WEBVTT

00:01.502 --> 00:04.670
வெட்டுகள், காயங்கள்,
தியாகங்கள், இதெல்லாம் நிஜம்.

00:04.671 --> 00:07.965
என் கணவர் இப்ப ஒஹாயோவில வேலைக்கான

00:07.966 --> 00:11.135
இன்டெர்வியூக்கு போயிருக்கார், அது நிஜம்.

00:11.136 --> 00:14.931
அதாவது, நாங்க மொத்தமா அங்க இடமாறி போகணும்.
அது நிஜம்.

00:14.932 --> 00:17.768
நீ வச்சிருக்கிறது இன்னொருத்தியோட கணவனோட
ஒரு லூசுத்தனமான கற்பனை வாழ்க்கை.

00:18.519 --> 00:19.769
நீ ஊரவிட்டு போறியா?

00:19.770 --> 00:22.188
- இப்ப அதுவா முக்கியம்?
- நீ என்ன சொல்ற?

00:22.189 --> 00:24.023
- நீ என்னோட உற்ற தோழி.
- ஆமா!

00:24.024 --> 00:27.068
நான்ஸியும் தான்.
நீ அவ கணவன் கூட உறவு வச்சிருக்க.

00:27.069 --> 00:29.821
மேரி சிம்ப்ஸன் எப்போதும் மக்களிடம்
அவர்களது சிறந்த குணங்களை மட்டுமே பார்த்தாள்.

00:30.489 --> 00:33.074
அதாவது, மக்கள் அது தவறு என்று அவளுக்கு
நிரூபித்தாலும் கூட.

00:33.075 --> 00:34.993
- என் வீட்டை விட்டு வெளிய போ.
- மேரி.

00:35.577 --> 00:36.661
இப்பவே.

00:36.662 --> 00:38.246
மேரி உலகம் தெரியாதவள் கிடையாது.

00:38.247 --> 00:41.333
இந்த உலகம் எவ்வளவு மோசமாக போகலாமென
தெரியும் அளவு அவள் நிறையவே பார்த்திருக்கிறாள்.

00:43.627 --> 00:46.338
அதனால் அவள் தனக்கென ஒரு புதிய நிஜத்தை
உருவாக்கக் கற்றுக்கொண்டாள்.

00:48.382 --> 00:51.051
ஆனால் நிஜ உலகமோ
மேரிக்கு வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது.

00:55.097 --> 00:56.348
உனக்கு அது கேட்டுச்சா, நான்ஸ்?

00:59.810 --> 01:01.311
இறுதியாக அவள் விரும்பியது அவளுக்குக் கிடைத்தது.

01:02.396 --> 01:05.898
அத்தியாயம் மூன்று
மேரி

01:05.899 --> 01:09.360
எப்போது தன்னைத் தானே கடைசியாக அவள்
ஆச்சரியப்படுத்தினாளென மேரிக்கு ஞாபகமில்லை.

01:09.361 --> 01:11.947
தன்னால் எதுவும் முடியும் என்று அவளுக்கு தோன்றிய
காலம் ஒன்று இருந்தது.

01:12.531 --> 01:16.284
அது காஸ்ட்கோவுக்கு யாத்திரை போனது,
PTA-ல கேக் சேல்ஸ் பண்ணது…

01:16.285 --> 01:18.202
"…உள்ளடையை உள்ளாடையாக மட்டும் வாங்கியது
இது எல்லாவற்றுக்கும் முன்பாக.

01:18.203 --> 01:22.623
மேரிக்கு குறிக்கோளும், ஆசைகளும் இருந்தன.
அவளுக்கே சொந்தமான ஒரு ரகசிய நெருப்பு.

01:22.624 --> 01:26.419
தனக்கென்ன வேண்டுமென அவளுக்குத் தெரியும். அவள் அதை
எடுத்துக்கொண்டாள். அப்படி தான் ஹாவர்டும் கிடைத்தான்.

01:26.420 --> 01:30.007
அவளது முனைவர் படிப்பின் முதல் வருடத்திலேயே,
அவள் அவனுடைய உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தாள்.

01:31.091 --> 01:36.054
பல வருடங்கள் கழித்து, இன்னும் தன் மேல் அவனுடைய
உடலின் எடையையும், ஆடையில்லா அவள் மேனியில்

01:36.847 --> 01:40.726
அவனது படுக்கைத் துணிகளின் சிராய்ப்பையும்
அவளால் உணர முடிந்தது."

01:42.561 --> 01:44.521
"அவளால்…" மன்னிக்கணும்.

01:45.772 --> 01:48.649
"அவனது திருமணம் பல வருடங்களாக
உயிரற்று இருந்தது.

01:48.650 --> 01:50.234
அவன் இந்நேரம் தன் மனைவியை விட்டுச் சென்றிருப்பான்,

01:50.235 --> 01:53.321
அவள் மட்டும் தன் மணிக்கட்டினை வெட்டிக்கொள்வாள்
என்று அவன் கவலைப்படாதிருந்தால். மீண்டுமாக.

01:53.322 --> 01:56.407
அந்தப் பாவப்பட்ட பெண்ணைப் பார்த்துப் பரிதாபப்படுவதாக
மேரி தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

01:56.408 --> 02:01.537
ஆனால், உண்மையில், அந்த துரோகம்
மொத்த வாழ்க்கையையும் சுவையாக்கியது.

02:01.538 --> 02:05.292
அவளுக்கு அவன் வேண்டும்.
அவள் அது குறித்து வெட்கப்படவில்லை."

02:08.252 --> 02:10.130
ஆக. இது தான் தொடக்கம்னு
நினைக்கிறேன்.

02:11.632 --> 02:13.926
நான் நினைச்சதை விட வாசிக்கும் போது
கொஞ்சம் ஆபாசமா இருக்கு.

02:15.344 --> 02:17.637
அந்த எழுத்தே அதை பேசட்டும்.

02:17.638 --> 02:19.847
அதில நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு.

02:19.848 --> 02:23.518
"உள்ளடையை உள்ளாடையாக"?
எனக்கு பழக்கமானவ மாதிரி தோணுது.

02:23.519 --> 02:27.147
- நன்றி.
- சரி. உங்க எண்ணங்கள்? எதிர்வினைகள்?

02:28.023 --> 02:29.024
யாராச்சும்?

02:29.942 --> 02:31.777
இந்த நேர்மையைப் பாராட்டுறேன்.

02:32.361 --> 02:37.448
ஒப்புக்குறேன். நம்மளையே ஒழுக்கமில்லாதவளா
காட்டுறதுக்கு தைரியம் வேணும்.

02:37.449 --> 02:41.245
ஒழுக்கமில்லாதவள். ஆமா.
விரும்பத்தகாதவளும் கூட.

02:42.412 --> 02:45.831
மேரியின் கதையின் நாயகியை வேற
யாருக்குப் பிடிக்கல?

02:45.832 --> 02:48.459
நான் சொல்றேன். ஒரு திருமணமானவன் கூட
உறவு வச்சிருக்கா,

02:48.460 --> 02:51.295
அதுவும், மனைவி தற்கொலை பண்றதை விரும்புறா.

02:51.296 --> 02:54.006
ம், அவள் விரும்பல.

02:54.007 --> 02:56.592
வாசகரோட ஆவலைச் சீக்கிரமாத் தூண்ட
மேரி என்ன பண்ணலாம்?

02:56.593 --> 02:59.847
என்னைப் பொறுத்தவரை, நான் நான்ஸியைப்
பத்தி கேட்க விரும்புறேன்.

03:00.597 --> 03:01.598
சொல்லு.

03:02.099 --> 03:04.183
நான் அவளைப் பத்தி குறிப்பிடவே இல்லையே.

03:04.184 --> 03:05.726
மக்களே, கொஞ்சம் கவனம் செலுத்தலாமா?

03:05.727 --> 03:08.229
உன்னோட படங்களை
அவளோட சமூக ஊடகங்கள்ல பார்த்திருக்கோம்.

03:08.230 --> 03:10.523
ரஸல் சொல்றதுக்கு நான் உடன்படுறேன்.
நான்ஸியைப் பத்தி எழுது.

03:10.524 --> 03:13.442
கொஞ்சம் மர்ம சாயல்லேயும் நீ எழுதலாம்.
த்ரில்லர் கூட.

03:13.443 --> 03:14.861
- அற்புதம்.
- ஆமா.

03:14.862 --> 03:17.029
நிஜ வாழ்க்கையில, கொலை பண்ணது கணவனா?

03:17.030 --> 03:19.240
- தோழியாவும் இருக்கலாம்.
- யாரந்த தோழி?

03:19.241 --> 03:21.117
- ம், அது…
- ஒரு முடிவுக்கு வாங்க.

03:21.118 --> 03:22.785
இன்னைக்குக் காலைல மகள் ஒரு
வீடியோ போஸ்ட் பண்ணியிருக்கா.

03:22.786 --> 03:24.996
- என்ன வீடியோ?
- அது வைரலா ஆச்சு.

03:24.997 --> 03:26.664
பார்த்தோம்னா, அந்த கணவன்…

03:26.665 --> 03:28.749
- ராபர்ட்.
- ராபர்ட்,

03:28.750 --> 03:30.334
- அவன் ரொம்ப அழகு…
- ரொம்ப அழகு.

03:30.335 --> 03:33.505
…அவன் நான்ஸியோட
நெருங்கின தோழி, எலனார் கூட உறவு வச்சிருக்கான்.

04:20.761 --> 04:22.721
ஆரமின்ட்டா ஹாலின்
புத்தகத்தைத் தழுவியது

04:30.479 --> 04:32.104
அவர்கள் சந்தித்த நாள் முதல்,

04:32.105 --> 04:36.360
நான்ஸியுடன் நட்பில் இருப்பது தன்னைப் பற்றிய மிகுந்த
சுவாரஸ்யமான விஷயமென மேரிக்குத் தெரிந்தது.

04:37.569 --> 04:39.111
மிளிரும் சருமத்துடன் உள்ள இயல்பிலே அழகான

04:39.112 --> 04:41.989
ஒரு ப்ளாண்ட் பெண்ணின் அந்த ஈர்ப்பை
மேரி புரிந்துக்கொண்டாள்.

04:41.990 --> 04:43.449
நிஜமான நான்ஸி ஹென்னஸி யார்?

04:43.450 --> 04:46.453
ஒப்பீட்டளவில் தான் எங்கு நிற்கிறோம்
என்று அவளுக்குத் தெரியும்.

04:54.253 --> 04:57.673
ஆனால் எது சரியானது என்ற உலகின் எண்ணம் குறித்து
மேரிக்கு எந்த ஆர்வமும் கிடையாது.

04:58.882 --> 05:02.803
80-களில் கஞ்சா தோட்டத்தில் வளர்ந்த
ஐந்து குழந்தைகளில் மூத்தவள் அவள்.

05:03.303 --> 05:04.972
அவளும் ஒரு போதும் தனக்கு எதுவும் இல்லை
என்று உணர்ந்ததில்லை.

05:06.139 --> 05:10.394
ஏனெனில் அவளுக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை,
தன் தேவைக்கு யதார்த்தத்தை வளைத்துக்கொள்ளக்கூடியவள்.

05:11.687 --> 05:12.938
மன்னிக்கணும், நீங்க ஷானா?

05:13.522 --> 05:15.773
- ஆமா.
- உங்களுக்குத் தெரியும்னு சொன்னாங்க.

05:15.774 --> 05:18.110
எனக்கு ஜலதோஷத்துக்கு மருந்து வேணும்.

05:18.986 --> 05:20.736
உங்க கிட்ட… உங்க கிட்ட அது இருக்கா?

05:20.737 --> 05:21.988
பகலுக்கா, ராத்திரிக்கா?

05:21.989 --> 05:23.240
நிச்சயமா பகலுக்குத் தான்.

05:23.991 --> 05:26.201
- நான் பின்னால போய்ப் பார்க்கணும்.
- உங்களுக்குத் தொந்தரவில்லைன்னு நினைக்கிறேன்.

05:27.744 --> 05:28.828
நன்றி.

05:28.829 --> 05:29.912
எலனார் புஷே

05:29.913 --> 05:32.332
மற்றவர்களிடம் பணமும் அந்தஸ்தும்
இருந்த போது,

05:33.208 --> 05:35.544
மேரியிடம் அதிக பயனுள்ள ஒரு விஷயம் இருந்தது.

05:38.046 --> 05:39.673
வளங்கள்.

05:43.302 --> 05:45.012
- நன்றி.
- நன்றி.

05:47.222 --> 05:49.474
ஆடரால்

06:00.986 --> 06:02.070
சரி.

06:08.577 --> 06:15.249
இளவரசி டில்லி டுமாரோ சூரிய பிரமிடின்
படிகளை அண்ணாந்துப் பார்த்தாள்.

06:15.250 --> 06:19.046
ட்ராகன், சூரியப் பிரமிடின்
உச்சியிலே என்ன இருக்கு?

06:20.130 --> 06:24.717
அவன் நெருப்பைக் கக்குகிறான்,
ஆனால் நட்பாக, நல்ல விதமாக.

06:24.718 --> 06:29.222
இன்று, நீ உன் அம்மா,
புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்,

06:29.223 --> 06:35.478
மற்றும் ராணியார் டான்யா டுமாரோ
அவர்களுடன் மீண்டும் இணைவாய்.

06:35.479 --> 06:41.526
பின்னர் இளவரசி டில்லி டுமாரோ
சூரியப் பிரமிடின் படிகளில் தாவி ஏறினாள்.

06:41.527 --> 06:44.238
அவள் மேலே சென்றடைய மிகுந்த ஆவலாக இருந்தாள்.

06:45.239 --> 06:46.532
அவள் திகைத்தாள்.

06:49.076 --> 06:51.369
- மிச்சத்தை நாளைக்குச் சொல்றேன்.
- இல்ல!

06:51.370 --> 06:52.703
அம்மா, முடிங்க.

06:52.704 --> 06:55.790
முடிக்கிறேன். ஆனால் நாளைக்கு.

06:55.791 --> 06:57.792
- யாருக்கு டிராகன் வேணும்?
- எனக்கு!

06:57.793 --> 07:00.795
சரி. இந்த முறை ஜூனிக்கு, செல்லம்.

07:00.796 --> 07:04.049
சாரி, ஆனால் உனக்கு
இந்த இளவரசி. சரியா?

07:04.550 --> 07:06.300
- இந்தா, பிடிச்சுக்கோ.
- நன்றி.

07:06.301 --> 07:07.386
ஐ லவ் யூ.

07:07.886 --> 07:10.346
- லவ் யூ டூ.
- குட் நைட்.

07:10.347 --> 07:12.974
டிராகனை வென்றவர்.

07:12.975 --> 07:15.853
- குட் நைட். லவ் யூ.
- குட் நைட். லவ் யூ.

07:19.106 --> 07:21.357
பிறகு, உள்ளூர் செய்திகளில்,
பாஸடீனா இல்லத்தரசி

07:21.358 --> 07:24.735
நான்ஸி ஹென்னஸியின் கொலை நடந்து
ஏறக்குறைய இரண்டு மாதம் ஆகிறது.

07:24.736 --> 07:26.988
- சமீபத்தில் வெளிவந்த விஷயங்களை வைத்து…
- பாரு, நான்ஸ், நீ டிவியில வந்திருக்க.

07:26.989 --> 07:29.282
…இறந்தவரின் நெருங்கிய தோழி,
எலனார் புஷே,

07:29.283 --> 07:31.951
இப்போது கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம்
என்று கருதப்படுகிறது.

07:31.952 --> 07:33.703
எங்களுக்குக் கிடைத்தத் தகவலின் படி,

07:33.704 --> 07:35.788
- போலீஸார் மீண்டும்…
- முட்டாள்தனம். என்ன ஆதாரம் இருக்கு?

07:35.789 --> 07:38.165
…கொலையுண்டவரின் கணவர்,
ராபர்ட் ஹென்னஸியை விசாரிக்கின்றனர்.

07:38.166 --> 07:41.460
திருமதி. புஷே, திரு. ஹென்னஸி இருவரிடமும்
கருத்து கேட்க இன்று தொடர்பு கொள்ள முடியவில்லை.

07:41.461 --> 07:44.172
ஆனால் ஹென்னஸி குடும்பத்திடமிருந்து
நாளை ஸ்ட்டேட்மென்ட் வெளிடப்படும் என்று…

07:44.173 --> 07:46.465
- மேரி, மேரி, என் காதல் ராணி.
- …கூறப்படுகிறது.

07:46.466 --> 07:48.342
- நீ இன்னும் தூங்கவில்லையா?
- ஹே!

07:48.343 --> 07:53.682
உன்னை நான் தேடுகிறேன்
உன்னை எண்ணிப் பாடுகிறேன்.

07:55.726 --> 07:57.727
உங்க ஃப்ளைட் நாளைக்குன்னு சொன்னீங்க.
இப்ப என்ன…

07:57.728 --> 08:00.104
காலை நிகழ்ச்சியை ரத்து பண்ணிட்டாங்க,
அதனால முன்னாலயே வந்துட்டேன்.

08:00.105 --> 08:01.523
உன் கிட்ட நேர்ல சொல்லணும்னு விரும்பினேன்.

08:02.774 --> 08:03.775
எனக்கு வேலை கிடைச்சுருச்சு.

08:04.776 --> 08:05.860
வாவ்.

08:05.861 --> 08:07.362
சீக்கிரம் பதவி உயர்வு கிடைச்சிடும், பேபி.

08:07.863 --> 08:09.238
டீன் மதிய சாப்பாட்டப்ப சொன்னாரு.

08:09.239 --> 08:12.366
விண்ணப்பிச்ச மற்றவங்க சொதப்பிட்டாங்க,
உன் கணவனை அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு.

08:12.367 --> 08:13.618
அதானே, எப்படிப் பிடிக்காம போகும்?

08:13.619 --> 08:15.536
அவங்க என் வேலையெல்லாம் புரிஞ்சிக்கிட்டாங்க.

08:15.537 --> 08:18.080
வாழ்த்துகள். இது அருமை.

08:18.081 --> 08:19.415
"அருமையா"?

08:19.416 --> 08:22.627
போரிலிருந்து வெற்றிப் பெற்று
தன் படையுடன் பீடு நடை போட்டு

08:22.628 --> 08:25.963
வருகிறான் சீஸர்,
ஆனால் நீ, "அருமை" என்கிறாயா?

08:25.964 --> 08:28.425
சாரி.
எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.

08:29.259 --> 08:31.929
வெற்றி வாகை சூடிய வீரனுக்கு வாழ்த்துகள்!

08:34.306 --> 08:35.431
சரி, நீங்க எப்ப சேரணும்?

08:35.432 --> 08:36.974
ஆகஸ்ட்ல.

08:36.975 --> 08:38.519
நாம முடிவு பண்றதுக்கு எவ்வளவு நேரம் இருக்கு?

08:39.602 --> 08:40.894
எதை முடிவு பண்றதுக்கு?

08:40.895 --> 08:43.482
நாம குடும்பமா ஒஹாயோவுக்கு
போறது பத்தி.

08:44.358 --> 08:46.275
நான் இதுவரைக்கு ஒஹாயோ போனதில்ல.

08:46.276 --> 08:48.486
பக்ஐஸ், ஸ்பெகட்டியில சில்லி…
உனக்குக் கண்டிப்பா பிடிக்கும்.

08:48.487 --> 08:49.737
செல்லம், நான் சீரியஸா பேசுறேன்.

08:49.738 --> 08:52.073
ஆர்டீக்கு ஒருவழியா இப்பதான்
ஸ்கூல் செட்டாயிருக்கு.

08:52.074 --> 08:54.909
பிறகு ஜூனி…
அவளுக்கு இந்த பியானோ வகுப்புகள் பிடிச்சிருக்கு.

08:54.910 --> 08:56.410
- மார்கஸ்…
- மார்கஸ் அவன் வளர்ந்துட்டான்.

08:56.411 --> 08:58.246
பொண்ணுங்க தேவைகளை வச்சு
நாம முடிவு பண்ண முடியாது.

08:58.247 --> 09:00.164
நானும் இந்த குடும்பத்துல ஒருத்தன், தெரியுமா?

09:00.165 --> 09:01.833
நமக்கு இங்க நண்பர்கள் இருக்காங்க. இந்த…

09:01.834 --> 09:03.751
நீ என்ன விளையாடுறியா?

09:03.752 --> 09:06.087
நான் என்ன தப்பான வீட்ல நுழைஞ்சிட்டேன்னா?

09:06.088 --> 09:07.630
இந்த வேலை நம்ம கனவு.

09:07.631 --> 09:09.841
இதே வேற ஒரு சூழ்நிலையா இருந்திருந்தா, அது…

09:09.842 --> 09:13.261
என்னோட முந்தின வேலை ஒரு உருப்படாத
பாலே நிகழ்ச்சிக்கு குறிப்பு எழுதுறது.

09:13.262 --> 09:15.388
நான் ஒரு ஸ்காலர்.
எனக்கு ஏத்த வேலை கிடையாது அது.

09:15.389 --> 09:16.974
அதான், கொஞ்சம் பணம் கிடைச்சா நமக்கு
நல்லது தானே?

09:17.641 --> 09:19.433
ம், நான் வேலைக்குப் போறேன்.

09:19.434 --> 09:21.769
- நான் வேலைக்குப் போலாம்னு தான் நாம பேசினோம்.
- அப்படியா?

09:21.770 --> 09:25.565
ஆமா, மார்கஸ் வயித்துல இருக்கும் போது.
உங்களுக்கு ஞாபகம் இல்லையா?

09:25.566 --> 09:29.944
அவன்… அவன் குட்டியா இருக்கும் போது
நீ உன்னோட கரியரை தொடரணும்னு பேசினோம்.

09:29.945 --> 09:32.530
ஆனால் அதுக்குப் பிறகு நான் போகணும்னு பேசினோம்.

09:32.531 --> 09:34.824
அது பல வருஷத்துக்கு முன்னால.
இப்ப நிறைய மாறிடுச்சு, மேர்.

09:34.825 --> 09:37.578
அப்போ… கடவுளே, நான் அந்த
சைக்கோ ஜெனி கூட இருந்தேன்.

09:38.245 --> 09:39.954
நான் ஒரு தீர்வைப் பார்க்கிறதுக்கு முயற்சிப் பண்றேன்,
அதனால…

09:39.955 --> 09:42.124
நீ உருவாக்குற ஒரு பிரச்சினைக்குத் தீர்வு. சே!

09:43.375 --> 09:47.128
வேலைல என்னோட சிறந்த நாளன்னைக்கு
உனக்குப் பொறுக்கல.

09:47.129 --> 09:49.046
நீ என்னை நல்லா உற்சாகப்படுத்துவ.

09:49.047 --> 09:51.382
அருமை, மேரி. சூப்பர்.

09:51.383 --> 09:53.593
சாரி. சாரி.

09:53.594 --> 09:55.928
நீங்க சொன்னது சரி. அது… நான் சந்தோஷமா இருக்கேன்.

09:55.929 --> 09:57.096
- உண்மையாவா?
- ஆமா.

09:57.097 --> 10:00.183
இது எல்லாம, என்னவோ,
நான் எதிர்பார்த்ததை விட வேகமா நடக்குது.

10:00.184 --> 10:02.185
இது நமக்கு நல்லதா இருக்கப் போகுது.

10:02.186 --> 10:03.978
நாம அங்க சந்தோஷமா இருப்போம். என்னை நம்பு.

10:03.979 --> 10:05.397
சரி.

10:09.234 --> 10:10.735
என்னோட மெசேஜைப் பார்த்தீங்களா?

10:10.736 --> 10:13.322
- என்ன மெசேஜ்?
- எலனாரைப் பத்தி.

10:14.489 --> 10:16.742
ஆமா. நான் ஏற்கனவே
பதில் போட்டுட்டேன்னு நினைச்சேன்.

10:18.577 --> 10:20.995
நாங்க ரெண்டு பேரும்
மாறி, மாறி ரொம்ப மோசமா பேசிகிட்டோம்.

10:20.996 --> 10:23.623
நாங்க… நாங்க இதுவரைக்கும்
இப்படிச் சண்டை போட்டுக்கிட்டதே இல்ல.

10:23.624 --> 10:25.875
ம், கொஞ்சம் நேரம் பிரிஞ்சு இருக்கிறது
நல்லது தான்.

10:25.876 --> 10:28.337
ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருப்பது
ஆரோக்கியமானது இல்ல.

10:31.131 --> 10:32.798
இதுக்கு மேல என்னால உட்கார முடியாது.

10:32.799 --> 10:34.635
- மேல வரேல்ல?
- ஆமா, சீக்கிரம் வந்திடுறேன்.

11:09.503 --> 11:12.005
ஒண்ணு மட்டும்.
ஏன்னா நீ கட்டுப்பாட்டுல இருக்க.

11:19.471 --> 11:21.473
ஆரமின்ட்ஸ்

11:39.449 --> 11:42.119
மேரிக்கு எப்போதும் "ஹவுஸ்ஃவைப்"
என்கிற வார்த்தை பிடிக்காது.

11:43.287 --> 11:44.788
அதை விட மோசம் "ஹோம்மேக்கர்".

11:46.373 --> 11:50.586
ஒவ்வொரு நாளையும் தான் கழிக்கும் விதத்தை அவை
தாராளமாகவும், துல்லியமாகவும் விவரிக்கவில்லை.

11:51.753 --> 11:54.256
ஆனால் அவள் என்ன தான் செய்கிறாள்
என்று யாராவது கேட்டால்,

11:55.007 --> 11:57.009
அவள் அதைச் சொல்லத் தடுமாறியிருப்பாள்.

11:57.593 --> 12:00.971
நடந்தவைகளையும், விவரங்களையும் நினைவுக்கூர்வதில்
அவள் ஒன்றும் கைதேர்ந்தவளில்லை.

12:02.055 --> 12:06.684
அவள் நெருங்கிய தோழி கொலையாகும் வரை, அவளைக்
கேள்விக் கேட்குமளவு யாரும் அக்கறைக் கொண்டதில்லை.

12:06.685 --> 12:08.269
பார்த்து, சூடாயிருக்கு.

12:08.270 --> 12:09.271
நன்றி.

12:10.397 --> 12:13.192
மேர். டிடெக்டிவ் கேன்ஸ் நம்ம கிட்ட
ஏதோ கேள்வி கேட்கணும்னு சொன்னாங்க.

12:13.775 --> 12:14.859
சரி.

12:14.860 --> 12:16.195
கொஞ்சம் தான்.

12:17.946 --> 12:18.947
ஹே.

12:21.200 --> 12:25.203
திரு. ஹென்னஸிக்கும் மிஸ் புஷேக்கும், ம்,
இடையே உள்ள தொடர்பு,

12:25.204 --> 12:26.871
உங்களுக்கு எப்ப முதல்ல தெரியும்?

12:26.872 --> 12:28.456
- நேத்து காலைல.
- மேரி எங்கிட்ட நேத்து சொன்னா.

12:28.457 --> 12:30.917
உங்களுக்குத் தெரிஞ்சு,
இந்த உறவு எப்போ தொடங்கிச்சு?

12:30.918 --> 12:32.210
நான்ஸி இறந்தப் பிறகு.

12:32.211 --> 12:34.587
- உறுதியா சொல்றீங்களா?
- ஆமா.

12:34.588 --> 12:39.050
எலனார் பண்ணது மோசம் தான்,
ஆனால் இது ஒரு பழைய கிரஷ்.

12:39.051 --> 12:41.845
அது… அந்த துக்கமான தருணத்தில
அவள அறியாம நடந்துடுச்சு.

12:43.180 --> 12:44.681
அவங்க ஒண்ணும் சேர்ந்து ஓடிப் போகப் போறதில்ல.

12:45.849 --> 12:47.600
அது ஒண்ணுமில்ல.

12:47.601 --> 12:51.354
அவங்க ரெண்டு பேர்ல யாராவது கோபப்பட்டு
கை நீட்டுறதை நீங்க பார்த்திருக்கீங்களா?

12:51.355 --> 12:54.274
எலனார்? அப்படியில்ல.

12:55.192 --> 12:56.568
ஆமா, ஆனால் ராபர்ட்…

12:58.237 --> 13:00.154
கொஞ்சம் போதை ஏறுச்சுன்னா,
சீக்கிரம் எரிச்சல் அடைஞ்சிடுவான்.

13:00.155 --> 13:01.572
எரிச்சல்ன்னா?

13:01.573 --> 13:05.785
ராபர்ட்… எப்படி சொல்றது? எப்போதும்
அவனுக்கு வேண்டியது அவனுக்குக் கிடைச்சிடும்.

13:05.786 --> 13:08.746
அதான், நீங்க அவனை பார்த்திருக்கீங்க.
அழகானவன், பணக்காரன், வசதியாக வாழ்ந்தவன்.

13:08.747 --> 13:11.583
நல்ல ஆடம்பர படிப்பு,
ஆனால், அப்படித் தெரியாது.

13:12.417 --> 13:17.840
அவன் நினைச்சது ஏதாவது நடக்கலைன்னா…
என்ன பண்ணுவாங்கிறதை நான் பார்த்திருக்கேன்.

13:18.507 --> 13:21.384
- அவன் நான்ஸிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கான்.
- என்ன கடிதம்?

13:21.385 --> 13:23.053
ராபர்ட்டுக்கு அந்தத் தொடர்பைப் பத்தி தெரிஞ்சிருக்கு.

13:23.637 --> 13:27.223
ஆனால் அவனுக்குத் தெரியாதது மாதிரி
நடிச்சிருக்கான்.

13:27.224 --> 13:31.979
அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கு,
நான்ஸி அவனைப் பார்த்து பயந்திருக்கா.

13:32.646 --> 13:34.605
அதனால அவன் அவளுக்கு ஒரு மன்னிப்புக் கடிதம்
எழுதியிருக்கான்.

13:34.606 --> 13:36.441
எலனார் இதை என்கிட்ட நேத்து சொன்னா.

13:37.734 --> 13:38.735
நான் அதைப் பார்க்கிறேன்.

13:39.403 --> 13:43.073
நான்ஸியோட சித்தப்பா? ஸ்காட்?

13:43.657 --> 13:45.157
நீங்க திரு. ரீடை சொல்றீங்களா?

13:45.158 --> 13:49.328
ஆமா. அவ குழந்தையா இருந்தப்போ அவர் அவகிட்ட
தவறா நடந்துகிட்டது உங்களுக்குத் தெரியுமா?

13:49.329 --> 13:50.663
நீ அதை செக் பண்ணீங்களா?

13:50.664 --> 13:52.373
நாங்க திரு. ரீட் கிட்ட பேசினோம்,

13:52.374 --> 13:55.168
திருமதி. ஹென்னஸியோட கடந்த 20 வருஷமா

13:55.169 --> 13:57.044
எந்த தொடர்பும் இல்லேன்னு சொன்னார்.

13:57.045 --> 13:58.671
உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

13:58.672 --> 14:00.924
எனக்குத் தெரிஞ்சதெல்லாம்,
அவ அவரை நினைச்சு பயந்து இருந்தா.

14:01.758 --> 14:04.635
அவ வச்சிருக்கிற ஸ்க்ராப் புக்ல
அவரை வரைஞ்சு வச்சிருக்கா.

14:04.636 --> 14:05.804
அவ… அவ…

14:06.305 --> 14:07.806
அவ நிச்சயமா அவரை நினைச்சு பயந்து போய் இருந்தா.

14:09.183 --> 14:10.517
சரி.

14:11.518 --> 14:12.686
"சரியா"?

14:13.812 --> 14:16.647
இந்த விஷயங்களை வச்சி நீ உங்க விசாரணையை
தொடங்கலாம், டிடெக்டிவ், சரியா?

14:16.648 --> 14:18.567
இவங்கள்ல ஒருத்தன்
என் தோழியைக் கொலை பண்ணியிருக்கான்.

14:19.401 --> 14:21.069
அது ஒரு ஆண் தான்னு எப்படி உறுதியா சொல்றீங்க?

14:22.070 --> 14:23.487
நீங்க என்ன…

14:23.488 --> 14:26.449
டிடெக்டிவ் கேன்ஸ், என்னோட மனைவி
உங்களுக்காக இவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தாங்க.

14:26.450 --> 14:30.204
அதுக்கு நன்றி. எனக்கு…
எனக்கு இன்னொரு கேள்வி மட்டும் இருக்கு.

14:31.205 --> 14:33.998
அன்னைக்கு ராத்திரி எத்தனை மணிக்கு
டின்னர் முடிஞ்சு கிளம்பினீங்க?

14:33.999 --> 14:35.500
சொன்னேனே, ஒன்பது மணியை ஒட்டி.

14:35.501 --> 14:38.253
உங்க தோழிகள் போனப் பிறகு,
உங்களுக்கு ரெண்டு மூணு டிரிங்ஸ் கொடுத்ததா

14:38.921 --> 14:41.882
ஒரு பார்டென்டர் சொல்றான்னா, அது பொய்யா?

14:42.966 --> 14:44.800
அவங்க போனப் பிறகு நான்
கொஞ்சம் நேரம் குடிச்சிருக்கலாம்.

14:44.801 --> 14:48.638
உங்களை ஊபர் டாக்ஸியில தூக்கி வைக்க
வேண்டியிருந்ததுன்னு அவன் சொன்னான்.

14:48.639 --> 14:51.433
அதனால உங்களுக்கு அன்னைக்கு நடந்ததுல
சில விஷயங்கள் ஞாபகம் இல்லாதிருக்க வாய்ப்பிருக்கா?

14:52.684 --> 14:55.269
என் மனைவி பத்தரை மணிக்கு வந்து,
நேரா தூங்கப் போயிட்டா.

14:55.270 --> 14:56.772
ராத்திரி முழுக்க நான் கூட தான் இருந்தேன்.

14:58.065 --> 15:00.984
- ஊ! ஐயோ. என்னால முடியும்.
- சரி. சரி.

15:05.364 --> 15:07.407
இப்ப என்ன, நான் ஒரு வக்கீலை கூப்பிடணுமா?

15:08.075 --> 15:10.244
வேண்டாம். நாங்க கிளம்புறோம்.

15:28.554 --> 15:30.556
இது தான் அந்த, ம்… ஸ்க்ராப் புக்கா?

15:31.139 --> 15:33.099
நீ அந்த டிடெக்டிவ் கிட்ட சொன்னது?

15:33.100 --> 15:37.020
ஆமா. ஒத்திகை அப்ப, இல்ல, எப்பயாவது நான்ஸி
இதில வரையிறதை நீங்க கண்டிப்பா பார்த்திருப்பீங்க.

15:37.771 --> 15:40.565
இருக்கலாம். போலீஸ் அதைப் பார்த்தாங்களா?

15:40.566 --> 15:42.150
ஆமா, ஆனால் அதுல எதுவும் பயனுள்ளதா
இருக்கிறதா அவங்க நினைக்கல.

15:43.360 --> 15:45.194
- ம், பயனுள்ளதா இருக்கா என்ன?
- அப்படிதான் நினைக்கிறேன்.

15:45.195 --> 15:48.907
ஆனால் நான் இதை பத்திப் பேசினப்போ
டிடெக்டிவ் கேன்ஸ் மதிக்காததை நீங்க பார்த்தீங்கள்ல.

15:49.491 --> 15:53.536
எலனார் மேல இருந்து சந்தேகத்தை வேற பக்கம்
திருப்புறதுக்கு என்னால ஏதாவது உருப்படியா…

15:53.537 --> 15:55.329
கண்டுப்பிடிக்க முடிஞ்சா நல்லா இருக்கும்.

15:55.330 --> 15:57.374
நான்ஸிக்கு என்ன நடந்ததுன்னு
எனக்குத் தெரியணும்.

16:01.253 --> 16:05.464
ம், ஒஹாயோவில ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட்
கிட்ட இருந்து கால் வரும்.

16:05.465 --> 16:06.884
பேசலாமா, இல்ல கேன்ஸல் பண்ணட்டுமா?

16:09.469 --> 16:10.679
வேண்டாம், வேண்டாம்.

16:15.058 --> 16:16.143
இப்ப அதைத் தூக்கி ஓரமா வை.

16:16.727 --> 16:19.188
அந்த டிடெக்டிவ் இந்த கேஸை
தீவிரமா பார்த்திட்டிருக்கிற மாதிரி தோணுது.

16:20.105 --> 16:21.607
அவங்க வேலையை அவங்கள பண்ணவிடு. என்ன?

16:46.298 --> 16:49.092
நான்ஸி, நீ என் கிட்ட என்ன சொல்ல வர?

16:49.760 --> 16:52.679
மேரிக்கு ஒரு போதும்
கடவுள் மேல நம்பிக்கை கிடையாது.

16:53.472 --> 16:56.849
ஆனால் அந்த அரிதான விலகல்களின்
சில தருணங்களின் போது,

16:56.850 --> 17:01.230
தன்னை வழிநடத்தும் ஒரு சக்தியை அவளால்
உணர முடிவதை அவள் கண்டாள்.

17:02.064 --> 17:06.984
அன்று அந்த இதமான ஜூன் மாத மதிய வேளையில்
அந்த சக்தி மீண்டும் வேலை செய்வதை மேரி உணர்ந்தாள்.

17:07.653 --> 17:09.029
அல்லது அது நான்ஸியாக இருக்கலாம்.

17:09.530 --> 17:11.072
அல்லது ஆடராலாக இருக்கலாம்.

17:11.073 --> 17:12.406
ஆனால் அது வேலை செய்தது.

17:18.288 --> 17:20.790
கேட்டுலஸ் VI

17:25.878 --> 17:27.548
நீ எனக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள் கொடுப்பாய்.

17:30.133 --> 17:31.467
பின்னர் நாமிருவரும்
அந்த எண்ணிக்கையை மறப்போம்,

17:31.468 --> 17:32.844
ஆக தனிமையான ஒரு மனிதனும்
பொறாமை கொள்ளமாட்டான்,

17:32.845 --> 17:34.263
நமது அதீத அன்பை குறித்து அவன் அறிகையில்.

18:02.291 --> 18:03.541
கேட்டுலஸ் கவிதை தொகுப்பு
ஒரு புதிய மொழிப்பெயர்ப்பு

18:03.542 --> 18:05.544
டாக்டர் ஹாவர்ட் சிம்ப்ஸன், PHD

18:15.929 --> 18:18.890
"எனக்கு ஆயிரம் முத்தங்கள் கொடு,
பின்னர் ஒரு நூறு,

18:18.891 --> 18:21.893
பின்னர் இரண்டாவதாக ஒரு ஆயிரம்,
பின்னர் இரண்டாவதாக ஒரு நூறு.

18:21.894 --> 18:24.604
பின்னர் இன்னொரு ஆயிரம்,
பின்னர் இன்னொரு நூறு."

18:24.605 --> 18:28.734
"நீ எனக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள் கொடுப்பாய்.

18:29.484 --> 18:31.153
பின்னர் நாமிருவரும்
அந்த எண்ணிக்கையை மறப்போம்,

18:31.904 --> 18:37.242
ஆக தனிமையான ஒரு மனிதனும் பொறாமை கொள்ளமாட்டான்,
நமது அதீத அன்பை குறித்து அவன் அறிகையில்."

18:38.076 --> 18:42.581
பழமையான மொழிகள்ல உங்க புலமை
உண்மையிலேயே… ஆவலைத் தூண்டுது.

18:43.332 --> 18:49.963
ஒரு சின்ன விஷயம். இலத்தீன்ல "கான்டர்போ" வார்த்தைக்கு
"மறப்பது" என்பதை விட "குழப்பம்" என்று சொல்லலாம்.

19:00.182 --> 19:02.934
- எனக்கும் ஜெனிக்கும் எல்லாம் முடிஞ்சது.
- அது அவளுக்குத் தெரியுமா?

19:02.935 --> 19:04.102
அவ மனநிலை சரியில்லாதவ.

19:05.771 --> 19:09.023
அவளுக்கு… சொல்ல கஷ்டமா இருக்கு,
அவளுக்கு ஒரு கணவன் தேவை இல்ல.

19:09.024 --> 19:10.275
அவளுக்கு ஒரு டாக்டர் வேணும்.

19:11.527 --> 19:13.946
அவ கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்போது,
அவ கிட்ட சொல்லிருவேன்.

19:26.250 --> 19:27.876
- ஹாய், ஜெனி.
- மேரி, அவர் உள்ள இருக்காரா?

19:38.095 --> 19:40.430
நீ எனக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள் கொடுப்பாய்

19:55.362 --> 19:58.115
நல்லது. அந்த வீட்டு விவரங்களை அனுப்பு,
நான் என் மனைவியோடு பேசுறேன்.

19:58.615 --> 20:00.200
நன்றி, ரீட்டா. நல்ல நேரத்துல உதவின.

20:01.952 --> 20:03.953
யாரோ ஒருத்தருக்கு அவங்களுக்குன்னு
ஒரு ஆஃபீஸ் கிடைக்கப் போகுது.

20:03.954 --> 20:05.581
நான் இதை நான்ஸியோட ஸ்க்ராப் புக்கில பார்த்தேன்.

20:08.584 --> 20:09.835
என்னது அது?

20:10.502 --> 20:13.046
உங்க கேட்டுலஸ் புத்தகத்திலிருந்து ஒரு பக்கம்.

20:13.714 --> 20:14.923
சரி, அதுக்கென்ன இப்போ?

20:15.591 --> 20:17.843
இங்க அதே வரில கீழ கோடு போட்டிருக்கு.

20:19.636 --> 20:20.637
அது ஒரு நல்ல வரி.

20:21.388 --> 20:25.975
ஹாவர்ட், ஒரு பழங்காலத்து கவிஞரோட
உங்க தெளிவில்லாத மொழிப்பெயர்ப்பு

20:25.976 --> 20:27.685
நான்ஸி கையில எப்படி கிடைச்சது?

20:27.686 --> 20:29.145
தெரியல. அது அமேஸான்ல இருக்கு.

20:29.146 --> 20:32.607
பிரிண்ட் பண்ண புத்தகம் விக்கவே இல்ல.
யாரும்… யாரும் அந்த புத்தகத்தை வாசிக்கவே இல்ல.

20:32.608 --> 20:34.735
தெரியல. ஒருவேளை நான் அவகிட்ட கொடுத்திருக்கலாம்.
எனக்கு ஞாபகமில்ல.

20:41.491 --> 20:43.827
நீங்க நான்ஸிக்கு கவிதை புத்தகம் கொடுத்தீங்களா?

20:45.495 --> 20:46.747
ஆமா.

20:47.331 --> 20:52.168
ஆமா, ம், ஒரு முறை ஒத்திகையின் போது
பேச்சு என்னோட வேலை பத்தி திரும்புச்சு,

20:52.169 --> 20:53.711
அப்புறம், அவளுக்கு
ஒரு காப்பி தரேன்னு சொன்னேன்.

20:53.712 --> 20:54.837
அவ வாசிச்சதே எனக்கு ஆச்சரியமா இருக்கு.

20:54.838 --> 20:55.922
மேரி, உனக்கு ஒண்ணுமில்லையே?

20:55.923 --> 20:57.673
என்ன நடக்குதுன்னு சொல்லுங்க, ஹாவர்ட்.

20:57.674 --> 20:59.342
நான் தான் அந்தக் கேள்வியை உன கிட்ட கேட்கணும்.

20:59.343 --> 21:01.345
நீங்க ஏன் இதை அவ கிட்ட கொடுத்தீங்க?

21:05.432 --> 21:08.310
மேரி, கண் பாவை அப்படி விரிஞ்சிருக்கு.

21:09.061 --> 21:11.812
நாம இதைப் பத்தி ஏற்கனவே பேசியிருக்கோம்.
நீ அதை நிறுத்திட்டேன்னு நினைச்சேன்.

21:11.813 --> 21:13.397
நீ திரும்ப மாத்திரை போட ஆரம்பிச்சிட்டியா?

21:13.398 --> 21:14.815
நீங்க பேச்சை மாத்துறீங்க. நீங்க…

21:14.816 --> 21:16.943
மேரி, திரும்ப நீ கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது.

21:16.944 --> 21:19.320
கடந்த முறை நீ பாதிக்கப்பட்ட போது
என்ன நடந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா?

21:19.321 --> 21:20.655
எவ்வளவு பயந்து போனோம்?

21:20.656 --> 21:23.616
- இல்ல, இது… இல்ல, இது வேற.
- உன்னால நம்ம குழந்தைகளுக்கு ஆபத்தாச்சு.

21:23.617 --> 21:26.745
நல்ல வேளை ஜூனிக்கு ஒண்ணும் ஆகல.
ஒவ்வொரு முறையும் நமக்கு அதிர்ஷ்டம் இருக்காது.

21:42.010 --> 21:45.012
மேரி திரும்பத் திரும்ப அவற்றை மனதில்
ஓடவிட்டுப் பார்த்தாள்.

21:45.013 --> 21:49.016
எல்லா கோணங்களில் இருந்தும் பார்க்க முயற்சி செய்தாள்,
ஆனால் எதுவுமே அர்த்தம் தருவதாக இல்லை.

21:49.017 --> 21:52.479
நான்ஸியும், ஹாவர்டும். ஹாவர்டும், நான்ஸியும்.

21:54.106 --> 21:57.149
மேரிக்கு ஹாவர்ட் முற்றிலுமாக
அறியாத ஒருவனாகத் தோன்றியது.

21:57.150 --> 22:00.737
ஆனால் அதே சமயம் அவனைப் போலவே,
ஒரு போலி ஹாவர்ட் போலவும் தோன்றியது.

22:03.365 --> 22:05.325
அவன் எப்போதுமே அந்த வாசனை தான் கொண்டிருந்தானா?

22:35.189 --> 22:37.524
நான்ஸியும் போலியாகத் தான்
இருந்திருக்கிறாளா?

22:38.901 --> 22:41.069
உண்மையான நான்ஸி ஹென்னஸி யார்?

22:50.913 --> 22:52.623
அந்த பாழாய் போன பாலே.

22:54.374 --> 22:55.375
அந்த இரவு.

22:59.463 --> 23:01.381
அன்றிரவு
அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

23:16.438 --> 23:18.524
அப்போது மேரி ஹாவர்டிடம் பேசியிருக்க வேண்டும்…

23:21.360 --> 23:23.946
…ஆனால் அவன் ஏதோ ஒரு மனநிலையில் இருந்தான்.

23:28.575 --> 23:30.702
கவலையாகத் தோன்றியது நான்ஸி தான்.

23:33.038 --> 23:34.705
நீங்கள் நான்ஸி ஹென்னஸியின் தொலைபேசியை
அழைத்துள்ளீர்கள்.

23:34.706 --> 23:36.999
என்னால் உங்கள் அழைப்பை இத்தருணத்தில்
எடுக்க முடியவில்லை.

23:37.000 --> 23:40.003
ஆர்வத்துக்கு கரிசனத்தை
ஒரு காரணமாகப் பயன்படுத்தலாம்.

23:52.474 --> 23:55.727
24 மணி நேரம் திறந்திருக்கும்

24:11.618 --> 24:12.995
அந்த கண்ணீர் நிஜமானது.

24:14.162 --> 24:15.247
மேரி?

24:16.707 --> 24:18.749
- மற்ற எல்லாமே ஒரு பொய்.
- ஹே.

24:18.750 --> 24:21.628
- மேரியைப் பொறுத்தவரை.
- ஹே. சரி. சரி.

24:22.754 --> 24:23.880
சரி.

24:23.881 --> 24:26.215
ராபர்ட் குடிச்சா, ஆளே மாறிடுறான்.

24:26.216 --> 24:29.427
இன்னைக்கு அவனை எது தூண்டுச்சுன்னு தெரியல, ஆனால்
அங்கிருந்து வௌியேறுறது நல்லதுன்னு தோணுச்சு.

24:29.428 --> 24:30.971
மனசில எந்த திட்டமும் இல்ல,
சும்மா ஓட்டிட்டு வந்துட்டேன்.

24:33.182 --> 24:36.894
நீ ஏன் ஹாவர்ட் கிட்ட போன,
என் கிட்ட இல்ல எலனார் கிட்ட வராம?

24:38.604 --> 24:40.314
நீ ராபர்ட்டை வெறுக்கிறதை நான் விரும்பல.

24:42.107 --> 24:43.441
அதான், ஹாவர்ட் ஏற்கனவே வெறுக்கிறான்.

24:43.442 --> 24:47.154
அதோட அவனுக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கு… அதான்.

24:50.824 --> 24:54.118
அட, நான் ஒண்ணும் ஹெராயினுக்கு
அடிமையாகலையே.

24:54.119 --> 24:56.162
எனக்கு கொஞ்சம் நேரம் சக்தி தேவைப்பட்டுச்சு.

24:56.163 --> 24:59.624
- நாம எல்லாரும் காலேஜ்ல பண்ணாததா.
- மேர், எனக்குத் தெரியும். நான்…

24:59.625 --> 25:02.293
எப்படியும் ஹாவர்ட் ஒண்ணும் பெரிசா உதவல.

25:02.294 --> 25:05.713
அதான்… சூழ்நிலை அப்படி.

25:05.714 --> 25:07.715
சரி நீ வீட்டுக்குப் போகப் போறியா?

25:07.716 --> 25:09.384
போகத் தான் வேணும்னு நினைக்கிறேன்.

25:10.469 --> 25:12.261
ராத்திரிக்கு நீ எங்க வீட்டுக்கு வந்து தங்கலாமே?

25:12.262 --> 25:13.387
- வேண்டாம்.
- வா.

25:13.388 --> 25:15.389
இல்ல, இல்ல. ம், வேண்டாம். நான்…

25:15.390 --> 25:17.725
நான்…
ஓஹாய் போகலாம்னு நினைக்கிறேன்.

25:17.726 --> 25:18.977
சரி.

25:22.689 --> 25:25.691
மேர், இன்னைக்கு நல்லா தான் ஆரம்பிச்சது.
ஆனால் கடைசியில…

25:25.692 --> 25:28.319
நீயும் உன் நெருங்கின தோழியும்,

25:28.320 --> 25:32.073
தனியா உட்கார்ந்து நாரம் கேக் மெனுவில
உள்ளதை எல்லாம் சாப்பிட்டதோட முடிஞ்சது.

25:32.074 --> 25:34.618
இன்னைக்கு ராத்திரி பத்தி அது தான் உனக்கு
ஞாபகத்தில இருக்கணும், சரியா?

25:35.327 --> 25:38.079
நல்லது. ம், நாம செய்ய வேண்டிய வேலை
இன்னும் இருக்கு, அதனால…

25:38.080 --> 25:41.207
சார், கேக் மெனுவை கொஞ்சம் தரீங்களா?

25:41.208 --> 25:44.836
மென்மையான, இரக்கம் வழியும்
இதயத்தின் மாதாவான, இனிய மேரியும்,

25:44.837 --> 25:47.005
அந்தக் கதையை நம்பினாள்.

25:49.049 --> 25:51.175
ஹே, செல்லம். நீ முழிச்சு என்ன பண்ணிட்டிருக்க?

25:51.176 --> 25:52.552
என்னால தூங்க முடியல.

25:52.553 --> 25:55.514
ம்-ம். நீ தான் இடி விழுந்தாலும்
எந்திரிக்க மாட்டியே.

25:57.224 --> 25:58.307
ம், ஒண்ணுமில்ல.

25:58.308 --> 25:59.935
அது சரி. என்ன மாதிரியான ஒண்ணுமில்ல?

26:02.896 --> 26:04.356
முதல்ல, நீங்க கோபப்பட மாட்டீங்கன்னு
சத்தியம் பண்ணுங்க.

26:05.899 --> 26:07.025
சத்தியம்.

26:10.487 --> 26:13.615
அது எலனார் ஆன்ட்டி.
அந்த டிடெக்டிவ் இன்னைக்குச் சொன்னதைக் கேட்டேன்.

26:14.908 --> 26:15.992
நீ கேட்டிட்டிருந்தியா?

26:15.993 --> 26:19.329
நான்ஸி ஆன்ட்டியை அவங்க தான் கொன்னதா
போலீஸ் நினைக்கிறாங்கன்னு தெரியும், ஆனால்…

26:21.957 --> 26:23.083
அவங்க பண்ணலைன்னு எனக்குத் தெரியும்.

26:27.588 --> 26:29.047
உனக்கு எப்படித் தெரியும், மார்கஸ்?

26:29.673 --> 26:31.383
ஏன்னா ஆன்ட்டி இறந்த அன்னைக்கு ராத்திரி…

26:33.468 --> 26:34.927
அவங்க என் கூட இருந்தாங்க.

26:34.928 --> 26:36.220
யாரு?

26:36.221 --> 26:39.391
எலனார் ஆன்ட்டி. அவங்க என்னைக் கூட்டிப் போக
வான் நயிஸ் வந்தாங்க.

26:40.100 --> 26:41.518
நீ அங்க வான் நயிஸ்ல என்ன பண்ணிட்டிருந்த?

26:42.978 --> 26:45.479
ஆமா, போனது முட்டாள்தனம்னு தெரியும்,
நான் ஒருத்தனுக்குப் பணம் கொடுக்கணும், அவன்…

26:45.480 --> 26:46.856
அவன் ஏதாவது பண்ணிக்கலாம்னு சொன்னான்.

26:46.857 --> 26:48.566
சே, மார்கஸ். நீ திரும்பவும் சூதாடினியா?

26:48.567 --> 26:50.735
உங்க கிட்ட காசு கேட்க வேண்டாம்னு தான்
நான் அதை பண்ணேன்.

26:50.736 --> 26:51.819
என்ன?

26:51.820 --> 26:53.571
நீங்களும், அப்பாவும் ஏற்கனவே
பணத்தைப் பத்தி கவலைப் பட்டுட்டிருக்கீங்க.

26:53.572 --> 26:56.575
- நீ ப்ரொபேஷன்ல இருக்க. உனக்குத் தெரியுதா…
- அம்மா. சரிம்மா. சத்தியம் பண்ணியிருக்கீங்க.

27:00.454 --> 27:02.455
பணம் கொடுக்காம
என்னை விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

27:02.456 --> 27:07.043
கடவுளே. அதனால எலனாரைக் கூப்பிட்டியா?

27:07.044 --> 27:09.045
அந்த அளவு பணம் அவங்கிட்ட மட்டும் தான்
இருக்குன்னு தெரியும்.

27:09.046 --> 27:10.630
அவ உன் புக்கிக்கு பணம் கொடுத்தாளா?

27:10.631 --> 27:15.177
நான்ஸி ஆனட்டியை அவங்க தான் கொன்னதா,
போலீஸ் நினைக்கிறாங்க, நான் தான் அவங்க ஒரே சாட்சி.

27:15.969 --> 27:17.220
அவ உன்னைப் பாதுகாக்கிறா.

27:17.221 --> 27:20.014
அவங்க மட்டும் அன்னைக்கு வரலேன்னா என்ன
நடந்திருக்கும்னு எனக்கு உண்மையிலேயே தெரியல.

27:20.015 --> 27:22.016
ஆனால் அவங்க பிரச்சினையில மாட்டிக்கிறதை
என்னால அனுமதிக்க முடியாது, நான்…

27:22.017 --> 27:23.017
செல்லம்.

27:23.018 --> 27:25.311
- எனக்கு… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.
- செல்லம், பரவாயில்ல.

27:25.312 --> 27:28.856
- அம்மா, என்ன பண்றதுன்னு தெரியல.
- வாடா, வாடா. ஒண்ணுமில்ல.

27:28.857 --> 27:31.609
என்னால நீங்களும் எல்லி ஆன்டியும்
பகைச்சிக்கிறது எனக்குப் பிடிக்கல.

27:31.610 --> 27:34.154
நாங்க எப்பவும் தோழிகளா தான் இருப்போம்.

27:35.531 --> 27:37.949
நாங்க ஏற்கனவே நிறைய அனுபவிச்சிட்டோம்…

27:37.950 --> 27:39.659
- ஆமா. ஆமா.
- …அவளும், நானும். இல்ல?

27:39.660 --> 27:42.162
நீ நல்லவன், சரியா?

27:43.413 --> 27:45.373
என்ன, அடுத்த முறை என்னைக் கூப்பிடு, சரியா?

27:45.374 --> 27:47.124
தெரியும். வீட்டுக்கு வந்து உங்க கிட்ட
சொல்ல தான் இருந்தேன்.

27:47.125 --> 27:50.170
ஆனால்… நீங்க தூங்கிட்டிருந்தீங்க
அப்பாவும் வீட்ல இல்ல.

27:51.213 --> 27:52.214
என்ன சொல்ற நீ…

27:53.090 --> 27:54.465
அப்பா எங்க இருந்தாங்க?

27:54.466 --> 27:56.885
தெரியல.
அவர் கார் வெளியில இல்ல.

28:06.186 --> 28:08.438
- அம்மா?
- சாரி, ஒண்ணுமில்ல. நீ…

28:09.898 --> 28:11.775
நீ போய் கொஞ்சம் நேரம் தூங்கு, சரியா?

28:12.359 --> 28:14.736
நாம நாளைக்கு
அதைப் பத்தி பேசலாம். பரவாயில்ல.

28:27.791 --> 28:29.459
ஹாவர்ட் எல்லாத்தையும் பத்தி
பொய் சொல்லிட்டு இருந்திருக்கார்.

28:38.969 --> 28:41.013
அவர் வீட்ல இருந்ததா போலீஸ் கிட்ட சொன்னார்.

28:44.558 --> 28:45.893
அவர் எப்ப வெளிய போனார்?

28:52.608 --> 28:53.984
அவர் அந்த பிலேஸரைப் போட்டிருந்தார்.

30:31.498 --> 30:33.541
நான் கொடுத்த கிளாடா மோதிரத்தையா போட்டிருக்க?

30:33.542 --> 30:35.794
இது என்னைத் தரையில நிக்க வைக்கும்னு
சொன்ன தானே?

30:57.441 --> 30:59.401
பார்க்க கோபமா இருக்க. கோபமாவா இருக்க?

30:59.902 --> 31:02.154
ஆமா, கோபமா தான் இருக்கேன்… உன் மேல, நான்ஸி.

31:04.656 --> 31:08.202
நம்ம நட்பு உனக்கு ஒரு பொருட்டாவே இல்லையா?

31:08.869 --> 31:10.494
உன்னால எப்படி எனக்கு இதைப் பண்ண முடிஞ்சது?

31:10.495 --> 31:11.997
ம், நீயும் தான் பண்ண.

31:12.664 --> 31:14.124
ஹாவர்டோட மனைவிக்கு.

31:17.878 --> 31:21.756
என்ன? இல்ல, அது சுத்தமா வேற.

31:21.757 --> 31:22.966
எப்படி?

32:34.830 --> 32:35.831
யாரது?

32:36.832 --> 32:37.875
ஜெனி?

32:38.709 --> 32:39.834
யாரது?

32:39.835 --> 32:40.836
நான் மேரி.

32:41.879 --> 32:43.255
மேரி மெக்கோர்மாக்.

32:46.508 --> 32:48.177
கடவுளே. மேரி.

32:50.429 --> 32:54.558
- இப்படி திடீர்ன்னு வந்ததுக்கு மன்னிச்சிடுங்க.
- எப்படி கண்டுப்பிடிச்ச?

32:55.475 --> 32:59.104
உங்கள ஃபேஸ்புக்குல ஃபாலோ பண்றேன்,
ஒத்துக்கிறதுக்கு சங்கடமா இருக்கு.

32:59.938 --> 33:02.024
ஹாவர்ட் உன்னை அனுப்பினாா?
நான் எங்க இருக்கேன்னு அவனுக்குத் தெரியுமா?

33:02.691 --> 33:03.942
நான் இங்க வந்தது அவருக்குத் தெரியாது.

33:23.086 --> 33:24.338
என்ன ஆச்சு, மேரி?

33:26.507 --> 33:28.090
நான் பண்றதை என்னால நம்ப முடியல.

33:28.091 --> 33:29.968
நீங்களும் ஹாவர்டும்…

33:30.969 --> 33:32.304
இல்ல, நான் என்ன சொல்ல வரேன்?

33:34.723 --> 33:36.558
நீங்களும், ஹாவர்டும்
முதல்ல சந்திக்க ஆரம்பிச்சப்போ…

33:39.311 --> 33:40.979
அவர் உங்களுக்குக் கவிதை வாசிச்சிருக்காரா?

33:41.730 --> 33:42.940
அது தான் உன் கேள்வியா?

33:47.194 --> 33:49.905
எனக்கு நீங்க புரிய வைக்கிறதுக்கு நீங்க உதவணும்.

33:54.076 --> 33:56.703
இல்ல, அது… சாரி, அது முட்டாள்தனம்.

33:57.496 --> 33:58.955
முட்டாள்தனமா பேசுறேன்.

33:58.956 --> 34:00.582
நீங்க எனக்குப் பதில் சொல்லணும்னு அவசியமே இல்ல.

34:01.291 --> 34:05.254
ஏன்னா எனக்காக உங்க கணவர் உங்கள விட்டுப் போனார்,
அதனால, நீங்க என்னை வெறுப்பீங்க.

34:07.005 --> 34:08.756
அப்படிதான் அவன் சொன்னானா?

34:08.757 --> 34:10.050
அவன் விட்டுப் போனதா?

34:11.134 --> 34:12.386
ஆமா, ஆமா.

34:14.721 --> 34:16.805
நான் கர்ப்பமான போது, உங்களை விவாகரத்து பண்ணார்,
அதனால…

34:16.806 --> 34:17.808
வாவ்.

34:19.476 --> 34:20.978
உனக்கு உண்மை தெரியணுமா?

34:28.777 --> 34:31.655
உண்மை என்னான்னா, நீ ஒண்ணும் அவனோட
முதல் மாணவி இல்ல,

34:32.364 --> 34:33.532
ஆனால் நீ கொஞ்சம் வித்தியாசமா இருந்த.

34:34.074 --> 34:35.324
நீ என்னை தேடி வந்த.

34:35.826 --> 34:39.870
நீ புத்திசாலியான, இளம் பெண்ணா இருந்த. உனக்கு
முன்னால ஒரு அற்புதமான எதிர்காலம் இருந்தது.

34:39.871 --> 34:41.998
நான் ஒரு முட்டாள்,
உனக்கு வழிகாட்டியா இருக்கலாம்னு நினைச்சேன்.

34:44.126 --> 34:46.961
உன்னை என் வாழ்க்கையில அப்படியே வர அனுமதிச்சேன்,

34:46.962 --> 34:49.839
நீ என்னைப் பயன்படுத்தி
அவன் கிட்ட நெருக்கமான.

34:49.840 --> 34:51.717
இல்ல, ஜெனி. அது உண்மையில்ல.

34:52.676 --> 34:54.511
நான் உங்கள ரொம்ப மதிச்சேன்,

34:55.929 --> 34:58.849
உங்க வேலை தான் நான் இந்த துறையில இறங்குறதுக்கு
எனக்கு ஆர்வத்தை தூண்டிச்சு.

34:59.474 --> 35:01.268
அப்படியே என்னோட கணவனோட கட்டில்லேயும்.

35:05.772 --> 35:08.650
உன்னைப் பத்தி நான் கண்டுப்பிடிச்சதும்,
எல்லாம் முடிஞ்சதுன்னு சொன்னேன்.

35:10.444 --> 35:12.112
போகாதேன்னு கெஞ்சினான்.

35:14.948 --> 35:18.492
உன்னை இன்னொரு
அர்த்தமில்லாத உறவுன்னு சொன்னான்.

35:18.493 --> 35:24.041
நான் இருக்க ஒத்துக்கிட்டா குழந்தையை
தன்னோடது இல்லேன்னு மறுக்கிறேன்னு சொன்னான்.

35:26.585 --> 35:29.588
இல்ல, அவர்…
அவர் உங்களுக்கு மனநிலை சரியில்லேன்னு சொன்னார்.

35:30.088 --> 35:31.715
என்னைப் பார்த்தா அப்படித் தெரியுதா?

35:33.634 --> 35:38.096
நீ கண்ணால பார்த்ததை விட
அவன் சொல்றதை நம்ப முடிவெடுத்த.

35:38.931 --> 35:40.474
அவன் வேறென்ன சொன்னான்?

35:41.391 --> 35:45.187
நீங்க மணிக்கட்டுல வெட்டிக்கிட்டு,

35:45.938 --> 35:47.564
தற்கொலை பண்ணிக்க முயற்சிப் பண்ணதா சொன்னார்.

35:56.448 --> 35:58.200
ஆனால் இதுக்கு அவன் தான் காரணம்.

35:59.660 --> 36:01.328
ரெண்டு மாடிப்படிக்கட்டில இருந்து விழுந்தது.

36:01.912 --> 36:04.039
நான் விட்டுப் போறேன்னு சொன்ன அன்னைக்கு
ராத்திரி நடந்தது.

36:04.540 --> 36:05.791
எங்களுக்குள்ள ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுச்சு.

36:07.292 --> 36:10.587
தனியா விட்டுப் போறத ஹாவர்டால
நினைச்சுப் பார்க்க முடியல.

36:11.463 --> 36:13.549
இத்தனை வருஷமா உன்னைப் பத்தி
நிறைய நினைச்சிருக்கேன்.

36:14.550 --> 36:16.510
உனக்கு எப்படிப் போயிட்டிருக்குன்னு
யோசிட்டிருப்பேன்.

36:19.346 --> 36:20.973
அவனைப் பத்தி நான் உனக்கு எச்சரிக்கை
பண்ணியிருக்கலாம்.

36:23.267 --> 36:24.726
நான் உங்கள நம்பியிருக்க மாட்டேன்.

36:26.186 --> 36:27.688
ஹாவர்ட் உனக்கு என்ன பண்ணான்?

36:57.301 --> 36:58.760
டேவிட் யாருன்னு எனக்குத் தெரியும்.

37:02.097 --> 37:06.268
இந்த கவிதை எங்க கதையில ஒரு பகுதின்னு
எப்பவும் நினைச்சேன், ஆனால் இப்ப…

37:07.186 --> 37:11.898
அது முதல்ல என்னோடது தானாங்கிறது
எனக்குத் தெரியல.

37:11.899 --> 37:14.692
மேரி, அவன் வேட்டையாடுறவன்.

37:14.693 --> 37:17.112
இதை அவன் நான்ஸி கிட்ட வாசிச்சு காட்றதையே
கற்பனைப் பண்ணிட்டிருக்கேன்.

37:18.488 --> 37:24.243
ஏன்னா, அது நிச்சயமா அவளுக்கு முக்கியமா
இருந்திருக்கு. அதனால அதைக் கிழிச்சு வச்சிருக்கா.

37:24.244 --> 37:29.207
ஒருவேளை ஒரு நாள் நீ அதைக் கண்டுப்பிடிப்பேன்னு
அவளுக்கு எங்கேயோ தோணியிருக்கலாம்.

37:29.208 --> 37:31.042
நான் சரியான முட்டாள்னு அவ நினைச்சிருக்கணும்.

37:31.043 --> 37:32.627
- இல்ல.
- நான் முட்டாள் தான்.

37:32.628 --> 37:35.631
- கடவுளே. உன் கிட்ட அட்வில் இருக்கா?
- இருக்கு.

37:36.673 --> 37:42.595
நீ ஒண்ணும் முட்டாள் இல்ல.
உனக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்ல.

37:42.596 --> 37:45.223
அட. இதை தான் ஜெனிக்கும் பண்ணியிருக்கார்.

37:45.224 --> 37:46.849
எனக்கு மட்டும் ஏன் பண்ண மாட்டார்?

37:46.850 --> 37:48.727
நீ உன் மேலயே தப்பு சொல்லிக்காத.

37:52.648 --> 37:54.399
- மத்தவங்களும் இருந்தாங்க.
- என்ன சொல்ற?

37:57.152 --> 37:58.987
மத்த பெண்களும் இருந்தாங்க.

37:59.988 --> 38:01.614
நீ எதுவுமே சொல்லலையே.

38:01.615 --> 38:02.990
சொல்லி என்ன புண்ணியம்?

38:02.991 --> 38:04.910
அவரை நான் விட்டு வந்திருக்கவே மாட்டேன்.

38:05.410 --> 38:07.329
அந்த கஷ்டத்தை நான் பசங்களுக்குக் கொடுக்க மாட்டேன்.

38:09.081 --> 38:10.623
ஆனால் எப்பவும் திரும்ப வருவார், தெரியுமா?

38:10.624 --> 38:14.586
நான்… அவருக்கு நான் தேவை, எனக்கு அவர் தேவை,
அது தான் முக்கியமா பட்டது.

38:15.587 --> 38:18.047
ஒரு முறை, ஒரு அஞ்சாறு வருஷம் முன்னால இருக்கும்,

38:18.048 --> 38:20.925
பொண்ணுங்களை குளிப்பாட்டிட்டு இருந்தேன்.
அப்ப வீட்டுக்கு ஒருத்தி வந்தா.

38:20.926 --> 38:25.596
சின்ன வயசு, இருபது என்னமோ இருக்கும். ஒல்லியா.

38:25.597 --> 38:28.433
அவ காலேஜ் மாணவி, மார்க் குறைவானதால
கவலையா இருக்கிறதா ஹாவர்ட் சொன்னார்.

38:29.309 --> 38:31.353
மேல அவரோட ஆஃபீஸ்க்கு கூட்டிட்டுப் போய்,
கதவை மூடிக்கிட்டார்.

38:33.522 --> 38:34.731
நீ என்ன பண்ண?

38:36.358 --> 38:37.985
நான் குளிப்பாட்டி முடிச்சேன்.

38:41.905 --> 38:43.448
நான் அதைப் பத்தி ஒரு வார்த்தை பேசல.

38:44.157 --> 38:47.201
நீ உன்னையும் உன் குடும்பத்தையும்
காப்பாத்திட்டிருந்திருக்க.

38:47.202 --> 38:52.164
ஆனால் நான் ஏதாவது சொல்லியிருந்தா, அப்ப…
நான்ஸி இன்னும் உயிரோட இருந்திருக்கலாம்.

38:52.165 --> 38:53.958
ஆமா, ஆனால் நீீ இல்லாம போயிருக்கலாம்.

38:53.959 --> 38:58.296
கடவுளே. இந்த மோதிரம்,
அதை அவ சடலத்தில இருந்து எடுத்திருக்கார்.

38:58.297 --> 38:59.338
கடவுளே.

38:59.339 --> 39:03.426
எல்லி, ஹாவர்ட் அதை
அவ சடலத்தில இருந்து எடுத்திருக்கார்.

39:03.427 --> 39:06.679
எப்படி இதெல்லாம் றிஜம்?
எனக்கு வாழ்க்கையில எதுவுமே நிஜமா தோணல.

39:06.680 --> 39:07.723
இல்ல. நான் சொல்றதைக் கேளு.

39:08.891 --> 39:11.643
நீயும், நானும் நிஜம்.

39:12.269 --> 39:13.270
இது நிஜம்.

39:15.689 --> 39:16.982
நான் உனக்குத் தேவைன்னு வரும் போது,

39:18.692 --> 39:21.777
நான் உன்னை துரத்தி விட்டேன்.
என்னை மன்னிச்சிடு.

39:21.778 --> 39:25.114
நான் ராபர்ட் பத்தி உன்கிட்ட
பொய் சொல்லியிருக்கக் கூடாது.

39:25.115 --> 39:27.284
இல்ல, மார்கஸ் நீ என்ன பண்ணேன்னு சொன்னான்.

39:28.202 --> 39:33.247
என மகனைக் காப்பாத்துறதுக்கு உன்
சுதந்திரத்தை இழக்கத் துணியுற? ஏன்?

39:33.248 --> 39:34.457
என்ன விளையாடுறியா?

39:34.458 --> 39:39.003
அது என் குழந்தை.
அவன் பிறந்தப்போ நான் அந்த அறையில இருந்தேன்.

39:39.004 --> 39:42.132
அவனைப் பாதுகாப்பா வைக்கிறதுக்கு
நான் எதுவும் பண்ணுவேன்.

39:42.841 --> 39:45.385
தெரியும். நீ பண்ணுவேன்னு தெரியும்.

39:48.847 --> 39:50.015
- எல்லி.
- என்ன?

39:50.516 --> 39:52.433
அவர் தான். கடவுளே.
என்னோட ஃபோனை வீட்ல விட்டுட்டு வந்துட்டேன்.

39:52.434 --> 39:53.435
மொபைல்
ஹாவர்ட்

39:55.395 --> 39:56.396
நான் என்ன பண்றது?

39:56.980 --> 39:58.564
- எடுத்துப் பேசு.
- சரி.

39:58.565 --> 40:01.193
- அவருக்கு என்ன தெரியும்னு நீ கண்டுப்பிடிக்கணும்.
- சரி.

40:03.654 --> 40:04.737
ஹலோ?

40:04.738 --> 40:06.698
எலனார், எங்க அவளை?
மேரி எங்க?

40:07.199 --> 40:09.617
என்ன? நீ என்ன பேசுறன்னு
எனக்குத் தெரியல, ஹாவர்ட்.

40:09.618 --> 40:11.118
இது நடுராத்திரி.

40:11.119 --> 40:14.831
அவகிட்ட உடனே பேசணும்.
ஆர்டெமிஸ். அவ ஹாஸ்பிட்டல்ல இருக்கா.

40:20.462 --> 40:22.631
சரி, ரூம் நம்பர் எட்டுன்னு சொன்னாங்க.

40:27.386 --> 40:29.637
கடவுளே. ஆர்டீ, செல்லம். அம்மா வந்திருக்கேன்.

40:29.638 --> 40:31.265
அவளுக்கு என்னாச்சு? என்னாச்சு?

40:31.849 --> 40:33.641
மே'ம், நீங்க கொஞ்சம் வழியை விடணும்.

40:33.642 --> 40:35.977
- மேரி, அவங்க வேலையைப் பார்க்க விடு.
- அவளுக்கு நான் தேவை.

40:35.978 --> 40:38.187
ப்ளீஸ், என்ன நடக்குதுன்னு யாராவது சொல்லுங்களேன்.

40:38.188 --> 40:39.981
இங்க வாங்க.
அவளை ஸ்டெபிலைஸ் பண்ண முயற்சிக்கிறோம்.

40:39.982 --> 40:41.148
- சரி.
- என்ன?

40:41.149 --> 40:42.692
அவள் எதோ மாத்திரைகளை விழுங்கினதா
உங்க கணவர் சொன்னார்.

40:42.693 --> 40:44.527
- என்ன மாத்திரை?
- இதில இருந்தது.

40:44.528 --> 40:45.904
உங்களுக்குத் தெரியுதா?

40:46.697 --> 40:47.698
இது என்ன மாத்திரை?

40:48.282 --> 40:50.700
நீங்க சொன்னா தான், உங்க மகளுக்கு
எப்படி உதவணும்னு எங்களுக்குத் தெரியும்.

40:50.701 --> 40:55.496
அது… ஆடரால்.
பத்து மில்லிகிராம்னு நினைக்கிறேன். அது ஆடரால்.

40:55.497 --> 40:56.915
ஆடரால், பத்து மில்லிகிராம்.

40:57.749 --> 40:59.417
- மேரி…
- பல்ஸ் அதிகரிக்குது.

40:59.418 --> 41:02.044
145. 160.

41:02.045 --> 41:04.297
என்ன நடக்குது? என்ன நடக்குது?

41:04.298 --> 41:05.340
என்ன நடக்குது? அவளுக்கு ஒண்ணுமில்லையே?

41:06.091 --> 41:07.550
ஆர்டீ, அம்மா இங்க தான் இருக்கேன், சரியா?

41:07.551 --> 41:08.968
நீங்க கொஞ்சம் தள்ளிப் போகணும்.

41:08.969 --> 41:11.095
ஆர்டீ, அம்மா இங்க இருக்கேன்.
நான் இங்க தான் இருக்கேன், செல்லம்.

41:11.096 --> 41:12.221
உங்க அம்மா உன்கூட தான் இருக்கேன்.

41:12.222 --> 41:13.764
எல்லாம் சரியாயிடும், செல்லம்.

41:13.765 --> 41:16.267
அம்மா இங்க இருக்கேன், செல்லம்.
அம்மா இங்க தான் இருக்கேன்.

41:16.268 --> 41:18.019
எல்லாம் சரியாயிடும்.

41:18.020 --> 41:20.438
என் குழந்தைக்கு என்ன ஆகுது?

41:20.439 --> 41:23.567
அவளுக்கு உதவுங்க. ப்ளீஸ்.

42:16.286 --> 42:18.288
தமிழாக்கம்
மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்
