WEBVTT

00:01.880 --> 00:04.800
கிராம பஞ்சாயத்து ஃபுலேரா

00:04.880 --> 00:08.880
[செல்ஃபோன் மணி சத்தம்]

00:11.840 --> 00:14.360
-ஹலோ! சொல்லுங்க, அம்மா.
-[பெல்ட் அணியும் சத்தம்]

00:15.160 --> 00:18.280
ஆமா, நிச்சயமா. இப்போ ஏற்கனவே 11 மணி.
11 மணி வரைக்குமா பசியோடு இருப்பேன்.

00:20.720 --> 00:21.920
அதேதான்.

00:23.880 --> 00:28.520
அதே பிரட், ஜாம், வாழைப்பழம் தான்.

00:30.040 --> 00:31.400
ஆமா, பாலும் குடிச்சேன்.

00:33.920 --> 00:36.960
அபிஷேக் திரிபாதி

00:37.040 --> 00:38.160
ஆமா.

00:40.760 --> 00:43.560
-நான் ஏன் உங்க கிட்ட பொய் சொல்ல போறேன்?
-[பேப்பர் திருப்பும் சத்தம்]

00:46.600 --> 00:49.120
நான் தினமும் பால் வாங்கறதில்லைன்னு
உங்களுக்கு எப்படி தெரியும்?

00:49.200 --> 00:50.360
நிச்சயமா, வாங்குறேன்.

00:52.400 --> 00:54.960
ஆனா நான் ஏற்கனவே பால் குடிச்சிட்டேன்.
எப்படி ஃபோட்டோ அனுப்பறது?

00:59.040 --> 01:01.480
ஆமா, குடிச்சேன், அம்மா. நான் இப்போ ரொம்ப
வேலையா இருக்கேன்.

01:01.920 --> 01:04.480
நாளைக்கு ஃபோட்டோ அனுப்பறேன்.

01:06.240 --> 01:08.960
கண் இமைக்காம உங்களால பொய்
சொல்ல முடியுது, சார்.

01:09.520 --> 01:11.840
வீட்டை விட்டு தனியா இருந்தா நீ கூட
கத்துப்ப. வா போகலாம்.

01:11.920 --> 01:14.680
அப்படி சொல்லாதீங்க, சார்.
எனக்கு இப்போதான் கல்யாணம் ஆச்சு.

01:15.880 --> 01:17.240
[கதவை இழுத்து சாத்தும் சத்தம்]

01:17.320 --> 01:18.600
என்னது இது?

01:19.720 --> 01:21.720
[தெளிவில்லாமல் பேசும் சத்தம்]

01:22.720 --> 01:24.680
இதோ.

01:25.680 --> 01:26.920
உங்களிடம் சாவி உள்ளதா?

01:27.000 --> 01:28.520
[செல்ஃபோன் மணி சத்தம்]

01:31.120 --> 01:33.400
-சொல்லுங்க சார்.
-[வீரேந்தர்] என்ன சொல்லுங்க சார்?

01:33.480 --> 01:36.560
அபிஷேக் சார், வேலைய முடிச்சீங்களா இல்லையா?

01:36.840 --> 01:38.720
இல்ல, சார். இன்னிக்கு முடிச்சிடறேன்.

01:38.800 --> 01:40.720
[வீரேந்தர்] ஒரு வாரமா
சொல்லிட்டு இருக்கீங்க.

01:40.800 --> 01:43.360
டிஎம் என்னை ஒவ்வொரு வாரமும்
என்னாச்சுன்னு ஃபோன்ல கேட்கறாங்க.

01:43.440 --> 01:45.160
நான் அவங்களுக்கு என்ன சொல்வது?

01:45.240 --> 01:48.000
பாருங்க, அபிஷேக் சார், இன்னிக்கு நீங்க
வேலைய முடிக்கலன்னா,

01:48.680 --> 01:50.880
உங்க மேல நாங்க இன்று ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.

01:50.960 --> 01:52.400
-தெரிஞ்சுக்கங்க.
-இல்லை, சார்.

01:52.480 --> 01:55.280
இன்று முடிக்கிறேன். பெயிண்டர் வந்துட்டார்.
உண்மையில, நான் போயிட்டு இருக்கேன்...

01:57.760 --> 01:58.840
நாம போகலாம்.

01:58.920 --> 02:00.360
பைக்ல போகலாம்.

02:00.440 --> 02:01.680
பக்கத்துல தான் இருக்கு. போகலாம்.

02:03.760 --> 02:05.760
பெண்ணோ அல்லது ஆணோ

02:05.840 --> 02:08.440
இரு குழந்தைகளோடு உங்கள்
உலகம் அழகாக இருக்கும்.

02:10.360 --> 02:13.960
செகரேட்டரி சார், இந்த வாசகத்தால
ஏதாவது மாற்றம் வருமா?

02:14.040 --> 02:17.040
மக்கள் எத்தனை வேண்டுமோ அத்தனை
குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

02:17.120 --> 02:18.320
அது சரிதான? சார்!

02:18.400 --> 02:20.400
அது, இந்த வாசகத்தை இப்போதான போட்டோம்.

02:20.480 --> 02:22.640
பாருங்க, ப்ரஹலாத் சார், இது அரசு ஆணை.

02:22.720 --> 02:25.200
அதுக்கு ஏதும் அர்த்தம் இருக்கோ இல்லையோ,
நாங்க அதை எழுதணும்.

02:25.280 --> 02:28.120
மேலும் இந்த வாசகங்கள் மக்கள்
மத்தியில விழிப்புணர்வை ஏற்படுத்துது.

02:28.200 --> 02:30.240
உன்னை போல, இல்லையா?

02:30.320 --> 02:33.240
இது புதுசா கல்யாணம்
ஆனவங்களுக்கு, புரியுதா?

02:33.320 --> 02:35.120
எனக்கு முதல் நாளில் இருந்தே தெரியும்.

02:35.320 --> 02:36.440
[அபிஷேக்] அடுத்து போகலாம். இது ஒகே.

02:36.640 --> 02:39.120
-போகலாம். "தெளிவான" ஆளுங்கள பார்.
-இன்னைக்கு எப்போ "தெளிவா" இருப்ப?

02:39.520 --> 02:42.320
-நீ எவ்வளவு தெளிவுன்னு நான் காட்டறேன்!
-இது அதிகம், ப்ரஹலாத் சார்.

02:42.400 --> 02:43.680
வா. இங்க பாரு.

02:44.200 --> 02:46.440
இங்கதான். உங்களுக்கு இங்கே
எல்லாம் கிடைக்கும்.

02:46.520 --> 02:49.080
-[ப்ரஹலாத்] குளிக்கிறது தப்பில்ல, மாதவ்.
-[சைக்கிள் சத்தம்]

02:49.160 --> 02:50.520
-மாமா.
-[காலடி சத்தம்]

02:50.600 --> 02:52.560
தலைவர் சார், பால் வாங்கலாம்னு
யோசிச்சுட்டு இருந்தேன்.

02:52.640 --> 02:54.120
நான் யாரை கேட்கணும்னு நினைக்கிறீங்க?

02:54.200 --> 02:57.080
ஏன் தலைவர் சாரை கேட்கக்கூடாது? அவர்கிட்ட
நிறைய பசு மற்றும் எருமைகள் இருக்கு.

02:57.360 --> 02:59.360
சரி. உங்களுக்கு பசும்பால் இல்ல
எருமைப்பால் வேணுமா?

02:59.960 --> 03:01.080
எதுவானாலும் பரவாயில்ல.

03:01.480 --> 03:03.160
[பிரிஜ்] நீங்க எருமைப்பால் வாங்கணும்.

03:03.240 --> 03:04.600
எருமைப்பால் கெட்டியா இருக்கும்.

03:04.680 --> 03:06.000
அவர் நகரத்துல இருந்து வந்திருக்கார்.

03:06.080 --> 03:08.800
கெட்டியான பால் ஜீரணம் ஆகாமல் போகலாம்.

03:08.880 --> 03:10.520
அவர் அதில தண்ணி ஊத்திக்கலாம்.
அப்போ சரியாகிடும்.

03:10.600 --> 03:11.680
[பசு கத்தும் சத்தம்]

03:11.760 --> 03:13.320
சரி அப்போ, நான் எருமைப்பாலே வாங்கிக்கறேன்.

03:13.400 --> 03:17.240
என் கிட்ட மூன்று வகையான எருமை இருக்கு.

03:17.320 --> 03:20.160
முர்ரா, சுர்தி, மற்றும் ஜாஃப்ராபாதி.

03:20.240 --> 03:21.760
-எந்த எருமை?
-சுர்தி சரியா இருக்கும்.

03:21.840 --> 03:24.680
உங்களிடம் இருந்து சுர்தி எருமைப்பால்
வாங்குவேன். அது நல்லா இருந்தது.

03:24.760 --> 03:26.320
ஜாஃப்ராபாதி இன்னும் நல்லா இருக்கும்.

03:26.400 --> 03:27.400
அமைதியா இரு.

03:27.480 --> 03:29.200
அவர் தான் பால் குடிக்க போகிறார், நீயில்ல.

03:29.280 --> 03:30.960
என்ன தெரியுமா... ஆமா, வணக்கம்.

03:31.040 --> 03:33.320
என் ஆலோசனை என்னன்னா, நீங்க முர்ரா
வாங்குங்க.

03:33.400 --> 03:35.400
-சரி, அப்போ முர்ராவே இருக்கட்டும்.
-சரி, நல்லது.

03:35.480 --> 03:36.720
எவ்வளவு?

03:36.800 --> 03:38.040
அரை லிட்டர் போதும்.

03:38.120 --> 03:40.800
சை! யாரு அரை லிட்டர் பால் வாங்குவா?

03:41.040 --> 03:43.120
நீங்க இரண்டு லிட்டர் பாலாவது வாங்கணும்.

03:43.200 --> 03:47.440
ஜிம்முக்கு போய், பயிற்சி செய்ங்க, இல்லன்னா
உங்க எடை ஏறவே ஏறாது.

03:47.520 --> 03:49.000
இல்ல நன்றி, எனக்கு அரை லிட்டரே போதுமானது.

03:49.080 --> 03:50.320
ஒரு மாதத்துக்கு எவ்வளவு?

03:50.960 --> 03:53.800
அரை லிட்டர் பாலுக்கு நான் ஏன் காசு கேட்க
போறேன்?

03:54.040 --> 03:56.320
ஆனா அது சரியில்ல.

03:56.400 --> 03:58.360
இல்ல, நான் சொல்லிட்டேன்.
நான் எடுத்துக்க மாட்டேன்.

03:58.440 --> 04:00.720
-தலைவர் சார்.
-தலைவர் ஒரு பணக்காரர், செகரேட்டரி சார்.

04:00.800 --> 04:03.480
அவர் கிட்ட சொத்து, பசுக்கள் இருக்கு,
அவருக்கு வேறென்ன வேணும்?

04:03.560 --> 04:06.640
[பிரிஜ்] ஆமா, உங்க அப்பா எனக்காக
விட்டுட்டு போனார், இல்லையா?

04:07.280 --> 04:10.560
-[அனைவரும் சிரிக்கின்றனர்]
-நீ பணக்காரன்.

04:10.640 --> 04:11.800
[பிரிஜ்] அறிவில்லாம.

04:11.880 --> 04:12.920
என்னது இது?

04:13.000 --> 04:15.400
-பெயிண்டர் எங்க?
-[பெயிண்டர் குரல்] வரேன், சார்.

04:16.320 --> 04:17.600
சிறுநீர் கழிக்க போயிருந்தேன்.

04:18.240 --> 04:19.360
என்ன எழுதியிருக்க?

04:19.880 --> 04:21.840
"இரு குழந்தைகள் எனில் பாயசம் போல் இனிமை

04:22.080 --> 04:23.960
அதற்கு அதிகமானால் மூலம் போல் துன்பமாகும்"

04:24.400 --> 04:26.160
[பெயிண்டர்] நான் சொந்தமாக எழுதவில்லை.

04:26.640 --> 04:29.080
செகரேட்டரி சார் என்ன சொன்னாரோ அதை
அப்படியே எழுதினேன்.

04:30.560 --> 04:32.560
இதைத்தான் பிடிஓ அலுவலகத்தில
எழுதச்சொல்லி சொன்னாங்க.

04:33.320 --> 04:34.400
[ப்ரஹலாத்] தலைவர் சார்,

04:34.480 --> 04:37.480
விழிப்புணர்வு என்கிற பெயரில் இது கொஞ்சம்
அதிகமா போற மாதிரி தெரியலையா?

04:37.560 --> 04:40.080
என்ன அதிகமா? எனக்கு சரியாத்தான் இருக்கு.

04:41.120 --> 04:42.960
கொஞ்சம் அதிகமா இருக்கலாம், ஆனா பரவாயில்லை.

04:43.440 --> 04:45.160
[பிரிஜ்] ஆமா, ப்ரஹலாத், இது பரவாயில்ல.

04:45.240 --> 04:47.200
எப்படியோ, இதையெல்லாம் யார் கிராமத்துல
படிப்பாங்க.

04:47.280 --> 04:49.840
சரி, நீங்க ரெண்டு பேரும் சரின்னு நினைச்சா,
பிறகு பரவாயில்ல.

04:49.920 --> 04:51.120
நான் விஷயத்தை சொன்னேன்.

04:51.200 --> 04:54.200
அப்போ, செகரேட்டரி சார், நான்
பன்வாரியை அனுப்பட்டுமா?

04:54.480 --> 04:57.080
அவர் அரை லிட்டர் பாலை ஒவ்வொரு நாளும்
ஏழு மணிக்கு கொடுப்பார்.

04:57.160 --> 04:59.200
சரி. நீங்க போங்க, நான் இதை முடிக்கிறேன்.

04:59.280 --> 05:00.600
முர்ரா எருமைப்பால், இல்லையா?

05:00.680 --> 05:02.760
அதுக்கு ஒவ்வொரு மாசமும் எவ்வளவு ஆகும்?

05:02.840 --> 05:05.200
இன்னும் பணத்துலேயே இருக்கீங்க.

05:05.280 --> 05:07.640
நான் உங்களுக்கு வாக்கு கொடுத்தேன்,
இல்லையா? அதை மறந்துடுங்க.

05:07.720 --> 05:09.320
-வா.
-நான் அலுவலகம் போகிறேன்.

05:10.120 --> 05:13.240
-இதுக்கு ஒரு மணி நேரம்தான் ஆகும்னல்ல?
-ஆமா, சார்.

05:13.320 --> 05:16.000
சீக்கிரம் முடி. இந்தப்பக்கமும் எழுதி முடி.

05:16.080 --> 05:23.080
இரு குழந்தைகள் எனில் பாயசம் போல் இனிமை
அதற்கு அதிகமானால் மூலம் போல் துன்பமாகும்

05:34.280 --> 05:36.280
[தீம் இசை ஒலிக்கிறது]

06:27.160 --> 06:28.160
பஞ்சாயத்

06:48.320 --> 06:51.560
அரை லிட்டர் பாலுக்காக அவரிடம் காசு
வாங்கினால் நன்றாக இருக்காது.

06:51.640 --> 06:54.200
[மஞ்சு] நிச்சயமா, ஏன்னா நீங்க
அவ்வளவு பணக்காரன்.

06:54.280 --> 06:58.200
மாசத்துக்கு அந்த 750 ரூபாய் என்பது
உங்களுக்கு பெரிய வித்தியாசத்த கொடுக்காது.

06:58.280 --> 07:00.680
இரண்டு லட்ச ரூபாய எங்கயாவது ஒளிச்சு
வைச்சிருந்தா,

07:00.760 --> 07:02.320
எனக்கும் சொல்லுங்க.

07:02.840 --> 07:04.640
என்ன பேசற நீ?

07:04.720 --> 07:07.080
நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசாயிடுச்சு.
அதை என்கிட்ட கொடுங்க.

07:07.760 --> 07:10.360
ஆனா அவருக்கு தன் சொத்தை காண்பித்துக்
கொள்வதை தவிர நேரமே இல்ல.

07:10.680 --> 07:11.760
ஆமா.

07:12.440 --> 07:16.880
தினமும் ஒரு அரை லிட்டர் பால் கொடுக்கிறதால
நம்ம பொண்ணு கல்யாணம் நின்னுடுமா.

07:16.960 --> 07:19.280
[மஞ்சு] இது ரிங்கியோட
கல்யாணத்த பத்தி இல்ல.

07:19.920 --> 07:23.320
உங்களுக்கு இந்த கெட்ட பழக்கம் இருக்கு.

07:24.200 --> 07:27.040
சிலநேரம் காய்கறிகளை இலவசமா கொடுப்பீங்க,
சிலநேரம் பால்.

07:27.440 --> 07:29.840
அவருக்கு ஏன் நீங்க மொத்த எருமைகளையும்
கொடுக்ககூடாது?

07:29.920 --> 07:31.280
ஏன் கத்தற?

07:31.360 --> 07:32.960
செகரேட்டரியை காசு கொடுக்க சொல்கிறேன்.

07:33.160 --> 07:34.160
சந்தோஷமா?

07:35.320 --> 07:36.320
என்ன சந்தோஷம்?

07:36.720 --> 07:39.040
நீங்க எனக்கு எந்த ஒரு உதவியும் செய்யல.

07:39.880 --> 07:41.240
சரி, அப்போ நான் கேட்க மாட்டேன்.

07:41.840 --> 07:44.200
[எகத்தாளமான இசை]

07:46.320 --> 07:47.720
பணம் கேட்கறேன்னு சொன்னேன்.

07:48.040 --> 07:49.760
ஆனா என்னால இப்பவே கேட்கமுடியாது.

07:49.840 --> 07:53.880
நான் ஏதோ ஒரு வழியை யோசிக்கணும். எப்படி,
எங்க, எப்போன்னு மாதிரி?

07:53.960 --> 07:58.520
நேரா அவர்கிட்ட போய், செகரேட்டரி சார் பணத்த
கொடுங்கன்னு என்னால கேட்கமுடியாது.

07:58.600 --> 08:00.560
நான் அவர்கிட்ட வார்த்தை கொடுத்துட்டேன்.

08:00.640 --> 08:02.760
நீங்க ஒரு தலைவர்ன்னு அவர்கிட்ட சொல்லுங்க.

08:02.840 --> 08:05.200
உங்க சத்தியங்கள் எல்லாம் போலியானவைன்னு
அவர்கிட்ட சொல்லுங்க.

08:05.280 --> 08:06.800
நான் அந்த மாதிரி தலைவன் இல்ல.

08:06.880 --> 08:08.080
அப்போ என்ன மாதிரி தலைவன்?

08:08.560 --> 08:09.560
இந்த மாதிரி.

08:12.120 --> 08:14.240
அந்த அழுக்கானதை கொடுங்க.

08:16.840 --> 08:17.920
[ஃபோட்டோ எடுக்கும் சத்தம்]

08:18.280 --> 08:21.920
இரு குழந்தைகள் எனில் பாயசம் போல் இனிமை
அதற்கு அதிகமானால் மூலம் போல் துன்பமாகும்

08:22.000 --> 08:24.480
அலுவலகத்துக்கு இரண்டு நாட்களுக்குள் வந்து

08:24.560 --> 08:27.160
-உன் பணத்தை வாங்கிக்கொள்.
-[பெயிண்டர்] சரி, சார்.

08:28.760 --> 08:30.840
[பூஷன்] என்ன எழுதியிருக்கீங்க,
செகரேட்டரி சார்?

08:34.000 --> 08:36.000
[சோகமான இசை]

08:40.320 --> 08:41.320
இது...

08:41.760 --> 08:43.640
இதெல்லாம் அரசு வேலை.

08:45.000 --> 08:46.080
இது என்ன?

08:47.200 --> 08:48.720
இதை நான் சொந்தமாக எழுதவில்லை.

08:48.800 --> 08:52.240
செகரேட்டரி சார் என்னை என்ன எழுத சொன்னாரோ
அதை அப்படியே எழுதினேன்.

08:52.440 --> 08:54.280
[பூஷன்] என்ன சொல்ல வரீங்க?

08:54.360 --> 08:56.720
இரு குழந்தைக்கு மேல் இருந்தா
மூலம் இருப்பது போன்றது.

08:56.800 --> 08:58.360
இந்த பிண்டு மூலம் போன்றவன்னா.

08:58.640 --> 09:00.280
♪பிண்டு மூலம் போன்றவன்♪

09:00.360 --> 09:02.480
-♪பிண்டு மூலம் போன்றவன்♪
-[பூஷன்] அமைதி.

09:03.440 --> 09:06.400
அப்பா, அப்பா, மூலம்னா என்ன?

09:06.480 --> 09:09.080
ஒன்னுமில்ல, மகனே. அப்படின்னா லெமன் ஜூஸ்.

09:11.560 --> 09:13.440
செகரேட்டரி சார், இந்த வாசகங்களை
எடுத்திடுங்க.

09:13.920 --> 09:14.920
எடுத்திடுங்க.

09:15.360 --> 09:18.080
என்னால முடியாது. இதெல்லாம் அலுவலக ஆணைகள்.

09:20.080 --> 09:22.280
சரி. இப்போ பாருங்க...

09:22.360 --> 09:24.160
வினோத் சார், மக்களே!

09:24.240 --> 09:26.880
தலைவர் என்ன செய்ய முயற்சிக்கிறாருன்னு
பாருங்க.

09:26.960 --> 09:28.920
[வினோத்] என்ன பிரச்சனை, பூஷன்?

09:29.000 --> 09:31.200
-உங்களுக்கு நாலு குழந்தை, இல்லையா?
-ஆமா, இருக்கு.

09:31.280 --> 09:35.040
அவர்களை பொறுத்தவரையில, உங்க மூணாவது
மற்றும் நாலாவது குழந்தைகள் எல்லாம் மூலம்.

09:35.120 --> 09:36.120
என்ன?

09:36.200 --> 09:39.320
-நான் இதை சொல்லல, அவங்க சொல்லுறாங்க.
-பூஷன், சின்ன விஷயத்தை மோசமாக்காதீங்க.

09:39.400 --> 09:40.920
இதையெல்லாம் பார்த்துட்டு போங்க.

09:41.000 --> 09:42.720
தலைவர் சார் கிட்ட போய் சொல்லுங்க

09:42.800 --> 09:47.240
அடுத்த தேர்தல்ல என் குடும்பத்துல இருந்து
அவருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காதுன்னு.

09:47.320 --> 09:51.280
நாங்க பெரிய குடும்பம். ஒவ்வொருத்தருக்கும்
மூன்றிலிருந்து நான்கு குழந்தைகள் இருக்கு.

09:51.360 --> 09:52.920
நானே அவர்களுக்கு ஓட்டு போடமாட்டேன்.

09:53.000 --> 09:55.400
அப்பா, நானும் அவர்களுக்கு
ஓட்டு போடமாட்டேன்.

09:55.480 --> 09:57.640
சரியா சொன்ன, மகனே.
யாருக்கும் ஓட்டு போடாதே.

09:57.720 --> 09:59.400
உனக்கு 18 ஆகும் வரை காத்திரு.

09:59.680 --> 10:01.760
[தெளிவில்லாத பேச்சு சத்தம்]

10:03.960 --> 10:05.800
[பதட்டமான இசை]

10:06.480 --> 10:09.520
[பெயிண்டர்] செகரேட்டரி சார், விஷயம்
மோசமாக போகுதுன்னு நினைக்கிறேன்.

10:09.840 --> 10:11.640
எனக்கு என் பணம் கிடைக்குமா?

10:11.920 --> 10:13.800
சுத்தப்படுத்திட்டு கிளம்பு.

10:25.480 --> 10:27.760
-[சோகமான பின்னணி இசை]
-[பறவைகளின் சத்தம்]

10:31.880 --> 10:33.160
-விகாஸ்!
-என்ன.

10:33.240 --> 10:35.080
வாசகங்களை திரும்ப பெயிண்ட் பண்ணு.

10:35.520 --> 10:36.600
விகாஸ்.

10:36.680 --> 10:39.160
தலைவர் சார், எங்களிடம் வாசகங்களை எழுத
அலுவலக ஆணை இருக்கு.

10:39.240 --> 10:41.080
நானும் நிறைய அழுத்தத்தில் இருக்கிறேன்.

10:41.160 --> 10:42.240
அழுத்தமாம்.

10:42.320 --> 10:44.640
பாருங்க, செகரேட்டரி சார்,
கிராமத்துல நிறைய குடும்பங்களுக்கு

10:44.720 --> 10:46.240
இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்காங்க.

10:46.320 --> 10:48.320
அவங்க எல்லாம் தலைவர் சாருக்கு எதிரா
போனா என்னாகும்?

10:48.520 --> 10:49.840
நான் என்ன செய்யறது, ப்ரஹலாத் சார்?

10:51.040 --> 10:53.720
நான் ஆணையை பின்பற்றலன்னா, பிறகு
என் மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

10:54.320 --> 10:55.560
என்ன நடவடிக்கை?

10:56.800 --> 10:58.680
எனக்கு வேலையே போகலாம், தலைவர் சார்.

11:03.520 --> 11:07.640
உங்களுக்கு வேலை போகும், ஆனா நான்
என் தலைமை பதவியையே இழக்கலாம்.

11:08.080 --> 11:10.160
அதனால எது ரொம்ப முக்கியமானது?

11:10.480 --> 11:13.200
உங்க வேலையா அல்லது என் பதவியா?

11:14.040 --> 11:18.200
சார், அவருக்கு, அவர் வேலைதான் மிக
முக்கியமா இருக்கணும்.

11:19.520 --> 11:23.320
[செல்ஃபோன் மணி சத்தம்]

11:27.400 --> 11:28.440
ஹலோ.

11:29.080 --> 11:30.480
என்ன, கஜிந்தர், சொல்லு.

11:31.360 --> 11:33.400
என்ன சொல்லுற? என்ன?

11:34.680 --> 11:37.920
உன் பையன நாங்க மூலம்னு சொல்லல.

11:38.000 --> 11:39.840
[பிரிஜ்] இது வேற.

11:39.920 --> 11:42.480
ஏன்? ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற?

11:42.920 --> 11:45.880
இல்ல, நீ நினைக்கிறாப்போல இது இல்ல. இல்ல...

11:46.320 --> 11:47.320
ஆமா.

11:50.040 --> 11:52.000
[ப்ரஹலாத்] கஜிந்தருக்கு மூன்று சகோதரர்கள்.

11:52.080 --> 11:53.280
அப்படின்னா நாலு ஓட்டுகள்.

11:53.360 --> 11:55.560
பிறகு அவங்க மனைவிகள்.
அந்த குடும்பத்தில் இருந்து எட்டு ஓட்டுகள்.

11:55.640 --> 11:56.920
மேலும் கஜிந்தரின் அப்பா.

11:57.000 --> 11:59.400
அடுத்த தேர்தல் வரை உயிரோடிருந்தா
இன்னொரு ஓட்டுன்னு அர்த்தம்.

11:59.480 --> 12:00.880
நீங்க ஒன்பது ஓட்டுகள இழப்பீங்க.

12:02.520 --> 12:06.200
செகரேட்டரி சார், பிடிஓ சார்ட்ட பேசுங்க.
நிலைமைய எடுத்துச்சொல்ல முயற்சி செய்ங்க.

12:08.640 --> 12:10.400
சரி, முயற்சிக்கிறேன்.

12:10.480 --> 12:12.960
[செல்ஃபோன் மணி சத்தம்]

12:13.040 --> 12:16.560
ஓ, கடவுளே. ப்ரஹலாத், எல்லா
வாசகங்களையும் திரும்ப பெயிண்ட் பண்ணு.

12:16.640 --> 12:18.160
இல்லன்னா மக்கள் நிறுத்த மாட்டாங்க.

12:20.280 --> 12:21.760
தலைவர் சார், அது இப்போதைக்கு இருக்கட்டும்.

12:22.600 --> 12:24.520
நீங்க ஏன் கவலைபடறீங்க?

12:24.600 --> 12:26.800
பிடிஓ சார் புரிஞ்சுப்பார், இல்லையா?

12:28.640 --> 12:29.840
என்ன நினைக்கிறீங்க?

12:29.920 --> 12:31.680
பிடிஓ சார் புரிஞ்சுக்க மாட்டாரா?

12:31.920 --> 12:34.120
[நகைச்சுவையான இசை]

12:43.560 --> 12:44.640
ஹா.

12:45.120 --> 12:47.840
இதை யாருக்கு இலவசமா கொடுக்க போறீங்க?

12:47.920 --> 12:49.960
நீ ரொம்ப அதிகமா போற. வழியை விடு.

12:50.200 --> 12:51.200
[மஞ்சு] இருங்க!

12:51.560 --> 12:53.920
பாலுக்கான காசு பத்தி
செகரேட்டரி கிட்ட பேசினீங்களா?

12:54.000 --> 12:55.160
பேசறேன்.

12:55.240 --> 12:57.880
750 ரூபாய்க்காக நீ என்
வாழ்க்கையை நரகமாக்கற.

12:57.960 --> 13:00.360
-விடு, வழியை விடு.
-இல்லை.

13:00.440 --> 13:03.800
அதுக்கு பதிலா நம்மட்ட இருக்கறத எல்லாம் ஏன்
தானம் செய்யக்கூடாது? கொடுத்துடுங்க.

13:03.880 --> 13:05.280
ரொம்ப நல்லவர் மாதிரி.

13:05.840 --> 13:07.920
[பைக் வரும் சத்தம்]

13:19.240 --> 13:21.960
அபிஷேக் சார், தயவு செய்து இதை பிடிஓ சார்
கிட்ட கொடுத்துடுங்க, சார்,

13:22.040 --> 13:24.200
எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு.

13:25.400 --> 13:28.720
தலைவர் சார்கிட்ட பேச முயற்சித்தாலே
அவர் எனக்கு இந்த சுரைக்காயை கொடுக்கிறார்.

13:29.960 --> 13:32.080
[அபிஷேக்] சுரைக்காய்கள் உரையாடலை
துவக்குபவை அல்ல.

13:41.360 --> 13:42.480
என்ன இது?

13:44.520 --> 13:45.600
இது ஒரு சுரைக்காய்.

13:46.560 --> 13:48.520
இது ஒரு கத்தரிக்காய்
இல்லன்னு எனக்கும் தெரியுது.

13:49.360 --> 13:53.120
எனக்கு காய்களை காட்டி வேலைய முடிக்கலாம்னு
நீங்க எல்லாம் நினைக்கிறீங்களா?

13:53.400 --> 13:55.160
நான் லஞ்சம் வாங்குபவன்னு நினைக்கிறீங்களா.

13:55.520 --> 13:57.880
தலைவர் சார் என்னை இதை எழுத விட
மாட்டேங்கிறார். நான் என்ன செய்ய?

13:57.960 --> 13:59.560
சரி அப்போ, நான் ஏன்
இந்த பழியை எடுத்துக்கணும்?

13:59.640 --> 14:01.040
டிஎம் மேடம் கேட்டா,

14:01.120 --> 14:04.240
ஃபுலேரா பஞ்சாயத்து செகரேட்டரிக்கு
வேலை செய்ய தகுதி இல்லன்னு சொல்லிடறேன்.

14:04.320 --> 14:06.520
என்னால புரிய வைக்க
முடியலன்னு நினைசீங்கன்னா,

14:06.600 --> 14:09.520
-நீங்களே ஏன் அவருக்கு புரிய வைக்ககூடாது?
-நான் ஏன் அவருக்கு விவரிக்கணும்? ஹா?

14:09.600 --> 14:11.520
அவர் உங்க தலைவர். நீங்க புரிய வைங்க.

14:11.600 --> 14:14.520
-அவர் என் சொந்தம் கிடையாது.
-அவர் எனக்கு மச்சானும் இல்ல.

14:17.080 --> 14:18.200
சார்.

14:18.840 --> 14:22.840
சார், கிராமத்து மக்களுக்கு "மூலம்" என்கிற
வார்த்தையில் ஆட்சேபணை இருக்கு.

14:22.920 --> 14:25.080
அதுக்கு பதிலா வேற ஏதும் பயன்படுத்தலாமா.

14:25.160 --> 14:26.720
நீ எப்படி அப்படி சொல்லலாம்?

14:27.080 --> 14:28.480
நாம் எப்படி இதை மாத்தறது?

14:28.560 --> 14:31.640
அந்த வார்த்தையை வேணும்னே பயன்படுத்தி
இருக்கோம், மக்கள் உணரணும்னு.

14:31.880 --> 14:33.200
உங்களுக்கு புரியவேயில்லை.

14:34.080 --> 14:35.160
-[மணி சத்தம்]
-திவாரி.

14:35.240 --> 14:36.480
[திவாரி] சொல்லுங்க, சார்.

14:41.880 --> 14:42.880
பாருங்க.

14:43.840 --> 14:47.400
டிஎம் மேடத்துக்கு, நம் நாட்டின் வளரும்
மக்கட்தொகைய பற்றி கவலை.

14:48.040 --> 14:49.480
அவங்க நினைக்கிறாங்க...

14:49.720 --> 14:52.800
"இரு குழந்தைகள் எனில் பாயசம் போல் இனிமை
அதற்கு அதிகமானால் மூலம் போல் துன்பமாகும்"

14:52.880 --> 14:55.200
இந்த வாசகம் மக்களின் மனதை தொடும்.

14:55.280 --> 14:57.760
[வீரேந்தர்] அதனால போய் தலைவர் சாருக்கு
புரிய வைங்க.

14:57.840 --> 14:59.520
வாசகங்களை திரும்ப எழுதுங்க.

15:01.160 --> 15:05.280
இல்லன்னா, டிஎம் மேடம் என்னை திட்டுவாங்க,
உங்களையும் சேர்த்து.

15:05.640 --> 15:07.360
தலைவர் ஒத்துக்கலன்னா என்ன செய்ய?

15:07.640 --> 15:09.320
அவரையும் மேடம் திட்டுவாங்க.

15:11.200 --> 15:12.440
அவர் ஒன்னும் பெரிய ஆள் இல்லையே?

15:16.240 --> 15:17.360
ஹ்ம்ம்?

15:17.440 --> 15:20.080
[தொண்டையை சரி செய்யும் சத்தம்]
எனக்கு தெரியல.

15:20.760 --> 15:21.840
கிளம்புங்க.

15:28.320 --> 15:29.360
அது இருக்கட்டும்.

15:32.720 --> 15:34.720
[சோகமான இசை]

16:01.360 --> 16:04.960
தலைவர் சார், நாம வாசகத்தை திரும்ப
எழுதுவோம். இல்லன்னா, டிஎம் நம்மை...

16:08.120 --> 16:11.280
டிஎம் மேடம் நம் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடுப்பாங்க.

16:19.800 --> 16:21.280
தலைவர் சார், ஏதாவது சொல்லுங்க.

16:22.680 --> 16:24.440
போய் படிங்க.

16:35.680 --> 16:38.400
[மஞ்சு] அப்போ திரும்ப எழுதுங்க.
இதுல என்ன இருக்கு?

16:40.920 --> 16:42.560
அடுத்த தேர்தல்ல தோப்பீங்க.

16:43.080 --> 16:44.400
[மஞ்சு] தோத்தா நமக்கு என்ன?

16:45.200 --> 16:49.400
இந்த வாக்கியத்தை ஒரு
பெரிய விஷயமாக்கறாங்க இல்ல,

16:49.720 --> 16:53.320
போய் அவங்க மனைவிகளை கேட்க சொல்லுங்க

16:53.400 --> 16:56.920
இரண்டு பிள்ளைகளுக்கு மேல பெத்து, பிறகு
அவர்களை வளர்ப்பது எப்படி இருக்கும்னு.

16:58.560 --> 17:01.160
சரி, "மூலம்" என்கிற வார்த்தை சரியானது
இல்லன்னு ஒப்புக்கொள்கிறேன்.

17:01.240 --> 17:02.760
ஆனா அந்த வாசகம் சரியானதுதானே.

17:03.520 --> 17:05.560
ரொம்ப புத்திசாலி ஆளாக முயற்சிக்காதே.
எனக்கு தெரியும்.

17:05.640 --> 17:08.760
அப்போ ஏன் அவங்கள வாசகத்தை மாத்தி
எழுத விடமாட்டேங்கிறீங்க? சரியானதை செய்ங்க.

17:08.840 --> 17:12.480
சரியானதை செய்றதால ஒருத்தர்
தேர்தல்ல ஜெயிக்கிறது இல்ல.

17:12.560 --> 17:14.280
உனக்கு அரசியல் பற்றி ஒன்னும் தெரியாது.

17:14.360 --> 17:15.680
நீங்க ஏன் சொல்லக்கூடாது

17:15.760 --> 17:18.400
இந்த கடினமான முடிவை எடுக்க
உங்களுக்கு தைரியம் இல்லைன்னு?

17:19.280 --> 17:21.040
[மஞ்சு] வாங்க, படுங்க.

17:21.560 --> 17:24.040
ஹா? முட்டாள்தனமா பேசாத.

17:25.880 --> 17:28.560
உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மா உளறிட்டு.

17:28.880 --> 17:29.880
ஹ்ம்ம்.

17:30.480 --> 17:33.240
செகரேட்டரி சார்கிட்ட இருந்து
பாலுக்கு காசு கேட்க மாட்டீங்க.

17:33.320 --> 17:34.600
அவர் வருத்தப்படக் கூடாதுன்னு.

17:35.400 --> 17:37.960
வாசகம் சரியா இருந்தா கூட
நீங்க எழுத மாட்டீங்க,

17:38.040 --> 17:39.840
கிராமத்து மக்கள் வருத்தப்படக்கூடாதுன்னு.

17:40.800 --> 17:44.880
உங்களுக்கு அவ்வளவு பயம்னா,
அப்போ ஒன்னு செய்ங்க.

17:44.960 --> 17:46.640
[மஞ்சு] என்னைப் பாருங்க.

17:46.840 --> 17:50.280
வாசகத்துக்கு கீழ என் பெயரை எழுதுங்க.
நான் சொன்னேன்னு.

17:51.360 --> 17:54.280
மேலும் செகரேட்டரி சார்கிட்ட பால்
பணத்தை பத்தி நானே பேசறேன்.

17:55.520 --> 17:57.480
சரியானதுக்காக பேசக்கூட முடியாது

17:58.080 --> 17:59.800
ஆனா உங்களுக்கு தலைவராக விருப்பம்.

18:09.560 --> 18:11.560
[சோகமான இசை]

18:30.480 --> 18:33.680
ஒழுங்கு நடவடிக்கை என்றால் தற்காலிக வேலை
நீக்கம் என்று நான் யூகிக்கிறேன்.

18:34.200 --> 18:36.080
[பிரதீக்] இது எவ்வளவு நாளைக்கு இருக்கும்?

18:36.160 --> 18:38.280
எவ்வளவு நாளுன்னு எனக்கு எப்படி தெரியும்?

18:38.360 --> 18:39.680
எனக்கு வேலை போனா தெரிஞ்சிக்கலாம்.

18:39.760 --> 18:43.000
[பிரதீக்] பஞ்சாயத்து ஹெச்ஆர் கோட்பாடுகளை
பார்க்கறதுதான? அதில் இருக்கலாம்...

18:43.080 --> 18:44.840
-ஒரு நிமிடம் இரு.
-[இரவு பூச்சிகளின் சத்தம்]

18:44.920 --> 18:46.920
[பிரதீக்] ஹலோ, அபிஷேக்? ஹலோ?

18:47.320 --> 18:48.440
தலைவர், சார்.

18:48.520 --> 18:50.680
[பிரிஜ்] செகரேட்டரி சார், ஒன்னு செய்ங்க.

18:50.760 --> 18:54.040
நாளைக்கு காலையில் வார்டு உறுப்பினர்களை
அழைத்து ஒரு மீட்டிங் போடுங்க.

18:55.160 --> 18:57.360
[சோர்வான பின்னணி இசை]

19:06.040 --> 19:11.120
பாருங்க, உங்க வார்டுல இருக்க மக்கள் கிட்ட
போய் சொல்லுங்க,

19:11.200 --> 19:13.080
நாம எல்லாம் வாசகத்தை ஆதரிக்கிறோம்னு...

19:13.600 --> 19:20.320
"இரு குழந்தைகள் எனில் பாயசம் போல் இனிமை
அதற்கு அதிகமானால் மூலம் போல் துன்பமாகும்"

19:20.920 --> 19:23.400
இந்த வாசகம் சரியா இருப்பதனால, நாம இதை
ஆதரிக்கிறோம்.

19:24.520 --> 19:25.760
-[ப்ரஹலாத்] தலைவர் சார்.
-ஹ்ம்ம்?

19:25.840 --> 19:28.040
டிஎம் மேடம் கொடுக்கும் அழுத்தத்தால
இந்த முடிவை எடுக்கறீங்களா?

19:28.240 --> 19:29.960
இல்ல, இது என் சொந்த முடிவு.

19:31.040 --> 19:34.240
ஆனா, சார், இது வரப்போகும் தேர்தல்ல
பிரச்சினை கொடுக்கும்.

19:34.320 --> 19:35.560
எனக்கு கவலை இல்ல.

19:35.920 --> 19:39.280
உங்களுக்கு மட்டுமில்ல, எங்களுக்கும் தான்.

19:39.360 --> 19:40.920
ஆமா, இது எங்களுக்கும்
பிரச்சினை கொடுக்கும்.

19:41.000 --> 19:46.320
பாருங்க, யாராவது கேட்டா, இது
என்னோட முடிவுன்னும்

19:46.400 --> 19:48.280
உங்களுக்கு இதில் சம்பந்தமே
இல்லைன்னும் சொல்லலாம்.

19:48.360 --> 19:49.360
அப்போ சரி.

19:49.440 --> 19:51.480
[ஆண் 2] அப்போ சரி, தலைவர் சார்.

19:51.560 --> 19:52.720
நீங்க சொன்னது போல,

19:52.800 --> 19:55.440
கேளுங்க, இது உங்களுடைய முடிவுன்னு
நீங்க சொல்லலாம்.

19:55.520 --> 19:57.160
தலைவர் மற்றும் துணை தலைவரின் முடிவு.

19:57.240 --> 19:59.000
நீ ஏன் உன் மூக்கை நுழைக்கற?

19:59.080 --> 20:01.800
இல்லவே இல்ல, தலைவர் சார்.
இதெல்லாம் அரசியல் பற்றியது.

20:01.880 --> 20:03.240
நீங்க தோத்து நான் ஜெயிச்சா என்னவாகும்?

20:03.320 --> 20:05.520
-அதுல ஒன்னும் ஜாலி இல்லையே.
-நீ ஒரு ராஸ்கல்.

20:06.880 --> 20:09.440
சார், நானும் உங்களோட இருக்கேன்.

20:10.920 --> 20:12.640
நான் தேர்தலினால்
தேர்ந்தெடுக்கப்பட்டவன் இல்ல.

20:13.240 --> 20:14.880
ஆனா நானும் தலைவர் சாரை ஆதரிக்கிறேன்.

20:14.960 --> 20:16.000
சரி.

20:16.080 --> 20:20.160
மீதமுள்ளவர்களுக்கு இந்த பொறுப்பில்
ஒரு அழுத்தமும் இல்ல.

20:20.240 --> 20:21.560
சரி சார், நீங்க சொன்னபடி.

20:21.840 --> 20:23.200
[அனைவரும்] அப்போ சரி.

20:23.280 --> 20:24.920
சரி, நாம போகலாம்.

20:25.600 --> 20:28.360
இருங்க. உட்காருங்க.

20:29.000 --> 20:32.640
செகரேட்டரி சார், நீங்க நேத்து
சொன்ன அந்த விஷயம்.

20:32.720 --> 20:33.760
சிகரெட் பெட்டிய பத்தி.

20:33.840 --> 20:35.160
-ஆமா, சரி.
-அதையும் சொல்லுங்க.

20:35.520 --> 20:39.720
உட்காருங்க. எழுந்திரிக்க தேவையில்ல.
உங்களுக்கு நிற்கறதுக்கு எப்போதுமே ஆர்வம்.

20:39.960 --> 20:41.520
-இப்போ கேளுங்க.
-கேளுங்க.

20:41.600 --> 20:45.040
நீங்க சொல்லும்போது யாராவது தடுத்தாலோ
மேலும் புரியலன்னாலோ,

20:45.120 --> 20:47.560
நீங்க நிச்சயமா அவங்களுக்கு
இந்த உதாரணத்தை சொல்லலாம்.

20:47.640 --> 20:50.800
சிகரெட் பெட்டி மேல இருக்க ஒரு
எச்சரிக்கை தகவல் போல,

20:51.120 --> 20:54.040
இந்த வாசகங்களையும் உங்களை மோசமாக
உணர வைக்க எழுதப்பட்டுள்ளது.

20:54.120 --> 20:56.440
அதன்மூலம், சரியான தகவலை
மக்கள் புரிந்துகொள்வதற்காக.

20:56.520 --> 20:57.840
உங்க எல்லாருக்கும் புரிஞ்சுதா?

20:57.920 --> 21:01.040
செகரேட்டரி சார் உங்களுக்கெல்லாம் சொன்னது
போல சொல்லுங்க.

21:01.120 --> 21:03.640
-[ஆண் 2] எங்களுக்கு புரிஞ்சுது.
-[ப்ரஹலாத்] சரியா?

21:03.720 --> 21:06.520
வார்த்தைக்கு வார்த்தை, அவர் சொன்ன அதேபோல.

21:06.720 --> 21:08.560
-சரியா
-சரி எங்களுக்கு புரிஞ்சுது.

21:09.000 --> 21:11.400
மேலும், விகாஸ், வாசகங்களை திரும்ப எழுத வை.

21:11.480 --> 21:12.480
எல்லாத்தையும் எழுதிடவா?

21:12.560 --> 21:14.520
சரி, நாம போகலாம்.

21:14.600 --> 21:16.240
சரி, பண்ணு.

21:16.880 --> 21:18.920
[பலரின் பேச்சுக் குரல்கள்]

21:19.680 --> 21:22.520
செகரேட்டரி சார், நீங்க
மகிழ்ச்சியா இருக்கணும்.

21:22.600 --> 21:24.560
உங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டது.

21:25.560 --> 21:26.560
அது உண்மையில்ல.

21:26.640 --> 21:28.720
தலைவர் சாரோட முடிவுதான் சரியானது.

21:28.800 --> 21:30.880
அதை விடுங்க. அது இப்போ ஒன்னுமில்ல.

21:31.240 --> 21:34.400
சரியானதை செய்வதால் அது
நம்மள கஷ்டத்துல போடுது.

21:35.160 --> 21:36.280
[ப்ரஹலாத்] இல்லையா?

21:36.480 --> 21:39.400
[செல்ஃபோன் மணி சத்தம்]

21:40.200 --> 21:42.040
-பிடிஓ சார் கூப்பிடுறார்.
-[ப்ரஹலாத்] ஸ்பீக்கர்ல போடுங்க.

21:42.120 --> 21:43.880
-[செல்ஃபோன் மணி சத்தம்]
-ஸ்பீக்கர்ல போடுங்க.

21:44.880 --> 21:46.640
ஆமா, சார். தலைவர் சார் ஒத்துக்கிட்டார்.

21:46.720 --> 21:48.800
வாழ்த்துக்கள்.

21:48.880 --> 21:51.440
தலைவர் சார் ஒத்துக்கிட்டது
ஒரு சிறப்பான செய்தி.

21:51.720 --> 21:57.440
அதோடு, திரு.அபிஷேக், அந்த வாசகம்
இப்போது கட்டாயமானது இல்ல.

21:58.440 --> 22:00.840
ஏன், என்னாச்சு?

22:01.560 --> 22:03.200
[வீரேந்தர்] ஒன்னும் சிறப்பா இல்ல.

22:03.280 --> 22:05.280
யாரோ பக்கத்து கிராமத்துல
இருக்கும் ஒருத்தனுக்கு

22:05.360 --> 22:08.760
ஆறு குழந்தைகள் இருக்காம், அவன் அந்த
வாசகத்தை படிச்சுட்டு ரொம்ப கோபமாகி

22:08.840 --> 22:11.160
பஞ்சாயத்து அலுவலகத்தை
எரிச்சிட்டான்னு கேள்விப்பட்டோம்,

22:11.440 --> 22:13.600
அதனால, என்ன செய்யமுடியுமோ
அதை செய்ய பாருங்க.

22:16.200 --> 22:17.680
ஹலோ?

22:18.160 --> 22:20.360
என்ன செய்றது, தலைவர் சார்?
அவங்கள நிறுத்திடுவோமா?

22:20.640 --> 22:22.400
நிச்சயமா, நாம அவங்கள நிறுத்தணும்.

22:22.480 --> 22:24.720
தலைவர் சார், இந்த அலுவலகத்தையும்
எரிச்சா என்னவாகும்?

22:24.960 --> 22:26.240
நான் இங்க தனியே தூங்கறேன்.

22:26.320 --> 22:27.720
கூப்பிடுங்க, விகாஸை கூப்பிடுங்க.

22:27.800 --> 22:29.720
இப்பதான் சொன்னீங்க, சரியான
முடிவை எடுத்தோம்னு.

22:29.800 --> 22:31.720
முடிவு சரியா இருந்தா, ஏன் பயப்படறீங்க?

22:31.960 --> 22:35.120
தலைவர் சார், நீங்க ரொம்பவும் உந்தப்பட்டு
இருக்கீங்க. நிஜ நிலவரத்தை யோசிங்க.

22:35.200 --> 22:36.800
ஒருத்தனும் அலுவலகத்தை தொடக் கூட மாட்டான்.

22:37.040 --> 22:40.000
அடுத்த தேர்தல்ல அவங்களுக்கு என்ன
செய்யணும்னாலும், எனக்கு செய்யலாம்.

22:40.400 --> 22:41.480
ஆனால்...

22:41.560 --> 22:44.160
மேலும் நீங்க 750 ரூபாய் பாலுக்காக
ஒவ்வொரு மாசமும் கொடுக்கணும்.

22:44.240 --> 22:45.400
ஹா?

22:46.600 --> 22:48.080
எழுநூற்றி ஐம்பது ரூபாய்.

22:48.160 --> 22:50.840
[பிரிஜ்] அது ஒரு முர்ரா எருமை.
அதுக்கு சாப்பாடு கொடுக்கணும்.

22:50.920 --> 22:52.640
[தெளிவில்லாத பேச்சு சத்தம்]

22:52.720 --> 22:57.160
[பிரிஜ்] புதுமையா, எனக்கு உள்ளுக்குள்ள
சர்தார் படேல் மாதிரி தோணுது.

22:57.680 --> 22:59.800
[பிரிஜ்] சர்தார் படேலை தெரியுமா?

23:00.080 --> 23:01.880
இந்தியாவின் இரும்பு மனிதர்.

23:01.960 --> 23:06.200
அவர் இந்தியாவிற்காக மிகவும் கடினமான
முடிவுகளை எடுக்க தயங்கியதே இல்லை.

23:06.280 --> 23:08.080
ஒரு நாள் எனக்கு அவரைப்போல ஆக விருப்பம்.

23:08.160 --> 23:11.480
இரு குழந்தைகள் எனில் பாயசம் போல் இனிமை
அதற்கு அதிகமானால் மூலம் போல் துன்பமாகும்

23:16.840 --> 23:17.920
[கேமரா கிளிக் சத்தம்]

23:20.240 --> 23:22.520
[உற்சாகமான பின்னணி இசை]
