WEBVTT

00:00:04.480 --> 00:00:06.480 align:center
[உற்சாகமான மெல்லிய இசை]

00:00:09.400 --> 00:00:11.920 align:center
[விகாஸ்] நீங்க உட்காரும் அந்த
பிளாஸ்டிக் நாற்காலியில்,

00:00:12.000 --> 00:00:15.560 align:center
ரொம்ப நேரம் உட்கார்ந்தால், உங்க
பின்புறம் சூடாகி விடும்.

00:00:15.640 --> 00:00:17.440 align:center
ஆனால், பஞ்சு வைத்த இந்த சொகுசு
நாற்காலியில்,

00:00:17.520 --> 00:00:20.200 align:center
நீங்க ஓரு மணி நேரம் உட்கார்ந்தீங்க,

00:00:20.280 --> 00:00:22.760 align:center
அப்புறம் சில மணி நேரத்துக்கு
உங்களுக்கு எழவே மனசு வராது.

00:00:22.840 --> 00:00:25.720 align:center
-உங்க படிப்புக்கும் இது ரொம்ப பயன்படும்.
-[மோட்டார் பைக் ஓடும் ஓசை]

00:00:25.800 --> 00:00:28.640 align:center
-[ப்ரஹலாத்] அருமை.
-[பிரிஜ்] செகரேட்டரி சார் புது நாற்காலியா?

00:00:28.720 --> 00:00:32.160 align:center
ஆமாம், நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார அந்த
பிளாஸ்டிக் நாற்காலி வசதியாயில்லை.

00:00:32.240 --> 00:00:33.280 align:center
சரி.

00:00:33.360 --> 00:00:34.960 align:center
எனக்கு படிப்பு வேறு இருக்கு.

00:00:35.040 --> 00:00:36.520 align:center
நல்லது...

00:00:36.600 --> 00:00:37.600 align:center
சரிங்க.

00:00:38.120 --> 00:00:40.040 align:center
[மோட்டார் பைக் நகரும் ஒசை]

00:00:44.320 --> 00:00:45.680 align:center
இதுக்கு சக்கரமும் இருக்கு.

00:00:46.480 --> 00:00:48.480 align:center
[குறும்பான இசை]

00:00:49.880 --> 00:00:53.360 align:center
சார், உங்க நாற்காலியில் சக்கரம் இல்லையே,
இருக்கா?

00:01:01.600 --> 00:01:03.720 align:center
-[நாட்காலி நகரும் ஓசை]
-இது ரொம்ப உயரமாக இருக்கு.

00:01:03.800 --> 00:01:05.920 align:center
-சரி பண்ணுங்க.
-எப்படி உயரத்தை சரி பண்ணுறது?

00:01:06.000 --> 00:01:07.520 align:center
பட்டன் கீழே எங்கேயாவது இருக்கலாம்.

00:01:07.600 --> 00:01:08.600 align:center
இருக்கு.

00:01:08.840 --> 00:01:10.120 align:center
இது ரொம்ப கீழே இருக்கு.

00:01:11.040 --> 00:01:12.280 align:center
அபிஷேக் திரிபாதி

00:01:13.160 --> 00:01:15.400 align:center
இது சரியான உயரத்தில கச்சிதமாக இருக்கு.

00:01:15.480 --> 00:01:18.080 align:center
[விகாஸ்] சக்கரமும் இருக்கு. ஒழுங்கா வேலை
செய்கிறதா என்று பாருங்க.

00:01:19.120 --> 00:01:20.840 align:center
-[நாட்காலி நகரும் ஓசை]
-அருமை.

00:01:22.160 --> 00:01:26.320 align:center
சார், சுற்றியிருக்கிற பிளாஸ்டிக்கை
எடுக்கலாமே. பார்க்கிறதுக்கு நல்லாயில்லை.

00:01:26.400 --> 00:01:28.120 align:center
இல்லை, இருக்கட்டும், அதை எடுக்க வேண்டாம்.

00:01:28.200 --> 00:01:30.440 align:center
ரொம்ப தூசியா இருக்கு.
சீக்கிரமா அழுக்காகிவிடும்.

00:01:30.520 --> 00:01:31.520 align:center
நீங்க சொல்வது சரி தான்.

00:01:31.600 --> 00:01:32.640 align:center
கவர் அப்படியே இருக்கட்டும்.

00:01:33.360 --> 00:01:34.400 align:center
இதை எப்படி...

00:01:34.960 --> 00:01:36.240 align:center
பின்னாடி எப்படி சாய்ந்துக்கணும்?

00:01:36.320 --> 00:01:37.400 align:center
[கொக்கி மாட்டும் ஓசை]

00:01:37.480 --> 00:01:39.240 align:center
[விகாஸின் ஓங்கிய சிரிப்பு]

00:01:41.400 --> 00:01:44.080 align:center
நீங்க பெரிய முதலாளி மாதிரி இருக்கீங்க.
[விகாஸின் சிரிப்பொலி]

00:01:44.960 --> 00:01:46.760 align:center
ஏதாவது வேலையை முடிக்கலாம், என்ன சொல்லுற?

00:01:46.840 --> 00:01:47.920 align:center
சரி.

00:01:51.840 --> 00:01:53.960 align:center
[மெல்லிய இசை]

00:01:54.480 --> 00:01:57.600 align:center
[நாற்காலி கீறீச்சிடும் சத்தம்]

00:02:05.120 --> 00:02:07.120 align:center
[தீம் மியூசிக் ஒலிக்கிறது]

00:02:56.120 --> 00:03:00.880 align:center
பஞ்சாயத்

00:03:18.640 --> 00:03:19.800 align:center
தலைவரே!

00:03:30.640 --> 00:03:32.720 align:center
-[கதவு திறக்கும் ஓசை]
-என்ன?

00:03:32.800 --> 00:03:35.240 align:center
பர்மேஸ்வர். என்ன செய்தி?
எதாவது பிரச்சினையா?

00:03:36.400 --> 00:03:38.240 align:center
ஒரு சின்ன உதவி கேட்டு வந்திருக்கிறேன்.

00:03:39.200 --> 00:03:41.280 align:center
[இறுக்கமான இசை]

00:03:50.960 --> 00:03:53.160 align:center
தலைவர் சார், உங்களுக்கு நான் என்னன்னு
சொல்லுறது?

00:03:54.640 --> 00:03:57.640 align:center
தேநீர் அருந்திய உடனே தண்ணீ குடிக்காதீங்க,
உங்களுக்கு சளி பிடிக்கக்கூடும்.

00:03:57.720 --> 00:03:59.760 align:center
நான் குடித்து முடிச்சிட்டேன்.

00:03:59.840 --> 00:04:00.920 align:center
சரி, பரவாயில்லை.

00:04:01.160 --> 00:04:02.440 align:center
[மாடு கத்தும் ஓசை]

00:04:02.520 --> 00:04:04.000 align:center
நாளைக்கு திருமணம்.

00:04:05.280 --> 00:04:07.960 align:center
இன்னிக்கு, அவங்க மாப்பிள்ளை

00:04:08.520 --> 00:04:10.240 align:center
தங்குவதற்கு ஒரு தனி அறை கேட்கிறாங்க.

00:04:10.800 --> 00:04:11.840 align:center
ஏன்?

00:04:11.920 --> 00:04:14.520 align:center
மற்ற உறவுகாரங்களோடு பள்ளிகூடத்தில
தங்குவதில் என்ன பிரச்சினை?

00:04:14.600 --> 00:04:16.720 align:center
அவன் பிடிவாதமா இருக்கிறான், வேற என்ன?

00:04:16.800 --> 00:04:18.360 align:center
[பிரிஜ்] பிடிவாதம் பிடிக்கிறானா?

00:04:18.880 --> 00:04:21.320 align:center
உங்களுக்கு பிடிவாதம் பிடிக்கிற
மாப்பிள்ளை தான் கிடைத்தானா?

00:04:21.400 --> 00:04:22.800 align:center
அவனை பார்த்த போது தெரியலை.

00:04:22.880 --> 00:04:25.680 align:center
கவலைப்பட வேண்டாம், நான் ஏதாவது
ஏற்பாடு பண்ணுறேன்.

00:04:26.760 --> 00:04:29.720 align:center
அவன் மனசில ராஜான்னு நினைக்கிறானா?

00:04:30.520 --> 00:04:32.360 align:center
[அலைப்பேசி ஒலிக்கும் சத்தம்]

00:04:39.200 --> 00:04:41.920 align:center
-[பிரிஜ்] செகரேட்டரி, சார்.
-சொல்லுங்க, சார்.

00:04:42.240 --> 00:04:44.960 align:center
-பர்மேஸ்வர் சார்வை உங்களுக்கு தெரியும்ல.
-[அபிஷேக்] எந்த பர்மேஸ்வர்?

00:04:45.040 --> 00:04:48.200 align:center
அவர் பொண்ணுக்கு கூட நாளைக்கு திருமணம்
நடக்க இருக்கு.

00:04:48.280 --> 00:04:49.360 align:center
ஆமாம், தெரியும்.

00:04:49.440 --> 00:04:52.440 align:center
[பிரிஜ்] அவர் என் கூட தான் இருக்காரு,
கொஞ்சம் கலக்கமா இருக்கிறாரு.

00:04:52.520 --> 00:04:55.240 align:center
மாப்பிள்ளை தங்குறதுக்கு ஒரு தனியறை
கேட்கிறானாம்.

00:04:55.320 --> 00:04:56.960 align:center
மற்ற உறவுகாரங்களோடு தங்க மாட்டானாம்.

00:04:57.040 --> 00:05:00.160 align:center
பொருத்தமான அறையை ஒரே நாளில் எப்படி ஏற்பாடு
பண்ணுறதுன்னு திண்டாடுறாரு.

00:05:00.240 --> 00:05:02.520 align:center
அதான் நான் யோசித்தேன் உங்க அறையை ஒரு
நாளைக்கு...

00:05:02.600 --> 00:05:04.320 align:center
-ஒரு நாள்.
-ஒரு நாள் தானே, இல்லையா?

00:05:04.400 --> 00:05:07.840 align:center
ஒரு நாளைக்கு அறையை பகிர்ந்துகிட்டா ரொம்ப
உதவியா இருக்கும்.

00:05:07.920 --> 00:05:12.760 align:center
நானும் பஞ்சாயத்து அலுவலகத்தில ஒரு நாள்
தங்கட்டும்னு சொல்லிட்டேன்.

00:05:13.960 --> 00:05:15.320 align:center
ஹலோ?

00:05:16.080 --> 00:05:17.080 align:center
ஹலோ!

00:05:17.600 --> 00:05:18.680 align:center
ஹலோ?

00:05:18.760 --> 00:05:20.200 align:center
நெட்வெர்க் இல்லையா?

00:05:20.280 --> 00:05:22.080 align:center
நெட்வெர்க் இருக்கா பாருங்க.

00:05:22.160 --> 00:05:24.960 align:center
-நெட்வெர்க் இருக்கில்ல.
-[பிரிஜ்] ஒரே ஒரு கோடு தான் இருக்கு.

00:05:25.040 --> 00:05:28.320 align:center
-[பர்மேஸ்வர்] அங்கே கிடைக்குதா பாருங்க.
-[பிரிஜ்] இங்கேயே வந்து விட்டது.

00:05:28.400 --> 00:05:30.120 align:center
ஹலோ. ஹலோ.

00:05:30.200 --> 00:05:31.880 align:center
அவனை நீங்க வேறு எங்காவது தங்க வைக்கலாமே,

00:05:31.960 --> 00:05:34.280 align:center
இங்கே இருந்தா எனக்கு வசதியாக இருக்காது,
நான் ராத்திரி படிக்கணும்.

00:05:34.360 --> 00:05:35.680 align:center
[அபிஷேக்] எனக்கு தொந்தரவாக இருக்கும்.

00:05:35.760 --> 00:05:37.880 align:center
அவரு இக்கட்டுல இருக்காரு. இப்ப அவனை
எங்க தங்க வைக்கிறது?

00:05:37.960 --> 00:05:39.240 align:center
தயவு செய்து சார்.

00:05:39.880 --> 00:05:41.040 align:center
வேண்டாம்னு கெஞ்சுகிறான்.

00:05:42.080 --> 00:05:43.320 align:center
சரி பரவாயில்லை.

00:05:43.400 --> 00:05:45.520 align:center
எனக்கு புரியுது, நான் பார்த்துக்
கொள்கிறேன்.

00:05:45.600 --> 00:05:46.640 align:center
நன்றி, தலைவரே.

00:05:52.560 --> 00:05:54.400 align:center
முடியாது என்று சொல்கிறாரா?

00:05:54.480 --> 00:05:55.720 align:center
அப்படி சொல்லவில்லை.

00:05:55.800 --> 00:05:57.960 align:center
அவருக்கு ஒரு பிரச்சினை இருக்கு என்று
சொல்கிறார்.

00:05:59.000 --> 00:06:01.240 align:center
சரி, நான் என்ன பண்ணுறது?

00:06:03.160 --> 00:06:04.800 align:center
அப்போ சரி... [பெருமூச்சு விடும் சத்தம்]

00:06:06.680 --> 00:06:08.000 align:center
நாம் வேறு ஏற்பாடு பண்ணலாம்.

00:06:12.440 --> 00:06:15.720 align:center
தவறா நினைக்காதீங்க, நான் ஒன்று சொல்லவா?

00:06:16.320 --> 00:06:18.920 align:center
தயங்காம சொல்லுங்க. நான் ஏன் தவறா
நினைக்க போறேன்?

00:06:19.600 --> 00:06:22.200 align:center
இப்ப பஞ்சாயத்து அலுவலகத்தில உங்களோட
கட்டுப்பாட்டை இழந்து வாரிங்க.

00:06:22.280 --> 00:06:23.320 align:center
என்ன?

00:06:25.000 --> 00:06:27.880 align:center
இது எல்லாமே அந்த சொகுசு நாற்காலியால தான்.

00:06:28.720 --> 00:06:31.160 align:center
அதில் உட்கார்கிறவன் தன்னை
தலைவன் என்று நினைக்கிறான்.

00:06:31.240 --> 00:06:33.160 align:center
அப்படி எல்லாம் இல்லை.

00:06:33.960 --> 00:06:36.440 align:center
பார்த்தால் அப்படி தான் இருக்கு, சார்.

00:06:37.640 --> 00:06:41.160 align:center
தலைவரோட உத்தரவை செகரேட்டரி ஏன் மறுக்கணும்?

00:06:42.280 --> 00:06:43.280 align:center
ஹா?

00:06:46.240 --> 00:06:47.440 align:center
நான் போய் வருகிறேன்.

00:06:52.160 --> 00:06:54.240 align:center
[சோகமான மெல்லிய இசை]

00:07:02.840 --> 00:07:04.360 align:center
[தெளிவற்ற உரையாடல்கள்]

00:07:16.000 --> 00:07:19.200 align:center
[தொடரும் தெளிவற்ற உரையாடல்கள்]

00:07:21.040 --> 00:07:23.360 align:center
[சோகமான மெல்லிய இசை]

00:07:34.080 --> 00:07:35.400 align:center
அது இருக்கட்டும்.

00:07:40.200 --> 00:07:41.560 align:center
தலைவருக்கு என்ன ஆனது?

00:07:41.640 --> 00:07:43.840 align:center
அவர் எப்போதும் போலவே தான் இருக்காரு.

00:07:43.920 --> 00:07:45.720 align:center
தலைவரோட செயல்பாடு ஒரு மாதிரி இருக்கும்.

00:07:45.800 --> 00:07:48.480 align:center
தேவையானவர்களுக்கு உதவி செய்து தன்
செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வார்.

00:07:48.560 --> 00:07:50.120 align:center
அப்படின்னா அவரே வேலை செய்யட்டும்.

00:07:50.400 --> 00:07:53.160 align:center
அவர் ஏன் பர்மேஸ்வர் கிட்ட நான் சும்மா தான்
இருக்கிறேன்,

00:07:53.240 --> 00:07:55.040 align:center
இதை நான் செய்வேன் என்று சொல்லணும்?

00:07:55.120 --> 00:07:57.320 align:center
சார், கிராமங்களில்,

00:07:57.400 --> 00:07:59.680 align:center
ஏதாவது திருமணம், விழா அல்லது இறுதிச்சடங்கு
அப்படின்னா,

00:07:59.760 --> 00:08:02.120 align:center
எல்லாரும் வந்து அவங்க பங்குக்கு உதவி
செய்வாங்க.

00:08:02.200 --> 00:08:04.200 align:center
உதாரணத்துக்கு, நானே முடிந்த
உதவிகளை செய்து தரேன்.

00:08:04.280 --> 00:08:06.720 align:center
இது தான் வழக்கம், கிராமத்தோட நடைமுறை.

00:08:06.800 --> 00:08:08.280 align:center
நீ உங்க நடைமுறையை பின்பற்று.

00:08:08.360 --> 00:08:10.680 align:center
நான் அவங்களுக்கு சொந்தக்காரன் இல்லை
வேலை செய்வதற்கு.

00:08:10.760 --> 00:08:14.400 align:center
[பர்மேஸ்வர்] டேய் தம்பி, சமையற்காரனை ஒரு
பார்வை பாரு, அவனை நம்ப முடியாது.

00:08:15.280 --> 00:08:17.080 align:center
சமைக்கும் போது பாதியை அவனே
சாப்பிட்டுவிடுவான்.

00:08:19.760 --> 00:08:22.400 align:center
தொந்தரவுக்கு மன்னிக்கணும்,
செகரேட்டரி சார்.

00:08:22.960 --> 00:08:25.360 align:center
ஒன்றும் தொந்தரவு இல்லை, பர்மேஸ்வர் சார்.

00:08:25.440 --> 00:08:27.440 align:center
-விகாஸ்.
-[விகாஸ்] சொல்லுங்க சார்?

00:08:27.520 --> 00:08:30.520 align:center
இங்கே வேலை முடிந்ததுக்கு அப்புறம், கொஞ்சம்
பள்ளிகூடத்திலே ஏற்பாடு எல்லாம்,

00:08:30.600 --> 00:08:31.760 align:center
-கவனிச்சுக்க.
-சரிங்க சார்.

00:08:31.840 --> 00:08:33.720 align:center
-ஜமுக்காளம் எல்லாம் விரிக்கணும், சரியா?
-சரி.

00:08:34.840 --> 00:08:38.160 align:center
உங்களுக்கும் இப்ப எந்த வேலையும்
இல்லை, இல்லையா?

00:08:42.640 --> 00:08:45.720 align:center
இல்லை சார், அவரு ஃபக்கோலி மார்க்கெட்க்கு
போகணும்.

00:08:47.880 --> 00:08:49.480 align:center
இப்பவே போறீங்களா?

00:08:50.640 --> 00:08:53.160 align:center
-புறப்பட தயாரா இருக்கிறேன்.
-[சாவிகொத்து குலுங்கும் சத்தம்]

00:08:53.440 --> 00:08:55.560 align:center
அது ஏதாவது எமர்ஜென்சி வேலையா?

00:08:56.800 --> 00:08:57.920 align:center
ஆமாம்.

00:08:58.200 --> 00:08:59.880 align:center
கொஞ்சம் எமர்ஜென்சி தான்.

00:09:03.800 --> 00:09:06.040 align:center
[விகாஸ்] இந்த எமர்ஜென்சி விளக்கை
விற்கணும்.

00:09:06.560 --> 00:09:09.160 align:center
அதனால, கொஞ்சம் எமர்ஜென்சி தான்.

00:09:09.960 --> 00:09:11.160 align:center
ம்ம்.

00:09:12.480 --> 00:09:16.480 align:center
சோலார் விளக்கை மாட்டியதால, இரண்டு
எமர்ஜென்சி விளக்கு தேவையில்லை.

00:09:16.560 --> 00:09:17.960 align:center
அதனால ஒன்றை விற்கணும்.

00:09:24.760 --> 00:09:27.240 align:center
அவர் எதிலும் கொஞ்சம் வேகம்.
விற்கணும்னா உடனே விற்று விடுவாரு.

00:09:27.320 --> 00:09:29.560 align:center
-[அபிஷேக்] என் ஹெல்மெட்டை கொடு!
-இதோ தரேன்...

00:09:32.680 --> 00:09:33.760 align:center
இந்தாங்க சார், போங்க.

00:09:34.040 --> 00:09:36.440 align:center
-ஃபக்கோலி மார்க்கெட்க்கு?
-[தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம்]

00:09:36.520 --> 00:09:38.040 align:center
உனக்கு வேற இடமே கிடைக்கலையா?

00:09:38.120 --> 00:09:39.800 align:center
ஃபக்கோலி மார்க்கெட்யில நான் என்ன செய்ய?

00:09:40.400 --> 00:09:42.800 align:center
சார், நீங்க வேலை செய்வதிலிருந்து உங்களை
நான் காப்பாற்றினேன்.

00:09:42.880 --> 00:09:45.400 align:center
எனக்கு நன்றி சொல்லுறதுக்கு பதிலாக, என்னைத்
திட்டுறீங்க.

00:09:45.480 --> 00:09:46.840 align:center
எப்படி, வேலை செய்யாம காப்பாற்றுன,

00:09:46.920 --> 00:09:49.040 align:center
இந்த முட்டாள்தனமான வேலையை செய்யச் சொல்லி.

00:09:49.120 --> 00:09:50.480 align:center
ஆமா, சார்.

00:09:51.200 --> 00:09:52.800 align:center
சார், எனக்கு ஒரு யோசனை.

00:09:52.880 --> 00:09:55.800 align:center
ஊருக்கு வெளியே இருக்கிற பூங்காவிற்கு ஏன்
நீங்க போகக்கூடாது?

00:09:55.880 --> 00:09:57.600 align:center
பகல் முழுவதும் அங்கே நீங்க ஓய்வு எடுங்க.

00:09:57.680 --> 00:10:00.360 align:center
பொழுது சாய்ந்த பிறகு விருந்தாளிங்க
வரும்போது வாங்க.

00:10:00.440 --> 00:10:03.560 align:center
இங்கே இருந்தா ஏதாவது ஒரு வேலையை
செய்ய சொல்லி கேட்டபடியே இருப்பாங்க.

00:10:03.640 --> 00:10:04.920 align:center
நீ சொல்வது சரிதான்.

00:10:05.200 --> 00:10:07.600 align:center
என் வெர்பல் எபிளிட்டி புத்தகத்தை
எடுத்துட்டு வா.

00:10:07.680 --> 00:10:08.920 align:center
என்ன எபிளிட்டி?

00:10:09.200 --> 00:10:11.440 align:center
அந்த நீல அட்டைப்படம் உள்ள புத்தகம். போய்
எடுத்துட்டு வா.

00:10:14.560 --> 00:10:16.800 align:center
[ஆங்கில உச்சரிப்பு] வெர்பல் எபிளிட்டி.
வெர்பல் எபிளிட்டி.

00:10:16.880 --> 00:10:18.880 align:center
வெர்பல் எபிளிட்டி.

00:10:18.960 --> 00:10:21.240 align:center
வெர்பல் எபிளிட்டி.

00:10:21.720 --> 00:10:23.680 align:center
வெர்பல் எபிளிட்டி.

00:10:26.480 --> 00:10:28.200 align:center
-[ஜிப் திறக்கும் ஓசை]
-[ஜிப் மூடும் ஓசை]

00:10:36.000 --> 00:10:37.440 align:center
புத்தகத்தை எங்கே எடுத்துட்டு போற?

00:10:37.520 --> 00:10:39.320 align:center
செகரேட்டரி சார் இதை கேட்டாரு.

00:10:40.520 --> 00:10:42.000 align:center
ஆனால், அவர் மார்க்கெட்க்கு தானே போறாரு.

00:10:42.080 --> 00:10:44.400 align:center
அங்கே எதுக்கு அவருக்கு புத்தகம் வேண்டும்?

00:10:45.600 --> 00:10:46.960 align:center
இதையும் அவர் விற்கணுமாம்.

00:10:48.320 --> 00:10:49.640 align:center
இது ஒன்றை மட்டுமா?

00:10:50.880 --> 00:10:53.200 align:center
இல்லை, எல்லா புத்தகத்தையும் விற்கப்
போறாரு.

00:10:53.440 --> 00:10:55.160 align:center
இந்த புத்தகங்களையும் விற்கப்போறாரு.

00:10:58.800 --> 00:11:01.640 align:center
-[நகைச்சுவையான இசை]
-ஆனால், புத்தகத்தை எல்லாம் ஏன் விற்கணும்?

00:11:02.440 --> 00:11:03.440 align:center
தெரியலை.

00:11:03.520 --> 00:11:06.440 align:center
இந்த புத்தகங்கள் இனிமே
பயன்படாதுன்னு சொன்னாரு.

00:11:06.520 --> 00:11:07.680 align:center
அதனால் தான்?

00:11:07.760 --> 00:11:09.520 align:center
-அது சரி.
-ஆமாம்.

00:11:12.480 --> 00:11:15.320 align:center
-நான் போகட்டுமா, சார்?
-சரி, போ.

00:11:19.760 --> 00:11:20.760 align:center
-போ.
-[விசித்திரமான இசை]

00:11:23.160 --> 00:11:25.760 align:center
-அவர் உண்மையிலேயே ஒரு மாதிரி தான்.
-[அலைப்பேசி ஒலிக்கும் சத்தம்]

00:11:25.840 --> 00:11:27.360 align:center
எதையும் விற்கிறான்.

00:11:29.440 --> 00:11:31.560 align:center
டேய் தம்பி, என்னடா பிரச்சினை?

00:11:32.360 --> 00:11:34.800 align:center
என்னது? நெய் தீர்ந்து போய் விட்டதா?

00:11:35.120 --> 00:11:37.480 align:center
யாரையாவது ஃபக்கோலி மார்க்கெட்க்கு
அனுப்பி இன்னும் கொஞ்சம் வாங்கு.

00:11:39.120 --> 00:11:40.320 align:center
இரு, ஒரு நிமிஷம் இரு.

00:11:40.960 --> 00:11:43.520 align:center
செகரேட்டரி சார், கொஞ்சம் இருங்க.

00:11:46.720 --> 00:11:48.640 align:center
-இப்ப எதுக்கு கூப்பிடுறாரு?
-ஏதாவது வேண்டுமா இருக்கும்.

00:11:48.720 --> 00:11:50.760 align:center
-கண்ணு இல்லையா உனக்கு, நகரு.
-மன்னிச்சுக்கோங்க.

00:11:52.680 --> 00:11:55.200 align:center
செகரேட்டரி சார், நீங்க
ஃபக்கோலி மார்க்கெட்டுக்கு தானே போறீங்க?

00:11:55.280 --> 00:11:56.280 align:center
ஆமாம்.

00:11:56.360 --> 00:11:58.840 align:center
-எனக்கு ஒரு சின்ன உதவி தேவை...
-[குறும்பான பின்னணி இசை]

00:11:58.920 --> 00:12:01.440 align:center
15 லிட்டர் நெய் டின்னு வாங்கி வரணும்,

00:12:01.520 --> 00:12:03.160 align:center
பப்லு சாஹூ கடையிலிருந்து.

00:12:03.840 --> 00:12:06.880 align:center
-அவன் என் கணக்கில் தருவான்.
-[அபிஷேக்] இல்லை, பணம் பிரச்சினையில்லை.

00:12:06.960 --> 00:12:09.640 align:center
-15 லிட்டரை நான் ஒரு ஆளா தூக்க முடியுமா?
-ஆமாம், இடமும் இல்லை.

00:12:09.720 --> 00:12:12.320 align:center
இல்லை, அதில் பிடி இருக்கு.

00:12:12.760 --> 00:12:14.440 align:center
இங்கே தொங்க விட்டுக்கலாம்.

00:12:15.040 --> 00:12:17.920 align:center
ஆனா அங்கே நான் எமெர்ஜென்சி விளக்கை
தொங்கவிட்டு இருக்கேனே.

00:12:18.000 --> 00:12:19.920 align:center
ஆனா, அதை நீங்க விற்க போறீங்க இல்லையா?

00:12:21.360 --> 00:12:23.520 align:center
அங்கே அதற்கு பதிலாக டின்னை தொங்க விடலாம்?

00:12:24.960 --> 00:12:27.160 align:center
[குறும்பான பின்னணி இசை]

00:12:28.880 --> 00:12:30.040 align:center
சரி.

00:12:30.360 --> 00:12:32.640 align:center
ஹலோ, வேறு ஏதாவது வேணுமா?

00:12:33.000 --> 00:12:34.000 align:center
அட?

00:12:34.080 --> 00:12:35.680 align:center
எங்கே...

00:12:36.280 --> 00:12:38.160 align:center
வேண்டாம், வேண்டாம், அப்புறம்
பார்த்துக்கலாம்.

00:12:39.560 --> 00:12:42.280 align:center
டின்னை இங்கே கொண்டு வர வேண்டாம்.
என் வீட்டில் கொடுங்க.

00:12:42.360 --> 00:12:44.640 align:center
வீட்டில் சின்ன சின்ன வேலைங்க இருக்கு
செய்றதுக்கு.

00:12:44.720 --> 00:12:46.000 align:center
கொஞ்சம் பார்த்துக்கங்க.

00:12:48.200 --> 00:12:49.480 align:center
சீக்கிரம்.

00:12:49.880 --> 00:12:51.280 align:center
ஜமுக்காளத்தை இங்கே விரிங்க.

00:12:53.400 --> 00:12:56.280 align:center
[தெம்மாங்கு பாடல் இசைக்கிறது]

00:13:09.600 --> 00:13:11.120 align:center
[மோட்டார் பைக் நகரும் ஒசை]

00:13:11.840 --> 00:13:13.000 align:center
சமையல்காரன் எங்கே?

00:13:14.360 --> 00:13:15.960 align:center
சமையல்காரன் எங்கே?

00:13:16.440 --> 00:13:20.000 align:center
[அபிஷேக்] சமையல்காரன் எங்கே? நான்
இந்த நெய் டின்னை கொடுக்கணும்.

00:13:23.000 --> 00:13:25.240 align:center
-[பர்மேஸ்வர்] இதோ பாரு, விகாஸ்!
-[விகாஸ்] சார்.

00:13:25.320 --> 00:13:28.120 align:center
[பர்மேஸ்வர்] தனித்தனி டப்பா இருக்கட்டும்
ஊர் மக்கள், விருந்தாளிகள்னு.

00:13:28.200 --> 00:13:29.200 align:center
[விகாஸ்] சரிங்க சார்.

00:13:29.280 --> 00:13:32.560 align:center
[பர்மேஸ்வர்] விருந்தாளிகளுக்கு ஏழு வகை
இனிப்பு, ஊர் மக்களுக்கு ஐந்து தான்.

00:13:32.640 --> 00:13:34.520 align:center
-[விகாஸ்] சரிங்க சார்.
-வா, அதை இங்கே தா.

00:13:34.600 --> 00:13:36.560 align:center
ஈயை ஓட்டு புரியுதா?

00:13:36.640 --> 00:13:38.400 align:center
வேண்டாம், அங்கே போய் கொடு.

00:13:38.480 --> 00:13:40.560 align:center
செகரேட்டரியும் இங்கே வந்துட்டாரு.

00:13:40.640 --> 00:13:42.960 align:center
வாங்க வாங்க.

00:13:43.040 --> 00:13:44.280 align:center
அருமையான வேலையை செய்திருக்கீங்க.

00:13:44.360 --> 00:13:45.760 align:center
அங்கே வைங்க, போதும்.

00:13:46.320 --> 00:13:48.880 align:center
-[பாத்திரம் தரையில் வைக்கும் ஓசை]
-[பர்மேஸ்வர்] கவனம்.

00:13:48.960 --> 00:13:50.320 align:center
நெய்யை வாங்குப்பா.

00:13:50.400 --> 00:13:52.320 align:center
செகரேட்டரி சார், அசத்திட்டீங்க.

00:13:52.760 --> 00:13:55.240 align:center
என்ன, களைப்பா இருக்கீங்களா?

00:13:55.680 --> 00:13:57.120 align:center
எமர்ஜென்சி விளக்கை வித்தீங்களா?

00:13:57.760 --> 00:13:59.760 align:center
இல்லை, நல்ல விலை கிடைக்கலை.

00:13:59.840 --> 00:14:00.920 align:center
அலுவலக சாவியை கொடு.

00:14:04.680 --> 00:14:06.600 align:center
[பர்மேஸ்வர்] அலுவலகம் போறீங்க, இல்லையா?

00:14:09.680 --> 00:14:11.480 align:center
எனக்கு ஒரு சின்ன வேலை செய்யணும்.

00:14:11.560 --> 00:14:14.560 align:center
[தெம்மாங்கு பாடல் இசைக்கிறது]

00:14:15.840 --> 00:14:18.440 align:center
[பணியாளர்] சார், நான் என்ன நினைத்தேன்...

00:14:19.600 --> 00:14:20.720 align:center
இங்க ஒரு ட்யூப் லைட்,

00:14:22.360 --> 00:14:25.000 align:center
அப்புறம் இங்கே ஒன்று. இரண்டு
பக்கமும் ஒவ்வொரு டியூப் லைட்,

00:14:25.080 --> 00:14:27.720 align:center
இந்த வீடே ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிற
உணர்வு வரும்.

00:14:28.040 --> 00:14:30.560 align:center
-சரி போடு.
-[முணுமுணுப்பு சத்தம்]

00:14:30.640 --> 00:14:33.400 align:center
சார், வெள்ளை லைட் போடவா பச்சை லைட் போடவா?

00:14:33.480 --> 00:14:35.320 align:center
உனக்கு எது பிடிக்குமோ போடு. பச்சையை போடு.

00:14:35.400 --> 00:14:37.520 align:center
வெள்ளை நல்லா இருக்கும்னு உங்களுக்கு
தோணலையா?

00:14:39.200 --> 00:14:40.720 align:center
நல்லது, நான் பச்சையே பயன்படுத்துறேன்.

00:14:41.480 --> 00:14:44.400 align:center
பச்சை உங்க மனசில ரொம்ப நாளா
இருந்ததுனு நினைக்கிறேன்.

00:14:44.760 --> 00:14:47.040 align:center
[பணியாளர்] இன்னும் ஒரு விஷயம், சார்.

00:14:47.120 --> 00:14:50.560 align:center
இந்த வரிசையா கட்டுற விளக்கு அணைஞ்சு
அணைஞ்சு எரியணுமா

00:14:50.640 --> 00:14:53.080 align:center
இல்லை அணையாம அப்படியே எரியணுமா?

00:14:53.160 --> 00:14:56.000 align:center
நீயே சொந்தமா வேலை செய்றியா இல்லை நானே
லைட்டை மாட்டணுமா?

00:14:56.920 --> 00:15:00.040 align:center
உனக்கு எப்படி வேண்டுமோ போடு. இது
ஒன்றும் என் தங்கச்சி கல்யாணம் இல்லை.

00:15:00.120 --> 00:15:01.400 align:center
போடு, எப்படியோ போடு.

00:15:02.600 --> 00:15:04.840 align:center
அணைஞ்சு அணைஞ்சு எரிய விடுறேன்.

00:15:07.360 --> 00:15:09.400 align:center
அணைஞ்சு அணைஞ்சு எரியணும்னு சொன்னது
கேட்கலையா?

00:15:10.320 --> 00:15:12.560 align:center
[பணியாளர்] இப்ப இருக்கிற ட்ரெண்டு யாருக்கு
புரியுது.

00:15:17.040 --> 00:15:18.360 align:center
[பெருமூச்சு விடும் சத்தம்]

00:15:20.800 --> 00:15:22.800 align:center
[அலை பேசி ஒலிக்கும் சத்தம்]

00:15:26.000 --> 00:15:28.800 align:center
இப்ப எந்த நம்பரிலிருந்து கூப்பிடுறானோ,
தெரியலையே?

00:15:28.880 --> 00:15:31.040 align:center
-ஹலோ.
-[பர்மேஸ்வர்] செகரேட்டரி சார்.

00:15:31.480 --> 00:15:33.680 align:center
பர்மேஸ்வர் பேசுறேன்.

00:15:34.400 --> 00:15:36.200 align:center
எனக்கு ஒரு சின்ன உதவி வேணும்.

00:15:38.520 --> 00:15:40.320 align:center
[மெதுவாக] மறுபடியுமா?

00:15:41.160 --> 00:15:43.560 align:center
[மெல்லிசை]

00:16:01.240 --> 00:16:02.640 align:center
-ப்ரஹலாத்
-சொல்லுங்க.

00:16:04.800 --> 00:16:10.240 align:center
பஞ்சு வைத்த சொகுசு நாற்காலியில்
உட்காருவதால் ஒருத்தன் பெரிய ஆள் ஆகிறானா?

00:16:11.760 --> 00:16:15.120 align:center
சார், எனக்கு தெரிந்து செயலாளருக்கு அந்த
மாதிரி எண்ணம் இல்லை.

00:16:15.600 --> 00:16:16.640 align:center
[பிரிஜ்] எனக்கு தெரியும்.

00:16:17.520 --> 00:16:19.000 align:center
ஆனால் மக்கள் அப்படி நினைக்கிறாங்க.

00:16:19.080 --> 00:16:20.880 align:center
[ப்ரஹலாத்] அவங்க நினைக்க தான் செய்யுறாங்க.

00:16:20.960 --> 00:16:23.760 align:center
எனக்கு ஒரு யோசனை. நீங்க ஏன் உங்களுக்கு ஒரு
நாற்காலியை வாங்கக் கூடாது?

00:16:23.840 --> 00:16:26.200 align:center
அப்படி வாங்குவதால் என்ன பயன்?

00:16:27.720 --> 00:16:29.160 align:center
அது எங்களை சமமாக்கும்.

00:16:29.720 --> 00:16:31.160 align:center
சமம் என்பது நமக்கு ஒத்துவராத ஒன்று.

00:16:31.440 --> 00:16:32.920 align:center
தலைவர் எப்போதும் தலைவர் தானே.

00:16:33.000 --> 00:16:35.360 align:center
உண்மை தான்.

00:16:37.000 --> 00:16:42.360 align:center
இந்த நாற்காலிப் பிரச்சினையை மிச்சம் மீதி
இல்லாம முடிக்கணும்.

00:16:44.720 --> 00:16:46.520 align:center
நீங்க ஒரு வார்த்தை சொன்னா, நாங்க...

00:16:49.240 --> 00:16:50.960 align:center
வேண்டாம், எந்த வன்முறையும் வேண்டாம்.

00:16:52.360 --> 00:16:55.200 align:center
-[அலைப்பேசி ஒலிக்கும் சத்தம்]
-சார், அதை கொஞ்சம் எடுத்துத் தாங்க.

00:16:56.440 --> 00:16:57.840 align:center
டேய், நீயே எடுத்துக்கடா.

00:16:59.320 --> 00:17:01.880 align:center
என்னை நீ வேலை வாங்கலாம் என்று
நினைக்கிறியா? நீயே எடுத்துப் பேசு.

00:17:04.760 --> 00:17:06.800 align:center
-[பிரிஜ்] யார் அது?
-சொல்லுங்க பர்மேஸ்வர் அண்ணே.

00:17:08.160 --> 00:17:09.880 align:center
அவங்க இங்கே வந்துட்டாங்க.

00:17:09.960 --> 00:17:11.960 align:center
[ப்ரஹலாத்] வாங்க போகலாம். வந்துட்டாங்க.

00:17:12.040 --> 00:17:14.160 align:center
-வாங்க போகலாம்.
-ஊர்வலம் தொடங்கிவிட்டது.

00:17:14.240 --> 00:17:16.400 align:center
-என் மீதும் கொஞ்சம் தடவுங்க.
-இந்தா காட்டு.

00:17:16.480 --> 00:17:18.920 align:center
-என் மேலேயும் கொஞ்சம் தடவுங்க.
-ஏற்கெனவே உனக்கு பூசியாச்சு.

00:17:19.120 --> 00:17:20.480 align:center
வா, போகலாம்.

00:17:20.560 --> 00:17:22.960 align:center
51 ரூபாய் கொடுக்கவா இல்லை 101 கொடுக்கவா?

00:17:23.400 --> 00:17:26.840 align:center
உன் கிட்ட இருப்பதை கொடு. 51 அல்லது 101
என்பது பற்றி கவலைப்படாதே.

00:17:27.640 --> 00:17:29.960 align:center
பர்மேஸ்வர் அண்ணனோட பெண் பெயர்
ட்விங்கிளா இல்லை கரினாவா?

00:17:30.200 --> 00:17:32.880 align:center
கணேஷ் ரவீணா திருமண விழா

00:17:34.240 --> 00:17:37.360 align:center
ஃபுலேரா கிராம பஞ்சாயத்து

00:17:37.560 --> 00:17:40.120 align:center
-[மங்கள இசை]
-[கோப்பையில் குளிர்பானம் ஊற்றும் ஒசை]

00:17:44.080 --> 00:17:45.360 align:center
-இந்தாங்க.
-வேண்டாம்.

00:17:45.440 --> 00:17:47.160 align:center
நன்றி, நான் ஏற்கெனவே அருந்திவிட்டேன்.

00:17:47.240 --> 00:17:49.280 align:center
-இன்னும் கொஞ்சம்.
-[ப்ரஹலாத்] இன்னும் ஒரு கோப்பை.

00:17:49.360 --> 00:17:51.000 align:center
விகாஸ், வேண்டாம் சொன்னா விட்டுடாம கொடு.

00:17:51.080 --> 00:17:52.960 align:center
-இது சரியில்லை.
-தயங்காம குடிங்க, தம்பி.

00:17:53.040 --> 00:17:54.520 align:center
சும்மா குடிங்க. களைப்பு போகும்.

00:17:54.600 --> 00:17:56.440 align:center
-[பிரிஜ்] பர்மேஸ்வர்...
-[பர்மேஸ்வர்] சார்.

00:17:56.520 --> 00:17:59.080 align:center
குளிர்பானம் மட்டும் தானா? இனிப்பு பலகாரம்
எல்லாம் கொடுங்க.

00:17:59.160 --> 00:18:01.680 align:center
-செகரேட்டரி பலகாரம் எடுக்க போயிருக்காரு.
-இன்னும் வரவில்லை.

00:18:01.760 --> 00:18:04.560 align:center
-இதையே ரொம்ப நேரமா சொல்லுறீங்க!
-மகனே, அவருக்கு கொஞ்சம் ஊற்று.

00:18:04.640 --> 00:18:06.440 align:center
-கொடு.
-சொல்லி முடித்தீங்க, அவர் வந்துட்டார்.

00:18:06.520 --> 00:18:09.680 align:center
-அவர் வந்தாச்சு.
-எல்லாருக்கும் பலகாரம் கொடுங்க. போங்க.

00:18:09.760 --> 00:18:11.400 align:center
-கொடுங்க.
-விகாஸ்.

00:18:11.480 --> 00:18:14.440 align:center
நாம் பலகாரம் கொஞ்சம் நேரம் கழித்து
சாப்பிடுவோம்னு சொல்லு.

00:18:14.520 --> 00:18:16.560 align:center
கொஞ்சம் நேரம் கழித்து பலகாரம்
சாப்பிடுறோம்.

00:18:16.640 --> 00:18:17.640 align:center
என்ன தம்பி?

00:18:17.720 --> 00:18:19.800 align:center
கொஞ்சம் நேரம் கழித்து பலகாரம்
சாப்பிடுறோம்.

00:18:19.880 --> 00:18:22.480 align:center
துப்பாக்கி எல்லாம் தூக்கி ரொம்ப சோர்வா
இருப்பாங்க. விடுங்க.

00:18:22.560 --> 00:18:24.800 align:center
-சரி மகனே, ஒய்வு எடுங்க.
-உங்க விருப்பம் தான் எல்லாம்.

00:18:25.200 --> 00:18:27.160 align:center
சில மணி நேரத்தில நீங்க வீடு போகணும்.

00:18:27.240 --> 00:18:28.360 align:center
ஆமாம்.

00:18:28.440 --> 00:18:32.040 align:center
விருந்தாளிங்க வந்து இருக்கும்
பள்ளிகூடத்துக்கு நாம் போவோம்.

00:18:32.120 --> 00:18:34.480 align:center
பெரியவங்க எல்லோரும் அங்கே தான் இருக்காங்க.
போகலாம் வாங்க.

00:18:34.560 --> 00:18:37.120 align:center
போகலாம், மகனே, இவர் தான் செகரேட்டரி.

00:18:37.840 --> 00:18:38.880 align:center
இவர் இங்கே தான் இருப்பாரு.

00:18:38.960 --> 00:18:41.800 align:center
ஏதாவது வேண்டும் என்றால், இவர்ட்ட
சொல்லுங்க.

00:18:41.880 --> 00:18:43.320 align:center
பொண்ணுக்கு அண்ணனா நினைத்து கேளுங்க.

00:18:43.400 --> 00:18:45.280 align:center
ரொம்ப தங்கமான பையன்.

00:18:45.360 --> 00:18:47.320 align:center
-வாங்க போகலாம்.
-சரி.

00:18:47.400 --> 00:18:48.520 align:center
நாங்க புறப்படுறோம்.

00:18:48.600 --> 00:18:51.040 align:center
-நீ எங்கே போற?
-பலகாரம் எல்லாம் இங்கே இருக்கு.

00:18:51.120 --> 00:18:52.840 align:center
திருமண அரங்கத்துக்கு.

00:18:52.920 --> 00:18:55.320 align:center
[தெளிவற்ற பேச்சு சத்தம்]

00:18:55.880 --> 00:18:57.400 align:center
இன்னிக்கு முதலிரவு.

00:18:58.160 --> 00:18:59.600 align:center
-இன்னிக்கு இல்லை.
-அப்புறம்?

00:18:59.680 --> 00:19:01.800 align:center
-நாளைக்கு தான் முதலிரவு.
-[நண்பன் குரல்] ஊ ஊ...

00:19:02.640 --> 00:19:06.040 align:center
நான் உள்ளே உட்கார்ந்து இருக்கேன். ஏதாவது
வேணும்னா சொல்லுங்க.

00:19:06.120 --> 00:19:07.360 align:center
நிச்சயமா.

00:19:08.560 --> 00:19:11.080 align:center
உங்க மச்சினிச்சியை பக்கத்திலே எங்கேயும்
காணலையே.

00:19:12.040 --> 00:19:13.720 align:center
இல்லை, அப்பா, நான் வருத்தப்படலை.

00:19:14.200 --> 00:19:15.920 align:center
வேலையால கொஞ்சம் மனசு அழுத்தமா இருக்கு.

00:19:17.440 --> 00:19:20.320 align:center
-[காலடி சத்தம்]
-பலகாரம் கொஞ்சம் தர முடியுமா?

00:19:20.400 --> 00:19:21.880 align:center
ஒரு நிமிஷம் இருங்க. நான் அங்கே வரேன்.

00:19:22.720 --> 00:19:24.040 align:center
இல்லை, அது வேற ஒரு பையன்.

00:19:26.320 --> 00:19:27.800 align:center
நான் அதை பார்த்துக்கிறேன்.

00:19:35.600 --> 00:19:37.120 align:center
இது ரொம்ப அவமானமா இருக்கு.

00:19:37.680 --> 00:19:40.040 align:center
மாப்பிள்ளையை பலகாரத்துக்குக்காக யாரு
காத்திருக்க வைப்பாங்க?

00:19:42.040 --> 00:19:43.080 align:center
அவன் வரட்டும்.

00:19:44.240 --> 00:19:45.480 align:center
அவன் கிட்ட நான் பேசுறேன்.

00:19:55.200 --> 00:19:56.520 align:center
நாற்காலியை எல்லாம் வெளியே போடு.

00:19:59.200 --> 00:20:01.720 align:center
பலகாரத்தை நாங்க வெளியே சாப்பிடுறோம்.

00:20:02.400 --> 00:20:03.400 align:center
வெளியே!

00:20:05.520 --> 00:20:07.960 align:center
[கணேஷ்] நாற்காலியை எடுத்து வர இவ்வளவு
நேரமா?

00:20:08.040 --> 00:20:10.320 align:center
[நண்பன் 2] இப்ப வருமா இல்லை அடுத்த
வருஷம் வருமா?

00:20:10.400 --> 00:20:11.640 align:center
[நண்பன் 3] இதோ வரான்.

00:20:15.960 --> 00:20:17.120 align:center
வாங்க உட்காரலாம்.

00:20:24.240 --> 00:20:26.080 align:center
[தொண்டை கனைக்கும் சத்தம்]

00:20:30.040 --> 00:20:31.520 align:center
இரு...

00:20:33.560 --> 00:20:34.680 align:center
என்ன இது?

00:20:35.480 --> 00:20:36.480 align:center
-என்ன?
-[சோகமான இசை]

00:20:37.240 --> 00:20:38.520 align:center
ஐந்து இனிப்பு தான் இருக்கு.

00:20:39.400 --> 00:20:42.040 align:center
-ஐந்து தான் என் டப்பாவிலும்.
-ஐந்து தான் என் டப்பாவிலும்.

00:20:42.120 --> 00:20:43.240 align:center
இங்கே ஐந்து தான்.

00:20:43.840 --> 00:20:47.160 align:center
பள்ளி கூடத்தில கொடுத்த டப்பாக்களில்
ஏழு இனிப்பு இருந்தது.

00:20:47.240 --> 00:20:49.040 align:center
ஆனா இங்கே எனக்கு தருவதில் ஐந்து தான்.

00:20:49.560 --> 00:20:51.480 align:center
அதுவும் அந்த வெள்ளிஜரிகை இனிப்பை காணோம்.

00:20:53.360 --> 00:20:55.680 align:center
அப்படியா. இருங்க. நான் இரண்டு நிமிடத்தில்
வரேன்.

00:20:57.960 --> 00:20:59.320 align:center
திரும்பவும் இரண்டு நிமிடமா?

00:20:59.800 --> 00:21:01.840 align:center
[நாட்டுப்புற வாத்திய இசை ஒலிக்கிறது]

00:21:03.520 --> 00:21:05.280 align:center
[அபிஷேக்] பர்மேஸ்வர் சார், எனக்கு தெரியாது

00:21:05.360 --> 00:21:08.480 align:center
ஊர் மக்களுக்கு ஒரு வகை, விருந்தாளிகளுக்கு
இன்னொரு வகை டப்பா என்று.

00:21:08.560 --> 00:21:10.720 align:center
அங்கே அறையில் இருந்ததை நான் எடுத்து
வந்தேன்.

00:21:10.800 --> 00:21:12.240 align:center
என்னால் இப்ப அங்கே வர முடியாது.

00:21:12.320 --> 00:21:14.480 align:center
யாரையாவது இங்கே எடுத்து வந்து
தரச்சொல்லுங்க.

00:21:16.520 --> 00:21:19.240 align:center
நல்லது. சீக்கீரம் இல்லை அவங்க
வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாங்க.

00:21:20.280 --> 00:21:23.200 align:center
மாப்பிள்ளையும் அவர் நண்பர்களும்
தான், வேற யாரு?

00:21:26.080 --> 00:21:28.840 align:center
-[சோகமான இசை]
-ஏற்பாடு எல்லாம் படு மோசம் தான்.

00:21:30.080 --> 00:21:32.640 align:center
அவங்க கிட்ட பேசினேன். வேற டப்பாக்களை
அனுப்பி வைக்கிறாங்க.

00:21:32.880 --> 00:21:35.040 align:center
கொஞ்சம் காத்திருங்க, இப்ப வந்துவிடும்.

00:21:35.120 --> 00:21:37.880 align:center
ஃபுலேரா கிராம பஞ்சாயத்து

00:21:37.960 --> 00:21:39.880 align:center
-என்ன இது?
-[நாற்காலிகள் இடிக்கும் ஓசை]

00:21:44.560 --> 00:21:45.560 align:center
அபிஷேக் அவர்களே.

00:21:46.160 --> 00:21:49.360 align:center
நாங்க காத்திட்டு இருக்கணும்னா குறைந்தது
நல்ல நாற்காலியாவது போட்டு இருக்கலாம்.

00:21:51.480 --> 00:21:55.640 align:center
உள்ளே ஒரு சொகுசு நாற்காலி இருப்பதை
நான் பார்த்தேன்.

00:21:58.800 --> 00:22:00.320 align:center
நல்ல நாற்காலி இருக்கும் போது,

00:22:00.400 --> 00:22:03.080 align:center
மாப்பிள்ளைக்கு ஏன் இந்த பிளாஸ்டிக்
நாற்காலியை கொடுக்கணும்?

00:22:04.360 --> 00:22:05.760 align:center
என்ன?

00:22:05.840 --> 00:22:07.480 align:center
இது என்ன விளையாட்டா? சொல்லுங்க.

00:22:08.040 --> 00:22:09.240 align:center
இது விளையாட்டு போல இருக்கு.

00:22:28.640 --> 00:22:30.160 align:center
[நாற்காலி தரையில் உரசும் ஓசை]

00:22:41.960 --> 00:22:44.120 align:center
[பிளாஸ்டிக் காகித சலசலப்பு சத்தம்]

00:22:45.680 --> 00:22:48.040 align:center
கமலேஷ், பிளாஸ்டிக்கை கிழி.

00:22:48.120 --> 00:22:49.440 align:center
பிளாஸ்டிக்கை கிழிக்காதீங்க.

00:22:49.520 --> 00:22:52.080 align:center
கிழிக்காதீங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?

00:22:52.160 --> 00:22:53.840 align:center
-அது வசதியா இல்லை.
-என்ன வசதியாக இல்லை?

00:22:53.920 --> 00:22:56.400 align:center
திரும்ப ஆரம்பிக்காதே. அது பண்ணுற சத்தம்
எரிச்சல் மூட்டுது.

00:22:56.480 --> 00:22:57.800 align:center
சத்தம் பண்ணா என்ன இப்ப?

00:22:58.720 --> 00:23:00.720 align:center
[இறுக்கமான இசை]

00:23:02.800 --> 00:23:05.320 align:center
[பிளாஸ்டிக்கை கிழிக்கும் சத்தம்]

00:23:05.400 --> 00:23:07.720 align:center
பிளாஸ்டிக்கை கிழிக்காதேன்னு சொல்லுறேன்.
புரியலையா?

00:23:08.360 --> 00:23:10.240 align:center
என்ன ஒரு நச்சரிப்பு.

00:23:10.320 --> 00:23:13.760 align:center
இந்த உன் கல்யாணத்துக்கு கொடுத்த
சீர் இல்லை. இது நான் வாங்கினது.

00:23:13.840 --> 00:23:16.880 align:center
நீ கிழிக்கணும்னு நினைத்தால் உனக்கு சீரா
வந்த பொருள்களை கிழி.

00:23:17.680 --> 00:23:19.720 align:center
[ஆங்கில வார்த்தை] ஆஸ்ஹோல்.

00:23:20.200 --> 00:23:23.880 align:center
ஃபுலேரா கிராம பஞ்சாயத்து

00:23:24.360 --> 00:23:25.600 align:center
என்னது...

00:23:27.040 --> 00:23:29.160 align:center
அவன் என்னை என்ன சொன்னான்?

00:23:29.600 --> 00:23:31.280 align:center
ஆஸ்ஹோல் என்று சொன்ன மாதிரி இருந்தது.

00:23:32.120 --> 00:23:34.240 align:center
செல்ஃபோனில் அர்த்தம் என்ன என்று பார்.

00:23:39.000 --> 00:23:40.120 align:center
என்ன?

00:23:42.040 --> 00:23:43.240 align:center
என்ன?

00:23:43.320 --> 00:23:46.840 align:center
வெளிக்கு போகிற ஓட்டை.

00:23:47.720 --> 00:23:50.280 align:center
[இறுக்கமான இசை]

00:23:54.400 --> 00:23:55.600 align:center
எங்க அப்பாவை கூப்பிடுங்க.

00:23:57.480 --> 00:23:58.920 align:center
[முணுமுணுப்பு சத்தம்]

00:24:03.960 --> 00:24:04.960 align:center
சார், பார்த்து.

00:24:05.040 --> 00:24:06.840 align:center
இந்த திருமணம் நடைபெற வேண்டாம் என்றால்

00:24:06.920 --> 00:24:09.120 align:center
நீங்க எங்களுக்கு முன்னாடியே
சொல்லியிருக்கலாம்.

00:24:09.200 --> 00:24:12.200 align:center
எப்படி மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைத்து
ஆஸ்ஹோல் என்று திட்ட முடியும்?

00:24:12.280 --> 00:24:14.800 align:center
என் பையன் என்ன அப்படியா இருக்கிறான்?

00:24:15.040 --> 00:24:16.160 align:center
[ரகுநாத்] சொல்லுங்க.

00:24:17.560 --> 00:24:20.160 align:center
[அபிஷேக்] நான் அந்த அர்த்தத்தில்
சொல்லவில்லை.

00:24:20.240 --> 00:24:22.440 align:center
அதோட அர்த்தம் என்ன என்று பாருங்க முதலில்.

00:24:22.520 --> 00:24:24.160 align:center
அதுக்கு முட்டாள் என்றும் அர்த்தம்.

00:24:24.240 --> 00:24:26.840 align:center
செகரேட்டரி அந்த அர்த்தத்தில் தான்
சொல்லியிருக்காரு.

00:24:26.920 --> 00:24:28.960 align:center
அவர் முட்டாள் என்று சொல்லியிருக்காரு.

00:24:29.040 --> 00:24:32.120 align:center
சரி, அதுக்காக மாப்பிளைளையை ஏன்
முட்டாள்னு சொல்லணும்?

00:24:32.200 --> 00:24:33.920 align:center
அது தவறு தான், ஒத்துக்கிறேன்.

00:24:34.000 --> 00:24:37.320 align:center
செயலாளருக்கு கொஞ்சம் கண்மூடித்தனமா
கோவம் வரும்.

00:24:38.440 --> 00:24:41.080 align:center
என்னையே ஒரு தரம் முட்டாள் என்று சொன்னாரு.

00:24:41.480 --> 00:24:43.000 align:center
-எப்ப?
-வாயை மூடு.

00:24:43.440 --> 00:24:44.720 align:center
அதுக்கு நீங்க என்ன பண்ணீங்க?

00:24:44.800 --> 00:24:46.880 align:center
நானும் அவரை முட்டாள் என்று சொன்னேன்.

00:24:49.560 --> 00:24:52.240 align:center
நல்லது, கணேஷ், அவனை நீயும் முட்டாள் என்று
கூப்பிடு.

00:24:52.320 --> 00:24:53.600 align:center
கூப்பிடு, மகனே.

00:24:53.680 --> 00:24:55.840 align:center
-மகனே, யோசிக்காம கூப்பிடு.
-சொல்லுப்பா, சொல்லு.

00:24:55.920 --> 00:24:58.120 align:center
-அவனைப் பார்த்து சொல்.
-அவனைப் பார்த்து சொல்.

00:24:58.200 --> 00:24:59.480 align:center
சொல்லு மகனே,சொல்லு.

00:24:59.560 --> 00:25:01.080 align:center
இல்லை அப்பா.

00:25:02.800 --> 00:25:05.960 align:center
நான் அவனை முட்டாள் என்று இல்லை
ஆஸ்ஹோல் என்று தான் கூப்பிடுவேன்.

00:25:06.040 --> 00:25:08.080 align:center
எதுவோ ஒன்று, யோசிக்காம சொல்லு.

00:25:08.160 --> 00:25:09.880 align:center
-சொல்லுப்பா, இப்ப என்ன வந்தது.
-சொல்லு...

00:25:09.960 --> 00:25:12.640 align:center
-தயங்காம சொல்லு.
-சத்தமாக சொல்லு.

00:25:12.720 --> 00:25:15.120 align:center
-[பிரிஜ்] அதை சொல், சீக்கிரம்.
-[ப்ரஹலாத்] சொல்லுப்பா அதை.

00:25:15.200 --> 00:25:16.720 align:center
-சொல்லு.
-சொல்.

00:25:17.280 --> 00:25:18.720 align:center
-சொல்லு அதை.
-சத்தமாக சொல்.

00:25:18.800 --> 00:25:21.080 align:center
-சத்தமாக சொல்.
-கத்தி சொல்.

00:25:21.160 --> 00:25:23.000 align:center
அதை சீக்கிரம் சொல்.

00:25:23.080 --> 00:25:24.720 align:center
ஆஸ்ஹோல்.

00:25:24.800 --> 00:25:27.000 align:center
[கணேஷ்] அபிஷேக் ஒரு ஆஸ்ஹோல்.

00:25:27.080 --> 00:25:29.160 align:center
[பர்மேஸ்வர்] அவன் ஒரு முழு ஆஸ்ஹோல்.

00:25:29.240 --> 00:25:31.800 align:center
-[பிரிஜ்] அவன் ஒரு முழு ஆஸ்ஹோல்.
-[ப்ரஹலாத்] ஆஸ்ஹோல்.

00:25:31.880 --> 00:25:33.120 align:center
-இப்ப மகிழ்ச்சி தானே.
-ஆஸ்ஹோல்.

00:25:33.200 --> 00:25:35.120 align:center
-மகிழ்ச்சி.
-வா மகனே.

00:25:35.200 --> 00:25:37.400 align:center
-எல்லாருக்கும் இப்ப மகிழ்ச்சி.
-வாங்க போகலாம்.

00:25:37.480 --> 00:25:38.760 align:center
நல்ல நேரம் ஓடிக்கிட்டே இருக்கு.

00:25:38.840 --> 00:25:40.800 align:center
-ரகுநாத் சார், வாங்க, போகலாம்.
-வாங்க, போகலாம்.

00:25:40.880 --> 00:25:42.320 align:center
நல்லது, வாங்க போகலாம்.

00:25:42.400 --> 00:25:43.600 align:center
அப்பா, இருங்க.

00:25:44.840 --> 00:25:45.960 align:center
நான் போகிறேன்.

00:25:48.240 --> 00:25:51.640 align:center
எனக்கு, அவன் நாற்காலியும் வேண்டும்.

00:25:52.080 --> 00:25:54.400 align:center
[சோகம் இழையோடும் மெல்லிய இசை]

00:26:00.480 --> 00:26:01.600 align:center
இதுவா?

00:26:04.200 --> 00:26:05.240 align:center
ஆமாம்.

00:26:09.800 --> 00:26:11.880 align:center
[சோகம் இழையோடும் மெல்லிய இசை]

00:26:19.720 --> 00:26:22.040 align:center
[நாற்காலி வைக்கப்படும் ஓசை]

00:26:22.120 --> 00:26:25.160 align:center
செகரேட்டரி சார், நீங்க மாப்பிள்ளையை
அவமானப்படுத்திட்டிங்க.

00:26:25.240 --> 00:26:28.200 align:center
அவரை சாந்தப்படுத்த குறைந்தது இதை
நீங்க செய்யத்தான் வேண்டும்.

00:26:28.280 --> 00:26:30.760 align:center
நான் இப்ப மார்க்கெட்க்கு போய் திரும்பவும்
ஒரு நாற்காலி வாங்கணும்.

00:26:30.840 --> 00:26:33.560 align:center
செகரேட்டரி சார், நான் அவ்வளவு இரக்கமில்லாத
ஆள் இல்லை.

00:26:33.640 --> 00:26:35.200 align:center
நீங்க புதுசு வாங்கத் தேவையில்லை.

00:26:35.280 --> 00:26:38.600 align:center
நீங்க என் நாற்காலியை எடுத்துக்கலாம்.
அதில் பஞ்சு இருக்கை இருக்கு.

00:26:38.680 --> 00:26:41.080 align:center
-ஆனா, சார்...
-என் நாற்காலியை எடுங்க. இறுதி முடிவு.

00:26:41.160 --> 00:26:42.720 align:center
நீங்க எதுல உட்காருவீங்க.

00:26:42.800 --> 00:26:45.720 align:center
-நான் உட்கார்ந்துப்பேன்.
-அவரைப் பற்றி கவலைப்படாதீங்க.

00:26:45.800 --> 00:26:47.320 align:center
புது நாற்காலியை அவர் வாங்கிப்பாரு.

00:26:47.400 --> 00:26:48.440 align:center
அவர் பெரிய பணக்காரர்.

00:26:48.520 --> 00:26:51.360 align:center
[ப்ரஹலாத்] நூற்றி ஐம்பது ஏக்கர் நிலம்,
மாடுங்க, கற்பனை பண்ணுங்க.

00:26:51.560 --> 00:26:53.520 align:center
செகரேட்டரி சார், இந்த கதை முடிஞ்சிட்டு.

00:26:53.600 --> 00:26:54.960 align:center
பாருங்க, அவங்க எல்லாரும் வராங்க.

00:26:55.040 --> 00:26:57.120 align:center
[இசைக்குழு இசை ஒலிக்கிறது]

00:27:07.880 --> 00:27:09.880 align:center
[பலரின் பேச்சு குரல்கள்]

00:27:13.720 --> 00:27:16.360 align:center
-[பட்டாசு வெடிக்கும் ஓசை]
-[பலரின் பேச்சு குரல்கள்]

00:27:18.400 --> 00:27:20.720 align:center
[இசைக்குழு இசை ஒலிக்கிறது]

00:27:20.800 --> 00:27:22.480 align:center
[பட்டாசு வெடிக்கும் ஓசை]

00:27:33.960 --> 00:27:36.320 align:center
[தனிமையை உணர்த்தும் இசை]

00:27:39.680 --> 00:27:42.320 align:center
[பட்டாசு வெடிக்கும் ஓசை]

00:27:53.360 --> 00:27:55.560 align:center
[சோகமான இசை]

00:28:27.680 --> 00:28:29.800 align:center
[மெல்லிய இசை]

00:28:42.680 --> 00:28:45.440 align:center
[பிரிஜ்] ஒவ்வொரு நாற்காலிக்கும் ஒரு
வாழ்நாள் காலம் இருக்கு.

00:28:45.520 --> 00:28:50.120 align:center
அது உங்க தலைமேல உட்கார்ந்து வருது.

00:28:50.200 --> 00:28:53.800 align:center
அப்புறம், அது மேல உங்களை உட்கார
அனுமதிக்கும்,

00:28:53.880 --> 00:28:56.240 align:center
இல்லை இரத்த களரியை கூட ஏற்படுத்தும். பாரு.

00:28:57.360 --> 00:29:01.320 align:center
செகரேட்டரி சார், குளிர்ந்த பியர் இருக்கு.
வரீங்களா.

00:29:01.400 --> 00:29:03.520 align:center
[ப்ரஹலாத்] செகரேட்டரி சார் இங்கே
என்ன பண்ணுறாரு?

00:29:04.680 --> 00:29:09.320 align:center
சார், அந்த நாற்காலி
நீங்க வாங்கினது மாதிரியே இருக்கு.

00:29:10.400 --> 00:29:11.480 align:center
இல்லையா?

00:29:13.840 --> 00:29:15.040 align:center
நாம செங்கல்லை எண்ணுவோம்.

00:29:16.920 --> 00:29:20.680 align:center
70, 71, 72, 73, 74, 75, 76...

00:29:22.400 --> 00:29:24.400 align:center
[நிறைவு தீம் மியூசிக்]
ம்.

