WEBVTT

00:02.520 --> 00:04.200
[கிணற்றில் நீர் எடுக்கும் சத்தம்]

00:07.120 --> 00:08.680
[கிணற்று ராட்டினம் உருளும் சத்தம்]

00:08.760 --> 00:10.200
[ராட்டினம் கிறீச்சிடும் சத்தம்]

00:10.280 --> 00:12.280
[மெல்லிய பின்னணி இசை]

00:12.360 --> 00:14.360
[வேகமான காற்றின் ஓலி]

00:15.440 --> 00:19.560
தோல்வியால் ஏற்படும் வலியிலிருந்துதான்
மனிதர்கள் பாடத்தை கற்றுக்கொள்கிறார்கள்!

00:19.640 --> 00:23.160
காந்தியின் 150 வது ஆண்டு பிறந்தநாள் விழா

00:23.880 --> 00:26.080
[காகிதம் படபடக்கும் சத்தம்]

00:30.600 --> 00:32.480
[விகாஸ்] செயலாளர் சார், டீ சாப்பிடறீங்களா?

00:35.200 --> 00:36.200
வேண்டாம்பா.

00:36.280 --> 00:38.040
சில்லுன்னு பீர் சாப்பிடறீங்களா?

00:38.120 --> 00:39.160
அபிஷேக் திரிபாதி

00:46.400 --> 00:48.840
[விகாஸ்] நீங்க பரீட்சை எழுதி
இரண்டு மாசம் ஆயிருச்சு.

00:48.920 --> 00:50.920
எவ்வளவு காலம் அதையே நினைச்சுட்டு
இருக்க போறீங்க?

00:51.000 --> 00:54.240
உங்க புத்தகங்கள் எல்லாத்தையும் எடுத்து
திரும்பவும் பரீட்சைக்கு படிக்க ஆரம்பிங்க.

00:54.320 --> 00:56.160
இந்த தடவை நீங்க கண்டிப்பா ஜெயிச்சிருவீங்க.

00:56.920 --> 00:57.960
நான் ஜெயிச்சிருவேனா?

00:59.600 --> 01:00.600
நான் ஜெயிச்சிருவேனா?

01:01.600 --> 01:04.520
நல்ல ஐஐஎம் கல்லூரியில சேரணும்னா
99 சதவீத மதிப்பெண் எடுக்கணும்.

01:05.000 --> 01:06.240
இந்த தடவை 90 சதவீதம் எடுத்தாகூட,

01:06.560 --> 01:08.760
அடுத்த வருஷம் ஜெயிச்சிருவேன்னு
கொஞ்சம் நம்பிக்கை வரும்.

01:09.040 --> 01:10.200
ஆனால், நான் வாங்கினது எவ்ளோ?

01:10.560 --> 01:12.240
82. 82 சதவீதம்!

01:12.920 --> 01:16.160
82 லிருந்து மேலே போய் 99 சதவீதம்
வாங்கறதுக்கு, வாய்ப்பு குறைவுதான்.

01:17.120 --> 01:18.560
ஏன்னா, நான் ஒரு முட்டாள்.

01:18.960 --> 01:20.160
என் மூளை ஒரு அரைகுறை தான்!

01:21.320 --> 01:23.280
[அபிஷேக்] இந்த முறை வேற வழி இல்லை,
கேட் தேர்வில ஜெயிக்கணும்.

01:23.360 --> 01:26.600
இல்லன்னா, இந்த சாதாரண வேலையையே
காலம் முழுக்க செய்ற மாதிரி ஆயிடும்.

01:27.160 --> 01:30.720
அபிஷேக் திரிபாதி, ஃபுலேரா கிராம பஞ்சாயத்து
செயலாளர் என்ற பதவியே என்னோட விதியாயிரும்.

01:33.000 --> 01:34.880
ஜனவரி 26 ஆம் தேதிக்கு பேனர் வைக்கிறது.

01:34.960 --> 01:36.200
இதெல்லாம் ஒரு வேலையா?

01:36.680 --> 01:38.800
போ. போய் பேனரை எடுத்துட்டு வா!

01:39.800 --> 01:41.760
-பேனரை நான் கட்டிக்கறேன்.
-சொல்லுறதை செய், பேனரை எடுத்து வா!

01:41.840 --> 01:44.080
[பதட்டமான இசை]

01:51.280 --> 01:53.720
குடியரசு தின விழா வாழ்த்துக்கள்

01:57.240 --> 01:58.480
என்னை மன்னிச்சிரு, தவறா பேசிட்டேன்.

01:58.560 --> 01:59.800
[விகாஸ் சிரிக்கும் ஒலி]

01:59.880 --> 02:01.080
பரவாயில்லை, சார்.

02:01.160 --> 02:04.240
கடந்த சில மாசமா மனசுக்குள்ளேயே வைச்சு
கவலைபட்டுட்டு இருந்தீங்க.

02:04.320 --> 02:06.000
[விகாஸ்] இப்பவாவது சொன்னீங்களே,
நல்லதுதான்.

02:06.080 --> 02:07.800
இப்போ பாரம் குறைந்து மனசு லேசா இருக்கும்.

02:08.040 --> 02:10.680
-[ஹாரன் சத்தம்]
-[மோட்டார் சைக்கிள் வரும் சத்தம்]

02:13.760 --> 02:15.120
தலைவர் சார், வணக்கம்.

02:15.200 --> 02:17.600
வணக்கம். பேனர் நல்லா இருக்கு.

02:18.160 --> 02:20.600
இங்கே இருந்து பார்த்தா,
எனக்கு ஒன்னுமே தெரியலையே.

02:20.800 --> 02:24.280
தூரத்தில இருந்து பார்த்து தெரிஞ்சிக்க
நீ ஒன்னும் கழுகு இல்லை.

02:25.160 --> 02:29.160
தலைவரே, உங்க போட்டோ எல்லாரும் பார்க்கற
மாதிரி பெருசா இருக்கு.

02:29.240 --> 02:31.720
ஆனால் என்னோட போட்டோ சின்னதா இருக்கு.
யாராலயும் பார்க்க முடியல.

02:32.080 --> 02:33.240
-சின்னதாவா இருக்கு?
-ஆமாம்.

02:33.320 --> 02:34.480
பார்க்க ரொம்ப சின்னதா இருக்கா?

02:34.760 --> 02:36.040
இது ரொம்ப அதிகம், ப்ரஹலாத்.

02:36.360 --> 02:37.800
-ஏய் விகாஸ்!
-[விகாஸ்] சார்.

02:37.880 --> 02:39.880
வேற எதுவும் பேனர் மிச்சம் இருக்கா?

02:39.960 --> 02:41.280
ஒன்னே ஒன்னு மிச்சம் இருக்கு சார்.

02:41.360 --> 02:43.280
இந்த பனை மரத்தில ஒன்னு கட்டுங்க.

02:44.240 --> 02:46.440
-சரி சார், கட்டுறேன்.
-உடனே செய்ங்க.

02:46.520 --> 02:47.840
-[விகாஸ்] சரி சார்.
-சரி வரேன்.

02:47.920 --> 02:49.880
-[மோட்டார் சைக்கிள் என்ஜின் சத்தம்]
-[பிரிஜ்] சரி போகலாம்.

02:49.960 --> 02:52.480
நான் திரும்பி வர்றதுக்குள்ள அந்த வேலையை
முடிச்சிருங்க.

02:52.560 --> 02:54.800
-[விகாஸ்] சரி, தலைவரே!
-போயிட்டு வரேன்.

03:03.720 --> 03:05.040
அவங்க எங்கே போறாங்க?

03:05.600 --> 03:07.760
[விகாஸ்] ஜனவரி 26 ந்தேதி கொடியேத்தற விழா.

03:08.320 --> 03:11.040
அதனால ஃபக்கோலி சந்தைக்கு போய்
புது ஆடை வாங்குவாங்க.

03:12.240 --> 03:13.720
மஞ்சு தேவி கொடியை கூட ஏத்த மாட்டாங்களா?

03:13.800 --> 03:14.880
மாட்டாங்க.

03:15.200 --> 03:16.760
தலைவர் தான் கொடி ஏத்துவாரு.

03:16.960 --> 03:18.440
ஆகஸ்டு 15 அன்னிக்கு கொடி ஏத்தின மாதிரி.

03:19.240 --> 03:21.720
[விகாஸ்] போன தடவை, நீங்க விடுமுறையில
வீட்டுக்கு போயிட்டீங்க.

03:22.120 --> 03:23.120
நீங்க இங்கே இருந்திருந்தா,

03:23.200 --> 03:25.000
கொடி ஏத்தினது யாருன்னு தெரிந்திருக்கும்.

03:25.080 --> 03:27.200
முறைப்படி மஞ்சு தேவிதான் கொடி ஏத்தணும்.

03:27.280 --> 03:28.600
அவங்கதான் பஞ்சாயத்து தலைவி.

03:29.080 --> 03:30.800
அதனால, அவங்கதான் கொடி ஏத்தணும்.

03:31.080 --> 03:32.760
ஆனால், அவங்க இதை பற்றி எல்லாம்
நினைக்கிறதே இல்லை.

03:34.160 --> 03:37.160
சிசி ரோடு பேப்பர்ல மஞ்சு தேவியோட
ரேகையை வாங்கிட்டியா?

03:38.040 --> 03:39.280
ஆஹ்...இல்லையே.

03:41.800 --> 03:43.800
சரி அதை எடுத்துட்டு வா,
நான் வாங்கிட்டு வரேன்.

03:44.760 --> 03:48.720
ஃபுலேரா கிராம பஞ்சாயத்.

03:48.920 --> 03:51.280
-[மெல்லிய பின்னணி இசை]
-[மோட்டார் சைக்கிள் வரும் சத்தம்]

04:01.200 --> 04:03.800
[மஞ்சு] ஆவணங்களை படிக்காமலேயே கைரேகை
வைக்கிறேன்.

04:03.880 --> 04:05.920
-எல்லாம் உங்களை நம்பித்தான்.
-[அபிஷேக்] சரிங்க.

04:06.000 --> 04:07.760
-சரி, எங்கேன்னு காட்டுங்க.
-[பேப்பர் திருப்பும் சத்தம்]

04:14.400 --> 04:16.000
-கைரேகை வைச்சிட்டேன்.
-[பறவைகளின் சத்தம்]

04:21.840 --> 04:24.280
நீங்க பரீட்சையில பெயில் ஆனதா
கேள்விப்பட்டேன்.

04:24.360 --> 04:26.480
[நகைச்சுவையான இசை]

04:27.720 --> 04:29.080
நான் பெயில் ஆகல,

04:29.160 --> 04:30.520
மார்க் கம்மியா வாங்கினேன்.

04:30.960 --> 04:35.280
அதாவது, எங்கே சேரணும்னு நினைச்சீங்களோ
அங்கே இடம் கிடைக்காது இல்லையா?

04:36.480 --> 04:37.480
இல்லை, அது வந்து...

04:37.840 --> 04:39.280
அப்படின்னா, அது பெயிலுன்னு தானே அர்த்தம்.

04:43.040 --> 04:44.160
[மெலிதாக சிரிக்கும் சத்தம்]

04:44.840 --> 04:46.480
கவலைப்படாதீங்க.

04:47.840 --> 04:49.880
ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு
வகையான திறமை இருக்கும்.

04:49.960 --> 04:53.120
[மஞ்சு] சிலரால அதை செய்யமுடியும். சிலரால
அதை செய்யமுடியாது.

04:54.440 --> 04:55.440
ஆமா.

04:55.520 --> 04:57.880
[நகைச்சுவையான இசை]

05:00.880 --> 05:03.480
ஜனவரி 26 ந்தேதி, நீங்க கொடி ஏத்தப்போறது
இல்லைன்னு கேள்விப்பட்டேன்.

05:03.560 --> 05:07.080
ஆமாம். ரிங்கியோட அப்பாதான் அதெல்லாம்
பார்த்துக்குவார்.

05:07.880 --> 05:10.560
பக்கத்து கிராமம் கோபால்பூர்ல கூட ஒரு
பெண்தான் பஞ்சாயத்து தலைவி.

05:11.200 --> 05:12.520
அவங்கதான் அங்கே கொடி ஏத்தறாங்க.

05:14.600 --> 05:17.000
அப்பறம், அவங்க பஞ்சாயத்து
அலுவலகத்துக்கும் போறாங்க.

05:17.080 --> 05:19.120
எல்லா வேலையையும் பார்த்துக்கறாங்க.

05:19.840 --> 05:22.720
ஆவணங்கள்ல கையெழுத்து போடுறாங்க.

05:24.680 --> 05:27.000
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்திறமை இருக்கு.

05:27.520 --> 05:30.440
இங்கே ஒரு இடத்தில கைரேகை வைக்க
மறந்துட்டீங்க.

05:32.040 --> 05:34.040
[நகைச்சுவையான இசை]

05:37.160 --> 05:39.240
[மோட்டார் சைக்கிள் என்ஜின் சத்தம்]

05:51.280 --> 05:52.600
தலைவர் வீட்டில இருக்காரா?

05:55.160 --> 05:56.320
என்ன விஷயம்?

05:56.400 --> 05:57.560
தலைவர் வீட்டில இல்லையா?

05:57.640 --> 05:59.400
நான்தான் தலைவி. உங்களுக்கு என்ன வேணும்?

05:59.640 --> 06:02.360
நான் அப்பறம் வரேம்மா. சரி.

06:05.560 --> 06:07.200
என்னை பார்த்தா தலைவி மாதிரி தெரியலயா?

06:08.680 --> 06:10.120
அந்தாளு என்ன நினைச்சிட்டு இருக்கார்?

06:11.840 --> 06:13.840
[தீம் இசை]

07:03.000 --> 07:04.360
பஞ்சாயத்

07:12.800 --> 07:15.080
குடியரசு தின விழா வாழ்த்துக்கள்

07:15.160 --> 07:16.560
[மோட்டார் சைக்கிள் நிற்கும் சத்தம்]

07:17.880 --> 07:19.400
இப்போ உன் போட்டோவும் நல்லா தெரியுது.

07:19.960 --> 07:25.320
தலைவரே, இந்த பேனரை பிரதான சாலையில
கட்டினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

07:25.920 --> 07:29.040
மத்தவங்களும் பார்த்தா, நமக்கு பெருமைதானே.

07:29.560 --> 07:31.920
இப்படி ஏதாவது கெஞ்சி கூத்தாடி
உன் வேலையை முடிச்சுக்கிறே.

07:32.440 --> 07:36.240
தலைவரே, பிரதான சாலையில
என் பேனரை வைச்சதே இல்லை.

07:36.320 --> 07:37.320
பிரதான சாலையில வைச்சதே இல்லை.

07:37.400 --> 07:38.440
சத்தியமா சொல்லுறேன்.

07:38.520 --> 07:40.880
பிரதான சாலையில பேனரை வைக்க சொல்லட்டா?

07:41.880 --> 07:44.280
-ஹேய்! விகாஸ்!
-[விகாஸ்] சொல்லுங்க தலைவரே!

07:45.000 --> 07:46.520
[பிரிஜ்] எங்கே இருக்க?

07:47.080 --> 07:48.200
சொல்லுங்க சார்?

07:49.240 --> 07:52.600
பிரதான சாலையில ஒரு நல்ல இடமா பார்த்து
இந்த பேனரை கட்டிரு.

07:52.680 --> 07:53.800
சரிங்க தலைவரே.

07:53.880 --> 07:55.000
உனக்கு சந்தோஷம் தானே?

07:55.080 --> 07:56.960
இப்போ பேனர் பிரதான சாலையில கட்டிருவாங்க.

07:57.040 --> 07:59.640
கொஞ்ச நாள்ல என் நெஞ்சுல கட்ட சொல்லுவ.

08:00.200 --> 08:02.880
அரசியல்ல இதெல்லாம் முக்கியம், தலைவரே.

08:02.960 --> 08:05.200
[ப்ரஹலாத்] இதை மக்கள் பார்த்தா,
நம்மள பத்தி தெரிஞ்சிக்குவாங்க.

08:08.400 --> 08:10.600
[மெல்லிசை]

08:26.360 --> 08:28.360
இந்த டிரஸ் எப்படி இருக்கு?

08:28.840 --> 08:29.880
நல்லா இருக்கு.

08:30.800 --> 08:33.800
சொல்லுறதுக்கு முன்னாடி, கொஞ்சம் பாரு.

08:36.960 --> 08:38.040
நல்லாத்தான் இருக்கு.

08:38.120 --> 08:39.280
[பிரிஜ்] உனக்கு என்ன ஆச்சு?

08:39.360 --> 08:42.200
உனக்கும் ஒரு புடவையை வாங்கிட்டு
வந்திருக்கணுமோ.

08:42.760 --> 08:44.200
அந்த புடவையை வைச்சி நான் என்ன செய்ய?

08:44.640 --> 08:46.360
நான்தான் கொடி ஏத்த போறது இல்லையே?

08:46.440 --> 08:47.960
நீதான் ஏத்த போற.

08:48.600 --> 08:50.240
[பிரிஜ்] அது ஒன்னும் பெரிய விஷயமில்லை.

08:50.760 --> 08:51.960
நீ கொடி ஏத்து.

08:52.960 --> 08:54.000
சரி ஏத்தறேன்.

08:54.080 --> 08:55.080
[பிரிஜ்] என்ன சொல்லுற?

08:55.400 --> 08:56.840
நான் கொடி ஏத்தறேன்னு சொல்லுறேன்.

08:57.480 --> 09:00.400
நான் சும்மா விளையாட்டா சொன்னேன்.
நீ ஏப்படி கொடி ஏத்துவே?

09:00.480 --> 09:02.960
ஏன் ஏத்தக்கூடாது?
நான்தானே பஞ்சாயத்து தலைவி.

09:03.480 --> 09:05.680
[நகைச்சுவையான இசை]

09:12.920 --> 09:15.520
-[பிரிஜ்] உனக்கு என்ன ஆச்சு?
-ஒன்னும் இல்லையே.

09:16.480 --> 09:18.080
நீ எப்படி கொடி ஏத்துவே?

09:18.160 --> 09:21.160
ஏன்? கொடி கயிறு ரொம்ப கனமா இருக்குமா?

09:21.240 --> 09:23.520
வீட்டு வேலை எல்லாம் பார்த்துக்கறேன்.
இதையும் செய்யமுடியும்.

09:23.600 --> 09:25.800
இது கொடி ஏத்தற வேலை மட்டும் இல்லை.

09:26.160 --> 09:28.200
கொடி ஏத்தின பிறகு, தேசிய கீதம் பாடணும்.

09:28.280 --> 09:29.320
அதற்கென்ன, நான் பாடறேன்.

09:29.720 --> 09:32.760
கல்யாணங்கள்ல தான் பாடறேனே?
இங்கேயும் பாடிட்டா போச்சு.

09:32.840 --> 09:35.040
தேசிய கீதத்தை முழுசா பாட உனக்கு தெரியுமா?

09:35.640 --> 09:36.720
எதுன்னாலும், நான் பாடுவேன்.

09:36.800 --> 09:37.960
நீ எப்படி பாடுவே?

09:38.040 --> 09:39.400
முதல்ல, அது மனப்பாடமா தெரியணும்.

09:40.600 --> 09:41.960
நான் மனப்பாடம் பண்ணிக்கறேன்.

09:42.040 --> 09:44.760
எப்படி மனப்பாடம் பண்ணுவே?
யார் உனக்கு சொல்லி கொடுப்பா?

09:45.040 --> 09:46.720
[பிரிஜ்] ரிங்கியும் பாட்டி வீட்டுக்கு
போயிட்டா.

09:47.040 --> 09:50.240
நானும் ரிங்கி படத்தோட மல்காபூர்ல
போய் இரண்டு நாள் இருக்கணும்.

09:50.560 --> 09:52.200
திரும்பிவர நாளை மறுநாள் சாயந்திரமாவது
ஆகும்.

09:52.280 --> 09:53.800
அதற்கு அடுத்த நாள் ஜனவரி 26.

09:54.120 --> 09:56.080
நானும் இங்கே இருக்கமாட்டேன்.
யார் உனக்கு உதவி பண்ணுவா?

09:56.720 --> 09:58.360
நீங்க மல்காபூர் போயிட்டு வாங்க.

09:58.760 --> 10:01.200
ஆனால், வரும்போது மறக்காம எனக்கு ஒரு புடவை
வாங்கிட்டு வாங்க.

10:01.920 --> 10:02.920
ஹா, அப்படியா?

10:03.880 --> 10:06.880
அப்பறம், அதை மனப்பாடம் செய்ய எனக்கு
உதவறதுக்கு...

10:07.960 --> 10:09.480
எனக்கு தெரிந்த ஒருத்தர் இருக்கார்.

10:15.200 --> 10:17.840
இவளுக்கு யார் உதவ போறாங்க?

10:19.880 --> 10:24.000
[மஞ்சு] ♪வந்தே மாதரம்♪

10:24.560 --> 10:28.560
♪வந்தே மாதரம்♪

10:29.760 --> 10:30.760
♪வந்...♪

10:31.160 --> 10:35.440
நீங்க பாடறது நம்ம தேசிய கீதம் இல்லை.

10:36.160 --> 10:37.720
தேசிய கீதம், "ஜன கண மன"

10:37.800 --> 10:40.720
அப்படியா, சரி. இந்த பாட்டை
திரையரங்கத்தில கேட்டு இருக்கோம்,

10:40.800 --> 10:42.600
நானும் ரிங்கி அப்பாவும் பனாரஸ் போனப்ப.

10:42.680 --> 10:44.280
ஆமாம், அதேதான்.

10:44.600 --> 10:46.440
-அப்படியா.
-கொடி ஏத்தினதுக்கு அப்புறம் இதை பாடணும்.

10:46.640 --> 10:48.360
-சரி.
-[அபிஷேக்] ம்ம்.

10:49.400 --> 10:51.040
உங்களுக்கு ஏதாவது நினைவிருக்கா?

10:51.120 --> 10:52.640
[மஞ்சு] முதல் மூன்று வார்த்தை நினைவிருக்கு

10:53.080 --> 10:54.400
ஜன கண மன

10:57.680 --> 10:58.800
சரி துவக்கலாம்.

10:59.160 --> 11:01.560
-[அபிஷேக்] நீங்க கற்றுக்கொள்வீங்க.
-சரி, நீங்க சொல்லித்தாங்க.

11:02.440 --> 11:04.920
-ம்ம். சரி.
-[மஞ்சு] நான் கத்துக்குவேன்

11:05.520 --> 11:06.640
உண்மைதான்.

11:07.440 --> 11:10.520
அது "விநாயக்" இல்லை, "அதிநாயக்".

11:10.600 --> 11:12.080
-"அதிநாயக்"
-சரி.

11:12.160 --> 11:13.480
திரும்ப பாடுங்க.

11:14.040 --> 11:16.880
நிறைய நினைவில் வைச்சிக்க வேண்டி இருக்கு.
இப்படி உட்கார்ந்து பாடலாமா?

11:16.960 --> 11:18.920
இந்த பாட்டை உட்கார்ந்துட்டு பாடக்கூடாது.

11:19.000 --> 11:20.560
ஆனால், நான் இதை பாடல.
மனப்பாடம் தானே செய்றேன்.

11:20.640 --> 11:24.040
இதை உட்கார்ந்துட்டு மனப்பாடம் செய்யகூடாது.
நின்னுட்டுதான் செய்யணும்.

11:24.560 --> 11:26.400
-சரி பாடலாம்.
-சரி.

11:28.680 --> 11:29.840
[தொண்டையை கனைக்கும் சத்தம்]

11:29.920 --> 11:33.520
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே.

11:34.640 --> 11:36.400
நல்லா பாடறீங்க, தொடர்ந்து பாடுங்க.

11:36.480 --> 11:40.120
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே.

11:40.200 --> 11:41.280
திரும்பவும்.

11:41.360 --> 11:45.600
ஜன கண மன அதிநாயக ஜெய ஹோ.

11:45.680 --> 11:49.120
-அது "ஜெய ஹோ" இல்லை, "ஜெய ஹே"
-"ஜெய ஹே"?

11:49.200 --> 11:52.840
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே.

11:52.920 --> 11:57.520
-[அபிஷேக்] திரும்பவும் பாடுங்க.
-[மஞ்சு] ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

11:57.600 --> 11:58.920
ஃபுலேரா கிராம பஞ்சாயத்.

11:59.000 --> 12:01.240
[செல்ஃபோன் ஒலிக்கும் சத்தம்]

12:01.760 --> 12:02.960
சொல்லுங்க, தலைவரே.

12:04.120 --> 12:06.000
இல்லை. செயலாளர் சார் இன்னும் வரல.

12:07.760 --> 12:09.680
ஆமாம். அவர் போய் இரண்டு மணி நேரம்
ஆயிருக்கும்.

12:10.600 --> 12:11.600
அப்படியா.

12:12.360 --> 12:14.560
அவங்க மனப்பாடம் பண்ணிட்டாங்களா
இல்லையான்னு எப்படி தெரியும்.

12:15.440 --> 12:17.040
அவர் வந்த பிறகுதான் எனக்கு தெரியும்.

12:18.400 --> 12:19.400
சரி. நல்லது.

12:20.440 --> 12:22.400
[உற்சாகமான இசை]

12:29.920 --> 12:34.680
பஞ்சாப் அப்பறம் சிந்து,
குஜராத், மராத்தா, அப்பறம் என்ன?

12:34.920 --> 12:36.200
-மேடம்.
-என்ன?

12:36.280 --> 12:40.400
பஞ்சாப, சிந்து, குஜராத, மராத்தா,
திராவிட, உத்கல, பங்கா.

12:40.480 --> 12:41.800
இப்போ சொல்லி கொடுத்த மாதிரி.

12:41.880 --> 12:43.920
[உற்சாகமான இசை]

13:02.200 --> 13:04.440
[உற்சாகமான இசை தொடர்கிறது]

13:13.560 --> 13:17.480
♪ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே♪

13:17.560 --> 13:19.760
♪ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே♪

13:20.360 --> 13:21.800
மூன்று தடவை "ஜெய ஹே".

13:21.880 --> 13:23.720
அப்புறம் நான்கு முறை "ஜெய"
கடைசியா "ஹே ஒரு தடவை.

13:24.680 --> 13:27.360
நான் சொன்னது புரியுதா? திரும்ப ஒரு தடவை
துவக்கத்தில இருந்து பாடுங்க.

13:27.440 --> 13:28.440
[தொண்டையை சரி செய்யும் சத்தம்]

13:30.960 --> 13:33.880
-பாடுங்க.
-♪ஜன கண மன விநாயக ஜெய ஹே♪

13:33.960 --> 13:36.560
-என்ன...
-அதே தவறை திரும்பவும் செய்றீங்க.

13:36.640 --> 13:38.920
"விநாயக" இல்லை, "அதிநாயக".
எத்தனை தடவை உங்களுக்கு சொல்லுறது?

13:39.000 --> 13:41.240
இதை இருபத்திநாலு தடவையாவது
பாடி பார்க்கணும்.

13:41.480 --> 13:44.840
இதை நான்கு மணி நேரமா முயற்சி பண்ணுறோம்.
"விநாயக்" இல்லை, "அதிநாயக".

13:45.360 --> 13:47.800
அதிநாயக. இதை நான் பல தடவை
விளக்கி இருக்கேன்.

13:51.520 --> 13:52.600
[பெருமூச்சு விடும் சத்தம்]

13:56.480 --> 14:00.440
இங்கே பாருங்க மேடம். என்னால முடிந்த
வரைக்கும் நான் முயற்சி பண்ணிட்டேன்.

14:00.800 --> 14:02.840
இப்போ நீங்களே முயற்சி பண்ணி பாருங்க.
நான் கிளம்பறேன்.

14:02.920 --> 14:04.080
செயலாளர் சார்.

14:04.440 --> 14:07.360
நீங்க போயிட்டா, மனப்பாடம் செய்றதுக்கு
எனக்கு யார் உதவுவாங்க?

14:08.280 --> 14:10.280
[சோக இசை]

14:12.240 --> 14:13.400
இங்கே பாருங்க.

14:14.040 --> 14:16.480
[அபிஷேக்] இதை அமுக்குங்க,
உடனே இது பாட ஆரம்பிக்கும்.

14:16.840 --> 14:18.720
இதை அமுக்குனா, பாடறது நின்னுடும்.

14:19.160 --> 14:20.280
சரி.

14:20.360 --> 14:21.680
உங்களுக்கு நாளை வரை நேரம் இருக்கு.

14:22.320 --> 14:24.000
-முடிஞ்ச அளவு கேளுங்க.
-[மஞ்சு] சரி.

14:25.480 --> 14:26.960
ஒரு பகுதியாவது நினைவில் இருக்கும்.

14:28.120 --> 14:29.280
[அபிஷேக்] சரி, இப்போ நான் கிளம்பறேன்.

14:30.560 --> 14:31.960
கேளுங்க.

14:32.160 --> 14:34.880
இதை கேட்கும்போது கூட, நாம
நின்னுகிட்டே இருக்கணுமா?

14:36.320 --> 14:37.320
ஆமா?

14:39.640 --> 14:40.720
முயற்சி பண்ணி பாருங்க.

14:42.360 --> 14:44.360
[மெல்லிய பின்னணி இசை]

14:53.200 --> 14:57.400
♪ஜன கண மன அதிநாயக ஜெய ஹே♪

14:57.480 --> 15:01.200
♪ஜன கண மன அதிநாயக ஜெய ஹே♪

15:04.120 --> 15:05.400
-ரிங்கி அம்மா.
-[கதவு தட்டும் சத்தம்]

15:08.520 --> 15:10.120
ரிங்கி அம்மா!

15:10.720 --> 15:12.840
-[பிரிஜ்] நான் கூப்பிடுறது கேட்குதா?
-[கதவை தட்டுகிறார்]

15:15.600 --> 15:17.600
எல்லாம் சௌக்கியமா?

15:21.160 --> 15:22.160
இந்தா இதை வாங்கிக்க.

15:22.640 --> 15:24.720
[மெல்லிசை]

15:25.000 --> 15:26.000
ஹூம், என்னாச்சு?

15:32.280 --> 15:34.000
[கோழி கத்தும் சத்தம்]

15:41.520 --> 15:43.160
[தண்ணீர் சத்தம்]

15:45.920 --> 15:48.120
[மெல்லிய பின்னணி இசை]

15:54.840 --> 15:57.160
இந்தா நீ கேட்ட புடவை.

16:08.280 --> 16:10.160
"ஜன கண மன" பாட்டை மனப்பாடம் செய்துட்டியா?

16:11.400 --> 16:13.200
பாட்டு முழுவதும் மனப்பாடம் செய்துட்டியா?

16:16.840 --> 16:17.840
இது என்ன?

16:17.920 --> 16:20.320
நாளைக்கு புடவையை கட்டிக்க போறேன்ன,
ஏன் அதை உள்ளே வைக்கிறே?

16:21.280 --> 16:22.280
என்ன?

16:24.240 --> 16:25.360
[பெருமூச்சு விடும் சத்தம்]

16:26.120 --> 16:28.040
எனக்கு தெரியல. நான் இன்னமும்
மனப்பாடம் செய்யல.

16:28.120 --> 16:29.200
[முணுமுணுப்பு சத்தம்]

16:29.680 --> 16:30.800
ஏன், என்ன ஆச்சு?

16:31.920 --> 16:33.800
இந்த ஏமாற்று கரிசனம் எல்லாம் வேண்டாம்.

16:34.000 --> 16:35.600
இப்போ உங்களுக்கு சந்தோஷம் தானே.

16:35.880 --> 16:37.080
நீங்களே போய் கொடியை ஏத்துங்க.

16:37.160 --> 16:38.640
நான் அதை சொல்லல.

16:38.720 --> 16:40.880
அப்போ எனக்கு என்ன நினைவு இருக்கோ
அதை நான் பாடுவேன்.

16:40.960 --> 16:42.560
[பிரிஜ்] நீ மட்டும் தப்பா பாடின,

16:42.640 --> 16:45.840
யாராவது வீடியோ எடுத்து, அதை இன்டர்நெட்ல
போட்டு வைரஸ் ஆக்கிருவாங்க.

16:45.920 --> 16:47.560
-என்னது?
-[பிரஜ்] வைரஸ்.

16:48.880 --> 16:50.880
[செல்ஃபோன் ஒலிக்கும் சத்தம்]

16:53.360 --> 16:54.520
என்ன இது?

16:54.600 --> 16:56.600
செல்ஃபோன் திரை ஏன் உடைந்து இருக்கு?

16:56.880 --> 16:59.160
என்னால மனப்பாடம் செய்ய முடியல.
அதனால தூக்கி வீசினேன்.

16:59.240 --> 17:00.240
உடைந்து போச்சு.

17:00.320 --> 17:01.960
-[மஞ்சு] செயலாளர் சார்.
-சொல்லுங்க மேடம்.

17:02.360 --> 17:03.440
மனப்பாடம் செய்துட்டீங்களா?

17:03.520 --> 17:05.680
[மஞ்சு] இல்லை, செயலாளர் சார்.
என்னால மனப்பாடம் செய்ய முடியல.

17:05.760 --> 17:07.240
உங்களுக்கு சந்தோஷம் தானே.

17:07.320 --> 17:09.280
இல்லை, நான் சும்மாதான் கேட்டேன்.

17:09.360 --> 17:11.320
அப்போ, நாளைக்கு யார் கொடி ஏத்த போறது.

17:11.400 --> 17:14.320
கவலைப்படாதீங்க. தலைவர்
நாளைக்கு கொடி ஏத்துவார்.

17:16.120 --> 17:19.000
-[அபிஷேக்] சரிங்க மேடம்.
-இப்போ எல்லாம் சரியாயிருச்சில்ல.

17:19.080 --> 17:20.120
ஃபோனை வைங்க.

17:23.040 --> 17:25.920
என்னால கொடியும் ஏத்த முடியல,
என் போனும் உடைந்து போச்சு.

17:27.000 --> 17:28.920
[மஞ்சு] ராத்திரிக்கு என்ன சாப்பாடு
செய்யட்டும்?

17:29.000 --> 17:31.400
நாளைக்கு என் கூட பஞ்சாயத்து
அலுவலகத்துக்கு வா.

17:32.040 --> 17:33.400
வேண்டாம், நான் வரல. அதை விடுங்க.

17:33.920 --> 17:36.080
நான் இங்கேயே உட்கார்ந்து
பிரதம மந்திரி கொடி ஏத்தறதை

17:36.160 --> 17:37.480
டிவியில பார்ப்பேன்.

17:37.560 --> 17:40.040
ஜனவரி 26ந் தேதி, ஜனாதிபதிதான்
கொடி ஏத்துவாரு.

17:40.120 --> 17:41.880
பிரதம மந்திரி கொடி ஏத்த மாட்டாரு.

17:43.120 --> 17:45.560
[மஞ்சு] ராத்திரிக்கு என்ன சாப்பாடு
செய்யணும்னு சொல்ல போறீங்களா இல்லயா?

17:46.440 --> 17:47.760
எல்லாரும் அறிவாளி ஆக பார்க்கறாங்க.

17:51.720 --> 17:52.720
[ணங் என வைக்கும் சத்தம்]

17:55.800 --> 17:57.960
[சோக இசை]

18:07.120 --> 18:09.880
ஃபுலேரா கிராம பஞ்சாயத் அலுவலகம்

18:12.920 --> 18:15.000
[சலசலப்பு சத்தம்]

18:19.280 --> 18:20.280
வாங்க போகலாம்.

18:20.360 --> 18:22.600
தலைவரே, அந்த தேசிய கொடி மாதிரி
இன்னும் ஒன்று இருக்கா?

18:23.520 --> 18:24.760
-இது மாதிரியா?
-[ப்ரஹலாத்] ஆமாம்.

18:25.120 --> 18:27.720
ப்ரஹலாத், நீ இன்னும் ஒரு சின்ன பையன்.

18:28.520 --> 18:29.680
இன்னும் ஒன்று!

18:29.760 --> 18:30.760
இந்தா.

18:31.920 --> 18:33.000
இரண்டு எடுத்துக்க.

18:33.480 --> 18:35.480
[பிரிஜ்] இடது பக்கம், வலது பக்கம்ன்னு
இரண்டு குத்திக்க.

18:38.080 --> 18:41.000
[அபிஷேக்] தலைவரே.
எதுக்கும் மேடத்தை ஒரு தடவை கேளுங்க.

18:41.840 --> 18:45.360
எனக்கு தெரியும், அவங்க ஏத்த மாட்டாங்க.
ஆனால் வந்தா நல்லாத்தான் இருக்கும்.

18:45.440 --> 18:47.840
நான் நேற்றே கேட்டேன்.
அவ தெளிவா வேணாம்னு சொல்லிட்டா.

18:47.920 --> 18:49.480
எதுக்கும் ஒரு தடவை கேளுங்க?

18:49.560 --> 18:50.960
நான் அவங்க கிட்ட கேட்கிறேன்!

18:51.280 --> 18:52.520
நீ இங்கேயே இரு.

18:53.680 --> 18:54.880
இரண்டு அதிகமா வைச்சிருக்கேன்.

18:56.000 --> 18:57.200
[நிகழ்ச்சி வழங்குநர்] வாங்க, தலைவரே.

18:57.280 --> 18:59.440
[கும்பல் கைத்தட்டும் சத்தம்]

19:00.320 --> 19:02.400
[இனிமையான இசை]

19:18.080 --> 19:19.640
[மாவட்ட நீதிபதி] டிரைவர், காரை நிறுத்து.

19:21.560 --> 19:22.680
காரை கொஞ்சம் பின்னாடி எடு.

19:22.760 --> 19:24.760
[கார் பின்னால் வரும் சத்தம்]

19:32.680 --> 19:34.680
[தூரத்தில் இசை முழக்கம்]

19:36.360 --> 19:38.760
-காரை கிராமத்துக்கு விடு.
-இங்கே திருப்பு.

19:39.560 --> 19:41.800
[கார் என்ஜின் சத்தம்]

19:43.000 --> 19:44.600
ஃபுலேரா கிராம பஞ்சாயத் உங்களை வரவேற்கிறது

19:51.000 --> 19:52.240
பிரிஜ் பூஷன் துபே, தலைவியின் கணவர்

19:56.160 --> 19:58.040
[தெளிவற்ற உரையாடல்]

20:00.400 --> 20:02.200
அவங்க ஏன் இன்னும் வரல?

20:03.480 --> 20:04.800
கொஞ்சம் நேரம் காத்திருப்போம்.

20:05.200 --> 20:06.680
நீங்க ஃபோன் பண்ணப்ப அவ என்ன சொன்னா?

20:07.720 --> 20:08.840
"பார்க்கிறேன்" ன்னு சொன்னாங்க.

20:08.920 --> 20:12.480
அவங்க மனசை மாத்திக்க மாட்டாங்கன்னு
நினைக்கிறேன். நேரம்தான் விரயமாகுது.

20:12.560 --> 20:14.200
-வாங்க போகலாம்.
-[ப்ரஹலாத்] வாங்க கொடி ஏத்துவோம்.

20:17.000 --> 20:18.040
எல்லாரும் நேரா நில்லுங்க.

20:21.360 --> 20:23.360
[நகைச்சுவையான இசை]

20:31.320 --> 20:33.320
[கார் ஹாரன் சத்தம்]

20:36.080 --> 20:38.280
[கார் வரும் சத்தம்]

20:48.640 --> 20:51.960
மாவட்ட நீதிபதி

20:52.600 --> 20:54.760
[வேகமான இசை]

21:08.120 --> 21:11.800
குடியரசு தின விழா வாழ்த்துக்கள்.

21:12.360 --> 21:16.400
நீங்க தான் பஞ்சாயத்து தலைவியோட கணவர்
பிரிஜ் பூஷன் துபேவா.

21:20.200 --> 21:21.240
ஆமாம்.

21:21.600 --> 21:25.640
அப்படியா, அரசாங்கம் அப்படி எதுவும்
பதவியை உருவாக்கவில்லை.

21:25.880 --> 21:27.800
-சரி, நான் வந்து...
-[மாவட்ட நீதிபதி] அது மாதிரி.

21:27.880 --> 21:30.160
உங்க விருப்பம், கற்பனைக்கு ஏத்த மாதிரி
பதவியை உருவாக்கறது,

21:30.240 --> 21:32.520
பஞ்சாயத்து தலைவிக்கு பதிலா,
அலுவலகத்தை நிர்வகிக்கிறது,

21:32.600 --> 21:35.200
அவங்களுக்கு பதிலா,
கொடி ஏத்தறதை கூட செய்றது.

21:35.280 --> 21:36.640
இதெல்லாம் என்ன விளயாட்டா இருக்கா?

21:41.600 --> 21:43.840
பஞ்சாயத்து தலைவி மஞ்சு தேவி எங்கே?

21:44.440 --> 21:46.480
அவங்க வீட்டில இருந்து இங்கே வந்துட்டு
இருக்காங்க.

21:47.840 --> 21:49.720
வெளியே போங்க. உங்களை வெளியே போக சொன்னேன்.

21:50.120 --> 21:52.400
[சோக இசை]

21:54.880 --> 21:55.880
வெளியே போங்க!

21:56.120 --> 21:57.960
அலுவலக வளாகத்தை விட்டே வெளியே போங்க.

21:59.040 --> 22:00.160
வெளியே போங்க!

22:05.760 --> 22:07.560
வளாகத்தை விட்டு வெளியே நில்லுங்க!

22:12.120 --> 22:13.760
இங்கே யார் அலுவலக செயலாளர்.

22:15.000 --> 22:16.760
நான்தான் பஞ்சாயத்து துணை தலைவர்.

22:16.840 --> 22:17.840
அதிகாரபூர்வமானவன்.

22:19.440 --> 22:20.640
மேடம், நான் தான் செயலாளர்.

22:20.720 --> 22:22.200
-[மாவட்ட நீதிபதி] நீங்க தானா?
-ஆமாம்.

22:22.280 --> 22:24.400
[மாவட்ட நீதிபதி] இங்கே என்ன
நாடகம் நடக்குது?

22:24.480 --> 22:26.120
இது தப்புன்னு உங்களுக்கு தெரியாதா?

22:26.920 --> 22:30.560
அரசாங்கம், பஞ்சாயத்து தலைவிகளின்
கணவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முயல்கிறது.

22:30.640 --> 22:32.160
அதைபற்றி உங்களுக்கு ஒரு அக்கறையும்
இல்லையா?

22:32.240 --> 22:34.240
-என்னால என்ன செய்யமுடியும், மேடம்?
-வாயை மூடுங்க!

22:34.600 --> 22:36.000
நான் என்ன செய்ய முடியும்?

22:36.080 --> 22:37.520
உங்களால நிறைய செய்ய முடியும்.

22:37.960 --> 22:39.520
நீங்க ஏன் ஒரு புகார் கொடுக்கல,

22:39.600 --> 22:42.160
மஞ்சு தேவியோட கணவர்தான் அலுவலகத்தை
கவனித்து கொள்கிறார்ன்னு?

22:43.560 --> 22:46.080
அந்த பேனரை முதலில் கழட்டுங்க!

22:50.800 --> 22:52.400
-மாதவ்!
-மேடம்.

22:52.720 --> 22:54.560
அவரோட பெயரை எழுதி வைங்க.
இடைநீக்கம் செய்யப்போறோம்.

22:54.640 --> 22:56.800
[சோக இசை]

22:58.600 --> 23:00.360
-[ஆங்கிலத்தில்] மேடம், மன்னிச்சிருங்க.
-உங்க பேரு என்ன?

23:01.080 --> 23:04.760
-மஞ்சு தேவி வந்துட்டு இருக்காங்க.
-உங்க பேர்!

23:08.680 --> 23:09.800
அபிஷேக் திரிபாதி.

23:10.360 --> 23:11.760
-அவர் பெயரை குறிச்சிக்கங்க.
-சரிங்க மேடம்.

23:11.840 --> 23:12.960
[ஆங்கிலத்தில்] மன்னியுங்க, மேடம்.

23:13.720 --> 23:14.840
[மஞ்சு] செயலாளர் சார்.

23:15.760 --> 23:17.080
இங்கே என்ன நடக்குது?

23:23.640 --> 23:25.920
[மெல்லிய இசை]

23:30.120 --> 23:31.360
[மஞ்சு] இங்கே என்ன நடக்குது?

23:33.200 --> 23:34.360
நீங்க யாரு?

23:36.720 --> 23:38.120
நீங்க யாரு?

23:40.720 --> 23:43.160
அவங்க மாவட்ட நீதிபதி, மேடம்.

23:43.240 --> 23:46.120
இவங்க எங்க பஞ்சாயத்து தலைவி, மஞ்சு தேவி.

23:49.120 --> 23:50.200
ம்ம். அப்படியா?

23:51.040 --> 23:53.280
ரிங்கி அப்பா, நீங்க ஏன் அங்கே நிற்கறீங்க?

23:53.360 --> 23:54.520
இங்கே வாங்க.

23:54.600 --> 23:57.720
-பரவாயில்லை இங்கேயே இருக்கேன்.
-வேண்டாம். இங்கே வாங்க.

24:01.600 --> 24:03.040
செயலாளர் சார், இங்கே வாங்க.

24:05.200 --> 24:06.640
மேடம், அவங்க எல்லாம் யாரு?

24:07.120 --> 24:09.520
என்னால தனியா வரமுடியாது. அதனால,
அவங்களை துணைக்கு அழைச்சிட்டு வந்தேன்.

24:10.080 --> 24:12.040
[மஞ்சு] அவங்கதான் உண்மையான
வார்டு உறுப்பினர்கள்.

24:12.120 --> 24:14.000
அவங்க கணவர்கள், அவங்களுக்கு
பதிலா வேலை பார்க்கறாங்க.

24:14.080 --> 24:16.200
நீங்க அவங்களை பார்த்திருப்பீங்கன்னு
நினைக்கிறேன்.

24:16.280 --> 24:17.520
அங்கே என்ன நடக்குது?

24:19.240 --> 24:21.560
ஒரு மக்கள் பிரதிநிதிக்கிட்ட இப்படிதான்
பேசறதா?

24:24.280 --> 24:25.280
சொல்லுங்க.

24:25.800 --> 24:27.680
தலைவர் கொடி ஏத்த வந்தார்.

24:27.760 --> 24:30.960
மாவட்ட நீதிபதி என்னை இடைநீக்கம் செய்றதா
சொன்னாங்க.

24:32.240 --> 24:33.240
இருங்க.

24:35.800 --> 24:37.680
[மஞ்சு] நீங்க ஏன் அவரை இடைநீக்கம்
செய்ய போறீங்க?

24:37.760 --> 24:40.600
ஏன்னா, உங்க வீட்டுகாரர் உங்களுக்கு பதிலா

24:40.680 --> 24:42.000
செயலாளர் முன்னாடியே கொடி ஏத்தறார்.

24:42.880 --> 24:45.520
என் வீட்டுகாரர் கொடி ஏத்த போறார்ன்னு
யார் உங்களுக்கு சொன்னது?

24:45.600 --> 24:47.600
நான்தான் கொடி ஏத்த இருந்தேன்.

24:47.680 --> 24:49.880
அப்படியா, அப்போ ஏன் இவ்ளோ நேரமாகியும் வரல?

24:50.720 --> 24:53.560
பெண்களுக்கு தயாராவதற்கு
கொஞ்சம் நேரம் எடுத்துக்கும்.

24:53.640 --> 24:54.840
அது உங்களுக்கும் தெரியும்.

24:54.920 --> 24:56.600
அப்போ, நீங்கதான், எல்லா வருஷமும்
கொடி ஏத்தறீங்க?

24:56.960 --> 25:00.440
ஆமாம். நான்தான் ஏத்தறேன்.
யார்ட்ட வேணா கேளுங்க.

25:06.640 --> 25:08.840
நல்லது, அப்போ கொடியை ஏத்துங்க.

25:09.760 --> 25:11.880
நீங்க, இங்கே நின்னு அதை பார்க்கபோறீங்களா?

25:12.400 --> 25:14.560
ஆமாம். நான் இங்க நின்னு பார்க்கப்போறேன்.

25:15.000 --> 25:16.120
ஆரம்பிங்க.

25:16.760 --> 25:18.320
[மாவட்ட நீதிபதி] சரி, கொடி
ஏத்தத்தை துவக்குங்க.

25:18.400 --> 25:19.400
சரி.

25:20.840 --> 25:23.000
[மெல்லிய பின்னணி இசை]

25:43.400 --> 25:45.680
[மெல்லிய பின்னணி இசை]

25:53.800 --> 25:56.400
இரண்டாவதா இருக்கிற கயிற்றை இழுங்க.

26:03.760 --> 26:06.000
[சுதந்திர இசை]

26:16.040 --> 26:18.520
வாங்க, இப்போ தேசிய கீதத்தை பாடுங்க.

26:24.000 --> 26:25.120
என்ன விஷயம்?

26:25.200 --> 26:27.320
நீங்க தான் எப்பவும் கொடி ஏத்துவீங்க,
இல்லையா?

26:27.400 --> 26:28.880
உங்களுக்கு நினைவில இருக்கும் இல்லையா.

26:31.120 --> 26:32.320
யாரும் கூட சேர்ந்து பாடக்கூடாது.

26:33.280 --> 26:34.520
அவங்க மட்டும் பாடட்டும்.

26:40.240 --> 26:41.720
சரி, துவங்குங்க.

26:43.920 --> 26:45.320
[தொண்டையை சரிசெய்யும் சத்தம்]

26:49.680 --> 26:54.720
♪ஜன கண மன அதிநாயக ஜெய ஹே♪

26:54.960 --> 26:57.080
♪பாரத...♪

26:58.040 --> 27:01.240
-♪பாக்ய விதாதா♪
-♪பாக்ய விதாதா♪

27:01.480 --> 27:05.280
♪பஞ்சாப சிந்து குஜராத்♪

27:05.760 --> 27:12.280
-♪மராத்தா திராவிட உத்கல வங்கா♪
-♪மராத்தா திராவிட உத்கல வங்கா♪

27:12.360 --> 27:17.280
♪விந்திய இமாசல யமுனா கங்கா♪

27:17.360 --> 27:22.400
-[பிரிஜ்] ♪உச்சல ஜலதி...♪
-♪உச்சல ஜலதி தரங்கா♪

27:22.480 --> 27:26.760
♪தவ சுப நாமே ஜாகே♪

27:27.800 --> 27:32.560
-[பிரிஜ்] ♪தவ சுப ஆஷிஷ...♪
-♪தவ சுப ஆஷிஷ மாகே♪

27:33.040 --> 27:37.640
♪ஜாஹே தவ ஜெய காதா♪

27:38.480 --> 27:43.160
♪ஜன கண மங்கள தாயக ஜெயஹே♪

27:43.360 --> 27:47.840
♪பாரத பாக்ய விதாதா♪

27:47.920 --> 27:52.200
♪ஜெய ஹே, ஜெய ஹே♪

27:52.280 --> 27:54.800
♪ஜெய ஹே♪

27:54.880 --> 28:00.040
♪ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே♪

28:02.080 --> 28:03.080
[பெருமூச்சு விடும் சத்தம்]

28:04.200 --> 28:05.200
[பெருமூச்சு விடும் சத்தம்]

28:13.320 --> 28:15.400
[கை தட்டும் சத்தம்]

28:30.640 --> 28:32.360
இதுதான் பஞ்சாயத்து தலைவியின் கணவரின் வேலை.

28:32.680 --> 28:34.440
அவங்களுக்கு ஏதாவது தெரியலைன்னா,

28:34.520 --> 28:37.440
நீங்கதான் அவங்களுக்கு சொல்லிக்
கொடுக்கணும்.

28:37.520 --> 28:38.560
சரிங்க, மேடம்.

28:38.640 --> 28:40.960
அதற்கு பதிலா, அவங்க வேலையை
நீங்க பார்க்கக்கூடாது.

28:42.160 --> 28:46.280
நீங்க எங்கிட்ட தைரியமா பேசின வேகத்தை,

28:46.760 --> 28:49.560
பஞ்சாயத்து அலுவலக வேலைகளை
கத்துக்கிறதுல காட்டுங்க.

28:49.880 --> 28:55.720
நான் உங்களை மாதிரி படிக்கல.
ஆனால், நான் முயற்சி பண்ணுறேன்.

28:56.080 --> 28:59.880
"ஜன கண மன" கத்துக்க நான் முயற்சி
செய்த மாதிரி.

29:02.360 --> 29:06.840
ஆரம்பத்துல, இதை வாழ்க்கை முழுவதும்
கத்துக்கவே முடியாதுன்னு நினைச்சேன்.

29:07.320 --> 29:08.680
ஆனால் நான் முயற்சி பண்ணேன்.

29:08.760 --> 29:12.000
நீங்க இவ்ளோ முயற்சி பண்ணியும் தெளிவா
கத்துக்கல.

29:12.480 --> 29:16.720
சரி, ஆனால், இரண்டு நாள்ல எப்படி
மனப்பாடம் பண்ணுறது?

29:17.520 --> 29:23.080
ஆனால், அடுத்த தடவை, ஜனவரி 26 அல்லது
ஆகஸ்டு 15 க்கோ வரும்போது

29:23.280 --> 29:26.200
நான் தெளிவா மனப்பாடம் செய்ததை
நீங்க பார்க்கலாம்.

29:27.040 --> 29:31.480
[மஞ்சு] இருந்தாலும், எதிலும் நம்பிக்கையை
நான் இழக்கல. வெட்கப்படவும் இல்லை.

29:32.840 --> 29:35.200
மேடம், அந்த இடைநீக்கம்?

29:38.640 --> 29:40.960
[பிரிஜ்] மாவட்ட நீதிபதி மேடம்,
அவரை இடைநீக்கம் செய்யாதீங்க.

29:41.240 --> 29:44.640
அவர்தான் என் மனைவிக்கு "ஜன கண மன"
மனப்பாடம் செய்ய உதவினார்.

29:44.720 --> 29:45.960
அவர் அருமையானவர்.

29:47.080 --> 29:50.480
-[பொதுமக்கள்] ஆமாம், அவர் ரொம்ப நல்லவர்.
-[பொதுமக்கள்] அவர் அருமையானவர்.

29:54.240 --> 29:55.320
சரி, இடைநீக்கத்தை விட்டுருங்க.

29:59.320 --> 30:01.320
[மெல்லிசை]

30:09.480 --> 30:11.280
[கார் என்ஜின் சத்தம்]

30:21.280 --> 30:23.400
[மெல்லிசை]

30:24.640 --> 30:28.360
சார், எல்லாருக்கும் கொடுக்க இனிப்புகள்
வைச்சிருக்கேன்.

30:28.440 --> 30:30.800
வாங்க, கொடுங்க.

30:30.880 --> 30:33.680
தலைவரே, இங்கே எப்படி மாவட்ட நீதிபதி
வந்தாங்கன்னு தெரியலையே.

30:34.040 --> 30:37.000
அவங்க கார்ல வந்தாங்க. வேற எப்படி வந்தாங்க.
நீ பார்க்கலையா?

30:39.000 --> 30:41.200
[மெல்லிசை]

30:56.400 --> 30:58.640
[மெல்லிசை தொடர்கிறது]

31:01.320 --> 31:04.040
["ஐ நோ ஐ ஆம் ஹாப்பி" ஆங்கில பாடல்
ஒலிக்கிறது]

31:05.360 --> 31:08.320
["ஐ நோ ஐ ஆம் ஹாப்பி" ஆங்கில பாடல்
தொடர்கிறது]

31:09.680 --> 31:13.200
["ஐ நோ ஐ ஆம் ஹாப்பி" ஆங்கில பாடல்
முடிகிறது]

31:26.360 --> 31:29.120
[அபிஷேக்] இந்த வருஷம் பரீட்சைக்கு மீண்டும்
தயார் ஆகலாம்னு நினைக்கிறேன்.

31:29.200 --> 31:30.720
இந்த தடவை போதுமான நேரம் கிடைக்கல.

31:31.360 --> 31:33.640
நாலைந்து மாதங்கள் தயாரிப்புக்கு போதாது.

31:34.120 --> 31:36.800
[பிரதீக்] சரியா சொன்ன. இதை நான் விளக்கி
சொல்ல இரண்டு மாசமா முயற்சி பண்ணுறேன்.

31:37.200 --> 31:38.800
ஆனால் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற.

31:38.880 --> 31:40.760
[அபிஷேக்] அப்போ இருந்த நிலைமை வேறு.

31:41.040 --> 31:43.520
[பிரதீக்] சரி, திடீர்ன்னு எப்படி மனசை
மாற்றிக்கிட்டே?

31:44.080 --> 31:46.800
சரி, எதுவா இருந்தாலும், உன் மனசு
மாறினது நல்லத்துக்கு தான்.

31:46.880 --> 31:47.960
ம்ம். சரி.

31:48.040 --> 31:50.960
உம் கொட்டுறதை நிறுத்து. மகிழ்ச்சியா இரு.

31:51.040 --> 31:52.400
எதற்காக மகிழ்ச்சியா இருக்கிறது?

31:52.800 --> 31:54.760
நான் இன்னும் ஒரு வருஷத்துக்கு
கிராமத்தில இருக்கணும்.

31:54.840 --> 31:57.280
சரியா சொன்ன. இன்னும் ஒரு வருசம்
நீ அங்கயே இருக்கணும்.

31:57.800 --> 31:59.880
அதனால, இருக்கிறதை வைச்சிகிட்டு,
மகிழ்ச்சியா வாழ கத்துக்கோ.

31:59.960 --> 32:02.240
சரி, நீ ஏன் இப்ப விரிவுரை வழங்குற?

32:02.640 --> 32:03.680
[பிரதீக்] நான் சொல்லுறது தப்பா?

32:04.080 --> 32:06.200
இதைதான் எல்லா டெட் பேச்சிலும்
ஒரு திருப்பத்தோட சொல்லுறாங்க.

32:06.680 --> 32:08.160
நீ எதை செய்கின்றாயோ, அதை நீ நேசி.

32:08.240 --> 32:09.320
சரிங்க, சார்.

32:09.680 --> 32:14.560
அதை எப்படி செய்றதுன்னா, எதையாவது செய்து,
நீ இருக்கிற கிராமத்தை லவ் பண்ண ஆரம்பி.

32:14.640 --> 32:15.960
இது ரொம்ப அதிகம்தான்.

32:17.160 --> 32:18.800
இந்த கிராமத்தை லவ் பண்ணுறது ரொம்ப கடினம்.

32:22.800 --> 32:23.960
[பிரதீக்] ஹலோ?

32:24.880 --> 32:26.200
ஹலோ, அபிஷேக் திரிபாதி!

32:27.320 --> 32:29.160
இது எவ்வளவு அழகுன்னு பார்க்கலாம்.

32:29.880 --> 32:32.880
வந்த நாள்ல இருந்து தொட்டி மேல ஏறி
பார்க்க சொன்னாங்க.

32:34.280 --> 32:36.520
[மெல்லிசை]

33:06.480 --> 33:08.800
[மெல்லிசை தொடர்கிறது]

33:16.200 --> 33:17.520
என்ன முட்டாள்தனம்!

33:18.320 --> 33:20.480
அழகா ஒன்னும் தெரியலையே.
இருக்கிற மாதிரிதான் இருக்கு.

33:21.240 --> 33:22.600
"கிராமத்தை லவ் பண்ணனுமாம்"

33:22.680 --> 33:23.960
நேரம் தான் விரயமாகுது.

33:24.840 --> 33:28.480
[பெண்ணின் இருமல் சத்தம்]

33:29.480 --> 33:30.560
[பெண் தொண்டை சரி செய்யும் ஒலி]

33:33.640 --> 33:36.080
[மெல்லிசை]

33:46.400 --> 33:47.400
[அபிஷேக்] யாரது?

33:49.440 --> 33:50.840
என் பேரு ரிங்கி.

33:51.720 --> 33:52.960
பஞ்சாயத்து தலைவரோட பொண்ணு.

33:56.720 --> 34:00.160
["பகேலி" என்ற அனுராக் சைக்கியா மற்றும்
ராகவ் சைதன்யாவின் பாடல் ஒலிக்கிறது]

35:01.040 --> 35:06.640
["பகேலி" என்ற அனுராக் சைக்கியா மற்றும்
ராகவ் சைதன்யாவின் பாடல் ஒலிக்கிறது]
