WEBVTT

00:11.053 --> 00:12.596
நான்ஸியின் மரணத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு

00:20.270 --> 00:21.939
- ஐ லவ் யூ.
- ஐ லவ் யூ.

00:32.950 --> 00:35.494
உன் நிஜ பக்கத்தை நான் பார்த்திருக்கிறேன்.
அதை என்னால் பகிர முடியும்.

00:51.301 --> 00:52.469
சே!

00:58.517 --> 00:59.768
நான் உன்னைப் பார்க்கணும்.

01:42.311 --> 01:44.313
ஆரமின்ட்டா ஹால் எழுதிய
புத்தகத்தைத் தழுவியது

01:53.113 --> 01:58.076
முக்கிய செய்தி - டேஷ்கேமில்
கொலையாளியென சந்தேகிக்கப்படுபவர் காணப்பட்டார்

02:01.246 --> 02:02.497
திருமதி. சிம்ப்ஸன்.

02:03.874 --> 02:06.292
சட்ட உதவிக்கு நான் சொன்னவங்க.
அவங்க திறமையானவங்க.

02:06.293 --> 02:08.835
இன்னைக்கு ராத்திரிக்கு தங்குறதுக்கு
உங்களுக்கு உதவி வேணும்னா,

02:08.836 --> 02:10.672
நாங்க அதுக்கு ஏற்பாடு பண்ண முடியும்.

02:11.840 --> 02:13.716
ஹாவர்ட், நான் சொல்றதைக் கேளுங்க.

02:13.717 --> 02:15.718
- நீ பெரிய தப்பு பண்ணிட்ட.
- எதுவும் பேசாதீங்க.

02:15.719 --> 02:17.595
- அது நானில்ல.
- என்னோட கிளையன்ட் குழந்தைங்களை

02:17.596 --> 02:19.013
- கூட்டிப் போக வந்திருக்கார்.
- என்ன?

02:19.014 --> 02:21.182
அது பிரச்சினை இல்ல.
இங்க தான் இருக்காங்க.

02:21.183 --> 02:23.059
போலீஸை எலனார் கூப்பிட்டிருக்கணும்.

02:23.060 --> 02:24.560
நான் எதுவும் சொல்லல.

02:24.561 --> 02:26.312
நீ நம்ம பசங்களைத் திரும்பப் பார்க்க முடியாதப்படி
பண்ணப் போறேன்.

02:26.313 --> 02:29.315
இல்ல, அது முடியாது.
அவங்களுக்கு நான் வேணும். அவங்களுக்கு அம்மா வேணும்.

02:29.316 --> 02:30.816
ஹே, பசங்களா.

02:30.817 --> 02:32.986
- இப்ப எங்க போறோம்?
- வீட்டுக்கு.

02:34.446 --> 02:36.030
ஹாய், செல்லம். ஒண்ணுமில்ல.

02:36.031 --> 02:37.657
- என்னை மன்னிச்சிடு.
- அம்மா வரலையா?

02:37.658 --> 02:39.367
அவங்க கொஞ்சம் கேள்விக்கு பதில் சொல்லணும்.
வா, செல்லம்.

02:39.368 --> 02:41.369
ஹாவர்ட், ப்ளீஸ். கெஞ்சிக் கேட்கிறேன். ப்ளீஸ்.

02:41.370 --> 02:43.871
- இதைப் பண்ணாதீங்க.
- நான் பண்ணல. நீதான் பண்ண.

02:43.872 --> 02:44.957
நானில்ல. நீ.

02:50.212 --> 02:52.339
- அம்மா!
- பரவாயில்ல, செல்லம்.

03:04.268 --> 03:05.602
எடு, கேன்ஸ். எடு.

03:08.939 --> 03:10.064
மிஸ். புஷே.

03:10.065 --> 03:11.732
என்ன எழவு நடக்குது?

03:11.733 --> 03:13.401
ஹாவர்ட் விஷயம் என்ன ஆச்சு?

03:13.402 --> 03:15.528
அவரை கைது பண்ண எதுவும் கிடைக்கல.
அதனால அவரை விட்டுட்டோம்.

03:15.529 --> 03:16.655
சே.

03:17.489 --> 03:19.992
- சே.
- அவர் இல்ல. நீங்க இதை மறந்திருங்க.

03:49.146 --> 03:50.772
எலனார்

04:19.218 --> 04:20.927
கடந்த 12 மணி நேரத்தில,

04:20.928 --> 04:24.889
உள்ளூர் காவல் துறையிடமிருந்து
எங்களுக்கு நம்பத் தகுந்த தகவல்கள் கிடைச்சிருக்கு.

04:24.890 --> 04:27.475
அவங்க திரு. ரீடைக் கண்டுப்பிடிக்க
எங்க கூட சேர்ந்து வேலைப் பார்க்கிறாங்க.

04:27.476 --> 04:31.395
தேடுதலை மாநிலம் முழுக்க விரிவாக்கியிருக்கோம்,
எல்லைகள்ல கண்காணிப்பு போட்டிருக்கோம்.

04:31.396 --> 04:32.522
ஆக, நீங்க அவனை தவற விட்டுட்டீங்க?

04:32.523 --> 04:35.942
பேக்கர்ஸ்ஃபீல்ட்ல அவன் வீட்ல
ஆட்களைப் போட்டிருக்கோம்.

04:35.943 --> 04:39.612
அவன் கடைசியா வேலைப் பார்த்த இடத்துலேயும்
ஆட்கள் போட்டிருக்கோம்.

04:39.613 --> 04:42.281
தகவல் ஃபோன் லைன்ல அவனைப் பார்த்ததா
நிறைய கால்கள் வந்துச்சு,

04:42.282 --> 04:45.201
ஆனால் இதுவரை எதுவும் உருப்படியா இல்ல.

04:45.202 --> 04:46.869
இது வரைக்கும் இதை நீங்க ஏன் பண்ணல?

04:46.870 --> 04:49.288
- திரு. ரீடை நாங்க சந்தேகப் படல.
- சே.

04:49.289 --> 04:51.249
ஏன்னா உங்க வேலைகளைப் பண்ணாம,
என் மனைவியோட கொலை பழியை

04:51.250 --> 04:52.875
என் மேலப் போட ரொம்ப முயற்சிப் பண்ணிட்டிருந்தீங்க.

04:52.876 --> 04:55.670
இந்த சந்திப்பை ஒரு கரிசன அடிப்படையில தான்
போட்டிருக்கோம், சரியா?

04:55.671 --> 04:57.797
அதுவும் தேவையில்லாத கரிசனம்,

04:57.798 --> 05:01.926
ஏன்னா திரு. சிம்ப்ஸன் காவல் துறை மேல வழக்கு
போட்டார்ன்னா எங்களுக்குத் தான் பிரச்சினை.

05:01.927 --> 05:04.304
அது உங்க குடும்பம் கேட்டுகிட்டதால நான் பண்ணேன்.

05:04.972 --> 05:06.890
அதனால், உங்களுக்கு பேசுறதுக்கு ஒண்ணுமில்லேன்னா,

05:08.058 --> 05:09.518
- நாங்க பேசுறோம்.
- மன்னிக்கணும்.

05:10.102 --> 05:13.230
- மேரி சிம்ப்ஸன். இங்க தான் மீட்டிங்…
- ஆமா, ஆமா. ப்ளீஸ் உட்காருங்க.

05:14.898 --> 05:15.982
டிடெக்டிவ்.

05:15.983 --> 05:18.109
நீங்க ரெண்டு பேரும் இங்க இருக்கிறதுக்கு
ஒரே காரணம்,

05:18.110 --> 05:20.486
உங்களுக்கு தான் திருமதி. ஹென்னஸியை
ரொம்ப நாளாத் தெரியும்.

05:20.487 --> 05:22.864
திரு. ரீடுக்கும் திருமதி. ஹென்னஸிக்கும் உள்ள
உறவு பத்தி ஏதாவது

05:22.865 --> 05:25.868
தகவல் கொடுத்தீங்னன்னா
அவனைக் கண்டுப்பிடிக்க உதவியா இருக்கும்.

05:26.952 --> 05:31.914
எங்களுக்குத் தெரிஞ்ச வரை, அவ பல வருஷங்களுக்கு
முன்னாலயே தன் குடும்பத்தோட உறவைத் துண்டிச்சிட்டா.

05:31.915 --> 05:34.751
பத்து இருபது வருஷமா.
அவங்களோட எந்தத் தொடர்பையும் அவ விரும்பல.

05:35.878 --> 05:39.464
திரு. ரீடும், திருமதி. ஹென்னஸியும்
தொடர்பில இருந்திருக்காங்கன்னு நாங்க நம்புறோம்.

05:40.257 --> 05:44.969
திரு. ரீட் வாங்கின, இப்ப ஆக்டிவ் இல்லாத ஒரு ஃபோன்ல
இருந்து இந்த நம்பரைக் கண்டுப்பிடிச்சோம்.

05:44.970 --> 05:48.055
கொலை நடக்கிறதுக்கு அஞ்சு நாளைக்கு முன்னால
அவனை திருமதி. ஹென்னஸி கூப்பிட்டிருக்காங்க.

05:48.056 --> 05:49.932
திரும்பவும் கொலையான அன்னைக்குத்
திரும்ப கூப்பிட்டிருக்காங்க.

05:49.933 --> 05:52.101
எதுக்காக கூப்பிட்டாங்கன்னு எங்களுக்குத்
தெரியாது, ஆனால்…

05:52.102 --> 05:53.936
கொலை பண்ணவனைக் கண்டுப்பிடிக்காம,

05:53.937 --> 05:55.981
இப்ப நான்ஸி மேல பழியைச் சொல்றீங்க?

05:56.940 --> 06:00.277
எங்க கிட்ட வேற எந்த உபயோகமான தகவலும் இல்ல,
எங்களை மன்னிச்சிடுங்க.

06:02.779 --> 06:04.990
ராபர்ட். நில்லு.

06:05.574 --> 06:06.575
என்ன?

06:07.618 --> 06:10.786
இது பார்க்க எப்படி இருக்குன்னு தெரியும்.
நான் ஹாவர்ட் பத்தி சொன்னது தவறில்ல.

06:10.787 --> 06:12.955
ஸ்காட் இதுல எப்படி பொருந்துறான்னு
எனக்குத் தெரியல,

06:12.956 --> 06:14.874
ஒருவேளை அவங்க சேர்ந்து வேலை பார்த்திருக்கலாம்.
அவங்க…

06:14.875 --> 06:17.461
ஸ்காட் தான் அவளைக் கொன்னிருக்கான், சரியா?
ஸ்காட்.

06:18.253 --> 06:19.545
ஹாவர்ட் இல்ல.

06:19.546 --> 06:22.716
உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்குதுன்னு
எனக்குத் தெரியாது, என்னைத் தனியா விட்ருங்க.

06:28.472 --> 06:30.306
- குழந்தைங்க முன்னால அவரை கூட்டிட்டு போனாங்க.
- ம்…

06:30.307 --> 06:31.849
- உனக்குத் தெரியுமா?
- அவங்க இவ்வளவு சீக்கிரம்

06:31.850 --> 06:33.309
- செயல்படுவாங்கன்னு தெரியாது.
- நடந்தது அது தான்.

06:33.310 --> 06:34.393
நடந்ததுக்கு மன்னிச்சுக்கோ.

06:34.394 --> 06:37.188
- நாம ஒண்ணு பேசினோம், ஆனால் நீ வெளியேறிட்ட.
- அவர்கிட்ட குழந்தைங்க இருக்கு, எல்லி.

06:37.189 --> 06:39.232
அவர் என் கிட்ட இருந்து வேற எது எடுத்தாலும்
பரவாயில்ல.

06:39.233 --> 06:42.902
நான் ஒண்ணுமில்ல, நான் ஒரு ஜடம்,
அவங்க இல்லாம எனக்கு மதிப்பே இல்ல.

06:42.903 --> 06:44.904
என்ன சொல்ற நீ?
அவனை அப்படியே தப்பிக்க விடுறதா?

06:44.905 --> 06:46.114
நீ வீடியோவைப் பார்த்தியா?

06:47.824 --> 06:49.910
நாம நினைச்சது தப்பா இருந்தா? ம்?

06:50.661 --> 06:53.287
- நான்ஸியை கொன்னது ஸ்காட்டா இருந்தா?
- நீ அதை நம்புறியா?

06:53.288 --> 06:54.872
- தெரியல!
- மேரி,

06:54.873 --> 06:57.542
அந்த மாத்திரை உன் மூளையை மழுங்கடிச்சிருச்சா?

06:57.543 --> 06:59.460
ஹாவர்ட் ஏறக்குறைய ஒத்துக்கிட்டான்.

06:59.461 --> 07:03.798
மார்கஸையும், பொண்ணுங்களையும்
அவன் கிட்ட விடுறது சரின்னு நினைக்கிறியா?

07:03.799 --> 07:07.094
நீ உனக்குன்னு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திட்டு,
மத்தவங்க ரத்தத்தை உறிஞ்சுறதை நிறுத்துறியா?

07:15.561 --> 07:17.311
நீதிமன்றம் எப்ப போகணும்?

07:17.312 --> 07:18.563
விசாரணை தானே?

07:18.564 --> 07:20.648
குழந்தைங்கள உங்க கிட்ட அனுப்பச் சொல்லி
கேட்கிறதுக்காக.

07:20.649 --> 07:23.192
உங்க கணவர் அதை சீக்கிரமா முடிக்கச் சொல்லி
கேஸ் ஃபைல் பண்ணிருக்கார்.

07:23.193 --> 07:25.070
நீதிபதி டேவிஸ்
செவ்வாய் கிழமைக்கு நாள் குறிச்சிருக்கார்.

07:25.737 --> 07:28.198
அதுக்கு ஆறு நாள் தான் இருக்கு.
வாரக்கணக்கா ஆகும்னு சொன்னீங்க.

07:28.740 --> 07:30.408
- அவர் எப்படி இந்த மாதிரி பண்ணலாம்?
- “உடல்ரீதியா

07:30.409 --> 07:33.452
காயம் ஏற்படலாம்னு அவர் நம்புறதா,”
சொல்றார்.

07:33.453 --> 07:35.830
அம்மாவாலயா? அது அபத்தம்.

07:35.831 --> 07:38.124
சில அவசர காரணங்களையும் சொல்றார்.

07:38.125 --> 07:41.669
அவர் வேலை விஷயமா ஒஹாயோ போறதால,
குழந்தைங்களை கூட்டிப் போகணும்னு சொல்றார்.

07:41.670 --> 07:43.546
- முடியாது.
- ம், அதை நீதிபதி டேவிஸ் முடிவு பண்ணணும்.

07:43.547 --> 07:45.298
இல்ல, இது நியாயமில்ல.

07:45.299 --> 07:46.425
மார்கஸ், உட்கார்.

07:51.930 --> 07:53.307
அவர் அம்மாவுக்கு துரோகம் பண்றவர்.

07:54.183 --> 07:55.517
பல வருஷமா.

07:56.977 --> 07:58.478
எனக்குத் தெரியாதுன்னு நினைக்கிறீங்க.
எனக்குத் தெரியும்.

08:00.105 --> 08:01.106
செல்லம்…

08:01.982 --> 08:04.775
எங்க அப்பா, அவர்
நல்லவர் மாதிரி நடிக்க முயற்சி பண்றார்.

08:04.776 --> 08:05.860
அவர் எல்லாரையும் ஏமாத்திட்டிருக்கார்.

08:05.861 --> 08:07.529
அவர் சுயரூபம் யாருக்கும் தெரியாது.

08:09.406 --> 08:11.240
நாங்க பண்றதுக்கு ஏதாவது இருக்கணும்.

08:11.241 --> 08:14.077
அவர் உங்க கிட்ட மோசமா நடந்துகிட்டதுக்கு
ஏதாவது ஆதாரம் இருக்கா?

08:14.745 --> 08:15.746
இல்ல. அவர்…

08:17.789 --> 08:20.000
அதுல தெளிவானவர்.

08:22.503 --> 08:24.838
ஆனால், அவர் எதையும் செய்ய துணிஞ்சவர்.

08:25.506 --> 08:27.883
நீங்க எதையாவது போலீஸ் கிட்ட
புகார் பண்ணிருக்கீங்களா?

08:30.427 --> 08:32.470
- இல்ல.
- கஷ்டம்.

08:32.471 --> 08:34.764
சமீபத்திய புகார் எதுவும் இல்லாம,

08:34.765 --> 08:37.600
நாம ஹாவர்டோட பலவீனங்களை
மொத்தமா தவிர்க்கிறது நல்லது.

08:37.601 --> 08:38.683
உங்கள் பலங்கள் மேல கவனம் செலுத்துங்க.

08:38.684 --> 08:40.436
உங்க குணத்தைப் பத்தி சொல்றதுக்கு
ஒரு அற்புதமான சாட்சி வேணும்.

08:40.437 --> 08:41.771
நான் அதை பண்ண முடியும்.

08:41.772 --> 08:43.481
குடும்பத்துக்கு வெளிய இருந்து.

08:43.482 --> 08:45.733
உங்களை பல வருஷங்களா தெரிஞ்ச ஒருத்தரா இருந்தா
நல்லது.

08:45.734 --> 08:47.653
உங்களுக்கு ஆதரவா பேசுறதுக்கு
உங்களுக்கு யார் இருக்கா?

09:08.924 --> 09:09.925
குட் மார்னிங்.

09:34.616 --> 09:36.410
- ஹாய், பெர்னார்ட்.
- மிஸ் எல்லி.

09:36.952 --> 09:38.871
- ரொம்ப நாளாச்சு.
- உங்களைப் பார்த்ததில சந்தோஷம்.

09:39.955 --> 09:41.540
- வெல்கம்.
- நன்றி.

09:47.129 --> 09:50.716
அவங்களுக்கு மூட விருப்பமில்லேன்னா,
அப்ப நாம மத்தியஸ்துக்குத் தான் போகணும்.

09:52.551 --> 09:53.677
ஆமா.

09:57.681 --> 09:59.224
அப்ப அவங்கள கையெழுத்து போட வையுங்க.

10:00.142 --> 10:01.226
நன்றி.

10:06.190 --> 10:07.191
ஹாய்.

10:08.358 --> 10:09.359
அது என்ன…

10:10.485 --> 10:11.653
ஷாகா இல்ல பாப் கட்டா?

10:12.738 --> 10:14.239
நீளத்தை வச்சு சொல்ல முடியல.

10:17.659 --> 10:20.370
உண்மையில பிக்ஸி கட்.

10:21.997 --> 10:22.998
உனக்குப் பொருத்தமா இருக்கு.

10:24.583 --> 10:26.543
ஏதாவது புதுசா முயற்சி பண்ண விரும்பினேன்.

10:32.633 --> 10:35.552
நீ வரேன்னு உன் அண்ணன் சொன்னப்போ
எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.

10:36.553 --> 10:37.846
அவன் கிண்டல் பண்றான்னு நினைச்சேன்.

10:38.347 --> 10:39.890
நீ வழக்கமா ஓடுறதா இருந்தா, அது…

10:40.891 --> 10:42.559
எப்பவும் என் பக்கமா இருக்காது.

10:44.811 --> 10:45.854
ஆமா.

10:54.029 --> 10:55.781
எனக்கு வேற எங்க போறதுன்னு தெரியல.

10:57.616 --> 11:02.162
எனக்கு போறதுக்கு இடமே இல்ல.

11:21.974 --> 11:23.892
திரு. ஹென்னஸி.
உங்கள பார்க்க ஒருத்தர் வந்திருங்காங்க.

11:24.393 --> 11:25.727
இப்ப முடியாது, அடேல்.

11:28.522 --> 11:29.523
சே.

11:31.275 --> 11:32.401
ஹே.

11:34.695 --> 11:35.779
நீ வேற வீட்டுக்குப் போறியா?

11:38.156 --> 11:39.782
சும்மா ரீடெக்கரேட் பண்றேன்.

11:39.783 --> 11:42.285
இதை ஒரு களிமண் பொருட்கள் செய்யும் ஸ்டூடியோவா
மாத்தலாமான்னு நினைச்சேன்.

11:42.286 --> 11:44.621
அல்லது ஏதாவது தியானம் பண்ற இடமா.

11:45.789 --> 11:47.499
ஆமா, பார்க்க அப்படித் தான் இருக்கு.

11:49.459 --> 11:50.586
உனக்கு ஏதாவது உதவி வேணுமா?

11:51.170 --> 11:52.546
குழந்தைங்க யார்கிட்ட இருக்கணும்ங்கிற கேஸ்ல

11:53.422 --> 11:55.924
என்னோட குணத்துக்கு ஒரு சாட்சி வேணும்.

11:58.010 --> 12:02.681
என்னை ரொம்ப நாளா தெரிஞ்ச ஒருத்தர்,
என்னை ஒரு நல்ல அம்மான்னு சொல்றதுக்கு.

12:03.265 --> 12:04.348
கடவுளே.

12:04.349 --> 12:07.685
என் கிட்ட வர அளவுக்கு உனக்கு
வேற யாருமில்லேன்னு நினைக்கிறேன்.

12:07.686 --> 12:08.811
என்ன? இல்ல, ராபர்ட்.

12:08.812 --> 12:13.566
நான் குழந்தைகளை எப்படி பார்த்துக்கிறேன்னு உனக்குத்
தெரியும், இல்ல நான்ஸி மூலமா தெரியும், இல்ல…

12:13.567 --> 12:14.860
ம், எலனாருக்கு என்ன ஆச்சு?

12:15.611 --> 12:16.820
நாங்க பேசிக்கிறது இல்ல.

12:19.281 --> 12:20.949
அதை நான் நம்பல.

12:21.450 --> 12:23.619
நம்பியாகணும்.
எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சது.

12:24.745 --> 12:28.331
உன்னோட கணவன் பத்தி
அவ அபத்தமான கதையோட இங்க வரும்போது…

12:28.332 --> 12:29.916
ரொம்ப பயந்நு போய் இருந்தா.

12:29.917 --> 12:30.918
அதான் உனக்காக.

12:31.460 --> 12:32.920
அப்படியா?

12:35.839 --> 12:37.799
உனக்கு என்னை எப்பவுமே பிடிக்காது.

12:38.300 --> 12:39.760
ஆரம்பத்தில இருந்தே.

12:40.552 --> 12:41.553
ஏன்?

12:45.891 --> 12:48.434
சொல்லு. உனக்கு உதவணுமா வேண்டாமா?

12:48.435 --> 12:50.269
ராபர்ட், உன்னைப் பிடிக்காதுன்னு இல்ல…

12:50.270 --> 12:52.355
சொல்லு. சுத்தி வளைக்காத.

12:52.356 --> 12:54.024
எனக்கு இந்த காயப்படாம பேசுறது எல்லாம்
கடுப்பாகுது.

12:55.400 --> 12:57.110
சொல்லு, மேரி. உண்மையா இரு.

12:57.945 --> 12:58.946
எனக்குப் புரியவே இல்ல.

13:03.700 --> 13:05.869
ஏன் அவங்க ரெண்டு பேரும்
உன் மேல அப்படி விழுந்து கிடந்தாங்கன்னு.

13:06.453 --> 13:08.413
நீ உயரமா…

13:09.498 --> 13:11.290
அழகா தான் இருக்க, ஆனால்…

13:11.291 --> 13:12.667
ஆனால் என்ன?

13:12.668 --> 13:13.794
நீ ஒரு கிளை.

13:14.545 --> 13:15.546
ஒரு மரம் இல்ல.

13:16.129 --> 13:18.422
உனக்குக் கொடுக்கப்பட்டது தான் உன் கிட்ட இருக்கு.

13:18.423 --> 13:22.219
மத்தவங்க கிட்ட இருந்து உள்ள எதிர்பார்ப்புகளின்
ஒரு கூட்டு.

13:24.263 --> 13:25.305
நீ…

13:26.723 --> 13:28.392
நிஜமான நீ…

13:31.937 --> 13:33.313
அப்படின்னு ஒண்ணு இல்லவே இல்ல.

13:35.315 --> 13:38.151
ராபர்ட், நாலு நாட்கள்ல…

13:40.153 --> 13:42.489
நான் நீதிபதிக்கு முன்னால நிக்கணும்…

13:44.867 --> 13:45.993
அவங்க

13:46.952 --> 13:51.331
நான் குழந்தைகளைத் திரும்ப பார்க்க முடியுமான்னு
முடிவு பண்ணுவாங்க.

13:53.584 --> 13:54.834
திரு. ஹென்னஸி.

13:54.835 --> 13:56.170
போலீஸ் இங்க வந்திருக்காங்க, சார்.

13:58.881 --> 14:02.633
இன்னைக்கு காலைல 9:13 மணிக்கு,
ஸ்காட் ரீடை கைது பண்ணிட்டோம்.

14:02.634 --> 14:04.928
- பொறுங்க… அவனை கண்டுப்பிடிச்சிட்டீங்களா?
- ஆமா.

14:06.597 --> 14:07.598
கடவுளே.

14:09.933 --> 14:12.226
நன்றி. அதாவது, அது…

14:12.227 --> 14:14.812
- உண்மையிலேயே, நன்றி. நான்…
- இன்னும் இருக்கு.

14:14.813 --> 14:17.982
கைது பண்ணப் போது, திரு. ரீட் கிட்ட
திருமதி. ஹென்னஸியோட ஃபோன் இருந்துச்சு.

14:17.983 --> 14:19.817
அது சம்பவம் நடந்த இடத்துல கிடைக்கல தானே?

14:19.818 --> 14:21.320
ஃபாரென்சிக்ஸ் அதை அடையாளம் கண்டுப்பிடிச்சிட்டாங்க.

14:23.113 --> 14:24.156
அப்ப…

14:25.324 --> 14:26.449
அவ்வளவு தான். எல்லாம் முடிஞ்சது.

14:26.450 --> 14:30.162
இன்னும் பண்ண வேண்டியது நிறைய இருக்கு
ஆனால் நம்பிக்கையா இருக்கோம்.

14:31.246 --> 14:32.580
அவர் ஒத்துக்கிட்டாரா?

14:32.581 --> 14:35.417
அதான் சொன்னேனே, நாங்க நம்பிக்கையா இருக்கோம்.

14:36.376 --> 14:38.836
சரி, இப்ப என்ன நடக்கும்?

14:38.837 --> 14:41.589
அவர் நீதிபதிக்கு முன்னால நிறுத்தப்பட்டார்,
அவரை ரிமாண்டுக்குக் கூட்டிப் போறோம்.

14:41.590 --> 14:43.217
நான் கண்டிப்பா…

15:01.610 --> 15:03.153
- ஹலோ?
- திருமதி. சிம்ப்ஸன்?

15:03.654 --> 15:05.571
- யாரிது?
- ஆலிவர் நாக்.

15:05.572 --> 15:06.990
நான் ஸ்காட் ரீடோட வக்கீல்.

15:09.409 --> 15:10.661
என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது?

15:11.578 --> 15:14.247
என்னோட கிளையன்ட் போலீஸ் கிட்ட
தான் அப்பாவின்னு சொல்றாரு,

15:14.248 --> 15:16.083
ஆனால் அவங்க நம்புற மாதிரி தெரியல.

15:17.292 --> 15:18.710
அவர் உங்க கிட்ட பேசணும்னு சொன்னார்.

15:28.178 --> 15:30.597
நான் ஸ்காட் ரீடோட வக்கீல்.
அவசரம், தயவுசெய்து கூப்பிடவும்!

15:35.185 --> 15:36.686
உட்கார்.

15:36.687 --> 15:40.690
ஆக்கியும், உப்பு மீனும்,
வாழைப்பழமும், கீரையும்.

15:40.691 --> 15:42.942
- உனக்குப் பிடிச்சது.
- நீங்க சமைச்சிருக்கீங்களே.

15:42.943 --> 15:44.152
உட்கார்.

15:48.115 --> 15:49.949
பாரு, உனக்கு வேண்டாம்னா,
நாம…

15:49.950 --> 15:51.784
இல்ல, இல்ல. நன்றி.

15:51.785 --> 15:54.162
இல்ல. எனக்கு… எனக்கு ஒரு கால் வந்துச்சு.

15:55.581 --> 15:57.875
நான்ஸியோட சித்தப்பாவை கைது பண்ணியிருக்காங்க.

15:59.001 --> 16:00.960
அவர் என் கிட்ட பேசணுமாம்.

16:00.961 --> 16:02.420
அதை நீ விரும்பலையா?

16:02.421 --> 16:05.882
இல்ல, இந்த ஆளு
என்னோட நெருங்கிய தோழியைக் கொன்னிருக்கலாம்.

16:05.883 --> 16:10.261
அதனால, நேர்ல போய் அவர் கண்ணைப் பார்த்து,
ஏன் பண்ணாருன்னு கேக்கணும்னு தோணுது, ஆனால்…

16:10.262 --> 16:11.638
ஆனால் என்ன?

16:12.222 --> 16:13.223
என்னால முடியாது.

16:14.433 --> 16:15.684
என்னால திரும்பப் போக முடியாது.

16:16.435 --> 16:21.981
ஒவ்வொரு முறையும் சரியான விஷயத்தைப் பண்ண
முயற்சிக்கும் போது, யாருக்கோ கெட்டது நடக்குது.

16:21.982 --> 16:25.985
எலனார், உன் நெருங்கின தோழியோட கணவன் கூட
படுக்கிறது,

16:25.986 --> 16:27.863
உனக்கு எந்த விதத்தில சரியான விஷயமா தெரியுது?

16:29.239 --> 16:32.909
வாவ். நீங்க எப்பவுமே இப்படித் தான்
கொடூரமா நடந்துக்கணுமா?

16:32.910 --> 16:35.077
ம், என்னை என்னப் பண்ண சொல்ற?
பூசி மொழுகச் சொல்றியா?

16:35.078 --> 16:36.246
ஆமா. ஆமா.

16:36.788 --> 16:37.872
ஒரு முறையாவது,

16:37.873 --> 16:41.918
நீங்க என் பக்கமா இருக்கீங்கன்னு நடிச்சா கூட
நல்லா இருக்கும்.

16:41.919 --> 16:42.920
ஏன்னா…

16:43.629 --> 16:45.130
அதனால தான் நான் இங்க இருந்து போனேன்.

16:48.133 --> 16:50.761
உனக்கும் ராபர்ட்டுக்கும் இடையில நடந்தது

16:51.595 --> 16:53.055
நீ யாருன்னு வரையறுக்கப் போறதில்ல.

16:53.722 --> 16:54.848
அது தெரியாம பண்ண ஒரு தவறு.

16:55.349 --> 16:57.183
அதுக்கு நீ தண்டனை அனுபவிச்சிட்ட.

16:57.184 --> 16:58.769
நான் உன்னைப் பார்த்திட்டிருக்கேன்,

16:59.770 --> 17:01.188
நீ தண்டனை அனுபவிச்சிட்ட.

17:03.690 --> 17:04.691
அம்மா…

17:05.983 --> 17:07.653
அது நிஜம்னு நம்பினேன்.

17:08.945 --> 17:10.404
உண்மையிலேயே.

17:10.405 --> 17:13.658
அவனுக்கு என்னையே நான் முழுசா கொடுத்தேன்.

17:13.659 --> 17:15.617
ஆனால் அதை நான் திரும்பப் பண்ண விரும்பல.

17:15.618 --> 17:18.788
அப்படி யார்கூடவும்
திரும்ப உணரவும் விரும்பல.

17:18.789 --> 17:19.957
அப்படி பேசாத.

17:20.540 --> 17:22.291
உன் உணர்வுகளை அடைச்சு வைக்காத.

17:23.961 --> 17:28.549
உங்க அப்பா இறந்தப்ப,
நான் அப்படி தான் இருந்தேன்.

17:30.717 --> 17:32.636
என்னை மாதிரி இருக்காத.

17:34.346 --> 17:35.514
ராபர்ட் உனக்கானவன் இல்ல.

17:36.557 --> 17:38.392
அவ்வளவு தான்.

17:39.768 --> 17:41.353
ஆனால் உன் தோழிங்க…

17:41.937 --> 17:43.354
எலனார்,

17:43.355 --> 17:49.069
நேசிக்கவும், உன்னோட வாழ்க்கையைப் பகிரவும்,
நீ ஆட்களைக் கண்டுப்பிடிச்சிருக்க.

17:49.862 --> 17:52.572
நிச்சயமா, நான் அதை உனக்குக் கத்துத் தரல,

17:52.573 --> 17:55.534
அதை நீயா தான் கண்டுப்பிடிச்ச.

17:56.743 --> 17:57.744
அப்புறம் இந்த மக்கள்,

17:58.745 --> 18:00.998
நீ உண்மையிலேயே அவங்களை நேசிச்சா,

18:02.332 --> 18:04.585
நீ அதை அவங்க கிட்ட காண்பிக்கணும்.

18:06.545 --> 18:08.337
அப்படின்னா,
நீ அங்க திரும்பப் போகணும்.

18:08.338 --> 18:11.675
திரும்பப் போய், இதை எல்லாத்தையும் முடிச்சு வை.

18:12.718 --> 18:15.304
ஏன்னா நீ போகலைன்னா,
நீ என்னவா ஆகக்கூடாதுன்னு

18:16.471 --> 18:18.223
நினைக்கிறியோ அது நடந்துடும்.

18:19.725 --> 18:23.270
தான் ரொம்பவும் நேசிக்கிற ஒருத்தரோட
உட்கார்ந்து நிம்மதியா சாப்பிடக் கூட முடியாத

18:24.980 --> 18:27.357
உணர்ச்சியில்லாத ஒரு பெண்ணாயிடுவ.

18:37.284 --> 18:38.826
என்ன பண்ணணும்னு சொல்ற?

18:38.827 --> 18:40.370
ஆமா, பேபி.

18:43.498 --> 18:45.250
சரி. ம், அப்படின்னா நீ அவனைக் கூப்பிடு.

19:02.935 --> 19:04.603
- ஹலோ.
- உட்காருங்க.

19:07.189 --> 19:08.815
அவர் இப்ப வந்திடுவார்.

19:30.754 --> 19:31.839
நான் அவளைக் கொல்லல.

19:34.508 --> 19:35.717
அதை போலீஸ் கிட்ட சொன்னேன்.

19:36.802 --> 19:38.302
அவங்க என்னை நம்ப மாட்டேங்கிறாங்க.

19:38.303 --> 19:40.721
நான் அவ பின்னால போன மாதிரி
உருவாக்கப் பார்க்கிறாங்க.

19:40.722 --> 19:44.101
ஆனால் இறக்கிறதுக்கு ரெண்டு நாள் முன்னால
அவ என்னைக் கூப்பிட்டா.

19:50.816 --> 19:53.485
அட, இது உண்மையிலேயே நான்ஸி தானா?

19:56.572 --> 19:58.323
இன்னும் அதே சென்ட்டை யூஸ் பண்றீங்க.

20:00.492 --> 20:01.493
பியர்.

20:06.832 --> 20:07.958
மோதிரம் நல்லா இருக்கு.

20:16.925 --> 20:17.926
என்ன சொல்லு?

20:19.511 --> 20:21.388
இப்படியே முறைச்சிட்டே இருக்கப் போறோமா?

20:28.520 --> 20:29.813
நான் அப்ப ஒரு குழந்தை.

20:32.816 --> 20:34.483
நீங்க என் கிட்ட நடந்துக்கிட்டது…

20:34.484 --> 20:35.652
நான் ஒரு குழந்தை.

20:36.862 --> 20:37.945
நான் வந்தது தப்பு.

20:37.946 --> 20:40.656
இல்ல, நீங்க இப்ப உட்கார்ந்து
நான் பேசுறதைக் கேட்கப் போறீங்க.

20:40.657 --> 20:41.658
சரி, சரி, அமைதி, சரியா?

20:46.747 --> 20:48.373
ஆமா அவ எல்லாத்தையும் சொன்னா.

20:48.874 --> 20:50.708
உன் கணவனோட உறவு வச்சிட்டிருந்தது.

20:50.709 --> 20:52.377
எல்லார்கிட்டேயும் அதை பத்தி
பொய் சொல்லிட்டிருந்தது.

20:53.545 --> 20:54.963
அவன் மோசமானவன்னு சொன்னா.

20:55.631 --> 20:57.174
அவ வேண்டாம்னு சொன்னதை
அவனால ஏத்துக்க முடியல.

20:58.717 --> 21:01.219
அவளுக்கு, ம், டிரெஸ் போடாத படங்களை
அனுப்பி வச்சிருக்கான்.

21:01.220 --> 21:02.429
அவ கணவன் அதைப் பார்த்துட்டான்.

21:03.472 --> 21:05.599
அவளுக்கு பேசுறதுக்கு யாரும் இல்ல போல.

21:06.475 --> 21:07.559
அதனால தான் என்னைக் கூப்பிட்டிருக்கா.

21:09.770 --> 21:13.273
ஒரு ரெண்டு நாள் கழிச்சு திரும்பக் கூப்பிட்டு,
அவ ஏதோ…

21:14.399 --> 21:15.525
ஏதோ பிறந்த நாள்…

21:15.526 --> 21:17.276
இல்ல. இல்ல, மன்னிக்கணும்.

21:17.277 --> 21:19.403
இது… இது எதுவும் விளங்கல.

21:19.404 --> 21:21.823
அவ உங்கள கூப்பிட வாய்ப்பே இல்ல.
அவ உங்கள வெறுத்தா.

21:22.574 --> 21:24.158
நீங்க அவ வாழ்க்கையை அழிச்சிட்டீங்க.

21:24.159 --> 21:26.244
அவளுக்கு என்னோட பாதுகாப்பு தேவைப்பட்டுச்சு.

21:26.245 --> 21:27.328
எப்படி?

21:27.329 --> 21:29.247
நீங்க எப்படி அவள பாதுகாக்க இருந்தீங்க?

21:29.248 --> 21:30.541
அவனை பயமுறுத்தச் சொல்லி என்கிட்ட கேட்டா.

21:31.917 --> 21:33.584
கொஞ்சம் அடிச்சு மிரட்டச் சொன்னா.

21:33.585 --> 21:35.170
அப்ப தான் அவன் அவளைத் தொந்தரவு பண்ணமாட்டான்னு.

21:35.671 --> 21:37.380
நானும் அதை பண்ண இருந்தேன்.

21:37.381 --> 21:38.674
அந்த அளவுக்கு நான் அவளுக்கு
கடமைப்பட்டிருக்கேன்.

21:49.434 --> 21:52.437
நான்ஸி இறந்த அன்று இரவு

22:07.119 --> 22:08.786
- இங்க வா.
- நிறுத்…

22:08.787 --> 22:09.788
ஹே.

22:10.414 --> 22:12.498
- இதை நிப்பாட்டணும்.
- ஹலோ?

22:12.499 --> 22:13.834
நான் அவகிட்ட சொல்லப் போறேன்.

22:14.793 --> 22:16.419
- விளையாடுறியா?
- நீ எங்க இருக்க?

22:16.420 --> 22:18.504
அவ என் கிட்ட திரும்ப பேசாம போகலாம்,
ஆனால் அவளுக்கு

22:18.505 --> 22:19.673
- உண்மை தெரியணும்.
- நான் பேசுறது கேட்குதா?

22:23.510 --> 22:24.636
சே.

22:45.365 --> 22:47.868
அவன்… அவ உடம்பு மேல…

22:48.493 --> 22:49.494
சாய்ஞ்சிட்டிருந்தான்.

22:50.871 --> 22:54.082
கையை வச்சு
ஏதோ… ஏதோ பண்ணிட்டிருந்தான். எனக்குத் தெரியல.

22:56.710 --> 22:58.754
நீங்க அப்படியே விட்டுட்டு போயிட்டீங்களா?

22:59.463 --> 23:01.380
நான் என்ன பண்ண முடியும்?

23:01.381 --> 23:02.549
உதவிக்கு ஆளை கூப்பிட்டிருக்கணும்.

23:04.051 --> 23:05.301
போலீஸ் கிட்ட சொல்லியிருக்கணும்.

23:05.302 --> 23:07.304
நான் என்ன பண்ணணும்னு நீ சொல்றியா?

23:08.138 --> 23:10.515
உன் கணவன் உன் நெருங்கின தோழியை கொன்னுட்டான்.

23:10.516 --> 23:12.600
நீ அதுக்கு என்ன பண்ணப் போற?

23:12.601 --> 23:15.521
ஏன்னா நான் அவங்க கிட்ட அதை சொன்னா
யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க.

23:19.650 --> 23:20.651
நீ எங்க போற?

23:21.276 --> 23:22.361
போலீஸ் ஸ்டேஷனுக்கு.

23:23.028 --> 23:24.154
நானும் கூட வரேன்.

23:25.113 --> 23:27.157
சிட்டி ஹால்

23:49.346 --> 23:51.597
ஹென்னஸி வழக்குல ஏதோ
அவசர தகவல் இருக்குன்னு சொன்னாங்க.

23:51.598 --> 23:53.891
- உனக்கு தேவைப்படும்னு நினைச்சேன்.
- இப்ப பத்திகையாளர் சந்திப்புக்குப் போகணும்.

23:53.892 --> 23:55.434
- சீக்கிரமா சொல்லுங்க.
- ஸ்காட்டைப் பார்க்கப் போனோம்.

23:55.435 --> 23:57.854
- எனக்குத் தெரியும்.
- டிடெக்டிவ், அவர் உண்மையைச் சொல்றார்.

23:57.855 --> 23:59.313
என்ன ஆதாரம் இருக்கு?

23:59.314 --> 24:01.315
அவர். அவர் தான். அவர் ஒரு சாட்சி.

24:01.316 --> 24:02.441
ஹாவர்ட் பண்றதை அவர் பார்த்திருக்கார்.

24:02.442 --> 24:04.360
குற்றத்தை பத்தி அவர்கிட்ட விவரங்கள் இருக்கு
ஏன்னா…

24:04.361 --> 24:06.320
- ஆமா, ஏன்னா பண்ணதே அவர்தான்.
- இல்ல.

24:06.321 --> 24:08.365
என்னமோ அவரா தான் இருக்கணும்னு
நீங்க விரும்புற மாத்தி தோணுதே?

24:09.157 --> 24:11.325
இது எப்படி வேலை செய்யும்னு தெரிஞ்சுக்கோங்க.

24:11.326 --> 24:15.371
இங்க, என்கிட்ட உருப்படியான,
நம்பத்தகுந்த, அசைக்க முடியாத ஆதாரம் இருக்கு.

24:15.372 --> 24:16.956
- சரி, ஆனால்…
- என் கிட்ட ஃபோன் ரெக்கார்டு இருக்கு,

24:16.957 --> 24:18.165
நான்ஸியோட ஃபோன்ல கைரேகை இருக்கு.

24:18.166 --> 24:21.794
திரு. ரீட் கிட்ட இருந்து தொடர்ச்சியா
வந்த மிரட்டல் இன்ஸ்ட்டாகிராம் மெசேஜ்கள் இருக்கு.

24:21.795 --> 24:23.796
- அவர் கிட்ட பேசுங்க. சும்மா…
- அது கொலைக்கான நோக்கத்தைத் தருது.

24:23.797 --> 24:27.425
அரசு வழக்கறிஞர் கிட்ட கொடுக்கிறதுக்கு
தேவையான எல்லாமே என் கிட்ட இருக்கு.

24:27.426 --> 24:30.928
ஒரு கொடூரமான குற்றத்தில் பாதிக்கப்பட்டவங்களுக்கு
நியாயம் கிடைக்கப் போகுதுங்கிற

24:30.929 --> 24:33.306
நல்ல செய்தியைக் கேட்க
கடல் போல நிருபர்கள் காத்திட்டிருக்காங்க.

24:33.307 --> 24:37.768
ஆக, என் கிட்ட இருக்கிறதவிட, உங்க கிட்ட
நல்லதா ஏதாவது இருந்தா சொல்லுங்க. இல்ல கிளம்புங்க.

24:37.769 --> 24:40.272
- அவர்…
- ஹாவர்டோட ஃபோன் இல்ல லேப்டாப்பைப் பார்த்தீங்களா?

24:41.273 --> 24:43.191
நாங்க இது வரைக்கும் கொடுத்தது
சந்தர்ப்ப சாட்சியங்கள்.

24:43.192 --> 24:46.068
ஹாவர்டை நான்ஸியோட தொடர்புபடுத்துற மாதிரி
எங்க கிட்ட ஏதாவது இருந்தா போதும் தானே?

24:46.069 --> 24:49.447
யாரோ நான்ஸியோட டிரெஸ் இல்லாத படத்தை
அவ ஃபோனுக்கு அனுப்பியிருக்காங்க.

24:49.448 --> 24:51.157
ஹாவர்ட் கிட்ட கண்டிப்பா அந்த படங்கள் இருக்கும்.

24:51.158 --> 24:53.368
அவரோட கம்ப்யூட்டரைத் தேட
உங்களால வாரண்ட் வாங்க முடியுமா?

24:54.286 --> 24:55.369
இனி நாம பேசுறதுக்கு ஒண்ணுமில்ல.

24:55.370 --> 24:57.496
என்ன? டிடெக்டிவ், உண்மையிலேயே விளையாடுறீங்களா?

24:57.497 --> 24:59.540
- சரி. ஹே, மேரி! மேரி.
- நீங்க உங்க வேலையைப் பண்ணணும்!

24:59.541 --> 25:00.875
- நிறுத்து. தெரியும்.
- அது அவங்களோட வேலை.

25:00.876 --> 25:03.086
- ஆனால் அவங்க அதைப் பத்தி கவலையே படல.
- நிறுத்து. இங்க வேண்டாம்.

25:03.879 --> 25:04.922
நாம போகலாம்.

25:05.839 --> 25:06.840
ப்ளீஸ்.

25:09.218 --> 25:10.718
நான் நாளைக்கு நீதிமன்றத்துக்குப் போகணும்.

25:10.719 --> 25:12.678
ஆனால் என் கிட்ட எதுவும் இல்ல.

25:12.679 --> 25:15.890
ஹாவர்ட் என் பொண்ணுங்களைக் கூட்டிப் போகப் போறார்.
எழவு கூட்டிப் போகப் போறார், எல்லி.

25:15.891 --> 25:18.100
- நீ மாத்திரை போட்டிருக்கியா?
- என்ன? இல்ல!

25:18.101 --> 25:20.312
நீ அந்த மாத்திரைகள் எடுக்கிறத
நிறுத்திட்டேன்னு சொன்ன.

25:20.979 --> 25:23.022
நான்ஸி இறந்த பிறகு தான்
அதை எடுக்க ஆரம்பிச்சேன், சரியா?

25:23.023 --> 25:25.526
- நீ பொய் சொல்லியிருக்க.
- நீ புரிஞ்சுக்க மாட்டேன்னு நினைச்சேன்.

25:26.777 --> 25:29.403
உனக்கு ஏற்கனவே நிறைய பிரச்சினை
போயிட்டிருந்துச்சு.

25:29.404 --> 25:34.116
அதை உன்னால நல்லாவே
சமாளிக்க முடிஞ்சது. ஆனால் எனக்கு…

25:34.117 --> 25:35.869
மொத்தமா முடிஞ்ச மாதிரி இருந்துச்சு.

25:36.453 --> 25:41.916
எல்லாத்துக்கு நிறைய முயற்சி தேவைப்பட்டுச்சு,
என்னால குழந்தைங்க மேல கவனம் செலுத்த முடியல.

25:41.917 --> 25:44.919
எனக்கு… எனக்கு தொடர்ந்து போக
ஏதாவது தேவைப்பட்டுச்சு.

25:44.920 --> 25:49.131
இந்த சோஃபாவில உட்கார்ந்து
ஹாவர்ட் பத்தி எல்லாத்தையும் சொன்ன,

25:49.132 --> 25:51.342
அவன் துரோகம் பண்ணதும், அவன் பண்ண எல்லாத்தையும்.

25:51.343 --> 25:54.220
ஆனாலும், சில விஷயங்களை மறைச்சிட்ட.

25:54.221 --> 25:57.598
மேரி, நாம எப்படி ஒருத்தர் ஒருத்தர் கண்ணைப்
பார்த்துட்டு பொய் சொல்லிட்டிருக்கோம்?

25:57.599 --> 25:58.933
தெரியல! நீ சொல்லு.

25:58.934 --> 26:01.894
தெரியல. நான் மட்டுமில்ல.
அது நீ, நான், நான்ஸி.

26:01.895 --> 26:03.980
நான்ஸி பொய் சொல்லிட்டிருந்திருக்கா.

26:03.981 --> 26:07.484
அவ ஸ்காட் கிட்ட பேசிட்டிருந்திருக்கா,
நமக்குத் தெரியவே இல்ல!

26:08.068 --> 26:12.573
தெரியும். தெரியும். தெரியும்.

26:16.118 --> 26:20.581
மேரி, அன்னைக்கு ராத்திரி உன்னோட பிறந்தநாள்
டின்னர் முடிஞ்சு நாம கிளம்பின பிறகு,

26:21.582 --> 26:24.209
என் காரை எடுத்துட்டு வர காத்திட்டிருந்தேன்.

26:25.210 --> 26:26.712
அப்ப நான்ஸி திரும்பி வந்தா.

26:28.422 --> 26:32.509
அவ என்னைக் கூட வரச் சொன்னா
நான் மறுத்துட்டேன்.

26:33.552 --> 26:39.473
என் கிட்ட உண்மையா இருக்க நினைச்சிருக்கா,
ஆனால் நான் அதை அனுமதிக்கல.

26:39.474 --> 26:44.854
இப்ப அவ போயிட்டா, இதை வெளிய சொல்ல
எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு.

26:44.855 --> 26:47.566
ஆனால் இனியும்… நான் எதையும் மறைக்க விரும்பல.

26:58.118 --> 27:01.496
நான் நான்ஸியோட பொருட்களை திருடுறது மட்டுமில்ல.

27:03.373 --> 27:05.292
ஹாவர்டும் நானும் சில சமயம்…

27:07.586 --> 27:09.420
நாங்க உடலுறவு வச்சிக்கும் போது,

27:09.421 --> 27:12.549
நாங்க அவங்கள மாதிரி நடிச்சுக்குவோம்.

27:13.300 --> 27:15.260
நான் நான்ஸி மாதிரி நடிப்பேன்.

27:16.887 --> 27:19.515
நண்பர்கள் அப்படி பண்ண மாட்டாங்க. அப்படித் தானே?

27:22.142 --> 27:26.312
சில சமயம், இதுக்கு நாமளும்
இடம் கொடுத்திருக்கோம்னு நினைக்கிறேன்.

27:26.313 --> 27:27.940
அதான் ஹாவர்ட் அவளை விரும்புறதுக்கு.

27:30.817 --> 27:32.818
என்னை மன்னிச்சிடு, ஆனால் அது உனக்குத் தெரிஞ்சா,

27:32.819 --> 27:35.572
நீ திரும்பவும் என்னை நேசிக்கவே மாட்டேன்னு
நினைச்சேன்.

27:37.824 --> 27:40.953
நாம எல்லாரும் ஒரே விஷயத்துக்குத் தான்
பயப்படுறோம்னு நினைக்கிறேன்.

27:50.587 --> 27:54.173
தினமும் மூணு மணிக்கு, ஆர்டீக்கு இந்த ஆப்பிளை
தோலுரிச்சு வெட்டி வைப்பேன்.

27:54.174 --> 27:56.426
ஜூனிக்கு ஒண்ணை முழுசா வைப்பேன்.

27:57.094 --> 27:58.344
தினமும்.

27:58.345 --> 28:01.890
அவங்கள யதார்த்தமா இருக்க வைக்கிறதுக்கும்,
பாதுகாப்பா உணர வைக்கிறதுக்கும்,

28:02.599 --> 28:08.522
நான் செய்யுற கோடிக்கணக்கான
விஷயங்கள்ல அது ஒண்ணு

28:12.276 --> 28:13.652
ஹாவர்டுக்கு அது பத்தி தெரியாது.

28:18.657 --> 28:20.617
யாருக்கும் தெரியாது, ஏன்னா
அது அவங்க கண்லயே படாது.

28:27.749 --> 28:29.710
என் குழந்தைங்க தான் கஷ்டப்படப் போறாங்க.

28:39.094 --> 28:40.679
நாம இப்ப எண்ண பண்றது?

28:41.805 --> 28:43.473
உண்மையில இருந்து ஆரம்பிக்கலாம்.

28:51.315 --> 28:52.900
நான் கோரா கிட்ட பேசப் போறேன்.

28:54.067 --> 28:56.903
அவ கிட்ட நான் எல்லாத்தையும் சொல்லப் போறது,
ஒரு அப்பாவா

28:56.904 --> 29:00.114
அது… அது உனக்குத் தெரியணும்னு
நினைச்சேன்.

29:00.115 --> 29:02.325
நம்மள பத்தி, நான்ஸி பத்தி அப்புறம் ஸ்காட் பத்தி.

29:02.326 --> 29:04.661
நான்ஸிக்கு இன்னும் நேரம் கிடைச்சிருந்தா,

29:05.329 --> 29:08.164
அவ கோரா கிட்ட தன்னோட கடந்த காலத்தைப் பத்தின
உண்மையைச் சொல்லியிருப்பா.

29:08.165 --> 29:09.916
இல்ல. நிச்சயமா இல்ல.

29:09.917 --> 29:13.628
ராபர்ட், ரகசியங்களைக் காப்பாத்துறதுக்கு
உனக்கு பிரச்சினை இல்லாம இருக்கலாம்

29:13.629 --> 29:17.257
ஏன்ன நீ ஒரு ஹென்னஸி, நான் அப்படி இல்ல.

29:18.133 --> 29:20.801
என்னால… என்னால முடியாது,
எனக்கு… எனக்கு இப்படி வாழ விருப்பமில்ல.

29:20.802 --> 29:23.514
இந்த ரகசியங்கள் தான் நான்ஸியைக் கொன்னுச்சு.

29:24.681 --> 29:26.849
அது கோராக்கு வேண்டாம்னு நினைக்கிறேன்.

29:26.850 --> 29:30.436
நான் அவளைக் காயப்படுத்திட்டேன், அவ கிட்ட
உண்மையைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.

29:30.437 --> 29:32.313
உண்மையா?
நான் ஏற்கனவே மோசமனவன்னு நினைச்சிட்டிருக்கா.

29:32.314 --> 29:33.732
நீ அதை இன்னும் மோசமாக்கத் தான் போற.

29:34.691 --> 29:36.443
இது உன்னைப் பத்தி இல்ல.

29:37.110 --> 29:38.736
- ஓ, அப்படியா?
- இல்ல.

29:38.737 --> 29:41.281
நீ விரும்பினதை நான் கொடுக்கலைன்னு
நீ இதைப் பண்ணல?

29:42.824 --> 29:44.368
நீ எப்பவுமே விரும்பின விஷயத்தை?

29:46.662 --> 29:47.663
இல்ல.

29:49.498 --> 29:50.499
இல்ல.

29:51.625 --> 29:54.545
நான் உன் கிட்ட ஒண்ணை விரும்பினேன் தான்.

29:56.129 --> 29:57.965
ஆனால் இனியும் இல்ல.

30:00.175 --> 30:02.135
நான் கோரா கிட்ட பேசப் போறேன்.

30:03.470 --> 30:05.472
உன்னைப் பார்த்துக்கோ.

30:05.973 --> 30:07.432
- எலனார்.
- சொல்லு?

30:10.727 --> 30:12.145
உண்மையிலேயே என்னை மன்னிச்சிடு.

30:30.205 --> 30:31.622
எனக்கு அங்க வரணும்.

30:31.623 --> 30:32.707
தெரியும்.

30:32.708 --> 30:36.753
நீ எனக்குப் பண்ணக் கூடிய நல்ல விஷயம்,
உன் தங்கச்சிகளைப் பார்த்துக்கிறது, சரியா?

30:37.379 --> 30:38.797
அவர் ஜெயிச்சிடுவார்ன்னு நினைக்கிறீங்களா?

30:39.965 --> 30:41.842
எல்லி ஆன்ட்டியும், நானும் ஒரு திட்டம் வச்சிருக்கோம்.

30:43.302 --> 30:44.595
ஐ லவ் யூ, செல்லம்.

30:45.137 --> 30:46.680
பசங்கள நல்லா பார்த்துக்கோ.

30:48.182 --> 30:49.224
கண்டிப்பா.

30:50.017 --> 30:51.977
- ஐ லவ் யூ டூ.
- பை.

30:56.523 --> 30:59.066
நான் மேரி மாதிரி யாரையும் பார்த்ததில்ல.

30:59.067 --> 31:00.234
யாருமே பார்த்ததில்ல.

31:00.235 --> 31:04.198
அவ எப்போதுமே அடுத்தவங்களுக்காக வாழுறவ.

31:04.865 --> 31:10.244
எல்லாருக்காகவும், அவளோட பெரிய, விரிஞ்ச
மனசுல அவ இடம் வச்சிருப்பா.

31:10.245 --> 31:13.039
அதிலேயும் அவ குழந்தைகளுக்குக் குறிப்பா.

31:13.040 --> 31:17.961
மார்கஸ், ஜூனிப்பர், அப்புறம் ஆர்டெமிஸ்,
இவங்கள விட யாரும் மேரிக்கு பெரிசில்ல.

31:19.004 --> 31:20.380
நன்றி, மிஸ். புஷே.

31:23.509 --> 31:24.760
மிஸ். புஷே.

31:26.220 --> 31:29.430
…2025 அக்டோபர்ல இவங்களும், அவங்களோட
எட்டு வயசு பொண்ணும்

31:29.431 --> 31:33.185
சம்பந்தப்பட்ட சம்பவம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

31:33.894 --> 31:35.436
இல்ல நான் என் டைரியைப் பார்க்கணும்.

31:35.437 --> 31:37.104
ஓ, பரவாயில்ல, நான் தௌிவா சொல்றேன்.

31:37.105 --> 31:42.276
அக்டோபர் 19, 2025 அன்னைக்கு, திருமதி. சிம்ப்ஸன்,
சட்டத்துக்குப் புறம்பா வாங்கின

31:42.277 --> 31:46.155
ஆம்ஃபெட்டமைன்கள் எடுத்த போதையில,
ஆர்கோ பெட்ரோல் பங்க் மினி-மார்கெட்ல,

31:46.156 --> 31:48.115
தன்னோட மகள் உள்ள இருக்கும் போது
மறந்து விட்டுட்டு

31:48.116 --> 31:50.869
காரெடுத்துப் போனது உங்களுக்குத் தெரியுமா?

31:57.167 --> 31:58.502
தெரியும்.

31:59.253 --> 32:00.921
என்ன தெரியும்?

32:02.256 --> 32:04.966
அந்த சம்பவம் நடந்தது எனக்குத் தெரியும்.

32:04.967 --> 32:06.509
அவ மனுஷி. ஒரு தவறு பண்ணிட்டா.

32:06.510 --> 32:08.427
ஜூன் 4 அன்னைக்கு காலைல,

32:08.428 --> 32:11.305
திருமதி சிம்ப்ஸனோட பரிந்துரைக்கப்படாத ஆடரால்
மாத்திரைகள் நிறைய எடுத்ததால

32:11.306 --> 32:13.850
- இவங்களோட சின்ன மகள் அவசர சிகிச்சையில…
- அது நான் இல்லேன்னு சொன்னேன்.

32:13.851 --> 32:15.309
- அது ஹாவர்ட்.
- …அனுமதிக்கப்பட்ட போது

32:15.310 --> 32:17.187
நீங்க கூட இருந்தீங்களா?

32:21.483 --> 32:23.276
ஆமா, நான் ஆஸ்பத்திரியில இருந்தேன்.

32:23.277 --> 32:24.444
நன்றி.

32:25.279 --> 32:26.780
வேற கேள்விகள் இல்ல, யுவர் ஆனர்.

32:27.698 --> 32:29.074
நீங்க கீழ இறங்கலாம்.

32:31.285 --> 32:33.287
வேற ஏதாவது சாட்சிகள் இருக்கா, மிஸ். டிஸ்டால்?

32:35.414 --> 32:36.956
இருக்கு, யுவர் ஆனர்.

32:36.957 --> 32:38.584
இப்ப தான் வந்தாங்க

32:49.219 --> 32:52.306
நான் ஹாவர்டோட கல்யாணம் ஆகி
எட்டு வருஷம் கூட இருந்தேன்.

32:53.015 --> 32:54.349
உங்களுக்கு குழந்தைகள் இருந்துச்சா?

32:56.101 --> 33:00.689
இல்ல, அது ஹாவர்டுக்கு ஏமாற்றமா இருந்துச்சு.

33:02.357 --> 33:05.319
நான் கர்ப்பம் அடைஞ்சேன்,
ஆனால் அது கலைஞ்சிடுச்சு.

33:05.944 --> 33:10.824
இப்ப நினைச்சுப் பார்த்தா, அது தான்
என் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய ஆசீர்வாதம்.

33:11.450 --> 33:13.702
ஏன்னு சொல்ல முடியுமா?

33:15.662 --> 33:17.956
ஏன்னா சிலரால குழந்தைங்க பெத்துக்காம இருந்தா

33:18.498 --> 33:20.709
இந்த மானுடம் நல்லா இருக்கும்.

33:22.127 --> 33:25.213
உங்க கணவரைப் பத்தி
நீங்க பெரிசா அக்கறைக் காட்டாத மாதிரி தெரியுது.

33:25.214 --> 33:27.131
ஆரம்பத்துல காட்டினேன்.

33:27.132 --> 33:32.554
வெறுப்பு மூலமாவே, ம், நம்மை அவன் பக்கம்
ஈர்க்கும் திறன் ஹாவர்டுக்கு இருக்கு.

33:33.764 --> 33:36.808
அவன் என் மேல கை வைக்கிறதுக்கு
எட்டு வருஷம் ஆச்சு.

33:38.143 --> 33:39.436
அது ஒரு முறை தான், ஆனால்…

33:41.355 --> 33:42.481
அது மறக்கமுடியாதது.

33:45.192 --> 33:48.194
கடந்த இருபது வருஷமா
அவன் என்னைக் கண்டுப்பிடிச்சு

33:48.195 --> 33:51.865
தான் ஆரம்பிச்சதை முடிப்பானோன்னு
பயந்திட்டே கழிச்சேன்.

33:53.158 --> 33:55.451
ஆனால் இப்ப அவனைப் பார்க்கும் போது,

33:55.452 --> 33:58.664
தன்னோட திறமையின்மையால
ரொம்பவும் பயந்து போயிருக்கிற

33:59.289 --> 34:03.669
ஒரு கோபக்கார குழந்தையைப் பார்க்கிறேன்.

34:16.849 --> 34:18.225
எல்லாரும் எழுந்திருங்க.

34:22.771 --> 34:23.772
உட்காருங்க.

34:26.525 --> 34:27.692
சரி.

34:27.693 --> 34:30.903
மாநிலம் கடந்து குழந்தைகளை இடம் மாற்றுவது
கேட்டு அவசர ஆணை தொடர்பான

34:30.904 --> 34:35.367
கோரிக்கை மறுக்கப்படுகிறது.

34:36.909 --> 34:38.619
இதுக்கு என்ன அர்த்தம்?
என் வேலை ஒஹாயோவில இருக்கு.

34:38.620 --> 34:40.037
அப்படின்னா புது வேலையைத் தேடுங்க.

34:40.038 --> 34:42.832
எதிர்மனுதாரர் மேல் இருக்கும்

34:42.833 --> 34:44.793
நிலுவையிலுள்ள அபாய குற்றச்சாட்டு காரணமாக,

34:45.585 --> 34:47.588
மைனர் குழந்தைகளான
ஆர்டெமிஸ் மற்றும் ஜூனிப்பர் சிம்ப்ஸன்,

34:48.338 --> 34:51.841
என் கருத்துப் படி,
நிச்சயமாக அபாயத்தில் இருக்கிறார்கள்,

34:51.842 --> 34:54.927
அவர்கள் இரண்டு பெற்றோர்களுடனும்
தங்குவது பாதுகாப்பானது இல்லை.

34:54.928 --> 34:56.345
- என்ன?
- எனவே தற்காலிகமாக தக்கவைக்க கோருவதற்கு

34:56.346 --> 34:59.098
இந்த விவகாரத்தை குழந்தைகள் மற்றும்

34:59.099 --> 35:00.600
- குடும்ப நல சேவைகள்…
- ஐயோ.

35:00.601 --> 35:02.810
…துறைக்குப் பரிந்துரைக்கிறேன்.

35:02.811 --> 35:04.312
வழக்கு தீர்ந்ததும்,

35:04.313 --> 35:08.191
நாம் மீண்டும் கூடி
நமது நெடுநாள் தேர்வுகளை மதிப்பிடலாம்.

35:08.192 --> 35:09.401
நீதிமன்றம் கலைகிறது.

35:10.694 --> 35:11.819
நமக்கு வாய்ப்புகள் இருக்கு.

35:11.820 --> 35:12.987
எல்லாம் சரியாயிடும்.

35:12.988 --> 35:14.072
இப்ப என்ன ஆகும்?

35:16.867 --> 35:19.118
- இப்படி நடந்திருக்கக் கூடாது.
- தெரியும். தெரியும்.

35:19.119 --> 35:20.621
இது நடந்திருக்கக்கூடாது.

35:21.830 --> 35:23.289
நாம இதை எதிர்த்து போராடுவோம்.

35:23.290 --> 35:25.416
- உங்களுக்கு என்ன பிரச்சினை?
- வேண்டாம். வேண்டாம், வேண்டாம்.

35:25.417 --> 35:27.460
- உங்களுக்கு என்ன எழவு தான் பிரச்சினை?
- நிறுத்து.

35:27.461 --> 35:31.465
நான் ஹோட்டலுக்கு வந்து உன்னை கூட்டிக்கிறேன்,
நீ என் கூட தங்குற.

35:47.523 --> 35:48.565
எல்லி?

36:17.302 --> 36:18.428
மேர்?

36:23.725 --> 36:25.143
மேரி?

36:39.241 --> 36:41.492
ஹே, நீங்கள் அழைத்திருப்பது
மேரி மற்றும் ஜூனியை.

36:41.493 --> 36:42.910
அப்பறம் என்னை!

36:42.911 --> 36:43.996
எடு.

36:48.959 --> 36:50.293
எல்லி ஆன்ட்டி?

36:50.294 --> 36:52.461
ஹே, உங்க அம்மா கூப்பிட்டாங்களா?

36:52.462 --> 36:53.546
அம்மாவா? இல்ல.

36:53.547 --> 36:54.964
உங்க அப்பா அங்க இருக்காரா?

36:54.965 --> 36:56.717
இல்ல, நான் அவரைப் பார்க்கல.

36:57.384 --> 36:59.010
நான் ஜூனியையும், ஆர்டீயையும் பார்த்திட்டிருந்தேன்.

36:59.011 --> 37:01.637
சமூக சேவை ஆட்கள் வந்து அவங்களைக் கூட்டிட்டு
போயிட்டாங்க.

37:01.638 --> 37:03.639
எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.

37:03.640 --> 37:07.268
சரி, நான் உனக்கு
டிடெக்டிவ் பெத்தனி கேன்ஸோட நம்பரை அனுப்புறேன்.

37:07.269 --> 37:08.394
நீ அவங்கள கூப்பிடணும்.

37:08.395 --> 37:11.230
நான் சொல்றதை நீ அவங்க கிட்ட சொல்லணும். சரியா?

37:11.231 --> 37:13.275
சரி, சரி, சொல்றேன்.

37:18.655 --> 37:19.656
என்னைக் கொல்லப் போறீங்களா?

37:21.658 --> 37:22.951
இல்ல, நீயே உன்னைக் கொல்லப் போற.

37:23.911 --> 37:25.037
வேற வழியே இல்லாம.

37:25.621 --> 37:27.413
போதைக்கு அடிமையான தாய் குழந்தைகளை இழக்கிறாள்.

37:27.414 --> 37:29.249
பல மாதங்களாக அவள் வாழ்க்கை தடுமாறி வந்தது.

37:29.833 --> 37:32.710
வாழ்வதற்கென்று எதுவுமில்லை.
அதனால் அவளது நெருங்கிய தோழி

37:32.711 --> 37:35.214
மரணித்த அதே இடத்தில்
மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு, இறந்து போனாள்.

37:38.342 --> 37:40.219
எலனாரும், நானும் ஸ்காட் கிட்ட பேசினோம்.

37:44.139 --> 37:45.140
அவர் உங்களைப் பார்த்திருக்கிறார்.

37:46.433 --> 37:49.019
நீங்க பண்றதை அவர் பார்த்திருக்கிறார்.
நீங்க நான்ஸியை கொன்னதைப் பார்த்திருக்கிறார்.

37:50.062 --> 37:53.273
இங்க சந்திக்க அவ அவரை வர சொல்லியிருக்கா.

37:54.024 --> 37:59.988
உங்கள அடிக்கச் சொல்லி அவர் கிட்ட கேட்டிருக்கா,
அப்ப தான் நீங்க அவள தனியா விடுவீங்கன்னு.

38:01.073 --> 38:02.157
நீ பொய் சொல்ற.

38:03.158 --> 38:05.994
அப்படியா?
நான் பொய் சொல்றேனா?

38:06.703 --> 38:09.748
என்னை விட உங்களுக்கு நான்ஸியை
நல்லாத் தெரியும்னு சொன்னீங்க.

38:10.749 --> 38:12.542
அப்படி அவளால பண்ண முடியுமா?

38:12.543 --> 38:14.628
அப்ப ஏன் நான் வெளிய இருக்கேன்,
அவன் உள்ள இருக்கான்?

38:15.254 --> 38:16.255
ஏன்னா…

38:17.506 --> 38:21.927
ஏன்னா டிடெக்டிவ் கேன்ஸுக்கு நீங்க தான்
பண்ணீங்க அப்படிங்கிறதுக்கு நல்ல ஆதாரம் வேணுமாம்.

38:22.511 --> 38:24.179
அதை எல்லியும், நானும் எடுத்திருக்கணும்.

38:25.097 --> 38:28.892
நாங்க… நாங்க இன்னைக்கு ராத்திரி
என் ஹோட்டல் ரூம்ல சந்திச்சிருக்கணும்.

38:30.352 --> 38:31.687
இப்ப நான் அங்க இருக்க மாட்டேன்.

38:34.815 --> 38:39.069
டிடெக்டிவ் கேன்ஸ் நான் தற்கொலை பண்ணிக்கிட்டேன்னு
ஒருபோதும் நினைக்க மாட்டாங்க.

38:41.113 --> 38:43.615
நீங்க தான் பண்ணீங்கன்னு
அவங்களுக்குத் தெரியும்.

38:45.242 --> 38:46.534
நான் சொல்றதைக் கேளுங்க, ஹாவர்ட்.

38:46.535 --> 38:47.827
நான் சொல்றதைக் கேளுங்க

38:47.828 --> 38:49.872
இங்க நீங்க பண்றதுக்கு ஒண்ணு தான்
இருக்கு. சரியா?

38:50.455 --> 38:52.248
நான் எல்லியை கால் பண்ண விடுங்க.

38:52.249 --> 38:56.044
நான் சொல்றதைக் கேளுங்க,
நான் அதை விட்டுட்டேன்,

38:56.545 --> 38:57.880
என்னால முடியாதுன்னு சொல்லிடுறேன்.

39:00.257 --> 39:01.550
நீங்க ஓடிப் போயிடுங்க.

39:03.760 --> 39:05.971
நீங்க போயிடுங்க.

39:07.181 --> 39:09.183
பொண்ணுங்களக் கூட்டிட்டு போகாதீங்க.

39:09.766 --> 39:11.268
உங்களுக்கு பொண்ணுங்க வேண்டாம்.

39:14.521 --> 39:16.940
சும்மா போங்க.

39:19.818 --> 39:23.113
அப்புறம் நீங்க சுதந்திரமா இருப்பீங்க.

39:27.492 --> 39:28.744
நான் அவளக் கூப்பிடுறேன்.

39:29.745 --> 39:30.787
சரியா?

39:32.581 --> 39:33.707
ஒண்ணுமில்ல.

39:39.087 --> 39:40.547
சே! சே!

39:44.051 --> 39:45.052
மொபைல்
மேரி

39:48.263 --> 39:50.348
சே! சே, ஹாவர்ட்!

39:50.349 --> 39:51.599
நீங்க என்னை நடமாட்டம் இல்லாத பகுதிக்கு
கூட்டி வந்திருக்க.

39:51.600 --> 39:53.392
இது நடக்கக் கூடப் போறதில்ல.

39:53.393 --> 39:54.477
போதும் நிறுத்து.

39:54.478 --> 39:56.813
நாம வந்த காரியத்தையே பண்ணுவோம்.
எழுந்திரி. வா. நகரு.

39:58.690 --> 40:00.943
நடமாட்டம் இல்லாத பகுதி.
அந்த பெண் கொலை செய்யப்பட்ட இடம் இது தான்.

40:02.069 --> 40:03.819
கடவுளே. நடமாட்டம் இல்லாத பகுதி.

40:03.820 --> 40:05.155
சே!

40:08.659 --> 40:09.785
நட.

40:11.912 --> 40:14.830
- நீங்க எப்ப என்னை நேசிக்கிறதை நிறுத்துனீங்க, ம்?
- ஓ, நிறுத்து.

40:14.831 --> 40:15.832
இல்ல!

40:17.209 --> 40:20.086
பெரியவளாயி என்னோட மொத்த வாழ்க்கையையும்
உங்களுக்குக் கொடுத்தேன்,

40:20.087 --> 40:23.130
இப்ப சாகப் போறேன்,
நான் தெரிஞ்சுக்க விரும்புறேன்.

40:23.131 --> 40:24.298
சரி, உனக்குத் தெரியணுமா?

40:24.299 --> 40:28.136
நீ என்னோட உதவியாளரா வேலைப் பார்த்தப்போ
உனக்கு நிறைய திறமை இருந்துச்சு.

40:28.804 --> 40:32.014
இந்த உலகத்தையே கலக்கும்னு நான் நினைச்ச
அறிவு உனக்கு இருந்துச்சு.

40:32.015 --> 40:33.307
ஆனால் நீ அப்படி பண்ணல.

40:33.308 --> 40:36.728
நீ ஒரு மந்தமான, ஒரு நச்சரிப்பா
ஒரு சலிப்பா மாறின.

40:37.229 --> 40:38.564
நீங்க ஏன் அதைப் பண்ணீங்க?

40:40.315 --> 40:42.400
சொல்லுங்க, ஹாவர்ட். ஏன் நான்ஸியைக் கொன்னீங்க?

40:42.401 --> 40:45.529
என்னா அவளுக்குக் காட்ட நினைச்சேன்,
ஆனால் அவ கேட்கல.

40:53.787 --> 40:54.996
இங்க என்ன பண்றோம்?

40:54.997 --> 40:55.998
பாரு.

40:57.749 --> 40:58.916
எதைப் பார்க்கணும்?

40:58.917 --> 41:00.043
இதை!

41:00.878 --> 41:02.795
- பாலத்தையா?
- இந்தத் தூணை.

41:02.796 --> 41:06.049
இதை விட எதுவும் ராத்திரியில
அழகா இல்லேன்னு நினைக்கிறேன்.

41:07.217 --> 41:08.510
எனக்குக் குளிருது.

41:09.303 --> 41:11.263
இது உன் வீட்டு பின்னால தான் இருக்கு.

41:11.930 --> 41:14.599
ஆனால் இந்தக் கோணத்தில இருந்து
நீ இதைப் பார்த்திருக்க வாய்ப்பில்ல.

41:14.600 --> 41:17.310
இப்ப உன்னோட உவமைகள் எல்லாம்
கேட்கும் மனநிலையில நான் இல்ல.

41:17.311 --> 41:18.394
நாம திரும்பிப் போகலாமா?

41:18.395 --> 41:20.230
பொறு, நான் ஒண்ணு சொல்லணும்.

41:22.691 --> 41:23.858
நான் உன்னை விரும்புறேன்.

41:23.859 --> 41:26.612
- ஹாவர்ட், ப்ளீஸ்…
- பொறு, பொறு. என்னை முடிக்க விடு.

41:27.279 --> 41:29.655
நாம சேர்ந்து இருக்கலாம். ப்ளான் பண்ணிருக்கேன்.

41:29.656 --> 41:31.407
நான் பணம் சேர்த்து வச்சிருக்கேன்.

41:31.408 --> 41:33.201
எனக்கு அது வேண்டாம்.

41:33.202 --> 41:36.913
ராத்திரி அந்த தியேட்டர்ல இருந்த மாதிரி
சந்தோஷமா, உற்சாகமா நீ இதுவரை இருந்ததே இல்ல.

41:36.914 --> 41:38.206
- என்ன?
- உனக்குள்ள நான் உருவாக்கின

41:38.207 --> 41:40.334
- மோகத்தை என்னால உணர முடியுது.
- ரொம்ப கற்பனை பண்ற!

41:43.337 --> 41:44.378
பதிலளிக்க ஸ்லைட் செய்யவும்

41:44.379 --> 41:45.380
இங்க வா.

41:47.132 --> 41:48.133
முடியாது.

41:49.259 --> 41:50.719
இதை நிப்பாட்டணும்.

41:51.929 --> 41:53.055
நான் அவ கிட்ட சொல்லியாகணும்.

41:54.014 --> 41:55.015
விளையாடுறியா?

41:55.641 --> 41:58.893
அவ என் கிட்ட திரும்ப பேசாம போகலாம்,
ஆனால் அவளுக்கு உண்மை தெரியணும்.

41:58.894 --> 42:00.729
அட.
நீ மேரியைத் துளி கூட மதிக்கிறது இல்ல.

42:12.741 --> 42:14.743
உனக்காகத் தான் அவ செத்துப் போனா.

42:17.996 --> 42:19.455
என்ன எழவை பண்ற நீ?

42:19.456 --> 42:21.333
அவ ஒண்ணும் பாவப்பட்டவ இல்ல.

42:22.626 --> 42:23.669
நீ தான் பாவப்பட்டவன்.

42:27.297 --> 42:29.132
நாயே!

42:35.430 --> 42:36.473
- இந்தா.
- ஆ!

42:50.737 --> 42:51.738
நீ சொதப்பிட்ட.

42:52.489 --> 42:53.699
நாம…

42:54.700 --> 42:56.910
நாம… நாம…

42:57.494 --> 42:58.745
நாம…

43:24.021 --> 43:25.022
கடவுளே.

43:25.606 --> 43:28.107
மேர். மேரி. மேரி!

43:28.108 --> 43:30.902
கடவுளே.
எழுந்திரு, ப்ளீஸ். ப்ளீஸ் எழுந்திரு.

43:30.903 --> 43:31.987
கடவுளே. கடவுளே.

43:39.828 --> 43:41.663
விடு!

43:59.139 --> 44:00.348
ஒண்ணுமில்ல.

44:00.349 --> 44:01.350
நமக்கு ஒண்ணுமில்ல.

44:01.975 --> 44:04.060
உனக்கு ஒண்ணுமில்ல. கடவுளே.

44:04.061 --> 44:06.522
- கடவுளே. நமக்கு…
- நமக்கு ஒண்ணுமில்ல.

44:07.064 --> 44:08.190
நமக்கு ஒண்ணுமில்ல.

44:20.285 --> 44:21.286
நன்றி.

44:22.204 --> 44:25.749
- மன்னிக்கணும், நீங்க சொந்தமா?
- ஆமா, நான் அவங்களோட போறேன். மேரி.

44:26.542 --> 44:27.543
எல்லி.

44:33.632 --> 44:34.633
உனக்கு ஒண்ணுமில்லையே?

44:38.220 --> 44:39.555
நீ எப்படி இருக்க?

44:41.473 --> 44:42.474
தெரியல.

44:45.978 --> 44:47.479
தெரியல.

45:11.461 --> 45:13.463
நாம தள்ளாடுற வயசு வரை
சேர்ந்து இருக்க வேண்டியது.

45:14.131 --> 45:17.300
அது தான் ஒப்பந்தம். அது நாம
சின்ன வயசா இருந்தப்போ செய்துகிட்ட சத்தியம்.

45:17.301 --> 45:19.177
நான்ஸி லாரன் ஹென்னஸி
அன்பு மனைவி, தாய் மற்றும் தோழி

45:19.178 --> 45:22.514
நட்போட மோசமான முரண்களை
அறியாத அளவு சின்ன வயசு.

45:23.348 --> 45:28.187
நாம ஒருத்தரை எவ்வளவு ஆழமா நேசிக்கிறோமோ,
அவங்க போனப் பிறகு உள்ள வலி அந்தளவு இருக்கும்.

45:35.110 --> 45:37.196
நான்ஸி

45:50.542 --> 45:54.045
மனசு உடையும் போது
தனித் தீவாயிடணும்னு

45:54.046 --> 45:55.756
ஒரு சலனம் இருக்கும்.

45:56.465 --> 45:58.091
ஆனால் அது ஒரு தவறு.

45:59.301 --> 46:02.679
அன்பு செய்யப்பட தயாரா இருக்கிறது
வீணாப் போகாது.

46:03.472 --> 46:09.560
மகிழ்ச்சி, அதோட, நாமளும் ஒருத்தருங்கிற
அந்த ஆழமான உணர்வை தொடர்ந்து அடையுறதுக்கு.

46:09.561 --> 46:11.939
ஜூனிப்பரின் பிறந்த நாள் பார்ட்டி மாலை 2.00 மணி

46:15.108 --> 46:17.694
பெறுநர்: ஸ்வீட் ஜூனி
அனுப்புநர்: எலனார் ஆன்ட்டி

46:36.755 --> 46:40.342
என்னைப் பொறுத்தவரை நாங்க அனுபவிச்ச
எல்லா வலியுமே ஒரு பரிசு மாதிரி.

46:40.926 --> 46:42.635
நாங்க எவ்வளவு வலிமையா இருக்கோம்,
குணம் பெற எவ்வளவு திறனிருக்குன்னு

46:42.636 --> 46:43.887
எங்களுக்கு அது கத்து கொடுத்துச்சு.

46:45.138 --> 46:49.600
ஆனால் நாங்க பட்ட கஷ்டங்கள் எல்லாத்துக்கும் இடையே
எங்களுக்குள்ள இருக்கிற பந்தத்தை நாங்க தொலைக்கல.

46:49.601 --> 46:51.520
எங்க நட்பு ரொம்ப வலிமையாச்சு.

46:52.479 --> 46:55.399
அது ஏறக்குறைய எதையும் தாங்கும்.

46:57.109 --> 46:59.987
இப்போதைக்காவது.

47:52.289 --> 47:54.291
வசன தமிழாக்கம்
மரிய ஜோசஃப் ஆனந்த் மொராய்ஸ்
