WEBVTT

00:10.010 --> 00:11.428
உனக்கு ஒண்ணுமில்லையே?

00:12.221 --> 00:15.724
முழிப்பு வந்துச்சு, நீ பக்கத்தில இல்ல, அதனால
ஏதோ நடந்திருக்குன்னு தோணுச்சு.

00:19.770 --> 00:22.230
நீ என்ன பண்ற?
ஏன் அவ பொருட்களை எடுத்துப் பார்க்கிற?

00:22.231 --> 00:24.399
இவ்வளவு நேரம் உன் பக்கத்தில தான் நான் இருந்தேன்.

00:25.526 --> 00:27.527
அது நீ நினைக்கிற மாதிரி இல்ல.

00:27.528 --> 00:30.405
அவ உன்னை காயப்படுத்துனான்னு நினைச்சேன்.

00:32.073 --> 00:34.158
பாரு, என்ன நடந்துச்சுன்னு உனக்குப் புரியல.

00:34.159 --> 00:38.079
இந்த உறவு பத்தி உனக்குத் தெரிஞ்சிருந்தும்,
அதைப் பத்தி என் வாயால சொல்ல வச்ச.

00:38.080 --> 00:39.580
கேளு, நான் விளக்கம் சொல்றேன், சரியா?

00:39.581 --> 00:41.166
நீ அவள கொன்னியா?

00:41.834 --> 00:43.000
நீ நான்ஸியை கொன்னியா?

00:43.001 --> 00:46.712
- எப்படி நீ அதைக் கேட்கலாம்?
- நான் எப்படி இதை புரிஞ்சிக்கிறது?

00:46.713 --> 00:48.339
நான் என்னன்னு நினைக்கிறது?

00:48.340 --> 00:50.049
எலனார், நான் என் மனைவியைக் கொல்லல.

00:50.050 --> 00:51.217
நீ ஏதோ பண்ணியிருக்க.

00:51.218 --> 00:53.135
எதுக்கோ மன்னிப்பு கேட்டிருக்க.

00:53.136 --> 00:55.388
- அவள ஏன் அப்படி பயமுறுத்துன?
- ஆமா, நாங்க சண்டை பிடிச்சோம்.

00:55.389 --> 00:57.181
- அவள அடிச்சியா?
- இல்ல.

00:57.182 --> 01:00.226
கடவுளே, நாம இப்ப சேர்ந்து இருந்தோமே.
அது சும்மா பழி வாங்குறதுக்கா?

01:00.227 --> 01:02.728
நான்ஸி உனக்குத் துரோகம் பண்ணிட்டா,
அதுக்கு நீ இப்ப பழி தீர்த்துக்கிட்டியா?

01:02.729 --> 01:03.813
இல்ல, இல்ல.

01:03.814 --> 01:05.815
- ஏன்? எனக்குப் புரியல. ஏன் நீ…
- நிறுத்து!

01:05.816 --> 01:06.984
நிறுத்து.

01:11.738 --> 01:13.031
சே.

01:17.494 --> 01:19.037
வெளிய போயிட்டு
அப்ப தான் வீட்டிக்கு வந்தோம்.

01:20.539 --> 01:22.748
அன்னைக்கு அரியாட்னி ஓபராவோட முதல் நாள்.

01:22.749 --> 01:24.792
நான்ஸி குளிச்சிட்டிருந்தான்னு நினைக்கிறேன்.

01:24.793 --> 01:29.463
அவ ஃபோனை கட்டில் பக்கத்தில விட்டுப் போயிருந்தா.
அது அதிர ஆரம்பிச்சுச்சு.

01:29.464 --> 01:32.300
எனக்கு அவ ஃபோனை பார்த்தெல்லாம்
பழக்கமில்ல.

01:32.301 --> 01:34.553
ஆனால் அது அடிச்சிட்டே இருந்துச்சு.
அதனால பார்த்தேன்…

01:35.888 --> 01:40.100
அவ ஆடை இல்லாம இருக்கிற மாதிரி
ஒரு மெசேஜ் வந்துச்சு.

01:40.601 --> 01:42.894
அதனால அந்த நம்பரை திரும்ப கூப்பிட பார்த்தேன்,
ஆனால் அது ப்ளாக் ஆகி இருந்துச்சு.

01:42.895 --> 01:47.315
அதுக்குப் பிறகு, அவகிட்ட அது பத்தி கேட்டப்பபோ,
அவ ஒத்துக்கிட்டா.

01:47.316 --> 01:49.108
எனக்கு சரியான கோபம் வந்துச்சு.

01:49.109 --> 01:51.027
கத்துனேன். பொருட்களை போட்டு உடைச்சேன்.

01:51.028 --> 01:53.279
நான் நடந்துகிட்டதை நான் நியாயப் படுத்தலை.

01:53.280 --> 01:55.072
ஆனால் அவ மேல நான் கை வைக்கல.

01:55.073 --> 01:58.452
சத்தியமா. நான்ஸி அடிக்கிறதுக்கு முன்னால
நான் செத்துருவேன்.

01:59.119 --> 02:00.786
டேவிட் யாருன்னு உனக்குத் தெரியுமா?

02:00.787 --> 02:04.624
இல்ல. யாருன்னு அவ கிட்ட கெஞ்சிக் கேட்டேன்.
அவ மறுத்துட்டா.

02:04.625 --> 02:07.460
எங்க உறவில,
அவ்வளவு மோசமான சூழ்நிலையிலும்,

02:07.461 --> 02:09.294
அவ ரகசியத்தை வெளியில சொல்லல.

02:09.295 --> 02:11.256
அதுக்காக நீ பொய் சொன்னது சரியாகாது.

02:11.882 --> 02:13.509
அன்னைக்கு ராத்திரி அவ அவனைப்
போய்ப் பார்த்து…

02:14.510 --> 02:15.718
எல்லாத்தையும் முடிக்கப் போறதா சொன்னா.

02:15.719 --> 02:17.970
நீயும் கூட வரணும்னு சொன்னாளா?

02:17.971 --> 02:21.766
இல்ல, அவளே அதை பார்த்துக்கணும்னு அவ நினைச்சா,
நான்…

02:21.767 --> 02:22.850
அதைத் தடுக்கல.

02:22.851 --> 02:24.352
அதனால தான் நான் பொய் சொன்னேன்.

02:24.353 --> 02:30.691
எனக்கு இந்த தொடர்பு பத்தி தெரிஞ்சு நான் ஒண்ணும்
பண்ணலன்னு, உன்கிட்ட, போலீஸ் கிட்ட சொல்ல முடியல.

02:30.692 --> 02:33.319
அது நானே சரண்டர் ஆகிறதுக்கு சமம்.

02:33.320 --> 02:34.403
யாரும் என்னை நம்பப் போறதில்ல.

02:34.404 --> 02:36.197
ஆனால் இதுல கொடுமையான விஷயம்,

02:36.198 --> 02:38.241
அவள காப்பாத்துறதுக்கு நான் எதாவது
பண்ணியிருக்கலாம்,

02:38.242 --> 02:41.161
ஆனால் நான் பண்ணல.

02:42.454 --> 02:43.789
அது எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா?

02:54.591 --> 02:57.177
போலீஸ் இந்த டைரியைப் பார்த்தாங்களா?

02:59.513 --> 03:01.890
அது உதவலைன்னு
திருப்பிக் கொடுத்துட்டாங்க.

03:03.600 --> 03:07.104
அதுல வெறும் புரியாத கவிதைகளும்,
விசித்திரமான ஓவியங்களும் இருந்துச்சு.

03:08.272 --> 03:10.983
இந்த கடிதத்தை வச்சு நீ என்னப் பண்ணப் போற?

03:12.526 --> 03:14.152
உறுதியா தெரியல.

03:16.530 --> 03:17.613
நான் போகணும்.

03:17.614 --> 03:20.324
- பொறு. எங்க? ஏன்?
- ஒரு விருது நிகழ்ச்சி இருக்கு.

03:20.325 --> 03:22.618
- நாம ஒரே கார்ல வந்தோம்.
- நான் டாக்சியை வரவச்சு போய்க்கிறேன்.

03:22.619 --> 03:24.705
- போகாத. ப்ளீஸ்.
- ராபர்ட்

03:26.456 --> 03:27.540
நாம செஞ்சது…

03:27.541 --> 03:29.458
தெரியும். நாம எல்லையை கடந்துட்டோம்.

03:29.459 --> 03:31.752
இல்ல. இது அதையும் தாண்டி.

03:31.753 --> 03:33.796
நாம எல்லையை சிதறடிச்சிட்டோம்.

03:33.797 --> 03:36.049
இப்போ அந்த எல்லையே இல்ல.

03:36.884 --> 03:38.509
நாம திட்டம் போட்டு இதைப் பண்ணல.

03:38.510 --> 03:41.013
அதுவா நடந்துச்சு.

03:43.849 --> 03:45.517
என்னை மோசமானவன்னு நினைக்கிறியா?

03:46.685 --> 03:48.269
இல்ல.

03:48.270 --> 03:51.607
நீ என்னை நம்பலைன்னா,
யாரு என்னை நம்புவா?

03:52.316 --> 03:53.692
நான் நிறைய பண்ணியிருக்கலாம்.

03:55.611 --> 03:57.196
ஆனால், நான் ஒரு அரக்கன் இல்ல.

04:43.242 --> 04:45.160
ஆரமின்ட்டா ஹாலின்
புத்தகத்தைத் தழுவியது

05:28.036 --> 05:32.206
கோரா
இன்னைக்கு அழுதுக் கிட்டே எழுந்திரிச்சேன்.

05:32.207 --> 05:36.294
ஏறக்குறைய கொஞ்சம் முடியை வெட்டிட்டேன்.

05:36.295 --> 05:41.716
எலனார் - ஆழமா மூச்சு விடு.
கத்திரியை கீழப் போடு.

05:41.717 --> 05:44.218
எல்லாம் சரியாகிடும், கோரா.

05:44.219 --> 05:45.303
கோரா
நன்றி.

05:45.304 --> 05:47.431
இது எல்லாம் நீங்க இல்லாம
என்னால சமாளிச்சிருக்க முடியாது.

05:49.266 --> 05:52.519
டிரிப் காபியும்
வைட் சாக்லெட் மோக்காவும், எலனாருக்கு.

05:53.061 --> 05:54.062
அது நான் தான்.

05:54.771 --> 05:55.855
நன்றி.

05:55.856 --> 06:00.026
நடைபெற்று வரும்
உள்ளூர் பெண் நான்ஸி ஹென்னஸி

06:00.027 --> 06:04.447
கொலை விசாரணை தொடர்பாக தகவல்கள் கொடுக்க
பாஸடீனா காவல் துறை

06:04.448 --> 06:07.783
பொதுமக்களுக்கு ஒரு தகவல் எண்ணை
அறிவித்துள்ளனர்.

06:07.784 --> 06:09.952
- அவரது உடல் ஏப்ரல் 9 அன்று…
- கொடுமையா இருக்கு.

06:09.953 --> 06:12.163
அந்த பழைய லேஸி பீட்டர்ஸன் கொலை
சம்பவம் மாதிரி தோணுது.

06:12.164 --> 06:14.582
- கணவன் தான் பண்ணியிருப்பானா?
- யாராவது

06:14.583 --> 06:16.959
- நெருக்கமானவங்க தான் பண்ணியிருக்கணும்.
- அனைவரும் கூடுதல் கவனமாக இருக்க

06:16.960 --> 06:19.545
- காவல் துறை அறிவுறுத்துகிறது.
- ராபர்ட் ஒண்ணுத்துக்கும் ஆகாதவன்.

06:19.546 --> 06:21.631
இது வேஸ்ட்ன்னு சொன்னதை என்னால நம்ப முடியல.

06:21.632 --> 06:24.050
இதை பாரேன்.

06:24.051 --> 06:25.176
இது ஒரு வரம்.

06:25.177 --> 06:29.472
நம்ம தோழியோட அழகான கற்பனையை
நாம இதுல பார்க்கலாம்.

06:29.473 --> 06:31.015
இது உதவல.

06:31.016 --> 06:32.309
எது உதவல?

06:32.893 --> 06:35.019
இது உதவல, ஆனால் வேஸ்ட் இல்ல.

06:35.020 --> 06:37.605
அதுவும் அப்படி சொன்னது போலீஸ்,
ராபர்ட் இல்ல.

06:37.606 --> 06:38.899
சரி.

06:39.775 --> 06:43.319
டாவீட் சொன்னது சரி,

06:43.320 --> 06:45.905
அவள பத்தி நாம முழுசா தெரிஞ்சுக்கல.

06:45.906 --> 06:47.782
இந்த நினைவுகளை பாரு.

06:47.783 --> 06:49.243
எல்லி,

06:49.952 --> 06:51.537
அவ நம்ம நான்ஸி.

06:52.579 --> 06:57.668
நம்ம கிட்ட தன் ரகசியங்களை
ஏன் மறைக்க நினைச்சான்னு எனக்குப் புரியல.

07:00.629 --> 07:02.339
நான் இதை வச்சுக்கட்டுமா?

07:03.131 --> 07:04.800
இல்ல, அது…

07:05.300 --> 07:06.759
நான் அனுமதி கொடுக்குறதுக்கு அது என்னோடது இல்ல.

07:06.760 --> 07:07.761
அது அவளோடது.

07:14.935 --> 07:16.686
நான் ஆஃபீஸூக்குப் போகணும்.

07:16.687 --> 07:20.690
இன்னைக்கு ராத்திரி விருதுகள் டின்னர்ல, நீயும்,
ஹாவர்டும் என் கூட உட்கார ஏற்பாடு பண்ணிருக்கேன்.

07:20.691 --> 07:24.110
- நான் தனியா வரப் போறேன்.
- சரி. நல்லது தான்.

07:24.111 --> 07:26.279
- ஆமா.
- ஆமா. அப்புறம் பார்க்கலாம்.

07:26.280 --> 07:27.656
பிறகு பார்க்கிறேன்.

07:41.378 --> 07:44.256
ராபர்ட்
நாம பேசலாமா?

07:51.889 --> 07:53.306
- எல்லி.
- சொல்லு.

07:53.307 --> 07:54.765
- நான்… சாரி.
- ஹே.

07:54.766 --> 07:56.309
இல்ல. பரவாயில்லை.

07:56.310 --> 07:58.686
நீ இங்க நல்ல வேலை பார்க்குறேன்னு
கேள்விப்பட்டேன்.

07:58.687 --> 08:00.938
நான் பெரும்பாலும் பேப்பருக்கு பின் போடுறேன்,

08:00.939 --> 08:03.357
ஆனால் காய்ககறி கடையில பொட்டலம் மடிக்கிறதுக்குப்
பரவாயில்ல.

08:03.358 --> 08:05.151
பொட்டலம் மடிக்கிறதுல தப்பு ஒண்ணும் இல்ல.

08:05.152 --> 08:06.485
ஏன்னா நீங்க அதைப் பண்ணதே கிடையாது.

08:06.486 --> 08:07.821
உனக்கு எப்படித் தெரியும்?

08:09.948 --> 08:12.325
- என்னோட படிவத்தில கையெழுத்து போடுறீங்களா?
- சரி.

08:12.326 --> 08:14.827
என்னோட கேஸ் வர்க்கர் சூப்பர்வைஸர்கிட்ட இருந்து
கையெழுத்து கேட்டார்.

08:14.828 --> 08:17.998
கண்டிப்பா. அப்பா-அம்மா கூட
எல்லாம் நல்லா போகுதா?

08:18.707 --> 08:20.334
- ஆமா. அப்படி தான் நினைக்கிறேன்.
- என்ன?

08:21.084 --> 08:23.295
தெரியல, நான் அவங்க பக்கம் போறதில்ல.

08:23.795 --> 08:26.088
ஏன்? அம்மாகிட்ட என்ன
நடந்ததுன்னு சொன்னீங்களா?

08:26.089 --> 08:28.049
- ஏன்னா, அவங்களுக்குத் தெரிஞ்சா, அவங்க…
- இல்ல, இல்ல மார்கஸ்.

08:28.050 --> 08:29.800
நான் எதுவும் சொல்லல. சொல்லப் போறதும் இல்ல.

08:29.801 --> 08:31.302
நான் தான் ஏற்கனவே சொன்னேன், இல்லையா?

08:31.303 --> 08:33.803
ஆனால் அன்னைக்கு ராத்திரி நடந்தை
நீ மறக்கணும்.

08:33.804 --> 08:35.807
அதை உன் தலையில இருந்து தூக்கி எறி.

08:36.308 --> 08:37.392
சரி.

08:43.440 --> 08:45.817
போதும்! போதும்!

08:47.069 --> 08:49.862
போதும். தயவு செஞ்சு நிறுத்துங்க.

08:49.863 --> 08:52.823
எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல.

08:52.824 --> 08:59.080
இந்த அங்கீகாரம் உங்க எல்லாரோட கடின உழைப்பின்
பிரதிபலிப்பு, சரியா?

08:59.081 --> 09:02.208
அதனால, நீங்க கொண்டாடுறதா இருந்தா,
உங்களையே கொண்டாடுங்க.

09:02.209 --> 09:03.210
சரி.

09:05.170 --> 09:06.672
ஒரு நிமிஷம்.

09:07.256 --> 09:08.381
நீ லேட்டா வந்திருக்க.

09:08.382 --> 09:10.466
- இது என்னோட ஐடியா இல்ல.
- உனக்கு இது பிடிக்காதுன்னு தெரியும்,

09:10.467 --> 09:12.635
- ஆனால் நம்ம அமைப்புக்கு இது நல்லது.
- நீ சொன்னா சரி.

09:12.636 --> 09:15.555
- ஹாய்.
- எலனார், இது ஆண்ட்ரூ.

09:15.556 --> 09:17.974
லெகஸி பத்திரிகைல இருந்து வந்திருக்கார்.
ஆண்ட்ரூ, இது எலனார் புஷே.

09:17.975 --> 09:20.226
- மிஸ். புஷே, சந்திச்சதில சந்தோஷம்.
- எனக்கும் தான்.

09:20.227 --> 09:21.894
உங்களுக்கு ஓகேன்னா
நாம மொதல்ல உங்களோட,

09:21.895 --> 09:24.939
உங்க ஊழியர்கள், ஆஃபீஸோட
புகைப்படங்களோட ஆரம்பிக்கலாம்.

09:24.940 --> 09:26.566
சரி. நீங்க சொல்ற மாதிரியே பண்ணலாம்.

09:26.567 --> 09:27.733
அருமை.

09:27.734 --> 09:29.527
- இப்ப அப்படியே கேமராவை பாருங்க.
- சரி.

09:29.528 --> 09:31.196
அப்புறம் ஜன்னலை பார்த்த மாதிரி
ஒண்ணை எடுக்கலாம்.

09:40.831 --> 09:43.499
- ஹே.
- சனி, ஞாயிறு நீ கூப்பிடவே இல்ல.

09:43.500 --> 09:45.168
நாம சேர்ந்து இருப்போம்னு நினைச்சேன்.

09:45.169 --> 09:47.295
சரி தான், நான் இந்த பிறந்தநாள் பார்ட்டியை
ப்ளான் பண்ணிட்டிருந்தேன்.

09:47.296 --> 09:50.465
பாரு, எல்.
இந்த காரணங்கள் எரிச்சலாக்குது.

09:51.216 --> 09:53.051
ஒண்ணு வேணும்னு சொல்லு, இல்ல விட்டுடு.

09:54.094 --> 09:55.344
நிஜமா சொல்றியா?

09:55.345 --> 09:56.596
என்ன விளையாடுறியா?

09:56.597 --> 09:57.930
அதுவும் இன்னைக்குப் பார்த்து.

09:57.931 --> 10:00.057
இங்க ஒரு பத்திரிகை ஆளு இருக்கான்.

10:00.058 --> 10:01.935
எனக்கு வேற வழியே இல்லையே.

10:04.062 --> 10:06.439
- நாம இந்த உறவை நிறுத்தணும்.
- என்ன சொல்ற நீ?

10:06.440 --> 10:08.775
இனி மேல நாம ஆஃபீஸ் விஷயமா
மட்டும் தான் பேசணும்னு நினைக்கிறேன்.

10:09.776 --> 10:10.777
இதுல நான் சொல்றதுக்கு ஒண்ணும் இல்லையா?

10:12.446 --> 10:13.864
இல்ல.

10:17.117 --> 10:19.327
இது தான் என் ஆஃபீஸ்.
நான் எங்க நிக்கணும்?

10:19.328 --> 10:22.163
உங்க சேர்லயே உட்காருங்க.

10:22.164 --> 10:23.165
சரி.

10:23.749 --> 10:25.875
உங்க தோழி பத்தி வாசிச்சது வருத்தமா இருந்துச்சு.

10:25.876 --> 10:27.710
ரொம்ப கொடுமையான விஷயம்.

10:27.711 --> 10:30.047
யாரு அதைப் பண்ணான்னு போலீஸ்
கண்டுப்பிடிப்பாங்கன்னு நம்புறேன்.

10:31.089 --> 10:33.049
மன்னிக்கணும்.
நீங்க அவங்க தோழி தானே?

10:33.050 --> 10:34.884
நான்ஸி ஹென்னஸி? நான்…

10:34.885 --> 10:37.845
சாரி. உங்க ரெண்டு பேருக்கும் அறிமுகம்
இருக்குன்னு வாசிச்சதா நினைச்சேன்…

10:37.846 --> 10:39.388
இல்ல, இருக்கு. நான்… நான்…

10:39.389 --> 10:42.433
நாம நீங்க வந்த வேலைல
கவனம் செலுத்துனா நல்லா இருக்கும்.

10:42.434 --> 10:44.269
கண்டிப்பா. ஒரு பிரச்சினையும் இல்ல.

10:46.688 --> 10:48.272
நாம 2012 பத்தி பேசுவோம்.

10:48.273 --> 10:49.607
நீங்க இதை 2012-ல ஆரம்பிச்சீங்க.

10:49.608 --> 10:51.400
அந்த வருஷத்தைப் பத்தி சொல்லுங்க.

10:51.401 --> 10:55.112
லெகஸி பத்திரிகையின்
2026 உலகளாவிய தாக்க விருது பெறுநருக்கு

10:55.113 --> 11:01.245
கரகோஷம் எழுப்புவோம்.
இதோ, எலனார் புஷே.

11:08.836 --> 11:10.253
நன்றி.

11:10.254 --> 11:11.838
- இதுக்கு தகுதியானவங்க.
- வாவ்.

11:11.839 --> 11:14.049
- கொஞ்சம் பிடிச்சுக்குறீங்களா?
- கண்டிப்பா.

11:15.467 --> 11:17.426
நன்றி. ரொம்ப நன்றி.

11:17.427 --> 11:19.762
லெகஸி பத்திரிகைக்கு நன்றி.

11:19.763 --> 11:21.806
நான் ரொம்ப நன்றிகடன் பட்டிருக்கேன். நான்…

11:21.807 --> 11:24.433
நான் ஹீரோக்கள் நிறைஞ்ச அறையில இருக்கேன்.

11:24.434 --> 11:28.020
இது இந்த அங்கீகாரத்தை
ரொம்ப பணிவாக ஆக்குது.

11:28.021 --> 11:33.776
உங்கள்ல பலரை நான் வியந்திருக்கேன்,
உங்க வேலையும் எப்படி தேவையால வெளிபட்டதுன்னு

11:33.777 --> 11:36.154
வியந்திருக்கேன்.

11:36.989 --> 11:42.410
இந்த வேலையைப் பண்றதுக்கு நாம சரியான நபரான்னு
சில சமயம் நான் போராடியிருக்கேன்.

11:42.411 --> 11:43.745
நான் அப்பழுக்கில்லாதவ இல்ல.

11:44.621 --> 11:46.331
உண்மையில, யாருமே அப்படி இல்ல.

11:47.499 --> 11:49.000
ஆனால் நாம விரும்புறோம், இல்லையா?

11:49.001 --> 11:51.711
நான் விரும்புறேன், முயற்சி பண்றதுக்கு.

11:51.712 --> 11:52.837
வெளிக்காட்டுறதுக்கு.

11:52.838 --> 11:57.008
நான் மோசக்காரியா தோன்றினாலும்,
அரக்கியா தோன்றினாலும்,

11:57.009 --> 12:03.639
நான்… நான் ஒரு நல்ல விஷயத்துக்காக
என்னையே முழுசா கொடுக்கத் தயாரா இருக்கேன்.

12:03.640 --> 12:04.641
ஒரு…

12:05.684 --> 12:07.311
பரந்த நலனுக்காக.

12:08.020 --> 12:12.607
அதனால தான் நாம எல்லாரும் இங்க இருக்கோம், இல்லையா?

12:12.608 --> 12:16.068
ஒரு பரந்த நலனில் நாமும்
ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம்.

12:16.069 --> 12:18.154
ஆக, நன்றி. இந்த கௌரவத்துக்கு நன்றி.

12:18.155 --> 12:20.656
உங்களோட இங்க இருக்கிறதுல,
நாம சேர்ந்து இருக்கிறதுல சந்தோஷப்படுறேன்.

12:20.657 --> 12:21.867
நன்றி.

12:30.334 --> 12:31.335
வரேன்.

12:33.754 --> 12:35.796
நீ இவ்வளவு நேரம் காத்திருக்க தேவையில்லையே.

12:35.797 --> 12:37.715
மார்கஸ் குழந்தைகள பார்த்துக்குறான்.
அதனால அவசரம் இல்ல.

12:37.716 --> 12:39.134
அதை எடுத்துக்கலாமா?

12:40.344 --> 12:41.636
நான் நான்ஸியோட டைரியில பார்த்த ஒண்ணை

12:41.637 --> 12:43.554
- உனக்குக் காண்பிக்கணும்.
- இல்ல, மேர்.

12:43.555 --> 12:45.933
- ப்ளீஸ். எல்லி, சும்மா பாரு.
- இது பார்க்குற இடமில்ல.

12:46.725 --> 12:48.017
இவனைப் பாரு.

12:48.018 --> 12:50.019
இவன் கண்களைப் பாரு,
எப்படி வரைஞ்சிருக்கான்னு பாரு.

12:50.020 --> 12:53.689
பயமுறுத்துது.
நிச்சயமா அவளை இவன் பயமுறுத்தியிருக்கான்.

12:53.690 --> 12:58.612
எனக்கு தெரிஞ்சு இந்த அளவுக்கு நான்ஸியை
பயமுறுத்தியது ஸ்காட் மட்டும் தான்.

12:59.613 --> 13:00.614
என்ன?

13:01.532 --> 13:04.158
இவனைப் பார்த்தா சர்ச்ல பார்த்தவன் மாதிரி தெரியுது.

13:04.159 --> 13:05.701
இறுதிச் சடங்குல.

13:05.702 --> 13:07.578
எல்லி, நாம இதை போலீஸ் கிட்ட சொல்லணும்.

13:07.579 --> 13:09.789
- இல்ல, போய் என்ன சொல்றது?
- ஆமா.

13:09.790 --> 13:12.875
நம்ம கிட்ட இருக்கிறது நான்ஸியோட
மாற்றான் தந்தையோட படமா இருக்கலாம்,

13:12.876 --> 13:14.627
அவர் இறுதி சடங்குக்கு வந்திருக்கலாம்னு சொல்லலாம்.

13:14.628 --> 13:15.795
ஒண்ணுமில்லாததுக்கு இது பரவாயில்ல.

13:15.796 --> 13:17.713
இல்லேன்னா நம்ம கிட்ட எதுவும் இல்ல, எல்லி.

13:17.714 --> 13:19.006
எதுவுமே இல்ல.

13:19.007 --> 13:20.466
இதோ, இந்த நாளோட நாயகி.

13:20.467 --> 13:22.009
- ஹே.
- நான் குறுக்கிடலேல.

13:22.010 --> 13:23.344
டானவன், ஹாய்!

13:23.345 --> 13:24.428
நீ ரொம்ப அழகா இருக்க.

13:24.429 --> 13:27.974
நிச்சயமா ஹாவர்ட் இதை வச்சிட்டு
என்ன பண்றதுன்னு தெரியாம இருப்பான். கடவுளே.

13:27.975 --> 13:29.517
கொஞ்சம் வழியுறதை நிறுத்துறியா?

13:29.518 --> 13:31.769
- என்னால முடியாது.
- அமான்டா எப்படி இருக்கா?

13:31.770 --> 13:32.896
என் ஜீவனாம்ஸத்தை வச்சு சந்தோஷமா இருக்கா.

13:33.689 --> 13:34.939
ஐயோ, சாரி.

13:34.940 --> 13:36.148
பரவாயில்ல.

13:36.149 --> 13:37.651
ஒரு நிமிஷம்.

13:38.277 --> 13:39.861
நீ அவள நினைச்சு பெருமைப்படணும்.

13:39.862 --> 13:41.822
உன்னோட தங்கை ஒரு ராக் ஸ்டார்.

13:42.990 --> 13:44.741
அவ பிறக்கும் போதே அப்படித் தான்.

13:45.784 --> 13:47.244
நிகழ்ச்சி 6.00 மணிக்கு.

13:47.870 --> 13:49.121
எனக்கு வேலை இழுத்துடுச்சு.

13:51.748 --> 13:53.000
இது நல்லா இருக்கு.

13:53.584 --> 13:55.918
நீ மேடைல பேசுனியா? அழுதியா? மேரி அழுதாளா?

13:55.919 --> 13:57.170
ரெண்டு பேரும் அழுதீங்க தானே?

13:57.171 --> 13:59.173
நீ ரொம்ப எரிச்சலூட்டுற.

14:00.799 --> 14:02.091
அம்மா பேசினாங்களா?

14:02.092 --> 14:05.887
ஆமா. சுருக்கமா ஒரு வாழ்த்து மெசேஜ் அனுப்பனாங்க.

14:05.888 --> 14:08.931
அவங்க எப்பவும் இப்படித் தான்
தன் அன்பை வெளிப்படுத்துவாங்க.

14:08.932 --> 14:11.268
மிகச் சுருக்கமா.

14:14.521 --> 14:15.647
உன் மனசுக்குள்ள என்ன ஓடுது?

14:16.273 --> 14:20.234
ஒரு பெரிய விருது வாங்கின சந்தோஷம்
உன் முகத்தில இல்லையே?

14:20.235 --> 14:22.196
நீ பண்ணதிலேயே மிக மோசமான விஷயம் எது?

14:26.909 --> 14:29.660
வாவ். நான் இதை எதிர்பார்க்கல.

14:29.661 --> 14:30.913
- ஷாம்பெய்ன்?
- நன்றி.

14:33.040 --> 14:35.791
இந்த நிகழ்ச்சி முழுசும், நான் எவ்வளவு அற்புதமானவ,
எவ்வளவு தைரியமானவ,

14:35.792 --> 14:38.462
சுயநலமற்றவன்னு சொல்லிட்டிருக்காங்க…

14:39.713 --> 14:42.048
அவங்க வேற யாரை பத்தியோ பேசுற மாதிரி
எனக்குத் தோணுது.

14:42.049 --> 14:44.884
நீ மிகைப்படுத்தி பேசுறேன்னு நினைக்கிறேன்.

14:44.885 --> 14:49.180
அட, எல். நீ இருக்கிறதிலேயே ரொம்ப சுத்தமானவ.

14:49.181 --> 14:50.264
அது தான் உன் குணமே.

14:50.265 --> 14:51.474
நீ இப்ப எங்க இருக்கேன்னு பாரு.

14:51.475 --> 14:53.227
நீ என்ன பேசுற?

14:55.395 --> 14:57.647
கிளம்புறியா? நான் இப்ப தான் வந்தேன்.

14:57.648 --> 14:59.525
நிகழ்சி 6.00 மணிக்கு.

15:00.442 --> 15:01.652
உனக்கு ஒண்ணுமில்லையே?

15:02.653 --> 15:03.737
ஏதாவது நடந்துச்சா என்ன?

15:05.697 --> 15:09.075
இல்ல. நான் நல்லாயிருக்கேன்.

15:09.076 --> 15:10.660
ரொம்பவே நல்லா இருக்கேன். நான்…

15:10.661 --> 15:12.829
நான் சுத்தமானவ, இல்லையா?

15:18.752 --> 15:19.962
உன்னை நாளைக்கு கூப்பிடுறேன்.

15:31.348 --> 15:32.516
ஹே, நான் தான்.

15:33.267 --> 15:34.517
நீ ஃபோனை எடுக்காதது சரி தான்.

15:34.518 --> 15:37.687
ம், நேத்து ராத்திரிக்கு அப்புறம்
என்கூட பேச கூட விரும்ப மாட்ட.

15:37.688 --> 15:41.441
ஆனால், உன் கிட்ட மட்டும் தான் நான்
பேச விரும்புறேன். அது தான் உண்மை.

15:42.025 --> 15:44.862
பொய் சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடு.
நீ என்னை மன்னிப்பேன்னு நம்புறேன்.

15:46.905 --> 15:49.616
நான்ஸி ரகசியங்களை மறைச்சான்னு
கோபப்பட்டேன், ஆனால்…

15:50.909 --> 15:53.161
இப்ப நானே அதைப் பண்ணிட்டிருக்கேன்.

15:53.662 --> 16:00.002
உண்மையை மறைச்சதுக்கு வருத்தப்படுறேன், ஆனால்
நமக்குள்ள நடந்ததுக்கு வருத்தப்படல.

16:01.128 --> 16:07.176
நான்ஸி இறந்த பிறகு, வலியை தாண்டி நான்
வேறொன்றை உணர்ந்தது நேத்து ராத்திரி தான்.

16:08.177 --> 16:09.553
நீயும் அதை உணர்ந்திருப்பேன்னு தெரியும்.

16:30.991 --> 16:32.284
நான் கார்ல வீட்டிக்குப் போயிட்டிருந்தேன்…

16:34.203 --> 16:35.537
அப்படியே போயிட்டிருந்தேன்.

17:54.199 --> 17:56.200
உன் அப்பாவோட படகுல போவியா?

17:56.201 --> 17:58.579
இல்ல, போய் பல வருஷமாச்சு.

17:59.329 --> 18:01.289
அது டானவன் கிட்ட இருக்கு.

18:01.290 --> 18:02.457
சுத்த மோசம்.

18:03.292 --> 18:04.459
அது ஒரு அழகு.

18:05.794 --> 18:07.129
டானவன்.

18:16.013 --> 18:18.598
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது,
தண்ணிக்கடியில மூச்சை பிடிக்கும் போட்டியில

18:18.599 --> 18:20.057
நான் ஜெயிச்சதை சொல்லியிருக்கேனா?

18:20.058 --> 18:21.059
இல்ல.

18:21.602 --> 18:23.352
பெரிய விஷயம்.

18:23.353 --> 18:26.272
ஆமா பெரிய விஷயம்.
ரெண்டு நிமிஷம், நாற்பத்து ஏழு நொடிகள்.

18:26.273 --> 18:27.356
- வாவ்.
- ஆமா.

18:27.357 --> 18:28.692
என் கிட்ட சவால் விடுறியா?

18:29.943 --> 18:30.944
சரி ஒரு விளையாட்டு.

18:31.528 --> 18:32.778
நம்ம வயசென்ன?

18:32.779 --> 18:33.780
உண்மையை சொல்றியா
இல்ல நான் சொல்றதை செய்றியா?

18:36.158 --> 18:38.242
- உண்மை.
- அது தவறான பதில்.

18:38.243 --> 18:40.078
- இல்ல, இல்ல. வேண்டாம்!
- பார்த்து.

18:43.207 --> 18:44.790
- சாரி.
- வெறும் வாய் வார்த்தை.

18:44.791 --> 18:45.917
உனக்கு கொஞ்சம் உந்துதல் தேவைப்பட்டது.

18:45.918 --> 18:47.961
- அப்படியா? இது மாதிரியா?
- ஆமா, உனக்கு…

18:51.381 --> 18:52.382
அப்பா?

18:55.969 --> 18:58.514
எல்லி? என்ன ஆச்சு?

19:01.600 --> 19:03.936
நீ என்ன பண்ற?
நீ ஸ்கூல்ல தானே இருக்கணும்?

19:05.187 --> 19:06.479
நாங்க ஏதோ வந்துட்டோம்.

19:06.480 --> 19:08.815
துக்கத்தை தணிக்கிறதுக்கு இங்க வரலாம்னு நினைச்சோம்.

19:09.525 --> 19:10.526
அது சரக்கா?

19:11.109 --> 19:12.194
அது மாதிரி.

19:12.819 --> 19:14.362
எங்க அப்பாவோட உறவு வச்சிருக்கீங்களா?

19:14.363 --> 19:16.156
கோரா. இல்ல, அது…

19:16.698 --> 19:19.575
இது அதில்ல. அம்மாவோட பொருட்களை
ஒழுங்குபடுத்த உதவ எலனார் வந்தா.

19:19.576 --> 19:20.952
அதை தான் நேத்து பண்ணீங்களே?

19:20.953 --> 19:24.247
ஆமா, எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

19:24.248 --> 19:28.835
நிறைய நினைவுகள், அதனால நிறுத்திட்டேன்,
எலனாரும் இங்க தங்கினா.

19:28.836 --> 19:30.254
இங்க எதுவும் நடக்கல.

19:31.004 --> 19:32.505
எதுவுமில்ல.

19:32.506 --> 19:35.508
இன்னைக்கு அந்தப் பெட்டிகளைக்
காலி பண்ணோம்.

19:35.509 --> 19:38.594
இன்னும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.

19:38.595 --> 19:40.471
கொஞ்சம் மன பாரத்தை இறக்கி வைக்க வேண்டிருந்துச்சு.

19:40.472 --> 19:43.058
நாங்க… நாங்க உங்க அம்மாவை ரொம்ப மிஸ் பண்றோம்.

19:43.559 --> 19:45.268
சும்மா சாக்கு போக்கு சொல்லல.

19:45.269 --> 19:47.896
நாங்க தான் பெரியவங்க.
நாங்க அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்.

19:49.022 --> 19:52.901
கோரா, என்னை மன்னிச்சிடு.
இது சரியில்லைன்னு தெரியும்.

19:55.195 --> 19:58.614
அது போல தான், சரக்கு அடிக்கிறதும்,
ஸகூலுக்குப் போகாததும். சரியா?

19:58.615 --> 19:59.824
இன்னைக்கு ராத்திரி இங்க இருங்க.

19:59.825 --> 20:02.703
காலைல முதல் காரியமா
ஸ்கூலுக்குப் போறீங்க. சரியா?

20:14.131 --> 20:15.424
கடவுளே.

20:16.008 --> 20:18.092
- அவ என்னை வெறுக்கிறா.
- இல்ல.

20:18.093 --> 20:20.637
ஆமா. அவ கண்ல அந்த பார்வையை பார்த்தியா?

20:21.430 --> 20:23.056
நான் அவகிட்ட பொய் சொன்னதே இல்ல.

20:23.849 --> 20:25.725
அவ எதையும் நம்புனதா தெரியல.

20:25.726 --> 20:27.476
இல்ல, அவ நல்லா தான் இருக்கா.

20:27.477 --> 20:28.604
அவ ஒரு ஹென்னஸி.

20:29.188 --> 20:30.271
அப்படின்னா?

20:30.272 --> 20:32.023
எங்க குடும்பத்தில யாரும் கேள்வி கேட்கக் கூடாது.

20:32.024 --> 20:35.818
சொல்றதை வேதவாக்கா எடுத்துக்கணும்,
ஆதாரம் என்ன வேணா இருக்கட்டும்.

20:35.819 --> 20:37.279
அது அவ இரத்தத்தில இருக்கு.

20:38.989 --> 20:40.949
அவ முழுசா ஹென்னஸி இல்ல.

20:42.993 --> 20:44.786
அவளுக்குள்ள கொஞ்சம் நான்ஸியும் இருக்கு.

20:46.997 --> 20:47.998
ஆமா.

20:50.167 --> 20:51.668
அது ரொம்ப ஆபத்தா தெரிஞ்சது.

20:52.169 --> 20:54.004
இந்த மாதிரி மாட்டிக்கிறது.

20:56.673 --> 20:58.342
நாம நிறுத்தணும்னு நினைக்கிறியா?

21:01.887 --> 21:03.972
அது தான் உனக்கு வேணுமா?

21:07.351 --> 21:08.352
இல்ல.

22:02.364 --> 22:04.073
குட்மார்னிங், மக்களே.

22:04.074 --> 22:06.368
நேத்து ராத்திரி நல்லா எஞ்சாய் பண்ணீங்கன்னு
நினைக்கிறேன்.

22:07.202 --> 22:11.290
போதை தெளிய வரைக்கும்
தூங்கி இருப்பீங்கன்னும் நம்பறேன்.

22:12.040 --> 22:13.208
நான் எதுவும் நினைக்கல, ரோரி.

22:16.253 --> 22:18.421
ஒலிவியா, இன்னைக்குள்ள அப்பாய்ன்ட்மென்டை
எனக்கு பிரிண்ட் பண்ணி தரியா?

22:18.422 --> 22:19.964
- …இன்னைக்கு பேசி முடிக்கலாம்…
- நன்றி.

22:19.965 --> 22:21.799
- …பிறகு உங்க ஆஃபீஸூக்கு வரேன்…
- ஹே.

22:21.800 --> 22:24.510
…முடிஞ்ச அளவு சீக்கிராமா.
ஆனால் பிரச்சினை என்னன்னா… சார், பிரச்சினை…

22:24.511 --> 22:26.262
ஜோர்டன் லேட்டா வரான்னா?

22:26.263 --> 22:27.930
உடம்பு சரியில்லைன்னு ஃபோன் பண்ணான்.

22:27.931 --> 22:28.932
எல்லாருக்கும் என்ன ஆச்சு?

22:30.309 --> 22:31.434
உனக்குத் தெரியாதா?

22:31.435 --> 22:32.602
என்னது?

22:32.603 --> 22:34.145
ஒலிவியா, நாங்க கொஞ்சம் பேசணும்.

22:34.146 --> 22:35.147
நன்றி.

22:35.814 --> 22:37.148
என்னாச்சு?

22:37.149 --> 22:38.232
என்ன நடக்குது?

22:38.233 --> 22:42.195
நீ துக்கத்தை அனுசரிக்கிறதுக்கு,
நான் மரியாதையா, உனக்கான இடத்தைக் கொடுத்தேன்.

22:42.196 --> 22:44.113
ஆனால் உன்னோட தனிப்பட்ட வாழ்க்கை
நம்ம பிஸினெஸ்ஸை நாசம் பண்ணுது.

22:44.114 --> 22:45.741
நீ என்ன பேசுற?

22:48.243 --> 22:49.578
நீ டிக்டாக்ல இல்ல தானே?

22:50.329 --> 22:52.998
- அதை ஏன் கேட்குற?
- சே.

22:54.082 --> 22:56.376
இன்னைக்கு காலைல ஒரு வீடியோ போட்டிருக்காங்க.

22:57.419 --> 22:58.878
அது ராபர்ட்டோட மகள், கோரா.

22:58.879 --> 23:01.672
நீயும், ராபர்ட்டும் உறவு வச்சிருக்கீங்கன்னு
நேரடியா சொல்லியிருக்கா.

23:01.673 --> 23:03.382
அவ உன்னை பேர் சொல்லி சொல்ல.

23:03.383 --> 23:05.886
ஆனால் சில இன்டெர்நெட் புத்திசாலிங்க,
அது நீ தான்னு கண்டுப்பிடிச்சுட்டாங்க.

23:06.929 --> 23:10.097
அது அபத்தமானது.

23:10.098 --> 23:12.850
இருக்கலாம், ஆனால் எனக்கு தொடர்ச்சியா ஃபோன் வருது.

23:12.851 --> 23:15.353
லெகஸி கூப்பிட்டிருந்தாங்க. அவங்க நம்ம கதையை
நீக்கலாம்னு நினைக்கிறாங்க.

23:15.354 --> 23:16.938
நம்ம புரோக்ராம் பார்ட்னர்கள், நாம ஏதோ

23:16.939 --> 23:19.650
- பிரச்சினைல இருக்கோம்னு கவலப்படுறாங்க.
- சரி. அந்த வீடியோவை பார்க்கணும்.

23:20.442 --> 23:23.236
- அதைக் காட்டு, ஸோயி.
- எலனார், நான் ஏற்கனவே அது என்னன்னு…

23:23.237 --> 23:25.154
யாராவது அந்த வீடியோவை காட்டுறீங்களா?

23:25.155 --> 23:27.114
நான் அதைப் பார்க்கணும். யாராவது?

23:27.115 --> 23:28.407
- எலனார்
- நிறுத்து!

23:28.408 --> 23:30.910
அந்த எழவு வீடியோவை நான் பார்க்கணும்.

23:30.911 --> 23:32.454
ப்ளீஸ்.

23:35.874 --> 23:37.292
நன்றி, மார்கஸ்.

23:37.960 --> 23:41.379
இறந்த உங்க அம்மாவோட நெருங்கின தோழி
உங்க அப்பாவோட படுத்தா கோபம் வருதா?

23:41.380 --> 23:42.964
இல்ல எனக்கு மட்டும் தான் அப்படி இருக்கா?

23:42.965 --> 23:43.966
அருமை.

23:46.009 --> 23:49.471
இறந்த உங்க அம்மாவோட நெருங்கின தோழி
உங்க அப்பாவோட படுத்தா கோபம் வருதா?

24:17.541 --> 24:19.084
டிடெக்டிவ் கேன்ஸ்

24:25.465 --> 24:26.549
சே.

24:26.550 --> 24:27.551
டானவன்

24:28.051 --> 24:29.510
நம்ம பேரு எங்கேயாவது

24:29.511 --> 24:32.890
அடிப்பட்டுச்சுன்னா
எனக்கு எச்சரிக்கை வரும், தெரியுமா?

24:33.390 --> 24:35.183
நான் பேசுற நிலைமையில இல்ல.

24:35.184 --> 24:37.894
ராபர்ட் கூட படுக்கணும்னு நினைக்கிறது, சரி,

24:37.895 --> 24:39.979
ஆனால் அதை செயல்படுத்துறதும்,

24:39.980 --> 24:42.607
மாட்டிக்கிறதும், தலைப்புச் செய்தி ஆகுறதும் வேற.

24:42.608 --> 24:45.359
கோரா வருத்தமா இருந்தா,
அவ தப்பா புரிஞ்சுக்கிட்டா.

24:45.360 --> 24:48.321
இது வெறும் ஒரு பெரிய தவறான புரிதல்.

24:48.322 --> 24:52.366
வேண்டாம். பொய் சொல்லி என்னையும் சங்கடப்படுத்தாத,
உன்னையும் அசிங்கப்படுத்தாத.

24:52.367 --> 24:53.743
நீ செய்திகளை பார்த்தியா?

24:53.744 --> 24:56.120
கடவுளே, இல்ல, ஆனால் அவங்க என்ன சொன்னாலும்,

24:56.121 --> 24:58.331
அதை ஒரு ஸ்டேட்மென்ட்ல சரி பண்ணிடலாம்.

24:58.332 --> 25:01.501
தயவு செய்து ரொம்ப பெரிசு படுத்தாத.

25:01.502 --> 25:04.128
வக்கீல்கள் கூப்பிடுறாங்க.
அம்மா ஃப்ளைட் பிடிச்சு வராங்க.

25:04.129 --> 25:07.507
எலனார், இது மோசமாச்சுன்னா, நிச்சயம் மோசமாகும்,
அப்போ,

25:07.508 --> 25:11.969
ராபர்ட் குடும்பம் இந்த அசிங்கத்தைத் துடைக்கிறதுக்கு
முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணுவாங்க,

25:11.970 --> 25:15.223
கடைசியில தப்பு உன் மேல தான் விழும்.

25:15.224 --> 25:17.266
அந்த அளவுக்கு அந்த நாய் தகுதியான்னு தெரியல.

25:17.267 --> 25:19.520
நிறுத்து! நிறுத்தறியா?

25:20.145 --> 25:22.939
உன் கற்பனைக்கு எனக்கு நேரமில்ல, டானவன்.

25:22.940 --> 25:25.900
இது வெறும் நெருப்பு,
அதை அணைக்க மட்டும் செய்யணும்.

25:25.901 --> 25:28.402
இது நடக்கும்னு எனக்குத் தெரியும்.

25:28.403 --> 25:31.949
அந்த நாய் உன்னை நல்லாவே மாத்திட்டான்.

25:45.170 --> 25:48.005
ஹே, வா. இந்த அலங்கோலத்தை கண்டுக்காத.

25:48.006 --> 25:49.799
இப்ப தான் பொண்ணுங்கள ஸ்கூலுக்கு அனுப்பி வச்சேன்.

25:49.800 --> 25:53.135
துணி தோய்ச்சிட்டிருக்கேன்,
ஆர்டீ படுக்கையில ஒன்னுக்கு போயிட்டா.

25:53.136 --> 25:56.264
இப்ப ரெண்டு வாரமா இப்படி
விட்டு விட்டு போயிட்டிருக்கா.

25:56.265 --> 25:59.016
ஹாவர்டால தாங்க முடியல, அதனால நான்…

25:59.017 --> 26:01.186
ம், அவர் ப்ளாஸ்டிக் ஷீட் வாங்கணும்னு சொல்றார்.

26:01.937 --> 26:03.563
இன்னும் ஒரு வருஷத்துக்கு, அவ வளர்றது வரை.

26:03.564 --> 26:06.482
ஆனால், தெரியல, அது என்னமோ ரொம்ப…

26:06.483 --> 26:07.651
என்னாச்சு?

26:09.778 --> 26:10.779
என்ன?

26:12.865 --> 26:15.158
என்ன நடக்குது? எனக்கு பயமா இருக்கு.

26:16.994 --> 26:21.498
ஒஹாயில இருக்கும் போது.
நானும் ராபர்ட்டும் சேர்ந்து இருந்தோம்.

26:22.082 --> 26:24.376
கோரா அதை பார்த்திட்டா.

26:24.918 --> 26:28.880
நேத்து ராத்திரி அவ வீட்டுக்கு வந்தா,
இன்னைக்கு அது பத்தி ஒரு வீடியோ போட்டிருக்கா.

26:28.881 --> 26:31.591
அது ஆன்லைன்ல இருக்கு,
எனக்கும் ராபர்ட்டுக்கு ஏதாவது உறவு இருக்கான்னு

26:31.592 --> 26:34.552
நிறைய கட்டுரைகளும், கேள்விகளும் நிறைய இருக்கு.

26:34.553 --> 26:37.389
அதனால நாங்க நான்ஸியை கொன்னிருக்கலாம்னு
சொல்றாங்க.

26:43.937 --> 26:47.899
மேரி, உன் கிட்ட ஒரு விஷயத்தை சொல்லல.
ஒரு கடிதம் இருக்கு.

26:47.900 --> 26:53.404
ராபர்ட்டுக்கு டேவிட் கூட இருந்த உறவு
தெரிஞ்சிருக்கு, அவங்க சண்டை போட்டிருக்காங்க.

26:53.405 --> 26:57.159
அவன் வருத்தப்பட்டிருக்கான்,
நான்ஸி பயந்திருக்கான்னு நினைக்கிறேன்…

26:57.743 --> 27:01.037
தெரியல, அவன் அவளுக்கு
ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி இருக்கான்.

27:01.038 --> 27:05.500
அதை பார்த்த தப்பா தெரியுது, ஆனால் அவன்
எதுவும் செய்யலை, அவள ஒண்ணும் பண்ணலைன்னு சொல்றான்.

27:05.501 --> 27:06.584
என்னை மன்னிச்சுடு.

27:06.585 --> 27:09.795
நான் இதை உன் கிட்ட சொல்லியிருக்கணும்,
ஆனால் நான்…

27:09.796 --> 27:12.173
அதை யோசிச்சிட்டிருந்தேன்,
நான் அதை உன் கிட்ட சொன்னா

27:12.174 --> 27:14.259
- நீ வந்து…
- அவன் பொய் சொல்லியிருக்கான்.

27:15.052 --> 27:18.930
டேவிடோட உறவு தனக்குத் தெரியாத மாதிரி
நடிச்சிருக்கான்.

27:18.931 --> 27:19.973
பொய் சொல்லியிருக்கான்.

27:21.141 --> 27:23.560
அதனால நாம அந்தக் கடிதத்தைப் போலீஸ் கிட்ட
எடுத்துட்டு போகணும்.

27:24.228 --> 27:26.354
- முடியாது.
- ஏன் முடியாது?

27:26.355 --> 27:27.523
அது ஆதாரம்.

27:32.069 --> 27:34.278
அது சரியான ஆதாரம். அவன் நான்ஸியை கொன்னிருக்கான்.

27:34.279 --> 27:37.281
- ஆனால் அவன் பண்ணல.
- அது உனக்குத் தெரியாது.

27:37.282 --> 27:39.700
- எனக்குத் தெரியும்.
- குற்றம் செஞ்சவங்க தான் பொய் சொல்லுவாங்க, எல்லி.

27:39.701 --> 27:41.202
இது தப்பா இருக்குன்னு தெரியும்.

27:41.203 --> 27:43.914
தப்பா தெரியுதா, இது கொலைக்கான காரணம்.

27:44.498 --> 27:46.999
கடவுளே, இதனால நீ ஜெயிலுக்குப் போகலாம்,
உனக்குப் புரியுதா?

27:47.000 --> 27:50.878
எங்களுக்கு வக்கீல்கள் இருக்காங்க, அவங்க சரி
பண்ணிடுவாங்க. நான் பண்ணாததுக்கு ஆதாரம் இருக்கு.

27:50.879 --> 27:52.463
நீ ராபர்ட்டோட படுத்திருக்க.

27:52.464 --> 27:56.218
கடவுளே, இந்த வார்த்தையை சொல்றேன்னு
என்னால நம்ப முடியல. நான்…

27:58.178 --> 28:00.304
உனக்கு
அவன் மேல உள்ள மோகம் முடிஞ்சிச்சுன்னு நினைச்சேன்.

28:00.305 --> 28:02.391
அது மோகம் இல்ல.

28:03.350 --> 28:05.434
நாங்க ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற
அக்கறை.

28:05.435 --> 28:07.937
ஆனால் அவன் உன்னைத் தேர்ந்தெடுக்கல, இல்லையா?

28:07.938 --> 28:09.146
அவன் உன்னைத் தேர்ந்தெடுக்கல.

28:09.147 --> 28:10.899
இப்ப அவன் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கான்.

28:11.567 --> 28:13.985
நீ ஏன் ரொம்ப ஒழுக்கம் மாதிரி இது பத்தி பேசுற?

28:13.986 --> 28:15.903
உன் கல்யாணமே ஒரு உறவுல தான் ஆரம்பிச்சது.

28:15.904 --> 28:17.530
- இது ரெண்டும்…
- எனக்கும், அவனுக்கும் நிஜமா…

28:17.531 --> 28:18.865
- …ஒண்ணில்ல.
- …அன்பு இருக்கலாமே?

28:18.866 --> 28:21.367
எனக்கு ஏற்கனவே கோராவைப் பிடிக்கும்.
அவளுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.

28:21.368 --> 28:22.577
வாயை மூடு!

28:22.578 --> 28:24.996
நீ சொல்றது உனக்கே சரின்னு படுதா?

28:24.997 --> 28:27.540
உனக்கும், ராபர்ட்டும் இடையில இருக்கிறது
எதுவும் நிஜமில்ல.

28:27.541 --> 28:30.168
நிஜம்னா உனக்கு என்னன்னே தெரியாது.

28:30.169 --> 28:33.296
தரையில கிடக்கிற துணியும்,
கழுவ வேண்டிய பாத்திரமும் நிஜம்.

28:33.297 --> 28:38.217
டாக்டர்கிட்ட போறது,
காயம், சிராய்ப்பு, தியாகங்கள், இதெல்லாம் நிஜம்.

28:38.218 --> 28:44.640
என் கணவர் இப்ப ஒஹாயோவில வேலைக்கான
இன்டெர்வியூக்கு போயிருக்கார், அது நிஜம்.

28:44.641 --> 28:48.269
அதாவது, நாங்க மொத்தமா அங்க இடமாறி போகணும்.
அது நிஜம்.

28:48.270 --> 28:51.440
நீ வச்சிருக்கிறது இன்னொருத்தியோட கணவனோட
ஒரு லூசுத்தனமான கற்பனை வாழ்க்கை.

28:56.904 --> 28:58.488
நீ ஊரவிட்டு போறியா?

28:59.406 --> 29:00.656
இப்ப அதுவா முக்கியம்?

29:00.657 --> 29:01.741
நீ என்ன சொல்ற?

29:01.742 --> 29:03.075
- நீ என்னோட…
- “உற்ற தோழியா”?

29:03.076 --> 29:04.703
- ஆமா.
- நான்ஸியும் தான்.

29:07.831 --> 29:11.919
எல்லி, நீ அவ கணவன் கூட உறவு வச்சிருக்க.

29:17.508 --> 29:19.050
அவன் உன்னை பயன்படுத்துறான்.

29:19.051 --> 29:20.426
- இல்ல.
- ஆமா.

29:20.427 --> 29:21.928
இல்ல, நீ நினைக்கிறது தவறு.

29:21.929 --> 29:23.012
என் வீட்டை விட்டு வெளிய போ.

29:23.013 --> 29:25.723
மேரி, ப்ளீஸ். உனக்குப் புரியல.

29:25.724 --> 29:28.643
இது வேற.
இது நீ நினைக்கிற மாதிரி இல்ல. இது…

29:28.644 --> 29:29.811
என் வீட்டை விட்டு வெளிய போ.

29:31.980 --> 29:33.272
மேரி?

29:33.273 --> 29:34.358
இப்பவே!

30:19.486 --> 30:21.487
- மிஸ். புஷே.
- சொல்லுங்க.

30:21.488 --> 30:23.406
இது ஒரு கோமாளி ஆட்டமா மாறுது. இல்லையா?

30:23.407 --> 30:24.949
ஆமா.

30:24.950 --> 30:27.034
- உங்கள கூப்பிட்டேன்.
- நிறைய விஷயம் ஓடிட்டிருக்கு.

30:27.035 --> 30:28.870
- உள்ள போகலாமா?
- இல்ல, ஒரு நிமிஷம் தான்.

30:28.871 --> 30:32.624
எங்க உதவி இணைப்புல ஜோர்டன் தாமஸ்னு
ஒருத்தர் வந்தார். உங்ககிட்ட வேலை பார்க்கிறாராம்.

30:33.500 --> 30:34.584
ஆமா.

30:34.585 --> 30:36.961
திருமதி ஹென்னஸி கொலை அன்னைக்கு அவர்
உங்கக் கூட இருந்ததா சொல்றாரு.

30:36.962 --> 30:39.630
உங்க ரெண்டு பேருக்குள்ள தொடர்பு இருக்கிறதா
சொன்னாரு.

30:39.631 --> 30:42.550
அது ஆஃபீஸ் பொறுத்தவரைல தப்பு, இல்லையா?

30:42.551 --> 30:43.801
அது ஒண்ணும் குற்றமில்லையே?

30:43.802 --> 30:45.803
சரி தான், ஆனால் ஒரு பிரச்சினை இருக்கு.

30:45.804 --> 30:50.683
அவர் வாக்குமூலத்தில, நீங்க அவர்
வீட்டுக்கு ராத்திரி 1.00 மணிக்கு வந்ததா சொல்றாரு.

30:50.684 --> 30:54.312
திருமதி ஹென்னஸி கொலை பன்னிரெண்டு மணியளவில
நடந்திருக்குன்னு ஃபாரன்சிக்ஸ் சொல்றாங்க.

30:54.313 --> 30:57.064
திரு. ஹென்னஸி எங்க இருந்தாருங்கிறதுக்கு
சாட்சி யாருமில்ல.

30:57.065 --> 30:59.358
பேச மறுக்கிறாரு. வீட்ல இருந்தேன்னு சொல்றாரு.

30:59.359 --> 31:00.776
நீங்க வீட்ல இருந்தேன்னு சொல்றீங்க.

31:00.777 --> 31:04.488
இப்ப உங்க ரெண்டு பேருக்கும் இடையே
தொடர்பு இருந்ததுன்னு குற்றச்சாட்டு இருக்கு?

31:04.489 --> 31:05.907
நாம இங்கேயே நின்னு,

31:05.908 --> 31:08.451
நான் யார் கூட உறவு வச்சிக்கலாம், கூடாதுன்னு
பேசிகிட்டு இருக்கப் போறோமா?

31:08.452 --> 31:10.828
இல்ல, நான்ஸியோட காதலன்
டேவிடைத் தேடப் போறீங்களா?

31:10.829 --> 31:14.498
திருமதி ஹென்னஸிக்குத் தெரிஞ்சவங்க எல்லார்
கிட்டயும் பேசிட்டோம்.

31:14.499 --> 31:16.292
யாரும் டேவிட் பத்தி கேள்விப்படவே இல்ல.

31:16.293 --> 31:19.212
எனக்குத் தெரிஞ்சு, அவங்களுக்கு காதலன் இருக்கான்னு
முதல்ல சொன்னது நீங்க தான்.

31:19.213 --> 31:21.714
அதனால், ஒண்ணு நீ உங்ககிட்ட இருந்து திசை திருப்ப
அதை பண்ணி இருக்கணும்,

31:21.715 --> 31:25.301
இல்ல, டேவிட்ன்னு தன் பேரை சொல்லிக்கிற
ஆளை நாங்க தேடணும்.

31:25.302 --> 31:27.304
இதுல எது சரி, மிஸ். புஷே?

31:32.559 --> 31:34.602
என்னோட வக்கீல் இல்லாம
நான் எதுவும் பேசக்கூடாதுன்னு

31:34.603 --> 31:36.854
- நினைக்கிறேன்.
- நல்லது.

31:36.855 --> 31:39.608
இந்த நேரத்துல, உங்களுக்கு கண்டிப்பா
ஒரு வக்கீல் வேணும்.

31:53.163 --> 31:54.289
மிஸ். புஷே.

31:58.794 --> 32:00.962
எதிர்பார்த்தது தான்.

32:00.963 --> 32:03.589
- காயப்படுத்தாம உன்னால பேச முடியாது.
- கிட்.

32:03.590 --> 32:05.299
இவ இங்க இருக்கக்கூடாது.
அது உனக்குத் தெரியும்.

32:05.300 --> 32:07.052
உனக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கு.

32:09.596 --> 32:10.847
மன்னிச்சுக்கோ.

32:10.848 --> 32:12.932
ரொம்ப நேரமா இப்படித் தான் போயிட்டிருக்கு.

32:12.933 --> 32:14.101
நாம எங்க போய் பேசலாம்?

32:31.910 --> 32:33.161
கோரா எப்படி இருக்கா?

32:34.204 --> 32:36.747
கோபமா இருக்கா அப்படின்னு சொல்லலாம்.

32:36.748 --> 32:39.209
அவ இன்னும் வீடியோவை எடுக்க மாட்டேன்னு சொல்றா.

32:41.503 --> 32:42.837
நான் அவள கூப்பிடணும்.

32:42.838 --> 32:44.131
வேண்டாம்.

32:44.756 --> 32:47.092
நான் அவகிட்ட எல்லாத்தையும் விளக்குறேன்.

32:47.759 --> 32:49.719
கொஞ்ச நாள் போகட்டும்.

32:49.720 --> 32:53.724
அவ கிட் கூட தங்கியிருக்கா.
இது எல்லாம் அடங்குற வரைக்கும்.

32:54.933 --> 32:56.935
இந்த பருந்துகள் கிட்ட இருந்து
அவளைத் தள்ளி வைக்கணும்.

33:00.105 --> 33:01.106
நீ எப்படி இருக்க?

33:02.149 --> 33:03.358
நீ அதுக்காக வரல.

33:04.109 --> 33:05.360
சரி தான்.

33:06.987 --> 33:09.030
நான் இதை முழுசா யோசிச்சு பார்க்கல,

33:09.031 --> 33:12.074
ஆனால் நாம சேர்ந்து ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்கலாமா?

33:12.075 --> 33:13.743
நாம இந்த வதந்திகளை மறுக்கலாம்.

33:13.744 --> 33:16.704
கண்டிப்பா, கோராவை காயப்படுத்துற மாதிரி
எதுவும் சொல்ல வேண்டாம்.

33:16.705 --> 33:19.165
ஆனால் நான்ஸியைக் கொன்னவன் வெளியில இருக்கான்,

33:19.166 --> 33:22.668
அவனைத் தான் எல்லாரும் நினைக்கணும்
என்கிற உண்மையை மக்கள் நினைக்க வைக்கணும்.

33:22.669 --> 33:24.295
அதுக்கெல்லாம் இப்போ நேரம் கடந்திடுச்சு.

33:24.296 --> 33:25.588
ஏன்?

33:25.589 --> 33:28.591
நம்ம வக்கீல்கள் நம்ம கூட்டு ஸ்டட்மென்டைத் தயாரிக்கலாம்,
அப்போ நமக்கு நேரம் இருக்கும்.

33:28.592 --> 33:31.345
நாம ரெடியாகுற வரைக்கும் நாம
வெளியில போய் நின்னு பேச வேண்டாம்.

33:37.267 --> 33:38.602
என்ன நடக்குது?

33:39.770 --> 33:45.108
உன் கூட, ம், எல்லா தொடர்புகளையும் துண்டிக்கணும்னு
என் வக்கீல்கள் சொல்றாங்க.

33:52.407 --> 33:56.453
நீ அவங்க அறிவுரையைக் கேட்கப் போற?

33:58.872 --> 34:01.375
- இது உன் குடும்பத்தை பத்தின்னா…
- இல்ல.

34:03.919 --> 34:05.337
நேத்து ராத்திரி, நாம…

34:06.171 --> 34:07.255
அது என்ன…

34:07.256 --> 34:08.714
கடவுளே.

34:08.715 --> 34:12.134
நீ அது நிஜம்னு என்னை நம்ப வச்ச.

34:12.135 --> 34:15.721
இத்தனை வருஷம் கழிச்சு நாம…

34:15.722 --> 34:17.265
உன்னை நம்ப வச்ச.

34:17.266 --> 34:18.516
நான் என் மனைவியை இழந்திருக்கேன்.

34:19.101 --> 34:21.060
அது தான் நடந்தது. அவ்வளவு தான்.

34:21.061 --> 34:23.312
இது நியாயமில்ல. நான்… நான் அங்க இருந்தேன்.

34:23.313 --> 34:25.774
- இது… நமக்குள்ள ஏதோ இருக்கு.
- நாமன்னு சொல்றதுல ஒண்ணுமில்ல.

34:30.152 --> 34:32.572
எனக்கு என்னோட கடிதம் திருப்பி வேணும்.

34:34.366 --> 34:38.285
சே. நீ தான் குடிக்காம இருக்கியா?

34:38.286 --> 34:40.706
உன் வாயில விஸ்கி நாத்தம் தெரியுது.

34:54.553 --> 34:58.640
எங்க அப்பா இறந்த அன்னைக்கு
நான் என் அம்மாவோட ஆஸ்பத்திரியில இருந்தேன்.

35:00.184 --> 35:01.935
அவங்க கண்கள்ல கண்ணீரே இல்ல.

35:03.478 --> 35:07.064
எங்க அம்மா சொன்னாங்க. அழறது ஒரு இன்பம்.

35:07.065 --> 35:10.818
இழப்பையும் துக்கத்தையும் பெண்களான நாம
ஏத்துக்கணும்.

35:10.819 --> 35:14.239
நாம முடிஞ்ச எல்லாத்தையும் கிரகிச்சுக்கணும்.

35:15.365 --> 35:17.910
ஆனால் நான் இன்னும் எவ்வளவைத் தான் தாங்குறது?

35:25.959 --> 35:27.252
ஹே.

35:36.929 --> 35:37.930
ஹே.

35:45.979 --> 35:46.980
சாரி.

35:50.442 --> 35:52.653
“உன்னை ரொம்ப பயமுறுத்துனதுக்கு மன்னிச்சுடு.”

35:54.780 --> 35:55.781
சே.

35:58.242 --> 36:02.996
ஒவ்வொரு வருஷமும்
அப்பா நினைவு நாள் அன்னைக்கு

36:03.705 --> 36:06.959
நாங்க ரெண்டு பேரும் மீன் பிடிக்க
ஒரு பயணத்துக்கு ராபர்ட் திட்டமிடுவான்.

36:09.419 --> 36:14.090
அவனை ஞாபகப்படுத்தத் தேவையில்ல.
அவன் வருவான், நாங்க போவோம்.

36:14.091 --> 36:19.887
இத நாங்க, ஒரு பத்து வருஷம் பண்ணிருப்போம்னு
நினைக்கிறேன்.

36:19.888 --> 36:23.517
அதாவது அந்த சமயம் எல்லாரும்
அப்பா பத்தி பேசுறதை நிறுத்திட்டாங்க.

36:25.269 --> 36:28.814
நான்ஸியும் கண்டுக்கல.

36:29.982 --> 36:32.651
அவ பரிதாபப்பட்டு அதை ஊக்குவிச்சிருக்கலாம்னு…

36:34.111 --> 36:35.404
நினைக்கிறேன்.

36:37.030 --> 36:40.742
அவளோட வாழ்க்கையில ஒரு குட்டி துண்டை,
ஒரு நாளைக்கு மட்டும் எனக்கு

36:41.243 --> 36:42.870
இரவல் கொடுக்கிற மாதிரி இருந்துச்சு.

36:47.958 --> 36:53.964
என்னோட 18 வயசில இருந்து
ராபர்ட் ஹென்னஸியை நான் விரும்புறேன்.

36:55.340 --> 36:56.967
இப்ப முடிஞ்சது.

36:58.260 --> 36:59.761
அது முடிஞ்சது.

37:10.981 --> 37:13.692
அவன் இதை பண்ணான்னு நினைக்கிறியா?

37:15.110 --> 37:19.489
ஒண்ணுமே நடக்காத மாதிரி
கோரா கிட்ட பொய் சொல்றதைப் பார்த்தேன்.

37:20.532 --> 37:23.034
ஈஸியா பண்ணான்.

37:23.035 --> 37:26.121
ரொம்ப இயல்பா வந்தது அவனுக்கு.

37:27.831 --> 37:32.127
சரி, இப்ப நீ எல்லாத்தையும் என் கிட்ட சொல்லு.

37:33.545 --> 37:38.425
நான்ஸி இறந்த அன்னைக்கு
நீ செய்ததை ஒண்ணு விடாம சொல்லு.

37:42.930 --> 37:44.805
சாப்பாடு 9.00 மணிக்கு முடிஞ்சது.

37:44.806 --> 37:50.102
அந்த சமயத்துல, நான் வரேன்னு
ஜோர்டன் தாமஸூக்கு மெசேஜ் பண்ணேன்.

37:50.103 --> 37:52.314
திரு. தாமஸ் என் ப்ராஜெக்ட் மானேஜரா
வேலை பார்க்கிறார்.

37:52.814 --> 37:58.569
கடந்த ஆறு மாசமா நாங்க கமிட் ஆகாம
உறவில இருக்கோம்.

37:58.570 --> 38:01.406
இருந்தோம். இப்ப இல்ல.

38:01.907 --> 38:05.953
தாமஸ் வீட்டுக்கு 10.15 ஒட்டி போனேன்.
ஆனால் உள்ள போகல.

38:06.828 --> 38:09.830
மார்கஸ் சிம்ப்ஸன் கிட்ட இருந்து
ஒரு மெசேஜ் வந்தது.

38:09.831 --> 38:13.836
மார்கஸ் என் நெருங்கின தோழி மேரி சிம்ப்ஸனோட மகன்.
அவனுக்கு ஒரு பிரச்சினை.

38:14.670 --> 38:15.795
அவனுக்கு என் உதவி தேவைப்பட்டது.

38:15.796 --> 38:17.630
அவன் சில புக்கிகள் கிட்ட பணம் வாங்கியிருந்தான்.

38:17.631 --> 38:19.131
அவனை கூட்டி வரப் போனேன்.

38:19.132 --> 38:21.134
அந்த முகவரியை நான் உங்களுக்குத் தரேன்.

38:21.760 --> 38:24.053
அதுக்குப் பிறகு, நான் திரு. தாமஸோட
வீட்டுக்குப் போனேன்.

38:24.054 --> 38:26.139
அப்போ ராத்திரி சுமார் 1.00 மணி இருக்கும்.

38:28.267 --> 38:34.146
ஒரு சில மணி நேரம் கழிச்சு,
ராபர்ட் ஹென்னஸி, நான்ஸி பத்தி கூப்பிட்டார்.

38:34.147 --> 38:35.940
மிச்சமெல்லாம் ஏற்கனவே போலீஸ் பதிவுல இருக்கு.

38:35.941 --> 38:37.024
ஹாரிஸ், ரைட் & ஆலென்.

38:37.025 --> 38:40.778
ஆனால் மார்கஸ் சிம்ப்ஸன்
தண்டனை காலத்தில இருக்கான்.

38:40.779 --> 38:43.489
இதனால அவனுக்கு பிரச்சினை வரலாம்.

38:43.490 --> 38:48.077
எனக்கான ஆதாரத்துக்கு எதை வேணா பயன்படுத்துங்க,
ஆனால் தயவு செஞ்சு அவன் பெயரை விட்ருங்க.

38:48.078 --> 38:53.916
அவனை இதுக்குள்ள இழுத்தா,
அது மேரியை நாசப்படுத்திடும்.

38:53.917 --> 38:56.878
அது பிரச்சினை இல்ல,
அவன் பெயரை ரகசியமா வச்சிக்கிறோம்.

38:56.879 --> 38:57.963
சரி.

39:01.341 --> 39:02.717
இப்ப என்ன நடக்கும்?

39:02.718 --> 39:04.344
நாங்க உங்க வாதத்தை தயார் பண்றோம்.

39:04.887 --> 39:06.679
நம்ம பிரைவெட் இன்வெஸ்டிகேட்டர்
குற்றம் நடந்த இடத்தில கிடைச்ச

39:06.680 --> 39:08.639
விஷயங்களை ஆராய்ந்து பார்த்து ஆரம்பிப்பாங்க.

39:08.640 --> 39:10.726
இதனால, போலீஸூக்கு என்ன தெரியும்னு
நமக்குத் தெரியும்.

39:13.353 --> 39:16.939
உத்தம மனிதாபிமானிகள் அவங்க கீழ
வேலைப் பார்க்குறவங்க கிட்ட உறவு வச்சிக்க மாட்டாங்க.

39:16.940 --> 39:18.233
ஆமா, நீ பிஸியா இருந்திருக்க.

39:19.902 --> 39:21.110
உன்னை நினைச்சா பெருமையா இருக்கு.

39:21.111 --> 39:22.653
இப்ப நீ கிண்டல் பண்ற.

39:22.654 --> 39:23.864
இல்ல, உண்மையா சொல்றேன்.

39:24.448 --> 39:25.574
நீ ஓடல.

39:26.158 --> 39:27.618
நீ எங்கள உள்ள அனுமதிச்சிருக்க.

39:31.705 --> 39:34.123
இப்ப உன் கேள்வியைப் பத்தி யோசிட்டிருக்கேன்.

39:34.124 --> 39:35.208
எந்த கேள்வி?

39:35.209 --> 39:36.502
நான் பண்ணதிலேயே மோசமான விஷயம்.

39:37.002 --> 39:38.836
நிறைய குடிச்சதா?

39:38.837 --> 39:40.171
நீ தான் குடிக்க மாட்டியே?

39:40.172 --> 39:45.761
நான் பண்ண தப்புகள்
ஒரு பெரிய பட்டியலே இருக்கு, எல். நீ…

39:47.513 --> 39:48.847
பெரும்பாலான மக்கள விட நல்லவ.

39:49.473 --> 39:53.810
நீ ஒண்ணும் சுத்தம் இல்ல,
நீ பண்ணதும் துரதிஷ்டவசமானது.

39:56.396 --> 40:00.107
ஒண்ணு உறுதியா தெரியும், உன் தோழிகள்
உன் நல்ல குணங்களை வெளி கொண்டு வராங்க.

40:00.108 --> 40:06.823
நீ எவ்வளவு நான்ஸியை நேசிச்சேன்னு
அவளுக்கு நிச்சயம் தெரியும்.

40:09.493 --> 40:11.620
அதை சொன்னதுக்கு நன்றி.

40:16.250 --> 40:18.377
- ஏர்போர்ட் போயிட்டு கூப்பிடுறேன்.
- சரி.

40:26.635 --> 40:30.472
நான்ஸி எனக்கு எவ்வளவு முக்கியம்னு நான் அவகிட்ட
சொல்லியிருக்கேன். அடிக்கடி சொல்லியிருக்கேன்.

40:31.932 --> 40:34.977
ஆனால் நேசம் என்கிறது நாம என்ன பேசுறோம்
அப்படிங்கிறதில்ல. நாம என்ன செய்றோம் அப்படிங்கிறது.

40:35.602 --> 40:40.274
அன்னைக்கு ராத்திரி நான்ஸிக்கு
நான் போதுமானதா செய்யல.

40:43.026 --> 40:45.654
நான்ஸி இறப்பதற்கு
மூன்று மணி நேரத்துக்கு முன்

40:46.238 --> 40:47.488
நல்லவேளை நீ இன்னும் இங்க இருக்க.

40:47.489 --> 40:48.614
நீ போயிட்டேன்னு நினைச்சேன்.

40:48.615 --> 40:51.702
என்னால… என்னால இதை தனியாச் செய்ய முடியாது.

40:53.287 --> 40:54.538
நீ என் கூட வரியா?

40:55.289 --> 40:57.832
உன் காதலனோட முறிக்கிறதுக்கா?

40:57.833 --> 40:59.125
- என்ன விளைாடுறியா?
- அது…

40:59.126 --> 41:01.502
அது நீ நினைக்கிற மாதிரி இல்ல.
அதை விட மோசமானது.

41:01.503 --> 41:02.670
என்னால தனியா பண்ண முடியாது.

41:02.671 --> 41:05.631
நீ இதை விட சவாலான விஷயங்களைச்
சமாளிச்சிருக்க.

41:05.632 --> 41:06.925
உனக்கு ஒண்ணும் ஆகாது.

41:08.260 --> 41:10.303
உன்னால இது முடியும். ரொம்ப நன்றி.

41:10.304 --> 41:11.597
நாளைக்கு என்னைக் கூப்பிடு.

41:17.019 --> 41:18.312
நீ என்ன பண்ற?

41:18.812 --> 41:20.646
ஏன் இப்படி என் கிட்ட மோசமா நடந்துக்குற?

41:20.647 --> 41:21.939
நான் மோசமா நடக்கல.

41:21.940 --> 41:26.402
இவனைப் பத்தி நீ பேசுறதை ரொம்ப நாளா
கேட்டுட்டிருக்கேன். போதும்.

41:26.403 --> 41:27.778
மேரி கூப்பிட்டா என் கூட வருவா.

41:27.779 --> 41:29.989
- அப்படின்னா, மேரியைக் கூப்பிடு.
- நீ தான் எனக்கு வேணும்.

41:29.990 --> 41:32.992
நீ உன் வாழ்க்கையைச் சரி பண்ணணும்.

41:32.993 --> 41:35.204
உனக்கு அழகான ஒரு திருமண வாழ்க்கை இருக்கு.

41:35.829 --> 41:37.288
அதுக்குத் தான் இப்படி பேசுறியா?

41:37.289 --> 41:39.624
- வேண்டாம்.
- வாவ், எல்லி.

41:39.625 --> 41:41.376
எனக்குப் பரிதாபமா இருக்கு.

41:42.419 --> 41:44.086
எது பரிதாபம் தெரியுமா?

41:44.087 --> 41:49.259
உன் கணவனுக்கு துரோகம் பண்ணிட்டு,
அதை சொல்றதுக்கு பயப்படுறது.

41:50.552 --> 41:51.719
என் காரிலிருந்து இறங்கு.

41:51.720 --> 41:53.263
- தயவு செஞ்சு என்னோட வா.
- முடியாது.

41:53.889 --> 41:55.848
- தயவு செஞ்சு வா.
- காரிலிருந்து கீழ இறங்கு.

41:55.849 --> 41:57.476
- தயவு செஞ்சு வா.
- காரிலிருந்து கீழ இறங்கு!

42:31.802 --> 42:33.011
எனக்கு டேவிட் யாருன்னு தெரியும்.

43:24.229 --> 43:26.231
தமிழாக்கம்
மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்
