WEBVTT

00:00.600 --> 00:03.480
[ரேடியோவில் உற்சாக பாடல் ஒலிக்கிறது]

00:04.960 --> 00:06.000
கிராம பஞ்சாயத்து ஃபுலேரா

00:08.040 --> 00:10.080
[ரேடியோவை நிலைப்படுத்தும் சத்தம்]

00:11.520 --> 00:13.640
[ரேடியோவில் மெல்லிசை ஒலிக்கிறது]

00:30.960 --> 00:32.600
-தலைவரே, டீ.
-ம்ம்.

00:32.840 --> 00:34.440
-கொடு.
-[செய்தித்தாள் மடிக்கும் சத்தம்]

00:35.000 --> 00:36.320
சர்க்கரை அதிகம் போடல.

00:36.640 --> 00:38.680
நல்லது. சர்க்கரை குறைவா சாப்பிடுவது
நல்லதுதான்.

00:40.880 --> 00:41.880
அபிஷேக் திரிபாதி

00:42.720 --> 00:48.160
சார், தேயிலை இல்ல, அதனால
உங்களிடமிருந்து கொஞ்சம் எடுத்தேன்.

01:00.160 --> 01:02.640
-[ரேடியோவில் பாடல் ஒலிக்கிறது]
-[டீ உறியும் சத்தம்]

01:02.720 --> 01:07.440
அப்புறம், தலைவரே, மல்கொபூரில் இருக்கும்
பையனை பற்றி தகவல் ஏதும் இருக்கா?

01:07.880 --> 01:11.680
அவங்க எல்லாம் அதிக வரதட்சணை கேட்கறாங்க.

01:12.360 --> 01:15.240
நான் சொன்னேன், "உங்க பையன் பாண்டே வேணும்னா
பொறியாளரா இருக்கலாம்,

01:15.320 --> 01:17.400
ஆனா என் பொண்ணும் பட்டதாரிதான்.

01:17.480 --> 01:18.840
உங்க கோரிக்கைய கொஞ்சம் குறைங்க."

01:19.080 --> 01:20.760
-அவர் சம்மதிச்சாரா?
-[பிரிஜ்] இல்லவே இல்லை.

01:21.160 --> 01:24.560
அவர் சொல்லுறாரு, "உங்க பொண்ணு
ஒரு அறிவியல் பட்டதாரின்னா,

01:24.920 --> 01:27.280
நான் 15 லட்சத்திலே முடிச்சிருப்பேன்."

01:27.360 --> 01:28.760
ஆனால், அவ ஒரு கலை பட்டதாரி தான

01:28.840 --> 01:31.040
மேலும் தொலைக்கல்வி மூலம் தான்
பட்டம் பெற்றா.

01:31.120 --> 01:32.720
அதனால 20 லட்சத்துக்கு கீழ கிடையாதாம்.

01:34.040 --> 01:37.680
தலைவரே, சரியான பேராசை பிடித்த
குடும்பம் போல.

01:38.040 --> 01:40.320
-அப்படின்னாலும் எதுவும் பண்ண முடியாது.
-[விகாஸ்] ம்ம்.

01:40.640 --> 01:43.480
அப்புறம், அவரது மகன்
எவ்வளவு சம்பாதிக்கிறாரு?

01:44.680 --> 01:48.360
ஒரு லட்சம் சம்பாதிக்கிறாருன்னு சொல்றாங்க.

01:48.920 --> 01:51.080
ஆனால் சிடிசி என்று ஒன்னு இருக்கு.

01:51.160 --> 01:52.840
-[பிரிஜ்] சிடிசின்னா என்ன தெரியும்ல?
-ஆம்.

01:53.080 --> 01:56.560
எல்லாம் பிடித்த பிறகு கையில
80000 இருக்கும்.

01:57.200 --> 01:58.920
அப்போ அவர் மகன் 80000 வாங்குற
காரணத்திற்காக

01:59.000 --> 02:00.960
-20 லட்சம் கேட்கறாங்க அதான.
-[பிரிஜ்] ஆம்.

02:01.040 --> 02:02.240
ஐயோ, கடவுளே.

02:02.840 --> 02:07.280
செகரேட்டரி சார், அவங்க நம்ம தலைவர
ஏமாற்ற முயற்சி பண்ணுறாங்க போல?

02:08.040 --> 02:09.160
தெரியல.

02:09.640 --> 02:12.880
நீங்க 80000 சம்பளம் வாங்கறீங்கன்னு வைங்க.

02:13.960 --> 02:16.160
நீங்க எவ்ளோ வரதட்சணை எதிர்பார்பிங்க?

02:18.320 --> 02:19.760
நான் வரதட்சணை கேட்கமாட்டேன்.

02:20.000 --> 02:22.720
[பிரிஜ்] நீங்க கேட்டாலும் ஒன்னும் பெருசா
கிடைக்காது.

02:22.800 --> 02:25.320
20000 சம்பளத்தை வைச்சுட்டு என்ன
கேட்கமுடியும்?

02:25.400 --> 02:30.080
மிஞ்சிப்போனா, ஐந்து லட்சமும்,
ஒரு இருசக்கர வண்டியும் கொடுப்பாங்க.

02:30.160 --> 02:32.040
அவர் ஏற்கனவே வண்டி வைச்சிருக்காரு.

02:32.120 --> 02:35.520
சார், நீங்க வேணும்னா பணமா வாங்கிக்கோங்க.

02:35.600 --> 02:37.840
-அதைதான் நான் செய்தேன்.
-[வேடிக்கையான இசை]

02:37.920 --> 02:40.360
20000 க்கு என்ன மதிப்பு இருக்கு?

02:42.200 --> 02:43.560
என் சம்பளம் இப்போ 20000.

02:44.440 --> 02:46.560
ஐஐஎம் முடிஞ்சதும் என் வருமானம் ஒரு லட்சம்.

02:47.560 --> 02:50.160
அப்பவும், நான் வரதட்சணை கேட்கமாட்டேன்.

02:51.640 --> 02:53.640
[மெல்லிய இசை ஒலிக்கிறது]

03:05.160 --> 03:07.160
[தீம் இசை ஒலிக்கிறது]

03:56.680 --> 03:57.840
பஞ்சாயத்

04:04.720 --> 04:11.440
[அபிஷேக் முணுமுணுக்கும் சத்தம்]

04:11.520 --> 04:14.080
[தொடர்ந்து முணுமுணுக்கும் சத்தம்]

04:14.400 --> 04:15.880
[படியேறி வரும் சத்தம்]

04:15.960 --> 04:19.200
-[விகாஸ்] தீன்பந்து அண்ணா, நலமா?
-நலம்.

04:19.280 --> 04:22.440
அவரை பாருங்களேன், அப்பாவான சந்தோஷம்
முகத்திலே தெரியுது.

04:22.520 --> 04:26.040
அப்படி இல்ல, மகனோட பிறப்பு சான்றிதழை
சமர்ப்பிச்சிட்டு போகலாம்ன்னு வந்தேன்.

04:26.120 --> 04:28.680
என்கிட்ட கொடுங்க. அந்த நாற்காலியை
எடுத்துபோட்டு உட்காருங்க.

04:32.560 --> 04:37.400
[விகாஸ்] குழந்தையின் அப்பா பெயர்,
தீன்பந்து பதக்.

04:37.480 --> 04:40.920
குழந்தையின் அம்மா பெயர், சுஷ்மா தேவி.

04:41.000 --> 04:43.080
-என் மனைவி.
-[வெட்கப்பட்டு சிரிக்கும் சத்தம்]

04:43.560 --> 04:45.240
குழந்தை பெயர்.

04:48.440 --> 04:49.800
குழந்தை பெயர்?

04:50.560 --> 04:52.280
என்னாச்சு? எதுவும் தப்பு நடந்து போச்சா?

04:53.240 --> 04:54.720
"ஆத்மாராம்."

04:55.240 --> 04:56.800
உங்க மகன் பெயர் ஆத்மாராமா?

04:56.880 --> 05:00.320
ஆம், என் மனைவி முடிவு பண்ண பெயர்.
அவளுக்கு ரொம்ப பிடித்த பெயர்.

05:00.680 --> 05:01.880
[தீன்பந்து] ஏதாவது தப்பா?

05:02.120 --> 05:05.320
இது பழைய பெயர் மாதிரி தெரியலயா?

05:05.400 --> 05:06.440
ஆத்மாராம்.

05:06.520 --> 05:10.080
[விகாஸ்] உங்க பையன பழிவாங்குற போல இருக்கு.

05:10.360 --> 05:12.400
-அப்படியா?
-[விகாஸ்] அப்படிதான். இருங்க...

05:13.320 --> 05:15.040
செகரேட்டரி சார்.

05:16.120 --> 05:17.640
இவருக்கு ஒரு பையன் இருக்கான்.

05:18.080 --> 05:20.600
நீங்க ஏன் ஒரு புது பெயர பரிந்துரை
பண்ணக்கூடாது?

05:23.200 --> 05:25.600
ஆத்மாராம் நல்ல பெயர் தான.
அதில என்ன பிரச்சனை?

05:26.800 --> 05:29.960
சார், உங்க மகன
ஆத்மாராம்னு கூப்பிடுவிங்களா?

05:31.400 --> 05:33.920
[விகாஸ்] நீங்க ஏன் மாடர்னா
ஒன்னு சொல்லகூடாது?

05:34.000 --> 05:35.800
எதாவது புதுசா.

05:35.880 --> 05:39.560
எனக்கு நீங்க எதாவது புதுசா சொல்லுங்க சார்.

05:39.920 --> 05:41.040
[விகாஸ்] சொல்லுங்க சார்.

05:41.120 --> 05:42.680
என்ன பிடிக்கும்? ரேஹான்னு வைங்க.

05:42.760 --> 05:46.040
-ஆனால் ரேஹான்.
-"ஆ"ல ஆரம்பிக்கணுமே.

05:47.680 --> 05:48.880
ஆ...

05:48.960 --> 05:49.960
ஆனந்த்.

05:50.040 --> 05:51.680
ஆரவ்னு கூப்பிடுங்க. அதான் புதுசு இப்போ.

05:51.760 --> 05:52.760
[விகாஸ்] ஆரவ்.

05:52.840 --> 05:54.160
ஆரவ் நல்லா இருக்கு.

05:54.240 --> 05:56.560
மாடர்னா இருக்கு. கேட்க நல்லா இருக்கு.

05:57.680 --> 05:59.440
அக்ஷய் குமாரோட மகன் பெயரே அதான்.

06:00.360 --> 06:01.560
என்ன?

06:01.640 --> 06:02.720
[விகாஸ்] அக்ஷய் குமார்.

06:02.800 --> 06:04.640
அக்ஷய் குமார் மகனோட பெயர் ஆரவா?

06:05.360 --> 06:06.880
[தீன்பந்து] சிறப்பா இருக்கே.

06:06.960 --> 06:09.560
ஆ, அபிஷேக் சார், ஆரவ் பெயருக்கு
அர்த்தம் என்ன?

06:09.640 --> 06:13.120
என்னன்னு யாருக்கு தெரியும்?
அது அக்ஷய் குமாரோட மகன் பெயர்.

06:13.200 --> 06:14.280
நீங்க...

06:14.360 --> 06:16.200
அந்த விண்ணப்பத்த என்கிட்ட கொடுங்க.

06:16.680 --> 06:19.480
நான் என் மனைவிகிட்ட பேசறேன்.

06:19.880 --> 06:22.600
ரொம்ப நன்றி செகரேட்டரி சார்.

06:22.680 --> 06:25.400
அப்படியே அக்ஷய் குமார்கிட்ட போய்
என் மகனுக்கு ஆசீர்வாதம் வாங்கணும்.

06:25.480 --> 06:28.560
ரொம்ப சந்தோஷமா இருக்காரில்ல.
நீங்க நல்ல பெயரைத் தான் சொல்லியிருக்கிங்க.

06:28.640 --> 06:30.560
[அபிஷேக்] என்னை எதுக்கு
இதில சம்பந்தபடுத்தற?

06:30.760 --> 06:33.640
முட்டாள் தனமான விஷயத்துல
என்னை சம்பந்தப்படுத்தாத.

06:36.560 --> 06:39.160
[முணுமுணுக்கும் சத்தம்]

06:45.920 --> 06:48.160
[சோர்வான இசை]

07:15.080 --> 07:18.040
ரிங்கி அம்மா, இதற்கு பதில் சொல்லு.

07:18.920 --> 07:21.640
நல்ல குடும்பத்துல இருந்து ஒரு பையன் வரான்

07:21.720 --> 07:24.280
வரதட்சணையும் கேட்கலன்னா. என்ன அர்த்தம்?

07:25.280 --> 07:27.720
அப்போ அந்த பையன்கிட்ட எதோ குறை
இருக்குன்னு அர்த்தம்.

07:27.800 --> 07:30.040
எந்த பிரச்சனையும் இல்ல.
அவன் ஆரோக்கியமாதான் இருக்கான்.

07:32.400 --> 07:34.440
யாரை பத்தி பேசுறிங்க நீங்க?

07:35.240 --> 07:36.400
செகரேட்டரி.

07:37.560 --> 07:39.360
[பிரிஜ்] அவன் ரிங்கிக்கு பொருத்தமானவனா?

07:39.440 --> 07:40.960
நம்ம ஜாதி தான்.

07:41.960 --> 07:43.720
அந்த மல்கொபூர் பையனுக்கு என்ன பிரச்சனை?

07:43.800 --> 07:46.920
அவன் சொட்டையா இருக்கான் அப்பறம்
இருபது லட்சம் வரதட்சணையா வேற கேட்கிறான்.

07:47.000 --> 07:50.040
உங்க செகரேட்டரி ஒன்னும் மிதுன்
சக்ரவர்த்தி போல இல்ல.

07:50.120 --> 07:53.000
எனக்கு தெரியும் அவன் மிதுன் சக்ரவர்த்தி
போல இல்லதான்.

07:53.080 --> 07:55.520
ஆனால், அவன் வரதட்சணை கேட்டு பேராசைபடல.

07:57.160 --> 07:58.800
அவன் வருமானம் வெறும் 20000 தான்.

07:59.440 --> 08:01.120
நம்ம பஞ்சாயத்து ஆபீஸ்லதான் வாழுறான்.

08:01.520 --> 08:03.040
அவனுக்கு போய் நம்ம பொண்ணை கொடுக்கணுமா?

08:03.400 --> 08:06.360
இப்போ வேணும்னா அவன் 20000 சம்பாதிக்கலாம்.

08:06.640 --> 08:11.880
ஆனால் அவன் படிக்கிற அந்த தேர்வில
வெற்றி பெற்றான்னா,

08:11.960 --> 08:15.040
அவனோட மாத வருமானம் ஒரு லட்சமா ஆகும்.

08:15.400 --> 08:17.920
அந்த தேர்வு எழுதற எல்லாருமே
வெற்றி பெற்றுவிடுகிறார்களா?

08:18.000 --> 08:19.040
அவனால ஏன் முடியாது?

08:19.120 --> 08:22.160
இரவு பகலா அவன் படிக்கிறான், கடுமையா
முயற்சிக்கிறான், ஏன் அவனால முடியாது?

08:22.240 --> 08:24.600
நீங்க கூட தான் எம்எல்ஏவாக
கடுமையா முயற்சி பண்ணிங்க.

08:24.680 --> 08:25.680
உங்களால முடிஞ்சுதா?

08:27.320 --> 08:29.320
[மஞ்சு] கடுமையா உழைக்கிறதால ஒன்னுமில்ல.

08:29.720 --> 08:31.800
ஒரு பையனுக்கு நல்ல கூர்மையான
புத்தி வேணும்.

08:33.640 --> 08:35.880
[உணர்ச்சிபூர்வமான இசை]

08:37.880 --> 08:41.800
நல்ல அறிவு இருக்கா இல்லையான்னு
நான் எப்படி கண்டுபிடிப்பேன்?

08:45.920 --> 08:48.120
[மெல்லிய இசை]

08:50.840 --> 08:53.000
[பிரிண்டரின் ஒலி]

09:03.080 --> 09:04.120
சார்.

09:05.560 --> 09:06.640
இது...

09:13.040 --> 09:14.440
நிறைய எழுத்து பிழை இருக்கு.

09:15.080 --> 09:17.120
"ஹாண்ட் பம்ப்ப" "பாண்ட் பம்புன்னு"
எழுதியிருக்க.

09:17.560 --> 09:18.920
ஓ, அப்படியா?

09:19.680 --> 09:24.080
நீங்களே பாருங்க, அது டைப்பிங் பிழை.

09:26.960 --> 09:28.720
நீ போகலாம். இன்றைய வேலை முடிஞ்சது.

09:32.120 --> 09:33.160
அதுக்குள்ளயா?

09:35.600 --> 09:37.680
இரண்டு வாரத்தில தேர்வு இருக்கு.
நான் தயார் ஆகணும்.

09:40.280 --> 09:42.600
[விகாஸ்] கடவுள் மேல நம்பிக்கை வைங்க.
நல்லதே நடக்கும்.

09:42.680 --> 09:44.120
மனசை நிம்மதியா வைச்சுக்கோங்க.

09:44.480 --> 09:46.160
வாழ்க்கைல ரொம்ப நிம்மதியா இருந்துட்டேன்.

09:46.240 --> 09:47.400
அதான் இங்கே இருக்கேன்.

09:47.720 --> 09:50.960
-இதுக்கும் மேல நிம்மதியா இருக்க விரும்பல.
-[பாத்திரம் அடுப்பில் வைக்கும் சத்தம்]

09:53.760 --> 09:55.800
நீங்க பிரமாதமா அர்ப்பணிப்போட
இருக்கீங்க, சார்.

09:56.320 --> 09:58.520
[விகாஸ்] கண்டிப்பா நீங்க தேர்வை நல்லா
எழுதுவீங்க.

09:59.160 --> 10:00.600
தேர்வு இணையதளத்தில நடக்கும்.

10:00.680 --> 10:02.560
அப்போ, நீங்க இணையதளத்தையே வென்றுடுவிங்க.

10:03.680 --> 10:05.840
-நூடூல்ஸ் பிடிக்குமா?
-[விகாஸ்] நான் கிளம்பறேன் சார்.

10:05.920 --> 10:08.360
நான் சீக்கீரம் போனா என் மனைவி
சந்தோஷப்படுவா.

10:09.160 --> 10:10.280
சரி, சார்.

10:15.040 --> 10:18.600
[ரேடியோவில் உற்சாகமான இசை ஒலிக்கிறது]

10:22.200 --> 10:25.320
-[முணுமுணுக்கும் சத்தம்]
-செகரேட்டரி ஆபீஸ்ல இருக்காரான்னு கேட்டேன்?

10:25.400 --> 10:26.400
என்ன?

10:26.480 --> 10:29.320
அந்த செகரேட்டரி ஆபீஸ்ல இருக்காரா
இல்லையான்னு எனக்கு தெரிஞ்சாகணும்?

10:29.760 --> 10:30.760
இருக்கார்.

10:33.000 --> 10:34.080
சுஷ்மா!

10:34.160 --> 10:35.720
[கோழி கொக்கரிக்கும் சத்தம்]

10:35.800 --> 10:36.840
சுஷ்மா.

10:36.920 --> 10:38.320
சுஷ்மா!

10:38.400 --> 10:39.600
[தீன்பந்து] விழுந்துற போற.

10:39.680 --> 10:42.560
மிக அருகில் உள்ள மருத்துவனையே பத்து
கிலோமீட்டர் தள்ளிதான் இருக்கு.

10:42.840 --> 10:44.160
சுஷ்மா, நில்லு.

10:44.360 --> 10:46.000
நம்ம பேசி தீர்த்துக்கலாம்.

10:46.080 --> 10:47.080
சுஷ்மா.

10:47.880 --> 10:50.160
[உற்சாக இசை]

10:53.160 --> 10:55.040
[சுஷ்மா] நீங்கதான் அபிஷேக் சாரா?

10:56.640 --> 10:58.640
உங்க பெயர் ஒரு நடிகர் பிள்ளையோட
பெயரா இருந்தா,

10:58.720 --> 11:01.360
எல்லா பிள்ளைங்க பெயரும் அப்படிதான்
இருக்கணுமா?

11:01.600 --> 11:02.720
என்ன விஷயம்?

11:02.800 --> 11:05.920
உங்களுக்கு பெயர் வைக்கணும்னா, நீங்க
இரண்டு பிள்ளை பெற்று அப்புறம் வைங்க.

11:06.000 --> 11:07.800
அப்புறம் கூப்பிடுங்க ஆரவ் அது இதுன்னு.

11:09.280 --> 11:10.720
-சுஷ்மா.
-அமைதியா இரு.

11:10.800 --> 11:12.600
[சுஷ்மா] பெயரை யோசிக்க பத்து நாள் ஆச்சு.

11:12.680 --> 11:15.240
ஆத்மாராம், என்னோட உறவினர்கிட்ட
எல்லாம் கூட சொல்லிட்டேன்.

11:15.320 --> 11:18.120
என் அத்தை கூட ஆத்மாராம்னு தான்
ஸ்வெட்டர்ல தைத்துக்கொண்டு இருக்காங்க.

11:18.200 --> 11:20.440
நீங்க பெயரை மாற்ற முயற்சி பண்ணுறீங்க.

11:20.520 --> 11:23.960
நான் அத்தைகிட்ட பேசிட்டேன். அவங்க "ஆ"
மட்டும்தான் ஸ்வெட்டர்ல தைத்திருக்காங்க.

11:24.040 --> 11:25.320
"ஆ" என்றால் ஆரவ் சரியா போச்சு.

11:25.400 --> 11:27.960
சின்ன பெயர்தான். தைக்கிறதுக்கு
அதிக பஞ்சுகூட தேவைப்படாது.

11:28.040 --> 11:29.200
உங்க கதையெல்லாம் நிறுத்துங்க.

11:29.280 --> 11:32.000
எதாவது முட்டாள் எதையாவது சொன்னா
அதை அப்படியே ஏற்றுக்கொள்வீங்களா?

11:32.080 --> 11:34.720
ஆரவ் நல்ல பெயர்தான. யோசிச்சு பாரு நீயே.

11:34.800 --> 11:36.280
எது நல்லா இருக்கும்?

11:36.360 --> 11:38.400
ஆரவ் அம்மாவா இல்ல ஆத்மாராமோட அம்மாவா.

11:38.480 --> 11:39.960
ஆத்மாராமோட அம்மா!

11:42.600 --> 11:45.080
நல்லது, உனக்கு ஆத்மாராமோட அம்மாவாதான்
இருக்கணும் அதான?

11:45.160 --> 11:47.480
எனக்கு ஆரவ்வோட அப்பாவாதான் இருக்கணும்.

11:47.560 --> 11:50.680
ஆரவ் அப்பாவா இருந்தா மட்டும்
நீங்க அக்ஷய் குமாரா ஆகிற மாட்டீங்க.

11:50.760 --> 11:52.840
நீயும் ஆத்மாராம் அம்மாவா இருந்தா மட்டும்,

11:53.400 --> 11:55.200
எல்லா ஆத்மாராம்க்கும் அம்மாவா ஆகிற மாட்ட.

11:55.280 --> 11:58.320
ஆரவ்ன்னு வைக்க சொல்லுறீங்களே,
உங்களுக்கு அர்த்தம் தெரியுமா?

11:58.400 --> 12:00.120
-ஆம், தெரியும்.
-சொல்லுங்க பார்ப்போம்.

12:00.200 --> 12:02.400
நான் சொல்லுறேன், ஆரவ்ன்னா...

12:04.840 --> 12:06.160
அக்ஷய் குமாரோட மகன்.

12:08.800 --> 12:11.400
செகரேட்டரி சார், என்ன அர்த்தம்
இவருக்கு புரிய வைத்திருக்கீங்க?

12:11.760 --> 12:12.880
நான் என்ன பண்ணினேன்?

12:13.640 --> 12:16.920
புது பெயர் கேட்டார், நான் சொன்னேன். என்னை
பார்த்தா பெயர் வைக்கிறவன் போல் தெரியுதா?

12:17.000 --> 12:18.840
[தீன்பந்து] சார், நல்ல பெயர்தான் இது.

12:18.920 --> 12:20.720
ஒரு புது விண்ணப்பம் தாங்க.

12:20.800 --> 12:22.600
இப்பவே நான் பெயரை மாற்றி தரேன்.

12:22.840 --> 12:24.240
எனக்கும் புது விண்ணப்பம் கொடுங்க.

12:24.320 --> 12:26.120
எனக்கு எழுத வராது, அதனால நீங்களே எழுதுங்க.

12:26.200 --> 12:27.960
-கொடுங்க.
-புத்தி கெட்டு போச்சா உங்களுக்கு.

12:28.040 --> 12:30.120
ஒரே பிள்ளைக்கு இரண்டு விண்ணப்பம்
சமர்பிக்க முடியாது.

12:30.560 --> 12:31.760
[அபிஷேக்] வீட்டுக்கு போங்க.

12:31.840 --> 12:33.840
பெயர முடிவு பண்ணிட்டு
அப்புறம் திரும்ப வாங்க.

12:34.320 --> 12:36.240
-போங்க.
-வீட்டுக்கு போங்க.

12:36.480 --> 12:39.680
என் குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு
இப்போ நூடுல்ஸ் முழுங்குறீங்களா?

12:39.760 --> 12:41.120
போகலாம், அவர்கிட்ட விவாதம் வேணாம்.

12:41.200 --> 12:43.160
அவர் எந்த தேர்விலயும் தோற்றதே இல்ல.

12:43.240 --> 12:45.240
[தீன்பந்து] முட்டாள் மாதிரி உளறாம வா.

12:45.320 --> 12:46.720
உன்னால வாசிக்ககூட முடியாது.

12:49.240 --> 12:50.520
எதாவது ஆச்சா, சார்?

12:50.920 --> 12:51.960
போயிடு ஒழுங்கா.

12:57.760 --> 12:59.960
[ஆழ்ந்த இசை]

13:00.960 --> 13:02.320
[செல்ஃபோன் மணி சத்தம்]

13:06.720 --> 13:10.240
[பிரிஜ்] உங்களுக்கு உண்மையா கூர்மையான
அறிவு இருந்தா, ஒரு நிமிஷத்தில பதிலளிங்க.

13:10.880 --> 13:13.480
ஒரே இரவுல மூன்று இடத்தில
தீ பிடித்து எரியுது.

13:13.680 --> 13:16.080
கோவில், பள்ளி மற்றும் மருத்துவமனை.

13:16.480 --> 13:20.120
எந்த இடத்தில எரியற தீயை முதலில்
ஆம்புலன்ஸ் அணைக்கும்?

13:20.880 --> 13:23.040
[வேடிக்கையான இசை]

13:24.240 --> 13:26.520
என்னை படிக்க விடுங்கப்பா.

13:41.480 --> 13:43.240
தலைவர் சார்

13:47.360 --> 13:49.440
[தொடர்ந்த அழைப்பு சத்தம்]

13:51.760 --> 13:52.760
[பிரிஜ்] ஹலோ.

13:53.280 --> 13:56.440
செகரேட்டரி சார், உங்களுக்கு ஒரு கேள்வி
அனுப்பியிருக்கேன்.

13:56.680 --> 13:58.040
அதை நீங்க பார்த்துட்டீங்க.

13:58.320 --> 14:01.840
[பிரிஜ்] ஏன்னா, இங்கே எனக்கு,
நீல டிக் வந்திருக்குது.

14:02.720 --> 14:05.960
நானே உங்களை அழைக்கணும்னு
இருந்தேன். ஆனால் நீங்களே கூப்பிட்டிங்க.

14:06.560 --> 14:09.120
[பிரிஜ்] உங்களுக்கு ஒரு நிமிஷம்தான்
அவகாசம் இருக்கு.

14:09.200 --> 14:11.520
நான் ஒரு நிமிஷத்துக்கு அப்பறம் அழைப்பேன்.

14:12.840 --> 14:17.120
-ஆம்.
-[பிரிஜ்] சிறிது நேரம் அதிகம் தருகிறேன்.

14:17.200 --> 14:22.440
கோவிலா, பள்ளியா இல்லை மருத்துவமனையான்னு
சொல்லுங்க.

14:23.040 --> 14:27.480
உங்களுக்கு கேட்டதா கோவில், பள்ளி,
இல்லைன்னா மருத்துவமனையா?

14:27.800 --> 14:31.480
எதை முதலில் ஆம்புலன்ஸ் வந்து அணைக்கும்?

14:31.560 --> 14:33.600
யாரை முட்டாளாக்க பார்க்குறிங்க?

14:33.800 --> 14:35.800
எப்போவாச்சு ஆம்புலன்ஸ் வந்து
தீயை அணைத்து இருக்கா?

14:40.240 --> 14:41.320
சொல்லுங்க.

14:41.640 --> 14:43.720
ஆம்புலன்ஸ் வந்து தீ அணைக்காது சார்.

14:44.040 --> 14:46.360
இல்ல, இல்ல, தவறா சொல்லுறிங்க.

14:46.440 --> 14:48.320
நீங்க பதிலை ஒட்டு கேட்டுட்டிங்க.

14:48.400 --> 14:50.400
தலைவரே, பதிலை ஒட்டு கேட்டது என் தப்பு இல்ல

14:50.480 --> 14:53.400
சரிதான், அப்போ வேறு கேள்வி அனுப்பவா?

14:54.240 --> 14:55.880
தலைவரே, நான் இப்போ வேலையாக இருக்கேன்.

14:55.960 --> 14:59.080
இல்ல, இல்ல, இப்போ நீங்க கேள்வியை தவிர்க்க
முயற்சி பண்ணுறிங்க.

14:59.160 --> 15:01.720
[பிரிஜ்] இப்படியா உங்க
எம்பிஏவை முடிப்பிங்க?

15:01.800 --> 15:04.120
தலைவரே, அங்க வாட்ஸ் அப்ல வர
கேள்வியெல்லாம் கேட்கமாட்டாங்க.

15:04.200 --> 15:05.520
நான் இப்போ வைக்கிறேன்.

15:05.960 --> 15:06.960
உம்?

15:08.360 --> 15:10.760
[வேடிக்கையான இசை]

15:19.600 --> 15:21.600
[கதவை தட்டும் சத்தம்]

15:27.120 --> 15:28.320
[தொடர்ந்து தட்டும் சத்தம்]

15:31.120 --> 15:32.120
தலைவரே.

15:32.200 --> 15:34.120
எம்பிஏல என்ன கேள்விகள் கேட்பாங்க?

15:38.200 --> 15:40.240
கணக்கு, இலக்கணம், பகுத்தறிவு பற்றிதான்
கேட்பாங்க.

15:41.760 --> 15:44.240
அப்படியா...

15:45.200 --> 15:47.320
உங்களுக்கு இது எல்லாமே புரியுமா?

15:48.480 --> 15:49.720
ஆம்.

15:49.800 --> 15:52.520
-ஏன்? என்ன பிரச்சனை?
-எந்த பிரச்சனையும் இல்லை.

15:52.600 --> 15:55.080
ஒரு பெரியவனா சும்மா கேள்வி கேட்டேன்.

15:55.400 --> 15:57.520
உங்க அப்பா பக்கத்தில இல்லைல.

15:57.760 --> 15:58.840
ஆனால் நான் இருக்கேன்.

15:58.920 --> 16:00.240
சரிதான?

16:03.840 --> 16:04.840
ஆம்.

16:12.960 --> 16:13.960
ம்ம்.

16:15.800 --> 16:18.760
அப்போ எல்லா பாடத்திலேயும் நீங்க கவனம்
செலுத்தறீங்களா?

16:20.680 --> 16:23.200
ஆம், நான் இப்போ குவாண்ட் பண்ணுறேன்.

16:25.680 --> 16:26.680
கணக்குன்னு சொன்னேன்.

16:26.760 --> 16:28.880
ஆம், எனக்கு புரியுது.

16:29.440 --> 16:30.600
நீங்க பாருங்க...

16:30.920 --> 16:32.680
நான் இங்கே சும்மா உட்கார வந்தேன்.

16:39.640 --> 16:40.800
செகரேட்டரி...

16:42.720 --> 16:44.840
நீங்க இந்த கேள்விக்கு ஏன் டிக் போடவில்லை?

16:45.280 --> 16:46.440
[பிரிஜ்] இது.

16:47.880 --> 16:50.760
எனக்கு கொஞ்சம் குழப்பமா இருந்தது
அதான் அதை டிக் பண்ணல.

16:51.200 --> 16:52.400
[பிரிஜ்] குழப்பமா?

16:53.480 --> 16:56.560
அப்போ கடினமான கேள்விகளுக்கு
குழம்பிடுவிங்களா?

16:58.520 --> 17:00.960
இல்ல, அப்படி இல்ல. நான் முதலில்
எளிதானவற்றை செய்கிறேன்.

17:01.040 --> 17:02.920
இது ரொம்ப கடினமா இருக்கு
அதனால் பிறகு செய்வேன்.

17:06.200 --> 17:09.200
இது கடினமா இருந்துச்சுன்னா,
அப்போ இப்போவே பண்ணுங்க.

17:09.560 --> 17:10.600
[பிரிஜ்] பண்ணுங்க.

17:10.800 --> 17:12.600
மீதி உள்ள பாடத்தை என்னால முடிக்க முடியாது.

17:12.680 --> 17:14.000
மீதி உள்ளது மேல கவனம் தரேன்.

17:14.080 --> 17:16.520
இப்போ இதை தவிர்த்து விட்டீங்கன்னா
அப்புறம் பண்ண மாட்டிங்க.

17:17.040 --> 17:18.280
அப்புறம் தேர்வில கூட,

17:18.360 --> 17:20.560
நீங்க தவிர்த்த கேள்விகள தான் கேட்பாங்க.

17:20.640 --> 17:22.400
வாங்க. பண்ணுங்க.

17:22.840 --> 17:25.760
-இதை பண்ணுங்க. நான் சொல்லுறேன் பண்ணுங்க.
-நான் அப்பறம் பண்ணுறேன்.

17:25.840 --> 17:29.360
இப்போ பண்ணுங்க. உங்களுக்கு மூன்று
நிமிடம் அவகாசம்.

17:31.840 --> 17:35.000
[பிரிஜ்] தேர்வுல கூட அப்படி நேரம்
பார்ப்பாங்க. இல்லையா?

17:35.560 --> 17:36.840
அப்படித்தானே?

17:36.920 --> 17:43.160
அதனால உங்க அவகாசம் இப்போ ஆரம்பிக்குது.
பண்ணுங்க.

17:43.800 --> 17:45.840
[கடிகார சத்தம்]

17:48.480 --> 17:50.680
[உற்சாக இசை]

18:07.000 --> 18:09.000
[உற்சாக இசை நீடிக்கிறது]

18:12.600 --> 18:13.880
என்ன ஆச்சு?

18:14.480 --> 18:15.560
நான் யோசிக்கிறேன்.

18:19.920 --> 18:21.800
இன்னுமா யோசிக்கிறீங்க?

18:22.960 --> 18:24.920
இவ்ளோ நேரமா தேர்வில யோசிக்க கொடுப்பாங்க?

18:25.000 --> 18:27.640
நீங்க அமைதியா இருந்தாதான்,
நான் யோசிக்க முடியும்.

18:28.040 --> 18:30.000
சரி, நல்லது, நான் அமைதியா இருக்கேன்.

18:31.600 --> 18:33.640
[உற்சாக இசை]

18:51.280 --> 18:53.600
[உற்சாக இசை நீடிக்கிறது]

19:00.040 --> 19:01.080
பத்து.

19:01.440 --> 19:02.520
ஒன்பது.

19:02.960 --> 19:04.040
எட்டு.

19:04.240 --> 19:05.240
ஏழு.

19:06.200 --> 19:08.280
-ஆறு.
-முடிந்தது.

19:10.000 --> 19:11.600
37 ஆல் 23.

19:13.040 --> 19:14.280
விடை பின்னால கொடுத்திருப்பாங்க.

19:14.520 --> 19:15.680
நீங்க சரி பாருங்க.

19:23.920 --> 19:26.800
24 ஆல் 75 தான் சரியான விடை.

19:27.800 --> 19:28.800
என்ன?

19:29.600 --> 19:31.160
ஆம், 24 ஆல் 75.

19:34.360 --> 19:36.040
இங்க பாருங்க. 24 ஆல் 75.

19:36.840 --> 19:39.720
-பாருங்க. நான் சும்மா சொன்னேன்.
-[சிரிக்கும் சத்தம்]

19:40.560 --> 19:42.440
சரியான விடைதான். அதில டிக் செய்ங்க இப்போ.

19:43.480 --> 19:44.480
போடுங்க.

19:45.280 --> 19:47.160
[பிரிஜ்] நீங்க எம்பிஏல வெற்றி பெறுவீங்க.

19:48.440 --> 19:49.840
நான் உறுதியா சொல்லுறேன்.

19:51.480 --> 19:54.640
[செல்ஃபோன் அழைக்கும் சத்தம்]

19:58.800 --> 19:59.800
ஹலோ.

20:00.960 --> 20:01.960
ஹலோ?

20:03.120 --> 20:04.120
சண்டையா?

20:04.560 --> 20:05.880
யார் சண்டை போடுறா?

20:10.640 --> 20:13.400
[சுஷ்மா] நான் சொல்லிட்டேன்,
இவங்க ஆத்மாராமோட பாட்டி.

20:13.480 --> 20:14.480
அவ்ளோதான்.

20:14.560 --> 20:16.200
[தீன்பந்து] இவங்க ஆரவோட பாட்டி.

20:16.280 --> 20:17.360
அவ்ளோதான்!

20:17.440 --> 20:18.920
-ஆத்மாராமோட பாட்டி!
-ஆரவோட பாட்டி!

20:19.000 --> 20:20.440
-ஆத்மாராமோட பாட்டி!
-ஆரவோட பாட்டி!

20:20.520 --> 20:22.000
-ஆத்மாராமோட பாட்டி!
-ஆரவோட பாட்டி!

20:22.080 --> 20:24.000
-அமைதி. அமைதி.
-ஆரவோட பாட்டி!

20:24.080 --> 20:26.240
உட்காருங்க. உட்காரு. அமைதியா இருங்க.

20:26.320 --> 20:27.320
உட்காருங்க.

20:27.400 --> 20:28.840
-ஆத்மாராமோட பாட்டி!
-ஆரவோட பாட்டி!

20:28.920 --> 20:30.640
உட்காருங்கன்னு சொன்னேன்.

20:30.720 --> 20:32.640
நம்ம தீர்வு காணலாம். சண்டை வேணாம்...

20:32.880 --> 20:37.640
நீங்க சொல்லுங்கம்மா,
உங்களுக்கு எந்த பெயர் பிடித்து இருக்கு?

20:37.720 --> 20:42.200
என்ன கூப்பிட்டாலும் எனக்கு கவலை இல்லை.

20:43.040 --> 20:46.040
முதல்ல, எதாவது உணவு செய்ங்க.

20:46.760 --> 20:49.120
[பாட்டி] நான் பசியில இருக்கேன்.

20:49.800 --> 20:55.280
நான் இறந்தா, நீங்க ஆரவோட பாட்டினாலும்,
ஆத்மாராமோட பாட்டினாலும் எனக்கு கேட்காது.

20:55.640 --> 20:56.840
அதான் உண்மை.

20:57.640 --> 21:00.880
சரி வாங்க, அப்போ வாக்களிக்கலாம்.

21:01.600 --> 21:03.560
எப்பவும் வாக்களிக்கறதை பற்றி தான்
யோசிப்பிங்களா?

21:03.920 --> 21:06.960
இதற்கு வேறு வழி என்ன இருக்கு. சொல்லு.

21:10.520 --> 21:12.360
ஏன் இதை குழந்தையிடமே கேட்ககூடாது?

21:14.960 --> 21:16.440
அவனோட பெயரை பற்றி தான பேசுகிறோம்.

21:16.640 --> 21:19.440
மது அருந்திவிட்டு பேசுறிங்களா செகரேட்டரி
சார்?

21:19.520 --> 21:21.520
பத்து நாள் பச்சை குழந்தை
எப்படி முடிவு பண்ணும்?

21:21.600 --> 21:25.640
குறைந்தது இரண்டு வருடம் ஆகும் அவன் பேச.

21:26.040 --> 21:29.360
அதுவரை நம்ம காத்திருக்கறது நல்லது இல்ல.

21:29.720 --> 21:30.920
இரண்டு வருஷம்லாம் இல்ல.

21:31.000 --> 21:33.160
குழந்தை முன்னாடி இரண்டு விரல்களை
காட்டுங்க.

21:33.240 --> 21:35.360
ஒன்னு ஆத்மாராம்காக, மற்றொன்று ஆரவ்காக.

21:35.440 --> 21:38.040
எந்த விரலை குழந்தை பிடிக்குதோ அதான்
அவனோட பெயர், கதை முடிந்தது.

21:41.920 --> 21:43.080
நல்லது.

21:43.360 --> 21:45.920
ஆனால் ஆள்காட்டி விரல்தான் ஆத்மாராம்.

21:46.000 --> 21:47.400
அது சரியில்ல.

21:47.480 --> 21:50.440
ஆள்காட்டி விரல் தான் பெருசா இருக்கும்.
குழந்தை அப்போ அதைத்தான் தொடும்.

21:50.520 --> 21:52.320
[பிரிஜ்] தீன்பந்து, விரல்களை
வளைவா காட்டுங்க.

21:52.400 --> 21:54.800
அப்புறம் இரண்டு விரல்களும்
சமமாக இருக்கும்.

21:55.320 --> 21:57.400
பாருங்க, சமமாக தெரியுதா.

21:58.400 --> 21:59.480
ஆம்.

21:59.560 --> 22:02.480
[பிரிஜ்] செகரேட்டரி சார் ஒரு நல்ல ஆலோசனை
தான் சொல்லியிருக்காரு.

22:02.560 --> 22:04.000
இவ்வாறு இந்த சண்டை முடிகிறது.

22:04.080 --> 22:06.720
ரிங்கி அம்மா, வா போகலாம்.

22:07.280 --> 22:08.480
வாங்க, போகலாம்.

22:08.560 --> 22:11.640
செகரேட்டரி சார், நீங்களும் தான்,
போய் உங்க படிப்பை முடிங்க.

22:11.720 --> 22:14.080
யாராவது எதாவது சமைத்து தரீங்களா?

22:14.160 --> 22:15.480
என்ன வேணும் சாப்பிட?

22:15.800 --> 22:17.640
கோழிக்கறி மற்றும் சாதம் பண்ணு.

22:18.280 --> 22:20.400
[வேடிக்கையான இசை]

22:28.840 --> 22:31.240
செகரேட்டரி சாருக்கு நல்ல அறிவு இருக்கு.

22:31.840 --> 22:33.920
அவர் ஓரே நொடியில் தீர்வுகளுடன் வருகிறார்.

22:34.160 --> 22:35.480
-ம்ம்.
-ம்ம்.

22:36.480 --> 22:39.680
அப்புறம் உனக்கு தெரியுமா, இதேதான்
எம்பிஏ தேர்வுகளிலும் நடக்கும்.

22:40.800 --> 22:47.800
இப்படி தான் கேள்விகளை கேட்டு,
ஒரு நொடில தீர்வு காண சொல்வாங்க.

22:48.320 --> 22:50.040
-[மஞ்சு] அப்படியா.
-[பிரிஜ்] ஆமாம்.

22:50.120 --> 22:54.000
அப்போ நீங்க என்ன சொல்ல வரீங்கன்னா
எம்பிஏ தேர்வில,

22:54.080 --> 22:56.800
இப்படித்தான் கணவன் மனைவிக்கு இடையில
சச்சரவை உண்டாக்கி

22:56.880 --> 22:58.600
அப்புறம் தீர்வு காண சொல்வாங்களா.

22:58.680 --> 23:00.720
இல்ல, அப்படி கேட்கமாட்டாங்க.

23:00.800 --> 23:03.280
அவங்க கணக்கு சம்பந்தப்பட்ட
கேள்வி கேட்பாங்க.

23:07.160 --> 23:09.400
நீ என்னை கேலி செய்ற, அதான?

23:10.800 --> 23:14.880
மல்கொபூர் போய் ரிங்கி புகைப்படத்தை
அவங்ககிட்ட கொடுத்துட்டு வாங்க, அவ்ளோதான்.

23:14.960 --> 23:18.000
ரிங்கி அம்மா. அவனுக்கு உண்மையாவே
நல்ல அறிவு இருக்கு.

23:18.080 --> 23:21.920
நான் அவன்கிட்ட யாரும் பதில் கூற முடியாத
அளவுக்கு ஒரு கேள்வி கேட்டேன்.

23:22.000 --> 23:23.600
ஆனால் அதை சுலபமா பார்த்தான்.

23:23.680 --> 23:28.280
அந்த கேள்விக்கான பதில ஐந்து
நொடில சொல்லிட்டான்.

23:29.720 --> 23:34.360
அப்போ சொல்லு, இதுமாதிரி ஒரு பையன்
எப்படி எம்பிஏல வெற்றி பெறாம வருவான்?

23:34.720 --> 23:38.360
ஒருவேளை வெற்றி பெற்றாலும்,
அவன் மேற்படிப்பு படிக்கணும்னா.

23:38.680 --> 23:41.080
[மஞ்சு] எவ்வளவு நாட்கள் நம்ம ரிங்கிய
வீட்டிலே வைத்திருப்பது?

23:41.640 --> 23:42.680
முட்டாள்.

23:42.760 --> 23:45.120
தேர்வில வெற்றிப்பெற்றதும்
கல்யாணம் பண்ணிறலாம்.

23:45.200 --> 23:48.120
அப்பறம் படிப்பை முடித்ததும் மீதமுள்ள
சடங்குகளை நடத்தலாம்.

23:48.760 --> 23:51.200
வரதட்சணையை தவிர்க்க கேவலமான
ஆலோசனை எல்லாம் சொல்லுறிங்க.

23:52.160 --> 23:54.800
அப்போ சொல்லு, நம்ம அவன்கிட்ட பேசுவோமா?

23:54.880 --> 23:58.160
ஏற்கனவே நீங்க முடிவு பண்ணிட்டீங்க அப்புறம்
ஏன் என்கிட்ட கேட்கறிங்க?

23:58.240 --> 24:01.600
நான் முடிவு பண்ணது இருக்கட்டும்,
உன்னோட மனசுல என்ன இருக்கு?

24:03.080 --> 24:05.360
மல்கொபூரில் இருக்கும் பையன்
தயாரா இருக்கான்.

24:06.120 --> 24:10.160
நீங்க பேசுனிங்கன்னா, இந்த வருடமே
ரிங்கி கல்யாணம் முடிவடையும்.

24:13.440 --> 24:17.080
என்கிட்ட நடுநிலை ஆலோசனை ஒன்று இருக்கு.

24:17.800 --> 24:20.080
உம், ரிங்கிட்ட கேட்போம்.

24:20.160 --> 24:22.760
-வேற யார்கிட்ட பேசுறது...
-[பெருமுச்சு சத்தம்]

24:22.840 --> 24:25.640
-அவளுக்கு கல்யாணம் பண்ணனும்.
-உங்களுக்கு புத்தி எதும் கெட்டு போச்சா?

24:25.720 --> 24:29.240
நீங்க கேட்கறதுனால அவளுக்கு அவமானம் தான்
வரும். அவ உங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டா.

24:30.400 --> 24:33.360
அவளுக்கு அவமானம் வராம எப்படி கேட்கிறது?

24:36.720 --> 24:37.760
ஆம்.

24:40.840 --> 24:43.120
[குழந்தையின் அழுகுரல் சத்தம்]

24:45.440 --> 24:47.040
அழாத...

24:47.880 --> 24:48.960
ஆ.

24:49.720 --> 24:52.240
இப்போ, ஒரு விரலை தொடு மகனே.

24:52.560 --> 24:56.240
பிடி...

24:57.480 --> 24:59.560
[பிரிஜ்] ரிங்கி கண்ணே.

24:59.640 --> 25:01.680
-[முனகும் சத்தம்]
-ஒரு விரலை தொடு, தொடுறியா?

25:01.760 --> 25:02.800
[ரிங்கி] என்ன இது?

25:05.320 --> 25:07.320
[உற்சாகமான இசை]

25:08.520 --> 25:09.800
[பெருமூச்சு சத்தம்]

25:10.520 --> 25:12.800
[புத்துணர்ச்சியான இசை]

25:15.920 --> 25:17.040
[ஏளனம் செய்யும் சத்தம்]

25:18.200 --> 25:19.200
ஹும்.

25:22.400 --> 25:24.960
-என் அன்பு மகனே.
-[குழந்தை கத்தும் சத்தம்]

25:26.280 --> 25:27.400
சுஷ்மா.

25:29.200 --> 25:30.840
[பிரிஜ்] என்னாச்சு?

25:35.640 --> 25:36.880
இரண்டு வாரங்களுக்கு பிறகு

25:36.960 --> 25:38.160
[மெல்லிய இசை]

25:38.240 --> 25:40.640
[விகாஸ்] உங்க அனுபவத்தில...

25:41.240 --> 25:47.000
கிராமத்தின்...

25:47.440 --> 25:50.560
தலைவர்.

25:50.640 --> 25:52.160
[வண்டி வரும் சத்தம்]

25:52.240 --> 25:53.600
அது செகரேட்டரி சாரா?

25:56.040 --> 25:57.640
இல்லை, அது வேற யாரோ.

25:59.000 --> 26:01.560
சீக்கீரம் வந்துருவாரு.
எதாவது முக்கியமான விஷயமா?

26:01.920 --> 26:03.040
இல்ல, ஒன்னுமில்ல.

26:11.440 --> 26:13.880
[வண்டி வரும் சத்தம்]

26:19.480 --> 26:22.760
வந்துட்டாரு. வந்துட்டாரு.
செகரேட்டரி சார் வந்துட்டாரு.

26:27.960 --> 26:30.640
[பிரிஜ்] அப்பறம் செகரேட்டரி சார்,
உங்க தேர்வு எப்படி போச்சு?

26:31.280 --> 26:33.320
உங்களுக்கு அந்த அதிக வருமானம்
உள்ள வேலை கிடைக்குமா?

26:34.200 --> 26:36.200
[சோகமான இசை]

26:39.560 --> 26:40.640
[கதவை சாத்தும் சத்தம்]

26:45.440 --> 26:47.560
[சோகமான இசை]

26:50.840 --> 26:51.840
செகரேட்டரி சார்?

26:52.960 --> 26:54.440
செகரேட்டரி சாரே, என்னாச்சு?

26:55.280 --> 26:58.360
தலைவரே, அவர் தேர்வு ஒழுங்கா பண்ணவில்லை
என்று நான் நினைக்கிறேன்.

26:59.120 --> 27:01.920
உனக்கு எப்படி தெரியும் அவர் தேர்வு
ஒழுங்கா எழுதலன்னு?

27:02.000 --> 27:03.560
உங்கிட்ட சொன்னாரா?

27:04.040 --> 27:06.280
அவர் வேதனையா உள்ளே வந்ததை
நீங்க பார்க்கலையா?

27:06.600 --> 27:09.040
அதை பார்த்தா சரியா எழுதாத மாதிரி
தான் தெரியுது.

27:14.280 --> 27:15.520
என்னாச்சு, தலைவரே?

27:15.960 --> 27:17.160
தலைவரே?

27:17.560 --> 27:18.680
ஒன்னுமில்ல.

27:20.280 --> 27:21.400
செகரேட்டரி சார்!

27:22.800 --> 27:24.400
ரொம்ப வருத்தப்படாதீங்க.

27:25.000 --> 27:26.840
இன்பமும் துன்பமும் வாழ்கையில
ஒரு பகுதிதான்.

27:26.920 --> 27:28.240
[சுஷ்மா] செகரேட்டரி எங்க?

27:28.720 --> 27:29.840
எங்க அவரு?

27:29.920 --> 27:31.400
என்னாச்சு? உள்ளதான் இருக்காரு.

27:31.840 --> 27:32.840
இதை பாருங்க.

27:33.120 --> 27:36.360
தப்பான சான்றிதழை கொடுத்துவிட்டு,
உள்ளே போய் மறைஞ்சிருக்காரு.

27:36.440 --> 27:39.240
வெளிய வாங்க செகரேட்டரி சாரே, வெளிய வாங்க!

27:39.560 --> 27:40.840
-என்ன ஆச்சு?
-என்ன ஆச்சு?

27:40.920 --> 27:43.520
ஆரவ் பதக் பதிலா சான்றிதழ்ல
என்ன பெயர் பதிவாகி இருக்கு பாருங்க.

27:43.600 --> 27:45.160
-என்ன பெயர் பதிவாகி இருக்கு? காமிங்க.
-பாருங்க.

27:45.240 --> 27:46.560
ஆவரா பதக்.

27:48.240 --> 27:50.760
அச்சிடும் இயந்திரத்தால வந்த
சின்ன பிழைதான்.

27:50.840 --> 27:53.520
தலைவரே, என்ன நடக்குது உங்க ஆபீஸ்ல?

27:54.120 --> 27:56.840
விகாஸ், அவங்கள சமாளி, நான் வெளிய போகணும்.

27:57.080 --> 27:59.800
-எங்கே போறீங்க?
-ரிங்கி புகைப்படத்துடன் மல்கொபூர் போறேன்.

28:03.960 --> 28:05.840
[தீன்பந்து] செகரேட்டரிக்கு என்ன ஆச்சு?

28:05.920 --> 28:08.200
[விகாஸ்] அவரு தேர்வு ஒழுங்கா எழுதல.

28:08.280 --> 28:09.280
[தீன்பந்து] சரி.

28:09.880 --> 28:11.640
[விகாஸ்] கடினமா உழைத்து இருக்காரு.

28:11.720 --> 28:15.000
மெழுகுவர்த்தி ஒளியில படித்து அவரது
இரவை கழித்தாரு.

28:15.080 --> 28:16.480
[தீன்பந்து] ஆம். கேள்விப்பட்டேன்.

28:17.560 --> 28:20.320
நல்லா படிச்சாரு, ஆனால் என்ன பண்ணமுடியும்?

28:20.400 --> 28:22.440
எல்லாருக்கும் விதின்னு ஒன்னு இருக்கில்ல.

28:22.520 --> 28:23.680
[விகாஸ்] ஆமா, உண்மை தான்.

28:24.040 --> 28:26.160
அவர் அவரையே உள்ளே வைச்சு பூட்டிக்கிட்டாரு.

28:26.240 --> 28:28.040
எதுவும் செஞ்சுக்க மாட்டாருன்னு நம்பறேன்.

28:30.480 --> 28:32.600
[சோகமான இசை]

29:14.840 --> 29:16.840
[தீம் இசை முடிகிறது]
ாட்டாருன்னு நம்பறேன்.
