WEBVTT

00:00:19.269 --> 00:00:20.270 align:center
கடவுளே.

00:00:24.816 --> 00:00:25.859 align:center
கடவுளே.

00:00:39.957 --> 00:00:41.208 align:center
சரி.

00:00:46.004 --> 00:00:47.005 align:center
அடச்சே.

00:00:48.632 --> 00:00:49.633 align:center
அடச்சே.

00:00:53.011 --> 00:00:54.054 align:center
தெளிவான அம்மோனியா

00:01:11.822 --> 00:01:12.823 align:center
சரி.

00:01:14.825 --> 00:01:16.034 align:center
சரி.

00:01:22.499 --> 00:01:24.251 align:center
அடச்சே.

00:01:32.926 --> 00:01:35.762 align:center
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனத் தெரியும்:
இந்த நீச்சல் குளம் ஒரு உவமை.

00:01:36.680 --> 00:01:40.559 align:center
ஆனால் இது மிகவும் நிஜமானதும்,
குளிரானதும் கூட.

00:01:40.642 --> 00:01:43.854 align:center
நான் நிறைய என்னைப் பற்றி
ஆய்வு செய்யும் நபர் இல்லை.

00:01:43.937 --> 00:01:45.397 align:center
கண்டிப்பாக, சமீபத்திய காலம் வரை,

00:01:45.480 --> 00:01:47.357 align:center
வேறொருவரின் வீட்டின் தரையில்,
இறந்து போனவனின் ரத்தத்தில்

00:01:47.441 --> 00:01:49.568 align:center
விழித்து, நீச்சல் குளத்தில்
விழும் நபரும் இல்லை,

00:01:49.651 --> 00:01:52.154 align:center
ஆனால் அதுதான் நடக்கிறது.

00:01:52.946 --> 00:01:53.947 align:center
அந்தத் தருணத்தில்,

00:01:54.031 --> 00:01:56.033 align:center
நாசமாகிப் போன என் வாழ்க்கை பற்றிய

00:01:56.116 --> 00:01:57.492 align:center
எண்ணங்களும், அனைத்தும்

00:01:58.243 --> 00:02:00.412 align:center
எப்படி இவ்வளவு வேகமாக மோசமடையும்

00:02:00.913 --> 00:02:05.083 align:center
என்ற எண்ணமும் தோன்றுவதை
என்னால் தடுக்க முடியவில்லை.

00:02:08.002 --> 00:02:09.545 align:center
இதுதான் நடக்கும்…

00:02:13.675 --> 00:02:14.510 align:center
லாய்டு, வா.

00:02:14.593 --> 00:02:15.594 align:center
4 மாதங்களுக்கு முன்பு

00:02:15.677 --> 00:02:17.387 align:center
- ஷாட்ஸ் அடிப்போம். ஷாட்ஸ்.
- இன்னொரு ரௌண்டா?

00:02:17.471 --> 00:02:18.514 align:center
ஆம், பார்டெண்டர்.

00:02:18.597 --> 00:02:20.516 align:center
- என்ன ஷாட்ஸ் வேண்டும்?
- ரம் அடிப்போம்.

00:02:20.599 --> 00:02:22.684 align:center
இவர் என்ன குடிக்கிறார்? அதைக் குடிப்போம்.
அது நன்றாகத் தெரிகிறது.

00:02:23.477 --> 00:02:25.896 align:center
நீங்கள் அழகாக உள்ளீர்கள்.
உங்களுக்கு எதுவும் வாங்கித் தரவா?

00:02:25.979 --> 00:02:27.231 align:center
பெரிய ப்ரொமோஷன் வந்துள்ளது!

00:02:27.314 --> 00:02:29.399 align:center
பெரிய ப்ரொமோஷன்.
எவ்வளவு சம்பளம்?

00:02:29.483 --> 00:02:30.817 align:center
நீ எவ்வளவு சம்பாதித்தாய்?

00:02:36.907 --> 00:02:40.327 align:center
மெக்காலன் 25. பார்டெண்டர் கொடுத்தான்.

00:02:41.787 --> 00:02:43.372 align:center
அது விலைமதிப்பான பானம்.
நான் அதற்கு மதிப்புடையவன் என நம்புகிறேன்.

00:02:43.455 --> 00:02:45.165 align:center
கவலைப்படாதீர்கள்.
நீங்கள்தான் பணம் கொடுக்கிறீர்கள்.

00:02:46.166 --> 00:02:47.042 align:center
லிவ் கிராஸ்.

00:02:47.125 --> 00:02:48.460 align:center
- ஆண்ட்ரூ கூப்பர்.
- தெரியும்.

00:02:48.544 --> 00:02:50.003 align:center
நான் மைக் ஷெஃபர்டின் குழுவில்
வேலை செய்கிறேன்.

00:02:50.087 --> 00:02:51.922 align:center
மன்னிக்கவும். உன்னை
அடையாளம் தெரியவில்லை.

00:02:52.005 --> 00:02:54.591 align:center
பரவாயில்லை. மைக் எங்களை அடிக்கடி
ஏழாவது தளத்திற்கு மேலே அனுமதிப்பதில்லை.

00:02:56.260 --> 00:02:59.179 align:center
அங்கிருக்கும் பேட்ரிக் பேட்மேன் ரசிகர்கள்
கொஞ்சம் மோசமானவர்கள்.

00:02:59.263 --> 00:03:01.348 align:center
நான் பணிமிகுதியாகக் காட்டிக்கொண்டால்
நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

00:03:01.431 --> 00:03:02.307 align:center
உதவுவதில் மகிழ்ச்சி.

00:03:02.391 --> 00:03:04.810 align:center
கொஞ்ச நேரத்திற்கு நீங்கள் என்னிடம்
வருவீர்கள் என்பது போல இருந்தது,

00:03:04.893 --> 00:03:05.727 align:center
ஆனால் என்னால் பொறுக்க முடியவில்லை.

00:03:06.812 --> 00:03:11.108 align:center
ஆம், நான் நீண்ட காலத்திற்குப் பிறகு
சமீபமாக தனியாளாக இருக்கிறேன்,

00:03:11.191 --> 00:03:12.651 align:center
எனவே என்னிடம் பெரிய உத்தி எதுவும் இல்லை.

00:03:12.734 --> 00:03:14.653 align:center
உங்களிடம் எந்த உத்தியும் இல்லை என்பதுதான்
உங்கள் உத்தி.

00:03:15.320 --> 00:03:18.073 align:center
- அது பலவீனமானது. புரிகிறதா?
- உங்களுக்கு திருமணமாகிவிட்டதா?

00:03:18.156 --> 00:03:19.908 align:center
ஆம், 18 ஆண்டுகள்.

00:03:19.992 --> 00:03:21.785 align:center
- எனில் நீங்கள்…
- உன்னைவிட மிகவும் வயதானவன்.

00:03:21.869 --> 00:03:23.495 align:center
நான் வயதை அந்த விதத்தில் பார்ப்பதில்லை.

00:03:24.538 --> 00:03:26.623 align:center
- ஏனெனில் உனக்கு, என்ன, 27 இருக்குமா?
- இருபத்து எட்டு.

00:03:26.707 --> 00:03:28.876 align:center
- அதுதான் உன் உத்தி.
- இருக்கலாம்.

00:03:30.127 --> 00:03:32.588 align:center
அல்லது நீங்கள் திருமணத்தின்
மரபுகளில் நீங்கள் மூழ்கியிருக்கலாம், மேலும்

00:03:32.671 --> 00:03:34.089 align:center
- குழந்தைகள்…
- இரண்டு.

00:03:34.173 --> 00:03:37.509 align:center
…அதிலும் குழந்தைகள் இருக்கும் பிற
திருமணமான தம்பதிகளுக்கு மத்தியில் வாழ்ந்துள்ளதால்,

00:03:37.593 --> 00:03:40.220 align:center
வேறு தேர்வுகளைச் செய்யும், வேறு இலக்குகளைக்
கொண்டிருக்கும் ஒரு முற்றிலும்

00:03:40.304 --> 00:03:42.681 align:center
தனிப்பட்ட மக்கள் இருப்பதையே
நீங்கள் கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம்.

00:03:44.349 --> 00:03:45.350 align:center
உன் இலக்குகள் என்ன?

00:03:45.934 --> 00:03:47.352 align:center
நீண்ட கால காதல்,

00:03:47.436 --> 00:03:48.812 align:center
ஹாட்டான, ஆரோக்கியமான உடலுறவு,

00:03:48.896 --> 00:03:50.230 align:center
நிதி ரீதியான சௌகரியம்,

00:03:50.314 --> 00:03:52.149 align:center
மன அமைதி, இணக்கம்.

00:03:52.232 --> 00:03:54.776 align:center
- அவை அனைவருடைய இலக்குகளும்தான்.
- அவற்றில் எத்தனையை நீங்கள் அடைந்துள்ளீர்கள்?

00:03:56.069 --> 00:03:58.864 align:center
நீங்கள் விதிகளைப் பற்றி இன்னொரு முறை
யோசிக்க வேண்டும் என்கிறேன்.

00:04:00.824 --> 00:04:01.825 align:center
எனக்கு உன் அப்பா வயது.

00:04:01.909 --> 00:04:03.994 align:center
எனக்கு ஏற்கனவே அப்பா இருக்கிறார். மில்ட்.

00:04:04.077 --> 00:04:05.662 align:center
நல்லவர், உங்களைவிட வயதானவர்.

00:04:05.746 --> 00:04:09.249 align:center
- விநோதமாக, அது ஒரு வெற்றி போலத் தோன்றுகிறது.
- எனில் நீங்கள் அடிக்கடி வெளியே செல்ல வேண்டும்.

00:04:09.333 --> 00:04:11.084 align:center
நான் வெளியேதான் இருக்கிறேன்.

00:04:11.168 --> 00:04:13.253 align:center
இல்லை. இன்னும் இல்லை.

00:04:14.046 --> 00:04:16.339 align:center
மன்னித்துவிடு, நீ அனைவரிடமும்
இப்படித்தான் பேசுவாயா?

00:04:16.423 --> 00:04:18.634 align:center
- எனக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்கவில்லையே?
- உனக்கு திருமணமாகிவிட்டதா?

00:04:18.716 --> 00:04:20.135 align:center
ஆம். இரண்டு ஆண்டுகள்.

00:04:20.219 --> 00:04:22.137 align:center
- மிகவும் சிறிய வயதில்.
- ஆம்.

00:04:23.096 --> 00:04:24.806 align:center
மேலும், அவனுக்கு குண்டான பெண்களைத்தான்
பிடித்திருந்தது.

00:04:24.890 --> 00:04:26.475 align:center
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.

00:04:26.558 --> 00:04:29.019 align:center
என்ன முரண்பாடு எனில், டீனேஜ் வயதில்
நான் குண்டாக இருந்தேன்,

00:04:29.102 --> 00:04:30.687 align:center
ஆனால் அது அவனைச் சந்திப்பதற்கு முன்.

00:04:31.396 --> 00:04:33.357 align:center
இருந்தாலும், அவனது பிரௌவுசிங் ஹிஸ்டரியைப்
பார்த்த பின்பு,

00:04:33.440 --> 00:04:36.777 align:center
நாங்கள் சந்திக்கும்போது அந்த குண்டு பெண்ணை
எப்படியோ அவன் உணர்ந்து, அதுதான்

00:04:36.860 --> 00:04:38.070 align:center
அவனை என்னிடம் ஈர்த்த்தா என வியந்தேன்.

00:04:38.904 --> 00:04:41.406 align:center
என்னை நம்பு, அது அவனை உன்னிடம் ஈர்க்கவில்லை.

00:04:41.490 --> 00:04:43.492 align:center
இதோ உங்கள் உத்தி தெரிகிறதே.

00:04:47.496 --> 00:04:48.497 align:center
பார்,

00:04:50.123 --> 00:04:53.627 align:center
எனக்குப் புரிகிறது, உன் வயதில் உள்ள
ஆண்கள் முட்டாள்கள்தான்.

00:04:54.419 --> 00:04:56.463 align:center
அங்கே இருப்பது என்னவாக இருந்தாலும்,

00:04:56.547 --> 00:04:58.799 align:center
அவர்கள்… போதையில் கத்திக்கொண்டிருப்பது.

00:04:59.967 --> 00:05:02.719 align:center
சுயநலமான பக்குவமற்ற ஆண்கள் எப்போதும்
தங்களைவிட சாதித்தவர்களிடம் போட்டியிடுவார்கள்,

00:05:02.803 --> 00:05:04.346 align:center
பேச்சிலும் சரி, கட்டிலிலும் சரி.

00:05:04.429 --> 00:05:08.308 align:center
எனவே ஒப்பீட்டளவில், என் வயது ஆண்கள் அதற்கான
சரியான மாற்று மருந்தாகத் தெரிவார்கள், சரியா?

00:05:08.392 --> 00:05:10.894 align:center
நான் அக்கறை கொள்பவன். புத்திசாலி.
நான் ஒரு ஆண்மகன்,

00:05:10.978 --> 00:05:12.396 align:center
அதற்கு இந்த காலத்தில்
என்ன அர்த்தமாக இருந்தாலும் சரி.

00:05:12.479 --> 00:05:13.814 align:center
- ஆனால் உனக்கு 27 வயதா?
- இருபத்து எட்டு.

00:05:13.897 --> 00:05:16.066 align:center
இருபத்து எட்டு, எனவே நீ என்னைவிட
20 வயது இளையவள்.

00:05:16.149 --> 00:05:18.694 align:center
இந்தத் தருணத்தில் இது வேலை செய்யும், சரியா?

00:05:18.777 --> 00:05:20.571 align:center
என்னிடம் பணம் உள்ளது, உன்னிடம்
சுதந்திரம் உள்ளது,

00:05:20.654 --> 00:05:23.031 align:center
நாம் ஒன்றாக உலகைச் சுற்றலாம், ஒருவருக்கொருவர்
நிறைய கற்றுக்கொள்ளலாம்.

00:05:23.115 --> 00:05:26.201 align:center
- பேச்சிலும் சரி, கட்டிலிலும் சரி.
- ஆம். சரி.

00:05:26.285 --> 00:05:27.494 align:center
நான் சுவாரஸ்யமானவனாகத் தெரிவேன்,

00:05:27.578 --> 00:05:29.872 align:center
ஏனெனில், உன்னைவிட 20 ஆண்டுகள்
அதிக கதைகள் என்னிடம் உள்ளன,

00:05:29.955 --> 00:05:32.499 align:center
மேலும் நீ சுவாரஸ்யமானவனாகத் தெரிவாய்,
ஏனெனில் நான் நீண்ட காலத்திற்கு முன் இழந்த

00:05:32.583 --> 00:05:36.086 align:center
விளைவுகளைப் பற்றி யோசிக்காத அவசரத்துடன்,
நீ இப்போது வாழ்கிறாய்.

00:05:36.670 --> 00:05:38.797 align:center
எனவே நாம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக
வாழ்வதில் பிரச்சினை இருக்காது.

00:05:38.881 --> 00:05:41.175 align:center
அது கொஞ்ச நாள் வேலை செய்யும், சரியா?

00:05:42.092 --> 00:05:45.554 align:center
பிறகு பத்து ஆண்டுகள் கழித்து,
உனக்கு 38 வயதாகும். எனக்கு 58.

00:05:45.637 --> 00:05:47.431 align:center
அப்போதுதான் எல்லாம் கொஞ்சம்
கடினமாகும்.

00:05:47.514 --> 00:05:49.224 align:center
நீ குழந்தைகளை விரும்பலாம்,
எனக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ளனர்.

00:05:49.308 --> 00:05:51.059 align:center
”வாழ்வில் சிறப்பான அனுபவங்களில் ஒன்றை

00:05:51.143 --> 00:05:52.769 align:center
நான் இழந்துவிட்டேனா?” என்று நீ
யோசிக்கத் தொடங்கலாம்.

00:05:52.853 --> 00:05:54.980 align:center
- நீ அப்போதும் மிக அழகாக இருக்கலாம்…
- நான் அழகாக இருப்பதாக நினைக்கிறீர்களா?

00:05:55.063 --> 00:05:56.565 align:center
நான் வயதானவனாக இருப்பேன்.

00:05:56.648 --> 00:05:58.192 align:center
நீங்கள் வயதானாலும் சிறப்பாக
இருப்பீர்கள் எனக் கூற முடியும்.

00:05:58.275 --> 00:06:00.319 align:center
அதை உன்னால் கூற முடியும் காரணம்,
அது ஏற்கனவே தொடங்கிவிட்டது.

00:06:00.402 --> 00:06:03.030 align:center
விஷயம் என்னவெனில், நாம் குறைவான
செக்ஸுடன் அதிகமான ஒயின் குடிப்போம்,

00:06:03.113 --> 00:06:05.532 align:center
அதுவும் கொஞ்ச நாள் வேலை செய்யலாம்.

00:06:05.616 --> 00:06:07.117 align:center
நீங்கள் நிறைய பேசுகிறீர்கள்
என்று யாராவது கூறியுள்ளனரா?

00:06:07.201 --> 00:06:11.413 align:center
என் மனதின் தனிப்பாடலையும் என் மனைவியையும்
ஒரே நேரத்தில் மாற்றி வைத்துவிட்டேன்.

00:06:11.496 --> 00:06:13.373 align:center
இன்னொரு பத்தாண்டுகள் தாண்டுவோம்.

00:06:13.457 --> 00:06:15.876 align:center
- அவசியமா?
- எனக்கு 68 வயதாகும்.

00:06:15.959 --> 00:06:18.045 align:center
என்னை எவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டாலும்,

00:06:18.128 --> 00:06:20.839 align:center
என் புராஸ்டேட் அதன் வேலையைச் செய்யும்,
என் முடியும்தான்,

00:06:20.923 --> 00:06:22.341 align:center
நான் இறந்த பிறகு உன் வாழ்க்கை

00:06:22.424 --> 00:06:24.426 align:center
எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டு
உன் வாழ்வைக் கழிக்கத் தொடங்குவாய்.

00:06:24.510 --> 00:06:26.762 align:center
அதேநேரம், நீ வெளியே செல்லும்போதெல்லாம்

00:06:26.845 --> 00:06:29.806 align:center
நீ எந்த இளைஞனுடன் உடலுறவு
வைத்துக்கொள்வாய் என யோசிப்பேன்.

00:06:29.890 --> 00:06:31.725 align:center
நிஜமாகவா? நீங்கள் அவ்வளவு
பாதுகாப்பின்மையுடையவரா?

00:06:31.808 --> 00:06:33.185 align:center
இன்னும் இல்லை, ஆனால் மாறுவேன்.

00:06:33.268 --> 00:06:35.354 align:center
- ஆம், குணாதிசயம் பற்றி என்ன?
- உன்னுடையதா என்னுடையதா?

00:06:35.437 --> 00:06:38.357 align:center
- கண்டிப்பாக நான் துரோகம் செய்வேன் என்கிறீர்களா?
- இல்லை, ஆனால் கண்டிப்பாகக் கவலைப்படுவேன்.

00:06:38.440 --> 00:06:40.734 align:center
உங்களிடம் ஒரு விநோதமான தன்னம்பிக்கை மற்றும்
குறைவான சுயமரியாதையின் கலவை உள்ளது.

00:06:40.817 --> 00:06:42.528 align:center
நான் பொறாமைப்படும் கிழவனாக இருப்பேன்,

00:06:42.611 --> 00:06:44.988 align:center
நீ உடலுறவு ரீதியாக நல்ல நிலையில்
இருக்கும் ஓய்வற்ற பெண்ணாக இருப்பாய்,

00:06:45.072 --> 00:06:47.032 align:center
நாம் இருவருமே, நமது கடினமான
கடைசி காலங்களில்,

00:06:47.115 --> 00:06:49.368 align:center
மிகவும் தனிமையுடன் இருப்போம் என்ற

00:06:49.451 --> 00:06:51.995 align:center
பயத்தில் மூழ்கியிருப்போம்.

00:06:52.079 --> 00:06:53.080 align:center
வாவ்.

00:06:53.580 --> 00:06:56.625 align:center
அருமை. இதையெல்லாம்
எப்போது யோசித்தீர்கள்?

00:06:57.626 --> 00:07:00.671 align:center
நீ அங்கிருந்து இங்கே வருவதற்கு ஆன
பத்து நொடிகளில்.

00:07:02.756 --> 00:07:05.217 align:center
என்னால் இங்கே உட்கார்ந்து அதற்கு
எதிர்வாதம் புரிய முடியும்,

00:07:05.300 --> 00:07:08.011 align:center
ஆனால், நான் உடலுறவை
எதிர்பார்த்து வந்தேன்.

00:07:08.971 --> 00:07:11.181 align:center
அதில் எத்தனை பிரச்சினைகள் உள்ளன?

00:07:14.518 --> 00:07:15.727 align:center
எதுவும் மனதிற்கு வரவில்லை.

00:07:20.816 --> 00:07:21.817 align:center
செய்யலாம்!

00:07:21.900 --> 00:07:24.152 align:center
3 மாதங்களுக்குப் பிறகு

00:07:53.182 --> 00:07:54.892 align:center
இதுதான் நடக்கும்…

00:08:01.565 --> 00:08:04.109 align:center
கல்லூரி முடித்தவுடன் ஒரு பெரிய
நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வோம்.

00:08:04.193 --> 00:08:05.903 align:center
நாம் ஒரு பெரிய நிறுவனத்தில்
ஒரு சாதாரண பணியாளராக இருப்போம்,

00:08:05.986 --> 00:08:07.946 align:center
ஆனால் நாம் முன்னேற வாய்ப்பிருக்கும்.

00:08:09.781 --> 00:08:12.367 align:center
நகரத்தில் நாம் கஷ்டப்பட்டு பணம் கொடுத்த
கேவலமான அபார்ட்மெண்ட் இருக்கும்,

00:08:12.451 --> 00:08:14.203 align:center
ஏனெனில் பணம் வரும் என நமக்குத் தெரியும்.

00:08:14.286 --> 00:08:16.830 align:center
திருமணம் செய்துகொள்வோம், ஏனெனில்…

00:08:18.207 --> 00:08:20.042 align:center
அவள் அந்தக் கேவலமான அபார்ட்மெண்ட்டுக்கு வருவாள்.

00:08:22.336 --> 00:08:24.296 align:center
நாம் மிகவும் ஏழ்மையில் இருப்போம்,
ஆனால் இப்போது இரண்டு பேர் இருப்போம்.

00:08:24.922 --> 00:08:26.840 align:center
அதில் இருவரும் ஒன்றாக இருப்பீர்கள்,
அது நன்றாக இருக்கும்.

00:08:29.384 --> 00:08:33.972 align:center
அவள் அந்தக் கேவலமான அபார்ட்மெண்ட்டில் உங்களுடன்
உடலுறவு கொள்வது போல யாரும் செய்ய மாட்டார்கள்.

00:08:35.557 --> 00:08:37.142 align:center
அவளையும் சேர்த்துதான்.

00:08:39.227 --> 00:08:41.772 align:center
மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து,
பொருளாதார ரீதியில் நிலையாவோம்.

00:08:41.855 --> 00:08:43.690 align:center
கடினமான, சுலபமான பணம்.

00:08:43.774 --> 00:08:45.984 align:center
அது கேனில் அடைத்த உணவோ
ஷாட்கன்களோ இல்லை.

00:08:47.694 --> 00:08:49.738 align:center
ஹேய். ஆம்.

00:08:51.240 --> 00:08:52.866 align:center
பிறகு, நாம் சிலவற்றைப் பற்றி
நன்றாக உணரும்போது,

00:08:52.950 --> 00:08:55.911 align:center
எல்லாம் சிறப்பாக இருக்கும்போது,
முதல் குழந்தை பிறக்கும்.

00:08:55.994 --> 00:08:57.162 align:center
மூச்சு விடு, மூச்சு விடு.

00:09:00.624 --> 00:09:03.919 align:center
30% முன்பணம் கொடுத்து, 4.5 சதவீதத்தில்
30 ஆண்டு கடனில் வீட்டை வாங்குவோம்.

00:09:04.002 --> 00:09:05.879 align:center
மீண்டும் ஏழ்மை.

00:09:09.299 --> 00:09:11.468 align:center
- ம்ம் ஹ்ம்ம்.
- இன்னும் கடினமாக, அதிக நேரம் உழைப்போம்.

00:09:11.552 --> 00:09:13.387 align:center
- கொஞ்சம் அதிக பணம் ஈட்டத் தொடங்குவோம்…
- அருமை.

00:09:13.470 --> 00:09:15.848 align:center
…அது நீங்கள் ஈட்டக்கூடிய இன்னும்
அதிக பணத்தைப் பற்றிய

00:09:15.931 --> 00:09:16.932 align:center
விழிப்புணர்வை உங்களுக்குக் கொடுக்கும்.

00:09:18.392 --> 00:09:19.518 align:center
இரண்டாவது குழந்தை.

00:09:20.644 --> 00:09:21.603 align:center
இரண்டாவது வீடு.

00:09:22.396 --> 00:09:23.438 align:center
மீண்டும் ஏழ்மை.

00:09:26.942 --> 00:09:28.902 align:center
ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமான ஏழ்மை.

00:09:29.695 --> 00:09:31.738 align:center
நம்மிடம் கடன் வாங்கிய முதலீடு இருக்கும்,
அது நம் முயற்சிக்கு வெளியே

00:09:31.822 --> 00:09:33.657 align:center
காட்டுவதற்கு ஒன்று உள்ளது என்பதற்கான
ஆடம்பரமான சொல்.

00:09:33.740 --> 00:09:35.784 align:center
வீடு, கார், பிற பொருட்கள்.

00:09:38.871 --> 00:09:40.163 align:center
இந்த நேரத்தில், தொடக்கத்தில் இருந்த

00:09:40.247 --> 00:09:42.124 align:center
உங்கள் அனுபவமற்ற திட்டங்களோ
நீங்கள் தொடங்கும்போது உங்களுக்கு

00:09:42.207 --> 00:09:44.501 align:center
முக்கியமாக இருந்தவை உங்கள்
பார்வையில் இருந்து விலகியிருக்கும்.

00:09:44.585 --> 00:09:48.255 align:center
நீங்கள் மிகவும் சென்றுகொண்டிருப்பீர்கள்,
“இது எப்போது போதும்?” மற்றும்

00:09:48.338 --> 00:09:49.381 align:center
”இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?”

00:09:49.464 --> 00:09:51.550 align:center
கடினமான கேள்விகளைக் கேட்டுக்கொள்ள முடியாது.

00:09:56.430 --> 00:09:58.432 align:center
மூன்றாவது வீடு.

00:10:03.020 --> 00:10:05.230 align:center
பிறகு ஒருநாள், வீட்டை வாங்கிய
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு,

00:10:05.314 --> 00:10:07.191 align:center
நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையை

00:10:07.274 --> 00:10:09.067 align:center
உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்
நிலைக்கு, அந்த காலியான பகுதிக்கு

00:10:09.151 --> 00:10:11.486 align:center
வந்துள்ளதை பெருமையுடன் பார்ப்பீர்கள்.

00:10:11.570 --> 00:10:13.906 align:center
உங்களுக்கு சிக்கலான வாழ்க்கை இருப்பதாகவும்
அதன் வரம்பற்ற சிக்கலான

00:10:13.989 --> 00:10:16.825 align:center
சவால்கள் அனைத்தையும் சரணடையச் செய்ததாகத்
தெரியு மாய உறவில்,

00:10:17.701 --> 00:10:21.246 align:center
அப்போதுதான் 18 ஆண்டுகால
உங்கள் மனைவி உங்கள் மெத்தையில்…

00:10:21.330 --> 00:10:22.623 align:center
அடச்சே.

00:10:23.123 --> 00:10:25.083 align:center
…உங்கள் உற்ற நண்பனோடு இருப்பதைப்
பார்ப்பீர்கள்.

00:10:41.308 --> 00:10:42.809 align:center
நான்காவது வீடு.

00:10:42.893 --> 00:10:43.810 align:center
வாடகை வீடு.

00:10:44.561 --> 00:10:47.189 align:center
சிறியதுதான், ஆனால் கவலைப்படாதீர்கள்,
அது மன அழுத்தம் தருவதும் கூட.

00:11:21.598 --> 00:11:23.267 align:center
நாம் ஏன் இன்னும் பாக்-ப்ரோ பங்குகளை
வைத்துள்ளோம்?

00:11:23.350 --> 00:11:24.518 align:center
நாம் பெரும்பான்மையாக முதலீடு செய்யவில்லை.

00:11:24.601 --> 00:11:26.728 align:center
- பெரும்பான்மையா? இவன் அதைக் கூறினானா?
- அவை மீண்டு வரும்.

00:11:26.812 --> 00:11:29.231 align:center
நான் கூறியுள்ளேன், ஒட்டுமொத்தமாக
பணம் ஈட்டுகிறோம்,

00:11:29.314 --> 00:11:31.358 align:center
நாம் புதிய தொழில்நுட்பங்களில்
அடிவாங்க வேண்டியதில்லை.

00:11:31.441 --> 00:11:32.776 align:center
இன்றே எல்லாப் பங்குகளையும் விற்றுவிடு.

00:11:32.860 --> 00:11:34.570 align:center
சரி, பாஸ்.

00:11:35.612 --> 00:11:37.322 align:center
- இவனுக்கு என்ன பிரச்சினை?
- எனக்கா? ஒன்றுமில்லை.

00:11:37.906 --> 00:11:38.907 align:center
இவன் காதலி கழட்டிவிட்டுவிட்டாள்.

00:11:38.991 --> 00:11:40.993 align:center
- அது புதிய செய்தியா?
- அவளை நேசிக்கிறேன்.

00:11:41.660 --> 00:11:42.494 align:center
இல்லை.

00:11:42.578 --> 00:11:43.829 align:center
நீ காதலை நேசிக்கிறாய், அவ்வளவுதான்.

00:11:43.912 --> 00:11:47.666 align:center
- என்ன செய்வதென எனக்குத் தெரியவில்லை.
- தெரியும். பாக்-ப்ரோவை விற்றுவிடு.

00:11:47.749 --> 00:11:48.750 align:center
நன்றி.

00:11:50.419 --> 00:11:52.087 align:center
- குட் மார்னிங், கூப்.
- ஜாக்.

00:11:52.171 --> 00:11:53.088 align:center
மக்களே.

00:11:53.172 --> 00:11:54.464 align:center
இன்று ஸ்குவாஷ் போகிறோமா?

00:11:55.048 --> 00:11:56.800 align:center
அப்படியா? மேரி எதுவும் மின்னஞ்சல் அனுப்பினாரா?

00:11:56.884 --> 00:11:58.552 align:center
என் தவறாக இருக்கலாம்.
உன் பை உள்ளதா?

00:11:58.635 --> 00:11:59.803 align:center
ஆம்.

00:11:59.887 --> 00:12:01.847 align:center
- அருமை. மதியம்?
- மதியம்.

00:12:01.930 --> 00:12:02.806 align:center
அற்புதம்.

00:12:07.603 --> 00:12:09.396 align:center
அவுட். கமான். ஒழுங்காக விளையாடு.

00:12:17.613 --> 00:12:19.448 align:center
சர்வ் செய். அடச்சே.

00:12:26.872 --> 00:12:27.706 align:center
குழந்தைகள் எப்படி உள்ளனர்?

00:12:27.789 --> 00:12:28.790 align:center
நலம்தான்.

00:12:28.874 --> 00:12:30.792 align:center
- மனைவி?
- முன்னாள் மனைவி.

00:12:30.876 --> 00:12:34.046 align:center
ஆம், இன்னும் அந்த முட்டாளுடன் இருக்கிறாளா?
அவனது பெயர் என்ன, கூடைப்பந்து வீரன்?

00:12:34.129 --> 00:12:36.173 align:center
நிக். ஆம்.

00:12:36.256 --> 00:12:38.342 align:center
அவன் கர்ம வினையை அனுபவிப்பான், சரியா?

00:12:39.134 --> 00:12:41.595 align:center
உன்னிடம் ஒரு கெட்ட செய்தியைக்
கூற வேண்டும்.

00:12:41.678 --> 00:12:44.389 align:center
கடவுளே, ஜாக், புற்றுநோய் திரும்ப வரவில்லையே?

00:12:44.473 --> 00:12:45.766 align:center
என்ன? இல்லை. கடவுளே, இல்லை.

00:12:45.849 --> 00:12:49.895 align:center
இல்லை, எனது மீதமிருக்கும் ஒரு விதைப்பை
நன்றாகவே உள்ளது.

00:12:50.854 --> 00:12:53.148 align:center
இல்லை, என்னவெனில், கூப்,
நீ பணிநீக்கம் செய்யப்பட்டாய்.

00:12:54.191 --> 00:12:55.442 align:center
அருமை.

00:12:55.526 --> 00:12:57.861 align:center
இல்லை, நிஜமாகத்தான். உன்னை
நீக்க வேண்டும்.

00:12:59.863 --> 00:13:00.697 align:center
என்ன?

00:13:01.365 --> 00:13:03.033 align:center
அந்தப் பெண், ஒலிவ்… அவளது பெயர் என்ன?

00:13:03.116 --> 00:13:05.827 align:center
- ஒலிவியா ஏதோ வரும்.
- இருங்கள். பெண்ணா? என்ன பெண்?

00:13:05.911 --> 00:13:08.372 align:center
- என்ன பேசுகிறீர்கள்?
- கிராஸ். ஒலிவியா கிராஸ்.

00:13:08.455 --> 00:13:09.706 align:center
ஒலிவ்…

00:13:09.790 --> 00:13:10.832 align:center
லிவ் கிராஸா?

00:13:11.834 --> 00:13:14.670 align:center
ஒரு அசோசியேட்டுடன் நிர்வாக இயக்குநர்
உடலுறவு கொள்வது…

00:13:14.753 --> 00:13:16.296 align:center
இருங்கள், இல்லை, அவள்
எனக்கு கீழே வேலை செய்ததே இல்லை.

00:13:16.380 --> 00:13:18.257 align:center
அவள் ஷெஃபர்டின் குழுவில் இருந்தாள். மேலும்…

00:13:18.340 --> 00:13:19.967 align:center
அதற்கு முன் அவளை நான்
சந்தித்ததும் இல்லை.

00:13:20.050 --> 00:13:23.262 align:center
நீ சந்தித்தாயா என்பது முக்கியமில்லை.
அவளுடன் உடலுறவு கொண்டாயா என்பதுதான் முக்கியம்.

00:13:23.345 --> 00:13:24.680 align:center
உடலுறவு கொண்டாய்தானே?

00:13:26.431 --> 00:13:27.599 align:center
அடச்சே!

00:13:28.225 --> 00:13:31.353 align:center
ஆம், ஆனால் அது ஒரு வாரயிறுதியில்,
மூன்று மாதங்களுக்கு முன்பு.

00:13:31.436 --> 00:13:32.688 align:center
இருவர் விருப்பத்துடன்தான்.

00:13:32.771 --> 00:13:34.898 align:center
- அதாவது, அவள்தான் என்னிடம் வந்தாள்.
- அது முக்கியம் இல்லை.

00:13:34.982 --> 00:13:35.983 align:center
நீ அவளது மேலதிகாரி.

00:13:36.900 --> 00:13:39.069 align:center
எனக்கு அவளைத் தெரியாது என்றேன்.

00:13:39.152 --> 00:13:41.071 align:center
ஆனால் அவள் ஷெஃபர்டுக்கு வேலை
செய்தது தெரியும்தானே?

00:13:42.281 --> 00:13:45.993 align:center
கூப், விபி பதவிக்கு அவளைத்
தேர்வுசெய்யவில்லை என நினைக்கிறாள்.

00:13:46.076 --> 00:13:48.203 align:center
விபியா? அவளுக்கு 27 வயதாகிறது.

00:13:48.287 --> 00:13:50.664 align:center
இல்லை, 28, நான் விவாதிக்க வரவில்லை.

00:13:50.747 --> 00:13:52.541 align:center
என்னை பணிநீக்கம் செய்ய முடியாது, ஜாக்.

00:13:52.624 --> 00:13:57.212 align:center
நம்மிடம் கண்டிப்பான சகோதரத்துவம் இல்லாத
சட்டம் உள்ளது, அல்லது என்னிடம் அப்படிக் கூறினர்.

00:13:57.296 --> 00:14:00.007 align:center
ஆனால் பணிநீக்கம் செய்ய என்னை
ஏன் இங்கே கூட்டி வந்தீர்கள்?

00:14:02.176 --> 00:14:05.053 align:center
ஹெச்ஆர் உன் கம்ப்யூட்டரை அணுக
உன் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டியிருந்தது.

00:14:05.137 --> 00:14:06.597 align:center
தனியுரிம தகவல்கள்,
உனக்குத் தெரியுமே.

00:14:06.680 --> 00:14:07.764 align:center
அவர்கள் என் கிளையன்டுகள்.

00:14:07.848 --> 00:14:10.851 align:center
நீ கையெழுத்திட்ட கோரக் கூடாத
ஒப்பந்தத்தின்படி,

00:14:10.934 --> 00:14:13.020 align:center
குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு
அவர்கள் எங்களுடைய கிளையன்டுகள்.

00:14:13.103 --> 00:14:15.314 align:center
என்னை இப்படி புதைக்கப் போகிறீர்களா?

00:14:15.397 --> 00:14:16.648 align:center
இது எப்படி நடக்கும் என உனக்குத் தெரியும்.

00:14:18.275 --> 00:14:19.610 align:center
என் கேபிடல் கணக்கு?

00:14:20.485 --> 00:14:22.696 align:center
அது என் பணம், ஜாக். முடியாது.

00:14:22.779 --> 00:14:24.656 align:center
- கமான், ஜாக். நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது.
- நீ சரியான காரணத்திற்காக நீக்கப்பட்டுள்ளாய்.

00:14:24.740 --> 00:14:28.035 align:center
என்னிடம் உள்ளதெல்லாம் அந்தக் கணக்கில்தான் உள்ளது.
என்னை அழித்துவிடுவீர்கள், ஜாக்.

00:14:28.118 --> 00:14:30.829 align:center
இப்படி நடப்பதற்கு வருந்துகிறேன்,
ஆனால் இப்படித்தான் நடக்க வேண்டும்.

00:14:32.122 --> 00:14:32.956 align:center
நான் வழக்கு தொடுப்பேன்.

00:14:33.665 --> 00:14:35.834 align:center
வழக்கு தொடுக்காமல் இருந்தால், ஆறுமாத
ஊதியம் கிடைக்கும்.

00:14:35.918 --> 00:14:37.127 align:center
நாசமாய்ப் போ.

00:14:37.211 --> 00:14:39.213 align:center
ஆம். அது…

00:14:41.131 --> 00:14:43.091 align:center
தீர்மானிக்க உனக்கு சில நாட்கள் கொடுக்கிறேன்.

00:15:32.766 --> 00:15:33.809 align:center
ஹன்டர்.

00:15:47.906 --> 00:15:48.991 align:center
இங்கே என்ன செய்கிறீர்கள்?

00:15:50.284 --> 00:15:52.119 align:center
சீக்கிரம் வேலையை முடித்துவிட்டேன்,
உன்னைக் கூட்டிச் செல்ல வரலாமென நினைத்தேன்.

00:15:52.953 --> 00:15:54.413 align:center
- இன்று செவ்வாய்க்கிழமை இல்லை.
- தெரியும்.

00:15:55.205 --> 00:15:57.040 align:center
நாம் கொஞ்சம் நேரம் செலவிடலாம்
என நினைத்தேன்.

00:15:57.124 --> 00:15:59.084 align:center
- ஐஸ் கிரீம் சாப்பிடலாம்.
- நான் எதுவும் தவறு செய்துவிட்டேனா?

00:15:59.168 --> 00:16:00.460 align:center
கடவுளே, ஹன்டர், இல்லை.

00:16:00.544 --> 00:16:05.883 align:center
ஒரு அப்பா தன் மகனுடன் திடீரென
வெளியே செல்லக் கூடாதா?

00:16:15.475 --> 00:16:16.685 align:center
பள்ளி எப்படிப் போகிறது?

00:16:19.146 --> 00:16:21.023 align:center
- பள்ளி எப்படிப் போகிறது?
- நலம்.

00:16:23.358 --> 00:16:25.027 align:center
உனக்கு நியமித்த ஆசிரியர் எப்படி இருக்கிறார்?
நன்றாக கற்பிக்கிறாரா?

00:16:26.111 --> 00:16:27.112 align:center
அப்படித்தான் நினைக்கிறேன்.

00:16:29.239 --> 00:16:30.240 align:center
காதலி இருக்கிறாளா?

00:16:31.533 --> 00:16:33.202 align:center
- இல்லை.
- சாத்தியம் உள்ளதா?

00:16:33.285 --> 00:16:34.286 align:center
இல்லை.

00:16:37.831 --> 00:16:40.209 align:center
இன்று ஒரு கட்டத்தில் நீ எனக்கு
விரிவான பதிலளிப்பாய்

00:16:40.292 --> 00:16:42.002 align:center
என நினைக்கிறாயா?

00:16:43.587 --> 00:16:44.588 align:center
இருக்கலாம்.

00:17:00.979 --> 00:17:03.982 align:center
- உள்ளே வருகிறீர்களா?
- ஆம், டோரி இருக்கிறாள். ஹாய் கூறுகிறேன்.

00:17:05.483 --> 00:17:06.984 align:center
- ஹாய், மகனே.
- ஹேய், அம்மா.

00:17:07.069 --> 00:17:08.694 align:center
- உன் நாள் எப்படி இருந்தது?
- பரவாயில்லை.

00:17:13.282 --> 00:17:14.701 align:center
இங்கே என்ன செய்கிறீர்கள்?

00:17:14.785 --> 00:17:16.869 align:center
என்ன… ஹன்டரை ஐஸ் கிரீம் சாப்பிட
அழைத்துச் சென்றேன்.

00:17:16.954 --> 00:17:17.871 align:center
இன்று செவ்வாய்க்கிழமை இல்லை.

00:17:18.579 --> 00:17:19.665 align:center
அவன் கூறினான்.

00:17:20.457 --> 00:17:22.542 align:center
- டோரி இருக்கிறாளா?
- அவள் இன்னும் வீட்டுக்கு வரவில்லை.

00:17:25.253 --> 00:17:26.171 align:center
- என்ன?
- என்ன?

00:17:26.255 --> 00:17:27.506 align:center
என்ன பார்வை அது?

00:17:28.423 --> 00:17:30.551 align:center
- நான் எப்படியும் பார்க்கவில்லை.
- நீ என்னைப் பார்ப்பது…

00:17:30.634 --> 00:17:32.719 align:center
எந்த விதத்திலும் பார்க்காமல் இருக்க
முயற்சிக்கும் பார்வை அது.

00:17:32.803 --> 00:17:34.054 align:center
என்ன பிரச்சினை?

00:17:37.224 --> 00:17:40.310 align:center
உனக்கான நாள் இல்லாதபோது நீ வருவது
கொஞ்சம் கடினமானது என நினைக்கிறேன்.

00:17:40.394 --> 00:17:42.729 align:center
நான் ஐஸ் கிரீம் சாப்பிடக் கூட்டிச் சென்றேன், கடவுளே.

00:17:42.813 --> 00:17:45.440 align:center
இது அவனைக் குழப்பும். ஒரு காரணத்திற்காகத்தான்
எல்லைகள் உள்ளன.

00:17:45.524 --> 00:17:47.818 align:center
எல்லைகளா? அதாவது, ஒருதார மணம் போலவா?

00:17:48.402 --> 00:17:49.236 align:center
நிஜமாகவா, கூப்?

00:17:49.319 --> 00:17:52.155 align:center
அது நடந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டது.
அதைப் பயன்படுத்துவதை எப்போது நிறுத்துவாய்?

00:17:52.239 --> 00:17:55.492 align:center
தெரியவில்லை, விபச்சாரத்திற்கான
வரம்புகளின் சட்டம் என்ன?

00:17:55.576 --> 00:17:58.704 align:center
நீ அந்த சோகப் புருஷனாக இருக்கும் காலத்தைவிடக்
குறைவாகத்தான் இருக்கும்.

00:17:58.787 --> 00:18:00.664 align:center
- சோகப் புருஷனா? நீ யார்?
- ஒன்று சொல்லவா?

00:18:00.747 --> 00:18:02.708 align:center
நீ கொஞ்சமாவது உணர்ந்திருந்தால்,

00:18:02.791 --> 00:18:04.835 align:center
இந்த விஷயங்கள் தனிப்பட்ட விதத்தில்
மட்டும் நடக்காது என்பது புரிந்திருக்கும்,

00:18:04.918 --> 00:18:07.838 align:center
மேலும் அதில் உனது தரப்பு பொறுப்பை
கொஞ்சம் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும்.

00:18:07.921 --> 00:18:11.758 align:center
சரி, என்னை மன்னித்துவிடு, ஆனால் நீ நிக்குடன்
உடலுறவு கொண்டாய், இங்கிருந்து என்னைத் துரத்தினாய்,

00:18:11.842 --> 00:18:14.136 align:center
இது எல்லாவற்றுக்கும் பணம் கொடுக்க
நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்,

00:18:14.219 --> 00:18:15.637 align:center
ஆனால் நான்தான் பொறுப்பற்றவனா?

00:18:15.721 --> 00:18:16.930 align:center
இப்போது இதைப் பற்றிப் பேச விரும்பவில்லை.

00:18:17.014 --> 00:18:19.016 align:center
இதைத் தனியாகச் செய்வதில் மகிழ்ச்சி இல்லை.

00:18:21.268 --> 00:18:22.352 align:center
- ஹேய்!
- என்ன?

00:18:23.061 --> 00:18:24.813 align:center
அவனுக்கு புதிய டிரம் கிட் வேண்டும்
என்றானா?

00:18:24.897 --> 00:18:26.982 align:center
புதிய டிரம் கிட்டா?
பழைய கிட்டுக்கு என்னவானது?

00:18:27.065 --> 00:18:28.942 align:center
தெரியவில்லை, பழையதாகிவிட்டது,
உருமாறிவிட்டது.

00:18:29.026 --> 00:18:31.195 align:center
அவன் வாசிக்கும் இசைக்குழு மிகவும்
சிறப்பானது,

00:18:31.278 --> 00:18:32.487 align:center
அவனுக்குப் புதியது தேவை என்றான்.

00:18:32.571 --> 00:18:33.697 align:center
- கடவுளே.
- நிக் வாங்கித் தருவதாகக் கூறினான்…

00:18:33.780 --> 00:18:37.409 align:center
இல்லை. நான்… நிக் என் மகனுக்கு
டிரம் செட் வாங்கித் தர வேண்டாம்.

00:18:37.492 --> 00:18:40.078 align:center
- நீ மிகவும் பிசியாக இருந்தால்…
- நான் சமாளித்துக்கொள்கிறேன்.

00:18:41.121 --> 00:18:42.539 align:center
இரு. கூப்.

00:18:43.165 --> 00:18:44.917 align:center
டோரியை தோல் மருத்துவரிடம் கூட்டிச் சென்றேன்.

00:18:45.417 --> 00:18:47.711 align:center
- அவளது சருமம் நன்றாகத்தானே உள்ளது.
- ஆம், அவளிடம் சொல்கிறாயா?

00:18:48.295 --> 00:18:51.798 align:center
அவளுக்கு இந்தப் புதிய லேசர் சிகிச்சை வேண்டும்.
மூன்று முறை செய்தால் போதும்,

00:18:51.882 --> 00:18:53.175 align:center
ஒரு முறைக்கு 1,500 டாலர்.

00:18:54.176 --> 00:18:55.719 align:center
உனக்கு அந்த பில்லை அனுப்புவார்கள்.

00:18:55.802 --> 00:18:57.763 align:center
உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
எனக்கு செலவாகிறது.

00:18:57.846 --> 00:18:59.556 align:center
எனில் செவ்வாய்க்கிழமைகள் மட்டும் வா.

00:19:01.517 --> 00:19:03.393 align:center
டோரியிடம் நான் ஹாய் சொன்னதாகச் சொல்.

00:19:05.979 --> 00:19:06.980 align:center
கடவுளே.

00:19:08.899 --> 00:19:11.443 align:center
கடவுளே.
என்ன விளையாடுகிறாயா?

00:19:14.696 --> 00:19:17.991 align:center
அடச்சே. மன்னித்துவிடுங்கள்.
இது முற்றிலும் என் தவறுதான்.

00:19:18.075 --> 00:19:19.243 align:center
ஆம்.

00:19:19.326 --> 00:19:22.246 align:center
- இதோ, என் தகவல்களைத் தருகிறேன்.
- டோரி?

00:19:22.329 --> 00:19:23.288 align:center
ஹாய், அப்பா.

00:19:24.498 --> 00:19:25.499 align:center
ஜேக், இது என் அப்பா.

00:19:25.582 --> 00:19:27.376 align:center
அப்பா, இது ஜேக்.

00:19:28.669 --> 00:19:29.837 align:center
உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, சார்.

00:19:29.920 --> 00:19:32.256 align:center
உங்கள் காரை இடித்ததற்கு வருந்துகிறேன்.

00:19:32.339 --> 00:19:33.590 align:center
இரு, நீ யார்?

00:19:34.174 --> 00:19:35.175 align:center
ஜேக் வெஸ்டன்.

00:19:35.259 --> 00:19:36.760 align:center
சரி, அதில் எதுவும் தெரியவில்லை.

00:19:36.844 --> 00:19:38.220 align:center
இவன் என் காதலன்.

00:19:38.804 --> 00:19:41.223 align:center
- மன்னிக்கவும், உன் வயது என்ன?
- எனக்கு 20 வயதாகிறது, சார்.

00:19:42.015 --> 00:19:43.809 align:center
என்னை சார் என்று அழைக்காதே.
அதை யாரும் நம்ப மாட்டார்கள்.

00:19:43.892 --> 00:19:45.936 align:center
- மன்னித்துவிடுங்கள்.
- சரி, நீங்கள் இருவரும்…

00:19:46.019 --> 00:19:48.647 align:center
அவளுக்கு 17 வயதாகிறது. இந்த மாநிலத்தின்
சட்டங்கள் உனக்குத் தெரியுமா?

00:19:48.730 --> 00:19:50.190 align:center
- அந்த மாதிரி இல்லை, சார்.
- அப்பா.

00:19:50.274 --> 00:19:51.650 align:center
சரி. ஜேக்தானே?

00:19:51.733 --> 00:19:53.610 align:center
என்னை இன்னும் ஒருமுறை சார் என்று அழைத்தால்,
உன் மர்ம இடத்தில் குத்திவிடுவேன்.

00:19:53.694 --> 00:19:55.904 align:center
அப்பா, பைத்தியம் போல நடந்துகொள்கிறீர்கள்.
அம்மா, அப்பா பைத்தியம் போல நடந்துகொள்கிறார்.

00:19:55.988 --> 00:19:57.656 align:center
- இதில் உனக்கு பிரச்சினையில்லையா?
- நீங்கள் உள்ளே சென்று

00:19:57.739 --> 00:19:59.241 align:center
- எதுவும் சாப்பிடுகிறீர்களா?
- உனக்கு இதைப் பற்றித் தெரியுமா?

00:19:59.324 --> 00:20:00.158 align:center
உனக்கு இதில் பிரச்சினையில்லையா?

00:20:00.242 --> 00:20:03.620 align:center
- காருக்காக மன்னிப்பு கேட்கிறேன்.
- சரி, போய்த் தொலை, ஜேக்.

00:20:05.664 --> 00:20:07.332 align:center
- உனக்கு என்ன பிரச்சினை?
- உனக்கு என்ன பிரச்சினை?

00:20:07.416 --> 00:20:09.459 align:center
நம் மகளை சட்டரீதியில் பலாத்காரம்
செய்வதில் உனக்கு பிரச்சினையில்லையா?

00:20:09.543 --> 00:20:10.669 align:center
- ஓ, நிறுத்து.
- என்ன?

00:20:10.752 --> 00:20:13.130 align:center
- அவள் அவனை விரும்புகிறாள்.
- அவள் ஒரு குழந்தை. அவனுக்கு 20 வயதாகிறது.

00:20:13.213 --> 00:20:14.590 align:center
அது எப்படி உன் உலகில் சரிப்பட்டு வரும்?

00:20:14.673 --> 00:20:15.507 align:center
- பேபி.
- அடக் கடவுளே.

00:20:15.591 --> 00:20:17.176 align:center
நீ அவர்களை ஒன்றாக…
அருமை, நிக் வந்துவிட்டான்.

00:20:17.259 --> 00:20:19.678 align:center
- ஹாய்.
- ஹேய், கூப்.

00:20:19.761 --> 00:20:20.762 align:center
அவன் சரிசெய்வான்.

00:20:22.264 --> 00:20:25.225 align:center
வெளியே வந்து அவனைப் பார்க்கிறேன்.

00:20:25.309 --> 00:20:26.310 align:center
- ஹேய்.
- ஹாய்.

00:20:26.393 --> 00:20:28.145 align:center
சரி. சரி.

00:20:28.228 --> 00:20:32.399 align:center
நான் வாங்கிய அற்புதமான ஸ்கிர்ட் ஸ்டேக்ஸை
கிரில் செய்யவிருந்தேன்.

00:20:32.482 --> 00:20:34.943 align:center
அதாவது, நீ ஏன் வரக் கூடாது?

00:20:36.403 --> 00:20:37.654 align:center
நான் ஏன் வரக் கூடாது?

00:20:39.198 --> 00:20:40.449 align:center
நான் ஏன் வரக் கூடாது?

00:20:40.532 --> 00:20:43.410 align:center
நான் ஏன் வரக் கூடாது என்றால்,
எனது கொல்லைப்புறத்திற்கு வந்து,

00:20:43.493 --> 00:20:44.828 align:center
எனது 5,000 டாலர் கிரில்லில்

00:20:44.912 --> 00:20:47.581 align:center
என் மனைவியுடன் உடலுறவு கொண்ட நபர்

00:20:47.664 --> 00:20:49.917 align:center
செய்த கிரில்லைச் சாப்பிடுவது
எனக்கு எப்படி இருக்குமெனில்…

00:20:50.000 --> 00:20:52.169 align:center
- வாவ்.
- …என் ஷன் ஃபூஜி ஸ்டேக் கத்தியை எடுத்து

00:20:52.252 --> 00:20:54.046 align:center
என் இதயத்தை வெட்டியெடுப்பது போல இருக்கும்.

00:20:54.129 --> 00:20:56.590 align:center
அதனால் நான் வர விரும்பவில்லை.

00:20:56.673 --> 00:20:58.634 align:center
நான் போகிறேன்.

00:20:59.676 --> 00:21:01.220 align:center
புரிகிறது, கூப்.

00:21:02.054 --> 00:21:03.347 align:center
உன்னைப் புரிந்துகொள்ள முடிகிறது, நண்பா.

00:21:03.430 --> 00:21:06.391 align:center
நான் இதைக் கடக்கும் வழியைக்
கண்டறிய முயல்கிறேன், புரிகிறதா?

00:21:06.475 --> 00:21:07.518 align:center
நம் அனைவருக்காகவும்.

00:21:08.268 --> 00:21:09.770 align:center
ஆம், வாழ்த்துகள்.

00:21:11.146 --> 00:21:13.190 align:center
அந்தப் பொடியனுக்கு நான் பில் அனுப்புகிறேன்.

00:21:14.441 --> 00:21:15.776 align:center
கால்விரல்கள் ஜாக்கிரதை, அன்பே.

00:21:28.789 --> 00:21:31.375 align:center
ஹாஸ்கெல் நன்றாக உறங்கியபோது,
நான் இரவு முழுவதும் வண்டி ஓட்டியுள்ளேன்.

00:21:32.251 --> 00:21:35.045 align:center
கொஞ்ச நேரத்திலேயே எனக்கும்
தூக்கம் வரத் தொடங்கியது.

00:21:36.046 --> 00:21:37.464 align:center
பிற பணமெடுத்தல்கள்,
கட்டணங்கள் தொடர்க

00:21:37.548 --> 00:21:38.632 align:center
தினசரி இறுதி பேலன்ஸ்

00:21:38.715 --> 00:21:40.092 align:center
விரைவில் நான் மீண்டும் சூவுடன் இருப்பேன்.

00:21:40.759 --> 00:21:42.302 align:center
- அந்த நீண்ட பயணம் முடிந்தது…
- அடச்சே.

00:21:42.386 --> 00:21:44.388 align:center
…இனியும் எந்த நடைப்பயணமும் இருக்காது.

00:21:45.848 --> 00:21:46.932 align:center
நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க தொடங்கினேன்

00:21:47.975 --> 00:21:50.936 align:center
அதை நியான் விளக்குகளால் அலங்கரித்தாலும்
அதிகப் பிரகாசமாக இருக்காது.

00:21:51.854 --> 00:21:53.897 align:center
சூ வெற்றியை நோக்கிச் செல்வதைப் பற்றி
யோசிப்பது நன்றாக உள்ளது.

00:21:57.317 --> 00:21:58.569 align:center
அது எனக்காகவும் கூட இருக்கலாம்.

00:21:59.194 --> 00:22:00.779 align:center
நான் பிடிபட்டால் நான் காரையும்
இந்தப் பொருட்களையும்

00:22:00.863 --> 00:22:02.739 align:center
எங்கிருந்து எடுத்தேன் எனத் தெரிந்துகொள்ள
விரும்புவார்கள் எனத் தோன்றவில்லையா?

00:22:02.823 --> 00:22:05.617 align:center
- மேலும் என் மீது கொலைக் குற்றம் சுமத்துவார்கள்.
- நீ புத்திசாலி என்றால், நீ பிடிபட மாட்டாய்.

00:22:07.244 --> 00:22:08.245 align:center
ஹேய்.

00:22:09.997 --> 00:22:10.998 align:center
என்ன செய்கிறாய்?

00:22:14.042 --> 00:22:15.711 align:center
- ஹாய்.
- ஹாய்.

00:22:15.794 --> 00:22:17.838 align:center
அப்படித்தான்! கமான்.

00:22:17.921 --> 00:22:20.632 align:center
சமந்தாவின் கணவன் பால், டைனர்கள்
வைத்து பணக்காரன் ஆனவன்.

00:22:20.716 --> 00:22:22.676 align:center
- அவனிடம் ஒன்பது டைனர்கள், 44 அங்குல இடுப்பு…
- கடவுளே.

00:22:22.759 --> 00:22:25.053 align:center
…மேலும் தீவிரமான விறைப்புத்தன்மை
பிரச்சினை உள்ளது.

00:22:25.137 --> 00:22:27.556 align:center
அப்படித்தான்! கடவுளே!

00:22:27.639 --> 00:22:30.350 align:center
அவர்கள் பிரிந்ததிலிருந்து, இவள் தான் இழந்த
நேரத்தை என்னிடம் நேர்த்தி செய்கிறாள்.

00:22:35.355 --> 00:22:36.440 align:center
கடவுளே.

00:22:38.317 --> 00:22:40.152 align:center
நீ தோலைத் தாண்டி கடித்திருக்கிறாய்.

00:22:40.235 --> 00:22:42.821 align:center
ஓ, நான் போலியாக நடிக்கவில்லை
என்று அப்படித்தான் தெரியும்.

00:22:44.281 --> 00:22:45.449 align:center
எல்லாம் நலமா?

00:22:45.532 --> 00:22:46.533 align:center
ம்ம் ஹ்ம்ம். ஆம்.

00:22:49.161 --> 00:22:50.454 align:center
நீ போக வேண்டுமா?

00:22:50.537 --> 00:22:51.413 align:center
இல்லை.

00:22:52.915 --> 00:22:54.750 align:center
ஏன்? நான் போக வேண்டுமா?

00:22:54.833 --> 00:22:55.834 align:center
இல்லை, நான்…

00:22:55.918 --> 00:22:58.879 align:center
ஏதோ முக்கியமான விஷயம் போல…

00:23:00.255 --> 00:23:01.673 align:center
- தெரிந்தது.
- இல்லை.

00:23:03.884 --> 00:23:04.885 align:center
ஆனால் சரி.

00:23:06.470 --> 00:23:10.474 align:center
- ஹேய், என்ன நடந்தது?
- என்ன? ஒன்றுமில்லை.

00:23:10.557 --> 00:23:13.477 align:center
இல்லை, நீ எதுவும் கூற விரும்பினால், கூறிவிடு.

00:23:13.560 --> 00:23:16.063 align:center
அதாவது, இப்போதுதான் நாம் உடலுறவு கொண்டோம்,

00:23:16.146 --> 00:23:17.648 align:center
இப்போது உடனே என்னை அனுப்பிவிடப் பார்க்கிறாய்.

00:23:18.148 --> 00:23:19.066 align:center
சாம், கடவுளே.

00:23:19.149 --> 00:23:21.068 align:center
இல்லை, பரவாயில்லை.
இல்லை. நான் போகிறேன்.

00:23:21.151 --> 00:23:23.320 align:center
நிஜமாகவே, அதாவது, அதுதான் உயிரியல், இல்லையா?

00:23:23.403 --> 00:23:25.489 align:center
உச்சத்தை அடைந்தவுடன் டோப்பமைன்
இறங்கிவிடும்.

00:23:25.572 --> 00:23:27.783 align:center
உன் குழந்தைகள் பற்றிய
விஷயம் என நினைத்தேன்.

00:23:27.866 --> 00:23:30.244 align:center
இல்லை, என் குழந்தைகள் தூங்கிவிட்டனர்,
ஆனால் உன் அக்கறைக்கு நன்றி.

00:23:30.327 --> 00:23:32.621 align:center
சரி, நான்… இங்கே நமக்குள்
தவறான புரிதல் உள்ளது.

00:23:32.704 --> 00:23:34.331 align:center
நீ என்னைப் புரிந்துகொள்ளாதது போலுள்ளது.
பார்…

00:23:34.414 --> 00:23:37.668 align:center
இல்லை, உண்மையைக் கூற வேண்டுமெனில்
கொஞ்சம் அசௌகரியமாக உள்ளது…

00:23:37.751 --> 00:23:39.711 align:center
அதாவது, நீதான் என்னை அழைத்தாய்.

00:23:39.795 --> 00:23:42.548 align:center
பிறகு நான் செக்ஸியான உடை மாற்றிக்கொண்டு,
குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் நபரை வர சொல்லி…

00:23:42.631 --> 00:23:45.092 align:center
- சாம். சாம்.
- …எக்ஸ்ஃபோலியேட் செய்தேன்.

00:23:45.634 --> 00:23:46.468 align:center
சாம்.

00:23:46.552 --> 00:23:47.553 align:center
மன்னித்துவிடு.

00:23:48.762 --> 00:23:51.223 align:center
சரியா? நீ போவதை நான் விரும்பவில்லை.

00:23:55.936 --> 00:23:57.354 align:center
உண்மையைச் சொல்.

00:23:57.437 --> 00:23:59.857 align:center
நாம் இதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்
என்று எப்போதாவது நினைத்துள்ளாயா?

00:24:03.318 --> 00:24:04.820 align:center
கமான். சாம்.

00:24:07.030 --> 00:24:07.865 align:center
கமான்.

00:24:20.043 --> 00:24:22.421 align:center
இதை நாம் ஆறு மாதங்களாகச்
செய்து வருகிறோம்,

00:24:23.922 --> 00:24:25.716 align:center
ஆனால் இன்னும் இதில் உறுதியாகவில்லை.

00:24:28.343 --> 00:24:31.054 align:center
நான் பெய்லியில் கொண்டு வந்த
வருமானங்கள் தெரியும்தானே?

00:24:31.138 --> 00:24:32.806 align:center
அவற்றில் பாதி கிளையன்டுகளைக் கொண்டு வர முடியும்,

00:24:32.890 --> 00:24:34.975 align:center
அவற்றை டெக்ஸாஸ் எண்ணெய்
நிறுவனங்களுடன் சேர்த்தால்,

00:24:35.058 --> 00:24:38.228 align:center
ஓராண்டுக்குள் என்னால் அரை பில்லியன் டாலர்
ஈட்ட முடியும். நம் இருவருக்குமே லாபம்தான்.

00:24:38.312 --> 00:24:39.855 align:center
நீ இன்னும் எங்கள் அசோசியேட் யாருடனும்
உடலுறவு கொள்ளவில்லை.

00:24:41.231 --> 00:24:43.317 align:center
ஜாக் அனைவருக்கும் கால் செய்கிறார்.
யாரும் உன்னைப் பணியமர்த்த அனுமதிக்கப்படவில்லை.

00:24:43.400 --> 00:24:45.861 align:center
கமான், மான்டி. நான்தான் இந்த வேலையை உனக்கு
வாங்கிக் கொடுத்தேன். என்னைப் பணியமர்த்து.

00:24:45.944 --> 00:24:47.154 align:center
அவர் அனைவரிடமும் பேசுகிறார், நண்பா.

00:24:47.237 --> 00:24:49.656 align:center
ஜாக் அனைவரிடமும் பேசுவது
எனக்குத் தெரியும்.

00:24:49.740 --> 00:24:51.825 align:center
ஜாக் கிடக்கிறார். அவருக்கு இங்கே
எந்த நண்பரும் இல்லை.

00:24:51.909 --> 00:24:53.827 align:center
அது நல்ல விஷயம்.

00:24:53.911 --> 00:24:55.245 align:center
என்னால் ஜாக்கைக் கோபப்படுத்த முடியாது.

00:24:55.329 --> 00:24:57.748 align:center
இப்போது தொழில்நுட்பத் துறையில் நாங்கள்
சந்தித்த நஷ்டத்தில் கண்டிப்பாக முடியாது.

00:24:57.831 --> 00:24:59.583 align:center
கொஞ்ச காலமாகவே உங்களை
இங்கே இழுக்க விரும்பினேன்.

00:24:59.666 --> 00:25:02.753 align:center
- அது…
- உங்கள் கோரக் கூடாத காலம் என்ன, 90 நாட்களா?

00:25:02.836 --> 00:25:05.005 align:center
நீ ஒரு காலத்தில் இந்த இடத்தில் இருந்தாய், மான்டி,
நான் அங்கே இருந்தேன்.

00:25:05.088 --> 00:25:07.049 align:center
- ஆம், தெரியும்.
- இரண்டாண்டுகளா?

00:25:07.132 --> 00:25:08.967 align:center
நீங்கள் கையெழுத்திடும் முன் உங்கள் வக்கீலிடம்
அதைப் பார்க்கச் சொல்லவில்லையா?

00:25:09.051 --> 00:25:11.428 align:center
அவர்கள் எனக்கு அனுகூலமாக நடந்துகொண்டார்கள்,
என்ன சொல்வது?

00:25:11.512 --> 00:25:12.471 align:center
என் அறிவுரை வேண்டுமா?

00:25:12.554 --> 00:25:13.514 align:center
வேண்டாம்.

00:25:13.597 --> 00:25:15.474 align:center
கமான், கூப். அந்த ஒப்பந்தம் இருக்கும்போது
உங்களைப் பணியமர்த்த முடியாது.

00:25:15.557 --> 00:25:19.645 align:center
அந்த அவதூறு மறையும் வரை கொஞ்சம் ஓய்வெடு,
ஏனெனில் இப்போது உன்னை யாரும் எடுக்க மாட்டார்கள்.

00:25:19.728 --> 00:25:22.564 align:center
துபாயிலிருந்து வரும் குடும்ப அலுவலகங்களில்
ஒன்றை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்.

00:25:22.648 --> 00:25:25.275 align:center
அவர்கள் உங்கள் ஒப்பந்தம் பற்றியோ, அந்தப் பெண்ணுடனான
பிரச்சினை பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.

00:25:25.359 --> 00:25:26.777 align:center
அது ஒரு பிரச்சினையே இல்லை.

00:25:26.860 --> 00:25:29.196 align:center
இருந்தாலும் கவலையில்லை என்கிறேன்.

00:25:29.863 --> 00:25:32.616 align:center
கூப், கமான், அப்படி இருக்காதே.

00:25:53.303 --> 00:25:54.388 align:center
தாமதத்திற்கு வருந்துகிறேன்.

00:25:55.013 --> 00:25:56.014 align:center
வழக்கமானதைக் கொடு.

00:25:58.559 --> 00:26:00.310 align:center
நாளை மில்லர் பார்ட்டிக்கு வருகிறாயா?

00:26:01.144 --> 00:26:02.396 align:center
அழைத்துள்ளனர், ஏன் வர மாட்டேன்?

00:26:04.022 --> 00:26:05.107 align:center
ஒன்றுமில்லை.

00:26:05.190 --> 00:26:08.610 align:center
மெல்லும் நிக்கும் இருப்பார்கள் என்று எல்லா
சமூக சூழல்களையும் புறக்கணித்தால்,

00:26:08.694 --> 00:26:11.488 align:center
- வீட்டை விட்டே வெளியே வர முடியாது.
- ஹேய், நான் உன் அணிதான்.

00:26:12.197 --> 00:26:14.867 align:center
- இதில் அணிகள் எல்லாம் இல்லை.
- பொய்.

00:26:21.331 --> 00:26:23.208 align:center
சரி, என்ன பிரச்சினை?

00:26:23.292 --> 00:26:24.293 align:center
என்ன?

00:26:25.335 --> 00:26:26.461 align:center
நீ உன் ஃபோனைப் பார்க்கவில்லை.

00:26:26.545 --> 00:26:28.422 align:center
உணவை வேகமாகச் சாப்பிடவில்லை.
ஏதோ பிரச்சினை.

00:26:35.512 --> 00:26:37.055 align:center
நான் கொஞ்ச காலம் வேலை செய்யவில்லை எனில் என்ன?

00:26:39.099 --> 00:26:40.434 align:center
ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?

00:26:40.517 --> 00:26:43.645 align:center
தெரியவில்லை, என் குழந்தைகளைப் பார்க்க இருக்கலாம்.
புத்தகம் படிக்கலாம்.

00:26:44.771 --> 00:26:46.106 align:center
நீ கூறுவது சில வாரங்கள்,

00:26:46.190 --> 00:26:47.774 align:center
- ஒருவேளை ஒரு மாதத்திற்கா?
- அதேதான்.

00:26:48.901 --> 00:26:49.902 align:center
அல்லது ஓராண்டிற்கு.

00:26:52.988 --> 00:26:56.783 align:center
கூப், எல்லா உரையாடல்களிலும்
ஒருவன் தேவையற்றதை நிறுத்திவிட்டு

00:26:56.867 --> 00:26:59.244 align:center
விஷயத்தைக் கூறும் நேரம் வரும்.

00:27:01.246 --> 00:27:02.789 align:center
என் வேலை போய்விட்டது.

00:27:08.212 --> 00:27:09.421 align:center
- யாருடன் உடலுறவு கொண்டாய்?
- ஹேய்.

00:27:09.505 --> 00:27:11.632 align:center
- ஏன் எடுத்த உடனே அதற்கு…
- இல்லை.

00:27:11.715 --> 00:27:13.967 align:center
நீ குடிகாரனோ இனவெறி பிடித்தவனோ இல்லை,
நீ அதிக லாபம் ஈட்டுகிறாய்,

00:27:14.051 --> 00:27:15.052 align:center
எனில் அது மட்டும்தான் மீதம்.

00:27:15.135 --> 00:27:16.970 align:center
கடவுளே, பார்னி, கமான்.

00:27:18.889 --> 00:27:21.517 align:center
ஜாக் என்னை இப்படி கடினமான சூழலில் ஏன்
விட்டார் எனப் புரியவில்லை.

00:27:21.600 --> 00:27:23.393 align:center
அதாவது, அது குறைந்தபட்சம் சிறப்பானது.

00:27:23.477 --> 00:27:26.063 align:center
உன்னைத் துரத்திவிட்டு, கிளையன்டுகளை வைத்துக்கொள்ள
ஜாக் ஒரு வழியைக் கண்டறிந்தான். அது அப்படியா?

00:27:26.146 --> 00:27:28.190 align:center
- எது எப்படியா?
- குறைந்தபட்சம் சிறப்பானது.

00:27:29.358 --> 00:27:31.026 align:center
அவள் வேறு தளத்தில் வேலை செய்தாள்.

00:27:31.109 --> 00:27:32.653 align:center
- எனக்கு அவளைத் தெரியாது.
- உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?

00:27:32.736 --> 00:27:34.321 align:center
- வேறு யாருமேவா?
- அவள்தான் என்னிடம் வந்தாள்.

00:27:34.404 --> 00:27:36.532 align:center
- அது முக்கியமில்லை.
- அது முக்கியம்தான்.

00:27:37.324 --> 00:27:39.326 align:center
அது முக்கியமாக இருந்திருக்க வேண்டும்.

00:27:46.750 --> 00:27:48.043 align:center
பெய்லி செட்டில் செய்யும்.

00:27:48.126 --> 00:27:49.044 align:center
என்ன?

00:27:49.127 --> 00:27:50.671 align:center
பெய்லி ரஸ்ஸல் மீது வழக்கு போடு.
செட்டில் செய்வார்கள்.

00:27:51.255 --> 00:27:52.256 align:center
ஏன் அவர்கள் அப்படிச் செய்ய வேண்டும்?

00:27:52.339 --> 00:27:54.883 align:center
ஏனெனில் நீ குடிகாரனோ இனவெறி பிடித்தவனோ
இல்லை, நல்ல லாபம் ஈட்டியுள்ளாய்.

00:27:55.634 --> 00:27:57.594 align:center
அவர்கள் நீதிமன்றத்திற்குப் போவதை விரும்ப மாட்டார்கள்.
வழக்கு போடு.

00:27:57.678 --> 00:27:59.930 align:center
நீ என் பிசினஸ் நிர்வாகி, என் வக்கீல் இல்லை.

00:28:00.013 --> 00:28:01.306 align:center
உன் பிசினஸ் நிர்வாகியாக சொல்கிறேன்,

00:28:01.390 --> 00:28:03.517 align:center
நீ ஒரு வக்கீலை நியமிக்கும்படி
பரிந்துரைக்கிறேன்.

00:28:03.600 --> 00:28:06.228 align:center
என்னிடம் இருப்பதை வைத்து என்னால் எவ்வளவு
காலம் சமாளிக்க முடியும் என சொல்.

00:28:09.773 --> 00:28:10.858 align:center
உன் சேமிப்பா?

00:28:11.608 --> 00:28:13.402 align:center
ஆறு மாதங்கள். அதிகபட்சம் ஏழு மாதங்கள்.

00:28:13.485 --> 00:28:14.444 align:center
அது உண்மையாக இருக்க முடியாது.

00:28:14.528 --> 00:28:18.031 align:center
ஜீவனாம்சம், குழந்தைகளுக்கான உதவி, இரண்டு வீடுகள்,
கார்கள், தனியார் பள்ளிகள்,

00:28:18.115 --> 00:28:20.993 align:center
உன் சகோதரியைப் பற்றிக் கூறவே வேண்டாம்,
இதெல்லாம் உடனே கூறுவது மட்டும்.

00:28:22.578 --> 00:28:23.537 align:center
ஜாக் செட்டில் செய்வான்.

00:28:23.620 --> 00:28:27.583 align:center
ஜாக் என்னை அழித்துவிடுவான். அவர்களுக்கு
எதிராக என்னால் போராட முடியாது.

00:28:27.666 --> 00:28:29.418 align:center
நீ அதைச் செய்யாமல்தான் இருக்க முடியாது.

00:28:32.838 --> 00:28:34.464 align:center
என்னிடம் நிறைய இருந்ததாக நினைத்தேன்.

00:28:36.592 --> 00:28:39.511 align:center
இருந்தது. பிறகு போன ஆண்டில் தொழில்நுட்பப்
பங்குகளில் நஷ்டமடைந்தாய்.

00:28:39.595 --> 00:28:41.722 align:center
போன ஆண்டில் அனைவரும் தொழில்நுட்பத்தில்
நஷ்டமடைந்தனர்.

00:28:41.805 --> 00:28:44.391 align:center
அனைவரும் விவாகரத்து வாங்கவில்லை அல்லது
சக பணியாளருடன் உடலுறவு கொள்ளவில்லை.

00:28:45.058 --> 00:28:47.394 align:center
- நீ மான்டியைப் பார்க்க வேண்டும்.
- பார்த்தேன். லான்ஸையும் பார்த்தேன்.

00:28:48.812 --> 00:28:52.316 align:center
- வேலைக்காகவில்லையா?
- எனக்கு இரண்டாண்டு கோரக் கூடாத ஒப்பந்தம் உள்ளது.

00:28:55.235 --> 00:28:56.236 align:center
தெரியும்.

00:29:09.958 --> 00:29:11.668 align:center
கூப், என்ன குடிக்கிறாய்?

00:29:12.920 --> 00:29:13.754 align:center
அதை விடு.

00:29:13.837 --> 00:29:16.423 align:center
என்னிடம் 15 ஆண்டு கால ஜப்பானீஸ் விஸ்கி உள்ளது,
நீ குடித்துப் பார்.

00:29:16.507 --> 00:29:17.716 align:center
இரண்டு.

00:29:22.095 --> 00:29:23.013 align:center
சீயர்ஸ்.

00:29:27.017 --> 00:29:28.477 align:center
ஸ்மூத்தாக உள்ளதல்லவா?

00:29:29.186 --> 00:29:30.270 align:center
ஆம்.

00:29:31.188 --> 00:29:32.606 align:center
எனவே…

00:29:34.858 --> 00:29:35.859 align:center
சிங்கிள் வாழ்க்கை எப்படி உள்ளது?

00:29:37.236 --> 00:29:40.030 align:center
அதற்கான பலன்கள் உள்ளன.

00:29:40.697 --> 00:29:44.076 align:center
பொய். நிறைய பெண்களுடன்
இருந்திருப்பாயே.

00:29:44.159 --> 00:29:45.953 align:center
கமான், கொஞ்சம் சொல்.
நேரடியாகக் கேட்போம்.

00:29:47.079 --> 00:29:51.083 align:center
ஹேய், இந்த ஆண்டு மீண்டும் புற்றுநோய்க்கான
நிதிதிரட்டலை நடத்துகிறேன்,

00:29:51.166 --> 00:29:53.460 align:center
போன வருடம் போல உனக்கு
இரண்டு மேசைகள் பதிவுசெய்துள்ளேன்.

00:29:53.544 --> 00:29:55.003 align:center
அவற்றுக்கு எவ்வளவு ஆகும்?

00:29:55.087 --> 00:29:56.713 align:center
முப்பதாயிரம். இரண்டுக்கு அறுபது.

00:29:58.340 --> 00:29:59.925 align:center
கமான், போன ஆண்டு இரண்டு மேசைகள் வாங்கினாய்.

00:30:00.008 --> 00:30:02.678 align:center
ஆம், அப்போது எனக்கு விவாகரத்தாகவில்லை, பீட்டர்.

00:30:04.471 --> 00:30:05.973 align:center
ஆம், சரிதான். மன்னித்துவிடு.

00:30:07.057 --> 00:30:08.058 align:center
நான் யோசிக்கவில்லை.

00:30:08.141 --> 00:30:10.143 align:center
உன்னை அதுபோன்ற சூழலில்
தள்ளியிருக்கக் கூடாது.

00:30:13.397 --> 00:30:15.107 align:center
நான் அந்த மேசைகளை எடுத்துக்கொண்டு,
உன் பெயரை நீக்கிவிடுகிறேன்.

00:30:15.190 --> 00:30:16.149 align:center
வேண்டாம்.

00:30:17.818 --> 00:30:19.820 align:center
- நிச்சயமாகவா?
- ஆம், பரவாயில்லை.

00:30:20.696 --> 00:30:22.281 align:center
வெறுக்கக்கூடியவனாக இருக்க முயற்சிக்கவில்லை.

00:30:23.198 --> 00:30:25.534 align:center
சிலருக்கு அது இயல்பாகவே வரும்.

00:30:26.743 --> 00:30:27.744 align:center
போய்த் தொலை.

00:30:32.666 --> 00:30:34.084 align:center
ஹேய்…

00:30:35.169 --> 00:30:36.420 align:center
அது பரவாயில்லைதானே?

00:30:37.171 --> 00:30:38.297 align:center
நாம் அனைவரும் பெரியவர்கள்.

00:30:40.007 --> 00:30:43.468 align:center
- நிச்சயமாக. பரவாயில்லை.
- நல்ல சரக்கு.

00:30:49.975 --> 00:30:52.144 align:center
வெளியே ஆபத்தில் வாழ்வது.

00:31:00.110 --> 00:31:01.320 align:center
- இருபத்து ஐந்து கொடுங்கள்.
- இதோ.

00:31:01.403 --> 00:31:02.404 align:center
நன்றி.

00:31:09.786 --> 00:31:12.873 align:center
மூன்று முறை என்பிஏ ஆல்-ஸ்டார்.
என்ன செய்யப் போகிறாய்?

00:31:15.626 --> 00:31:17.044 align:center
ஆம்.

00:31:18.712 --> 00:31:20.214 align:center
அவன் குடிப்பதைக் கொடுங்கள்,
ஆனால் நிறைய.

00:31:20.297 --> 00:31:21.381 align:center
இதோ.

00:31:23.550 --> 00:31:24.384 align:center
கூப் அணி?

00:31:39.691 --> 00:31:40.901 align:center
இன்னொன்று.

00:31:42.027 --> 00:31:43.946 align:center
நான் பீட்டரிடம்

00:31:44.029 --> 00:31:46.406 align:center
அவர்களுக்கு நம்மிடம் எந்த வேலையும்
இல்லாமல் போவதற்குள்

00:31:46.490 --> 00:31:49.326 align:center
நாம் குழந்தைகளுடன் போக வேண்டும்
என்றேன், ஏனெனில்

00:31:49.409 --> 00:31:52.412 align:center
பிறகு நாம் என்ன செய்வது?
ஒருவருக்கொருவர் பேசுவதா?

00:31:53.247 --> 00:31:55.457 align:center
எங்களுக்கு திருமணமாகி நீண்டகாலம் ஆகிவிட்டது.

00:32:12.891 --> 00:32:15.894 align:center
சனிக்கிழமை நாங்கள் பெலிஸுக்குச் செல்கிறோம்.

00:32:15.978 --> 00:32:18.939 align:center
கடற்கரையில் இருக்கும் அழகான
வில்லாவைக் கண்டறிந்தேன்.

00:32:19.022 --> 00:32:20.774 align:center
அருகிலேயே குழந்தைகளுக்கேன தனி வில்லா,

00:32:20.858 --> 00:32:22.734 align:center
- அப்போதுதான் எங்களுக்கு தொந்தரவு இருக்காது.
- இதோ வருகிறேன்.

00:32:22.818 --> 00:32:25.779 align:center
ஆனால் அவர்களைப் பார்ப்போம் எனத் தெரியும்,
ஏனெனில் எங்களிடம்தான் சமையல்காரரும்

00:32:25.863 --> 00:32:27.573 align:center
டைனிங் அறையும் இருக்கும்,
எனவே அவர்களுக்குப் பசிக்கும்போது…

00:32:28.407 --> 00:32:31.618 align:center
அதாவது, டர்ட்டில் இன்னுக்கு அதை
எது தாக்கப் போகிறது எனத் தெரியாது.

00:32:31.702 --> 00:32:33.245 align:center
எப்படி இருக்கிறாய், கூப்? நலமா?

00:32:33.954 --> 00:32:35.706 align:center
நலம்தான், மெல். எப்படி இருக்கிறாய்?

00:32:37.124 --> 00:32:38.125 align:center
ஆம்.

00:32:41.545 --> 00:32:44.506 align:center
ஹேய், நீங்கள் இருவரும்,

00:32:44.590 --> 00:32:46.508 align:center
நீங்கள் நட்பான விவாகரத்து பெற்றது
எனக்குப் பிடித்துள்ளது.

00:32:46.592 --> 00:32:47.843 align:center
டயேன்.

00:32:47.926 --> 00:32:49.970 align:center
இல்லை, நிஜமாகத்தான்.

00:32:50.053 --> 00:32:52.764 align:center
மைக்கும் கெய்லும் விவாகரத்தானது நினைவுள்ளதா?
இங்கே உலகப் போரே நடந்தது போலிருந்தது.

00:32:52.848 --> 00:32:54.016 align:center
நினைவுள்ளதா?

00:32:54.099 --> 00:32:55.475 align:center
அவர்களால் ஒரே அறையில் கூட
ஒன்றாக இருக்க முடியாது.

00:32:55.559 --> 00:32:57.060 align:center
ஒரே ஊரில் கூட இருக்க முடியாது.

00:32:57.144 --> 00:32:58.145 align:center
இல்லையா?

00:32:58.937 --> 00:33:02.399 align:center
சாம், நீயும் பாலும் இவற்றை நட்பாக
வைத்துக்கொள்ள முடியும் என நினைக்கிறாயா?

00:33:03.192 --> 00:33:04.568 align:center
வாய்ப்பே இல்லை,

00:33:04.651 --> 00:33:07.696 align:center
ஆனால் அனைவருக்கும் முன்
அப்படிக் கேட்டதற்கு நன்றி.

00:33:07.779 --> 00:33:11.950 align:center
நான்… நீங்கள் அனைத்தையும் நன்றாகக்
கையாண்டதை ரசிக்கிறேன்.

00:33:12.034 --> 00:33:15.120 align:center
நாம் விவாகரத்து வாங்கும்போது
நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.

00:33:15.204 --> 00:33:16.622 align:center
அவ்வளவுதான்.
இத்தோடு நிறுத்திக்கொள்.

00:33:16.705 --> 00:33:17.664 align:center
நான்…

00:33:19.708 --> 00:33:20.667 align:center
அது அற்புதமானது என நினைக்கிறேன்…

00:33:24.713 --> 00:33:26.757 align:center
நாம் அனைவரும் ஞானம் பெற்றிருப்பது…

00:33:27.758 --> 00:33:29.134 align:center
- பார்த்தீர்களா?
- …புரிகிறதா?

00:33:29.968 --> 00:33:33.180 align:center
அதாவது, மெல்… ஆம், மெல்லும் நிக்கும்
கள்ளத்தொடர்பு வைத்து, எங்கள் திருமணத்தை முடித்தனர்,

00:33:33.263 --> 00:33:36.934 align:center
எங்கள் குழந்தைகள் எவ்வளவு மோசமாக இருப்பார்கள்
என்று காலம் சொல்லும்,

00:33:37.017 --> 00:33:41.438 align:center
ஆனால், இந்த விஷயத்தில் நீங்கள் அனைவரும்
அற்புதமாக உள்ளீர்கள்.

00:33:44.399 --> 00:33:45.776 align:center
அதாவது, எனக்குத் தெரிந்திருந்தால்…

00:33:54.034 --> 00:33:55.327 align:center
நான் சிறுநீர் கழிக்கப் போகிறேன்.

00:35:06.273 --> 00:35:07.608 align:center
அச்சச்சோ.

00:36:20.097 --> 00:36:23.809 align:center
அவள் எப்படிக் கொலை செய்யப்பட்டால் என நமக்குத்
தெரியாது. அந்த ஆயுதம்…

00:36:23.892 --> 00:36:25.352 align:center
அவள் மீது மெழுகுவர்த்தி தாங்கி
குத்தியிருந்தது.

00:36:26.353 --> 00:36:28.355 align:center
மெழுகுவர்த்தி தாங்கியா? நிச்சயமாகவா?

00:36:28.856 --> 00:36:30.023 align:center
கனமான வெள்ளியாலானது.

00:36:30.858 --> 00:36:32.734 align:center
- உனக்கு எப்படித் தெரியும்?
- மைக்ரோஸ்கோப்.

00:36:40.325 --> 00:36:41.827 align:center
இந்தா. இதை…

00:36:51.086 --> 00:36:53.172 align:center
உங்களுக்கு கொஞ்ச நேரம் எனது கார் வேண்டுமா?

00:36:53.255 --> 00:36:54.089 align:center
கண்டிப்பாக.

00:36:56.633 --> 00:36:59.678 align:center
கவனமாகக் கையாளவும்
உடையக்கூடியது

00:37:54.900 --> 00:37:55.734 align:center
- அடச்சே!
- கடவுளே.

00:37:55.817 --> 00:37:59.196 align:center
- அப்பா!
- என்ன… அடக் கடவுளே!

00:37:59.279 --> 00:38:01.156 align:center
நம்ப முடியவில்லை.

00:38:08.914 --> 00:38:10.874 align:center
- திரு. கூப்பர்.
- போய்விடு, ஜேக்.

00:38:10.958 --> 00:38:13.377 align:center
மன்னிக்கவும், சார். நீங்கள் இங்கே
வருவீர்கள் எனத் தெரியாது,

00:38:13.460 --> 00:38:15.003 align:center
சத்தியமாக… அடச்சே.

00:38:15.087 --> 00:38:17.798 align:center
அப்பா! என்ன செய்தீர்கள்? அடக் கடவுளே.

00:38:17.881 --> 00:38:19.842 align:center
- சார் என்று கூப்பிடாதே என்றேன்.
- நீ நலமா?

00:38:21.176 --> 00:38:22.970 align:center
உங்களுக்கு என்ன பிரச்சினை?

00:38:23.053 --> 00:38:24.930 align:center
- அடக் கடவுளே. அப்பா.
- நான் இதைப் பேச வேண்டும். ஹேய்.

00:38:25.722 --> 00:38:28.183 align:center
- இல்லை, புரூஸ், மன்னிக்கவும். என்ன?
- என்னை அவர்…

00:38:28.976 --> 00:38:31.478 align:center
- நான் என்ன செய்ய வேண்டும்? என்ன தேவை?
- கடவுளே. ஆம்.

00:38:31.562 --> 00:38:33.814 align:center
- அதாவது, பத்து நிமிடங்களில் இருப்பேன்.
- உங்களுக்குப் பைத்தியமா?

00:38:33.897 --> 00:38:35.732 align:center
ஆம், மன்னித்துவிடு. பை.

00:38:35.816 --> 00:38:39.695 align:center
அதில்… கொஞ்சம் ஐஸ் வை.
சரியாகிவிடும்.

00:38:43.907 --> 00:38:47.452 align:center
இது நிஜமானதாகத் தெரிகிறது

00:38:50.372 --> 00:38:54.877 align:center
நீ நிஜமானதாகத் தெரிகிறாய்

00:38:55.752 --> 00:39:01.008 align:center
என் போலியான காதலே

00:39:06.013 --> 00:39:07.014 align:center
ஹேய், புரூஸ்.

00:39:07.097 --> 00:39:08.932 align:center
- வந்ததற்கு நன்றி, கூப்.
- உனக்குத் தெரியும்.

00:39:09.016 --> 00:39:12.352 align:center
ஆனால் என்னால்
யோசிக்காமல் இருக்க முடியவில்லை

00:39:14.897 --> 00:39:19.318 align:center
இதிலிருந்து வெளியேறிச் செல்ல முடியும்

00:39:20.611 --> 00:39:26.241 align:center
இவற்றை விட்டுவிட்டுச் சென்றிருக்க முடிந்தால்

00:39:28.243 --> 00:39:29.119 align:center
ஹேய், ஆண்டி.

00:39:30.329 --> 00:39:31.538 align:center
புரூஸ் எனக்கு கால் செய்தான்.

00:39:31.622 --> 00:39:32.873 align:center
ஆம், கால் செய்வான் எனத் தெரியும்.

00:39:33.874 --> 00:39:35.459 align:center
எப்படியும் நான் வீட்டுக்கு போக கார் வேண்டும்.

00:39:36.126 --> 00:39:37.127 align:center
இங்கே எப்படி வந்தாய்?

00:39:37.211 --> 00:39:38.295 align:center
நடந்து வந்தேன்.

00:39:38.921 --> 00:39:39.880 align:center
மீண்டும் உன் மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லையா?

00:39:40.756 --> 00:39:42.633 align:center
ஒரு விஷயத்தை கொஞ்சம் உணர விரும்பினேன்,
புரிகிறதா?

00:39:43.425 --> 00:39:44.259 align:center
எப்படி உணர்கிறாய்?

00:39:45.427 --> 00:39:46.637 align:center
மோசமாக உணர்கிறேன்.

00:39:47.804 --> 00:39:48.805 align:center
உன் நாள் எப்படி இருந்தது?

00:39:49.890 --> 00:39:51.099 align:center
அதேதான்.

00:39:51.683 --> 00:39:54.144 align:center
நீ பார்க்க சிறப்பாக இல்லை,
அதையும் நான் கூறுகிறேன்.

00:39:54.770 --> 00:39:56.021 align:center
கமான். வீட்டுக்குப் போகலாம்.

00:40:05.113 --> 00:40:06.448 align:center
அவன் என்னை இன்னும் நேசிக்கிறான்.

00:40:06.532 --> 00:40:08.200 align:center
கண்ணே, அவனுக்கு மனைவியும்
இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

00:40:08.283 --> 00:40:09.701 align:center
எல்லோருக்கும் ஏதாவது இருக்கும்.

00:40:10.202 --> 00:40:12.454 align:center
இங்கே என்ன வாசித்துக்கொண்டிருந்தாய்?
தி ஸ்மாஷிங் பம்ப்கின்ஸா?

00:40:13.455 --> 00:40:15.332 align:center
ரேடியோஹெட், முட்டாளே.

00:40:16.500 --> 00:40:19.253 align:center
சரி. ஆம். கமான்.

00:40:24.091 --> 00:40:25.092 align:center
ஹேய்.

00:40:28.637 --> 00:40:29.638 align:center
உனக்கு ஒன்றுமில்லை.

00:40:32.975 --> 00:40:34.601 align:center
இதை என்னிடம் கொடு. உள்ளே ஏறு.

00:40:38.313 --> 00:40:39.940 align:center
- புது காரா?
- இரவல் வாங்கியது.

00:40:40.440 --> 00:40:41.692 align:center
விளையாடாதே.

00:40:56.707 --> 00:40:58.000 align:center
நான் பிரச்சினையில் இருக்கிறேன், ஆலி.

00:40:59.793 --> 00:41:00.627 align:center
எவ்வளவு மோசம்?

00:41:02.462 --> 00:41:05.716 align:center
நீ உன் அபார்ட்மெண்ட்டை காலி செய்து, அம்மா அப்பாவுடன்
போக வேண்டியிருக்கலாம்.

00:41:07.509 --> 00:41:08.510 align:center
பாவம் அவர்கள்.

00:41:10.888 --> 00:41:12.598 align:center
ஆம். உன் மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை
என்றால்தான்.

00:41:12.681 --> 00:41:14.474 align:center
உறுதியளிக்க முடியாது.

00:41:17.227 --> 00:41:19.354 align:center
- இந்த கார் நாறுகிறது.
- கடவுளே, தெரியும்.

00:41:19.438 --> 00:41:20.981 align:center
இதில் ஏதோ இறந்தது போலுள்ளது.

00:41:43.128 --> 00:41:45.047 align:center
லிவ். லிவ்.

00:41:46.006 --> 00:41:48.425 align:center
ஒரு… உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.

00:41:48.509 --> 00:41:51.553 align:center
பாருங்கள்… உங்களுக்கு நடந்ததற்கு
மிகவும் வருந்துகிறேன்.

00:41:51.637 --> 00:41:52.888 align:center
உங்களைப் பணிநீக்கம் செய்தது மோசம்.

00:41:54.890 --> 00:41:57.267 align:center
- நீ நிஜமாக அப்படி உணர்கிறாயா?
- கண்டிப்பாக.

00:41:57.351 --> 00:41:59.770 align:center
எனில், நீ உன் புகாரை திரும்பப் பெற்றுக்கொள்கிறாயா?

00:42:00.354 --> 00:42:03.273 align:center
அதாவது, நீ புகாரைத் திரும்பப் பெற்று, வழக்கிற்கு
மாறாக பெய்லியிடம் இழப்பீடு பெறலாம்.

00:42:03.357 --> 00:42:05.150 align:center
- எனக்கு என் வேலை கிடைக்கும்.
- என்ன?

00:42:05.234 --> 00:42:09.071 align:center
நான் உன்னிடம் எந்த விதத்திலாவது தவறாக
நடந்துகொண்டிருந்தால், மன்னித்துவிடு.

00:42:09.154 --> 00:42:10.781 align:center
நாம் இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக நினைத்தேன்.

00:42:10.864 --> 00:42:12.908 align:center
இருங்கள். நிறுத்துங்கள். நான்…

00:42:12.991 --> 00:42:14.701 align:center
நீங்கள் என்ன பேசுகிறீர்கள் எனத் தெரியவில்லை.

00:42:16.495 --> 00:42:18.497 align:center
நான் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

00:42:31.802 --> 00:42:33.470 align:center
கூப். அவர் அழைப்பில் இருக்கிறார்.

00:42:33.554 --> 00:42:34.680 align:center
பரவாயில்லை, மேரி.

00:42:36.598 --> 00:42:39.268 align:center
- எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை.
- கூப். நீ இங்கே வரக் கூடாது.

00:42:39.351 --> 00:42:40.936 align:center
லிவ் கிராஸ் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.

00:42:41.019 --> 00:42:42.729 align:center
அது ஹெச்ஆர் பிரச்சினை. என்னிடம்
கூறியதுதான் எனக்குத் தெரியும்.

00:42:42.813 --> 00:42:43.981 align:center
பொய், ஜாக். நீதான் இதைச் செய்துள்ளாய்.

00:42:44.064 --> 00:42:46.233 align:center
நீ நிறுவனக் கொள்கையை மீறினாய்.
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

00:42:46.316 --> 00:42:48.527 align:center
நீ என் கிளையன்டுகளை அபகரிப்பதற்கான வாய்ப்பைப்
பார்த்தாய், எனக்கு துரோகம் செய்துவிட்டாய்.

00:42:49.528 --> 00:42:50.571 align:center
நீயேதான் உன்னை அழித்துக்கொண்டாய்.

00:42:50.654 --> 00:42:51.697 align:center
நாம் நண்பர்கள் என நினைத்தேன்.

00:42:55.033 --> 00:42:57.160 align:center
குறைந்தபட்சம் என் கேபிடல் கணக்கையாவது
என்னிடம் கொடு.

00:42:57.911 --> 00:42:59.872 align:center
கெஞ்சிக் கேட்கிறேன். அது என் பணம்.
எனக்கு அது தேவை.

00:42:59.955 --> 00:43:01.582 align:center
அது உன்னுடையது இல்லை.

00:43:03.292 --> 00:43:06.879 align:center
இது எல்லாம் உன்னுடையது என நினைத்ததுதான்
உன் பெரிய தவறு.

00:43:07.754 --> 00:43:08.964 align:center
சரி, சரி.

00:43:13.093 --> 00:43:15.095 align:center
உன்னால் வைத்துக்கொள்ள முடியவில்லை எனில்,
அது உன்னுடையது இல்லை.

00:43:35.866 --> 00:43:38.118 align:center
அந்த அழகான மோட்டாரை
நீ நாசம் செய்வதை அனுமதிக்க முடியாது.

00:43:38.994 --> 00:43:40.120 align:center
சரி, அதை ஸ்டார்ட் செய்.

00:44:06.939 --> 00:44:07.940 align:center
இந்தா.

00:44:20.494 --> 00:44:22.120 align:center
டோரியின் காதலன் எப்படி இருக்கிறான்?

00:44:24.581 --> 00:44:26.917 align:center
- ஜேக்தானே?
- சரிதான்.

00:44:28.335 --> 00:44:29.378 align:center
பிழைத்துக்கொள்வான்.

00:44:30.879 --> 00:44:31.880 align:center
டோரி?

00:44:34.341 --> 00:44:36.885 align:center
நீ கொஞ்ச நாள் பொறுக்க வேண்டும்.
நான் முயல்கிறேன்.

00:44:43.100 --> 00:44:44.351 align:center
நீ நீயாக இல்லை, கூப்.

00:44:46.979 --> 00:44:50.107 align:center
பார்பிக்யூ விஷயத்திற்கு வருந்துகிறேன்.
நான் கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டேன்.

00:44:50.190 --> 00:44:52.860 align:center
நான் பார்பிக்யூ பற்றிப் பேசவில்லை,
மேலும் நீ நம் மகளின் காதலனைத்

00:44:52.943 --> 00:44:54.528 align:center
தாக்கியதைப் பற்றியும் பேசவில்லை.

00:44:54.611 --> 00:44:56.738 align:center
- ஆனால், கடவுளே.
- வேறென்ன?

00:44:58.448 --> 00:44:59.533 align:center
தெரியவில்லை.

00:44:59.616 --> 00:45:01.285 align:center
நீ மிகவும்…

00:45:02.369 --> 00:45:03.370 align:center
தனிமையாகத் தெரிகிறாய்.

00:45:04.705 --> 00:45:09.877 align:center
ஆம், நான் இங்கே வசிக்கிறேன், நீ நம்
பிள்ளைகளுடன் நம் வீட்டில் வசிக்கிறாய்.

00:45:09.960 --> 00:45:12.796 align:center
- தெரியும்.
- என்னை விட்டுப் பிரிந்துவிட்டாய். அது என்னை…

00:45:14.965 --> 00:45:15.883 align:center
தனிமையானவனாக மாற்றும்.

00:45:15.966 --> 00:45:17.718 align:center
நான் அதைப் பற்றிப் பேசவில்லை.

00:45:19.720 --> 00:45:20.971 align:center
உன்னைப் பற்றிக் கவலைப்படுகிறேன்.

00:45:26.685 --> 00:45:27.686 align:center
ஹேய்.

00:45:29.521 --> 00:45:30.814 align:center
என்ன பிரச்சினை?

00:45:33.692 --> 00:45:35.903 align:center
கமான். நீ இப்போதும் என்னிடம் பேசலாம்தானே?

00:45:39.448 --> 00:45:40.449 align:center
நான் நலம்தான்.

00:45:42.034 --> 00:45:45.579 align:center
ஆம். நான் என் வாழ்க்கையைச்
சரிசெய்ய முயல்கிறேன்.

00:45:53.962 --> 00:45:54.963 align:center
சரி.

00:46:01.053 --> 00:46:02.054 align:center
நியாயம்தான்.

00:46:10.145 --> 00:46:11.396 align:center
வந்ததற்கு நன்றி.

00:46:12.856 --> 00:46:13.857 align:center
பீருக்கு நன்றி.

00:46:22.449 --> 00:46:23.450 align:center
மிஸ் கிராஸ்.

00:46:24.785 --> 00:46:27.788 align:center
- உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?
- நான் ஒரு விளக்கத்தை எதிர்பார்த்தேன்.

00:46:27.871 --> 00:46:29.081 align:center
ஆண்ட்ரூ கூப்பர் விஷயத்தில்.

00:46:29.164 --> 00:46:30.499 align:center
நான் புகார் அளிக்கவேயில்லை.

00:46:30.582 --> 00:46:33.710 align:center
யாரோ ஹெச்ஆரிடம் உங்கள்
ஈடுபாட்டைப் புகாரளித்துள்ளனர்.

00:46:33.794 --> 00:46:36.129 align:center
- ஆனால் நான் புகாரளிக்கவேயில்லை.
- விஸ்கி?

00:46:36.213 --> 00:46:37.798 align:center
- வேண்டாம்.
- உட்காருங்கள்.

00:46:41.218 --> 00:46:44.555 align:center
அதை அதுபோலக் கூறியதற்கு வருந்துகிறேன்,
ஆனால் புகாரோ இல்லையோ,

00:46:44.638 --> 00:46:48.308 align:center
திரு. கூப்பர் நம் நிறுவனத்தின் நடத்தை விதியை
நேரடியாக மீறியுள்ளார்.

00:46:48.392 --> 00:46:49.643 align:center
அவர் அதிகாரமுள்ள பதவியில் இருக்கிறார்,

00:46:49.726 --> 00:46:52.312 align:center
நாம் நமது பாதுகாப்புகளை
தீவிரமாக எடுத்துக்கொள்வோம்.

00:46:52.396 --> 00:46:54.273 align:center
அவர் என் ஆர்க் சார்ட்டில் இருந்ததே இல்லை.

00:46:54.356 --> 00:46:55.941 align:center
அவருக்கு அறிக்கையிடும் எவருக்கும்
நான் அறிக்கையிடுவதில்லை.

00:46:56.024 --> 00:46:58.360 align:center
அதற்கு அவர் நினைத்தால் உங்களை
பணிநீக்கம் செய்ய முடியாது என்று அர்த்தமா?

00:46:58.986 --> 00:47:00.153 align:center
அவர் வேலையை இழக்க வேண்டியதில்லை.

00:47:01.405 --> 00:47:04.908 align:center
அதற்கு மாறாகக் கூறும் நிறைய வக்கீல்கள்
என் கான்ஃபிரன்ஸ் அறையில் உள்ளனர்.

00:47:09.496 --> 00:47:12.457 align:center
நீங்கள் ஒரு ஸ்டார் என்று ஷெஃபர்ட் கூறினார். உங்களை
ப்ரொமோஷனுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறார்.

00:47:12.541 --> 00:47:15.043 align:center
உங்களுக்கென ஒரு அலுவலகம் கொடுக்க விரும்புகிறார்.
அதற்குத் தயாரா?

00:47:15.127 --> 00:47:17.004 align:center
அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

00:47:17.087 --> 00:47:18.797 align:center
நான் இதை முடித்துவிட்டேன்.
அதற்கு வந்துவிட்டேன்.

00:47:19.506 --> 00:47:23.594 align:center
எனக்கு கூப்பின் கடந்தகாலத்தைவிட, உங்கள்
எதிர்காலத்தில் அதிக ஆர்வமுள்ளது.

00:47:28.223 --> 00:47:30.559 align:center
ஒன்று சொல்கிறேன். எனக்கு கொஞ்ச நேரத்தில்
ஒரு ஃபோன் கால் உள்ளது.,

00:47:30.642 --> 00:47:33.854 align:center
ஆனால் இந்த வாரத்தில் நாம் டின்னரில்
சந்தித்துப் பேசுவோம்.

00:47:33.937 --> 00:47:35.439 align:center
மேரி உங்களது நேரங்களைப்
பார்த்துக்கொள்வார்.

00:47:36.148 --> 00:47:37.858 align:center
ஷெஃபர்ட் நம்முடன் வர வேண்டாமா?

00:47:40.235 --> 00:47:41.820 align:center
ஷெஃபர்ட் கண்டிப்பாக வரலாம்.

00:47:45.407 --> 00:47:46.241 align:center
நன்றி.

00:48:57.771 --> 00:48:59.773 align:center
கூப்
அது நடக்க ஆசைதான்

00:49:49.364 --> 00:49:51.200 align:center
சரி, உன்னிடம் எல்லாம்…

00:49:51.283 --> 00:49:52.951 align:center
குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்த்ததில்,

00:49:53.035 --> 00:49:56.330 align:center
வாழ்க்கையானது பின்னிப் பிணைந்துள்ள
தீர்மானங்களின் தொடருக்குக் குறைந்துவிட்டது.

00:49:56.914 --> 00:49:58.790 align:center
மில்லர் குடும்பம் பெலிஸுக்குச் செல்லத்
தீர்மானித்தனர்.

00:50:01.001 --> 00:50:02.669 align:center
நான் மில்லர் குடும்பத்தின் வீட்டுக்குச்
செல்லத் தீர்மானித்தேன்.

00:50:08.884 --> 00:50:11.512 align:center
வெஸ்ட்மான்ட் வில்லேஜுக்கு தனிப்பட்ட
பாதுகாப்பு ரோந்துப்படை உள்ளது,

00:50:11.595 --> 00:50:13.639 align:center
அத்துடன் வெஸ்ட்மாண்ட் போலீஸ் துறையும்.

00:50:14.389 --> 00:50:16.558 align:center
இங்கே குற்றம் என்பதே கிட்டத்தட்ட நடக்காது.

00:50:18.393 --> 00:50:20.229 align:center
இதுபோன்ற இடத்தில் நீண்ட காலம் வசித்தால்,

00:50:20.312 --> 00:50:22.689 align:center
மீதமுள்ள உலகிடமிருந்து தனித்திருப்பதாக
உணரத் தொடங்குவீர்கள்.

00:50:23.440 --> 00:50:26.527 align:center
நீங்கள் அலார அமைப்புகள்,
எல்லாக் கதவுகளையும் பூட்டுவது

00:50:27.236 --> 00:50:28.695 align:center
போன்ற விஷயங்களில் பதட்டப்பட மாட்டீர்கள்.

00:51:16.243 --> 00:51:18.912 align:center
பாடெக் ஃபிலிப் நாடிலஸ்:
சீல் செய்யப்பட்ட 18 கேரட் வெள்ளைத் தங்கம்,

00:51:18.996 --> 00:51:19.997 align:center
நீல சன்பர்ஸ்ட் டயல்,

00:51:20.080 --> 00:51:23.667 align:center
30 மீட்டர் வரை நீர் எதிர்ப்பு,
அப்படி நடக்கும் என்பது போல.

00:51:23.750 --> 00:51:27.004 align:center
விளம்பரங்களில் வருவது போல, “நீங்கள்
பாடெக் ஃபிலிப்பைச் சொந்தமாக வைத்திருப்பதில்லை

00:51:27.087 --> 00:51:29.590 align:center
அதை அடுத்த தலைமுறைக்காகப்
பார்த்துக்கொள்கிறீர்கள்.”

00:51:32.134 --> 00:51:34.428 align:center
அடுத்த தலைமுறை தங்கள் ஃபோன்களில்
நேரம் பார்ப்பார்கள்,

00:51:34.511 --> 00:51:36.388 align:center
எனவே யாரும் இதைக் காணவில்லை
எனத் தேட மாட்டார்கள்.

00:52:18.847 --> 00:52:20.641 align:center
ஹாய். எல்லாம் நலமா?

00:52:20.724 --> 00:52:22.643 align:center
குட் ஈவ்னிங், சார்.
நீங்கள் இங்கே வசிக்கிறீர்களா?

00:52:22.726 --> 00:52:23.977 align:center
ஆம், கண்டிப்பாக.

00:52:24.061 --> 00:52:26.188 align:center
இன்றிரவிலிருந்து உங்கள் வீடானது, விடுமுறைக்காலக்
கண்காணிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

00:52:26.271 --> 00:52:29.399 align:center
தெருவில் ஹோண்டா நிற்பதையும், வீட்டில்
லைட் எரிவதையும் பார்த்தோம்…

00:52:29.483 --> 00:52:30.567 align:center
எனவே வந்து பார்த்தோம்.

00:52:32.819 --> 00:52:34.196 align:center
அது என் மகனது கார்.

00:52:34.279 --> 00:52:36.615 align:center
புறப்படுவதற்குள் அதை கேரேஜில்
போடும்படி கூறினேன்.

00:52:36.698 --> 00:52:37.908 align:center
நீங்கள் விடுமுறையில் செல்கிறீர்களா?

00:52:37.991 --> 00:52:39.868 align:center
ஆம். நாளை காலையில்.

00:52:39.952 --> 00:52:42.579 align:center
என் மனைவி உங்களுக்கு கால் செய்தபோது,
தவறான தேதியைக் கூறியிருக்க வேண்டும்.

00:52:42.663 --> 00:52:46.166 align:center
- கவலை வேண்டாம். மகிழ்ச்சியாக சென்று வாருங்கள்.
- நன்றி.

00:52:46.250 --> 00:52:47.668 align:center
மிக்க நன்றி.

00:53:07.771 --> 00:53:09.273 align:center
நான் என்ன நினைத்தேன் எனத் தெரியவில்லை.

00:53:09.356 --> 00:53:10.566 align:center
அது உண்மையில்லை.

00:53:10.649 --> 00:53:13.652 align:center
பீட்டரும் டயேன் மில்லரும்
மோசமானவர்கள் என்றும் இவை அனைத்திற்கும்

00:53:13.735 --> 00:53:15.320 align:center
அவர்கள் தகுதியற்றவர்கள்
என்றும் நினைத்தேன்.

00:53:15.988 --> 00:53:18.907 align:center
அந்தச் சுற்றுப்புறத்தில்,
காணாமல் போனால் தேடப்படாத

00:53:18.991 --> 00:53:21.618 align:center
விலைமதிப்புள்ள பொருட்களுள்ள
இதுபோன்ற வீடுகளுடன்

00:53:21.702 --> 00:53:25.163 align:center
நிறைய மோசமானவர்கள் இருப்பதாக நினைத்தேன்.

00:53:25.247 --> 00:53:28.542 align:center
யாருக்கும் பயன்படாமல், டிராயரில்
கிடக்கும்,

00:53:28.625 --> 00:53:30.794 align:center
மறக்கப்பட்ட செல்வங்கள்.

00:53:30.878 --> 00:53:33.630 align:center
எனக்கு இது தெரியும், ஏனெனில்
கொஞ்ச காலம் முன்பு வரை,

00:53:34.214 --> 00:53:35.841 align:center
நானும் அந்த மோசமானவர்களில்
ஒருவனாக இருந்தேன்.

00:53:45.976 --> 00:53:47.603 align:center
மெக்காலன்
25

00:53:47.686 --> 00:53:50.939 align:center
நான் ஜீவனாம்சம், குழந்தைகளுக்கான பணம்,
சட்ட ரீதியான கட்டணங்கள்,

00:53:51.023 --> 00:53:53.442 align:center
இரண்டு வீடுகள், முழுவதும் பயன்படுத்திய
வீட்டு எக்விட்டி வரம்பு, டியூஷன், சொத்து வரி,

00:53:53.525 --> 00:53:55.652 align:center
மருத்துவக் காப்பீட்டு பிரீமியம்கள்,
எஸ்ஏடி ஆசிரியர்கள்,

00:53:55.736 --> 00:53:57.529 align:center
குழந்தை உளவியலாளர்கள்,
கார் பேமெண்ட்டுகள், தோட்டக்காரர்கள்,

00:53:57.613 --> 00:53:59.907 align:center
பூச்சிக்கொல்லி மருந்தடிப்பவர்கள், கூரை
வேலை பார்ப்பவர்கள், பெயிண்டர்கள், பிளம்பர்கள்,

00:53:59.990 --> 00:54:03.035 align:center
டிரம் கிட்ஸ் மற்றும் விவாகரத்தால் மைனஸில்
இருக்கும் வங்கிக் கணக்கைப் பற்றி யோசித்தேன்.

00:54:03.118 --> 00:54:05.370 align:center
மேலும் எப்படி போலீஸ் உட்பட யாரும்

00:54:05.454 --> 00:54:07.372 align:center
என்னைப் போன்ற ஒருவனை
சந்தேகப்பட மாட்டார்கள் என யோசித்தேன்.

00:54:08.165 --> 00:54:10.167 align:center
இது நல்ல யோசனை என்று கூறவில்லை.

00:54:10.250 --> 00:54:11.585 align:center
இது தற்காலிகமாகத்தான்.

00:54:11.668 --> 00:54:14.379 align:center
மீண்டும் என்னால் சமாளிக்க முடியும் வரை,
செலவுகளைச் சமாளிக்க உடனடி வழி.

00:54:15.005 --> 00:54:18.425 align:center
நான் யோசித்தது,
அப்படி என்ன மோசமாக நடந்துவிடும்?

00:56:12.122 --> 00:56:14.124 align:center
தமிழாக்கம்
நரேஷ் குமார் ராமலிங்கம்

