WEBVTT

00:10.344 --> 00:12.179
அம்மா, என்ன நடக்குது?

00:12.679 --> 00:16.183
நான் என்ன முட்டாள்னு நினைச்சியா?
ஒண்ணும் தெரியாத முட்டாள்னு நினைச்சியா?

00:20.062 --> 00:21.729
ஒரு சின்னப் பொண்ணா வளர்ந்து
வரும் போது,

00:21.730 --> 00:24.525
கனவில பறக்கக் கூடிய சக்தி எனக்கு இருந்துச்சு.

00:26.151 --> 00:29.403
காத்து எனக்குத் தண்ணி மாதிரி இருந்துச்சு,
என்னால அதுல நீந்த முடிஞ்சது.

00:29.404 --> 00:33.992
அப்படியே மலைகளுக்கு மேல போய்,
ஒரு புது வாழ்க்கைக்குள்ள.

00:36.620 --> 00:40.374
இதுல ஆச்சரியம் என்னன்னா, அது நிஜமாயிடுச்சு,
ஒரு விதத்துல.

00:41.416 --> 00:46.088
என்னோட கணவனோட அதிகாரமும், பணமும்,
என்னை ஒரு புதிய உலகத்துக்குக் கூட்டிப் போச்சு.

00:46.839 --> 00:50.050
ஒவ்வொரு வருஷமும் அதைக் கொண்டாட
நான் புது வருட பார்ட்டியை நடத்துனேன்.

00:52.427 --> 00:55.639
என்னோட கொடூரமான கடந்த காலத்துக்கு
எதிரா ஒரு வெற்றியின் கூவல்.

00:57.641 --> 01:01.061
அலங்காரங்களாகவும், வின்டேஜ் ஷாம்பெய்ன்களாகவும்
அது வெளிப்பட்டுச்சு.

01:03.814 --> 01:08.861
பதினெட்டு வருஷங்கள்ல அந்தப் பார்ட்டிகளை
நேர்த்தியானவைகளாக மாத்தினேன்.

01:09.403 --> 01:11.947
நான் யாருன்னு உங்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்ல.

01:13.490 --> 01:16.076
இது தான் எனக்குக் கடைசிப் பார்ட்டின்னு
எனக்குத் தெரிய வாய்ப்பே இல்ல.

01:19.496 --> 01:21.915
அத்தியாயம் இரண்டு
நான்ஸி

01:22.583 --> 01:25.835
ஆனால் இந்த இடத்துக்கு எப்படி வந்தேன்னு சொல்றதுக்கு
நான் கொஞ்சம் பின்னால போகணும்.

01:25.836 --> 01:28.505
பதினேழு வருடங்களுக்கு முன்பு

01:33.385 --> 01:34.636
ஹே.

01:36.138 --> 01:40.016
பார்ட்டிக்கு நான் ரெடி பண்ணணும்.
என்னைத் தொந்தரவு பண்ணாத.

01:40.017 --> 01:41.768
நீ என்னைத் தொந்தரவு பண்றியே.

01:42.644 --> 01:44.021
ரொம்ப செக்ஸியா இருக்க.

01:46.982 --> 01:48.941
- என்னைப் பைத்தியம் ஆக்கப் பார்க்கிறியா?
- இல்ல.

01:48.942 --> 01:50.944
இந்த மேஜை அலங்காரங்களை முடிக்கப் பார்க்கிறேன்.

01:52.279 --> 01:53.363
ஹே.

01:55.073 --> 01:56.365
என்னாச்சு?

01:56.366 --> 02:00.453
இந்த… இந்த நாள் எனக்கு ஒரு பெரிய விஷயம்.

02:00.454 --> 02:01.829
ஓ, நான்ஸ்.

02:01.830 --> 02:04.750
திருமணமான ஒரு தம்பதியா
இது நமக்கு முதல் பார்ட்டி.

02:05.375 --> 02:08.461
ஹென்னஸி உயர்வர்க்கச் சூழலுக்கு
என்னோட அறிமுகம்.

02:09.588 --> 02:11.507
- ஹே.
- நான் சரியாப் பண்ணலைன்னா நல்லாயிருக்காது.

02:12.591 --> 02:16.011
நீ என் மனைவி.
உன் மேல தப்பே கண்டுப்பிடிக்கவே முடியாது.

02:17.638 --> 02:20.641
இது ரொம்ப கஷ்டம்னா நாம இதை நிறுத்திடலாம்.

02:21.183 --> 02:22.850
- ஐயோ.
- நீ ஒரு வார்த்தை சொன்னா போதும்.

02:22.851 --> 02:24.102
- இல்ல.
- சரி.

02:24.770 --> 02:26.438
எனக்கு நீதான் முக்கியம்.

02:32.694 --> 02:33.695
சரி.

02:39.743 --> 02:41.662
எல்லாரும் இப்ப வரப் போறாங்க.

02:42.704 --> 02:45.040
அப்படின்னா அவங்க பார்வைக்கு
ஒரு விருந்து கொடுப்போம்.

02:46.291 --> 02:49.503
அந்த நாட்கள்ல ராபர்ட் என்னை
ரொம்ப அதிகமா விரும்புனார்.

02:50.379 --> 02:52.798
அதுவும் ஆரம்பத்துல நாம பண்ணுவோமே,
அது மாதிரி ரொம்ப வலிமையா.

02:53.715 --> 02:57.636
நமக்குள்ள நிறைய காதல் இருக்கும் போது,
அது எல்லா தவறுகளையும் மறைச்சிடும்,

02:58.345 --> 03:00.180
எல்லா காயங்களையும் குணப்படுத்திடும்.

03:01.056 --> 03:03.350
பழைய, ஆழமான காயங்களைக் கூட.

03:07.271 --> 03:10.107
அந்த அளவுக்கு ஆரம்பத்துல அவனால
நான் ரொம்பப் பாதுகாப்பா உணர்ந்தேன்.

03:12.734 --> 03:15.779
பதினெட்டு வருஷம் கழிச்சு
அது ஒரு வேற கதை மாதரி தோணுது.

03:17.322 --> 03:19.323
ஏய், எப்படி இருக்கு?

03:19.324 --> 03:22.952
இந்த வருஷம் கொஞ்சம் மாத்தி வச்சிருக்கேன்.
புதுசா ஏதாவது பண்ணிட்டே இருக்கணும்.

03:22.953 --> 03:26.582
இந்த முறை, ம், கிரெடிட் கார்ட் பில் கொஞ்சம்
நெஞ்சு வலியை தரப் போகுதுன்னு நினைக்கிறேன்.

03:27.749 --> 03:29.835
காலங்காத்தலையே குடிக்கிற?

03:30.919 --> 03:33.963
இது பார்ட்டி தானே?
ஹே, கிட் வந்திட்டிருக்கா.

03:33.964 --> 03:36.799
விருந்தினர்கள் வரதுக்கு முன்னால நாங்க
கொஞ்சம் பிஸினெஸ் விஷயமா பேசணும்.

03:36.800 --> 03:38.926
இன்னைக்குமா? இது புது வருஷம்.

03:38.927 --> 03:42.054
இப்ப தான் விடுமுறைக்கு முன்னால
நீங்க எல்லாரும் சேர்ந்து பேசுனீங்க. வேற…

03:42.055 --> 03:44.056
வேற என்ன பேசப் போறீங்க?

03:44.057 --> 03:45.309
நான் என்னோட ஆஃபீஸ்ல இருக்கேன்.

04:32.105 --> 04:34.024
ஆரமின்ட்டா ஹாலின்
புத்தகத்தைத் தழுவியது

04:48.789 --> 04:51.708
மன்னிக்கணும், நீங்க தப்பான்ன
இடத்துல அதை வைக்கிறீங்கன்னு நினைக்கிறேன்.

04:52.251 --> 04:55.796
எதுவா இருந்தாலும் நீங்க
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிட்ட தான் பேசணும்.

04:57.130 --> 04:58.464
ஆனால் சமயம் பார்த்து பேசுங்க.

04:58.465 --> 05:02.093
ஏன்னா இந்த ஹென்னஸி முட்டாள்களுக்கு
இந்த பார்ட்டி ஒரு பெரிய விஷயம்.

05:02.094 --> 05:04.263
நான் நான்ஸி ஹென்னஸி, நீங்க?

05:05.138 --> 05:06.348
சோலி முடிஞ்சதா?

05:08.225 --> 05:09.434
டேவிட்.

05:10.018 --> 05:14.605
டேவிட், ம், இந்த பார் அந்த ஷெட்டுக்குக் கீழ வரணும்.

05:14.606 --> 05:17.483
அப்படி இருந்தா விஸ்டீரியா ஓயினுக்கு
கொஞ்சம் நிழல் கிடைக்கும்,

05:17.484 --> 05:19.610
அப்படியே ரோஜா தோட்டத்து காட்சியும் கிடைக்கும்.

05:19.611 --> 05:21.864
நீங்க அதை வரைஞ்சீங்களா? நல்லா இருக்கு.

05:23.490 --> 05:26.325
நீங்க ஒண்ணும் என்னை புகழ வேண்டாம்.
உங்கள நான் வேலையை விட்டுத் தூக்கப் போறதில்ல.

05:26.326 --> 05:28.829
வேற ஆளை எடுக்க எனக்கு இப்ப நேரமில்ல.

05:30.372 --> 05:31.706
திருமதி. ஹென்னஸி.

05:31.707 --> 05:34.417
- என்ன?
- திருமதி. ஹென்னஸி, ஒரு மோசமான செய்தி.

05:34.418 --> 05:35.586
என்னது?

05:36.503 --> 05:38.171
கிஃப்ட் பைகள்.

05:38.172 --> 05:42.008
இந்த ரோஜா பவனி தீம் பொருந்துற மாதிரி
நான் ஆர்டர் பண்ண ப்ளஷ், க்ரிம்ஸனுக்குப் பதிலா,

05:42.009 --> 05:43.801
கருப்பு வெள்ளை ரிப்பன் போட்டிருக்காங்க.

05:43.802 --> 05:46.262
இதை மாத்துறதுக்கு ஒரு மணி நேரமா
எல்லா கடைகளையும் கூப்பிட்டுட்டு இருக்கேன்,

05:46.263 --> 05:47.889
ஆனால் விடுமுறைக்கு எல்லா கடையும் மூடியிருக்கு.

05:47.890 --> 05:50.183
கேரலின், கொஞ்சம் நிதானமா இரு, சரியா?
நமக்கு நேரம் இருக்கு.

05:50.184 --> 05:52.143
நான் வேற ஒருத்தரைக் கூப்பிடுறேன், சரியா?

05:52.144 --> 05:53.395
சரி, நன்றி.

05:55.898 --> 05:58.150
என்னோட ஹீரோ. வாங்க மக்களே.

05:59.902 --> 06:01.736
வாங்க.

06:01.737 --> 06:04.198
- ஏ.
- ஆ, ஏஞ்சல்.

06:04.865 --> 06:08.075
சரி, நீ இதை சரியா
45-டிகிரி கோணத்துல வெட்டணும்,

06:08.076 --> 06:10.661
அப்ப தான் முனைகள் ஒரே மாதிரியா, அழகா இருக்கும்.

06:10.662 --> 06:13.080
அதைக் கச்சிதமா பண்றது முக்கியமா
இல்ல பண்றது முக்கியமா?

06:13.081 --> 06:15.042
- ரெண்டையும் பண்ண முடியாதா?
- முடியாது.

06:16.251 --> 06:20.589
பார்ட்டியை நான் ரொம்ப ஆடம்பரமா
பண்றேன்னு ராபர்ட் நினைக்கிறான்.

06:21.632 --> 06:22.799
அவன் நினைக்கிறது சரி தான்.

06:23.675 --> 06:26.469
பசங்களா, கொஞ்சம் பைகளை எடுத்து
முன்னால போய் வையுங்க,

06:26.470 --> 06:28.262
நிரப்பின பைகளை மட்டும்.

06:28.263 --> 06:30.598
- அருமை.
- ரெண்டு ரெண்டா. அப்படி தான்.

06:30.599 --> 06:31.892
ரொம்ப நன்றி.

06:32.559 --> 06:33.852
அவங்க ரொம்ப அழகா இருக்காங்க.

06:36.313 --> 06:39.815
நான்ஸி, கேளு, நீ நேசிக்கிற எல்லாரும்
சந்தோஷமா இருக்கணும்னு இந்த அழகான

06:39.816 --> 06:42.485
புது வருஷப் பார்ட்டியை நீ நடத்துற.

06:42.486 --> 06:47.241
இன்னைக்குக் கொண்டாடுறதுக்கு ஒவ்வாருத்தருக்கும்
இது ஒரு சாக்கா இருக்கும்னு நினைக்கிறேன்.

06:49.493 --> 06:50.911
மார்கஸா?

06:51.995 --> 06:52.996
இல்ல ஹாவர்ட்.

06:54.039 --> 06:57.500
அவர் வேலையை இன்னும் குறைச்சிட்டாங்க.
இப்ப வாரத்துக்கு நாலு கிளாஸ்தான் எடுக்குறார்.

06:57.501 --> 06:58.710
- என்ன?
- தெரியும்.

06:59.461 --> 07:01.629
என்ன பண்ண போறோம்னு எனக்கு உண்மையிலேயே தெரியல.

07:01.630 --> 07:02.713
நான் உதவுறேன்.

07:02.714 --> 07:04.590
இல்ல, இல்ல. நான் அதுக்காக… வேண்டாம்.

07:04.591 --> 07:08.512
நீ ஏற்கனவே நிறைய கொடுத்திருக்க.
இனியும் உன் கிட்ட நான் பணம் வாங்கப் போறதில்ல.

07:09.263 --> 07:11.180
அது பத்தி ஹாவர்ட் கிட்டயும் நான்
பொய் சொல்ல விரும்பல.

07:11.181 --> 07:15.059
அப்ப சொல்லாத. உன்னோட கணவரோட ஈகோவா,
இல்ல குழந்தைகளுக்கு

07:15.060 --> 07:17.144
சாப்பாடான்னு வரும்போது…

07:17.145 --> 07:20.523
இல்ல, ம், அது அவரோட ஈகோ இல்ல.
அவருக்குன்னு சில கொள்கைகள் இருக்கு.

07:20.524 --> 07:23.067
காலேஜ்ல அவரை நவீன முறையில
பாடம் நடத்தச் சொல்றாங்க,

07:23.068 --> 07:26.154
ரோமாபுரியோட வீழ்ச்சியை
டிக்டாக் ஸ்டைல்ல விளக்கச் சொல்றாங்க.

07:26.989 --> 07:30.325
அவரோ தனக்குன்னு உள்ள தரத்தை
சமரசம் செய்றதா இல்ல.

07:31.869 --> 07:33.494
அட, இது புது வருஷம் தானே?

07:33.495 --> 07:35.830
நாம எதிர்பாரக்காத நேரத்தில வாய்ப்புகள் வரும்.

07:35.831 --> 07:38.916
என் தோழி, மேரி, நித்திய நம்பிக்கையின் சன்னதியில
பிரார்த்தனை பண்ணிட்டிருந்தா.

07:38.917 --> 07:40.001
உண்மை தான்.

07:40.002 --> 07:42.086
அதிலேயும் முக்கியமா அவ குடும்பம்னு வரும் போது.

07:42.087 --> 07:43.713
நான்ஸி ஆன்ட்டி, நாங்க கோராவோட பொம்மைகளை வச்சி
விளையாடலாமா?

07:43.714 --> 07:45.214
இல்ல. நான்ஸி ஆன்ட்டிக்கு நிறைய வேலை இருக்கு.

07:45.215 --> 07:47.049
இங்க பெரிய பார்ட்டி நடக்குது. இதைப் பாருங்க.

07:47.050 --> 07:49.302
இது அதைவிட முக்கியமானது.
நான் போய் அவகிட்ட கேட்கிறேன், சரியா?

07:49.303 --> 07:52.181
- நன்றி… நன்றி சொல்லுங்க.
- நன்றி. நன்றி.

07:52.931 --> 07:56.351
அவளுக்கு குடும்பத்து மேல இருக்கிற
அக்கறை எனக்குப் பிடிச்சிருக்கு. அது தேவை.

07:57.644 --> 08:01.857
மேரி, எனக்குக் கிடைக்காத ஒரு அம்மா.
என்னால அவளைப் போல இருக்க முடியல.

08:03.567 --> 08:04.568
என்ன?

08:06.320 --> 08:07.487
இது அப்பாவோட சட்டை தானே?

08:07.988 --> 08:10.824
அவர் தான் எடுத்துக்கச் சொன்னார்.
உங்களுக்கு என்னம்மா வேணும்?

08:11.533 --> 08:12.784
சும்மா பார்க்க வந்தேன்.

08:14.077 --> 08:18.039
அதோட, மேரியோட குழந்தைங்களுக்கு
உன்னோட பொம்மைகளோட விளையாடணுமாம்.

08:18.040 --> 08:19.123
கொடுக்கலாமா?

08:19.124 --> 08:20.791
எனக்கு அதைப் பத்தி கவலையே இல்ல.

08:20.792 --> 08:23.295
அது எங்க இருக்குன்னு தெரிஞ்சா
எடுத்துக் கொடுங்க.

08:27.883 --> 08:32.220
நீ அதைவிட்டுப் பிரியவே மாட்ட, தெரியுமா?
ஒரு காலத்துல.

08:32.221 --> 08:33.303
ஆமா.

08:33.304 --> 08:34.765
கோரா.

08:36.850 --> 08:39.143
இது நீ பார்ட்டியில போட வேண்டிய டிரஸ்.

08:39.144 --> 08:42.939
இப்ப நான் இதைத் திரும்ப அயர்ன் பண்ணணும்.
நீ உன் பொருட்களை ஒழுங்கா பார்த்துக்கணும்.

08:42.940 --> 08:44.398
இல்ல, நான் உங்க பார்ட்டிக்கு வரல.

08:44.399 --> 08:46.817
ஹைலேண்ட்ல இருக்க என் நண்பர்கள்
இன்னைக்கு பாட்லக் வச்சிருக்காங்க.

08:46.818 --> 08:48.945
என்ன? இது எப்ப முடிவாச்சு?

08:48.946 --> 08:50.322
அப்பா போகலாம்னு சொன்னார்.

08:50.822 --> 08:51.823
அப்படியா?

08:52.324 --> 08:54.408
நீங் ஏன் ரொம்ப விசித்திரமா நடந்துக்கிறீங்க?

08:54.409 --> 08:56.661
உங்களைத் தவிர யாரும்
இந்த பார்ட்டியைப் பத்திக் கவலைப் படுறது இல்ல.

08:56.662 --> 08:59.080
நீ இப்ப என்னைக் கஷ்டப்படுத்துற.

08:59.081 --> 09:00.289
நான் கஷ்டப்படுத்துறேனா?

09:00.290 --> 09:04.043
ஸ்கூல்ல இருந்து வீடு வந்து ஒரு வாரம் ஆச்சு,
நீங்க முழுசா ரெண்டு வார்த்தை கூட என்கிட்ட பேசல.

09:04.044 --> 09:07.380
உங்க சொந்த மகள்கிட்ட பேசுறதை விட
அந்த கேட்டரர் கிட்ட நிறைய பேசுறீங்க.

09:07.381 --> 09:09.799
நான் எப்படி இருக்கேங்கிற மாதிரி கூட
ஏதாவது கேட்டிருக்கீங்களா?

09:09.800 --> 09:11.634
என் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு
உங்களுக்குத் தெரியுமா?

09:11.635 --> 09:15.221
- செல்லம், நான் கொஞ்சம் பிஸியா தான்…
- பரவாயில்ல. எனக்கு அது பத்தி கவலையில்ல.

09:15.222 --> 09:19.226
நான்… நான் ஒண்ணும் இங்க கஷ்டப்படுத்தலைன்னு
சொல்றேன், அவ்வளவு தான்.

09:19.935 --> 09:23.104
சரி, பார்ட்டி முடிஞ்சதும்,
நான் உன் கூட உட்கார்றேன்.

09:23.105 --> 09:25.440
கடவுளே, இப்ப ரூமை விட்டு வெளியப் போறீங்களா,
ப்ளீஸ்?

09:29.278 --> 09:33.866
சரி, நீ எட்டிப் பார்த்துட்டுப் போனேன்னா,
எனக்கு சந்தோஷமா இருக்கும், உங்க அப்பாவுக்கும் தான்.

09:34.533 --> 09:37.327
அப்பாவுக்கு இப்பல்லாம் என்ன பிடிக்கும்னு
உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தோணல.

09:39.413 --> 09:42.833
கோரா பேசினது என்னைக் காயப்படுத்திச்சு,
ஆனால் அதுக்கு அவளைக் குத்தம் சொல்ல முடியாது.

09:43.584 --> 09:47.837
ஆடம்பர பொம்மைகளும், விலையுர்ந்த ஆடைகளும்
நிறைஞ்ச உலகத்தில பிறந்தவ அவ.

09:47.838 --> 09:49.213
ஆனால் இந்தப் பெரிய வீட்டுக்குள்ள

09:49.214 --> 09:52.508
திக்குத் தெரியாம வந்த வெளியாள் நான்னு
என்னால மறக்க முடியாது.

09:52.509 --> 09:55.636
பேக்கர்ஸ்ஃபீல்ட்ல இருந்து வந்து, வேஷம் போட்டிருக்கும்
ஒரு குப்பத்துப் பொண்ணு.

09:55.637 --> 09:58.389
எப்ப வேணும்னாலும் என் வேஷம் கலையலாம்.

09:58.390 --> 10:00.683
முடிஞ்ச அளவு யாரையும் கஷ்டப்படுத்தாம
இதைப் பண்ணப் பார்க்கிறேன்.

10:00.684 --> 10:02.685
அப்படியா, பாபி?
இந்தப் பார்ட்டிக்கு எவ்வளவு செலவழிச்ச?

10:02.686 --> 10:04.854
செலவழிக்கிறது பத்தி என்கிட்ட பேசாத, கிட்.

10:04.855 --> 10:06.440
ஏற்கனவே அப்பா நிறைய பேசிட்டாரு.

10:07.399 --> 10:11.195
நான் அதைப் பார்த்துக்கிறேன்.
எனக்கு… எனக்குக் கொஞ்சம் நேரம் வேணும்.

10:14.573 --> 10:15.656
கடவுளே, நான்ஸி.

10:15.657 --> 10:18.701
- என் கணவரை பார்க்க வந்தேன்.
- அவன் வெளியாட்கள் யாரையும் பார்க்குற

10:18.702 --> 10:21.580
- மனநிலையில் இல்ல.
- நான் பார்த்துக்குறேன், நன்றி.

10:27.628 --> 10:28.962
என்னை வெளியாளுன்னு சொல்றா.

10:33.133 --> 10:34.134
சொல்லு.

10:37.971 --> 10:41.141
இங்க என்ன நடக்குது?
நாம ஏதாவது பணப் பிரச்சினையில இருக்கோமா?

10:44.478 --> 10:46.396
இல்ல. அது…

10:47.523 --> 10:51.026
நாம செலவழிக்கிறது அப்பாவுக்குப் பிடிக்கல.
இதுல கவலப்படுற மாதிரி எதுவும் இல்ல.

10:51.735 --> 10:54.612
நீ காலைலயே டிரிங்ஸ் மூன்றாவது ரவுண்ட் போற,
அதனால…

10:54.613 --> 10:55.781
ஒண்ணுமில்ல.

10:57.783 --> 11:01.244
நீங்க எல்லாரும் நியூ யார்க்குக்கு மீட்டிங் போனீங்களே,
அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கா?

11:01.245 --> 11:03.580
ஹே. ஒண்ணுமில்லேன்னு சொன்னேன்.

11:04.373 --> 11:06.959
எனக்கு…
நிறைய வேலை இருக்கு, அவ்வளவு தான்.

11:10.838 --> 11:11.880
சரி…

11:13.549 --> 11:15.717
அதில இருந்து எப்படி உன் மனசை
மாத்துறதுன்னு எனக்குத் தெரியும்.

11:21.473 --> 11:24.977
இப்பவா?
விருந்தினர்கள் எல்லாரும் வரப் போறாங்க.

11:28.146 --> 11:30.315
அப்படின்னா அவங்க பார்வைக்கு
ஒரு விருந்து கொடுப்போம்.

11:32.359 --> 11:33.443
அப்படியா?

12:40.260 --> 12:41.261
ஹே.

12:41.845 --> 12:42.929
என்னை மன்னிச்சிடு.

12:42.930 --> 12:44.014
ஹே.

12:45.307 --> 12:46.766
- நான்…
- கொஞ்ச நாளாச்சு.

12:46.767 --> 12:49.770
- என்னாச்சுன்னு சொல்லு.
- இல்ல, அது…

12:51.522 --> 12:54.565
என்னைக் கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருக்கியா?

12:54.566 --> 12:57.486
என் மண்டையில நிறைய ஓடிட்டிருக்கு.

13:11.333 --> 13:13.168
இன்னைக்கு நல்லா பண்ண, செல்லம்.

13:14.628 --> 13:16.546
முழு நேரமும் உங்கள தான் நான் பார்த்திட்டிருந்தேன்.

13:16.547 --> 13:20.676
தெரிஞ்சது. எனக்காக மட்டும் தான்
நீ ஆடுன மாதிரி இருந்துச்சு.

13:30.561 --> 13:31.562
மறந்துடப் போறேன்.

13:33.981 --> 13:36.650
இது உன்னோட ஸ்கூல் ஃபீஸுக்கு
ரெண்டு மாசத்துக்குத் தாங்கும்.

13:41.822 --> 13:43.907
எனக்குப் புது பாலே ஷூஸ் வேணும்.

13:47.327 --> 13:49.371
அம்மாவுக்கு தப்பாம பிறந்திருக்க.

13:56.086 --> 13:57.628
ஹலோ.

13:57.629 --> 13:59.423
- ஹாப்பி நியூ இயர், டியர்.
- ஹாப்பி நியூ இயர்.

14:00.465 --> 14:03.092
அப்பா அந்த ரோஜா தோட்டம்
நல்லாயிருக்குன்னு சொல்லிட்டிருந்தாங்க.

14:03.093 --> 14:05.178
தோட்டக்காரங்க அதை நல்லா
பார்த்துக்குறாங்க போல.

14:05.179 --> 14:09.223
இல்ல, தோட்டத்தை நான் தான் பார்த்துக்குறேன்.
அது மனசுக்கு இதமான ஒரு வேலை.

14:09.224 --> 14:11.058
பரவாயில்லையே.

14:11.059 --> 14:13.686
என் பிள்ளைங்க உன்கிட்ட இருந்து
சில விஷயங்களைக் கத்துக்கலாம்.

14:13.687 --> 14:16.982
என் கிட்ட இருந்து எல்லாத்தையும் எடுத்துக்கிட்டாங்க,
என்னோட வேலை திறனைத் தவிர.

14:17.733 --> 14:19.108
அது எனக்கு நியாயமா தெரியல.

14:19.109 --> 14:21.195
ராபர்ட் உங்களுக்காக நிறைய நேரம்
வேலைப் பார்க்குறார்.

14:21.778 --> 14:23.821
அதுக்கு தான் அவனுக்கு பணம் கிடைக்குதே.

14:23.822 --> 14:26.449
என்னோட குடும்பத்துல,
வன்முறை வெளிப்படையா இருந்துச்சு…

14:26.450 --> 14:28.451
- உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துத் தரேன்.
- …ஆனால் ராபர்ட் குடும்பத்தில,

14:28.452 --> 14:30.578
அவங்க அதை மறைமுகமா தான் பண்ணாங்க.

14:30.579 --> 14:31.996
வாங்க.

14:31.997 --> 14:34.790
என் தோழிகள் இல்லேன்னா
நான் அதைக் கவனிக்காமலே போயிருப்பேன்.

14:34.791 --> 14:36.793
ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க,
நான் வந்திடுறேன்.

14:37.461 --> 14:39.630
வாங்க. வந்ததுக்கு நன்றி.

14:41.757 --> 14:43.382
- உனக்கு ஒண்ணுமில்லையே?
- ஒண்ணுமில்ல.

14:43.383 --> 14:45.801
- அது… சுவாரஸ்யமா இருந்துச்சு.
- ஆமா.

14:45.802 --> 14:48.096
ராபர்ட்டோட அப்பா உன்கிட்ட
திரும்ப வழிஞ்சிட்டிருந்தாரா?

14:48.597 --> 14:49.890
அவர் என்கிட்ட வழிய மாட்டாரே.

14:50.724 --> 14:52.475
கடவுளே, வழியுறாரா என்ன?

14:52.476 --> 14:55.144
தெரியல. அவங்களுக்குன்னு ஒரு ரகசிய பாஷை
இருக்கு. அது எனக்குப் புரியவே புரியாது.

14:55.145 --> 14:57.439
ஏய், பசங்களா,
அதை வச்சு கவனமா விளையாடுங்க, சரியா?

14:58.023 --> 14:59.690
அது ரொம்ப விலையுயர்ந்தது.

14:59.691 --> 15:02.861
பரவாயில்ல. கோரா அதைப் பத்தி இப்போ
கவலைப்படுறது இல்ல. என்னைப் பத்தியும் கவலைப்படல.

15:03.654 --> 15:05.238
- அட. உன் மேல அக்கறையா தான் இருக்கா.
- நான்ஸி!

15:05.239 --> 15:06.864
கடவுளே, எனக்கு இவளை பிடிக்கவே பிடிக்காது.
வரேன்.

15:06.865 --> 15:09.034
ஹாய், உன்னைப் பார்த்ததுல சந்தோஷம்.

15:09.743 --> 15:10.744
மன்னிக்கணும்.

15:11.912 --> 15:13.996
எலனார்
நான் வந்துட்டேன்…

15:13.997 --> 15:16.416
எனக்கு ஒரு மார்ட்டினி வேணும்…

15:20.254 --> 15:22.588
- எல்!
- ஹாய்! ஹாப்பி நியூ இயர்.

15:22.589 --> 15:24.882
எனக்காக உன் பயணத்தை நீ பாதியிலேயே
முடிச்சிட்டு வரணும்னு அவசியமில்ல.

15:24.883 --> 15:28.719
என்ன விளையாடுறியா? இதை விட எனக்கு
வேற என்ன முக்கியமான வேலை இருக்கு?

15:28.720 --> 15:32.473
கடவுளே. பதினாறு மணி நேர விமான பயணத்துக்குப்
பிறகும் இப்படி அழகா இருக்கியே.

15:32.474 --> 15:36.978
நான் தெளிவாச் சொன்னேன் தானே? வாட்கா. வெர்மவுத்.
ஆலீவ். எனக்கு இப்பவே வேணும்.

15:36.979 --> 15:39.064
உன் அதிர்ஷ்டம், பார்டென்டர் எனக்குத் தெரிஞ்சவன் தான்.

15:41.859 --> 15:43.110
அற்புதம். நன்றி.

15:43.777 --> 15:45.153
நீங்களும் தான் அழகா இருக்கீங்க.

15:46.488 --> 15:48.573
- சரியான ஆளா தான் பிடிச்சிருக்க.
- தெரியும்.

15:48.574 --> 15:49.907
- ஹாய்.
- ஹாய்.

15:49.908 --> 15:52.493
- எப்படி இருக்க? நல்லா இருக்கேன்.
- நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?

15:52.494 --> 15:54.078
- எனக்கும் அது மாதிரி ஒண்ணு வேணும்.
- நிஜமாவா?

15:54.079 --> 15:55.663
நீ எப்ப மார்ட்டினி குடிக்க ஆரம்பிச்ச?

15:55.664 --> 15:58.291
நீ ரெண்டு வாரம் இங்க இல்ல.
நான் இப்போ மாறிட்டேன்.

15:58.292 --> 15:59.500
அருமை!

15:59.501 --> 16:02.628
- நான்ஸி, சூப்பர். இது ரொம்ப அழகா இருக்கு.
- நன்றி.

16:02.629 --> 16:04.755
நல்லா பண்ணியிருக்க. எங்க உன் கணவன்?

16:04.756 --> 16:08.801
- ஆமா. நானும் ராபர்ட்டை பார்க்கலையே.
- ஆமா. அவனுக்கு கொஞ்சம் வேலை.

16:08.802 --> 16:10.386
- இன்னைக்கு வேலை பார்க்கிறானா?
- புரியுது.

16:10.387 --> 16:15.016
அல்லது மறைமுகமா உங்க பார்ட்டிக்கு முன்னான
விளையாட்டுக்குப்…

16:15.017 --> 16:16.601
- இல்ல.
- …பிறகு ஓய்வெடுக்கிறானா?

16:16.602 --> 16:18.603
- என்ன?
- ஆமா, அது அவங்க வழக்கமா பண்றது.

16:18.604 --> 16:20.104
- உண்மையாவா சொல்ற? இல்ல.
- ஆமா.

16:20.105 --> 16:22.523
- பண்றதுண்டு.
- எப்போ… பிறகு என்ன ஆச்சு?

16:22.524 --> 16:24.817
கொஞ்ச நாளா எல்லாம் வித்தியாசமா இருக்கு.

16:24.818 --> 16:29.740
தெரியல, கொஞ்ச நேரம் முன்னால ட்ரை பண்ணேன்.
ஆனால் அவனுக்கு மூடு கிளம்பல.

16:30.365 --> 16:32.450
குறும்பு தான்.

16:32.451 --> 16:34.744
இது சகஜம்.
கல்யாண வாழ்க்கைன்னா அப்படிதான், இல்லையா?

16:34.745 --> 16:36.078
எல்லி, இது சகஜம்னு அவகிட்ட சொல்லு.

16:36.079 --> 16:37.288
- எனக்குத் தெரியாது…
- அப்படியா?

16:37.289 --> 16:38.956
…நான் தனியாளாச்சே.

16:38.957 --> 16:41.542
உனக்குக் கல்யாணம் ஆகி பல வருஷமாச்சு.
இது வரைக்கும் உன் கணவனுக்கு

16:41.543 --> 16:44.170
செய்றதுல பிரச்சினை இருந்ததே இல்லையா?

16:44.171 --> 16:45.296
வாவ். கடவுளே.

16:45.297 --> 16:49.467
வேற பிரச்சினைகள் இருந்திருக்கு…
ஆனால் இது மாதிரி இல்ல.

16:49.468 --> 16:50.843
இல்ல… சமீபத்துல,

16:50.844 --> 16:54.348
அவங்க அப்பா நிறைய வேலை கொடுக்குறாரு,
அதனால இருக்கும்னு நினைக்குறேன்.

16:54.848 --> 16:56.974
- குடும்ப பண விவகாரம், அதனால இருக்கலாமோ?
- அது…

16:56.975 --> 16:58.059
- மன அழுத்தம்?
- ஆமா, கண்டிப்பா.

16:58.060 --> 17:00.478
ஆமா, பிரச்சினை இல்லாதப்ப
அதை உருவாக்கக் கூடாது. அவ்வளவு தான்.

17:00.479 --> 17:01.687
- எல்.
- சொல்லு.

17:01.688 --> 17:02.772
நான்…

17:02.773 --> 17:05.357
- உனக்கு ஒருத்தரை அறிமுகப்படுத்தணும்.
- வேண்டாம், வேண்டாம்.

17:05.358 --> 17:08.736
- வேணும், வேணும்.
- அவன் விவாகரத்தான ஒரு வக்கீல்.

17:08.737 --> 17:11.364
விவாகரத்து வக்கீல் இல்ல.
ஒரு வக்கீல், விவாகரத்தானவன்.

17:11.365 --> 17:14.366
அவன் ராபர்ட்டோட டென்னிஸ் விளையாடுவான்,
ஆனால் நல்லவன்.

17:14.367 --> 17:16.327
- இந்த ஜோடி சேர்க்குறது வேண்டாம்னு பேசுனோமே.
- ஆமா.

17:16.328 --> 17:18.371
இது ஜோடி சேர்க்குறது இல்ல,
இது வெறும் ஒரு அறிமுகம்.

17:18.372 --> 17:20.206
- அது போக அவனுக்குப் பியான்ஸேவை தெரியும்.
- பொய் சொல்லாத.

17:20.207 --> 17:21.833
ஆமா, ரெண்டு பேரும் சேர்ந்து
எதுக்கோ நிதி திரட்டுனாங்க.

17:21.834 --> 17:23.417
முக்கியமான விஷயத்தை மறைச்சிட்ட, இல்லையா?

17:23.919 --> 17:25.211
- எட், ஹாய்.
- பியான்ஸே?

17:25.212 --> 17:26.629
மன்னிக்கணும்.

17:26.630 --> 17:27.838
- அடடா.
- ஹாய்.

17:27.839 --> 17:29.048
இந்த வருஷமும் கலக்கிட்ட.

17:29.049 --> 17:30.299
- உனக்கு நல்ல மனசு.
- அழகா இருக்கான்.

17:30.300 --> 17:32.635
இது தான் எலனார், என்னோட தோழி.
நான் சொல்லிட்டிருந்தேன்ல?

17:32.636 --> 17:34.762
- எலனார், ரொம்ப சந்தோஷம்.
- சந்தோஷம்.

17:34.763 --> 17:36.597
- ஹாப்பி நியூ இயர்.
- ஹாப்பி நியூ இயர்.

17:36.598 --> 17:38.516
நீங்க பாஸ்டன்னு நான்ஸி சொன்னா.

17:38.517 --> 17:41.310
நான் கேம்ப்ரிட்ஜ் சட்டக் கல்லூரில படிச்சேன்.

17:41.311 --> 17:42.478
- வாவ்!
- ஆமா.

17:42.479 --> 17:43.813
ஹாவர்ட். நாங்க போகணும்…

17:43.814 --> 17:44.897
- நாங்க…
- ஏன்?

17:44.898 --> 17:46.524
- ஹாவர்டுக்கு டிரிங்ஸ் கொடுக்கணும்.
- இல்ல.

17:46.525 --> 17:48.401
- ஆமா. கொடுக்கணும்.
- என்ன? நிஜமாவா?

17:48.402 --> 17:49.403
ஆமா.

17:50.279 --> 17:51.988
ஆ, நல்ல காரியம் பண்ண.
ரொம்ப நல்லவனா இருக்கான்.

17:51.989 --> 17:53.407
- அழகா இருக்கான், இல்லையா? ஆமா.
- ஆமா.

17:54.032 --> 17:57.869
ஒரு உபகாரம் பண்றியா? ஹாவர்டோட வேலை விஷயமா
நான் சொன்னதைப் பத்தி பேசாத.

17:57.870 --> 18:00.246
நான் உன்கிட்ட சொன்னேன்னு தெரிஞ்சா
அவர் மனசு வருத்தப்படும், அதனால…

18:00.247 --> 18:02.331
- நிச்சயமா. நான் வாயைத் திறக்கல.
- நன்றி.

18:02.332 --> 18:03.916
நான் கொஞ்சம் பேர்கிட்ட போய்
ஹாய் சொல்லிட்டு வந்துடுறேன்.

18:03.917 --> 18:05.251
- சரி, நான் இங்க இருக்கேன்.
- சரி.

18:05.252 --> 18:08.004
இன்னைக்கு நடந்திருந்தா, முதல்ல பாலன்சீனை
எதிர்த்திருப்பாங்க,

18:08.005 --> 18:11.091
அல்லது குறைந்தப்பட்சம்,
"பிரச்சினைக்குரியவன்னு" பேர் குத்தியிருப்பாங்க.

18:12.593 --> 18:14.510
அவரைப் பொறுத்தவரை, எனக்கும் தான்,

18:14.511 --> 18:18.014
நடனம் என்கிறது பார்வையாளர்களையோ
இல்ல கலைஞர்களையோ ஆறுதல் படுத்துறதுக்கு இல்ல.

18:18.015 --> 18:21.434
அது தூண்டணும். கிளர்ச்சி செய்யணும்.

18:21.435 --> 18:23.896
நீ முன்னால வழிநடத்தும் போது
அது எப்பவும் அதை பண்ணும், ஃபில்.

18:24.605 --> 18:26.689
ஆனால் திருமதி. ஹென்னஸி மாதிரி

18:26.690 --> 18:29.525
தாராள மனசு உள்ள போர்டு உறுப்பினர்கள் இல்லாம
நாங்க இதில எதுவும் பண்ண முடியாது.

18:29.526 --> 18:31.652
இந்த வித்வானை நான் கொஞ்சம் கூட்டிட்டுப் போகலாமா?

18:31.653 --> 18:32.737
மன்னிக்கணும்.

18:32.738 --> 18:37.033
நம்ம புது நடன நிகழ்ச்சிக்கு, நடன விளக்கத்தை
எழுதுறதுக்கு ஒரு சரியான ஆளைப் பார்த்திருக்கேன்.

18:37.034 --> 18:38.659
அவர் ஒரு மதிப்புமிக்க பேராசிரியர்,

18:38.660 --> 18:41.413
அவர் எனக்காகக் கொஞ்சம் நேரம் எடுத்து உதவுவார்.

18:42.122 --> 18:46.417
ஹாய், மேரி, ஹாவர்ட், இது ஃபில் டெலவீன்.
இவர் தான் LA மெட்ரோப்பாலிட்டன் பாலேவை நடத்துறார்.

18:46.418 --> 18:50.087
இவர் அரியாட்னின்னு த்ரிலிங்கான ஒரு புதிய
நடன நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போறார்.

18:50.088 --> 18:52.673
அது உங்க ஏரியா தானே, ஹாவர்ட்?
கிரேக்க புராணங்கள்?

18:52.674 --> 18:55.092
ஆமா. ம்… கிரேக்க லாப்ரிந்த்களோட அர்த்தத்தை

18:55.093 --> 18:57.929
கலைஞர்கள், பல வருஷமா, புரிஞ்சிக்க விரும்புறாங்க.

18:57.930 --> 19:00.306
அதைக் கையாள்ற முதல் ஆள்
நானில்லன்னு நினைக்கிறேன்.

19:00.307 --> 19:03.100
ஆனால்… என்னோட அணுகுமுறை
புதுசா இருக்கும்னு நம்புறேன்.

19:03.101 --> 19:04.310
கலைஞர்கள் எப்பவும்…

19:04.311 --> 19:07.855
ராபர்ட்டோ குடும்பம் பேசும்போது
என்னைச் சேர்த்துகுறது இல்லேன்னு தோணும்.

19:07.856 --> 19:09.357
இதுல முக்கியமானது அந்த அனுபவம்…

19:09.358 --> 19:12.235
இவங்க ஒண்ணும் வழக்கமான விஷயங்களைப் பேசல.

19:12.236 --> 19:14.320
ஏதோ முக்கியமான விஷயம் ஓடிட்டிருக்கு.

19:14.321 --> 19:16.240
…மனிதன் வடிவமைச்ச ஒரு அமைப்புல.

19:16.823 --> 19:18.699
ஒரு நிமிஷம்.

19:18.700 --> 19:23.038
ஆமா, ஆனால் அந்த லாப்ரிந்த்
உண்மையிலேயே ஒரு… அது ஒரு கருத்தியல் இல்லையா?

19:26.083 --> 19:28.960
ஹார்லன். நீங்க இன்னைக்கு வந்ததில சந்தோஷம்.

19:28.961 --> 19:30.878
அது எப்படி வராமலிருப்பேன்?
உன்னைப் பார்த்ததுல சந்தோஷம்.

19:30.879 --> 19:32.172
லேனா எப்படி இருக்காங்க?

19:33.048 --> 19:35.800
ராபர்ட் சொல்லியிருப்பான்னு நினைச்சேன்.
லேனாவும், நானும்…

19:35.801 --> 19:38.553
ஹனி, ஹாய்.
தலையைக் காட்டிட்டு கிளம்பிடலாம்னு சொன்னீங்க?

19:38.554 --> 19:40.722
ஹோட்டல்ல என் நண்பர்கள் நமக்காகக்
காத்திட்டிருக்காங்க.

19:42.224 --> 19:46.603
பைப்பர், இது நான்ஸி. என் கிளையன்ட்
ராபர்ட்டோட மனைவி, பார்ட்டியை நடத்துறவங்க.

19:47.896 --> 19:49.814
உங்களைச் சந்திச்சதுல சந்தோஷம்.

19:49.815 --> 19:51.941
உங்க வீடு பெரிசா இருக்கு.

19:51.942 --> 19:53.193
நன்றி.

19:53.944 --> 19:55.654
பைப்பர், ஒரு நிமிஷம் நாங்க தனியா பேசணும்.

19:58.866 --> 20:00.741
அவ எங்க கம்பெனியில வேலைப் பார்க்குறா.

20:00.742 --> 20:03.744
ஹார்லன், இந்த குடும்பத்தோட
நெளிவு சுளிவுகளைக் கடந்துப் போக,

20:03.745 --> 20:05.997
நீங்க எப்பவும் எனக்கு உதவியா இருந்திருக்கீங்க.

20:05.998 --> 20:09.125
என்னால முடிஞ்சது. ஒரு நல்ல வெல்த் மேனேஜர்
தன்னோட கிளையன்ட்டுக்கு இது கூட பண்லைன்னா எப்படி?

20:09.126 --> 20:11.253
நியூ யார்க் மீட்டிங்க்ல என்ன நடந்துச்சு?

20:12.379 --> 20:14.130
நீ… நீ அதை ராபர்ட் கிட்ட கேட்கணும்.

20:14.131 --> 20:16.300
கேட்டேன். தட்டிக் கழிக்கிறான்.

20:23.307 --> 20:25.433
- என்னோட கிளையன்ட்டுக்கு நான் நேர்மையா இருக்கணும்.
- நேர்மையா…

20:25.434 --> 20:27.977
நீங்க உங்க 25 வயசு செக்ரடரியோட
படுத்துட்டிருக்கீங்க.

20:27.978 --> 20:30.688
அதனால, இல்லாத ஒரு நடத்தை விதிகள் பத்தி எல்லாம்
பேசாதீங்க.

20:30.689 --> 20:33.275
இது நடத்தை பத்தி இல்ல.
இது என் வேலையைக் காப்பாத்திக்கிறதுக்கு.

20:33.984 --> 20:35.736
அதனால உன் கணவன் கிட்ட போய் பேசு.

20:43.076 --> 20:44.327
என்னது இது?

20:44.328 --> 20:46.120
உங்களுக்கு இது தேவைன்னு தோணுது.

20:46.121 --> 20:48.039
இது எனக்கு வேண்டவே வேண்டாம்.

20:48.040 --> 20:50.876
இல்ல, நீ நினைச்சது சரிதான்.
ஆனால், அதுக்கான மருந்து இது இல்ல.

20:51.710 --> 20:53.252
புரியுது.

20:53.253 --> 20:55.172
டாட்டூ நல்லா இருக்கே. அது என்ன ஒரு பூவா?

20:55.797 --> 20:59.468
இது ஒரு ஃப்ராக்டல். அது ஒரு வடிவியல் விஷயம்.

21:00.219 --> 21:03.138
இது ஒரு சிக்கலான, திரும்பத் திரும்ப வரும்
ஒரு டிசைன். அது மாறாது.

21:03.764 --> 21:07.017
எவ்வளவு நெருக்கமா பார்த்தாலும்,
உத்துப் பார்த்தாலும்,

21:07.726 --> 21:09.186
ஒரே கதை தான்.

21:10.646 --> 21:13.064
- கணிதம் ரொம்ப தெரியுமோ?
- உண்மையில,

21:13.065 --> 21:16.484
டாட்டூ போட்டுவிட்டவன் விளக்கம் சொல்ற வரைக்கும்
அது என்னன்னே எனக்குத் தெரியாது.

21:16.485 --> 21:19.570
கோல் மைன் அப்படின்னு ஒரு இடத்தில
ஜன்னல்ல அதைப் பார்த்தேன், அப்படியே…

21:19.571 --> 21:24.117
பொறு, கோல்… த கோல் மைன்,
போடே்டோமாக் பார்க்ல, பேட்ஸ் பக்கத்தில?

21:24.910 --> 21:26.744
அட, நீங்கள் பேக்கர்ஸ்ஃபீல்டா?

21:26.745 --> 21:28.956
நான் சான் லாரெனுக்கு பக்கத்தில வளர்ந்தேன்.

21:29.456 --> 21:32.209
அப்படியா? நான் விஸ்டா வெஸ்ட்ல தான் படிச்சேன்.

21:33.168 --> 21:34.253
வாவ்.

21:35.420 --> 21:39.174
உங்கள பார்த்தப்பவே தோணுச்சு.
எப்ப கடைசியா அங்க போனீங்க?

21:40.259 --> 21:41.510
நான் அங்க போறதில்ல.

21:42.302 --> 21:43.637
இப்ப உங்க தகுதிக்குப் பொருத்தமானதா இல்லையா?

21:44.471 --> 21:46.098
உண்மையில அதுக்கு நேர்மாறு.

21:47.182 --> 21:51.520
அங்க போனா, நான் மாறவே இல்லேன்னு
தெரிஞ்சிடுமோன்னு எனக்குப் பயம்.

21:52.312 --> 21:55.065
நான் எப்பவும் போல அப்படியே இருக்கேன்னு
தெரிஞ்சிடும்னு பயம்.

21:56.233 --> 21:57.401
அதுல என்ன தப்பு இருக்கு?

21:59.945 --> 22:01.071
அது ஆபத்தான விஷயம்.

22:03.740 --> 22:04.783
நன்றி, ஸ்காட்.

22:05.701 --> 22:06.784
நான் உள்ள போகணும்.

22:06.785 --> 22:08.287
- அம்மா இப்ப எந்திரிச்சுப்பாங்க.
- ஹே.

22:19.006 --> 22:20.381
எனக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெய்ன்.

22:20.382 --> 22:23.718
இந்த ஹாவர்ட் மனுஷன்.
கிளாசிக்ஸ் பேராசியர்?

22:23.719 --> 22:27.930
சரக்கு இருக்குற மாதிரி தோணுது.
என்ன, கொஞ்சம் குறுகிய மனப்பாண்மை உள்ளவர்.

22:27.931 --> 22:30.057
அவர் ஒரு நெருங்கிய நண்பர்.
அவருக்கு ஒரு வேலை இருந்தா நல்லா இருக்கும்.

22:30.058 --> 22:33.519
மெட்ரோ பாலே ஏற்கனவே பண நெருக்கடியில
இருக்குன்னு உங்களுக்குத் தான் நல்லா தெரியும்.

22:33.520 --> 22:35.938
இன்னும் கொஞ்சம் நன்கொடை கொடுத்துட்டா சரி, என்ன?

22:35.939 --> 22:39.276
அப்ப அவருக்கு சம்பளம் கொடுத்துடலாம்.
என்ன என் கணவர்கிட்ட கொஞ்சம் பேசணும்.

22:42.905 --> 22:44.865
- ஹாய். நீ என்னை விட உயரமா இருக்க.
- ஹே.

22:46.950 --> 22:48.618
பிரிட்டிஷ் ஐல்ஸ் ரொம்ப அழகானது.

22:48.619 --> 22:50.912
- ஆனால் அங்க சாப்பாட்டு…
- கடவுளே. அது உண்மை தான்.

22:50.913 --> 22:52.788
உன்னைப் பத்தி ரொம்ப நாளா அவன் கிட்ட
உயர்வாப் பேசிட்டிருந்தேன்.

22:52.789 --> 22:54.332
அவன் கூட, கொஞ்சம் பேசிட்டாவது
இருப்பேன்னு நினைச்சேன்.

22:54.333 --> 22:58.294
நான் முயற்சி பண்ணேன். நம்பு.
ஆனால் அவன் சரியான போரு.

22:58.295 --> 23:00.213
- இல்ல.
- எதைப் பத்தி பேசிட்டிருக்கீங்க?

23:00.214 --> 23:03.884
ஆமா. உன் அருமையான மனைவி, அவ மேல தப்பில்ல,
என்னை உன் நண்பன் எட்டோட ஜோடி சேர்க்கப் பார்த்தா.

23:04.968 --> 23:06.219
எட் ஹோல்கோம்?

23:06.220 --> 23:08.179
- அவன் சொல்ற விதத்தைப் பார்த்தியா?
- என்ன?

23:08.180 --> 23:09.263
அவன் இவ டைப் இல்ல.

23:09.264 --> 23:11.474
- அது உனக்கு எப்படித் தெரியும்?
- அட, நிறுத்து.

23:11.475 --> 23:14.101
இப்ப நான் யாரைப் பார்க்கிறேன் என்கிறது
முக்கியம் இல்ல, சரியா?

23:14.102 --> 23:16.896
- எனக்கு என்னோட சுதந்திரம் பிடிச்சிருக்கு.
- நீ சந்தோஷமா இருக்கணும், அவ்வளவு தான்.

23:16.897 --> 23:20.441
சந்தோஷமா இருக்கேன். நீயும், மேரியும்
கூட இருக்கீங்க. நீங்கள் என் ஆத்ம தோழிகள்.

23:20.442 --> 23:22.611
அப்புறம் அங்கேயும், இங்கேயுமா
விளையாடுறதுக்கு எனக்கு அட்கள் இருக்காங்க.

23:24.530 --> 23:27.032
- கடவுளே. அங்க பாரு.
- நான்ஸி.

23:28.617 --> 23:31.285
அப்பாவுக்கு இந்த பிரம்மாண்ட டிரிங்ஸ் பார்த்து
குழப்பம் வந்துடுச்சு.

23:31.286 --> 23:34.956
அவருக்கு சும்மா ஒரு கப் காபி
போட்டுத் தர முடியுமா?

23:34.957 --> 23:36.124
கண்டிப்பா.

23:39.795 --> 23:42.214
கொஞ்ச நேரம் முன்னால நீ ஹார்லனோட
பேசிட்டிருந்ததைப் பார்த்தேன்.

23:42.714 --> 23:45.384
ஆமா, அவரோட புது கேர்ள்ஃபிரண்டைப் பார்த்தேன்.
சும்மா பேசிட்டிருந்தோம்.

23:47.803 --> 23:49.972
அவர் கூட வேற என்ன பேசிட்டிருந்த?

23:57.229 --> 23:58.939
அவர் என்கிட்ட எதுவும் சொல்லல.

24:00.691 --> 24:04.194
குடும்ப பிசினெஸ்ல
சில சிக்கலான விஷயங்கள் இருக்கு.

24:04.695 --> 24:06.612
அதில நீ தலையிடாம இருக்கிறது உனக்கு நல்லது.

24:06.613 --> 24:09.031
நானும் இந்த குடும்பத்துல ஒருத்தி, கிட்.

24:09.032 --> 24:11.576
ம், நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.

24:11.577 --> 24:13.745
உனக்கு என்னோட என்ன தான் பிரச்சினை?

24:14.496 --> 24:16.873
உன் கிட்ட எப்பவும் பழக தான்
நான் முயற்சி பண்ணிருக்கேன்.

24:16.874 --> 24:19.960
உங்க அப்பா உனக்குப் பதிலா எங்க கிட்ட இந்த
வீட்டைக் கொடுத்தது உனக்குப் பிடிக்கலையா?

24:20.544 --> 24:22.336
வேணும்னா நான் அவர்கிட்ட பேசுறேன்…

24:22.337 --> 24:25.048
உன் கிட்ட இங்க பேசச் சொல்லி அனுப்புனது
யாருன்னு நினைக்கிற?

24:27.551 --> 24:30.136
உன்னோட எனக்குள்ள பிரச்சினை என்னன்னு தெரியணுமா?

24:30.137 --> 24:32.638
நீ பண்ற எல்லாமே ஒரு ஆதாயத்துக்குத் தான்,
அது தான் பிரச்சினை.

24:32.639 --> 24:37.561
இப்படி தான் ஆரம்பத்தில இருந்தே இருக்கு,
ஆனால், பாபி இப்ப தான் முழிக்க ஆரம்பிச்சிருக்கான்.

24:54.453 --> 24:57.455
உங்க ஃபோன் நம்பரை நான்
நான்ஸி கிட்ட வாங்கிக்கிறேன்.

24:57.456 --> 24:59.833
- ஏன் அந்த சிரமம்.
- பழசை விடல போல.

25:00.876 --> 25:02.460
கடவுளே! ஐயோ! கடவுளே!

25:02.461 --> 25:04.963
- சாரி.
- உங்க தப்பு இல்ல. சாரி.

25:05.923 --> 25:08.758
- உனக்கு ஒண்ணுமில்லையே?
- ஆமா, நான் நல்லா இருக்கேன்.

25:08.759 --> 25:12.261
- ஐயோ. உனக்கு ரத்தம் வருது.
- இல்ல, இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்.

25:12.262 --> 25:13.639
நான் வந்துடுறேன். நீங்க ஜாலியா இருங்க.

25:36.453 --> 25:37.579
ஹனி?

25:41.041 --> 25:42.042
நான்?

25:43.377 --> 25:44.378
நீங்க என்ன?

25:48.215 --> 25:49.424
வழித் தவறி வந்துட்டீங்களா?

25:50.384 --> 25:52.134
நிறைய பாத்ரூம் இங்க இருக்கே.

25:52.135 --> 25:55.055
இல்ல, இல்ல. வழித் தவறி வரல.

25:56.640 --> 25:59.226
ஆமா. நீங்க தான் எங்களுக்கு முன்னால
இங்க இருந்தீங்களே.

26:00.018 --> 26:01.103
நான் இங்க தான் வளர்ந்தேன்.

26:02.688 --> 26:08.944
எங்க தாத்தா இந்த நிலத்தை ஆராஞ்சு தோட்டத்துக்கும்
எண்ணை கிணறுக்காகவும் வச்சிருந்தார்.

26:09.820 --> 26:12.906
எங்க குடும்பங்களை வளர்க்க அப்பா இருக்கிறதிலேயே
நல்ல இடங்களைப் பத்திரப்படுத்தினார்.

26:16.702 --> 26:18.287
ஒரு டவல் எடுத்துத் தரியா?

26:24.168 --> 26:27.086
ஜேனுக்கும், எனக்கும் தனித் தனி
வாஷ் பேஸின் வேணும்னு தோணுனது இல்ல.

26:27.087 --> 26:29.631
ஆனால், எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் இருக்கல.

26:30.382 --> 26:32.801
நாங்க ரீமாடல் பண்ணும் போது
இந்த ரெண்டு வாஷ் பேஸினைப் போட்டோம்.

26:34.845 --> 26:37.638
நாங்க செலவழிக்கிறது பத்தி
நீங்க கவலைப்பட்டீங்கன்னு புரியுது.

26:37.639 --> 26:39.224
பாபி அப்படியா உன் கிட்ட சொன்னான்?

26:41.435 --> 26:45.856
அது எனக்குத் தெரியும்,
அதனால இனிமேல் நடக்கப் போற பார்ட்டிகளை

26:46.398 --> 26:48.400
இவ்வளவு பெரிசா பண்ணப் போறதில்ல.

26:57.242 --> 26:59.077
எனக்கு உன்னோட பார்ட்டிகள் பிடிக்கும்.

27:00.579 --> 27:03.248
அடுத்த வருஷம் இல்லேன்னா வருத்தம் தான்.

27:06.835 --> 27:11.088
எனக்கு என்ன நடந்தாலும், இந்த பார்ட்டி தான்
என்னை எல்லாத்தையும் மறக்கப் பண்ணும்.

27:11.089 --> 27:13.508
அது தான் என்னைப் பெருமையாக நிக்க வைக்கும்.

27:13.509 --> 27:15.969
அதாவது இது தான் என்னோட
உண்மையான வாழ்க்கைன்னு நிரூபிக்கிறதுக்கு.

27:17.429 --> 27:19.056
இப்ப எனக்கு அப்படித் தோணல.

27:24.686 --> 27:28.065
என் கணவர் என் கிட்ட இருந்து
என்ன மறைக்கிறார்னு கண்டுப்பிடிக்கணும்.

27:39.701 --> 27:42.578
தேடு

27:42.579 --> 27:43.789
வரலாறு

27:56.051 --> 27:58.970
ஜேனட் வாச்சோவ்ஸ்கி
சொத்துகள் பிரித்தல்

27:58.971 --> 28:00.472
பெறுநர்: ராபர்ட் ஹென்னஸி

28:02.724 --> 28:08.313
உன் மனைவியிடமிருந்து தேவை
விவாகரத்து செயல்முறை

28:27.416 --> 28:29.084
அம்மா, என்ன நடக்குது?

28:29.793 --> 28:33.797
நான் என்ன முட்டாள்னு நினைச்சியா?
ஒண்ணும் தெரியாத முட்டாள்னு நினைச்சியா?

28:36.800 --> 28:40.304
- இங்க உனக்கு ஒண்ணும் ஆகல…
- நிப்பாட்டுங்க… அம்மா, நிப்பாட்டுங்க.

28:42.097 --> 28:43.682
அம்மா, என்ன நடக்குது?

28:45.809 --> 28:46.893
அம்மா.

28:46.894 --> 28:48.645
ஒண்ணும் தெரியாத முட்டாள்னு நினைச்சியா?

28:50.355 --> 28:53.400
அம்மா, நிப்பாட்டுங்க!
காரை நிப்பாட்டுங்க.

28:59.740 --> 29:00.823
ஏய்…

29:00.824 --> 29:03.493
என்னால இந்த வயிற்றை நம்ப முடியல.
பைத்தியக்காரத்தனம்.

29:04.786 --> 29:06.871
கோரா. என்ன இது?

29:06.872 --> 29:10.374
வெளியப் போறோம். நீங்க சொன்ன மாதிரி
தலைகாட்டிட்டேன், அதனால…

29:10.375 --> 29:12.044
இல்ல, இது என்ன?

29:12.920 --> 29:14.420
இது ஏழை வெள்ளையர் தீம் பார்ட்டிக்கு.

29:14.421 --> 29:15.714
இப்பப் பாருங்க.

29:16.673 --> 29:18.049
சூப்பரா பண்ணேன்ல?

29:18.050 --> 29:19.217
ஜோஸி, நீ இதை என்னன்னு சொன்ன?

29:19.218 --> 29:21.762
- பெக்கர்வூட் பாட்லக்.
- நீ இதை போடக்கூடாது.

29:22.930 --> 29:25.557
- பதறாதீங்க. சரி, நாங்க கிளம்புறோம்.
- அதைப் போய் மாத்து.

29:27.100 --> 29:30.561
- அம்மா, என்ன விளையாடுறீங்களா?
- என்னைக் கிண்டல் பண்றியா?

29:30.562 --> 29:31.646
அதுவும் என் சொந்தப் பொண்ணே?

29:31.647 --> 29:33.231
நீங்க என்ன சொல்றீங்க?

29:33.232 --> 29:35.942
உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
நாங்க சும்மா ஜாலியா இருக்கோம்.

29:35.943 --> 29:39.904
உன் பணக்கார நண்பர்களோட சேர்ந்து, ஏழை மாதிரி
வேஷம் போடுறது ஜாலியில்ல. அருவருப்பா இருக்கு.

29:39.905 --> 29:43.658
நீங்க இன்ஸ்டாவில போஸ்ட் பண்ணி,
உங்க நண்பர்களை பொறாமை பட வைக்கிறதுக்காக,

29:43.659 --> 29:45.576
ஒரு சாப்பாட்டுக்கு லட்சக்கணக்கா செலவழிக்கிறத விட

29:45.577 --> 29:47.662
- இது ஒண்ணும் அருவருப்பா இல்ல.
- சரி. சரி, சாரி.

29:47.663 --> 29:50.081
- உங்க மனசாட்சிக்கு நேர்மையா இருங்கம்மா.
- பசங்களா நீங்க கிளம்புங்க. கோரா வர மாட்டா.

29:50.082 --> 29:51.499
- நான் போறேன். என்னை விடுங்க.
- நீ எங்கேயும் போகப் போறதில்ல.

29:51.500 --> 29:53.043
நீங்க வெறும் நடிப்பு, மனசு முழுசும் அழுக்கு.

29:55.963 --> 29:58.632
நான் யாருன்னு உனக்குத் தெரிய வாய்ப்பே இல்ல.

30:31.665 --> 30:33.166
எங்க போயிட்டு வர?

30:33.917 --> 30:36.587
ஸ்டூடியோ திறந்திருந்துச்சு
ஒத்திகை பார்த்துட்டு வந்தேன்.

30:37.421 --> 30:38.589
ஸ்காட் எங்க?

30:41.133 --> 30:42.384
வெளிய உலாத்திட்டு வர போயிருக்கான்.

30:44.094 --> 30:45.596
நாம கார்ல ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்.

30:50.684 --> 30:52.560
- நான் என்ன முட்டாள்னு நினைக்கிறியா?
- இல்ல.

30:52.561 --> 30:54.604
- நான் என்ன முட்டாள்னு நினைக்கிறியா?
- இல்ல!

30:54.605 --> 30:56.023
ஐயோ! அம்மா!

31:03.197 --> 31:05.365
இங்க பாதிக்கப்பட்டது நீயில்ல.
அதனால ரொம்ப பாவமா நடிக்காத!

31:08.493 --> 31:11.663
- …நட்புகள் மறக்கப்பட
- அம்மா! நிப்பாட்டுங்க!

31:12.247 --> 31:14.498
ஒரு போதும் நினையாதிருக்க…

31:14.499 --> 31:16.375
அம்மா!

31:16.376 --> 31:19.880
பழைய நட்பு…

31:24.760 --> 31:27.678
- நான்ஸி, ப்ளீஸ்.
- நான்ஸி, நில்லு. ப்ளீஸ்.

31:27.679 --> 31:30.098
- கடவுளே.
- நான்ஸி.

31:30.724 --> 31:33.768
- கடவுளே, நான்ஸி.
- உண்மையிலேயே, நான் மறந்துட்டேன்.

31:33.769 --> 31:34.936
எங்க இருந்தேன்னு மறந்துட்டேன்.

31:34.937 --> 31:36.855
- சரி. பரவாயில்ல.
- நான் யாருன்னு மறந்துட்டேன்.

31:40.484 --> 31:43.194
- உனக்கு ஒண்ணுமில்ல. நீ நல்லா இருக்க.
- அது நடக்குது.

31:43.195 --> 31:44.278
எது?

31:44.279 --> 31:46.447
அது நடக்குது.
நான் என் அம்மாவ போல மாறுகிறேன்.

31:46.448 --> 31:48.241
- இல்ல. இல்ல, இல்ல.
- இல்ல, இல்ல.

31:48.242 --> 31:49.659
அது எப்படியும் நடக்க வேண்டியது தான்.

31:49.660 --> 31:51.744
- என்னால எதுவும் பண்ண முடியாது.
- அப்படிச் சொல்லாத.

31:51.745 --> 31:55.748
உங்க அம்மா உன்னைக் கொல்லப் பார்த்தாங்க, நான்ஸி.
அதை மொத்தமா வேற விஷயம்.

31:55.749 --> 31:56.959
நீ அவங்கள மாதிரி இல்ல.

31:57.543 --> 32:00.837
- நான் இதுவரைக்கும் கோராவை அடிச்சதில்ல.
- அது ஒரு தவறு, சரியா?

32:00.838 --> 32:02.713
- அது ஒரு தவறு தான்.
- நீ கொஞ்சம் மூச்சை இழுத்து விடு.

32:02.714 --> 32:05.384
நீ இதை சரி பண்ணிடலாம். உட்காரு.
வா. எல்லாம் சரியாயிடும்.

32:06.593 --> 32:09.011
அவ்வளவு தான். ஒண்ணுமில்ல.

32:09.012 --> 32:11.097
- ராபர்ட் என்ன பண்றது?
- நீ என்ன சொல்ற?

32:11.098 --> 32:12.474
அவன் ஏற்கனவே தள்ளிப் போயிட்டிருந்தான்.

32:14.852 --> 32:16.727
என்னால அங்க திரும்பப் போக முடியாதுன்னு
நினைக்கிறேன்.

32:16.728 --> 32:17.812
நீ போக வேண்டியதில்ல.

32:17.813 --> 32:19.564
- நாம அங்க போக வேண்டியதில்ல.
- இல்ல.

32:19.565 --> 32:23.067
அப்படியே போறதா இருந்தா,
நீ தனியா இருக்க மாட்ட. நாங்களும் கூட இருப்போம்.

32:23.068 --> 32:25.571
நாங்க பார்த்துக்கிறோம், சரியா? நாங்க இருக்கோம்.

32:26.822 --> 32:28.991
இது ஒரு சின்ன தடங்கல் தான்?
ஒண்ணும் முடிஞ்சுப் போயிடல.

32:30.492 --> 32:31.493
நல்லா மூச்சு விடு.

32:34.705 --> 32:38.791
கல்லூரியில ஒரு பார்ட்டியில சில பெண்களைப் பார்க்க
அவங்க ஆத்ம நண்பர்களாக மாறுறாங்க.

32:38.792 --> 32:40.209
நம்ம ஆபத்பாண்டவர்கள்.

32:40.210 --> 32:44.173
நம்மளப் பத்தி முழுசா தெரிஞ்சிருந்தும்
நம்மள நேசிக்கிறவங்க.

32:44.673 --> 32:46.049
அதுக்கு நாம அவங்கள அனுமதிக்கணும்.

33:09.531 --> 33:11.782
அவங்க என் கிட்ட சொல்லைன்னா
எனக்கு எப்படித் தெரியும்?

33:11.783 --> 33:14.035
அவங்க கடந்த காலத்தைப் பத்திக் கேட்டா
ஒண்ணுமே பேசாம போயிடுறாங்க.

33:14.036 --> 33:16.162
கடந்த காலத்தைப் பத்தி பேச வேண்டாம்னு
சொல்றாங்க.

33:16.163 --> 33:17.872
- அது வந்து…
- அவங்க என் சொந்த அம்மா.

33:17.873 --> 33:19.665
ஆனால் அவங்களப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது.

33:19.666 --> 33:21.251
அது உன் தப்பில்ல.

33:22.503 --> 33:23.670
ஹே.

33:24.421 --> 33:25.671
இது சரியான நேரமில்ல, நான்ஸ்.

33:25.672 --> 33:29.218
பரவாயில்ல. நான், ம்… நானா இல்ல.

33:29.718 --> 33:31.470
நான் அப்படி பேசுனத்துக்கு வருத்தப்படுறேன்.

33:31.970 --> 33:33.305
ஹே. வா.

33:33.805 --> 33:34.806
என்ன?

33:35.891 --> 33:39.269
எனக்கும் என் பொண்ணுக்கும் நடுவில
நீ மத்தியஸ்தம் பண்ண வேண்டாம்.

33:39.978 --> 33:43.397
கேளு, இது குடிக்கப் பாலைக் கொடுத்து,
கட்டி அணைச்சு, சரி பண்ற விஷயமில்ல.

33:43.398 --> 33:45.358
அவ இதை தன் வாழ்நாள் முழுக்க
ஞாபகம் வச்சிக்கப் போறா.

33:45.359 --> 33:48.069
அதனால தான் நான் இப்போ மன்னிப்பு
கேட்கிறது ரொம்ப முக்கியம்.

33:48.070 --> 33:49.988
இல்ல. அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடு.

33:50.572 --> 33:52.573
- என்ன நடக்குது?
- அவ வருத்தமா இருக்கா.

33:52.574 --> 33:54.826
நமக்குள்ள என்ன நடக்குது?

33:55.744 --> 33:58.622
எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லாத.
அது உண்மையில்லேன்னு எனக்குத் தெரியும்.

33:59.331 --> 34:01.083
நீ எப்ப என் கிட்ட பேசப் போற?

34:02.459 --> 34:03.877
இந்த பேச்சு இப்ப வேண்டாம்.

34:19.810 --> 34:24.857
ஒரு சின்னப் பொண்ணா வளர்ந்து வரும் போது,
கனவில பறக்கக் கூடிய சக்தி எனக்கு இருந்துச்சு.

34:25.774 --> 34:30.611
அப்படியே மலைகளுக்கு மேல போய்,
ஒரு புது வாழ்க்கைக்குள்ள.

34:30.612 --> 34:31.822
ஹே.

34:32.322 --> 34:33.406
ஹாய்.

34:33.407 --> 34:35.492
இன்னைக்கு உங்களைச் சந்திச்சது
ரொம்ப நல்லா இருந்துச்சு.

34:36.159 --> 34:40.163
என்னைக்காவது நாம சேர்ந்து காபி குடிக்கப்
போகாலாம்னா சொல்லுங்க…

34:42.583 --> 34:43.583
கேட்க நல்லா இருக்கு.

34:44.710 --> 34:49.297
ஆனால் முடியாது. உனக்கு… உனக்கு தப்பான
அபிப்ராயம் கொடுத்திருந்தா என்னை மன்னிச்சிடு.

34:50.757 --> 34:51.757
ஆமா.

34:53.010 --> 34:54.094
தப்பான அபிப்ராயம் கொடுத்தீங்க.

35:00.601 --> 35:04.730
கைகளை ஆட்டி பறக்க முடியாது, அது மாதிரி
என்னோட கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாது.

35:06.648 --> 35:09.568
அது என் உடம்புல உள்ள வடுக்கள் மாதிரி
நிரந்தரமா இருக்கும்.

35:10.402 --> 35:13.322
அது நானே முழுசா புரிஞ்சுக்க முடியாத மாதிரி
என்னை கீழ இழுத்துக்கிட்டே இருக்கு.

35:19.786 --> 35:21.496
ஸ்காட்-ரீட்
ஸ்காட் ரீட்

35:45.270 --> 35:46.271
ஹே.

35:46.939 --> 35:48.022
ஹாய்.

35:48.023 --> 35:50.400
ஒரு நிமிஷம் பேசலாமா?
அது, ஜூனிப்பரோட ஜாக்கெட்.

35:51.985 --> 35:53.070
இந்தா.

35:54.279 --> 35:57.282
அந்த வேலை வாய்ப்புக்கு நான் நன்றி சொல்லாட்டி
நல்லா இருக்காது.

35:58.450 --> 36:00.743
மேரி ஏதோ சொன்னதால தான் நீ அதை செஞ்சேன்னு
எனக்குத் தெரியும்.

36:00.744 --> 36:05.373
ஆமா. என் மனைவிக்கு அவ நினைக்கிற மாதிரி
ரகசியமா எதுவும் பண்ணத் தெரியாது.

36:05.374 --> 36:08.251
இது ஒரு உதவி இல்ல.
அந்த நிகழ்ச்சிக்கு நீ ஒரு சொத்தா இருப்ப.

36:08.252 --> 36:11.380
உனக்குப் பொய் சொல்லத் தெரியல.
ஆனால், ஃபில் வேலைக்கு வர சொன்னான்.

36:11.922 --> 36:14.298
ம், அதை டேவிடுக்குக் கொடுத்ததா நினைக்கிறான்.

36:14.299 --> 36:16.592
இங்க உள்ள யாரோ ஒரு பார்டென்டரோட
என்னைக் குழப்பிக்கிட்டான்னு நினைக்கிறேன்.

36:16.593 --> 36:20.263
ஆமா ஃபில் எப்பவும் அப்படித் தான்.
நான் எத்தனை முறை திருத்தினாலும்,

36:20.264 --> 36:23.099
- என்னை லூயீஸ்ன்னு தான் கூப்பிடுவான்.
- லூயீஸா?

36:23.100 --> 36:24.101
அதை எங்க பிடிச்சான்?

36:24.768 --> 36:27.687
அவனுக்கு அந்த ஒரு வயசான பொம்ளையோட
பேரு தான் தெரிஞ்சிருக்கும் போல.

36:27.688 --> 36:30.690
- உனக்கு வயசான பொம்பளையோட பேரா?
- ஆமா.

36:30.691 --> 36:35.278
என்னோட செத்துப் போன அத்தையோ, யாரோ,
அவங்க பேரை எனக்கு வச்சாங்க.

36:35.279 --> 36:37.446
நான்ஸிங்கிற பேரு அப்படி ஒண்ணும் வயசா தெரியலையே.

36:37.447 --> 36:42.911
அதுல ஒண்ணும் கவிதையெல்லாம் இல்ல,
ஆனால் கொஞ்சம் நடனம் ஒட்டிட்டிருக்கு.

36:44.454 --> 36:45.747
நீ ஒரு டான்ஸர், இல்லையா?

36:46.373 --> 36:48.041
ஆமா, டான்ஸரா இருந்தேன்.

36:49.918 --> 36:51.920
தெரியல, ஆனால் எனக்கு லூயீஸ் பிடிச்சிருக்கு.

36:55.382 --> 36:57.301
சரி, உன்னை பாலேயில சந்திக்கிறேன், லூயீஸ்.

37:05.434 --> 37:06.643
கண்டிப்பா, டேவிட்.

38:40.070 --> 38:42.072
தமிழாக்கம்
மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்
