WEBVTT

00:01.400 --> 00:03.760
கிராம பஞ்சாயத் ஃபுலேரா

00:06.520 --> 00:07.640
போட்டி தேர்வுகள் : சொல் பட்டியல்

00:07.720 --> 00:08.720
[பிரிண்டரின் ஓசை]

00:21.440 --> 00:23.760
[பூச்சிகளின் மெல்லிய ஓசை]

00:32.240 --> 00:34.600
[தட்டு நகர்த்தும் சத்தம்]

00:38.800 --> 00:39.960
[ஃபோன் ஒலிக்கும் சத்தம்]

00:46.680 --> 00:48.040
ஸ்லாம்புக்
ப்ரதீக்

00:48.440 --> 00:51.240
ப்ரதீக்
உன்ன மிஸ் பண்றோம் நண்பா @அபிஷேக் திரிபாதி

00:53.120 --> 00:56.560
அருமை, நண்பா. சந்தோஷமா இரு!

01:15.640 --> 01:17.920
[சோகமான இசை தொடருகிறது]

01:35.720 --> 01:37.280
பக்கத்தில மதுபான கடை ஏதும் இருக்கா?

01:37.560 --> 01:38.680
அதோ அங்கே இருக்கு.

01:39.520 --> 01:41.520
[மெல்லிய சலசலப்பு சத்தம்]

01:51.200 --> 01:52.400
பபித்தா.

01:53.960 --> 01:55.960
[மெல்லிய சலசலப்பு சத்தம்]

01:59.480 --> 02:02.120
[ரேடியோவில் பாடல் ஒலிக்கிறது]

02:04.160 --> 02:06.120
[அபிஷேக்] யாராவது இருக்கீங்களா?

02:11.120 --> 02:12.120
[கடைக்காரர்] என்ன வேணும்?

02:12.840 --> 02:14.960
-பியர் கிடைக்குமா?
-எவ்வளவு?

02:15.200 --> 02:16.320
ஒன்னு.

02:17.120 --> 02:19.200
எட்டு மணிக்கு அப்பறம் கடை மூடிடுவோம்.

02:19.840 --> 02:22.240
அதுக்கப்பறம் கடை திறக்கமாட்டோம்.

02:22.640 --> 02:25.320
சரி அப்ப ரெண்டு கொடுங்க.
என்ன பிராண்ட் வைச்சு இருக்கீங்க?

02:26.400 --> 02:27.400
இதை பிடிங்க.

02:33.160 --> 02:35.200
-என்கிட்ட இதுதான் இருக்கு.
-[பாட்டில் உரசும் ஒலி]

02:36.400 --> 02:38.080
-எவ்வளவு?
-முண்ணூற்றி இருபது ரூபாய்.

02:39.680 --> 02:41.600
லேபிளில் நூற்றி ஐம்பதுன்னு இருக்கு.

02:41.680 --> 02:43.520
குளிர்ச்சியாக்க 20 ரூபா கேட்கக்கூடாதா?

02:51.160 --> 02:54.680
பாரு முதல் பாட்டிலை முடிக்க
ரொம்ப நேரம் எடுத்துக்க வேண்டாம்.

02:55.040 --> 02:59.360
இல்லன்னா அடுத்த பாட்டில்
குடிக்கும்போது சூடாக இருக்கும்.

02:59.440 --> 03:00.600
சூடானது நல்லா இருக்காது.

03:02.560 --> 03:04.760
[ரேடியோவில் பாடல் ஒலிக்கிறது]

03:14.200 --> 03:16.200
[விறுவிறுப்பான இசை]

03:35.680 --> 03:37.960
[விறுவிறுப்பான இசை தொடர்கிறது]

03:46.680 --> 03:51.600
கிராம பஞ்சாயத் ஃபுலேரா

04:01.120 --> 04:03.320
[மெல்லிய பின்னணி இசை]

04:16.320 --> 04:17.960
[மூடி திறந்து பியர் வெளிவரும் ஒலி]

04:26.840 --> 04:28.840
[தீம் இசை ஒலிக்கிறது]

05:17.400 --> 05:22.720
பஞ்சாயத்

05:29.440 --> 05:31.440
-[நாய் குரைக்கும் சத்தம்]
-[ஃபோன் வைப்ரேட் ஆகும் சத்தம்]

05:34.320 --> 05:36.320
[ஃபோன் வைப்ரேட் ஆகும் சத்தம் தொடர்கிறது]

05:38.680 --> 05:39.920
[தூரத்தில் நாய் குரைக்கும் சத்தம்]

05:45.320 --> 05:48.280
[ஃபோன் வைப்ரேட் ஆகும் சத்தம்]

05:51.040 --> 05:52.680
[ஃபோன் வைப்ரேட் ஆவது நிற்கிறது]

05:54.280 --> 05:56.120
[பெருமூச்சு விடுகிறார்]

05:58.000 --> 06:00.240
-[தண்ணீர் கேன் ஆடும் ஒலி]
-[பைப் திறக்கப்படும் ஒலி]

06:01.960 --> 06:02.960
[பாத்திர ஒலி]

06:26.000 --> 06:28.040
[விறுவிறுப்பான இசை]

06:38.960 --> 06:40.000
அபிஷேக் திரிபாதி

06:40.840 --> 06:42.400
[டிராயர் இழுத்து மூடும் ஒலி]

06:46.280 --> 06:48.360
[திகிலான பின்னணி இசை]

06:54.160 --> 06:56.360
[திகிலான பின்னணி இசை]

06:58.800 --> 06:59.800
[அபிஷேக்] ச்சே.

07:00.840 --> 07:02.680
அடச்சே, அடச்சே!

07:06.640 --> 07:07.800
[பாட்டில் உருளும் ஒசை]

07:11.480 --> 07:13.640
[திகிலான பின்னணி இசை]

07:17.360 --> 07:19.520
[பாட்டில் உருளும் ஓசை]

07:22.040 --> 07:24.200
[நீர் கொட்டும் ஒலி]

07:24.280 --> 07:27.600
எப்போதும் கடவுள்கிட்ட
உனக்காக மட்டும் வேண்டிக்கிற.

07:27.680 --> 07:30.560
எனக்காகவும் வேண்டிக்க மாட்டியா?

07:30.760 --> 07:33.200
என்ன வேண்டிக்கணும்னு சொல்லுங்க
வேண்டிக்கிறேன்.

07:33.400 --> 07:35.640
என்ன வேணுமோ வேண்டிக்கோ.

07:35.720 --> 07:37.680
இது சரி இல்ல.

07:37.960 --> 07:39.920
நானே யோசிக்கணும்.
நானே வேண்டிக்கவும் செய்யணும்.

07:40.320 --> 07:43.000
விவாதம் எதுக்கு. என்ன வேணுமோ வேண்டிக்கோ.

07:43.080 --> 07:46.080
-[மஞ்சு] சரி.
-[ஃபோன் ஒலிக்கும் சத்தம்]

07:46.160 --> 07:48.000
ஃபோன் அடிக்குது எடுங்க.

07:48.080 --> 07:51.360
ஒலிக்கட்டும்.
அது ஒலிச்சுக்கிட்டே தான் இருக்கும்.

07:51.720 --> 07:54.200
நீ எனக்காக கொஞ்சம் நல்லா வேண்டிக்கோ.

07:54.280 --> 07:55.360
[பிரிஜ்] ம்ம்.

07:56.120 --> 07:57.160
ஹலோ.

07:58.400 --> 08:01.040
செயலாளர் சார் சொல்லுங்க.
ராத்திரி நல்லா தூங்கினீங்களா?

08:01.320 --> 08:02.520
டிபன் சாப்பிட்டீங்களா?

08:03.400 --> 08:05.240
ஐயோ! என்னது?

08:06.040 --> 08:07.120
எப்படி நடந்துச்சு?

08:07.960 --> 08:11.520
ஒன்னு செய்ங்க. நீங்க அங்கேயே இருங்க.
நான் இப்பவே வரேன்.

08:11.600 --> 08:13.640
-இப்பவே வரேன்.
-[மஞ்சு] என்னாச்சு?

08:14.360 --> 08:16.800
என்ன ஆச்சுன்னு உன்னிடம் சொல்லுறதால,
என்ன ஆயிட போகுது?

08:16.880 --> 08:18.320
சொல்லுங்களேன். என்ன ஆச்சு?

08:18.400 --> 08:20.840
-[பிரிஜ்] ஒரு நிமிடம் இருங்க.
-[மஞ்சு] எங்க போறீங்க?

08:20.920 --> 08:24.320
ப்ரஹலாத் ஒரு வேலை செய்.
நீ உடனே ஆபிசுக்கு போ!

08:24.400 --> 08:27.120
காலை கடனெல்லாம் அப்பறம் முடிச்சுக்க.
முதலில் ஆபிசுக்கு வா.

08:27.200 --> 08:30.280
எப்போ ஃபோன் பண்ணாலும் ஒன்னு சாப்பிடுவ
இல்லன்னா காலை கடனில் இருப்ப.

08:30.720 --> 08:32.560
நீ சாமிகிட்ட என்னத்த வேண்டிக்கிட்ட?

08:33.800 --> 08:35.000
[சலிப்பாக மூச்சு விடும் ஒலி]

08:35.640 --> 08:37.280
[மஞ்சு] மன்னிச்சுக்கோங்க துளசி தாயே.

08:37.760 --> 08:39.440
அவர் எப்போதுமே இப்படித்தான்.

08:45.200 --> 08:47.360
எல்லா தகவலும் பாதுகாப்பா
சிபியூவில் இருக்கு.

08:47.960 --> 08:49.400
மானிட்டர்தான் திருட்டு போயிருக்கு.

08:50.400 --> 08:52.560
இப்ப விஷயம்,
மானிட்டர் திருட்டு போனது மட்டும் இல்லை.

08:52.640 --> 08:55.680
நீங்க மதுபானம் குடிச்சிட்டு
கதவை பூட்ட மறந்துட்டீங்க.

08:57.440 --> 08:59.800
தலைவர் சார், ஏற்கனவே சாரி கேட்டுட்டேன்.

08:59.880 --> 09:02.840
நல்லது. ரொம்ப நல்லது. சாரி!

09:02.920 --> 09:05.680
ஆபிஸ் முழுசும் கொள்ளை போகட்டும்.
நீங்க சாரி சொல்லிடுங்க.

09:06.040 --> 09:08.480
[பிரிஜ்] இங்கிலீஷ்காரங்க இந்த சாரியை
நல்லா விட்டுட்டு போனாங்க,

09:08.560 --> 09:11.360
ஒரு ஆளை கொலை பண்ணிட்டு
சாரி சொல்லிட்டு சுலபமா போயிடலாம்.

09:11.720 --> 09:12.920
சாரி!

09:13.320 --> 09:15.800
தலைவர் சார் விடுங்க.
ஏதோ தப்பு நடந்து போச்சு.

09:15.880 --> 09:18.440
நான் ஒன்னும் அவரை தூக்கில் போடல.
தப்பு நடந்து போச்சாம்.

09:18.520 --> 09:20.480
[பிரிஜ்] இன்னக்கி மானிட்டர்
திருட்டு போயிருக்கு.

09:20.560 --> 09:23.000
நாளைக்கு ஆபிசில் எதுவும் திருட்டு போகலாம்.

09:23.080 --> 09:25.520
எவ்வளவு முக்கியமான பத்திரங்கள் எல்லாம்
இங்கே வைச்சிருக்கோம்.

09:25.600 --> 09:28.240
உங்களுக்கென்ன ஒரு சாரி சொல்லிட்டு
போயிடுவீங்க.

09:29.600 --> 09:32.000
பாருங்க இந்த மாதிரி அஜாக்கிரதையெல்லாம்
நான் சகிச்சுக்க மாட்டேன்.

09:32.440 --> 09:36.280
இப்பவே இங்கிருந்து கிளம்புங்க.
தங்க வேற இடம் பார்த்துக்கோங்க. போங்க.

09:36.760 --> 09:38.840
[சோகமான பின்னணி இசை]

09:41.560 --> 09:43.120
தலைவர் சார், தங்கிக்க விடுங்களேன்.

09:43.200 --> 09:44.840
-தனியா இருக்கார்...
-வாயை மூடு, முட்டாள்!

09:44.920 --> 09:48.040
தனியா இருக்காருன்னு எனக்கு சொல்லித்தரியா?
எனக்கு தெரியாதா?

09:48.120 --> 09:49.720
குறுக்க பேசாத! புரியுதா?

09:51.880 --> 09:53.160
சரிங்க, தலைவர் சார்.

09:54.280 --> 09:57.200
ப்ரஹலாத் நீ அவரோட போ.
போய் புகார் கொடுத்துட்டு வா.

09:57.560 --> 10:00.280
ஒரு நிமிடம். காலை கடனை முடிச்சிட்டு வரேன்.

10:00.360 --> 10:03.160
இப்போ போ. எது செய்யணும்னாலும்
வழியில் பண்ணிக்க. புரியுதா?

10:05.800 --> 10:08.280
இடது பக்கம் திரும்பணும்.

10:08.800 --> 10:10.800
[மக்கள் சலசலப்பு சத்தம்]

10:13.040 --> 10:16.320
ஃபகாலி போலீஸ் ஸ்டேஷன், பலியா

10:18.320 --> 10:20.760
-[அடிக்கும் சத்தம்]
-[வலியில் அலறும் சத்தம்]

10:20.960 --> 10:23.160
-[போலீஸ் 1] யாரு செய்தா சொல்லு?
-[ஆண் 1] சார் நான் இல்லை.

10:23.240 --> 10:26.000
-[போலீஸ் 1] நீ இல்லையா?
-[ஆண் 1] நான் எதுவும் செய்யல.

10:26.080 --> 10:27.720
[போலீஸ் 1] நீ இல்லன்னா, வேற யாரு?

10:27.800 --> 10:29.360
-[ஆண் 1] துணி கிழிஞ்சிரும்.
-[அடிக்கும் சத்தம்]

10:29.440 --> 10:30.960
[போலீஸ் 1] துணி மட்டும் கிழிய போறதில்ல.

10:31.040 --> 10:32.360
பொறுத்து இருந்து பாரு.

10:32.440 --> 10:34.920
[ஆண் 1] உங்க குழந்தை பேரில் கேட்கிறேன்
விட்டுருங்க சார்!

10:35.000 --> 10:37.560
-[போலீஸ் 1] எனக்கு குழந்தை இல்லையே.
-[அடிக்கும் சத்தம்]

10:37.640 --> 10:39.360
-[ஆண் 1 சத்தமாக அலறும் சத்தம்]
-[போலீஸ் 1] சொல்லு.

10:39.440 --> 10:41.840
[போலீஸ் 1] அப்ப யாரு செய்தா சொல்லு?

10:41.920 --> 10:43.200
அவர் என்ன செய்திருப்பார்?

10:43.400 --> 10:45.040
ஏதாவது சட்ட விரோதமா செய்திருப்பான்.

10:45.120 --> 10:46.520
திருட்டு மாதிரி ஏதாவது.

10:46.600 --> 10:48.240
[ஆண் 1 வலியில் அழும் ஒலி]

10:49.080 --> 10:51.880
[போலீஸ் 2] சரி அப்ப கணினி
திருட்டு போயிருக்கு.

10:51.960 --> 10:52.960
ஹ்ம்ம்.

10:53.200 --> 10:55.520
-கணினி இல்லை மானிட்டர் மட்டும்தான்.
-ஹ்ம்ம்.

10:57.960 --> 11:01.200
கணினி இல்லை மானிட்டர் மட்டும்.

11:02.440 --> 11:06.600
சரி பெரிய மானிட்டரா இல்ல மெல்லியதா?

11:06.680 --> 11:09.000
-அது ஒரு மெல்லிய மானிட்டர்.
-மெல்லிய மானிட்டர்.

11:09.640 --> 11:11.320
-நிறம்?
-கருப்பு.

11:11.400 --> 11:12.440
உயரம்?

11:19.240 --> 11:21.800
சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்.
[போலீகாரர் சிரிக்கும் ஒலி]

11:22.800 --> 11:24.920
அது என்ன கம்பனி மானிட்டர்?

11:26.960 --> 11:28.480
அது பெயர் என்ன?

11:28.560 --> 11:29.680
[போலீஸ் 2] ஞாபகம் இல்லைல?

11:31.000 --> 11:33.560
யாருக்கும் இருக்காது.
மக்கள் மறக்கத்தான் செய்வாங்க.

11:33.840 --> 11:36.920
அரசாங்க சொத்து தான.
[நக்கலாக சிரிக்கும் ஒலி]

11:37.000 --> 11:39.960
விகாஸுக்கு ஃபோன் பண்ணலாம்.
என்ன கம்பனின்னு அவன் சொல்லுவான்.

11:40.040 --> 11:42.560
ப்ரஹலாத் அதற்கு அவசியமில்லை.

11:43.120 --> 11:45.120
மனுவில் எழுத வெறும் நடைமுறைக்காக
தான் கேட்டேன்.

11:46.000 --> 11:47.840
எப்படியும் இப்போதைக்கு கிடைக்க போறதில்லை.

11:49.840 --> 11:51.960
ஏன் கிடைக்காது?
நீங்க விசாரிச்சா கிடைக்கும்.

11:54.120 --> 11:56.520
நீங்க அக்கம் பக்க நிலங்களில்
தேடி பார்த்தீங்களா?

11:57.040 --> 11:58.960
நிலங்களிலா?

11:59.520 --> 12:01.840
[போலீஸ் 2] சமீபத்தில் ஒரு கொள்ளை நடந்தது.

12:01.920 --> 12:04.040
திருடன் பணத்தை எடுத்துட்டு போயிட்டான்.

12:04.120 --> 12:08.480
ஆனா சூட்கேஸ் கனமா இருந்ததால
நிலத்தில போட்டுட்டு போயிட்டான்.

12:08.560 --> 12:10.640
ஆனா மானிட்டர் அவ்வளவு கனமானது இல்லை.

12:10.720 --> 12:14.760
ஆனாலும் நிலங்களில் தேடி பார்ப்பதில்
என்ன பிரச்சனை?

12:14.840 --> 12:16.200
தேடித்தான் பாருங்களேன்.

12:17.560 --> 12:19.840
நாங்க எதுக்கு தேடணும்? அது உங்க வேலை தான?

12:22.440 --> 12:25.080
ஆமா. இது சரியான பேச்சு.

12:25.720 --> 12:27.080
இந்த வேலை எங்களுடையது தான்.

12:28.640 --> 12:34.120
உங்க வேலை மது அருந்தி அரசாங்க சொத்தை
கொள்ளை அடிக்க விடுறதுதான்.

12:34.200 --> 12:36.640
-நீங்க என்ன சொல்லுறீங்க?
-இருங்க, செயலாளர் சார்.

12:37.280 --> 12:39.440
ஓம் பிரகாஷ் அண்ணா,
விசாரிக்க யாராவது வருவாங்களா?

12:39.520 --> 12:41.640
இன்ஸ்பெக்டர் ஒரு காளையை
தேடும் வேலையில் இருக்கார்.

12:42.080 --> 12:44.480
மதியம் வருவார்.

12:44.560 --> 12:45.840
அதுவா?

12:45.920 --> 12:47.720
-[ஆண் 1] சார் அடிக்காதீங்க!
-[போலீஸ் 1] சொல்லு.

12:47.800 --> 12:49.920
-[ஆண் 1] ப்ளீஸ் சார்.
-[போலீஸ் 1] அப்போ சொல்லலாம்ல?

12:50.000 --> 12:51.360
இப்படி அடி வாங்கறதுக்கு.

12:51.560 --> 12:53.160
-[அடிக்கும் சத்தம்]
-வரேன் சார்.

12:53.240 --> 12:54.440
சரி.

12:55.360 --> 12:57.080
ப்ரஹலாத் சார் நீங்க போங்க.

12:57.160 --> 12:59.120
எனக்கு மார்க்கெட்டல வேலை இருக்கு.
அப்புறம் பார்க்கலாம்.

12:59.560 --> 13:01.480
என்ன வேலை? எங்கே போறீங்க நீங்க?

13:02.120 --> 13:04.800
மார்க்கெட்டில் தங்க எனக்கு
ஒரு இடம் பார்க்கணும்.

13:05.120 --> 13:08.240
செயலாளர் சார், தலைவர் சார் பேசினதை
அப்படியே நிஜம்னு நம்பீட்டீங்களா?

13:08.320 --> 13:09.800
விடுங்க. வாங்க கிராமத்துக்கு போவோம்.

13:09.880 --> 13:11.840
அவர் அப்படி சொல்லும்போது
மாறத்தான் செய்யணும்.

13:11.920 --> 13:14.400
செயலாளர் சார், தயவு செய்து வாங்களேன்.

13:14.480 --> 13:16.880
ப்ரஹலாத், போங்க நான் அப்புறம் வரேன்.

13:18.720 --> 13:20.000
என்ன பண்ணுறீங்க ப்ரஹலாத் சார்?

13:20.440 --> 13:21.960
சரி வாங்க சேர்ந்தே போவோம்.

13:22.240 --> 13:24.880
நானும் போகமாட்டேன்.
உங்களையும் போகவிடமாட்டேன் சரியா?

13:24.960 --> 13:26.480
என்னோட கிராமத்துக்கு திரும்பறீங்க.

13:26.560 --> 13:28.440
ப்ரஹலாத் சார் என் வேலையை
நான் பார்த்துக்க விடுங்க.

13:28.520 --> 13:30.080
அப்புறம் படிக்கத்தான் நேரம் இருக்கும்.

13:30.160 --> 13:31.560
[ப்ரஹலாத்] சரி, சார் இதை சொல்லுங்க.

13:31.640 --> 13:33.720
மாத மத்தியில் எங்கே போய் இடம் தேடுவீங்க?

13:33.920 --> 13:36.080
அடுத்த மாதம் மாறிக்கோங்க.

13:38.640 --> 13:40.480
வாங்க. கிராமத்துக்கு திரும்புவோம்.

13:40.560 --> 13:42.160
காலையிலிருந்து நீங்க எதுவுமே சாப்பிடல.

13:42.240 --> 13:43.800
ரெண்டு பேரும் மோகனிடம் போவோம்.

13:43.880 --> 13:46.400
போய் வயிறு நிறைய சோலா பூரி சாப்பிடுவோம்.

13:46.480 --> 13:48.640
-சரியா?
-[என்ஜின் ஸ்டார்ட் ஆகும் ஒலி]

13:48.720 --> 13:51.440
நான் சாப்பிடும் மனநிலையில் இல்லை.
கிராமத்துக்கு திரும்புவோம்.

13:51.520 --> 13:52.840
உங்க இஷ்டம்.

13:56.160 --> 13:59.760
[விகாஸ்] குஷ்பூ என் மேஜையில்
எதுவும் திருட்டு போகல.

14:00.360 --> 14:02.440
செயலாளர் சார்
அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.

14:03.320 --> 14:05.000
-நான் குடிச்சிட்டு தூங்கலையே.
-[மெல்லிய பின்னணி இசை]

14:11.840 --> 14:13.920
செயலாளர் சார் டென்ஷன் ஆகாதீங்க.

14:14.200 --> 14:16.000
நாம மனுவோடு எஃப்ஐஆர் நகலையும் இணைக்கணும்.

14:16.080 --> 14:17.840
அவ்வளவுதான் அப்புறம்
புது மானிட்டர் வந்திடும்.

14:17.920 --> 14:19.240
அதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

14:19.960 --> 14:21.360
என்ன ஒரு வருடம். அவ்வளவுதான்.

14:22.600 --> 14:24.560
சரியா. டென்ஷன் ஆகாதீங்க.

14:27.080 --> 14:29.080
[பைக் ஸ்டார்ட் ஆகும் ஒலி]

14:43.240 --> 14:44.560
[சாவியின் ஒலி]

14:57.480 --> 14:59.480
[பிரிஜ்] அவர் இடம் பார்க்கிறார்.

14:59.560 --> 15:00.880
உனக்கும் இடம் பாரு.

15:01.240 --> 15:02.480
நல்லதுதான்.

15:02.560 --> 15:03.840
[மஞ்சு] வயசு பையன்.

15:03.920 --> 15:05.800
ஏதோ தப்பு நடந்து போச்சு.
மன்னிச்சிடுங்களேன்.

15:05.880 --> 15:08.720
ஆமாம். அவர் பக்கம் சாதகமா பேசு.

15:09.200 --> 15:11.400
நீங்க மது அருந்தி பிரச்சனை வந்ததே இல்லையா?

15:14.040 --> 15:15.800
நான் குடிச்சிட்டு என்ன பண்ணியிருக்கேன்?

15:15.880 --> 15:17.560
-நான் என்ன செய்தேன்?
-என்ன பேசுறீங்க?

15:18.040 --> 15:20.080
விகாஸ் திருமணத்தில் நடனமாடும்போது,

15:20.680 --> 15:22.160
நீங்க செய்தது ஞாபகம் இல்லையா?

15:22.560 --> 15:23.560
[மஞ்சு] அவர் என்ன செய்தார்?

15:23.640 --> 15:25.280
என்ன செய்து இருந்தாலும்,

15:25.360 --> 15:27.880
செயலாளர் அளவுக்கு நஷ்டம் உண்டாக்கல.

15:28.360 --> 15:30.880
ரெண்டு பெக் குடிச்சா போதும்
தள்ளாட ஆரம்பிச்சுடுவார்.

15:30.960 --> 15:32.840
நல்லதா போச்சு இனிமே ஆபிசில் தங்கமாட்டார்.

15:33.560 --> 15:35.080
ரொம்ப பிடிவாதம்.

15:35.320 --> 15:36.480
சரி ப்ரஹலாத்,

15:36.720 --> 15:38.240
எதற்காக நேரத்தை வீணடிக்கிற?

15:38.320 --> 15:40.320
இங்கே வா. கோதுமையை சாக்கு பையில் போடு.

15:41.480 --> 15:43.600
காலையிலிருந்து செயலாளர் சார்
எதுவுமே சாப்பிடல.

15:43.680 --> 15:46.320
அவர் சாப்பிடலன்னா அதற்கு நான் என்ன செய்ய?
அவருக்கு ஊட்டி விடணுமா?

15:46.400 --> 15:48.040
காலையிலிருந்து சாப்பிடலையாம்.

15:48.120 --> 15:50.680
[மஞ்சு] பாருங்க இந்த கோதுமையை
மாவு மில்லுக்கு எடுத்துட்டு போங்க.

15:50.920 --> 15:53.160
இந்த தடவையாவது
நல்லா நைசா அரைக்க சொல்லுங்க.

15:53.240 --> 15:54.880
போன தடவை கொர கொரன்னு அரைபட்டு இருந்தது.

15:56.760 --> 15:59.200
கிராம பஞ்சாயத் ஃபுலேரா

16:01.600 --> 16:03.600
[மெல்லிய பின்னணி இசை]

16:08.360 --> 16:10.960
கணினி திருட்டு போனதுபற்றி கேள்விப்பட்டேன்.

16:14.120 --> 16:16.280
அங்கிள், கணினி இல்லை.

16:17.000 --> 16:18.800
-மானிட்டர் திருட்டு போயிடுச்சு.
-என்னது?

16:18.880 --> 16:20.320
-மானிட்டர். மானிட்டர்.
-அது என்ன?

16:20.960 --> 16:23.360
மானிட்டர். வெளிய வாங்க.
நான் விளக்கமா சொல்லுறேன்.

16:23.440 --> 16:28.400
[விகாஸ்] அதில் இருப்பது சிபியூ, மானிட்டர்,
குட்டியா இருக்கறதுக்கு பெயர் மௌஸ்.

16:28.680 --> 16:31.320
எல்லாம் இணைக்கப்பட்டு இருக்கணும்.

16:31.960 --> 16:33.760
அப்பதான் வேலை செய்யும்.

16:34.160 --> 16:36.160
[மிக மெல்லிய உரையாடல்]

16:41.560 --> 16:45.040
அபிஷேக் சார், இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்.

16:54.480 --> 16:56.480
தூய்மைக்கான அட்டவணை

16:58.880 --> 17:01.480
செயலாளர் - அபிஷேக் திரிபாதி செல் 918704698

17:01.560 --> 17:04.400
"மஞ்சு தேவி. அபிஷேக் திரிபாதி."

17:08.040 --> 17:09.360
அப்போ, திரிபாதி சார்,

17:09.840 --> 17:13.160
கதவை பூட்ட மறக்கும் அளவுக்கு
எவ்வளவு பாட்டில் பியர் குடிச்சிருந்தீங்க?

17:14.600 --> 17:15.680
ரெண்டு பாட்டில்கள்.

17:17.880 --> 17:20.600
கொஞ்சம்தான் தாக்குபிடிக்கும் போல.
[சிரிக்கும் மெல்லிய ஒலி]

17:22.880 --> 17:24.120
எங்கே குடிச்சீங்க?

17:25.040 --> 17:26.320
அங்கே.

17:27.640 --> 17:28.840
எங்கே?

17:29.360 --> 17:30.720
அங்கே உட்கார்ந்து ஏன் குடிச்சீங்க?

17:31.560 --> 17:34.720
அங்கே காற்றோட்டமா இருந்துச்சு.
அதனால் அங்கே உட்கார்ந்து குடிச்சேன்.

17:34.800 --> 17:38.440
அப்போ தொட்டிமேல ஏறி போய் குடிக்கணும்.

17:38.920 --> 17:40.760
அங்கே காற்றோட்டம் இன்னும் நல்லா இருக்கும்.

17:40.840 --> 17:45.000
அவர் நாலு மாதம் முன்னாடிதான் சேர்ந்தார்.
ஒரு முறை கூட மேல ஏறினதில்ல.

17:45.880 --> 17:46.920
ஏன்?

17:49.240 --> 17:51.440
அது ரொம்ப உயரமா இருக்கு.
எனக்கு சிரமமா இருக்கும்.

17:54.280 --> 17:58.160
ஆனா இந்த கிராமம் மேலிருந்து பார்க்க
ரொம்ப நல்லா இருக்கும்.

17:58.240 --> 17:59.640
[விகாஸ்] ரொம்ப அழகா இருக்கும்.

17:59.720 --> 18:01.720
நீங்க மேல இருந்து
எங்க கிராமத்தை பார்த்தீங்கன்னா,

18:01.800 --> 18:03.000
கிராமத்து மேல காதல் வந்திடும்,

18:03.080 --> 18:05.480
கேட்டீங்களா? உங்களுக்கு காதல் வந்திடும்.

18:06.720 --> 18:08.440
நீங்க தொட்டி மேல ஏறி போய்
பியர் குடிச்சிருக்கணும்.

18:08.640 --> 18:10.480
சரி அடுத்த முறை
தொட்டிமேல போய் பியர் குடிக்கிறேன்.

18:10.560 --> 18:11.720
உங்களுக்கு வேற எதுவும் கேட்கணுமா?

18:11.800 --> 18:13.880
[இறுக்கமான பின்னணி இசை]

18:16.400 --> 18:17.640
நொறுக்கு தீனி என்ன சாப்பிட்டீங்க?

18:19.560 --> 18:20.680
உருளை மிக்சர்.

18:20.760 --> 18:24.320
மேல வெங்காயம், மிளகாய் தூவி இருந்தீங்களா?

18:30.560 --> 18:31.560
[காற்றை ஊதும் ஒலி]

18:40.040 --> 18:41.880
அது பெருசா இல்ல மெல்லியதா?

18:42.640 --> 18:43.920
மெல்லியது.

18:51.440 --> 18:52.680
தள்ளு.

19:01.800 --> 19:02.840
இது உங்க அறையா?

19:03.840 --> 19:04.880
ஆமாம்.

19:06.080 --> 19:07.240
இதை பிடி.

19:19.240 --> 19:21.800
அப்போ உங்களிடம்
கருப்பு கலர் ஷூவும் இருக்கு.

19:22.240 --> 19:23.360
[நுகரும் ஓசை]

19:29.400 --> 19:31.080
உங்களிடம் புது அயர்ன் பாக்சும் இருக்கா?

19:32.480 --> 19:33.560
ஆமாம்.

19:34.040 --> 19:35.640
பிரமாதம். [சிரிக்கும் ஒலி]

19:45.160 --> 19:49.360
"கேட்டுக்கான தர்க்க பகுத்தறிவு"

19:49.560 --> 19:50.680
கேட்.

19:51.040 --> 19:54.040
ஆமாம் ஏன்னா நான்
எம்பிஏவுக்காக படிச்சுட்டு இருக்கேன்

19:54.840 --> 19:56.040
[புத்தகம் வைக்கும் ஓசை]

19:57.480 --> 19:58.680
அப்படியா?

19:59.320 --> 20:02.880
வாழ்க்கையில் உங்களுக்கு நிறைய பணம் தேவை.

20:03.880 --> 20:05.160
எல்லாருக்கும் தான் தேவைப்படுது.

20:05.600 --> 20:08.280
ஆமாம். எல்லாருக்கும் தேவைதான்.

20:10.560 --> 20:13.800
அப்பறம் தினமும் மது அருந்துவீங்களா?

20:14.520 --> 20:15.520
இல்லை.

20:15.600 --> 20:19.120
வெட்கப்படாதீங்க.
நான் உங்க அப்பாக்கிட்ட சொல்லமாட்டேன்.

20:19.920 --> 20:23.120
நான் வேலையில் சேர்ந்து நாலு மாதம் ஆகுது.
நேற்றுதான் முதல் தடவையா குடிச்சேன்.

20:24.520 --> 20:26.760
[குழப்பமான பின்னணி இசை]

20:32.040 --> 20:34.520
-என்ன ஆச்சு?
-தலைவர் சார் எங்கே?

20:36.720 --> 20:41.480
ஒருமுறை நான் நிறைய குடிச்சிட்டு
என் வீட்டு கதவை மூட மறந்துட்டேன்.

20:41.560 --> 20:42.560
ஒரே முறை.

20:43.200 --> 20:45.120
இது மாதிரி சில சமயம் நடக்கும்தான்.

20:45.200 --> 20:46.880
நிறைய குடிச்சா அப்படி நடக்கலாம்.

20:47.800 --> 20:50.280
ஆனா ரெண்டு பாட்டில் குடிப்பதால
இப்படி நடக்காது.

20:50.360 --> 20:52.280
அவருக்கு தாக்கு பிடிக்கல.

20:52.720 --> 20:55.160
இல்லனா வெறும் வயிற்றில் குடிச்சிருப்பார்.

20:56.000 --> 20:59.000
ஆனாலும் ரெண்டு பாட்டிலில் எப்படி
அவருக்கு இப்படி ஆகும்?

21:00.520 --> 21:02.480
நம்ப முடியல. [சிரிக்கும் ஒலி]

21:05.400 --> 21:08.520
ஆனாலும் சொல்லுறதை நம்பிதான் ஆகணும்.

21:13.280 --> 21:15.200
செயலாளர் எல்லாம்
சரியாதான் பண்ணி இருக்கார்.

21:18.960 --> 21:20.240
என்ன சொல்லுறீங்க?

21:23.400 --> 21:25.840
அதாவது இப்படியும் நடந்திருக்கலாம்.

21:27.240 --> 21:30.160
மது, கதவை திறந்து வைக்க
ஒரு சாக்கா இருக்கலாம்.

21:33.800 --> 21:35.320
நீங்க உங்க வேலையை பாருங்க.

21:37.960 --> 21:41.040
சார், செயலாளர் கணினியை ஏன் திருடணும்?

21:41.560 --> 21:43.200
எல்லாரும் எதற்காக திருடறாங்க?

21:45.200 --> 21:46.280
பணத்துக்காக தான்.

21:46.840 --> 21:48.200
அவரிடம் பணம் என்ன குறைவா இருக்கா?

21:48.440 --> 21:50.600
அவர் சம்பளம் 20,000.
அவரிடம் வண்டிகூட இருக்கு.

21:50.680 --> 21:54.040
சரிதான் அவரிடம் பணம் இருக்கு,
வேலை இருக்கு.

21:55.280 --> 21:58.040
அப்புறம் ஏன் எம்பிஏக்கு தயார்
பண்ணிட்டு இருக்கார்?

22:01.800 --> 22:03.720
அவருடைய லட்சியமா இருக்கலாம்.

22:05.400 --> 22:07.760
தலைவர் சார்
ஏதும் சொல்லப் போறீங்களா இல்லையா?

22:09.600 --> 22:11.920
[இன்ஸ்பெக்டர்] தலைவர் சார்
நீங்களே யோசிச்சு பாருங்க.

22:12.240 --> 22:14.680
நாலு மாதமா குடிக்காத ஒருவர்,

22:16.200 --> 22:19.400
எந்த இரவு மது அருந்தினாரோ சரியா
அதே இரவில் கணினி திருட்டு போகுது.

22:21.920 --> 22:23.880
முட்டாள் ஆக்கும் கதை மாதிரி இல்ல?

22:24.280 --> 22:27.720
மது அருந்தினார்.
போதையில் கதவை பூட்ட மறந்துட்டார்.

22:27.800 --> 22:29.040
யாரா இருந்தாலும் நம்பிடுவாங்க.

22:29.120 --> 22:31.320
இன்ஸ்பெக்டர் என்ன சொல்லுறீங்க?

22:31.720 --> 22:33.080
சரி அப்ப நீங்களே சொல்லுங்க.

22:33.800 --> 22:36.760
அவர் திருட்டு நடந்த இரவு ஏன் குடிக்கணும்?

22:37.040 --> 22:39.840
-ஏன் குடிச்சாருன்னு எனக்கு என்ன தெரியும்?
-இல்ல சொல்லுங்க.

22:44.560 --> 22:47.680
குடிச்சவரையே கேட்போம் ஏன் குடிச்சீங்கன்னு.

22:52.960 --> 22:56.120
கிராம பஞ்சாயத் ஃபுலேரா

22:59.640 --> 23:02.200
[அபிஷேக்] ஏன்னா என்ன சொல்ல?
குடிக்கணும்னு தோணிச்சு குடிச்சேன்.

23:04.120 --> 23:06.160
கடந்த நாலு மாதமா தோணலை. இப்போ ஏன்?

23:07.640 --> 23:09.120
அதுவும் நேற்று ராத்திரி ஏன்?

23:10.320 --> 23:12.040
நீங்க எல்லாரும் என்ன சொல்ல வரீங்க?

23:12.880 --> 23:17.360
செயலாளர் சார், இன்ஸ்பெக்டர்
நீங்க கணினியை திருட உதவியதா சொல்லுறார்.

23:17.880 --> 23:20.560
கதவை திறந்துவைக்க மது ஒரு சாக்காம்.

23:21.560 --> 23:22.920
உங்களுக்கு புத்தி கெட்டு போச்சா?

23:25.960 --> 23:28.640
நேற்று ராத்திரி ஏன் மது அருந்தினீங்க?

23:30.680 --> 23:32.800
எனக்கு மனசு சரியில்லை.

23:33.200 --> 23:34.360
ஏன் மனசு சரியில்லை?

23:35.000 --> 23:37.520
ஏன்னா என்ன சொல்ல? எல்லாருக்கும்
எதனால மனசு சரியில்லாம போகும்?

23:38.040 --> 23:39.480
எனக்கு மனசு சரியில்லை. அவ்வளவுதான்.

23:42.720 --> 23:43.720
-என்ன?
-எழுந்திரு.

23:50.320 --> 23:52.960
தலைவர் சார், பார்த்தீங்களா. பதில் இல்லை.

23:53.800 --> 23:55.000
அவரிடம் பதில் இல்லை.

23:56.840 --> 23:58.800
குற்றம் செய்த மனம் குறுகுறுக்குது...

23:58.880 --> 24:02.200
மனசு சரியில்லை ஏன்னா
தினமும் செய்ததையே செய்ய வேண்டியிருக்கு!

24:03.240 --> 24:05.440
காலையில் எழுவது, நாள் பூரா வேலை,
ராத்திரி படிப்பு.

24:06.000 --> 24:07.480
நாள் முழுதும் கிராமத்தினரோட புகார்,

24:07.560 --> 24:08.880
ராத்திரியில் மின்சார பிரச்சனை.

24:09.600 --> 24:10.600
நான் சோர்ந்து போயிட்டேன்.

24:11.320 --> 24:12.600
அதுவும் நேற்று வெள்ளி இரவு.

24:12.680 --> 24:13.800
அதனால் என்ன?

24:14.680 --> 24:16.040
ஒவ்வொரு வாரமும் ஆறாவது நாள்...

24:16.120 --> 24:18.080
வார இறுதி. எல்லாரும்
வார இறுதியில் பார்ட்டிக்கு போவாங்க.

24:18.160 --> 24:20.400
நான் என்ன பண்ணுறேன்?
சுரைக்காய் தோல் சீவிட்டு இருக்கேன்.

24:21.400 --> 24:23.440
வேலை முடிந்தால் பேச ஒரு ஆள் கூட கிடையாது.

24:23.520 --> 24:25.320
ஏழு மணிக்கு முழு கிராமமுமே தூங்கிடுது.

24:27.040 --> 24:28.720
தலைவர் சார், சொந்த வாழ்க்கையில்
பிசியா இருக்கார்.

24:28.800 --> 24:30.400
இவருக்கு அவருக்குன்னு
ஒரு வட்டாரம் இருக்கு.

24:30.600 --> 24:32.520
இவருக்கு இப்பதான் திருமணம் ஆயிருக்கு.
நான் யாரிடம் பேச?

24:32.600 --> 24:33.920
எவ்வளவு நேரம் போனில் பேசுவது?

24:34.680 --> 24:37.960
எனக்கு ஒரு நண்பன் இல்லை,
குடும்பம் இல்லை. நட்பு வட்டாரம் இல்லை.

24:39.960 --> 24:42.440
தனிமையில் ஒரு ஆள் குடிக்காம
வேற என்ன செய்வான் சொல்லுங்க?

24:46.520 --> 24:48.560
என்னால இங்க ஒட்ட முடியல.
பரிதாபமா இருக்கேன்.

24:51.840 --> 24:53.360
மனசு சரியில்லை குடிச்சேன்.

24:54.160 --> 24:56.200
கைது செய்யணுமா? செய்ங்க. கைது செய்ங்க.

24:56.400 --> 24:58.760
உங்க கைவிலங்கு எங்கே? போடுங்க.
கைது செய்ங்க.

24:58.840 --> 25:01.560
[அபிஷேக்] கைது பண்ணுங்க. சிறையில் போடுங்க.

25:01.640 --> 25:03.840
அப்போதாவது என் வாழ்க்கையில்
ஏதோ சுவாரசியம் இருக்கும்.

25:08.280 --> 25:11.320
தலைவர் சார், பொய் சொல்லுறார்.

25:11.400 --> 25:13.400
[இன்ஸ்பெக்டர்] சரின்னு சொல்லுங்க.

25:13.840 --> 25:17.800
காவல் நிலையம் கூட்டி போய்
நல்ல பாடம் சொல்லி தரேன்.

25:17.880 --> 25:22.080
இன்ஸ்பெக்டர் சார் அவர் அஜாக்கிரதையா
இருக்கலாம். ஆனா திருடன் இல்லை.

25:24.560 --> 25:27.200
எனக்கு ஆளை பார்த்தால் தெரியும்.
நீங்க போங்க.

25:30.400 --> 25:32.760
[வண்டி என்ஜின் ஒலி]

25:32.840 --> 25:39.840
கிராம பஞ்சாயத் ஃபுலேரா

25:54.040 --> 25:55.640
என்ன பார்க்கறீங்க? போங்க.

25:55.720 --> 25:57.920
[சோகமான இசை]

26:26.520 --> 26:28.760
[சோகமான இசை தொடர்கிறது]

26:44.120 --> 26:45.800
[ஃபோன் ஒலிக்கும் ஒலி]

26:46.360 --> 26:48.320
ஹலோ, விகாஸ்.

26:50.320 --> 26:52.880
செயலாளர் சாப்பிட்டாரா இல்லையான்னு பாரு.

26:53.320 --> 26:54.520
[விகாஸ்] சரிங்க சார்.

27:01.800 --> 27:03.400
[ஃபோன் ஒலிக்கும் ஒலி]

27:06.800 --> 27:08.440
என்ன சொன்னாரு?

27:08.680 --> 27:11.040
-[விகாஸ்] அவரு மனசு சரியில்லைனு சொல்றாரு.
-என்னது?

27:11.120 --> 27:12.720
[விகாஸ்] அவரு மனசு சரியில்லைன்னு சொல்றாரு.

27:13.360 --> 27:15.840
[சோகமான இசை]

27:17.120 --> 27:18.600
இன்னும் கொஞ்சம் சப்பாத்தி போடட்டுமா?

27:24.800 --> 27:26.240
[கதவை தட்டும் ஓசை]

27:27.680 --> 27:29.960
[கதவை தட்டும் ஓசை]

27:35.120 --> 27:36.200
தலைவர் சார்?

27:36.600 --> 27:42.760
ஒன்னு சொல்லுங்க செயலாளரே. சனி இரவு தான
வார இறுதியாக கணக்கிடப்படும்? இல்லையா?

27:46.400 --> 27:47.680
சொல்லுங்க.

27:48.480 --> 27:50.680
[உற்சாகமான பின்னணி இசை]

27:52.920 --> 27:55.520
[பிரிஜ்] நாங்க சாப்பிட
ஸ்பூன் பயன்படுத்தமாட்டோம்.

27:57.280 --> 27:59.280
[ப்ரஹலாத்] நான் ஒரே மடக்கில்
பியரை குடிச்சிடுவேன்.

27:59.760 --> 28:01.440
[பிரிஜ்] முழு பியரையும் ஒரே மடக்கிலா!

28:01.720 --> 28:04.600
அபிஷேக் சார், ஒன்னு சொல்லட்டுமா?

28:05.960 --> 28:08.960
நாங்க மூணு பேரும் ஒரு வாட்ஸ் ஆப் குழு
தொடங்கி இருக்கோம்.

28:09.040 --> 28:14.280
எங்களுக்கு குடிக்கணும்னு தோணும்போது
ஹாய்னு சொல்லுவோம்.

28:14.720 --> 28:17.640
உங்களையும் எங்க குழுவில்
சேர்த்துக்கலாம்னு நினைக்கிறோம்.

28:17.720 --> 28:19.240
உங்களுக்கு எப்ப வேணும்னாலும்...

28:19.320 --> 28:21.120
ஹாய்னா என்னன்னு தெரியுமில்ல?

28:21.200 --> 28:22.680
-ஹாய்.
-[எல்லோரும் சிரிக்கும் ஒலி]

28:22.760 --> 28:24.360
-ஹாய்.
-சீக்கிரம் வாங்க.

28:24.440 --> 28:25.760
[எல்லோரும் சிரிக்கும் ஒலி]

28:25.840 --> 28:27.640
[ப்ரஹலாத்] இன்னும் சாப்பிடுங்க.

28:27.720 --> 28:32.400
செயலாளர் சார் நீங்க சொன்னது
என் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.

28:32.920 --> 28:33.920
என்ன சொன்னேன்?

28:34.000 --> 28:38.680
நீங்க எப்படி குடும்பம் இல்லை,
நண்பர்கள் இல்லைன்னு சொல்லலாம்?

28:38.760 --> 28:41.400
இவங்களை பார்த்தா தெரியலையா?
இவ்வளவு பெரிய ஆள், இவரு அப்பறம் நான்.

28:41.480 --> 28:43.760
நாங்க எல்லாம் உங்களுக்கு ஒன்னுமே இல்லையா?

28:43.840 --> 28:45.400
இல்ல அப்படி இல்ல தலைவர் சார்.

28:45.480 --> 28:47.920
-அப்புறம் என்ன விஷயம்?
-[விகாஸ்] அந்நியர்களா நினைக்கிறீங்க.

28:48.840 --> 28:52.200
நான் மானிட்டர் விலைகளை பார்த்தேன்.
தரமானதின் விலை 5,000 ரூபாய்.

28:52.280 --> 28:53.520
நான் வாங்கி தந்திடறேன்.

28:54.000 --> 28:55.640
ஏன் முழு செலவையும் நீங்களே செய்யணும்?

28:55.720 --> 28:57.520
-நாங்களும் தரோம்.
-வேண்டாம்.

28:57.600 --> 28:59.720
ஒவ்வொருவரும் 1000 ரூபாய் போடுவோம்.

29:00.480 --> 29:03.640
அப்படி போட்டாலும் 4000 ரூபாய் தான் வரும்.

29:03.920 --> 29:07.440
அதனால் என்ன, அதை எப்படி
5000 ஆக்குவதுன்னு நான் காட்டறேன்.

29:07.760 --> 29:09.320
-காட்டுங்க. எப்படி?
-காட்டட்டுமா?

29:09.400 --> 29:11.560
ரிங்கியின் அம்மாகிட்ட 1000 ரூபாய் கேளு.

29:11.640 --> 29:13.680
[எல்லோரும் சிரிக்கும் ஒலி]

29:13.760 --> 29:15.360
அவங்களும் தலைவிதான்.

29:15.440 --> 29:18.960
-நல்ல யோசனை. பாரு அவரு சிரிச்சிட்டார்.
-[அனைவரும் சிரிக்கும் ஒலி]

29:19.040 --> 29:21.440
[ப்ரஹலாத்] பப்படம் கொடு.

29:21.520 --> 29:24.840
பாருங்க வேற இடம் பார்க்க வேண்டிய
அவசியம் இல்லை.

29:24.920 --> 29:26.680
இங்கேயே நிம்மதியா தங்கலாம்.

29:26.760 --> 29:28.760
நான் உயிரோட இருக்கும்வரை
யாரும் கேட்கமாட்டாங்க.

29:28.840 --> 29:31.160
[ப்ரஹலாத்] நல்லா சொன்னார்.

29:31.240 --> 29:34.080
சரி, ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்.

29:34.360 --> 29:35.760
-செல்ஃபியா.
-செல்ஃபி எடு.

29:35.840 --> 29:38.400
பாட்டிலை காட்டுங்க.
நல்ல செல்ஃபி எடுத்துக்கலாம்.

29:38.480 --> 29:39.680
நீ ஒன்னு எடு.

29:41.720 --> 29:43.280
நீங்களும் ஒன்னு வைச்சுக்கங்க.

29:43.360 --> 29:45.920
[பிரிஜ்] நீங்க குடிக்கறீங்க.
நான் அதை தொட்டதே இல்லை.

29:46.560 --> 29:50.480
பியர் எனக்கு சரி வராது.
நான் பியரில் கையே வைச்சதில்லை.

29:50.560 --> 29:55.000
இந்த மூணு பேரும் குடிக்கிறவங்க.
நான் செல்ஃபி எடுக்கிறவன்.

29:55.080 --> 29:56.240
பாருங்க.

29:56.920 --> 29:58.920
கொஞ்சம் சிரிங்கப்பா.

29:59.000 --> 30:00.920
செல்ஃபி சொல்லுங்க.

30:01.480 --> 30:04.000
-சத்தமா சொல்லுங்க செல்ஃபி.
-[கேமரா கிளிக் செய்யும் ஒலி]

30:04.440 --> 30:07.280
[பின்னணியில் "ஐ ஜஸ்ட் ஃபால்" என்ற
ஆங்கில பாடல் ஒலிக்கிறது]

30:09.480 --> 30:13.760
[பின்னணியில் "ஐ ஜஸ்ட் ஃபால்" என்ற
ஆங்கில பாடல் தொடர்கிறது]

30:29.720 --> 30:31.240
[ஃபோன் ஒலிக்கும் சத்தம்]

30:31.320 --> 30:34.240
[பின்னணியில் "ஐ ஜஸ்ட் ஃபால்" என்ற
ஆங்கில பாடல் தொடர்கிறது]

30:42.480 --> 30:43.600
[ஃபோன் ஒலிப்பது நிற்கிறது]

31:20.600 --> 31:23.120
-[கதவு திறக்கும் சத்தம்]
-[வேடிக்கையான இசை]

31:23.200 --> 31:28.720
கிராம பஞ்சாயத் ஃபுலேரா.

31:40.640 --> 31:43.840
"நான் டிவின்னு நினைச்சு எடுத்துட்டேன்.
மன்னிச்சிடுங்க"
