WEBVTT

00:10.010 --> 00:11.594
- …அறுபது.
- என்ன பிரச்சினை?

00:11.595 --> 00:16.432
- பல்ஸ் அதிகரிக்குது. 145. 160.
- அவளுக்கு என்ன நடக்குது?

00:16.433 --> 00:18.267
- செல்லம், உனக்கு ஒண்ணுமில்லையே?
- மே'ம்.

00:18.268 --> 00:20.520
- இங்க தான் இருக்கேன். அம்மா இங்க தான் இருக்கேன்.
- மே'ம், நீ கொஞ்சம் தள்ளி நிக்கணும்.

00:20.521 --> 00:22.439
- சரி.
- அவ வி-ஃபிப்ல இருக்கா!

00:23.023 --> 00:25.149
- என்ன நடக்குது?
- நர்ஸ், இவங்கள இங்கிருந்து கூட்டிப் போங்க.

00:25.150 --> 00:26.275
கடவுளே.

00:26.276 --> 00:27.568
மே'ம், நீ தள்ளி போனீங்கன்னா உதவியா இருக்கும்.

00:27.569 --> 00:28.987
- உன்னால தான் அவ இங்க இருக்கா.
- வா.

00:29.613 --> 00:31.656
- இல்ல, ப்ளீஸ்.
- சரி, சரி.

00:31.657 --> 00:34.076
அவளுக்கு ஒண்ணும் ஆகாது. ஒண்ணும் ஆகாது.

00:35.244 --> 00:36.452
அவளுக்கு ஒண்ணும் ஆகாது.

00:36.453 --> 00:37.787
- இல்ல! அவ…
- அவளுக்கு ஒண்ணும் ஆகாது.

00:37.788 --> 00:39.163
- ரெடி.
- ப்ளீஸ்.

00:39.164 --> 00:40.499
அம்பதுக்கு சார்ஜ் பண்ணுங்க. கிளியர்!

00:41.542 --> 00:43.000
எந்த செயல்பாடும் இல்ல.

00:43.001 --> 00:44.086
ரிதம் செக் பண்றேன்.

00:44.878 --> 00:47.422
- இன்னும் வி-ஃபிப்ல இருக்கா.
- நூறுக்கு சார்ஜ் பண்ணுங்க. கிளியர்!

00:49.716 --> 00:51.426
பல்ஸ் வந்திருச்சு. பிபி ஏறுது.

00:53.637 --> 00:54.638
கடவுளே.

00:58.308 --> 00:59.309
கடவுளே.

01:10.612 --> 01:11.737
ஹலோ.

01:11.738 --> 01:14.241
டாக்டர் சென் இப்போ பரவாயில்லைன்னு சொன்னாங்க.

01:14.908 --> 01:17.119
இப்ப ரெஸ்ட் மட்டும் எடுக்கணும்.

01:19.079 --> 01:21.206
நீங்க வீட்டுக்குப் போறது நல்லது.
அப்புறமா வாங்க.

01:24.877 --> 01:26.295
உங்க குழந்தை ஆஸ்பத்திரியில இருக்கா?

01:29.047 --> 01:30.465
அப்படின்னா எது நல்லதுன்னு எனக்குச் சொல்லாதீங்க.

01:40.017 --> 01:43.936
நடந்தது மிகவும் விசித்திரமாக இருந்ததாக
மேரி நினைத்தாள்.

01:43.937 --> 01:46.064
அவளுக்கு மாத்திரையைத் தவறி வைத்ததாக
ஞாபகமே இல்லை.

01:47.566 --> 01:50.819
ஆனால் அப்படி நடந்திருக்கே.

01:52.196 --> 01:54.030
அந்த சமயத்தில், அவள் சின்னப் பெண்ணாக இருந்தாள்.

01:54.031 --> 01:58.035
அவளது கரியர், அதுவும் நம்பிக்கை தரக்கூடிய ஒன்று,
அப்போது தான் துவங்கியது.

01:58.994 --> 02:00.454
இப்போது அவளுக்கு என்ன ஆகும்?

02:04.541 --> 02:07.753
சின்ன வயதிலிருந்தே மேரிக்கு
இயல்பாகவே நன்கு கதை சொல்ல வரும்.

02:08.252 --> 02:09.463
அதில் அவள் கைதேர்ந்தவள்.

02:10.422 --> 02:12.840
தங்களது குடுப்பத்தின் குழப்பம் மற்றும்
நிச்சயமில்லாத நிலையிலிருந்து

02:12.841 --> 02:15.886
அவளது தம்பி தங்கைகளைப் பாதுகாக்க
அவள் அதைப் பயன்படுத்தினாள்.

02:19.014 --> 02:22.767
கதைகள், குறிப்பாக உணர்வுகளைத் தூண்டக்கூடிய
மற்றும் இரகசியமான கதைகள்

02:22.768 --> 02:23.977
அவளை நிஜத்திலிருந்து விலகி ஓட உதவின.

02:25.270 --> 02:26.562
எதிர்பாராதவிதமாக,

02:26.563 --> 02:29.483
வார்த்தைகளுடனான மேரியின் காதல்
அவளை ஹாவர்ட் இடம் இட்டுச் சென்றது.

02:31.318 --> 02:34.654
இறுதியாக அவளை புரிந்துக்கொண்ட ஒருவன்.

02:34.655 --> 02:37.782
அவளின் ஒவ்வாரு பகுதியையும் புரிந்தவன்.
அவள் வெளி உலகுக்குக் காட்டிய

02:37.783 --> 02:42.246
அவளது இனிமையான பக்கம் மட்டுமல்லாது,
அவள் மறைத்து வைத்திருந்ததையும் புரிந்துகொண்டவன்.

02:43.872 --> 02:46.708
மேரிக்கு இயல்பாகவே நன்கு கதை சொல்ல வரும்.

02:47.376 --> 02:50.920
அவள் கூறியதிலேயே சிறந்த கதை
ஹாவர்டுடான அவள் வாழ்க்கை,

02:50.921 --> 02:54.800
ஒரு மனைவியாக, ஒரு தாயாக,
அது தான் அவள் சந்தோஷமே.

03:36.300 --> 03:38.218
ஆரமின்ட்டா ஹாலின்
புத்தகத்தைத் தழுவியது

03:47.144 --> 03:48.228
மேரி?

03:48.770 --> 03:49.771
மேரி?

04:01.700 --> 04:02.950
மணி என்ன?

04:02.951 --> 04:04.745
இப்பதான் ரெண்டாச்சு.

04:06.955 --> 04:08.749
இவ இன்னும் முழிக்கல.

04:09.374 --> 04:12.294
நர்ஸ்கள் அப்பப்போ வந்து செக் பண்றாங்க.

04:13.754 --> 04:18.382
கார்டியாலஜிட்டைத் தேடுறதுக்கு
இந்த பட்டியலை என் கிட்ட கொடுத்தாங்க.

04:21.970 --> 04:24.431
அவளுக்கு இதயத்துல நிரந்தரமா
சேதம் இருக்கும் பட்சத்தில.

04:24.932 --> 04:26.600
ஓ, மேரி. ரொம்ப சாரி.

04:28.727 --> 04:30.853
பசங்கள எங்க?
இன்னும் இங்கேயா இருக்காங்க?

04:30.854 --> 04:33.941
இல்ல, ராத்திரி ஜூனியையும், மார்கஸையும்
நான் வீட்டுக்குக் கூட்டிப் போயிட்டேன்.

04:35.400 --> 04:36.485
ஹாவர்ட்?

04:37.194 --> 04:38.820
இன்னைக்கு முழுசும் அவனைப் பார்க்கல.

04:40.781 --> 04:43.617
மார்கஸ் இதை உன் கிட்ட கொடுக்க சொன்னான்.

04:44.326 --> 04:45.536
- நன்றி.
- சரி.

04:49.164 --> 04:51.083
அந்த மாத்திரைகளைப் பத்தி சொல்றியா?

04:55.128 --> 04:56.421
மேரி சிம்ப்ஸன்?

04:57.005 --> 04:59.298
- சொல்லுங்க?
- நீ கொஞ்சம் எங்க கூட வரணும்.

04:59.299 --> 05:01.092
சரி. என்ன…

05:01.093 --> 05:02.927
நான் என்ன பண்ணட்டும்? வக்கீலை கூப்பிடட்டுமா?

05:02.928 --> 05:04.513
இல்ல, இவ கூட இரு.

05:05.764 --> 05:06.765
ஐ லவ் யூ.

05:08.183 --> 05:09.393
நன்றி.

05:10.435 --> 05:11.895
- கால் பண்ணு.
- சரி.

05:14.690 --> 05:16.440
நான் சில விஷயங்களைச் சொன்னேன்,
அது உண்மையில்ல,

05:16.441 --> 05:20.027
ஆனால் அப்படி சொன்னதால எது முக்கியமோ அதிலிருந்து
எல்லாரோட கவனத்தையும் அது திருப்பிடுச்சு.

05:20.028 --> 05:21.737
அம்மாவைக் கொன்னவனைக் கண்டுப்பிடிக்கணும்.

05:21.738 --> 05:24.032
இந்த கொடுங்கனவு சீக்கிரம் முடியும்னு
எங்க வீட்டுல விரும்புறோம்.

05:25.033 --> 05:26.784
இன்று காலை இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,

05:26.785 --> 05:28.035
- ஹென்னஸி குடும்பம்…
- மே'ம்?

05:28.036 --> 05:30.997
…நான்ஸி ஹென்னஸியின் கொலையில்
கைதுக்கு இட்டுச் செல்லும்

05:30.998 --> 05:33.791
எந்தவொரு தகவலுக்கும்
50,000 டாலர் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர்.

05:33.792 --> 05:36.628
கொலையுண்டவரின் கணவர் குற்றமற்றவர் என்று
அவரது குடும்பம் கூறுகிறது.

05:41.508 --> 05:44.385
திருமதி. சிம்ப்ஸன்? என் பெயர் கவிதா சாஹ்னி.

05:44.386 --> 05:47.680
குழந்தைகள் மற்றும் குடும்ப நல சேவைகள் துறையில
வேலைப் பார்க்கிறேன்.

05:47.681 --> 05:51.142
உங்க மகளுக்கு நடந்ததுக்கு
ஒரு அதிகாரப்பூர்வ விசாரணையை ஆரம்பிச்சிருக்கோம்.

05:51.143 --> 05:53.437
இது ஒரு அவசர பாதுகாப்பு ஆர்டர்.

05:55.063 --> 05:58.357
இந்த விசாரணை நடக்கும் போது,
உங்க குழந்தைகளின் பாதுகாப்புக்காக

05:58.358 --> 06:00.026
நீங்க வீட்டை விட்டு வெளியேறணும்.

06:00.027 --> 06:03.363
உங்க மைனர் குழந்தைகளை மேற்பார்வை இல்லாம
நீங்க தொடர்பு கொள்ளக் கூடாது.

06:05.657 --> 06:06.658
என்ன?

06:07.451 --> 06:09.577
- இந்த நீதிமன்ற ஆர்டரை நீங்க மீறினா…
- அதெல்லாம் முடியாது.

06:09.578 --> 06:11.788
- அதெல்லாம் முடியாது.
- …உங்களைக் கைது பண்ண வேண்டியிருக்கும்.

06:12.956 --> 06:14.332
இல்ல, நான்…

06:14.333 --> 06:15.958
நான் ஒரு நல்ல அம்மா.

06:15.959 --> 06:18.211
நீங்க வேணும்னா நீதிமன்றத்துல போய் பேசலாம்.

06:18.212 --> 06:21.547
அவங்க கிட்ட சொல்லுங்க… ஹாவர்ட்,
நான் ஒரு நல்ல அம்மான்னு சொல்லுங்க.

06:21.548 --> 06:23.382
அது தெரியாம நடந்த ஒண்ணு.

06:23.383 --> 06:25.219
- நான் என் மனைவி கிட்ட தனியா பேசலாமா?
- சரி.

06:27.930 --> 06:29.096
நாம கேஸ் போடலாம், ஹாவர்ட்.

06:29.097 --> 06:30.848
அவங்க கிட்ட சொல்லுங்க…

06:30.849 --> 06:33.059
- எலனார் நமக்கு ஒரு வக்கீல் ஏற்பாடு பண்ணுவா.
- அது எங்க?

06:33.060 --> 06:34.228
எது எங்க?

06:35.646 --> 06:37.271
ஆர்டெமிஸ் படுக்கையிலேயே ஒன்னுக்கு
போயிட்டதால என்னை எழுப்பினா.

06:37.272 --> 06:38.607
உன்னைத் தேடிட்டிருந்தா.

06:39.775 --> 06:41.109
மொத்த வீட்டையும் தேடினா.

06:42.361 --> 06:44.946
நீ மொபைல் பார்த்திட்டு அப்படியே

06:44.947 --> 06:47.907
சோஃபாவில படுத்திட்டேன்னு நினைச்சேன்,

06:47.908 --> 06:50.327
பிறகு ஆஃபீஸ்ல பார்த்தேன்.

06:51.036 --> 06:53.038
எல்லாத்தையும் கிளறி வச்சிருந்த…

06:54.998 --> 06:57.251
என்னோட பீரோவில இருந்து ஏதோ எடுத்திருக்க.

07:09.137 --> 07:11.390
அந்த மாத்திரைகள்
எட்டாத உயரத்தில ஷெல்ஃப்ல இருந்துச்சு.

07:14.518 --> 07:16.728
பசங்க அதை எட்டி எடுக்குறதுக்கு
வாய்ப்பே இல்ல.

07:17.563 --> 07:19.648
- அது உங்களுக்குத் தெரியும்.
- மேரி.

07:20.232 --> 07:21.233
நீங்க தான் பண்ணிருக்கீங்க.

07:24.069 --> 07:27.280
நம்ம குழந்தைக்கு விஷத்தைக் கொடுத்திருக்கீங்க.

07:27.281 --> 07:28.948
நான் எதுக்காக அப்படிப் பண்ணப் போறேன்?

07:28.949 --> 07:32.285
ஏன்னா எனக்குத் தெரியும், ஹாவர்ட்.

07:32.286 --> 07:36.372
நீங்க தான் நான்ஸியைக் கொன்னீங்கன்னு தெரியும்.

07:36.373 --> 07:37.875
இப்போ

07:38.667 --> 07:43.713
எனக்கு அது உறுதியா தெரியும்.

07:43.714 --> 07:48.509
பெப்பர்மின்ட் டப்பாவில கொஞ்சம் உற்சாக மாத்திரைகள்
வச்திருந்ததுக்காக உன்னை ஜெயிலில போடப் போறாங்க.

07:48.510 --> 07:50.846
அவங்களுக்கு பாதிக் கதை தான் தெரியும்.

07:52.306 --> 07:54.266
நீ அநேகமா குழந்தைகளை
திரும்பப் பார்க்கப் போறதே இல்ல.

07:55.517 --> 07:58.020
டேய்!

07:59.479 --> 08:01.480
நாயே!

08:01.481 --> 08:03.232
- மேரி! நிறுத்து!
- நீயெல்லாம்!

08:03.233 --> 08:04.400
- கொஞ்சம் அமைதியா இருங்க.
- பொய்யா சொல்ற?

08:04.401 --> 08:06.235
- நீ எப்படி அவங்கள எடுப்ப?
- மே'ம். மே'ம்!

08:06.236 --> 08:08.446
- நீ… என் குழந்தைக்கு விஷத்தை கொடுத்துட்டான்!
- ஹே! என்ன…

08:08.447 --> 08:09.614
நான் சொல்றதை கேளுங்க!

08:09.615 --> 08:12.158
- என் மனைவி வருத்தத்தில இருக்கா.
- என் குழந்தைக்கு விஷம் கொடுத்துட்டான்!

08:12.159 --> 08:13.868
சார்,
என் மனைவி சும்மா வருத்தத்தில இருக்கா.

08:13.869 --> 08:15.620
- பொய் சொல்லாத!
- ப்ளீஸ், அவங்கள கூட்டிட்டுப் போங்க…

08:15.621 --> 08:17.997
இல்ல, இல்ல!
நான் கூட்டிட்டுப் போறேன். அவ என் கூட வரட்டும்.

08:17.998 --> 08:20.208
அவன் கூட என் குழந்தைகளை
விட்டுப் போக மாட்டேன், எல்லி!

08:20.209 --> 08:22.293
- இல்ல!
- இங்க பாரு… நிறுத்து. மேரி. நிறுத்து.

08:22.294 --> 08:24.170
- என்னைப் பாரு! நிறுத்து. நிறுத்து!
- என் குழந்தைங்க…

08:24.171 --> 08:27.298
- நீ நிறுத்து. நாம பார்த்துக்கலாம்.
- குழந்தைக்கு விஷம்…

08:27.299 --> 08:28.591
நிறுத்து.

08:28.592 --> 08:31.386
- இதை இன்னும் மோசமாக்குற. ப்ளீஸ்.
- என் குழந்தைங்க…

08:31.970 --> 08:34.264
அவளை விடுங்க. ப்ளீஸ், ப்ளீஸ்.

08:35.349 --> 08:36.933
- குழந்தைக்கு விஷத்தை…
- சரி, சரி.

08:37.558 --> 08:38.559
சரி, சரி.

08:40.687 --> 08:41.688
மேரி…

08:50.697 --> 08:54.200
கடைக்கு போறதுக்கு முன்னாலயே
அந்த புக்கைப் பிரிண்ட் பண்றதை நிறுத்தியாச்சு.

08:54.201 --> 08:57.537
ஹாவர்ட் கிட்ட மட்டும் தான் "கேட்டுலஸ் V-ன்"
இந்த மொழிபெயர்ப்பு இருக்கு.

08:57.538 --> 09:00.331
பல வருஷங்களுக்கு முன்னால நாங்க
முதல்ல பழக ஆரம்பிச்சப்ப எனக்குக் கொடுத்தார்.

09:00.332 --> 09:03.543
அதே புக்கை தான் நான்ஸிக்கும் கொடுத்திருக்கார்.

09:03.544 --> 09:07.380
நான் நேத்து உங்க வீட்டுக்கு வந்தப்போ
இது பத்தி உங்களுக்குத் தெரியவே தெரியாதா?

09:07.381 --> 09:10.217
நீங்க போன பிறகு தான் நான் இதைப் பத்தி
கண்டுப்பிடிச்சேன்.

09:11.468 --> 09:13.095
அவர் மோசமானவரு.

09:14.012 --> 09:15.096
கூசாம பொய் சொல்றவரு.

09:15.097 --> 09:16.932
அதுவும் நேத்து தான் தெரிஞ்சதா?

09:18.517 --> 09:22.563
சில சமயம் நாம சில உண்மைகளை ஏத்துக்க மாட்டோம்.

09:23.522 --> 09:25.816
உள்ளதை உள்ளபடி பார்க்காம
நாம பார்க்க நினைக்கிறதை மட்டும் பார்ப்போம்.

09:26.400 --> 09:28.067
ஆனால் இது? இந்த மோதிரம்?

09:28.068 --> 09:31.028
இந்த ஆதாரம் போதும், டிடெக்டிவ்.
நீங்க இதை பயன்படுத்தலாம்.

09:31.029 --> 09:33.030
அவரை கைது பண்ணி,
அவரோட கைரேகைகளை நீ எடுக்கலாம்.

09:33.031 --> 09:35.867
சம்பவ இடத்தில கிடைச்ச எது கூடவாவது
நீங்க அதை ஒப்பிட்டு பார்க்கலாம்.

09:35.868 --> 09:37.077
நான் உங்க கிட்ட உண்மையைச் சொல்றேன்.

09:37.578 --> 09:40.789
என் கணவர் என் நெருங்கின தோழி கூட
படுத்திட்டிருந்தார்.

09:41.999 --> 09:43.041
அவளைக் கொலை பண்ணிட்டார்.

09:44.918 --> 09:47.671
இல்லேன்னே வேறெப்படி நான்ஸியோட மோதிரம்
எங்க வீட்டுக்கு வந்திருக்கும்?

09:50.132 --> 09:51.383
மன்னிக்கணும்.

09:53.218 --> 09:55.219
அவங்கள கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி, ஜோடி.

09:55.220 --> 09:58.598
- ப்ளீஸ், வாங்க.
- இல்ல, எனக்குச் சொல்றதுக்கு வேற எதுவும் இல்ல.

09:58.599 --> 10:00.976
சரி.
இது ஒரு நிமிஷத்தில முடிஞ்சிடும்.

10:16.700 --> 10:20.579
மிஸ். புஷே,
இந்த பொருட்களை உங்களுக்குத் தெரியுதா?

10:21.830 --> 10:23.331
லா மேர்

10:23.332 --> 10:28.921
ஆமா, இதெல்லாம் நான்ஸியோட பொருட்கள்.
ஆமா, நான்ஸி லாரன் ஹென்னஸி.

10:33.133 --> 10:35.302
எனக்குப் புரியல. இது ஆதாரமா?

10:42.309 --> 10:43.726
என்ன நடக்குது?

10:43.727 --> 10:45.645
ஹாவர்ட் உங்க கிட்ட பேசினாரா?

10:45.646 --> 10:49.899
இந்த பெட்டி என் கைக்கு எப்படி வந்துச்சுன்னு
கேட்கிறீங்கன்னா…

10:49.900 --> 10:52.528
ஆமா, உங்க கணவர்
காலைல இங்க வந்தார், ஆனால்…

10:53.820 --> 10:55.071
எனக்கு ஒண்ணு புரிய வையுங்க.

10:55.072 --> 10:58.534
இந்தப் பொருட்கள் உண்மையில
எப்படி உங்க வீட்டுக்குள்ள வந்துச்சு?

10:59.368 --> 11:01.954
அவர் திருமதி. ஹென்னஸி கிட்ட இருந்து திருடினாரா
இல்ல நீங்க திருடினீங்களா?

11:06.917 --> 11:08.544
இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.

11:09.127 --> 11:13.047
- ஓ, மேரி. நீ என்ன பண்ண?
- அவ…

11:13.048 --> 11:16.342
அவ இது இல்லேன்னு கூட கவனிச்சிருக்க மாட்டா.

11:16.343 --> 11:18.970
- நான்ஸி கிட்ட நிறைய இருந்துச்சு.
- கடவுளே.

11:18.971 --> 11:22.431
நீங்க நான்ஸி மேல பொறாமையா, அவங்களையே
நினைச்சிட்டிருந்ததா உங்க கணவன் சொல்றார்.

11:22.432 --> 11:23.516
அப்படியா?

11:23.517 --> 11:25.102
அவருக்கு இது தான் வேணும்.

11:26.520 --> 11:29.647
- உங்கள திசை திருப்பப் பார்க்கிறாரு.
- இதனால தான் அவர் தவறான உறவு வச்சிருக்கிறதா

11:29.648 --> 11:32.650
- சொல்றீங்கன்னு சொல்றார்.
- இல்ல, அவர் அவள மயக்கிட்டார்.

11:32.651 --> 11:36.113
அவளை கொன்னுட்டார்.
அவர் தான் மோசமானவர். நானில்ல.

11:40.409 --> 11:43.996
இந்த வேலையை நான்
ரொம்ப நாளா பண்ணிட்டிருக்கேன்.

11:44.997 --> 11:49.041
வெவ்வேறு உறவுகள்ல இருந்த பல சொந்தங்களை
நான் பார்த்திருக்கேன்.

11:49.042 --> 11:53.296
ஆனால், இது, உங்க மூணு பேருக்குள்ள இருந்தது,

11:53.297 --> 11:57.968
அதை என்னன்னு சொல்றதுன்னு கூட தெரியல,
ஆனால் அது நிச்சயம் நட்பு கிடையாது.

12:04.349 --> 12:05.559
வந்ததுக்கு நன்றி.

12:28.040 --> 12:30.625
- அம்மா?
- ஹே, ஹாய்.

12:30.626 --> 12:33.211
அம்மா. என்ன நடக்குது?
நீங்க வீட்டுக்கு வரமாட்டீங்கன்னு அப்பா சொன்னார்.

12:33.212 --> 12:34.795
- நீ எங்க இருக்க?
- ஆஸ்பத்திரியில இருக்கேன்.

12:34.796 --> 12:36.381
ஜூனி, ஆர்டெமிஸை பார்க்கணும்னு சொன்னா.

12:37.633 --> 12:39.592
- அவ நல்லாயிருக்காளா?
- ஆமா.

12:39.593 --> 12:40.801
அவ முழிச்சிருக்கா.

12:40.802 --> 12:43.555
அவளுக்கு ஒண்ணுமில்லேன்னு டாக்டர் சொன்னார்.
நாளைக்கு வீட்டுக்குப் போகலாமாம்.

12:46.266 --> 12:48.100
- நல்ல வேளை.
- என்ன நடக்குது?

12:48.101 --> 12:51.480
நான் எல்லாத்தையும் சீக்கிரமே விளக்குறேன்.
சரியா, செல்லம்?

12:52.272 --> 12:53.565
எனக்காக ஒண்ணு பண்ண முடியுமா?

12:55.192 --> 12:56.610
சரி. என்ன?

12:57.236 --> 12:59.613
உன் தங்கைகளை உங்க அப்பாவோட தனியா விடாத.

13:00.239 --> 13:02.115
உன் கண் பார்வையில இருந்து அவங்களை
விட்டுராத.

13:02.741 --> 13:03.909
முடியுமா உன்னால?

13:06.787 --> 13:08.829
ம், அம்மா, நான்… நான் போகணும்.

13:08.830 --> 13:10.666
இது கஷ்டம்னு எனக்குத் தெரியும்.

13:11.625 --> 13:13.210
- தெரியும்.
- அம்மா, என்ன நடக்குதுன்னு தெரியல…

13:14.002 --> 13:15.170
ஆனால் நான் உங்க பக்கம் இருக்கேன்.

13:35.357 --> 13:36.775
மார்கஸ் கிட்ட பேசினேன்.

13:37.401 --> 13:40.362
ஆர்டீ முழிச்சிக்கா, அவ இப்ப பரவாயில்ல.

13:42.489 --> 13:43.574
நல்லது.

13:50.581 --> 13:54.126
என்னோட வக்கீல்களோட வேலைப் பார்க்கிற, ஒரு பிரைவெட்
டிடெக்டிவ் கிட்ட காலைல பேசப் போறேன்.

13:55.711 --> 13:59.172
அவர்கிட்ட கொலை நடந்த இடத்தோட
ஃபோட்டோக்கள் இருக்கு,

13:59.173 --> 14:03.677
ஹாவர்டுக்கும், இந்த கொலைக்கும் ஏதாவது
தொடர்பு இருக்கான்னு அவர் பார்க்கப் போறார்.

14:04.219 --> 14:08.890
ஏன்னா இந்த நேரத்துல வலுவான ஆதாரம்
இருந்தா தான் அவங்க கிட்ட பேச முடியும்.

14:08.891 --> 14:14.021
ஆமா. என்னால,
இப்ப நாம பேசுறது எடுபடாது.

14:20.944 --> 14:21.987
நீ என் மேல கோபமா இருக்க.

14:22.571 --> 14:23.780
இல்ல.

14:24.656 --> 14:27.159
- நான் நான்ஸியை வெறுக்கல.
- தெரியும்.

14:33.874 --> 14:36.834
நான் ஏன் அந்த பொருட்களை எடுத்தேன்னு
உனக்கு தெரிஞ்சுக்க விருப்பமில்லையா, ஏன்னா…

14:36.835 --> 14:40.756
அது உனக்குத் தெரியுமா? சொல்லு?

14:46.261 --> 14:47.429
அம்மா கூப்பிடுறாங்க.

14:48.222 --> 14:51.849
நான் ராபர்ட் கூட ஓடிப் போய், புஷே குடும்பப் பேரை

14:51.850 --> 14:54.269
நிரந்தரமா நாசம் பண்ணிட்டேன்னான்னு
பார்க்கக் கூப்பிடுறாங்க.

14:56.063 --> 14:57.105
ராபர்ட் எப்படி இருக்கான்?

14:57.648 --> 14:58.982
எனக்கு எப்படித் தெரியும்?

15:03.153 --> 15:05.030
நாளைக்கு நாம சீக்கிரமா எழுந்திருச்சு கிளம்பணும்.

15:18.919 --> 15:20.753
சாப்பிட எதுவும் சொல்லட்டுமா?

15:20.754 --> 15:21.838
த பெஸ்ட் ப்ரேக்ஃபர்ஸ்ட்

15:21.839 --> 15:23.714
இங்க ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் நல்லா இருக்கும்.

15:23.715 --> 15:26.175
இல்ல வேண்டாம். இருக்கட்டும்.

15:26.176 --> 15:27.760
ஃபோட்டோ கொண்டு வந்தீங்களா?

15:27.761 --> 15:29.429
நேரா விஷயத்துக்கு வந்திட்டீங்க.
எனக்குப் பிடிச்சிருக்கு.

15:30.889 --> 15:33.808
உங்களுக்கு அசௌகரியமா இருக்காதே?
ஏன்னா இதைப் பார்க்க சங்கடமா இருக்கும்.

15:33.809 --> 15:35.561
அவளை என்ன பண்ணான்னு நான் பார்க்கணும்.

15:56.707 --> 15:59.877
சரி. சரி.

16:00.961 --> 16:02.378
- நன்றி.
- சரி.

16:02.379 --> 16:05.591
எங்களுக்கு நேர்ல காட்றீங்களா?
சம்பவம் நடந்த இடத்தை?

16:06.884 --> 16:10.094
நாம அதைப் பத்தி பேசலையே.
என்னோட லைசென்ஸ் போயிடும்.

16:10.095 --> 16:12.638
மேரி. நமக்கு தேவையானது எல்லாம்
இந்த போட்டோஸ்ல இருக்கு.

16:12.639 --> 16:13.765
இல்ல.

16:14.850 --> 16:17.268
எதுக்காக அங்க போகணும்னு சொல்ற?

16:17.269 --> 16:19.312
இதை பண்ணவன் தொழிலா பண்றவன் கிடையாது.

16:19.313 --> 16:21.523
எனக்கு… அவரைத் தெரியும்.

16:22.691 --> 16:24.776
அவர் ஏதாவது தப்புப் பண்ணியிருந்தா,
அதைக் கண்டுப்பிடிச்சிடுவேன்.

16:38.624 --> 16:40.833
இது தான். நடமாட்டம் இல்லாத பகுதி.

16:40.834 --> 16:43.044
அந்த பெண் கொலை செய்யப்பட்ட இடம் இது தான்.

16:43.045 --> 16:45.880
அவங்க பேரு நான்ஸி, ஏதோ ஒரு "பெண்" இல்ல.

16:45.881 --> 16:48.509
உண்மையியேலே இதை பண்ணும் போது
அவங்க பேரை சொல்லணும்னு விரும்புறீங்களா?

16:49.760 --> 16:51.470
கொலையாளி அவங்கள இங்க
வர வைக்கிறான்.

16:51.970 --> 16:55.432
இரத்தம் தெறிச்சதை வச்சுப் பார்க்கிற போது,
அவன் ஆறடிக்குக் குறையாம இருக்கணும்.

16:56.099 --> 16:57.683
அவங்கள இங்க வர வைக்கிறான்.

16:57.684 --> 17:00.937
அவங்களால ஓட முடியல. அவங்களை தள்ளி விடுறான்.

17:00.938 --> 17:04.899
தலையில உள்ள அடியை வச்சிப் பார்க்கிற போது
ஒரே அடியில எல்லாம் முடிஞ்சிருக்கு.

17:04.900 --> 17:06.817
பிறகு அவங்க இங்க விழுறாங்க.

17:06.818 --> 17:09.654
பொறுங்க, தண்ணி பக்கத்தில சடலம் கிடைச்சதா
போலீஸ் சொன்னதா நினைச்சேன்.

17:09.655 --> 17:10.780
அப்படி தான் சொன்னாங்க.

17:10.781 --> 17:14.200
ஆமா. கிழக்கு பக்கமா அவங்கள
ஒரு 30 அடி இழுத்துட்டு போயிருக்கான்.

17:14.201 --> 17:15.702
அங்க தான் அவங்கள கடைசியா போட்டிருக்கான்.

17:16.744 --> 17:20.499
கால்களைப் பிடிச்சு சடலத்தை
இழுத்துட்டுப் போறது எளிது.

17:24.670 --> 17:26.629
ஆனால் ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு.

17:26.630 --> 17:30.758
பாதி தூரம் போகும் போது,
அவன் ஒத்தை காலை மட்டும் இழுத்துட்டு போயிருக்கான்.

17:30.759 --> 17:32.260
உங்களுக்கு எப்படித் தெரியும்?

17:32.261 --> 17:36.430
ம், இரத்தம் படிஞ்ச விதம்
இந்த இடத்தில இருந்து மாறுது.

17:36.431 --> 17:37.682
எனக்கு ஒண்ணு தோணுது.

17:37.683 --> 17:40.685
இவனால சடலத்தை

17:40.686 --> 17:43.605
ரெண்டு கையாலயும் இழுத்துட்டு போக முடியல.

17:44.314 --> 17:48.986
மிச்ச தூரத்துக்கு
வலது கையை மட்டும் பயன்படுத்தியிருக்கான்.

17:50.153 --> 17:51.821
அதுக்காக அவன் பலம் இல்லாதவன்னு கிடையாது.

17:51.822 --> 17:54.949
கொலையாளிக்கு ஏதோ அடிப்பட்டிருக்குன்னு
நினைக்கிறேன்.

17:54.950 --> 17:56.869
முதுகு வலியா இருக்கலாம்
இடது தோள்ல அடிப்பட்டிருக்கணும்.

18:15.971 --> 18:17.513
வீட்ல யாரும் இல்லேன்னு
உறுதியா தெரியுமா?

18:17.514 --> 18:19.390
ஆர்டீயை இன்னும் வீட்டுக்கு அனுப்பல.

18:19.391 --> 18:21.559
எல்லாரும் அங்க ஆஸ்பத்திரியில இருக்கிறதா
மார்கஸ் சொன்னான்.

18:21.560 --> 18:23.227
நீ இங்க வரக் கூடாது, மேரி.

18:23.228 --> 18:25.229
நாம நாளைக்கு அந்த டாக்டரைத் தேடிப் போகலாமா?

18:25.230 --> 18:28.733
இல்ல, என்னால பண்ண முடியும்.
என்னால பண்ண முடியும்.

18:28.734 --> 18:31.319
நீ என் கிட்ட எதுவும் நிரூபிக்க வேண்டியதில்ல.

18:31.320 --> 18:32.654
தெரியும்.

18:36.074 --> 18:37.366
உள்ள போயிட்டு உடனே வந்திடணும்.

18:37.367 --> 18:38.744
- சரி.
- நான் இங்கேயே இருக்கேன்.

19:34.174 --> 19:35.926
ம், இது புத்திசாலித்தனமாத் தெரியலையே.

19:36.677 --> 19:39.679
குழந்தைகள் நல சேவையில இருந்து இப்போ சொல்லாம
கொள்ளாம வந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு.

19:39.680 --> 19:41.223
நீ சரியான பிரச்சினையில மாட்டிக்குவ.

19:42.307 --> 19:43.725
இது இன்னும் என் வீடுதான்.

19:50.023 --> 19:51.024
கையில என்ன வச்சிருக்க?

19:55.112 --> 19:56.738
எனக்குப் பிடிக்கல, மேரி.

19:57.531 --> 19:58.907
நீ என்னைப் பார்த்து பயப்படுற.

19:59.700 --> 20:02.118
நீ எப்படி நடுங்குற பாரேன்.

20:02.119 --> 20:03.453
நீங்க நான்ஸியை கொன்னுட்டீங்க.

20:04.204 --> 20:06.038
நீ அதை சொல்றதை நிறுத்துறியா?

20:06.039 --> 20:08.875
போலீஸுக்கு அது தெரியும்.

20:08.876 --> 20:13.297
கொலையாளிக்கு இடது தோள்ல
அடிப்பட்டிருக்குன்னு அவங்களுக்குத் தெரியும்.

20:14.047 --> 20:15.465
அவங்களுக்குத் தெரியும்.

20:16.967 --> 20:18.552
என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்.

20:19.803 --> 20:21.013
அது தான் உன் திட்டமா?

20:21.972 --> 20:25.808
இதை எடுத்துட்டு போய்,
உலகத்திலேயே பரவலான ஜிம் காயம்

20:25.809 --> 20:27.936
எனக்கு இருக்குன்னு
அவங்க கிட்ட படம் போட்டு காட்டப் போறியா?

20:30.689 --> 20:34.066
கொஞ்சம் உட்காருறியா?
நின்னா சண்டைக்கு வர மாதிரி இருக்குது.

20:34.067 --> 20:36.486
நாம… நாம வழக்கமா பேசுற மாதிரி
ஒரு நிமிஷம் பேசலாமா?

20:38.447 --> 20:40.782
அதுல ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டியே.

20:41.825 --> 20:43.452
எல்லாரையும் விட உனக்கு என்னை நல்லா தெரியும்.

20:44.453 --> 20:45.454
இல்ல.

20:46.455 --> 20:47.664
எனக்கு உங்களைத் தெரியாது.

20:50.042 --> 20:52.127
நான் கல்யாணம் பண்ணி கிட்ட,
நான்…

20:54.379 --> 20:56.256
நான் காதலிச்ச ஆள் இல்ல நீங்க.

20:57.925 --> 21:01.969
நீங்க பண்ண மோசமான விஷயங்களை
அவர் பண்ணியிருக்க மாட்டார்.

21:01.970 --> 21:03.888
நான் எதுவும் மோசமா பண்ணலயே.

21:03.889 --> 21:05.307
நீ தான் பண்ணிருக்க.

21:06.683 --> 21:09.644
உனக்குத் தெரியலயா?
இந்த குடும்பத்தையே நாசமாக்கிட்ட.

21:09.645 --> 21:11.354
இல்ல, நிறுத்துங்க.

21:11.355 --> 21:12.522
நிறுத்துங்க.

21:12.523 --> 21:15.107
- எதை நிறுத்தணும்?
- என் மேல பொய்யா திரிக்கிறத நிறுத்துங்க.

21:15.108 --> 21:17.109
நீ என்ன பண்ண நினைச்சிட்டிருக்க?
உனக்கு என்ன தான் வேணும்?

21:17.110 --> 21:21.114
நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போகணும்,
என் குழந்தைங்க கிட்ட இருந்து விலகிப் போகணும்.

21:22.324 --> 21:24.909
அதோட நீங்க பண்ண காரியத்துக்கு
ஜெயில்ல அழுகிப் போகணும்.

21:24.910 --> 21:25.911
அதுக்குப் பிறகு?

21:26.495 --> 21:29.248
நான் இல்லேன்னா பிள்ளைங்களை உன் கிட்ட
ஒப்படைப்பாங்கன்னு நினைக்கிறியா?

21:29.831 --> 21:32.709
அல்லது நிலையில்லாத உன் குடும்பதுல
யார்கிட்டயும் கொடுப்பாங்கன்னு நினைக்கிறியா?

21:33.210 --> 21:37.630
குழந்தைங்க அனுபவிச்ச
விஷயங்களை தெரிஞ்சும் எந்தவொரு நீதிபதியும்

21:37.631 --> 21:39.298
அவங்க பாட்டியோட கஞ்சா தோட்டத்துக்கு
அனுப்ப மாட்டார்.

21:39.299 --> 21:43.261
அதே மாதிரி எலனாரையும் கொலையில சந்தேகப்படுறதால
அவங்க கிட்டயும்…

21:43.262 --> 21:44.554
நீ நல்லாவே இருக்க மாட்ட.

21:44.555 --> 21:47.558
ஆக, அவங்கள தத்து தான் கொடுப்பாங்க.
அதை நீ விரும்ப மாட்டேன்னு நினைக்கிறேன்.

21:50.060 --> 21:52.104
நான் இன்னும் உன்னை நேசிக்கிறேன், மேரி,

21:52.813 --> 21:54.981
நீ என்ன கட்டுக் கதைகள் சொன்னாலும்.

21:54.982 --> 21:57.817
நம்மளால இதை கடந்து போக முடியும்னு
நான் இன்னும் நம்புறேன்.

21:57.818 --> 21:59.694
திரும்பவும், முதல்ல இருந்து.

21:59.695 --> 22:01.279
எனக்கு அது தான் வேணும்.

22:01.280 --> 22:04.575
இந்த ஊரை விட்டு,
ஒஹாயோவுக்கு குடும்பமாப் போயிடலாம்.

22:05.450 --> 22:06.994
நீ குழந்தைகளை எவ்வளவு நேசிக்கிறேன்னு தெரியும்.

22:08.871 --> 22:10.162
எல்லாத்தையும் விட.

22:10.163 --> 22:12.374
நாம இன்னமும் குடும்பமா இருக்கலாம், நீயும், நானும்.

22:13.584 --> 22:16.170
"குலோயியும் டாஃப்னிஸும்" மாதிரி.

22:17.671 --> 22:20.424
என்ன பிரச்சினை வந்தாலும்,
கடைசியில சேர்ந்திருக்கணும்னு விதி.

22:24.052 --> 22:25.554
கடவுளே, ஒரு காலம் அதை நம்பினேன்.

22:28.432 --> 22:30.142
அதுக்குப் பிறகு ஜெனி கிட்ட பேசினேன்.

22:33.187 --> 22:34.688
அவங்க என் கிட்ட காண்பிச்சாங்க.

22:36.190 --> 22:37.858
என் கிட்ட அந்த வடுவை காண்பிச்சாங்க.

22:41.486 --> 22:44.656
உங்கள விட்டு அவங்க கிளம்ப நினைச்ச அன்னிக்கு
ஏற்பட்ட…

22:45.365 --> 22:46.658
வடு.

22:49.661 --> 22:52.331
உங்க வார்த்தைகள். உங்க கதைகள்.

22:54.750 --> 22:59.379
அதெல்லாம் சரி,
ஆனால் உடம்புல ஒரு வடு, அது ஆதாரம்.

23:00.589 --> 23:03.008
ஏன்னா நீங்க அது தானே பண்ணுவீங்க, இல்லையா? என்ன?

23:04.384 --> 23:06.136
ஒரு அப்பாவி பெண் கிட்ட போய்,

23:07.095 --> 23:12.476
அவங்க கிட்ட இருந்து எல்லாத்தையும் உறிஞ்சு,
உங்கள மாதிரி மாத்திடுவீங்க.

23:14.895 --> 23:16.980
ஆனால் எனக்கு ஒரு விஷயம் புரியல.

23:18.106 --> 23:21.527
ஏன் நான்ஸி, ஹாவர்ட்?

23:24.404 --> 23:26.156
உங்களுக்கு யாரு வேணும்னாலும் கிடைப்பாங்க.

23:27.866 --> 23:28.909
ஆனால் ஏன் அவளை?

23:31.286 --> 23:32.996
என்னை மன்னிச்சுடு, மேர்.

23:38.210 --> 23:39.336
என்னை மன்னிச்சிடு.

23:44.258 --> 23:46.926
நான்ஸி மேல ஒரு ஈர்ப்பு இருந்தது
எனக்கு மட்டுமில்ல.

23:46.927 --> 23:48.220
உனக்கும் தான்.

23:52.558 --> 23:55.018
- இல்ல.
- நீ அவளை நேசிச்சேன்னு தெரியும்.

23:57.062 --> 23:59.063
நீ அவ அழகுன்னு நினைச்ச.

23:59.064 --> 24:01.358
அதனால தான் நீ ஆடுன ஆட்டத்துக்கு
நானும் கூட சேர்ந்து ஆடுனேன்.

24:05.070 --> 24:06.989
நீ அவளா இருக்கிறதா கற்பனைப் பண்ணும் போது,

24:07.573 --> 24:12.995
உனக்கு மூடு வர்றதை பார்க்கிறது
உண்மையிலேயே செக்ஸியா இருந்துச்சு.

24:15.581 --> 24:17.290
அவ டிரெஸ்ஸைப் போட்டுக்கிட்டு…

24:17.291 --> 24:19.000
வெல்கம் பேக், திரு., திருமதி. ஹென்னஸி.

24:19.001 --> 24:20.711
அவ கம்மலைப் போட்டுக்கிட்டு…

24:24.089 --> 24:25.632
உன் மேல அவள மாதிரியே
வாசனை வரணும்னு வேற விரும்பின.

24:28.719 --> 24:29.720
தயவு செய்து நிறுத்துங்க.

24:39.646 --> 24:41.190
எவ்வளவு ஜாலியா இருந்தோம்னு ஞாபகம் இருக்கா?

24:44.610 --> 24:45.652
சீக்கிரம்.

24:51.700 --> 24:53.493
உனக்கு இது எவ்வளவு வேணும்னு சொல்லு, நான்ஸி.

25:04.588 --> 25:08.175
இப்ப நீ அதை டிடெக்டிவ் கேன்ஸ் கிட்ட
எடுத்துட்டு போய்,

25:09.092 --> 25:11.345
மொத்த கதையையும் அவங்க கிட்ட சொல்லு.

25:13.514 --> 25:15.015
ஏன்னா என் மேல தப்பு இருக்குன்னா…

25:17.309 --> 25:18.519
உன் மேலயும் தான் தப்பு இருக்கு.

25:36.620 --> 25:38.914
என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நேரம்?

25:40.499 --> 25:41.500
வா போகலாம்.

26:11.780 --> 26:13.031
காரை நிறுத்து.

26:14.575 --> 26:17.702
எல்லி, தயவு செய்து காரை நிறுத்து.
எல்லி, நிறுத்து! காரை நிறுத்து!

26:17.703 --> 26:19.662
- இங்கேயா?
- காரை நிறுத்து!

26:19.663 --> 26:20.746
சரி.

26:20.747 --> 26:21.748
நிறுத்து.

26:22.499 --> 26:23.500
உனக்கு ஒண்ணுமில்லையே?

26:24.585 --> 26:25.794
என்ன நடக்குது?

26:28.589 --> 26:29.839
சே.

26:29.840 --> 26:31.133
மேரி!

26:33.510 --> 26:34.845
நீ என்ன பண்ற?

26:35.762 --> 26:36.889
மேரி, நீ என்ன…

26:37.389 --> 26:39.016
என்ன நடந்துச்சு?

26:40.017 --> 26:42.476
என் கிட்ட பேசு. என்ன நடந்துச்சுன்னு சொல்லு.

26:42.477 --> 26:43.812
என்னால முடியாது.

26:44.980 --> 26:46.522
- என்னால முடியாது.
- என்ன?

26:46.523 --> 26:48.733
இதுல எதுவும் என்னால பண்ண முடியாது.
என்னால போலீஸ் கிட்ட போக முடியாது.

26:48.734 --> 26:50.068
நீ என்ன பேசுற?

26:50.569 --> 26:51.570
அவர் ஜெயிச்சிடுவார்.

26:52.070 --> 26:53.655
- இல்ல, அவன் ஜெயிக்கக் கூடாது.
- ஹாவர்ட் ஜெயிச்சிடுவார்.

26:55.282 --> 26:57.074
நான் என் குழந்தைகளை இழந்திடுவேன்,
உனக்குப் புரியுதா?

26:57.075 --> 26:58.951
- நான்…
- அவன் ஜெயிலுக்குப் போனா…

26:58.952 --> 27:00.786
போக மாட்டார், உனக்குத் தெரியலையா?

27:00.787 --> 27:02.998
அவர் என்னை விட புத்திசாலி, எல்லி.

27:03.498 --> 27:05.750
நான் ஒரு அடி எடுத்து வச்ச,
அவர் ரெண்டு அடி முன்னால இருக்கார்.

27:05.751 --> 27:07.461
என்னை விட ரொம்ப புத்திசாலியா இருக்கார்.

27:08.086 --> 27:10.380
நான் ஏன் இதை பண்றேன்னே எனக்குத் தெரியல.

27:11.465 --> 27:13.174
நான்ஸி என்னை வேஸ்ட்ன்னு நினைச்சிருக்கா.

27:13.175 --> 27:14.800
இல்ல, நான்ஸி உன்னை விரும்பினா.

27:14.801 --> 27:17.428
ஆமா, என் கணவரோட அவ படுத்திட்டிருந்தா!

27:17.429 --> 27:20.849
ஹாவர்ட் கேவலமானவரா இருக்கலாம்,
ஆனால் நான்ஸி மேல தப்பு இல்லேன்னு சொல்ல முடியாது.

27:21.600 --> 27:22.726
அவளும் தப்பு பண்ணியிருக்கா.

27:23.310 --> 27:26.145
எல்லி, ப்ளீஸ். என்னால முடியாது.
இதுக்கு மேல என்னால எதையும் இழக்க முடியாது.

27:26.146 --> 27:28.232
என்னால அவங்கள இழக்க முடியாது, என்னால…
என்னால முடியாது.

27:29.441 --> 27:31.777
அவன்… அவன் ஒரு கொலைக்காரன்!

27:32.277 --> 27:37.699
அவன் ஒரு கொலைகார நாய்.
நம்ம நெருங்கிய தோழியை கொலை பண்ணியிருக்கான்!

27:38.200 --> 27:41.202
அது தான். அது தான் முக்கியம்.

27:41.203 --> 27:42.703
நீ சோர்ந்து போயிருக்கேன்னு புரியுது.

27:42.704 --> 27:45.456
உனக்கு பயமா இருக்குன்னு புரியுது.
எனக்கும் தான்.

27:45.457 --> 27:48.042
நாம வீட்டுக்குப் போறோம்,
படுக்கையில விழுறோம், அப்படியே தூங்கப் போறோம்,

27:48.043 --> 27:50.127
நாளைக்குக் காலைல சேர்ந்து எந்திரிக்கிறோம்.

27:50.128 --> 27:53.590
நாம திட்டமிடப்படி, ஹாவர்டோட மெடிக்கல்
ரிப்போர்ட்டோட போலீஸ் கிட்ட போறோம்.

27:56.051 --> 27:57.219
ப்ளீஸ்.

29:28.352 --> 29:29.353
மேர்.

29:39.404 --> 29:40.405
மேரி?

29:45.619 --> 29:46.620
கடவுளே.

29:47.746 --> 29:48.747
மேரி?

29:50.582 --> 29:52.542
- ஹே, நீங்கள் அழைப்பது மேரியை.
- ஜூனி.

29:52.543 --> 29:53.626
- சே.
- அப்புறம் என்னை!

29:53.627 --> 29:55.837
- எங்களால் இப்போது அழைப்பை…
- ஐயோ.

29:55.838 --> 29:57.797
ப்ளீஸ். மேரி?

29:57.798 --> 29:59.924
- ஹே, நீங்கள் அழைப்பது மேரியை.
- ஜூனி.

29:59.925 --> 30:01.385
- அப்புறம் என்னை!
- ஐயோ, ப்ளீஸ்.

30:02.219 --> 30:03.594
ஹே, நீங்கள் அழைப்பது மேரியை.

30:03.595 --> 30:05.096
- ஜூனி.
- அப்புறம் என்னை!

30:05.097 --> 30:07.348
எங்களால் இப்போது அழைப்பை எடுக்க இயலவில்லை
உங்கள் செய்தியை கூறவும்,

30:07.349 --> 30:10.269
- நாங்கள் திரும்ப அழைக்கிறோம்.
- மேரி, எங்க இருக்க?

30:35.335 --> 30:37.129
நான் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்.

30:40.716 --> 30:42.342
நான் ஒழுங்கா இருப்பேன்.

30:46.805 --> 30:48.265
சத்தியமா.

32:00.963 --> 32:01.964
மேரி!

32:03.799 --> 32:05.383
- எலனார், கடவுளே.
- அவள எங்க?

32:05.384 --> 32:07.552
- பக்கதுல வீட்ல எல்லாம் ஆட்கள் இருக்காங்க.
- மேரி எங்க?

32:07.553 --> 32:08.719
அவளுக்கு உன்னைப் பார்க்க விருப்பமில்ல.

32:08.720 --> 32:10.973
என்ன? நீ என்ன பண்ண?

32:11.473 --> 32:14.600
ஒண்ணும் பண்ணல. இது அவளோட விருப்பம்.
அவளா தான் இங்க வந்தா.

32:14.601 --> 32:16.102
வாய்ப்பே இல்ல.

32:16.103 --> 32:19.814
உனக்கு இது புதுசா இருக்கலாம், ஆனால் திருமண
வாழ்க்கையில ஏற்ற இறக்கங்கள் இருக்க தான் செய்யும்.

32:19.815 --> 32:22.817
மேரி என்னோட மனைவி, நான் அவளோட கணவன்,
நாங்க ஒரு குடும்பம்.

32:22.818 --> 32:23.901
மேரி!

32:23.902 --> 32:25.945
நீ என்ன நினைச்சாலும், எலனார்,

32:25.946 --> 32:27.489
நீ எங்க குடும்பத்துல ஒருத்தி இல்ல.

32:28.156 --> 32:30.157
அதனால என் இடத்தை விட்டு கிளம்பு, இல்ல
அத்துமீறி நுழைஞ்சதுக்காக

32:30.158 --> 32:31.868
உன்னை கைது பண்ண நான் போலீஸைக் கூப்பிடணும்.

32:31.869 --> 32:33.245
சே…

32:34.830 --> 32:35.831
மேரி!

32:37.291 --> 32:39.293
கடவுளே. மேரி?

32:40.085 --> 32:42.336
- என்ன ஆச்சு?
- என் இடத்தை விட்டு கிளம்பு.

32:42.337 --> 32:45.716
நீ என்ன பண்ற? அவன் என்ன பண்ணான்னு உனக்குத் தெரியும்.

32:46.425 --> 32:48.594
அவன் நான்ஸியை கொன்னுட்டான்.

32:49.553 --> 32:51.220
கோழையா இருக்காத, மேரி.

32:51.221 --> 32:53.055
- கிளம்பு.
- அவன் என்ன பண்ணான்னு அவனுக்கே தெரியும்!

32:53.056 --> 32:54.308
- உடனே கிளம்பு.
- மேரி!

33:02.232 --> 33:03.734
நான் போறேன், நான் போறேன்.

33:27.925 --> 33:29.717
தொடர்புகள்

33:29.718 --> 33:30.719
மேரி

33:31.887 --> 33:33.054
ஹே, நீங்கள் அழைப்பது மேரியை.

33:33.055 --> 33:34.597
- ஜூனி.
- அப்புறம் என்னை!

33:34.598 --> 33:37.559
எங்களால் இப்போது அழைப்பை எடுக்க இயலவில்லை
உங்கள் செய்தியை கூறவும், நாங்கள்…

33:46.401 --> 33:48.611
மிஸ். புஷே.
நீங்க வர்றது திரு. ஹென்னஸிக்குத் தெரியுமா?

33:48.612 --> 33:49.779
வீட்ல இருக்காரா?

33:49.780 --> 33:52.074
- இருக்கார் ஆனால் தனியா இல்ல.
- இது ரொம்ப அவசரமான ஒரு விஷயம்.

33:53.242 --> 33:55.327
நீங்க கேட்டதை எதை நான் பண்ணாம இருந்திருக்கேன்?

33:56.703 --> 33:59.205
- சாரி, சார்.
- எலனார், நீ… நீ இங்க என்ன பண்ற?

33:59.206 --> 34:00.581
நான் உன்கிட்ட பேசணும்.

34:00.582 --> 34:02.166
- அதுக்கு வாய்ப்பில்ல.
- இது சரியான…

34:02.167 --> 34:04.752
பார்த்தாலே தெரியுதே,
என் மகன் ரொம்ப மோசமான நிலைமையில இருக்கான்.

34:04.753 --> 34:07.506
- இது முக்கியமானது.
- அப்படின்னா உன் வக்கீல்களை பேசச் சொல்லு.

34:08.130 --> 34:09.757
நான்ஸியை கொன்னது ஹாவர்ட்.

34:11.385 --> 34:12.386
என்ன?

34:16.849 --> 34:20.600
ராபர்ட், என்ன மன்னிச்சிடு,
அவன் நான்ஸி கூட உறவு வச்சிருந்திருக்கான்.

34:20.601 --> 34:23.479
அது எப்போ ஆரம்பிச்சதுன்னு தெரில, அவங்க
சேர்ந்து வேலை பார்க்கும் போது ஆரம்பிச்சிருக்கலாம்.

34:23.480 --> 34:26.566
ஆனால் இதை பண்ணது அவன் தான்.
அவன் தான் நான்ஸியை கொலை பண்ணது.

34:26.567 --> 34:28.317
மேரி கிட்ட சாட்சி இருக்கு.

34:28.318 --> 34:30.903
நான்ஸி போட்டிருந்த கிளாடா மோதிரம்
ஞாபகம் இருக்கா?

34:30.904 --> 34:32.196
- ஆமா.
- அன்னைக்கு ராத்திரி அவ அதைப் போட்டிருந்தா.

34:32.197 --> 34:38.078
அதை நான்ஸியோட சடலத்திலிருந்து ஹாவர்ட் எடுத்து
மறைச்சு வச்சான். மேரி அதைக் கண்டுப்பிடிச்சிட்டா.

34:38.745 --> 34:39.996
ம், அப்படின்னா கேஸ் முடிஞ்சது.

34:41.248 --> 34:44.082
இது உண்மையா இருக்க வாய்ப்பில்ல.
இது சம்பந்தமில்லாம இருக்கே.

34:44.083 --> 34:45.334
ராபர்ட்,

34:45.335 --> 34:47.254
நான் மேரியை நம்புறேன்.

34:54.261 --> 34:56.846
ஏன், ஏன் இதை போலீஸ் கிட்ட
சொல்ல வேண்டியது தானே?

34:56.847 --> 34:59.098
சொன்னோம். முயற்சி பண்ணோம்,
ஆனால் அது…

34:59.099 --> 35:03.352
அது ரொம்ப சிக்கலானது. ஆனால் நீங்க
போலீஸ் சீஃப் கிட்ட ஒரு ஃபோன் போட்டா…

35:03.353 --> 35:04.604
கண்டிப்பா முடியாது.

35:04.605 --> 35:06.147
கான்ஸ்டன்ஸைப் பண்ணச் சொல்லு.

35:06.148 --> 35:08.316
உங்க அம்மாவுக்குக் கண்டிப்பா போலீஸ்ல
செல்வாக்கு இருக்கும்.

35:08.317 --> 35:10.736
அது பாஸ்டன்ல இருக்கலாம். ஆனால் இது…

35:11.904 --> 35:16.449
உங்களுக்குப் புரியல.
ஹாவர்ட் ஆபத்தானவன். மேரி ஆபத்துல இருக்கா.

35:16.450 --> 35:18.034
- முடியாது.
- ஏன்?

35:18.035 --> 35:21.038
ஏற்கனவே பத்திரிகைக்காரங்க இந்த குடும்பத்தை
பிழிஞ்சு தொங்க விட்டுட்டாங்க.

35:21.622 --> 35:23.248
நான் திரும்ப ரிஸ்க் எடுக்க விரும்பல.

35:24.208 --> 35:25.250
நீங்க பண்றீங்க.

35:25.876 --> 35:27.419
அவ உனக்கு துரோகம் பண்ணியிருக்கா.

35:30.547 --> 35:34.551
நீங்க அவளை முதல் முறை சந்திச்சதும்
என் கிட்ட சொன்னது ஞாபகம் இருக்கா?

35:36.053 --> 35:38.472
அவ நம்ம வம்சாவளியைக் களங்கப்படுத்தப் போறான்னு
சொன்னீங்க.

35:39.056 --> 35:42.059
நம்ம வம்சாவளியை,
நாம ஏதோ ஒரு உயர்ந்த இனம் மாதிரி.

35:43.018 --> 35:45.354
அவ உங்களை தான் ரொம்ப திருப்தி பண்ண விரும்பினா.

35:46.063 --> 35:50.149
அவளுக்கு அப்பான்னு சொல்ற அளவு இருந்த
ஒரே ஆளு அவளை தாக்குன

35:50.150 --> 35:51.276
ஒரு நாய்.

35:51.777 --> 35:55.447
நான் அவளைப் பாதுகாக்கிறதா சத்தியம் பண்ணேன்.

35:57.616 --> 36:02.788
என்னால அவளை சந்தோஷமா வச்சிக்க முடியும்னு
நினைச்சேன், என்னால முடியல.

36:04.081 --> 36:05.082
ஏன்னா…

36:07.084 --> 36:08.293
நீங்க சந்தோஷமா வச்சிக்க விடல.

36:10.462 --> 36:12.047
நீங்க என்னை குழந்தை மாதிரி நடத்துனீங்க.

36:13.048 --> 36:14.424
எப்பவுமே.

36:15.300 --> 36:18.219
உங்களால,
நான்ஸி என்னை ஒரு ஆம்பளையாவே பார்க்கல.

36:18.220 --> 36:19.721
நீ ஆம்பளையா இருக்க விரும்புறியா?

36:21.139 --> 36:22.391
அப்ப ஆம்பளை மாதிரி நடந்துக்கோ.

36:26.895 --> 36:27.980
அப்பா.

36:34.194 --> 36:35.696
நீங்க இப்ப சீஃப் ஆல்ப்ரைட்டைக் கூப்பிடுறீங்க.

36:37.447 --> 36:38.657
ஏன்னா கூப்பிடலைன்னா…

36:40.826 --> 36:42.536
நான் எல்லாத்தையும் பப்ளிக்கா சொல்லிடுவேன்.

36:44.329 --> 36:48.040
எல்லா வெளிநாட்டு அக்கௌண்ட்,
எல்லா சட்டவிரோதப் பரிவர்த்தனைகள்,

36:48.041 --> 36:49.543
அதோட மூடி மறைச்ச எல்லாத்தையும்.

36:51.420 --> 36:54.338
நாம பண்ண எல்லா வண்டவாளங்களும்
அடுத்த ஒரு வருஷம் எல்லா பேப்பர்லேயும்

36:54.339 --> 36:56.717
முதல் பக்கத்தில வர மாதிரி பண்ணிடுவேன்.

36:59.386 --> 37:01.220
அப்படி பண்ணப் பிறகு, ஹென்னஸிங்கிற பேரு

37:01.221 --> 37:04.516
ஒரு சல்லி காசுக்கும் மதிப்பில்லாம பண்ணிடுவேன்.

37:21.408 --> 37:23.452
கென்னத். நான் தான்.

37:24.953 --> 37:25.996
எனக்கு ஒரு உதவி பண்ணணும்.

37:37.674 --> 37:39.842
ஆனால் நான் ஒரு வாரம் கார்லயே
அடைஞ்சிருக்க விரும்பல.

37:39.843 --> 37:43.471
அட, ஜூன் ப்ளூம்.
அது ஒரு சாசஸமா இருக்கும். இன்னொன்னு தெரியுமா?

37:43.472 --> 37:45.848
வழியில வர ஒவ்வாரு தேசிய பூங்காவுக்கும்
நாம போகலாம்.

37:45.849 --> 37:47.601
அம்மாவும் நம்ம கூட வராங்களா?

37:48.560 --> 37:49.853
ஆமா, கண்டிப்பா.

37:51.563 --> 37:54.358
எங்களுக்கு, ம்… கொஞ்சம் போலீஸ் விஷயங்களை
முடிக்கணும்,

37:55.859 --> 37:57.694
ஆனால் உங்க அம்மாவுக்கும் எனக்கும்
எந்த கருத்து வேறுபாடும் இல்ல.

38:06.453 --> 38:07.454
உட்கார்.

38:08.121 --> 38:09.373
என்ன நடக்குது?

38:10.874 --> 38:12.500
உன் தங்கைகளோட இரு.

38:12.501 --> 38:13.919
ஒண்ணுமில்ல, செல்லம்.
நாங்க என்னன்னு பார்க்கிறோம்.

38:16.046 --> 38:17.756
டிடெக்டிவ். வாங்க.

38:18.382 --> 38:21.801
திரு. சிம்ப்ஸன், ஏப்ரல் 8 அன்றைக்கு நடந்த
நான்ஸி ஹென்னஸி கொலை தொடர்பா,

38:21.802 --> 38:25.264
உங்களை விசாரணைக்குக் கூட்டிப் போக
வாரண்ட் இருக்கு.

38:27.182 --> 38:28.183
அதைக் கொடுங்க.

38:30.978 --> 38:32.229
நான் வர மறுத்தா?

38:32.896 --> 38:34.731
அப்ப உங்க கைது வாரண்ட்டைக் கொண்டு வருவோம்.

38:36.775 --> 38:38.860
பரவாயில்ல, பசங்களா.
நான் ராத்திரி வீட்டுக்கு வந்திடுவேன்.

38:38.861 --> 38:41.612
ஹாவர்ட், நான் இதைப் பண்ணல.
நான் இதைப் பண்ணல.

38:41.613 --> 38:42.698
அது நான் இல்ல.

38:43.198 --> 38:44.907
யாராவது குழந்தை நலத் துறையைக் கூப்பிடணும்.

38:44.908 --> 38:46.826
என் குழந்தைகளை தனியா விடமுடியாது.

38:46.827 --> 38:49.121
வேண்டாம், ப்ளீஸ். வேண்டாம்.

38:50.289 --> 38:51.706
நான் இதைப் பண்ணல, ஹாவர்ட்.

38:51.707 --> 38:54.251
எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல.
ப்ளீஸ், ஹாவர்ட்.

38:55.419 --> 38:56.420
ப்ளீஸ்

39:13.520 --> 39:16.022
நான் இங்க தான் இருக்கேன். அம்மா இங்க தான் இருக்கேன்.

39:16.023 --> 39:17.816
- இந்தப் பக்கம் வாங்க.
- ஐ லவ் யூ.

39:25.532 --> 39:26.950
நான் இங்க தான் இருக்கேன்.

39:34.458 --> 39:35.709
நான் என்ன பண்றதுன்னு சொல்லு.

39:37.794 --> 39:38.879
நான் என்ன பண்றது?

39:39.713 --> 39:41.423
இது எப்படி நடந்ததுன்னு கூட எனக்குத் தெரியல.

39:41.965 --> 39:44.675
உங்க கணவர் கைது செய்யப்படுவார் என்கிற
மோசமான சூழல் ஏற்பட்டுச்சுன்னா,

39:44.676 --> 39:48.180
உங்க குழந்தைகளை நாங்க தற்காலிகமா
ஒரு வீட்ல தத்து கொடுக்கணும்.

39:50.974 --> 39:53.392
நீங்க உங்க கூட அனுப்புறதுக்கு
ஒரு கேஸ் போடலாம்.

39:53.393 --> 39:56.103
ஆனால் உங்க விஷயத்துல,
அது பல வாரங்கள், ஏன் பல மாசங்கள் கூட ஆகலாம்.

39:56.104 --> 39:57.647
நல்ல சூழல்ன்னா?

39:57.648 --> 40:00.651
உங்க கணவன் விடுவிக்கப்பட்டா,
அவர் குழந்தைங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்.

40:01.401 --> 40:02.818
நல்லது நடக்கட்டும்னு நம்புவோம்.

40:02.819 --> 40:06.114
வேற யாராவது பார்த்துக்கலாமா? தெரிஞ்சவங்க
யாராவது பார்த்துக்கலாம்ல?

40:06.615 --> 40:09.700
சட்ட உதவிக்கான ஃபோன் நம்பரை
நான் உங்களுக்கு தரேன், சரியா?

40:09.701 --> 40:10.702
சரி.

40:12.746 --> 40:14.539
எலனார்
வாய்ஸ் மெயில் - மிஸ்டு கால்

40:14.540 --> 40:16.458
எலனார்

40:17.543 --> 40:19.711
என்னால நீ பண்ணதை நம்ப முடியல.

40:20.462 --> 40:23.673
இது எல்லாம் நடந்ததுக்கும் அப்புறமா.
அவன் அவளை கொலை பண்ணியிருக்கான்!

40:23.674 --> 40:26.468
மேரி, அவன் அவளை கொன்னிருக்கான.
அவன் உயிர்களை வேட்டையாடுறவன்.

40:27.511 --> 40:29.763
எல்லாத்தையும் மறந்திட்டு எப்படி நீ அவன் கிட்ட போன?

40:30.264 --> 40:32.932
பிள்ளைங்களை நம்ம கிட்ட திரும்ப வர வைக்க
நாம ஏதாவது வழியைக் கண்டுப்பிடிச்சிருக்கலாம்.

40:32.933 --> 40:36.311
அதைப் பண்றதுக்கு நான் என்ன வேணும்னாலும்
பண்ணியிருப்பேன்.

40:36.937 --> 40:38.688
நான் இதை சரி பண்ணணும்.

40:38.689 --> 40:41.775
நான்ஸிக்காக, நான் இதை சரி பண்ணணும்,
நீ கூட இருந்தாலும், இல்லாட்டாலும்.

40:44.570 --> 40:47.864
நான்ஸி ஹென்னஸி
கொலை வழக்கில் முக்கியமான செய்தி கிடைத்துள்ளது.

40:47.865 --> 40:50.741
ஒரு அனாமதேய தகவல் மூலம்
இது துவங்கியதாகத் தெரிகிறது.

40:50.742 --> 40:53.078
நாங்கள் இந்த வீடியோவின் உண்மைதன்மையை
உறுதி செய்துள்ளோம்.

40:53.620 --> 40:54.871
நீங்கள் காணவிருக்கும் காணொளியில்,

40:54.872 --> 40:58.165
நான்ஸி ஹென்னஸியின் கொலையில்
பிரதான குற்றவாளியென காவல் துறையினர்

40:58.166 --> 41:00.252
சந்தேகிக்கும் நபரைக் காணலாம்.

41:01.962 --> 41:06.549
இந்த காணாளியில் உள்ளவர் பேக்கர்ஸ்ஃபீல்டைச்
சேர்ந்த ஸ்காட் ரீட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

41:06.550 --> 41:09.051
இந்த காணொளி,
திருமதி. ஹென்னஸி கொலையுண்ட அன்று இரவு

41:09.052 --> 41:10.636
அரோயோ சீகோ பார்க்கில் எடுக்கப்பட்டது.

41:10.637 --> 41:12.389
தேடுதல் நடைபெற்று வருகிறது

41:13.307 --> 41:16.976
ரீட் ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும் ஆபத்தானவர் என்றும்
அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

41:16.977 --> 41:19.437
அவர் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்த எவரும்
அவசர சேவைகள் எண்ணைத்

41:19.438 --> 41:21.440
தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

42:13.575 --> 42:15.577
தமிழாக்கம்
மரிய ஜோசஃப் ஆனந்த் மொராய்ஸ்
