்கொண்டு.

35:28.253 --> 35:29.713
நீங்கள் நலமா?

35:30.672 --> 35:31.715
ஆம்.

35:32.466 --> 35:33.592
என்னைக் கண்டுகொள்ளாதீர்கள்.

35:33.675 --> 35:34.843
அதாவது,

35:36.220 --> 35:38.263
நான் உங்களைவிட வயதானவன் என்று
எனக்குத் தெரியும்.

35:38.347 --> 35:39.598
உங்களுக்கு
பொய் சொல்லத் தெரியவில்லை.

35:40.807 --> 35:41.808
இன்னொன்று வேண்டுமா?

35:42.434 --> 35:44.019
ஆம், ஆனால் வேண்டாம்.

35:49.024 --> 35:50.317
நன்றி, இளைஞனே.

35:51.401 --> 35:52.486
உங்கள் நாள் இனிமையாக இருக்கட்டும்.

36:28.230 --> 36:30.732
பிராட் மற்றும் ஜூலி ஸ்பெர்லிங்
வீட்டில் இல்லை.

36:31.483 --> 36:32.317
அருமை!

36:32.401 --> 36:35.195
ஏனெனில் அவர்கள் எங்கே உள்ளனர்
என எனக்குத் தெரியும்.

36:40.284 --> 36:44.663
அது எப்படித் தெரியுமெனில், நானும்
அங்குதான் இருக்க வேண்டும்.

36:57.593 --> 37:00.596
அவுட், 30, 40.

37:11.064 --> 37:12.024
டியூஸ்.

37:19.823 --> 37:20.908
பிங்கோ.

37:32.461 --> 37:33.879
ஹலோ?

37:36.965 --> 37:39.176
ஜூல்ஸ் ஒரு பெரிய ஜப்பானிய
வங்கிக்கு எம் & ஏ செய்தார்,

37:39.259 --> 37:42.346
அவரால் தனது ஆண் எதிராளிகளைவிட அதிக
பிசினஸ் செய்யவும், அதிகமாக குடிக்கவும் முடியும்.

37:43.347 --> 37:45.349
அவரது கணவர் பிராட் ஒரு புதிய
இங்கிலாந்து மேல் மட்டக் குடும்பத்தைச் சேர்ந்தவன்,

37:45.432 --> 37:48.268
அவனது குடும்ப முன்னோர்களின் பின்னணி
மேஃபிளவர் வரை செல்லும்.

37:49.186 --> 37:50.270
எனக்குத் தெரிந்த வரை,

37:50.354 --> 37:53.232
பிராட் கோல்ஃப் ஆடியும், போர் பற்றிய புத்தகங்கள்
படித்தும் நேரத்தைக் கழித்தான்.

37:54.024 --> 37:55.817
உங்களுக்குப் புரிந்தால் அது அருமையானதுதான்.

37:55.901 --> 37:57.903
செல்ஸீ, அவர்களது மகள்
நல்ல குழந்தைதான்,

37:57.986 --> 38:00.531
இந்நேரம் டென்னிஸ் கோர்ட்டில்

38:00.614 --> 38:02.407
என் மகளிடம் தோற்றுக்கொண்டிருப்பாள்.

38:46.660 --> 38:49.413
ரிச்சர்ட் மில் ஃபெலிபெ மாஸா
ஆட்டோமேட்டிக் க்ரோனோகிராஃப்,

38:49.496 --> 38:51.707
தனித்துவமான ரோஸ் தங்கம் மற்றும்
டைட்டானியம் ஸ்கெல்டன் மற்றும்

38:51.790 --> 38:56.003
ஃபிளைபேக் ஃபங்ஷனுடன், 2,25,000 டாலர்
வரை போகும்.

38:56.086 --> 38:57.921
பிராட் இதை அணிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது,

38:58.005 --> 39:00.090
எனில் அவன் இதை மிஸ் செய்ய மாட்டான்.

39:00.174 --> 39:02.009
அவனிடம் இது இருப்பதையே
அவன் மறந்திருப்பான்.

39:16.190 --> 39:18.358
அவுட்! கேம், செட், மேட்ச்.

39:18.442 --> 39:20.485
டோரி கூப்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.

39:44.301 --> 39:45.719
கேள்வி மற்றும் பதில் சேவை

39:45.802 --> 39:48.931
ஜூல்ஸும் பிராடும் எதற்கும்
வாய்ப்பு கொடுப்பதாக இல்லை போலத் தெரிகிறது.

39:49.014 --> 39:53.060
அவர்கள் அடுத்த மாதத்தின் SAT ஐ,
முழுமையான பதில்களுடன் வாங்கியுள்ளனர்.

40:09.535 --> 40:10.994
முப்பதுக்கு பூஜ்ஜியம்.

40:22.923 --> 40:24.216
மன்னிக்கவும்.

40:24.299 --> 40:27.010
மன்னிக்கவும்.

40:27.094 --> 40:28.929
மன்னித்துவிடுங்கள்.

40:29.513 --> 40:30.639
நிஜமாகவா?

40:30.722 --> 40:32.307
சரி, தெரியும், மன்னித்துவிடு.

40:32.391 --> 40:34.351
இதைவிட முக்கியமாக
என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

40:34.434 --> 40:36.520
- இரண்டு போட்டிகளைத் தவறவிட்டுவிட்டீர்கள்.
- ஒரு வேலை வந்துவிட்டது, சரியா?

40:36.603 --> 40:37.896
அவள் நன்றாக ஆடியதாகத் தெரிகிறது.

40:37.980 --> 40:39.940
விளையாடுகிறாயா?
அவள் அசத்திவிட்டாள்.

40:41.441 --> 40:43.443
நம் மகளுக்காக வாருங்கள் என்று நான் கூறும்போது,

40:43.527 --> 40:44.778
நேரத்திற்கு வர வேண்டும் என்று அர்த்தம்.

40:46.613 --> 40:48.115
நீங்கள் உங்களுடைய
கேலிச்சித்திரமாக மாறி வருகிறீர்கள்.

40:48.198 --> 40:49.241
மன்னித்துவிடு என்று கூறிவிட்டேன்.

40:49.324 --> 40:51.410
என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம்.

40:51.493 --> 40:53.912
- சரி, எனில் இந்தப் பேச்சை விடலாமா?
- சரி.

41:04.715 --> 41:06.884
- நாற்பது, 30.
- அப்படித்தான்.

41:19.938 --> 41:21.190
- அவுட்! டியூஸ்.
- அருமை.

41:22.941 --> 41:24.359
அருமை, செல்ஸ்.

41:32.034 --> 41:34.578
இப்போதுதான் ஒருவரது வீட்டில் இருந்துவிட்டு,
அவரது பொருட்களை ஆராய்ந்துவிட்டு,

41:34.661 --> 41:37.456
அவர்களுடைய 2,25,000 டாலர் வாட்ச் நம் பாக்கெட்டில்
இருக்கும்போது, அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாமல்

41:37.539 --> 41:41.502
இருக்கும்போது, அவர்களுக்கு அருகில் இருப்பது
விநோதமான உணர்வு.

41:41.585 --> 41:42.586
அட்வாண்டேஜ், டோரி…

41:42.669 --> 41:45.255
உண்மையைக் கூற வேண்டுமெனில்,
அதை நான் வெறுக்கவில்லை.

41:52.095 --> 41:53.639
- பேங். அருமை!
- அருமை!

41:55.098 --> 41:56.433
கேம், செட், மேட்ச்.

41:56.517 --> 41:58.018
அருமை!

41:59.394 --> 42:01.313
அருமை!

42:02.564 --> 42:03.899
நீ வலையை ரஷ் செய்தாய்.

42:03.982 --> 42:05.359
ஆம், அது அடிப்படை டென்னிஸ்.

42:07.361 --> 42:08.403
இங்கே வா.

42:10.364 --> 42:13.408
என் பிரச்சினைகளுக்கான தீர்வு

42:13.492 --> 42:14.493
சிறிய திருட்டு என நான் நினைக்கவில்லை.

42:14.576 --> 42:17.621
ஆனால் லூ எந்தக் கேள்வியும் கேட்காமல் எனக்கு
65 ஆயிரம் கொடுத்தார்.

42:17.704 --> 42:18.956
என் தற்போதைய சூழலில்,

42:19.039 --> 42:22.334
அதுபோன்ற வரியில்லாத வருவாய் பற்றி
விவாதிப்பது கடினமான விஷயம்.

42:22.417 --> 42:24.378
ஹேய், ராக்கோதானே?

42:24.461 --> 42:25.462
லூ இருக்கிறாரா?

42:29.424 --> 42:30.717
ஆம், யாரோ உங்களைக் கேட்கிறார்.

42:32.094 --> 42:35.472
இல்லை, அந்த வெள்ளைக்காரன்,
அடிக்கடி தலை சீவுவான் போல.

42:36.473 --> 42:37.599
சரி.

42:56.785 --> 42:57.995
பேச்சுவார்த்தைப் புலி.

42:58.495 --> 43:00.080
உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

43:05.335 --> 43:06.503
ரிச்சர்ட் மில்.

43:08.714 --> 43:09.798
மிகவும் ஆடம்பரமானது.

43:13.218 --> 43:15.679
இதையும் உன் மனைவி விற்கும்படி கூறினாளா?

43:15.762 --> 43:18.849
- நான் விவாகரத்தானவன்.
- பொய்.

43:21.226 --> 43:23.770
இதற்கும் ஆவணங்கள் தொலைந்துவிட்டனவா?

43:27.900 --> 43:29.067
வீட்டுக்குப் போ, பேச்சுவார்த்தைப் புலியே.

43:29.151 --> 43:31.069
- என்ன?
- ஆவணங்கள் இல்லாமல், டீல் இல்லை.

43:31.153 --> 43:32.988
உங்களால் இதை விற்க முடியும்
எனக் கூறினீர்கள்.

43:33.071 --> 43:34.448
இப்போது சொல்கிறேன்,

43:34.531 --> 43:36.283
- முடியும்போதே இதை நிறுத்திவிடு.
- …அதை என்னிடம் விற்றாய்…

43:36.366 --> 43:37.701
- எனக்குப் புரியவில்லை.
- …பணம் வேண்டும் என்றாய்.

43:37.784 --> 43:39.203
- என் பிரச்சினை இல்லை.
- மோதிரத்தைக் கொடு.

43:39.286 --> 43:41.330
- மோதிரம் கிடைக்காது.
- மோதிரத்தைக் கொடு!

43:41.413 --> 43:44.541
- அந்த மோதிரத்தைக் கொடுத்துவிடு!
- இதை நீண்டகாலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும்.

43:44.625 --> 43:46.710
- இங்கிருந்து போ.
- அந்த மோதிரத்தைக் கொடு, ராக்கோ!

43:46.793 --> 43:47.753
அது என் அம்மாவின் மோதிரம்!

43:47.836 --> 43:49.671
இங்கே கத்தியை எடுக்கிறாயா?

43:49.755 --> 43:50.923
கடவுளே.

43:51.006 --> 43:53.175
நாயே. நீ ஒரு நாய்தான், டானி.

43:53.258 --> 43:55.135
- கமான்!
- நீயும் உன் அம்மாவும் ஒழிந்து போங்கள்.

43:55.219 --> 43:57.679
- நிறுத்து, டானி.
- என் மோதிரம் வேண்டும், லூ.

43:57.763 --> 43:59.389
“என் மோதிரம் வேண்டும், லூ.”

43:59.473 --> 44:01.183
- நாசமாய்ப் போ, ராக்கோ.
- இவனிடம் 200 டாலர் குறைவாக உள்ளது.

44:01.266 --> 44:03.393
கமான், ராக்கோ. இது என் அம்மாவின் மோதிரம்.

44:03.477 --> 44:04.603
யாரிடம் விளையாடுகிறாய்?

44:04.686 --> 44:07.314
கத்தியை வைத்துவிட்டு, என் கடையைவிட்டு
வெளியே போ.

44:14.363 --> 44:15.614
நீ போகலாம்.

44:15.697 --> 44:19.618
அல்லது அடுத்த ஆறு மாதங்களை, வெளியே
போயிருக்கலாம் என நினைத்துக் கழிப்பாய்.

44:23.747 --> 44:26.708
சரி, லூ. பாருங்கள், நான்…
அடச்சே. மன்னியுங்கள், லூ. சரியா? மன்னியுங்கள்.

44:26.792 --> 44:29.127
- அது என் அம்மாவின் மோதிரம்.
- நீ திரும்ப வர மாட்டாய் என்று சொல்.

44:31.213 --> 44:32.464
கமான், லூ.

44:32.548 --> 44:33.715
சொல், டானி.

44:41.056 --> 44:42.599
நான் திரும்ப வர மாட்டேன்.

44:42.683 --> 44:44.184
இங்கே மீண்டும் வந்தால்,

44:44.685 --> 44:46.770
உன் உடலில் பெரிய துளையுடன் செல்வாய்,
புரிந்ததா?

44:51.859 --> 44:53.360
ஆம்.

44:53.443 --> 44:54.903
நீ கேவலமானவன், டானி.

45:11.086 --> 45:12.379
நீ இன்னும் இங்கே இருக்கிறாய்.

45:16.967 --> 45:19.469
ஹேய், பாருங்கள், நான் கடினமான நிலையில்
இருக்கிறேன்.

45:20.137 --> 45:21.805
இல்லை.

45:22.306 --> 45:23.557
நீதான் அப்படி நினைக்கிறாய்.

45:24.808 --> 45:25.976
என்னால் உனக்கு உதவ முடியாது.

45:26.059 --> 45:28.270
பாருங்கள், நீங்களே
விலையைச் சொல்லுங்கள்.

45:31.356 --> 45:34.234
ராக்கோவிடம் உன்னை வழியனுப்பும்படி கூற வேண்டுமா?

45:52.336 --> 45:53.545
அடச்சே!

46:04.014 --> 46:05.057
லூ பேசுகிறேன்.

46:05.766 --> 46:07.226
உனக்கு ஒரு வண்டி எண்ணை அனுப்புகிறேன்.

46:09.061 --> 46:11.021
அவனைப் பற்றி அனைத்தையும் அனுப்பு.

47:31.518 --> 47:33.520
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்
