WEBVTT

00:00.000 --> 00:01.320
[புகைப்படக்காரர்] கொஞ்சம் கீழ பாருங்க.

00:01.320 --> 00:03.400
இன்னும் கீழ. இன்னும் கொஞ்சம் கீழ.

00:03.400 --> 00:04.600
ரொம்ப கீழ போயிடுச்சு.

00:04.600 --> 00:05.800
சரி.

00:05.800 --> 00:07.800
கொஞ்சம் சிரிங்க.

00:07.800 --> 00:09.320
இன்னும். இன்னும் கொஞ்சம்.

00:09.320 --> 00:10.720
-அருமை.
-[கேமரா ஷட்டர் சத்தம்]

00:10.720 --> 00:12.680
அருமை. இன்னும் ஒண்ணு.

00:12.680 --> 00:14.280
-[கேமரா ஷட்டர் சத்தம்]
-[புகைப்படக்காரர்] அருமை.

00:14.280 --> 00:15.920
[அபிஷேக்] எப்படி வந்திருக்கென்று
காட்டுங்க.

00:15.920 --> 00:17.040
இதோ பாருங்க.

00:17.040 --> 00:18.480
அட. [சிரிக்கும் சத்தம்]

00:18.480 --> 00:19.720
முதலாவது புகைப்படம் நல்லா இருக்கு.

00:19.720 --> 00:21.360
சரி, அதையே எடுத்துக்கலாம்.

00:21.360 --> 00:23.120
பேங்க் கிளெர்க் வேலைக்கு
விண்ணப்பிக்க போறீங்களா?

00:23.120 --> 00:24.640
இது கேட் பரீட்சைக்காக.

00:24.640 --> 00:25.840
எம்பிஏ படிப்பதற்கான பரீட்சை.

00:25.840 --> 00:27.120
அப்படியா... நல்லது.

00:27.120 --> 00:29.640
-நாளை காலை 11 மணிக்கு வாங்கிக்கோங்க.
-[விகாஸ்] உட்கார மாட்டேன்னு சொல்லலையே.

00:29.640 --> 00:30.920
[பப்லூ] உனக்கு என்ன தாண்டா வேணும், கழுதை?

00:30.920 --> 00:33.080
[விகாஸ்] நான் அமைதியா பேசுனாலும்
உனக்கு புரிய மாட்டேங்குது.

00:33.080 --> 00:34.360
[டப்லூ] இல்லடா, கழுதை. எனக்குப் புரியாது.

00:34.360 --> 00:35.520
[விகாஸ்] என்னை திட்டுறதை நிறுத்து.

00:35.520 --> 00:36.560
[பப்லூ] சும்மா என்னை சொல்லாத.

00:36.560 --> 00:38.240
உனக்கு உட்காரணும்னா ஒழுங்கா உட்கார்.

00:38.240 --> 00:40.640
எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல. ஆனா
உனக்கு உட்காரணும்னா ஒழுங்கா உட்கார்.

00:40.640 --> 00:42.800
[பப்லூ] வண்டியில எப்படி உட்காரணும்னு
எனக்கு சொல்லித் தர போறியா?

00:42.800 --> 00:44.120
-என்ன ஆச்சு?
-வாங்க, சார்.

00:44.120 --> 00:45.800
இவங்க உங்க வண்டியில உட்கார்ந்தாங்க.

00:45.800 --> 00:48.160
வண்டி சிங்கிள் ஸ்டாண்ட்ல நிற்குது.

00:48.160 --> 00:49.880
அதிக பாரம் கொடுத்தா விழுந்துடும்னு
தான் சொன்னேன்.

00:49.880 --> 00:51.320
ரெண்டு ஸ்டாண்டும் போட்டு உட்கார சொன்னேன்.

00:51.320 --> 00:52.600
-அதுக்கு கோவப்படுறான்.
-அப்படியா.

00:52.600 --> 00:53.600
நாங்க வேற ஆள் வண்டியில உட்கார

00:53.600 --> 00:54.920
அதை முதல்ல ரெண்டு ஸ்டாண்ட்ல போடணுமா.

00:54.920 --> 00:56.680
-அப்போ உட்காராதீங்க. உட்காராதீங்க
-டேய்!

00:56.680 --> 00:58.200
கொஞ்சம் மெதுவா பேசு, சரியா?

00:58.200 --> 01:00.680
நீங்க என் வண்டியில உக்காந்துட்டு
இப்போ பிரச்சனை வேற பண்ணுறீங்களா.

01:00.680 --> 01:03.040
என்ன சொன்ன? நாங்க பிரச்சனை பண்ணுறோமா?

01:03.040 --> 01:04.600
வேற எப்படி சொல்லணும்?

01:04.600 --> 01:05.840
இரு, தம்பி. ஒரு 10 நிமிஷம் குடு.

01:05.840 --> 01:08.920
பிரச்சனை பண்றதுன்னா என்னனு
நான் காட்டுறேன். இரு.

01:08.920 --> 01:10.720
[பப்லூ] நீ என்ன சொன்னன்னு உனக்கு புரியல.

01:10.720 --> 01:11.960
பிரதான் சாரை கூப்பிடலாமா?

01:11.960 --> 01:14.120
முகேஷ் அண்ணா. பப்லூ பேசுறேன்.

01:14.120 --> 01:16.600
[பப்லூ] சுனில் கடைக்கு கொஞ்சம்
பசங்கள அனுப்புங்க.

01:16.600 --> 01:18.080
சரி சீக்கிரமா அனுப்புங்க.

01:18.080 --> 01:19.400
10 நிமிஷம் இரு. நான் காட்டுறேன்.

01:19.400 --> 01:21.400
நான் ஏன் 10 நிமிஷம் இருக்கணும்?
எனக்கு வேற வேலை இல்ல?

01:21.400 --> 01:22.480
-தள்ளு.
-[பப்லூ] என்ன?

01:22.480 --> 01:23.480
தள்ளுன்னு சொன்னேன்.

01:23.480 --> 01:24.480
உக்காரு, விகாஸ்.

01:24.480 --> 01:27.320
சுனில் அண்ணா, நாளைக்கு போட்டோ வாங்க
எப்போ வருவான்?

01:27.320 --> 01:28.320
பதினோரு மணிக்கு.

01:28.320 --> 01:30.760
நாளைக்கு பதினோரு மணிக்கு பார்க்கலாம்.
பிரச்சனைனா என்னனு காட்டுறேன்.

01:30.760 --> 01:32.680
என்ன ஆச்சு? எங்களை பார்த்து பயந்துட்டியா?

01:32.680 --> 01:34.360
-எங்களுக்கு ஒண்ணும் பயமில்லை.
-[என்ஜின் சத்தம்]

01:34.360 --> 01:36.440
-போய் தொலை.
-திட்டுறதை நிறுத்து.

01:36.440 --> 01:37.800
[பப்லூ] போய் தொலை!

01:37.800 --> 01:39.040
போய் தொலைன்னு சொன்னேன்.

01:39.040 --> 01:40.040
-[விகாஸ்] நீ போய் தொலை.
-போ போ.

01:40.040 --> 01:41.040
-[விகாஸ்] நீ போய் தொலை.
-போ.

01:41.040 --> 01:42.080
நீ போய் தொலை.

01:42.080 --> 01:45.040
வா வா. வா அடி. அடி என்னை.

01:45.040 --> 01:46.920
-அடி, வா.
-விகாஸ், வா போகலாம்.

01:46.920 --> 01:48.920
10 நிமிஷம் இருங்கடா. ஏன் பயந்து ஓடுறீங்க?

01:48.920 --> 01:50.600
-நீ போடா.
-அட போடா.

01:50.600 --> 01:52.600
-போய் தொலை.
-நாளைக்கு 11 மணிக்கு பார்க்கலாம், தம்பி.

01:52.600 --> 01:54.040
-நான் காட்டுறேன்.
-[அபிஷேக்] பைத்தியமா, விகாஸ்?

01:54.040 --> 01:55.080
எதுக்கு பிரச்சனைக்கு போற?

01:55.080 --> 01:56.640
[விகாஸ்] இது நம்ம மரியாதை பிரச்சனை, சார்.

01:56.640 --> 01:57.840
அவங்க உங்ககிட்ட சண்ட போடுறாங்க.

01:57.840 --> 01:59.640
[அபிஷேக்] இவங்ககிட்ட எல்லாம்
பிரச்சனை வேண்டாம்.

01:59.640 --> 02:00.880
[விகாஸ்] நாம ஒண்ணும் குறைஞ்சவங்க இல்ல.

02:00.880 --> 02:02.880
[தீம் மியூசிக் ஒலிக்கிறது]

02:02.880 --> 02:06.400
பஞ்சாயத்

02:06.400 --> 02:09.280
நாளைக்கு பதினோரு மணிக்கு போய்
நல்ல பாடம் சொல்லி குடுக்கலாம்.

02:09.280 --> 02:10.720
-யாருக்கு போன் பண்ணுற?
-பிரதான் சாருக்கு.

02:10.720 --> 02:12.760
பைத்தியமா உனக்கு? இத இன்னும்
பெரிய பிரச்சனை ஆக்க வேண்டாம்.

02:12.760 --> 02:15.080
நம்மள மிரட்டியிருக்காங்க, சார்.
நாம ஏதாவது செய்யணும்.

02:15.080 --> 02:16.520
நாம ஒண்ணும் செய்ய வேண்டாம்.

02:16.520 --> 02:18.000
உனக்கு ஏன் இவ்ளோ ஈகோ பிரச்சனை?

02:18.000 --> 02:19.960
-பெரிய ரவுடியா நீ?
-இல்ல, நான் ரவுடி இல்ல.

02:19.960 --> 02:22.080
நீங்க ஏன் இவ்ளோ பயப்படுறீங்கன்னு
தான் எனக்கு தெரியலை.

02:22.080 --> 02:23.280
எனக்கு ஒண்ணும் பயமில்லை.

02:23.280 --> 02:24.440
[விகாஸ்] அப்போ இது என்ன, சார்?

02:24.440 --> 02:25.720
பரீட்சை நெருங்குது.

02:25.720 --> 02:27.640
நான் படிக்கணுமா இல்ல தேவையில்லாத
சண்டைக்கு போகணுமா?

02:27.640 --> 02:28.720
எனக்கு எதுக்கு இந்த டென்ஷன்?

02:28.720 --> 02:31.520
நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்.
பிரதான் சார் எல்லாத்தையும் பாத்துக்குவாரு.

02:31.520 --> 02:33.960
உனக்கு இது ஒண்ணும் தேவை இல்ல.
உனக்கு புரியலையா?

02:33.960 --> 02:35.840
நாளைக்கு நீங்க பதினோரு மணிக்கு போகும் போது

02:35.840 --> 02:37.920
அவங்க உங்கள அடிச்சா?
அப்போ என்ன பண்ணுவீங்க?

02:37.920 --> 02:39.720
எதாவது பண்ணுவேன். அவங்கள பார்க்க மாட்டேன்.

02:39.720 --> 02:41.240
சொல்லனும்னா பதினோரு மணிக்கு போக மாட்டேன்.

02:41.240 --> 02:42.760
-நான் ரெண்டு மணிக்கு போகப் போறேன்.
-அருமை, சார்.

02:42.760 --> 02:45.760
ரெண்டு மணிக்கு போங்க. நல்லது.
எம்பிஏக்கு படிங்க. ரொம்ப நல்லது.

02:45.760 --> 02:46.880
ஆனா, சார்...

02:46.880 --> 02:48.800
சுய மரியாதைன்னு ஒண்ணு இருக்கு.

02:48.800 --> 02:50.840
[மிதமான இசை]

02:50.840 --> 02:54.200
செகரேட்டரியா வேலை பார்ப்பவர்களுக்கு
சுய மரியாதை கிடையாது.

02:54.200 --> 02:56.360
[தெளிவில்லாத பேச்சு சத்தம்]

02:56.360 --> 02:58.400
[வண்டி வரும் சத்தம்]

02:58.400 --> 03:00.840
[தெளிவில்லாத பேச்சு சத்தம்]

03:00.840 --> 03:01.840
என் போட்டோ குடுங்க.

03:01.840 --> 03:03.280
நல்ல ஐடியா தான்.

03:03.280 --> 03:04.880
பேசாம போட்டோவ குடுங்க.

03:04.880 --> 03:06.160
[புகைப்படக்காரர்] போட்டோ வந்து...

03:06.160 --> 03:07.200
-என்ன?
-[தொண்டையை கமறும் சத்தம்]

03:07.200 --> 03:11.920
பப்லூவும் டப்லூவும் என் ஊர்க்காரங்க.

03:11.920 --> 03:13.240
அதுக்கு என்ன இப்போ?

03:13.240 --> 03:14.520
[புகைப்படக்காரர்] விஷயம் இருக்கு.

03:14.520 --> 03:17.880
அவங்க என் ஊர்க்காரங்க என்பதால
உங்களுக்கு அவங்க கூட பிரச்சனைனா

03:17.880 --> 03:19.720
என்னுடனும் பிரச்சனைனு அர்த்தம்.

03:19.720 --> 03:21.400
என்ன கருமம் இது?

03:21.400 --> 03:22.800
[புகைப்படக்காரர்] உங்களுக்குப் புரியல.

03:22.800 --> 03:25.480
இந்த சண்டையில, நான் அவங்க பக்கம்.
அதை தான் சொல்லுறேன்.

03:25.480 --> 03:26.600
[சிரிக்கும் சத்தம்]

03:26.600 --> 03:29.480
என் ஊர் விஷயம் என்பதால, என்னால
துரோகம் பண்ண முடியாது.

03:29.480 --> 03:31.200
என்ன பேசுறீங்க? என் போட்டோவ குடுங்க.

03:31.200 --> 03:33.680
நீங்க பதினோரு மணிக்கு வந்திருக்கணும்
ஆனா வரலை,

03:33.680 --> 03:37.200
அதனால பப்லூ மற்றும் டப்லூ சொன்ன மாதிரி
நான் போட்டோவ அழிச்சுட்டேன்.

03:37.200 --> 03:39.280
[கிண்டலான இசை]

03:39.280 --> 03:42.200
நீயும் உன் பப்லூ மற்றும் டப்லூவும்
ஒழிஞ்சு போங்க.

03:42.200 --> 03:44.920
ஃபகெளலி மார்க்கெட்ல இன்னும் நிறைய கடை
இருக்கு. நான் அங்க எடுத்துக்குறேன்.

03:44.920 --> 03:46.240
உங்க இஷ்டம்.

03:46.240 --> 03:47.680
இருங்க.

03:47.680 --> 03:49.480
[புகைப்படக்காரர்] நீங்க மார்க்கெட்ல
தான இருப்பீங்க?

03:49.480 --> 03:52.440
நீங்க வந்தா சொல்லணும்னு
பப்லூ-டப்லூ சொல்லியிருக்காங்க.

03:52.440 --> 03:53.480
[நக்கலான சிரிப்பு]

03:53.480 --> 03:56.040
[புகைப்படக்காரர்] மார்க்கெட்ல தான்
இருப்பீங்களா இல்ல கிளம்பிடுவீங்களா?

03:56.040 --> 03:57.360
[வண்டி கிளம்பும் சத்தம்]

03:57.360 --> 04:00.120
இருங்க. அட சொல்லுங்க. இருங்க!

04:00.120 --> 04:01.480
ஓடுறாருன்னு நினைக்கிறேன்.

04:01.480 --> 04:03.760
[குழப்பமான இசை]

04:03.760 --> 04:05.520
[வண்டி நிற்கும் சத்தம்]

04:05.520 --> 04:06.800
போட்டோ வாங்கிட்டிங்களா?

04:06.800 --> 04:09.000
நாளைக்கு ஆபீஸ் வரும்போது
வெள்ளை பெட்ஷீட் எடுத்துட்டு வா.

04:09.000 --> 04:10.480
வெள்ளை பெட்ஷீட் எதுக்கு?

04:10.480 --> 04:11.840
பின்னாடி தொங்க விட.

04:11.840 --> 04:13.680
நாளைக்கு ஆபீஸ்லயே போட்டோ எடுத்துக்குறேன்.

04:13.680 --> 04:14.800
ஆபீஸ்லையா?

04:14.800 --> 04:17.640
அந்த ராஸ்கலுங்க
என் போட்டோவ அழிச்சுட்டாங்க.

04:17.640 --> 04:20.640
சொல்றத கேளுங்க, பிரதான் சார் கிட்ட
சொல்லலாம். அவரு பார்த்துக்குவாரு.

04:20.640 --> 04:23.280
இன்னும் உங்க ரத்தம் கொதிக்கலனா
அது வெறும் தண்ணி தான்.

04:23.280 --> 04:25.680
[குழப்பமான இசை]

04:25.680 --> 04:28.000
[பூச்சிகளின் ரீங்காரம்]

04:28.000 --> 04:32.280
[கைப்பேசி மணி சத்தம்]

04:32.280 --> 04:33.280
ஹலோ.

04:33.280 --> 04:35.280
[வண்டி ஹார்ன் சத்தம்]

04:35.280 --> 04:36.280
ஹலோ.

04:36.280 --> 04:38.280
-[வண்டி செல்லும் சத்தம்]
-[ஆட்கள் கத்தும் சத்தம்]

04:38.280 --> 04:40.760
முட்டாள். அவன்கிட்ட பேசு.

04:40.760 --> 04:41.960
யாரு பேசுறீங்க?

04:41.960 --> 04:44.800
போட்டோ வாங்க ரெண்டு மணிக்கு
வந்தேன்னு கேள்விப்பட்டேன்.

04:44.800 --> 04:47.160
எதுக்கு என்ன தொல்லை பண்ணுறீங்க?
உங்களுக்கு என்ன வேணும்?

04:47.160 --> 04:49.640
உனக்கு பிரச்சனைனா என்னனு
காட்டலாம்னு நினைக்கிறோம்.

04:49.640 --> 04:51.240
ஏற்கனவே காட்டிடீங்க. இப்போ என்ன வேணும்?

04:51.240 --> 04:53.040
அது சரியா இல்லடா, முட்டாளே.

04:53.040 --> 04:55.160
திரும்ப ஃபகெளலி மார்க்கெட் வா,
நல்லா காட்டுறோம்.

04:55.160 --> 04:58.280
கஷ்டம். நான் ஒண்ணுமே சொல்லல ஆனா நீங்க
இவ்ளோ தூரம் கொண்டு போறீங்க.

04:58.280 --> 05:00.080
நான் பிரச்சனை பண்ணாலும் உன்னால
என்ன தொட முடியுமா?

05:00.080 --> 05:01.680
நாவை அடக்கி பேசுங்க.

05:01.680 --> 05:05.840
இல்லனா... ஃபகெளலி மார்க்கெட் வந்து
எங்களை அடிச்சுருவியா?

05:05.840 --> 05:07.040
[இருவரும் சிரிக்கும் சத்தம்]

05:07.040 --> 05:08.080
ஆமா, வருவேன்.

05:08.080 --> 05:10.840
அப்போ அங்க வா.
நாங்க உனக்காக காத்திருக்கோம்.

05:10.840 --> 05:15.600
என்ன ஆச்சு? தைரியம் இல்லையா?

05:15.600 --> 05:18.960
-[டப்லூ] பயத்துல நடுங்கிட்டியா?
-[பப்லூ] எனக்கு ஏதோ கேட்டுச்சு.

05:18.960 --> 05:21.800
எவ்ளோ நாள் புலேரால ஒளிஞ்சுட்டு இருக்க
முடியும்னு நினைக்கிற?

05:21.800 --> 05:23.520
ஒருநாள் நீ ஃபகெளலி மார்க்கெட் வந்து
தானே ஆகணும்.

05:23.520 --> 05:25.880
நீங்க யாருன்னு நினைக்கிறீங்க?
யாருன்னு நினைக்கிறீங்க?

05:25.880 --> 05:28.080
-எப்போ எங்க வரும்னு சொல்லு.
-[பப்லூ] அப்படியா.

05:28.080 --> 05:30.800
ஃபகெளலி மார்க்கெட் பின்னாடி இருக்க
மைதானத்துக்கு வந்துடு.

05:30.800 --> 05:32.240
மூணு மணிக்கு. நான் காட்டுறேன்.

05:32.240 --> 05:35.840
உன்ன அம்மணமா ஆட விடுறேன் இல்லனா என்
பெரு அபிஷேக் இல்ல.

05:35.840 --> 05:37.400
[டப்லூ] நீ ரொம்ப பேசுற.

05:37.400 --> 05:39.440
வா, பையா. நாங்க யாருன்னு காட்டுறோம்.

05:39.440 --> 05:40.640
அட போடா.

05:40.640 --> 05:43.120
[பயத்தை குறிக்கும் இசை]

05:43.120 --> 05:45.160
ஆமா, நான் பார்த்துக்குறேன்.

05:45.160 --> 05:47.760
-இல்லையா, ப்ரஹலாத்.
-ஆமா. எங்களுக்கு எந்த பயமும் இல்ல.

05:47.760 --> 05:49.160
சொன்னேன்ல, சார்?

05:49.160 --> 05:50.800
இன்னும் ஆட்கள் தேவைப்படுவாங்களா?

05:50.800 --> 05:52.760
நான் துப்பாக்கி வச்சுருக்கேன்.
வேற யாரும் தேவையில்லை.

05:52.760 --> 05:53.960
துப்பாக்கியா?

05:53.960 --> 05:55.800
கோடாரியும் எடுத்துக்குவோமா?

05:55.800 --> 05:57.840
இல்ல, துப்பாக்கி எல்லாம் ரொம்ப ஜாஸ்தி.

05:57.840 --> 06:00.680
வேற எதாவது எடுத்துக்கலாம்.
பெல்ட், கம்பு அந்த மாதிரி...

06:00.680 --> 06:03.760
ஒண்ணு பண்ணு,
உன்கிட்ட லெதர் ஜாக்கெட் இருக்கா?

06:03.760 --> 06:04.800
ஆமா, இருக்கு.

06:04.800 --> 06:08.160
சரி. அத போட்டுக்கிட்டு வந்து
என்ன 2.30 மணிக்கு பாரு.

06:08.160 --> 06:12.080
லெதர் ஜாக்கெட் போட்டா அடியே தெரியாது.

06:12.080 --> 06:14.200
நான் என் துப்பாக்கியை தொடைச்சு வைக்குறேன்.

06:14.200 --> 06:16.960
பிரதான் அண்ணா, சில புல்லட் போதும்ல.

06:16.960 --> 06:18.280
இது ரொம்ப ஜாஸ்தி.

06:18.280 --> 06:20.960
பிரதான் அண்ணா, துப்பாக்கியை
என்கிட்ட குடுங்க. நான் வெச்சுக்குறேன்.

06:20.960 --> 06:23.520
[மிரட்டலான இசை]

06:23.520 --> 06:24.600
[வண்டி கிளம்பும் சத்தம்]

06:24.600 --> 06:28.600
[வண்டியை முறுக்கும் சத்தம்]

06:28.600 --> 06:31.120
[மிரட்டலான இசை]

06:31.120 --> 06:33.000
இன்னும் வரல. அவனுக்கு போன் பண்ணு.

06:33.000 --> 06:35.680
[துள்ளலான இசை]

06:35.680 --> 06:37.120
இவங்க ரெண்டு பெரும் எங்க போனாங்க.

06:37.120 --> 06:39.320
தெரியல. பின்னாடி தான வந்தாங்க.

06:39.320 --> 06:41.760
ஒண்ணு ரெண்டு பேரும் பைத்தியக்காரனுங்க இல்ல
ரொம்ப தைரியசாலிங்க.

06:41.760 --> 06:44.280
-தனியா வந்துருக்கானுங்க.
-முட்டாளுங்க.

06:44.280 --> 06:45.480
வா பார்க்கலாம்.

06:45.480 --> 06:47.440
[அபிஷேக்] கொஞ்சம் இருங்க எங்க ஆளுங்க
கொஞ்சம் பேரு வாராங்க.

06:47.440 --> 06:49.320
எதுக்கு ஆளுங்கள கூப்பிடுற?

06:49.320 --> 06:50.600
யாருக்கு போன் பண்ணுறான்?

06:50.600 --> 06:53.120
ராம்போவயே கூப்பிட்டாலும் பரவாயில்ல.
நாம பார்த்துக்கலாம்.

06:53.120 --> 06:54.560
[டப்லூ] ஆமா, யாரை வேணாலும் கூப்பிடட்டும்.

06:54.560 --> 06:55.960
முட்டாள்.

06:55.960 --> 06:57.920
[போன் அடிக்கிறது]

06:57.920 --> 06:59.320
செகரேட்டரி சார் கூப்பிடுறாரு.

06:59.320 --> 07:01.120
-ஹலோ.
-ஸ்பீக்கர். ஸ்பீக்கர்ல போடுங்க.

07:01.120 --> 07:02.120
ஹலோ.

07:02.120 --> 07:03.280
பிரதான் சார், எங்க இருக்கீங்க?

07:03.280 --> 07:05.280
கவலைப்படாதீங்க, வந்துகிட்டு இருக்கோம்.

07:05.280 --> 07:08.720
வண்டி டயர் பஞ்சர் ஆகிடுச்சு.
அதனால ப்ரஹலாத் தள்ளிக்கிட்டு வாரான்.

07:08.720 --> 07:12.480
பஞ்சர் தான பிரதான் சார்.
பெட்ரோல் ஒண்ணும் தீரலையே.

07:12.480 --> 07:15.320
செகரேட்டரி சார், ஆணி குத்தி
பஞ்சர் ஆகிடுச்சு.

07:15.320 --> 07:17.600
இப்போ வண்டிய ஓட்டுனா ட்யூப் போய்டும்.

07:17.600 --> 07:22.400
அப்புறம் ட்யூப் மாத்துறது
பெரிய செலவாகிடும்.

07:22.400 --> 07:24.440
பிரதான் சார், சீக்கிரம் வாங்க.
அவங்க ஏற்கனவே வந்துட்டாங்க.

07:24.440 --> 07:25.640
நமக்காக காத்துகிட்டு இருக்காங்க.

07:25.640 --> 07:27.760
3 மணி ஆக இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு.

07:27.760 --> 07:31.080
தெரியல அவங்க சீக்கிரமா வந்துட்டாங்க.
இங்க இருகாங்க. சீக்கிரமா வாங்க.

07:31.080 --> 07:33.400
என்ன கிறுக்கனுங்க?

07:33.400 --> 07:35.800
சண்டை போட அவ்ளோ ஆசையா.
துப்பாக்கியை என்கிட்ட குடுங்க.

07:35.800 --> 07:37.160
-ஏறுங்க. ஏறுங்க.
-வரோம், செகரேட்டரி சார்.

07:37.160 --> 07:38.280
நாம யாருன்னு காட்டுவோம்.

07:38.280 --> 07:40.080
சரி, சரி. வராங்க.

07:40.080 --> 07:41.280
எவ்ளோ நேரம் ஆகுமாம்?

07:41.280 --> 07:42.400
வராங்க.

07:42.400 --> 07:44.200
[கொட்டாவி விடும் சத்தம்]

07:44.200 --> 07:47.080
பப்லூ அண்ணா, நல்லா அடிச்சு
விரட்டி விட்டுடலாம்.

07:47.080 --> 07:48.680
ஒண்ணு பண்ணு, உன் பெல்ட்டை குடு.

07:48.680 --> 07:51.240
என் பேண்ட் லூஸ், உங்களோடத எடுங்க.

07:51.240 --> 07:54.000
என்னோடது ரெக்ஸின் பெல்ட.
அவ்வளவா வலிக்காது.

07:54.000 --> 07:56.640
இவ்ளோ காசு குடுத்து வாங்கி கொடுத்தேன்ல.
கழட்டி குடு.

07:56.640 --> 08:00.360
அப்போ உங்க பெல்ட்டை குடுங்க.
என் பேண்ட் லூசுன்னு தெரியும்ல.

08:00.360 --> 08:01.840
[பப்லூ] சீக்கிரமா கழட்டு.

08:01.840 --> 08:03.280
முட்டாள், எவ்ளோ சின்ன இடுப்பு.

08:03.280 --> 08:05.280
பெல்ட்டை கழட்டவே ஒரு நிமிஷம் போல ஆகுது.

08:05.280 --> 08:07.840
[பப்லூ] முதல்ல இதை மாட்டு இல்லேன்னா
உன் பேண்ட் கழண்டு வந்துடும்.

08:07.840 --> 08:09.080
[பெல்ட்டை அடிக்கும் சத்தம்]

08:09.080 --> 08:10.960
[விகாஸ்] அண்ணா, இருங்க.

08:10.960 --> 08:12.960
சண்டை போட ஒரு முறை இருக்குல்ல.

08:12.960 --> 08:15.320
அவங்க வந்துடட்டுமே.

08:15.320 --> 08:16.480
சுத்து போடு. சுத்து போடு.

08:16.480 --> 08:18.480
-அண்ணா.
-சுத்து போடு.

08:18.480 --> 08:21.160
-[டப்லூ] இன்னும் ஆள் வராங்களாமே.
-அம்மணமா ஆட விடுவியா?

08:21.160 --> 08:22.400
உன்ன அம்மணமா ஆட விடுறேன் பாரு.

08:22.400 --> 08:23.640
என்ன பண்ணுறீங்க?

08:23.640 --> 08:25.520
ட்ரெஸ்ஸை கழட்டு.

08:25.520 --> 08:27.280
உன்கிட்டயா பேசுறேன்? அமைதியா இரு.

08:27.280 --> 08:29.400
-அமைதியா தான் இருக்கேன்.
-நான் அவகிட்ட பேசுறேன். மரியாதையா இரு.

08:29.400 --> 08:31.200
[பப்லூ] மரியாதைக்காரரே, ட்ரெஸ்ஸை கழட்டு,

08:31.200 --> 08:34.400
இல்லேன்னா அடிச்சு தொவச்சுருவேன்.

08:34.400 --> 08:36.240
எங்க ஆளுங்க வாராங்க. அவங்க வரட்டும்.

08:36.240 --> 08:38.720
தம்பி. அமைதியா சொல்லிக்கிட்டு இருக்கோம்.

08:38.720 --> 08:40.720
உனக்கு ஒரு வழி தான் இருக்கு.

08:40.720 --> 08:42.560
ட்ரெஸ்ஸை கழட்டிட்டு டான்ஸ் ஆடு.

08:42.560 --> 08:44.960
-சீக்கிரமா போய்டலாம். சரியா?
-[விகாஸ்] ரொம்ப கோவப்படுறீங்க.

08:44.960 --> 08:46.960
-அடிங்கடா அவனை.
-சும்மா பேசி நேரத்தை வீணாக்குறீங்க.

08:46.960 --> 08:48.840
-[டப்லூ] அடி. அடி.
-சீக்கிரமா கழட்டு.

08:48.840 --> 08:50.720
-என்ன பண்ணுற?
-இதுவும் சட்டை மாதிரி தான.

08:50.720 --> 08:52.080
-இல்ல, இல்ல.
-[அடிக்கும் சத்தம்]

08:52.080 --> 08:54.040
-[டப்லூ] அடிடா அவங்கள.
-[பப்லூ] சட்டையை கழட்டு.

08:54.040 --> 08:55.920
ஏன் இப்படி நிற்கிறான்? கழட்டு, தம்பி.

08:55.920 --> 08:56.920
சட்டையை கழட்டுங்க.

08:56.920 --> 08:58.680
உங்கள அம்மணமா ஆட விடுவேன்னு
வேணும்னே சொல்லல.

08:58.680 --> 08:59.800
யாரும் அப்படி சொல்ல மாட்டாங்க.

08:59.800 --> 09:04.040
கோவத்துல எதாவது பேசுவோம் அதையெல்லாம்
பெருசா எடுத்துக்கலாமா?

09:04.040 --> 09:06.880
கழட்டு இல்லனா அடிச்சு தொவச்சுருவேன்.
கழட்டு சீக்கிரம்.

09:06.880 --> 09:09.880
-அவனுக்கு உதவி பண்ணு. போ.
-இல்ல, நானே கழட்டுறேன்.

09:09.880 --> 09:11.600
வாட்சையும் பெல்ட்டையும்
கழட்டிகிட்டு இருக்கான்.

09:11.600 --> 09:13.400
-வேணாம், வேணாம்.
-அண்ணா.

09:13.400 --> 09:15.080
உனக்கு தனியா சொல்லனுமா?

09:15.080 --> 09:18.120
பப்லூ அண்ணா, அவங்க ஆடும் போது
பாட்டு போடலாமா?

09:18.120 --> 09:19.320
"கஜ்ராரே" போடு.

09:19.320 --> 09:20.320
நல்ல பாட்டு.

09:20.320 --> 09:23.520
-உன் போன் அடிச்சுக்கிட்டே இருக்கு.
-இப்போ வந்துடுவாங்க.

09:23.520 --> 09:25.080
பிரதான் சார், எங்க இருக்கீங்க?

09:25.080 --> 09:26.720
[பிரிஜ்] நாங்க ஏற்கனவே வந்துட்டோமே.

09:26.720 --> 09:28.520
எங்க? நாங்க இங்க தான் இருக்கோம்.

09:28.520 --> 09:30.120
நாங்க கோவில் கிட்ட இருக்கோம்.

09:30.120 --> 09:32.840
கோவில்ல இருந்து வலது பக்கம் திரும்பி
பின்னாடி இருக்க மைதானத்துக்கு வாங்க.

09:32.840 --> 09:35.280
இடது பக்கம் திரும்புனா சீக்கிரம் வரலாம்.
வேகமா வரச் சொல்லு.

09:35.280 --> 09:37.080
[அபிஷேக்] இடது பக்கமா திரும்புனா
சீக்கிரம் வரலாமாம்.

09:37.080 --> 09:38.720
சீக்கிரம், என்னை சட்டையில்லாம
ஆட வைக்க போறாங்க.

09:38.720 --> 09:40.120
சட்டையில்லாம? எதுக்கு சட்டையை கழட்டனும்?

09:40.120 --> 09:42.200
-[அபிஷேக்] தெரியல. சீக்கிரமா வாங்க.
-போகலாம்.

09:42.200 --> 09:44.360
[பிரிஜ்] சட்டையை கழட்டாதீங்க!

09:44.360 --> 09:47.040
-வீடியோ எடுத்து பரப்பி விட்டுடுவாங்க.
-நடத்து.

09:47.040 --> 09:49.320
[விகாஸ்] நாங்க கழட்டுறோம். கழட்டுறோம்.

09:49.320 --> 09:50.560
ரொம்ப பேசாத.

09:50.560 --> 09:52.440
புரிஞ்சுதா? வா.

09:52.440 --> 09:54.840
[பிரிஜ்] உங்களால இனி தப்பிக்க முடியாது.

09:54.840 --> 09:57.120
போடுங்க. சட்டையை போடுங்க.

09:57.120 --> 09:59.200
பிரதான் அண்ணா, சட்டையை கழட்ட
வைக்க பார்க்குறாங்க.

09:59.200 --> 10:00.200
[தெளிவற்ற பேச்சு சத்தம்]

10:00.200 --> 10:01.840
இரு! தள்ளு!

10:01.840 --> 10:03.160
தள்ளிப் போ!

10:03.160 --> 10:06.160
சுட்டுத் தள்ளிடுவேன்.

10:06.160 --> 10:08.280
[விகாஸ்] பயத்துல நடுங்குதா இப்போ?
இப்போ வா பார்க்கலாம்.

10:08.280 --> 10:12.400
பப்லூ அண்ணா,
அது போலி துப்பாக்கின்னு நினைக்கிறன்.

10:12.400 --> 10:15.640
அதுல போல்ட் இல்ல. பேரல் சின்னதா இருக்கு.
இது பறவைங்கள சுடும் துப்பாக்கி.

10:15.640 --> 10:18.520
கேளு, பச்சை சட்டை,
இது நிஜ துப்பாக்கி தான்.

10:18.520 --> 10:19.720
தைரியம் தான் பச்சை சட்டை.

10:19.720 --> 10:21.280
-நிஜம்னா அப்போ சுடுங்க.
-ஆமா, சுடுங்க.

10:21.280 --> 10:23.080
-சுடுங்க.
-சுடுங்க. சுடுங்க.

10:23.080 --> 10:24.600
[பப்லூ] அட சுடுங்க.

10:24.600 --> 10:26.280
-[டப்லூ] சுடுங்க.
-[பப்லூ] சுடுங்க.

10:26.280 --> 10:28.240
உங்க பேண்டையும் கழட்டிட வேண்டியது தான்.

10:28.240 --> 10:29.840
அண்ணா.

10:29.840 --> 10:31.320
பப்லூ யாரு?

10:31.320 --> 10:32.920
-நான் தான் பப்லூ.
-[பிரிஜ்] நீ தான் பப்லூவா?

10:32.920 --> 10:35.000
-உன் அப்பா பேரு என்ன?
-ஜக்மோகன்.

10:35.000 --> 10:36.000
எந்த ஊரு?

10:36.000 --> 10:37.640
ஏன்? ஆதார் கார்டு
எடுத்து குடுக்க போறீங்களா?

10:37.640 --> 10:39.760
[அனைவரும் சிரிக்கும் சத்தம்]

10:39.760 --> 10:43.520
இல்ல, தம்பி. ஒரு அடி குடுத்து உனக்கு
ஒரு பாடம் கத்துக் கொடுக்கலாம்னு தான்.

10:43.520 --> 10:44.960
[பப்லூ] கிழவருக்கு சாகணும் போல.

10:44.960 --> 10:49.040
அங்கிள், இந்த வயசுல சின்ன பசங்க கூட
சண்டை போடாதீங்க.

10:49.040 --> 10:51.280
இல்லனா உங்களையும் அடிச்சுருவேன்.

10:51.280 --> 10:52.840
-புரிஞ்சுதா. தள்ளுங்க.
-[பிரிஜ் கத்துகிறார்] ஏய்.

10:52.840 --> 10:54.080
[தட்டென்று விழும் சத்தம்]

10:54.080 --> 10:56.120
[அனைவரும் சிரிக்கும் சத்தம்]

10:56.120 --> 10:58.120
[தெளிவற்ற பேச்சு]

10:58.120 --> 11:00.680
[டப்லூ] அங்கிள் எழும்ப
ரொம்ப கஷ்டப்படுறாரே.

11:00.680 --> 11:02.080
என்ன பார்க்கிற?

11:02.080 --> 11:04.120
-அங்கிள் எழும்ப உதவி செய்.
-ஆமா, அடக்கம் பண்ணிட வேண்டியது தான்.

11:04.120 --> 11:05.320
[டப்லூ] என்ன முறைக்கிற?

11:05.320 --> 11:07.080
எங்க மேல உன் சுண்டு விரல கூட
வைக்க முடியாது.

11:07.080 --> 11:09.000
-பெரிய ராம்போ தான இவன்?
-[பப்லூ] ஆமா!

11:09.000 --> 11:10.160
[டப்லூ] என்ன முறைக்கிற?

11:10.160 --> 11:12.200
[தெளிவற்ற பேச்சு]

11:12.200 --> 11:14.160
பாருடா இவனை.

11:14.160 --> 11:17.160
-குருவி சுடற துப்பாக்கியை வெச்சுகிட்டு.
-அனைவரும் சிரிக்கும் சத்தம்.

11:17.160 --> 11:19.320
[பப்லூ] இவன் சரியான முட்டாள்.

11:19.320 --> 11:21.720
[தெளிவற்ற பேச்சு]

11:21.720 --> 11:23.360
-ஹே!
-தள்ளிப்போ.

11:23.360 --> 11:25.200
போலி துப்பாக்கி வச்சு எப்படி
கொல்லணும்னு காட்டுறேன்.

11:25.200 --> 11:26.480
அவன் செத்துருவான்.

11:26.480 --> 11:27.960
-ராஸ்கல்களா!
-அடி அவனை. அடி அவனை.

11:27.960 --> 11:30.200
பெல்ட்டை கழட்டு, பப்லூ அண்ணா.
என்ன பண்ணுற நீ?

11:30.200 --> 11:31.600
[ஆண் 1] அவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு!

11:31.600 --> 11:33.840
வா, பெல்ட்டை கழட்டு. கழட்டு.

11:33.840 --> 11:35.240
வா.

11:35.240 --> 11:36.520
அடி அவனை. அடி அவனை.

11:36.520 --> 11:37.960
நீ போ!

11:37.960 --> 11:39.680
[ஆண் 2] டேய், அடிக்காதே.

11:39.680 --> 11:41.160
யாராவது பப்லூ அண்ணனை காப்பாத்துங்க.

11:41.160 --> 11:43.440
உனக்கு பைத்தியமா?
அவன் முரட்டுத்தனமா நடந்துக்குறான்.

11:43.440 --> 11:45.920
-அடிச்சிருவேன் உன்ன.
-ஓடு.

11:45.920 --> 11:48.200
[பப்லூ] ஓடு! நம்மளையே
அடிக்கப் பார்க்கிறான்.

11:48.200 --> 11:50.160
நம்மளையே அடிக்கப் பார்க்கிறான்.

11:50.160 --> 11:52.280
-நம்மளையே அடிக்கப் பார்க்கிறான்.
-ஓடு!

11:52.280 --> 11:54.320
பின்னாடி நிற்கிறான் பாரு! அடி அவனை!

11:54.320 --> 11:56.200
செங்கல் வச்சு அடி.

11:56.200 --> 11:57.480
அங்கேயே இரு.

11:57.480 --> 11:59.000
இங்க வா. இங்க வா.

11:59.000 --> 12:00.600
அடி அவங்கள!

12:00.600 --> 12:02.840
-பெல்ட்டை வச்சு அடிச்சுருவேன்!
-நிறுத்து!

12:02.840 --> 12:04.760
பைத்தியமா உனக்கு?

12:04.760 --> 12:07.400
-[பப்லூ] நான் செத்துருவேன்.
-இங்க இருந்து கத்தாதே. போய் உதவி செய்.

12:07.400 --> 12:09.280
-அவனே பார்த்துக்குவான்.
-கேளு, கேளு!

12:09.280 --> 12:12.680
அடிச்சிருவேன் உன்ன.
பிரதான் சாரை அடிக்கிறியா நீ?

12:12.680 --> 12:14.360
-நான் அடிக்கவா?
-பப்லூ, அடி அவனை.

12:14.360 --> 12:15.880
-நான் அடிக்கவா?
-இல்ல, வேண்டாம், என்னை அடிக்காத.

12:15.880 --> 12:17.600
-வம்பிழுக்க பார்க்கிறியா?
-இல்ல, இல்ல, இல்ல.

12:17.600 --> 12:19.840
-வம்பிழுக்க பார்க்கிறியா?
-இல்ல, இல்ல, இல்ல.

12:19.840 --> 12:21.440
எவ்ளோ தைரியம் இருந்தா அடிப்ப?

12:21.440 --> 12:22.880
எவ்ளோ தைரியம் இருந்தா பிரதான் சாரை அடிப்ப?

12:22.880 --> 12:25.160
மன்னிச்சுக்கோ, தப்பு நடந்திருச்சு.
நான் பார்த்துக்குறேன்.

12:25.160 --> 12:27.640
கேட் எக்ஸாம் கிடக்கட்டும், நான் இவனை...

12:27.640 --> 12:30.600
வேண்டாம், வேண்டாம், நிறுத்து!

12:30.600 --> 12:32.720
-[அபிஷேக்] விடு என்னை.
-[விகாஸ்] அடிச்சு கொன்னுட போறீங்க.

12:32.720 --> 12:34.520
-அம்மணமா ஆட விடுவியா?
-விடு அவனை!

12:34.520 --> 12:36.760
-அம்மணமா ஆட விடுவியா?
-விடு அவனை!

12:36.760 --> 12:38.960
அவனை விடாதே. சரியான மிருகம்.

12:38.960 --> 12:40.800
[பிரிஜ்] யாரை மிருகம்னு சொல்லுற?

12:40.800 --> 12:43.880
-யாரை மிருகம்னு சொல்லுற?
-போயிருங்க இங்க இருந்து.

12:43.880 --> 12:45.880
-போகட்டும் விடு.
-இவனுங்களுக்கு எதிர்காலமே கிடையாது, சார்.

12:45.880 --> 12:47.160
போகட்டும் விடுங்க.

12:47.160 --> 12:48.440
பைத்தியம் பிடிச்சிருச்சு அவனுக்கு.

12:48.440 --> 12:49.560
போய்த் தொலை!

12:49.560 --> 12:51.640
விடுங்க அவனை.

12:51.640 --> 12:52.680
உன் கண்ணாடியை எடுத்துக்கோ.

12:52.680 --> 12:56.520
வண்டியில உட்காராதேன்னு சொன்னோம்!
அது உனக்கு பொறுக்கலையா.

12:56.520 --> 12:57.720
சிங்கள் ஸ்டாண்ட்ல இருந்துச்சு.

12:57.720 --> 12:59.160
நீ விழுந்திருந்தா பல்லு உடைஞ்சிருக்கும்.

12:59.160 --> 13:01.600
நான் என்ன முட்டாளா. இதுக்கு முன்னாடி
பைக்ல உட்காந்தது இல்லையா.

13:01.600 --> 13:03.720
-நான் எப்படி விழுவேன்?
-எப்படியா? வா எப்படின்னு காட்டுறேன்.

13:03.720 --> 13:05.800
இவன் எப்படி விழுந்திருப்பான்னு காட்டுறேன்.

13:05.800 --> 13:07.600
-விடுங்க.
-நான் எப்படின்னு காட்டுறேன்.

13:07.600 --> 13:10.120
-இல்ல, நான் காட்டுறேன்.
-எலும்பு உடைய போகுது.

13:10.120 --> 13:12.120
[தெளிவற்ற பேச்சு சத்தம்]

13:12.120 --> 13:14.040
இவன் சரியான பைத்தியக்காரன்.

13:14.040 --> 13:15.480
சரியான மிருகம்.

13:15.480 --> 13:18.520
அவர் எழும்புறதுக்குள்ள போய்டுங்க. போங்க.

13:18.520 --> 13:19.560
ஓடுங்க.

13:19.560 --> 13:21.200
[ஆண் 2] போலித் துப்பாக்கி!

13:21.200 --> 13:22.400
முட்டாளுங்க.

13:22.400 --> 13:24.960
அவன் தலைல இருந்து என்னது சிவப்பா வருது?

13:24.960 --> 13:27.280
[மெல்லிய இசை]

13:27.280 --> 13:29.320
வேற எங்கயாவது போட்டோ
எடுத்துக்குறேன்னு சொன்னீங்க.

13:29.320 --> 13:31.840
அதாவது நீங்க இங்க வந்தது நல்லது.

13:31.840 --> 13:33.360
இது உங்க கடையும் தான்.

13:33.360 --> 13:34.720
[புகைப்படக்காரர் தொண்டையை கனைகிறார்]

13:34.720 --> 13:35.760
[மிதமான இசை]

13:35.760 --> 13:37.120
கொஞ்சம் கீழ பாருங்க.

13:37.120 --> 13:39.000
[புகைப்படக்காரர்] அதாவது, கண்டிப்பா இல்ல.

13:39.000 --> 13:40.920
வேணும்னா கீழ பாருங்க இல்லனா பரவாயில்லை.

13:40.920 --> 13:42.600
என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுறீங்க?

13:42.600 --> 13:44.480
[புகைப்படக்காரர்] இல்ல, ஒண்ணும் இல்ல.

13:44.480 --> 13:47.160
உங்க போட்டோவை
அழிச்சதுக்கு மன்னிச்சுக்கோங்க.

13:47.160 --> 13:48.440
சரி, போட்டோ எடுங்க.

13:48.440 --> 13:49.800
முதல்ல மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க.

13:49.800 --> 13:52.080
-அட.
-இல்ல, ப்ளீஸ். நான் போட்டோ எடுக்குறேன்.

13:52.080 --> 13:53.200
நான் எடுக்குறேன்.

13:53.200 --> 13:54.400
சிரிங்க.

13:54.400 --> 13:55.520
[கேமரா ஷட்டர் சத்தம்]
