WEBVTT

00:52.970 --> 00:56.639
ராபர்ட்டுக்கு இப்ப
ஞாபகம் இருக்குமான்னு கூட தெரியல.

00:56.640 --> 00:59.184
ஆனால் நான் தான் அவனை முதல்ல பார்த்தேன்.

00:59.935 --> 01:01.811
பல வருஷங்களுக்கு முன்னால,
அந்த ராத்திரி,

01:01.812 --> 01:06.024
நல்ல போதையில,
சமையலறை கேபினெட்ல சாஞ்சி நின்னுட்டு…

01:07.317 --> 01:08.569
அவனைச் சிரிக்க வச்சேன்.

01:09.152 --> 01:13.866
அது ரொம்ப யதார்த்தமாவும், இயல்பாவும் இருந்துச்சு.

01:15.617 --> 01:17.202
அவனுக்கும் அப்படித் தோணியிருக்கும்னு தெரியும்.

01:18.495 --> 01:21.665
ஆனால் அந்த நேரத்துல அவ பக்கத்தில வந்தா,
ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்தி வச்சேன்.

01:22.291 --> 01:24.543
"ராபர்ட், இது நான்ஸி."

01:40.976 --> 01:42.269
என்னது அது?

01:46.648 --> 01:48.025
கடவுளே.

02:29.525 --> 02:31.443
ஆரமின்ட்டா ஹாலின்
புத்தகத்தைத் தழுவியது

02:42.454 --> 02:44.373
அது அவளைப் போலவே இல்ல.

02:45.290 --> 02:48.794
அது கண்டிப்பா நான்ஸி தான்,
ஆனால் பார்க்க அவளைப் போல இல்ல.

02:50.963 --> 02:53.130
நான் டாவீடா இருக்காதுன்னு சொன்னேன்.

02:53.131 --> 02:56.301
இது ஏதோ சரியாப் படலன்னு தோணுச்சு.

02:58.011 --> 02:59.012
இது சரியா படல.

02:59.638 --> 03:01.556
இப்ப எல்லாரும் இதை பார்ப்பாங்க,

03:01.557 --> 03:04.141
என்னென்னவோ நினைப்பாங்க,
ஆனால் என்னால எதுவும் பண்ண முடியாது…

03:04.142 --> 03:05.602
தெரியும், ஆனால்…

03:07.980 --> 03:13.735
உனக்குத் தோணுறதை நீ என்கிட்ட சொல்லலாம்,
அது உனக்குத் தெரியும்.

03:15.529 --> 03:16.613
இல்ல…

03:19.658 --> 03:21.951
அவ வேறு யாருக்கூடவோ சேர்ந்து இருக்கிறதை
நினைக்கிறதே கஷ்டமா இருக்கு.

03:21.952 --> 03:23.328
இப்ப அதைப் பார்க்கும் போது…

03:26.999 --> 03:29.751
அவனை…
அவனைக் கைது பண்ணப் பிறகு

03:31.545 --> 03:35.716
கொஞ்சம் நிம்மதியா இருக்கும்னு நினைச்சேன்.

03:40.762 --> 03:41.763
ஆனால் அப்படி இல்ல.

03:43.515 --> 03:45.142
உனக்கு எதுவும் தோணுதா?

03:47.102 --> 03:49.271
இல்ல. தோணல.

03:50.189 --> 03:54.359
இதெல்லாம் தாண்டி…
நான் இன்னும் அவளை நேசிக்கிறேன்.

03:57.404 --> 03:59.573
அவ திரும்பக் கிடைக்க
எதையும் இழக்கத் தயாரா இருக்கேன்.

04:01.200 --> 04:02.284
அது முட்டாள்தனமா இல்ல…

04:03.785 --> 04:04.786
இல்ல.

04:07.497 --> 04:08.999
அது முட்டாள்தனம் இல்ல.

04:16.089 --> 04:17.591
வீடு வந்துருச்சு.

04:22.554 --> 04:23.847
- ஹே.
- சொல்லு.

04:27.226 --> 04:29.770
இன்னைக்கு என் கூட வந்ததுக்கு நன்றி.

04:30.604 --> 04:34.024
அவளுக்கு முக்கியமான ஒரு இடத்துக்குப்
போனது நல்லா இருக்கு.

04:34.775 --> 04:36.777
அது கொஞ்சம் நேரமா இருந்தாலும் கூட.

04:48.080 --> 04:49.540
- நன்றி.
- நன்றி.

04:55.712 --> 04:56.713
சே.

04:58.757 --> 04:59.758
ஹே.

05:01.885 --> 05:07.849
என் மெசேஜைப் பார்த்துட்டு ஏன் பதில் போடலைன்னு
கேட்க வந்தேன். ஆனால்… வாவ்.

05:07.850 --> 05:09.350
சாரி.

05:09.351 --> 05:11.519
இல்ல, வேற ஏதாவது வேலை இருந்திருந்தா
சொல்லி இருக்கலாமே?

05:11.520 --> 05:14.272
ஒரு நண்பரோடு பாலேக்குப் போறதுக்கு
ஏற்கனவே பேசியிருந்தோம்.

05:14.273 --> 05:16.566
அப்புறம், என்… என்னோட ஃபோன்
சைலென்ட்ல இருந்துச்சு.

05:16.567 --> 05:18.694
நீ என்னை சீரியஸா எடுத்துக்குற மாதிரி தெரியல.

05:19.444 --> 05:23.531
எனக்கு சீரியஸா கொண்டு போக இஷ்டமில்லைன்னு
உனக்குத் தெரியும் தானே, ஜே.

05:23.532 --> 05:25.116
நான் அப்படிச் சொல்லல.

05:25.117 --> 05:28.828
நீ என்னை மதிக்கிறதில்ல,
ஒரு மனுஷனா மதிக்கிறதில்ல.

05:28.829 --> 05:29.913
இல்ல.

05:30.539 --> 05:33.249
ஜே, நான் இப்ப நல்ல மனநிலையில இல்ல.

05:33.250 --> 05:35.877
நான் இன்னைக்குப் பத்தி சொல்லல, சரியா?

05:35.878 --> 05:37.879
செயின்ட் பேட்ரிக்ஸ் டே பார்ட்டி அன்னைக்கு, நீ…

05:37.880 --> 05:40.131
சொன்ன நேரத்திலிருந்து
ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்த.

05:40.132 --> 05:41.299
உன் தோழி இறந்த அன்னைக்கு.

05:41.300 --> 05:43.634
ஒன்பது மணிக்கு மெசேஜ் பண்ண.
வந்தது ஒரு மணிக்கு.

05:43.635 --> 05:46.470
- அதுக்கு என்ன அர்த்தம்?
- இல்ல, பத்து மணிகிட்ட வந்துட்டேன்.

05:46.471 --> 05:48.639
- இல்ல, நிச்சயமா அத விட லேட்டா தான் வந்த.
- இல்ல.

05:48.640 --> 05:50.392
எல், நான் முழிச்சிட்டிருந்தேன்.

05:52.811 --> 05:55.271
இதைப் பத்தி நாம தெருவில வச்சு
பேசக்கூடாது.

05:55.272 --> 05:57.107
நாம மேல போகலாமா?

05:57.816 --> 06:00.109
போய் ஒரு ஒயின் பாட்டிலத் திறக்கலாமா?

06:00.110 --> 06:03.113
அதுக்குப் பிறகு வளர்ந்தவங்க மாதிரி பேசலாம்.

06:04.198 --> 06:06.365
- என்ன?
- ஒயின் சொன்னேல?

06:06.366 --> 06:09.286
ஒயினுக்காகத் தான் வரியா?
அந்த வளர்ந்தவங்கன்னு சொன்னதுக்காக இல்ல?

07:33.078 --> 07:34.079
குட் மார்னிங்.

07:34.788 --> 07:37.248
- ஹே.
- பால் சேர்க்கல. சர்க்கரை சேர்க்கல.

07:37.249 --> 07:39.584
காபி பவுடரும், சுடு தண்ணியும் மட்டும் தான்.

07:39.585 --> 07:41.085
- உனக்குப் பிடிச்ச மாதிரி.
- நன்றி.

07:41.086 --> 07:42.087
ம்.

07:43.547 --> 07:44.922
நீ வேலைக்கு லேட்டா போகப் போற.

07:44.923 --> 07:46.842
என்னோட பாஸ் புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்.

07:47.968 --> 07:50.052
ஓ, வாவ்.

07:50.053 --> 07:52.805
உனக்கு மீன் பிடிக்கிறது பிடிக்கும்னு
எனக்குத் தெரியாது. பிடிக்குமா என்ன?

07:52.806 --> 07:53.891
பிடிக்கும்னு கிடையாது.

07:55.767 --> 07:59.770
சரி, உனக்குக் கத்துக்கணும்னா, எனக்கு
க்ரிகரி ஏரியில ஒரு அருமையான இடம் தெரியும்…

07:59.771 --> 08:02.315
ஜே, நீ உண்மையிலேயே வேலைக்குக் கிளம்பு.

08:02.316 --> 08:05.484
கண்டிப்பா. நான்… நான் போகணும்.

08:05.485 --> 08:08.404
நான் போறேன். உன்னை… உன்னை அங்க பார்க்குறேன்.

08:08.405 --> 08:09.406
சரி.

08:22.044 --> 08:24.921
- சாக்லெட் எனக்கு.
- எனக்கு தான் சாக்லெட்.

08:24.922 --> 08:26.088
இல்ல நான் தான் முதல்ல சொன்னேன்.

08:26.089 --> 08:28.675
சாரி, செல்லம்.
முதல்ல கேட்டவங்களுக்குத் தான் கொடுக்கணும்.

08:29.259 --> 08:33.221
இருபது நிமிஷத்தில பையை எடுத்து ரெடியாகணும்.
எல்லி ஆன்ட்டி கிட்ட என்ன சொல்லணும்?

08:33.222 --> 08:34.805
- தேங்க் யூ, எல்லி ஆன்ட்டி.
- வெல்கம்.

08:34.806 --> 08:36.516
- தேங்க யூ.
- சர்க்கரை அதிகமா இருக்கா?

08:36.517 --> 08:37.643
அதிகமா இருந்தா நல்லது தான்.

08:38.393 --> 08:39.726
நீ என் அம்மாவா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

08:39.727 --> 08:40.811
சரி, பாலே பத்தி

08:40.812 --> 08:42.187
- என்ன சொல்ல வந்த?
- அவ்வளவு தான்.

08:42.188 --> 08:44.273
இப்போ என்ன, நான் திரும்ப காரை எடுக்கக் கூடாதா?

08:44.274 --> 08:45.441
இது தான் நடக்கும், மார்கஸ்.

08:45.442 --> 08:47.944
நீ என் கார்ல உட்கார்ந்து ரகசியமா வேப் பண்ணா
அது திரும்பவும் நடக்கும்.

08:47.945 --> 08:49.028
- நான் வேப் பண்ணல.
- ஹே, மக்களே.

08:49.029 --> 08:50.112
- ஹே, எல்.
- எலனார்.

08:50.113 --> 08:51.864
அம்மா, கொஞ்சம் அப்பாகிட்ட பேசுங்கம்மா.

08:51.865 --> 08:53.241
- எனக்கு அந்த ஜம்பர் கேபிள் வேணும்.
- செல்லம்.

08:53.242 --> 08:55.576
- அப்பாவும் நீயும் கொஞ்சம் வெளிய போறீங்களா?
- நாம போய் ஜம்பர் கேபிள் தேடலாம்.

08:55.577 --> 08:57.995
- இந்த தொந்தரவுக்கு மன்னிச்சுடு.
- இல்ல, பரவாயில்ல.

08:57.996 --> 09:00.039
இப்ப நீ சொல்றத முழுசா கேட்கிறேன்.

09:00.040 --> 09:01.958
- நான் இப்ப…
- இந்த இடத்தை கிளியர் பண்றேன்.

09:01.959 --> 09:05.044
- ஐயோ, சாரி.
- இல்ல, பரவாயில்ல. நான் பார்த்துக்குறேன்.

09:05.045 --> 09:06.463
நான் பார்த்துக்குறேன்.
எல்லி, நான் பார்த்துக்குறேன்…

09:11.134 --> 09:12.970
- என்னது இது?
- அது ஒண்ணுமில்ல.

09:13.470 --> 09:15.596
ஒண்ணுமில்லையா? இது போலீஸ் ரிப்போர்ட்.

09:15.597 --> 09:17.349
லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறை
துணை அறிக்கை

09:18.016 --> 09:19.684
அது பப்ளிக் ரெக்கார்ட்.

09:19.685 --> 09:21.727
அது சரி, ஆனால் அதை ஏன் நீ வச்சிருக்க?

09:21.728 --> 09:24.647
ஏன்னா எனக்கு ஏதோ சரியாப் படல.

09:24.648 --> 09:26.274
டாவீட் கைது செய்யப்பட்டது தெரியும்,

09:26.275 --> 09:28.776
ஆனால் அவன் கைது செய்யப்பட்டது திருட்டுக்கு,
கொலைக்கு இல்ல.

09:28.777 --> 09:32.071
அதுவும் சம்பந்தமில்லாத ஒருத்தனோட
வாக்குமூலத்தில.

09:32.072 --> 09:33.781
ஏதோ தப்பா இருக்கு.

09:33.782 --> 09:37.785
செய்திகள் இதை நான்ஸி கூட சம்பந்தப்படுத்த
முயற்சிக்குது, ஆனால் சம்பந்தம் இல்ல.

09:37.786 --> 09:40.914
ஆக, நீ இதுல ரொம்ப நேரம் செலவழிச்சிட்டிருக்க?

09:41.540 --> 09:45.002
அப்படி பேசாத. நான் ஏதோ பாவப்பட்டவள்
மாதிரி நினைக்கிற.

09:46.211 --> 09:48.087
ஏற்கனவே இங்க அப்படி தான் என்னைப் பார்க்கிறாங்க.

09:48.088 --> 09:49.089
சரி.

09:52.634 --> 09:53.760
நான்ஸி

10:01.268 --> 10:04.229
நன்றி.
என்னால அதை பண்ண முடியல.

10:05.480 --> 10:06.856
புரியுது.

10:06.857 --> 10:10.735
அவளோட பழைய மெசேஜ்களைப் பார்த்துட்டே இருக்கேன்,
என்னால டெலீட் பண்ணவும் முடியல.

10:10.736 --> 10:11.737
ஆமா.

10:12.988 --> 10:15.281
- இது தான் உன் காலை சாப்பாடா?
- எனக்கு அவ்வளவா பசிக்கிறதே இல்ல.

10:15.282 --> 10:16.283
ஆல்டடேனா ஃபாரெவர்

10:16.867 --> 10:18.202
வேற ஏதாவது போயிட்டிருக்கா?

10:19.161 --> 10:23.122
ஏற்கனவே நிறைய ஓடிட்டிருக்கு
அதுக்கு மேல உன்னை தொந்தரவு பண்ண விரும்பல.

10:23.123 --> 10:24.124
என்னது அது?

10:26.877 --> 10:31.589
இந்த வார இறுதியில கோராவோட பிறந்தநாளுக்கு
என்ன பண்ணப் போறேன்னு கிட் இன்னைக்குக் கேட்டா.

10:31.590 --> 10:33.090
அதை நான் மறந்தே போயிட்டேன்.

10:33.091 --> 10:35.927
இப்ப நான் சைலன்ட் டிஸ்கோவுக்கு ஒரு DJ-வை
தேடிட்டிருக்கேன்.

10:35.928 --> 10:37.720
அது அவளுக்குப் பிடிக்குமான்னு கூட தெரியல.

10:37.721 --> 10:40.890
"பதினேழு வயது பிறந்தநாள் பார்ட்டின்னு"
கூகுள் பண்ணி பார்த்திட்டிருக்கேன்.

10:40.891 --> 10:43.644
பார்த்து. உன்னைத் தப்பான லிஸ்ட்ல
சேர்த்திடப் போறாங்க.

10:44.353 --> 10:47.105
ரொம்ப நன்றி. இப்ப நான் ஒரு முட்டாளாவும்
ஒரு அயோக்கியனாவும் தோணுது.

10:50.984 --> 10:53.779
எந்த மாதிரியான ஒரு அப்பா
தன்னோட மகளோட பிறந்தநாளை மறப்பான்?

10:54.279 --> 10:55.613
என்னால ஏத்துக்கவே முடியல.

10:55.614 --> 10:57.865
- நான்ஸிக்கு கணவனா இருப்பவன்.
- ஆமா.

10:57.866 --> 10:59.825
அவ இருக்கும் போது நீ இது மாதிரி எதுக்கும்
கவலைப்பட தேவையே இருந்திருக்காது.

10:59.826 --> 11:01.869
சரிதான், ஆனால் நான் அவள மாதிரி
கொஞ்சமாவது மாற முயற்சிக்கணும்.

11:01.870 --> 11:04.706
இது அவளோட முதல் பிறந்தநாள், அதாவது…

11:08.752 --> 11:10.753
நான்ஸி எப்பவும் அதை அழகா ஆக்கிடுவா.

11:10.754 --> 11:13.047
நான் பெரிசா ஒண்ணும் பேசப் பேறதில்ல,
என்னை நம்புங்க.

11:13.048 --> 11:16.884
பதினாறு வருஷத்துக்கு முன்னால, என் வாழ்க்கையிலேயே
மிகப் பெரிய பரிசு எனக்குக் கிடைச்சது.

11:16.885 --> 11:20.096
இன்னைக்கு, நாம அதைக் கொண்டாடுறோம்.

11:20.097 --> 11:23.599
அதனால், தாமதிக்காம,
இதோ பிறந்தநாள் பொண்ணு.

11:23.600 --> 11:25.394
என்னோட செல்லக்குட்டி, கோரா.

11:28.438 --> 11:29.815
எஞ்சாய் பண்ணு.

11:37.948 --> 11:39.366
ஸ்வீட் 16

11:56.884 --> 11:58.552
நான் அதைச் சொதப்ப விரும்பல.

12:00.179 --> 12:01.888
நான் உதவி பண்றேன்.

12:01.889 --> 12:05.641
நான்ஸியோட கொண்டாடங்கள்ல
நான் நிறைய கூட இருந்திருக்கேன்.

12:05.642 --> 12:08.436
அதனால என்னால அதை பண்ண முடியும்னு தோணுது.

12:08.437 --> 12:11.772
- உனக்குக் கஷ்டமில்லையா?
- இது கோராவுக்கு. அதனால எதுவும் பண்ணலாம்.

12:11.773 --> 12:14.942
- இதுல கஷ்டமே கிடையாது.
- ஓ. நன்றி.

12:14.943 --> 12:17.028
என்ன? சரி.

12:17.029 --> 12:19.865
- நீ இது வரைக்கும் ஏற்பாடு பண்ணதை அனுப்பு.
- ம்… சரி.

12:26.330 --> 12:29.833
டிடெக்டிவ் கேன்ஸ், இந்த ஏரியாவில
வீடு ஏதாவது வாங்கப் போறீங்களா?

12:30.417 --> 12:32.753
நான் வாங்குற சம்பளத்துல அது முடியாது.

12:33.670 --> 12:34.755
இது ரொம்ப அழகா இருக்கு.

12:35.297 --> 12:37.382
- நன்றி.
- முனைகள் அருமையா இருக்கு.

12:38.008 --> 12:42.095
ஒரு வின்டேஜ் 450 SL காரை நிறைய பேர்
மாத்தி பெயின்ட் பண்ணிப் பார்த்ததில்ல.

12:42.721 --> 12:45.515
அதானே, பணம் பிரச்சினையா இல்லேன்னா,

12:45.516 --> 12:48.644
ஒரு கிளாஸிக் மின்ட் நிலைமையில இருக்கிற
கார்ல கை வைக்கிறது தப்பில்ல.

12:50.270 --> 12:52.272
- ஒவ்வொருத்தரோட பார்வையும் மாறுபடும்.
- ஆமா.

12:52.981 --> 12:53.982
நான் கிளம்பட்டுமா?

12:54.566 --> 12:56.610
நீங்க தப்பா எடுத்தக்கலைன்னா…

12:58.445 --> 13:00.029
நீங்க இந்த படத்தைப் பார்த்திருப்பீங்க.

13:00.030 --> 13:04.659
- அது தான் எல்லா செய்திகள்லேயும் வந்ததே.
- ஆமா. இந்த படத்தை ஆராய்ஞ்சு பார்த்ததுல,

13:04.660 --> 13:10.582
திருமதி ஹென்னஸியோட முகத்தில இருக்கிற பார்வையை
என்னால கவனிக்காம இருக்க முடியல.

13:11.542 --> 13:15.878
இல்லயா? ரொம்ப நிம்மதியா,
யதார்த்தமா இருக்காங்க.

13:15.879 --> 13:17.380
ஆனால், அது தான் இடிக்குது.

13:17.381 --> 13:21.843
ஒரு பாஸடீனா மேட்டுக்குடிக்கும் இந்த கூட்டத்துக்கும்
எப்படி ஒத்து போச்சு?

13:21.844 --> 13:24.263
அவ எப்போதும் மேட்டுக்குடி கிடையாது.

13:25.055 --> 13:26.848
ராபர்ட்க்கு முன்னால
அவ வாழ்க்கை வேற மாதிரி இருந்தது.

13:26.849 --> 13:28.267
என்ன மாதிரியான வாழ்க்கை?

13:29.059 --> 13:30.351
ஒரு கடினமான வாழ்க்கை.

13:30.352 --> 13:34.272
தண்ணியடிக்கும் அம்மா, கொடுமைபடுத்துற சித்தப்பா,
ஒரு ட்ரெயிலர் பார்க்குல வீடு.

13:34.273 --> 13:36.358
அது சுலபமில்ல.

13:36.859 --> 13:39.695
ஆமா. அவங்களோட பழைய கதையைப் பார்த்தோம்.

13:40.737 --> 13:42.613
அது இன்னும் இந்த கதையை விசித்திரமாக்குது.

13:42.614 --> 13:45.199
- ஏன்?
- அப்படிப்பட்ட ஒரு பெண்,

13:45.200 --> 13:49.204
அவங்களுக்கும், ராபர்ட், ராபர்ட்டோட குடும்பத்துக்கும்
எப்படி ஒத்து போச்சு?

13:50.581 --> 13:51.915
உங்கக் கூடவும் தான்.

13:52.708 --> 13:55.960
என்னோட நட்பு விசாரணையின் கீழ இருக்கா?

13:55.961 --> 13:58.380
இல்ல.

13:59.089 --> 14:01.383
அந்த திருட்டு குற்றச்சாட்டு கதையா?

14:02.092 --> 14:03.676
நீங்க இதையெல்லாம் கேக்குறீங்கன்னா,

14:03.677 --> 14:05.721
டாவீட் மேல உங்களுக்கு
எந்த பிடியும் இல்லேன்னு தோணுது.

14:06.388 --> 14:08.390
வேற யாரையாவது சந்தேகப்படுறீங்களா?

14:10.767 --> 14:12.186
உங்க நேரத்துக்கு நன்றி.

14:50.182 --> 14:52.351
- சே.
- கண்ணாடியை இறக்குங்க!

14:55.562 --> 14:58.481
என் பின்னால வர உங்களுக்கு உரிமை இல்ல.
நீங்க தொல்லை பண்றீங்க.

14:58.482 --> 15:01.234
உங்க பேரும், பேட்ஜ் நம்பரும் சொல்லுங்க.

15:01.235 --> 15:02.236
நான் போலீஸ் இல்ல.

15:03.237 --> 15:04.821
நான் டானவன் கிட்ட வேலை பார்க்கிறேன்.

15:09.868 --> 15:10.869
அது சரி.

15:12.913 --> 15:14.998
நீங்க போர் நடக்கும் பகுதிக்கு
எப்பவாவது போயிருக்கீங்களா?

15:15.624 --> 15:18.084
உயிர் சேதம், அது நம்மள மாத்திடும்.

15:18.085 --> 15:20.711
அதனால, அவங்கள அகதிகளா விண்ணப்பிக்கச் சொன்னேன்.

15:20.712 --> 15:24.132
அப்புறம், நாம பேசுனோமே, அது மாதிரி
கொஞ்சம் அரசாங்கத்தில சில பேர்கிட்ட பேசினேன்…

15:24.716 --> 15:29.262
இப்போ அவங்க நல்லா போயிட்டிருக்குற
ஒரு டென்டல் கிளினிக் வச்சிருக்காங்க.

15:29.263 --> 15:32.807
அவங்க பொண்ணும் போன வருஷம்
வாஸர்ல காலேஜ் முடிச்சது.

15:32.808 --> 15:34.059
அற்புதம்.

15:35.269 --> 15:39.273
நம்ம மனசு நம்மகிட்ட பேசும் போது,
நாம அதைக் காது கொடுத்து கேட்கணும்.

15:40.190 --> 15:43.776
பெண்களே, மன்னிக்கணும்,
எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு.

15:43.777 --> 15:45.779
உங்கள நான் கொஞ்ச நேரம் கழிச்சு
ஸ்விம்மிங் பூல் பக்கமா பார்க்கிறேன்.

15:49.199 --> 15:52.619
அழகு. பெண்கள்கிட்ட பேசுறதுக்கு என் கதைகளைப்
பயன்படுத்துறியா?

15:53.245 --> 15:54.329
அது ஒரு நல்ல கதை.

15:55.038 --> 15:57.456
அம்மாவும், நானும் உன் சின்ன தொண்டு நிறுவனத்துக்குப்
பணம் போடுறோம்.

15:57.457 --> 15:59.041
அதனால அது என் கதையும் கூட.

15:59.042 --> 16:01.920
"சின்ன தொண்டு நிறுவனமா"? நன்றி, டானி.

16:02.838 --> 16:05.256
அதோட, அவங்க பொண்ணு போனது
ஒஹாயோ மாநிலத்துக்கு.

16:05.257 --> 16:06.424
வாஸர், சொல்றதுக்கு நல்லா இருந்துச்சு.

16:06.425 --> 16:10.428
- வாவ்.
- நீ ஓடுறேன்னு, என் ஆளு வின்ஸ்டன் சொன்னான்.

16:10.429 --> 16:12.346
ஆமா, தேவை வரும் போது.

16:12.347 --> 16:15.308
சில குடும்பங்கள்ல,
யாருடைய நண்பராவது இறந்தா,

16:15.309 --> 16:18.645
பூங்கொத்து அல்ல பூக்கூடை கொடுப்பாங்க,
அல்லது கொஞ்சம் கட்டியாவது பிடிப்பாங்க.

16:19.396 --> 16:20.522
அது எனக்குப் பழக்கமில்ல.

16:21.190 --> 16:24.066
அது நல்ல வளர்ப்பு மற்றும் பணக்காரங்களுக்குள்ள
சாபம்னு சொல்வாங்க.

16:24.067 --> 16:26.152
- அது சரி.
- கட்டிப்பிடிக்கிறதில்ல.

16:26.153 --> 16:27.987
அது தேவையில்லாத உணர்ச்சியின்
வெளிப்பாடு. தெரியுமா?

16:27.988 --> 16:31.282
ஆமா. உன் ஆளு வின்ஸ்டன் என் பின்னால வரதால,

16:31.283 --> 16:34.203
நான் பாதுகாப்பா, நல்லா இருக்கேன்னு
உனக்குத் தெரியும்.

16:34.870 --> 16:36.413
அதனால அவங்கள வீட்டுக்குப் போகச் சொல்லு.

16:38.457 --> 16:39.750
எனக்கும் ஆசை தான்.

16:40.501 --> 16:42.168
உன்னை பொத்தி பாதுகாக்கிறதை விட
எனக்கு வேற வேலை நிறைய இருக்கு.

16:42.169 --> 16:44.337
- ஆனால்…
- ஆனால் சோகம் தாக்கும் போது,

16:44.338 --> 16:46.798
நீ என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியாது.

16:47.591 --> 16:49.383
- இது நியாயமில்ல.
- இல்லையா?

16:49.384 --> 16:50.468
இல்ல.

16:50.469 --> 16:52.553
- அப்பா இறந்தப்போ…
- இல்ல. அதை பேசாத.

16:52.554 --> 16:54.764
அதை இதுக்குள்ள கொண்டு வராத.

16:54.765 --> 16:57.601
அப்போ நான் இருந்த சூழ்நிலை வேற.

16:59.853 --> 17:01.145
அப்படியா?

17:01.146 --> 17:03.564
ஆதாரம் இல்லாம உன்கிட்ட வந்து நின்றிருந்தா,
நீ இல்லன்னு மறுத்திருப்ப.

17:03.565 --> 17:05.650
இது ரெண்டு பழைய நண்பர்கள்
துக்கத்தை எதிர்கொள்கிறோம்.

17:05.651 --> 17:06.901
துக்கமா? நீங்க ரெண்டு பேரும்

17:06.902 --> 17:09.444
- நல்லா சிரிச்சிட்டிருக்கீங்க.
- நாங்க நேசிச்ச ஒருத்தரோட ஆசைக்கு

17:09.445 --> 17:10.864
மதிப்புக் கொடுத்தோம்.

17:12.406 --> 17:15.827
எல், உனக்கு உடைஞ்ச பொம்மையை சரி பண்ண
பிடிக்கும்னு, உனக்கும், எனக்கும் தெரியும்.

17:16.494 --> 17:18.412
அதிலும், ஒரு குறிப்பிட்ட அழகான
வெள்ளை தோல் பொம்மையை.

17:18.413 --> 17:20.748
- நீ கறுப்பர் மாணவர் யூனியன்ல அல்லது ஏதாவது…
- என்ன?

17:20.749 --> 17:22.415
- கருப்பின பெண்கள் குழுவில் சேர்ந்திருந்தா…
- ஆரம்பிச்சிட்டியா?

17:22.416 --> 17:23.793
…நீ ஒரு ஜமால் அல்லது ஒரு டெரல் கூட இருந்திருப்ப.
ஆனால் இப்போ

17:23.794 --> 17:26.379
- எங்க மாட்டி இருக்கன்னு உனக்கே தெரியும்.
- நிறுத்து.

17:26.380 --> 17:28.005
ரொம்ப மோசமாப் பேசுற.

17:28.006 --> 17:32.176
ராபர்ட்ன்னு வரும்போது அவன் பண்ற தப்பெல்லாம்
உனக்குத் தெரியாது, அப்படிதானே?

17:32.177 --> 17:33.637
நீ எப்பவுமே அப்படித் தான்.

17:35.222 --> 17:36.223
முடிஞ்சதா?

17:36.807 --> 17:38.809
என் பின்னால வரதை நிறுத்து.

18:00.539 --> 18:02.540
ராபர்ட் - போலீஸ் இங்க வந்திருக்காங்க.
இடத்தையே புரட்டிப் போடுறாங்க.

18:02.541 --> 18:06.044
கொஞ்சம் ஓவரா இருக்கு. இங்க வரியா?

18:47.878 --> 18:48.879
அவங்க கிட்ட வாரண்ட் இருக்கு.

18:49.796 --> 18:51.965
எதுக்கு வாரண்ட்?

18:52.758 --> 18:54.300
நான்ஸியோட பொருட்கள் கொஞ்சம்.

18:54.301 --> 18:55.885
எங்க நிதி ஆவணங்கள்.

18:55.886 --> 18:59.389
என் மனைவியைக் கொன்னதால எனக்கு ஏதாவது
பணம் கிடைக்குமான்னு பார்க்க விரும்புறாங்க.

19:00.098 --> 19:01.349
கடவுளே.

19:01.350 --> 19:03.060
என்னோட லேப்டாப்பை எடுத்துட்டாங்க.

19:03.644 --> 19:05.811
கிட்-ஐ கூப்பிலாம்னு இருந்தேன்,
ஆனால் அவ என் அப்பாவைக் கூப்பிட்டிருப்பா.

19:05.812 --> 19:08.148
அவரு எல்லாத்தையும்
ஒரு பெரிய குழப்பம் ஆக்கியிருப்பாரு.

19:10.400 --> 19:12.527
அவங்க பண்ண வேண்டியதைப் பண்றாங்கன்னு
நினைக்கிறேன், ராபர்ட்.

19:12.528 --> 19:14.779
- அவங்க எதையும் கண்டுப்பிடிக்கப் போறதில்ல.
- கண்டிப்பா.

19:14.780 --> 19:17.281
நான்… நான் அந்த அர்த்தத்தில சொல்லல.

19:17.282 --> 19:18.449
சரி தான். சாரி.

19:18.450 --> 19:20.536
எனக்கு… எனக்கு இந்த மொத்த…

19:22.955 --> 19:26.250
இப்போ பிறந்தநாள் கொண்டாடுறதுக்கு
சரியான நேரமில்லன்னு நினைக்கிறேன்.

19:29.378 --> 19:30.754
நான் ஒத்துக்க மாட்டேன்.

19:32.172 --> 19:35.175
நாம தொடர்ந்து வாழணும், தெரிஞ்சுக்கோ.

19:35.968 --> 19:37.761
கோரா பாவம், அவளுக்கு இயல்பான நிலைமை வேணும்.

19:38.679 --> 19:39.763
உனக்கும் தான்.

19:41.390 --> 19:43.392
அதோட, நான்ஸியும் அதையே தான் விரும்பியிருப்பா.

19:48.897 --> 19:50.899
சர்வதேச
மீட்பு + நிவாரணம்

19:52.943 --> 19:56.946
லைபீரியாவில உள்ள நம்ம குழுவில
யாரையாவது சேர்க்கப் பேறோம்னா,

19:56.947 --> 19:58.699
நான் செல்ஸீயைப் பரிந்துரைப்பேன்.

19:59.449 --> 20:00.784
அவளா வந்து கேட்டாளா?

20:01.285 --> 20:03.077
இல்ல, ஆனால் அவ கொஞ்சம் வேலை செஞ்சிருக்கா.

20:03.078 --> 20:04.412
ராபர்ட்
டாவீடை வெளியே விட்டுட்டாங்க.

20:04.413 --> 20:06.582
அவளுக்கு அங்க நல்ல தொடர்புகள் இருக்கு,
அது நமக்கு உதவும்னு நினைக்கிறேன்.

20:09.960 --> 20:12.379
எல்… எல்.

20:13.797 --> 20:15.381
சொல்லு. சாரி.

20:15.382 --> 20:16.842
ஆமா. பரவாயில்ல.

20:17.551 --> 20:19.427
உனக்கு ஓக்கேன்னா,
நான் அவள கூப்பிட்டு பேசுறேன்.

20:19.428 --> 20:20.429
கண்டிப்பா.

20:22.389 --> 20:23.472
ஹே, ஜே.

20:23.473 --> 20:25.141
இது நடக்கப் போறதில்ல,

20:25.142 --> 20:29.980
ஆனால் போலீஸ் விசாரணை
கொஞ்சம் சிக்கலாயிட்டிருக்கு, அதனால…

20:31.523 --> 20:35.818
யாராவது என்னைப் பத்தி உன்கிட்ட கேட்டா…

20:35.819 --> 20:38.238
தெரியும். நான் பார்த்துக்குறேன்.

20:39.031 --> 20:40.531
நான் எதுவும் சொல்ல மாட்டேன், சரியா?

20:40.532 --> 20:41.700
இல்ல, நீ சொல்லலாம்.

20:42.618 --> 20:44.536
நான் உன் வீட்டல இருந்தேன்னு
நீ அவங்க கிட்ட சொல்லலாம்.

20:48.916 --> 20:51.000
- நாம ரகசியமா பண்றோம்னு நினைச்சேன்.
- ஆமா.

20:51.001 --> 20:55.630
ஆனால், யாராவது கேட்டா,
அப்ப நாம உண்மையைச் சொல்லலாம்.

20:55.631 --> 20:56.881
- எல்லி.
- சொல்லு.

20:56.882 --> 20:58.049
ஒரு நிமிஷம் பேசலாமா?

20:58.050 --> 20:59.134
கண்டிப்பா.

20:59.885 --> 21:01.719
நாம அப்புறமா பேசலாமா? சாரி.

21:01.720 --> 21:03.222
- ஓ, சரி. கண்டிப்பா.
- நன்றி.

21:05.766 --> 21:07.141
என்னாச்சு? உனக்கு ஒண்ணுமில்லையே?

21:07.142 --> 21:08.143
என்னோட அம்மா.

21:09.019 --> 21:10.937
அவங்கள யாராவது போலீஸ் ஸ்டேஷனிலிருந்து
கூட்டிட்டு வரணும்.

21:10.938 --> 21:12.689
என்ன? என்ன சொல்ற?

21:24.117 --> 21:25.619
பாஸடீனா காவல் துறை

21:27.621 --> 21:29.664
நான் ஒரு வக்கீலை கூப்பிட்டிருக்கேன்.
அவர் வராரு.

21:29.665 --> 21:32.375
அவர் வர வரைக்கும் அவ எதுவும் பேச மாட்டா.

21:32.376 --> 21:33.668
நாங்க அவங்கள கைது பண்ணல.

21:33.669 --> 21:36.128
அவங்கள யாராவது எங்க கிட்ட இருந்து
கூட்டிட்டுப் போகணும்.

21:36.129 --> 21:37.505
எனக்குப் புரியல.

21:37.506 --> 21:41.300
உங்க தோழி என்னோட ஆஃபிஸர்களைத்
தொல்லைப் பண்றதை பார்த்தேன்.

21:41.301 --> 21:42.718
- என்ன?
- போன வாரம் மட்டும்,

21:42.719 --> 21:46.889
அவங்க பப்ளிக் ரெக்கார்டைப் பார்க்க
20 முறை கோரிக்கை வச்சிருக்காங்க.

21:46.890 --> 21:48.850
இன்னைக்கு அதைத் தாண்டி போயிட்டாங்க.

21:48.851 --> 21:50.853
அடுத்த முறை, விலங்கு மாட்ட வேண்டியது தான்.

21:57.192 --> 21:59.569
- நீ என்ன எழவைப் பண்ண?
- அது முக்கியமில்ல.

21:59.570 --> 22:01.738
இல்ல, அது ரொம்ப முக்கியம்.

22:03.198 --> 22:04.783
- நான் கெட்ட வார்த்தை போட்டுட்டேன்.
- என்ன?

22:05.534 --> 22:07.785
- ஒரு ஸ்டேப்லரை தூக்கி எறியும் போது.
- கடவுளே.

22:07.786 --> 22:09.370
- சுவத்து மேல தான்.
- சரி.

22:09.371 --> 22:11.081
- யாரு மேலயும் இல்ல.
- உனக்கு ஒண்ணுமில்லையே?

22:11.707 --> 22:14.542
அவங்க இவ்வளவு நேரம் அந்த டாவீட் விஷயத்தில
நேரத்தை வீணடிச்சிட்டாங்க.

22:14.543 --> 22:17.879
ஆனால், நான் எடுத்துக் கொடுத்த
துப்பு வச்சு எதுவும் பண்ண மாட்டேங்கிறாங்க.

22:17.880 --> 22:21.007
நம்ம காலேஜ் இயர்புக்கல உள்ள எல்லா
டேவிடையும் வட்டமிட்டு காண்பிச்சேன்.

22:21.008 --> 22:23.801
அவ சமூக ஊடகங்கள்ல ஃபாலோ பண்ற எல்லா
டேவிட்களையும் கண்டுப்பிடிச்சேன்.

22:23.802 --> 22:27.221
டெக்சஸில் ஒரு பூக்கடை வச்சிருக்கிற
வில்லியம் டேவிட் கூட கண்டுப்பிடிச்சேன்.

22:27.222 --> 22:29.932
பின்ட்ரெஸ்ட்ல அவ அவனோட படத்துக்கு
லைக் போட்டிருந்தா…

22:29.933 --> 22:31.350
- பைத்தியக்காரத்தனமா இருக்கலாம், ஆனால்…
- ஆமா,

22:31.351 --> 22:33.478
- இதை கேட்கிறதுக்கு என் மேல கோப்படாத.
- என்ன?

22:34.771 --> 22:36.189
நீ அந்த மருந்தை எடுக்குறியா…

22:36.190 --> 22:37.565
இல்ல. எல். நிறுத்து.

22:37.566 --> 22:40.651
நான் கடந்த ஆறு மாசத்தில ஒரு ஆஸ்பிரின்
கூட எடுத்துக்கல, சரியா?

22:40.652 --> 22:41.653
சரி.

22:43.447 --> 22:45.115
என்னை மன்னிச்சிடு,
என்னால இதை கைவிட முடியல.

22:47.409 --> 22:49.411
ஆனால் உன் கிட்ட சொல்லி இருக்கா, எல்.

22:50.537 --> 22:53.207
என் கிட்ட மறைச்சிட்டா.
நீ விஷயங்களைக் கேட்டிருக்க…

22:54.875 --> 22:56.043
இப்ப என்னால கேட்கவே முடியாது.

22:56.877 --> 22:58.211
என் கிட்டயும் மறைச்சிட்டா.

22:58.212 --> 23:00.214
எனக்குத் தெரியாதது நிறைய இருக்கு.

23:02.132 --> 23:05.177
உன்னைப் போல என்னாலயும் வேற எதிலேயாவது
கவனத்தை திசை திருப்ப முடிஞ்சா நல்லா இருக்கும்.

23:06.887 --> 23:08.388
வேலையையும், ராபர்ட்டையும் சொல்றேன்.

23:11.016 --> 23:15.394
இன்னைக்கு ராத்திரி நாம நிம்மதியா
நேரத்தைக் கழிக்கணும்னு தோணுது, சரியா?

23:15.395 --> 23:16.479
நான் கொஞ்சம் சாப்பாடு வாங்கிட்டு,

23:16.480 --> 23:18.564
அதை உனக்கும், உன் குழந்தைகளுக்கும்,
ஹாவர்டுக்கும் கொண்டு வரப் போறேன்.

23:18.565 --> 23:20.984
நாம சும்மா ஜாலியா இருக்கப் போறோம்.

23:21.610 --> 23:23.194
- ம். சரி.
- சரியா? சரி.

23:23.195 --> 23:24.779
ஜாலியா இருக்கப் போறோம்.

23:24.780 --> 23:26.197
ஆமா.

23:26.198 --> 23:27.491
ஜாலியா இருக்கலாம்.

23:49.012 --> 23:51.098
ஹே, நான் கொஞ்சம் பொருட்களை வைக்க…

23:51.682 --> 23:53.934
ராபர்ட். ஹே.

23:55.102 --> 23:56.270
ராபர்ட்!

23:59.147 --> 24:01.358
- ஹே.
- ஹே.

24:02.067 --> 24:03.652
உணர்ச்சிகளுக்கு
ஒரு வடிகால் மாதிரி தெரியுது.

24:04.361 --> 24:05.529
ஆமா.

24:06.446 --> 24:10.366
குடிக்கணும்னு தோணும் போதெல்லாம்,
இங்க வந்து பந்தை அடிக்க ஆரம்பிச்சுடுவேன்.

24:10.367 --> 24:12.160
எவ்வளவு நேரமா இங்க இருக்க?

24:14.872 --> 24:16.999
குடிக்கணும்னு ரொம்ப தோணுச்சு.

24:18.417 --> 24:19.876
ஒண்ணும் பிரச்சினை இல்லையே?

24:19.877 --> 24:21.335
போலீஸ் ஏதாச்சும் சொன்னாங்களா?

24:21.336 --> 24:23.212
நான்ஸியோட பெட்டிகள் சிலதைக்
கொண்டு வந்து போட்டாங்க.

24:23.213 --> 24:24.506
அது தவிர, ஒண்ணுமில்ல.

24:25.132 --> 24:26.800
அது சரி, உன் அண்ணன் ஏதாவது சொன்னானா?

24:28.177 --> 24:29.595
என்ன விளையாடுறியா?

24:30.512 --> 24:31.846
அவன் என்னைக் கூப்பிட்டப்போ
ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு.

24:31.847 --> 24:33.015
அவன்… அவன் கிட்ட பேசி பல வருஷமாச்சு.

24:33.599 --> 24:36.143
அவனுக்கு… அவனுக்கு என்ன வேணுமாம்?

24:36.977 --> 24:39.270
- அனுதாபங்கள் சொன்னான்.
- அது சரி.

24:39.271 --> 24:42.190
- அவனுக்கு என்னை எப்பவுமே பிடிக்காது.
- அட.

24:42.191 --> 24:43.859
அவன்… அவன் என்கிட்ட சொன்னதை
உன்கிட்ட எப்போவாவது சொன்னேனா?

24:44.776 --> 24:46.861
- இல்ல.
- அது மீன்பிடி பயணம் போன அன்னைக்கு.

24:46.862 --> 24:49.155
உங்க அப்பாவோட. முதல் வருஷம்.
காலேஜ் விடுமுறையின் போது.

24:49.156 --> 24:50.281
ஆமா.

24:50.282 --> 24:52.074
நாம போய் சேர்ந்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு,

24:52.075 --> 24:55.995
டானவன் என்னைத் தனியா கூட்டிட்டு போய்,
உன் பக்கம் நெருங்கவே கூடாதுன்னு சொன்னான்.

24:55.996 --> 24:57.372
அதான் காதல் கத்திரிக்கான்னு.

24:58.290 --> 25:00.082
அவன் ஏன் அப்படிப் பண்ணணும்?

25:00.083 --> 25:02.835
அவன் நிச்சயமா ஒரு அண்ணனா
அப்படிப் பண்ணியிருப்பான்.

25:02.836 --> 25:04.254
அவனைத் தப்பு சொல்ல மாட்டேன்.

25:04.796 --> 25:06.506
சரி, நான் குளிக்கப் போறேன்.

25:06.507 --> 25:07.508
நீ இங்க இருப்பியா?

25:08.091 --> 25:09.718
- தெரியல.
- சரி.

25:24.775 --> 25:26.443
நாம என்ன யுகத்தில வாழ்ந்திட்டு
இருக்கோம்னு நினைக்கிற?

25:28.320 --> 25:30.613
இவ்வளவு நேரம் நான் வெயில்ல இருந்தேன்.
எனக்கு ஒண்ணுமே புரியல.

25:30.614 --> 25:32.031
இது என்ன இருண்ட காலமா?

25:32.032 --> 25:35.618
நான் யாரை பார்க்கணும், பார்க்கக் கூடாதுன்னு
நீ முடிவு எடுக்கிறதுக்கு?

25:35.619 --> 25:38.496
நீயும், அம்மாவும் என்ன நினைச்சாலும்,

25:38.497 --> 25:41.290
நான் வளர்ந்தவ., குழந்தையில்ல.

25:41.291 --> 25:43.960
என்னை மதிக்கிற, என்னை நம்பி உள்ளவங்க
நிறைய பேர் இருக்காங்க.

25:43.961 --> 25:47.130
எனக்கு என்ன வேணும், நான் என்ன பண்ணணும்
அப்படின்னு நான் பொறுப்பா முடிவு எடுக்குறேன்.

25:48.257 --> 25:49.258
சரி.

25:50.259 --> 25:51.927
எல்லாம் சரி, கொஞ்சம் உட்கார்ரியா?

25:52.469 --> 25:54.596
இப்படி பதட்டப்படுற மாதிரி என்ன நடந்துச்சு?

25:55.556 --> 25:56.640
நீ ஏன் ராபர்ட்டை கூப்பிட்ட?

25:58.976 --> 26:01.144
என்னா வேகம்?
அப்ப நீங்க ரெண்டு பெரும் நல்லா பேசுறீங்க, இல்ல?

26:02.479 --> 26:06.440
அதோட, அவனை நீ முதன்முதல்ல பார்த்தப்ப
நீ என்ன சொன்னேன்னும் சொன்னான்.

26:06.441 --> 26:08.944
அவன் என் கூட பழகக்கூடாதுன்னு நீ சொன்னதை.

26:09.736 --> 26:11.154
அது எப்பவோ நடந்தது.

26:11.989 --> 26:13.197
ஏன் அப்படிச் சொன்ன?

26:13.198 --> 26:14.365
அட, எல். ஏன்னு நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும்.

26:14.366 --> 26:17.619
இல்ல, எனக்குத் தெரியாது.
அது என்னன்னு இப்ப சொல்லு.

26:18.203 --> 26:19.204
சரி.

26:21.874 --> 26:22.875
எனக்குத் தெரியும்.

26:24.418 --> 26:29.255
நீங்க ரெண்டு பேரும் புத்திசாலி, அக்கறை உள்ளவங்க,
ஒரே எண்ணம் கொண்டவங்க.

26:29.256 --> 26:33.677
ஒரு வெற்றிடத்தில,
இந்த உலகத்தில வேற யாருமே இல்லாத பட்சத்தில…

26:34.803 --> 26:38.098
நீங்க ரெண்டு பேரும் மிகச் சிறந்த
கலப்பின தம்பதிகளா இருந்திருப்பீங்க.

26:39.224 --> 26:41.310
- ஆனால் அப்படி ஒரு உலகம் இல்லாததால…
- உலகம் இல்ல.

26:42.060 --> 26:44.478
- அவனோட குடும்பம்.
- இல்ல, அவன் குடும்பத்தைப் பத்தி

26:44.479 --> 26:47.356
- உனக்கு எதுவும் தெரியாது.
- ஹென்னஸி குடும்பம் பரம்பரை பணக்காரங்க,

26:47.357 --> 26:49.066
ரொம்ப உயர் வர்க்கம்.

26:49.067 --> 26:53.613
அவங்களைப் பொறுத்தவரையில, அவங்க யாருக்கும்
பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல.

26:53.614 --> 26:56.200
டாவீடைக் கைது பண்ணதுக்கு
யாரு பின்னால வேலை பார்த்தாங்கன்னு நினைக்கிற?

26:56.992 --> 26:59.702
அந்த மாதிரி பண்றது ஹென்னஸி குடும்பத்துக்கு
கை வந்த கலை.

26:59.703 --> 27:01.787
குடும்பத்துல யாருக்காவது ஒண்ணுன்னா
சேர்ந்து வருவாங்க.

27:01.788 --> 27:04.458
இல்ல. நீ பேசுறது அபத்தமா இருக்கு.

27:05.000 --> 27:06.834
நான்ஸியை ராபர்ட் கொல்லல.

27:06.835 --> 27:09.337
அவளுக்கு ஒரு கள்ளக்காதலன் இருந்தான்.
அவன் பெயர் டேவிட்.

27:09.338 --> 27:10.922
டேவிட் தான் அவளைக் கொன்னான்.

27:10.923 --> 27:14.383
- டேவிட் பத்தி ராபர்ட் கண்டுப்பிடிச்சிருக்கலாம்.
- அவனுக்கு டேவிட் பத்தி தெரியாது.

27:14.384 --> 27:16.552
நான் சொல்ற வரைக்கும் அவனுக்கு
அந்த உறவு பத்தியே தெரியாது.

27:16.553 --> 27:18.680
அதுவும் நான் சொல்ற சமயம்
நான்ஸி ஏங்கனவே செத்துப் போயிருந்தா.

27:19.473 --> 27:20.682
ஒரு நிமிஷம் பொறு. நீ…

27:22.935 --> 27:26.729
ராபர்ட் கிட்ட அவன் மனைவி தப்பு பண்றான்னு
சொன்னியா?

27:26.730 --> 27:27.731
ஆமா.

27:28.524 --> 27:30.107
ஏன்னா அவன் ரொம்ப கவலையா இருந்தான்.

27:30.108 --> 27:32.401
போலீஸை கூப்பிடுறதா இருந்தான்.
எனக்கு உதவி பண்ணணும்னு தோணுச்சு.

27:32.402 --> 27:36.240
நீ இப்ப சமீபத்துல பண்றதெல்லாம்
ராபர்ட்டுக்கு உதவுறது தான்னு தோணுது.

27:38.700 --> 27:40.535
அவனுக்கு ரெண்டாம் பட்சமா நீ இருக்க விரும்புற.

27:40.536 --> 27:44.455
நீ என்ன பேசுறேன்னு உனக்குத் தெரியல.

27:44.456 --> 27:45.707
- தெரியலையா?
- இல்ல.

27:58.637 --> 28:00.638
அம்மா ஜெயிலுக்குப் போனதை என்னால நம்ப முடியல.

28:00.639 --> 28:04.225
ஜெயிலுக்குப் போகல.
ஒத்துழையாமையை காண்பிச்சேன்.

28:04.226 --> 28:06.353
அதுக்கு நம்ம எல்லாருக்குமே உரிமை இருக்கு.

28:09.356 --> 28:11.357
ஆனால் உங்களைப் பயமுறுத்துனதுக்கு
என்னை மன்னிச்சிடுங்க.

28:11.358 --> 28:12.942
- நான் பயப்படல.
- அது சரி.

28:12.943 --> 28:13.944
அப்பா தான் பயந்தாங்க.

28:19.032 --> 28:21.200
என்ன? நான் இன்னும் முடிக்கல.

28:21.201 --> 28:22.493
இங்க எல்லா முடிஞ்சுச்சுன்னு நினைக்கிறேன்.

28:22.494 --> 28:24.370
இல்ல, யாருக்காவது பாத்திரம் கழுவ
எனக்கு உதவ வரணுமா?

28:24.371 --> 28:25.496
- இல்ல!
- இல்ல.

28:25.497 --> 28:26.873
ஹே, ஹே. இல்ல, இல்ல…

28:26.874 --> 28:28.375
இங்க… ஜூனி இங்க வா.

28:28.917 --> 28:30.919
- நான் உதவுறேன்.
- நன்றி.

28:32.629 --> 28:33.630
அவங்க பயந்து போய் தான் இருந்தாங்க.

28:34.214 --> 28:36.257
அவங்க சொல்ல விரும்பல,
ஆனால் பயந்து இருந்தாங்க.

28:36.258 --> 28:39.428
ஒண்ணுமே சொல்லாம நீ போயிட்ட.
அப்புறம் போலீஸ் கிட்ட இருந்து ஃபோன் வருது.

28:43.098 --> 28:44.516
உனக்கு அவ எவ்வளவு முக்கியம்னு
எனக்குத் தெரியும்.

28:45.392 --> 28:46.727
ஆனால், இந்த குடும்பமும் உனக்கு முக்கியம் தானே?

28:48.604 --> 28:50.898
அவங்க… அவங்க இன்னும் இங்க இருக்காங்க.
நீ அவங்களுக்கு வேணும்

28:51.481 --> 28:53.567
- நீ எங்களுக்கு வேணும்.
- எனக்கு எப்படி அதை…

28:54.109 --> 28:56.236
எனக்கு எப்படி அதை விட்டு வரதுன்னு தெரியல,
சரியா?

28:58.822 --> 29:02.242
உன் உதவிக்கும், நூடுல்ஸூக்கும், நன்றி, எலனார்.

29:03.827 --> 29:04.870
பரவாயில்ல.

29:17.799 --> 29:19.175
அவன் கவலைப்படுறது சரிதான்.

29:19.176 --> 29:20.552
தெரியும், தெரியும்.

29:22.179 --> 29:24.932
சரி, நான் சொல்றதைப் பொறுமையா கேளு.

29:26.767 --> 29:27.850
என்னது?

29:27.851 --> 29:31.313
நான் டாவீடோட முகவரியை கண்டுப்பிடிச்சிட்டேன்.

29:32.940 --> 29:35.775
- ஐயோ.
- நாம வெறும் அவளோட தோழிகள் என்கிறதுக்காக

29:35.776 --> 29:38.945
அவங்க நமக்கு பதிலே சொல்ல மாட்டேங்கிறாங்க.
உனக்கு கோபம் வரல?

29:38.946 --> 29:40.863
- கண்டிப்பா வருது.
- அவன் அவள வரைஞ்சிருக்கான்.

29:40.864 --> 29:42.490
அவ கூட பார்ட்டியில இருந்திருக்கான்.

29:42.491 --> 29:45.117
என்ன நடந்ததுன்னு அலனுக்கு தெரிஞ்சிருக்கலாம்.

29:45.118 --> 29:47.162
நாம விசாரணையில் சும்மா தலையிட முடியாது.

29:51.667 --> 29:53.085
அவ திரும்ப பேச மாட்டேங்கிறா.

29:54.253 --> 29:55.546
யாரு?

29:56.421 --> 30:00.259
யூடியூபில ஒரு துக்க ஆலோசகர் ஒருத்தி இருக்கா.

30:02.010 --> 30:06.515
இறந்து போன நம்ம சொந்தங்கள் கிட்ட
அவ பேச சொல்றா.

30:07.474 --> 30:08.975
நான் அதை முயற்சி பண்ணிட்டிருக்கேன்.

30:08.976 --> 30:12.186
வீட்டில யாரு இல்லாதபோது அல்லது
தூங்கும் போது.

30:12.187 --> 30:14.022
இல்லேன்னா என்னைப் பைத்தியம்னு நினைப்பாங்க.

30:15.607 --> 30:17.358
நான் அவகிட்ட பேசுறேன்.

30:17.359 --> 30:21.320
ஆர்டீக்கு இன்னொரு பல்லு விழுந்ததை அவகிட்ட சொன்னேன்.

30:21.321 --> 30:24.658
ஹாவர்டுக்கு புது வேலை கிடைக்கலாம்னு சொன்னேன்…

30:27.452 --> 30:28.620
ஆனால் அவ பதில் சொல்ல மாட்டேங்கிறா.

30:34.042 --> 30:35.377
அவ திரும்பிப் பேச மாட்டேங்கிறா.

30:39.256 --> 30:41.091
எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு.

30:43.177 --> 30:44.178
தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணு.

30:54.855 --> 30:55.938
ஹலோ.

30:55.939 --> 30:57.815
என்னை தனியா விடுறீங்களா?

30:57.816 --> 31:01.569
சார், நாங்க நிருபர்கள் இல்ல,
போலீஸ்காரங்களும் இல்ல.

31:01.570 --> 31:03.613
நாங்க நான்ஸியோட தோழிகள்.

31:03.614 --> 31:05.032
நாங்க உங்க கிட்ட பேச விரும்புறோம்.

31:06.074 --> 31:07.575
இங்கிருந்து போங்க.

31:07.576 --> 31:08.701
இல்ல.

31:08.702 --> 31:10.871
நாங்க போக மாட்டோம்.

31:11.788 --> 31:14.333
- எங்கள உள்ள விடுங்க. ப்ளீஸ்.
- மேரி.

31:15.000 --> 31:16.792
உங்களுக்கு என்ன பைத்தியமா?

31:16.793 --> 31:19.505
ப்ளீஸ். அவங்க எங்க தோழி.

31:21.340 --> 31:22.341
ப்ளீஸ்.

31:54.581 --> 31:58.126
ஒரு ஓவிய சேகரிப்பாளர் கிட்ட
என் ஓவியத்தைப் பார்த்து, என்கிட்ட அவ வந்தா.

31:58.710 --> 32:02.380
தங்களோட உண்மையான உருவத்தை வரையணும்னு
நினைக்கிற வெள்ளைக்கார பெண்கள்ல

32:02.381 --> 32:06.259
அவளும் ஒருத்தின்னு நினைச்சேன்.

32:06.260 --> 32:07.553
ஆனால், சில ஓவியங்களுக்குப் பிறகு,

32:08.720 --> 32:10.721
அவ வித்தியாசமான ஒருத்தின்னு
தெளிவா தெரிஞ்சது.

32:10.722 --> 32:13.057
அவள் தன்னோட வடுக்களை வரையணும்னு சொன்னா.

32:13.058 --> 32:15.601
அது அவளால நடந்த ஒரு விபத்துல
ஏற்பட்டதுன்னு சொன்னா.

32:15.602 --> 32:18.229
வடுக்கள் அவளோட தப்புன்னு சொன்னாளா?

32:18.230 --> 32:20.106
அது நிச்சயமா அவளோட தப்பு இல்ல.

32:20.107 --> 32:25.111
டாவீட், ஃபோட்டோவ பார்க்கும் போது, உங்க
ரெண்டு பேருக்கும் நல்ல அறிமுகம்னு தோணுது.

32:25.112 --> 32:28.197
எனக்கு அந்த படமே ஞாபகம் இல்ல.

32:28.198 --> 32:29.949
அவ கொஞ்சம் நேரம் தான் பார்ட்டியில இருந்தா.

32:29.950 --> 32:31.325
அவ கூட வந்தவனுக்கு அங்க

32:31.326 --> 32:33.077
- இருக்கப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.
- என்ன?

32:33.078 --> 32:34.745
கூட வந்தவனா?

32:34.746 --> 32:36.832
டாவீட், அவன் எப்படி இருந்தான்னு ஞாபகம் இருக்கா?

32:37.916 --> 32:38.917
வெள்ளையா இருந்தான்.

32:39.751 --> 32:41.544
அவ ராபர்ட் கூட போயிருப்பாளோ?

32:41.545 --> 32:43.964
இல்ல. இல்ல, அவன் அந்த ஃபோட்டோவைப் பார்த்தே இல்ல.

32:45.883 --> 32:46.966
இதை கொஞ்சம் பார்க்கிறியா…

32:46.967 --> 32:49.051
- அவன் என் கிட்ட சொல்லியிருப்பான்.
- பொறு.

32:49.052 --> 32:50.720
எனக்காக இந்த ஃபோட்டோவைப் பார்க்குறியா?

32:50.721 --> 32:52.597
இந்த ஆளை உனக்குத் தெரியுதா?

32:52.598 --> 32:55.391
அவன் வெள்ளைன்னு தாண்டி எதாவது ஞாபகம்
இருந்திருந்தா நான் சொல்லி இருப்பேன்.

32:55.392 --> 32:57.101
போலீஸ் கிட்ட சொன்னேன். அது அவங்க பொறுப்பு.

32:57.102 --> 32:59.770
- நீ ஃபோட்டோவைச் சரியா கூட பார்க்கல.
- இல்ல, உன்னோட கடைசி கேள்வி அது தான்.

32:59.771 --> 33:00.856
இந்த…

33:01.690 --> 33:03.901
நான் ஜெயில்ல இருந்தேன். எதுக்காக?

33:04.651 --> 33:06.569
நான் ஒண்ணுமே பண்ணல. ஒண்ணுமே பண்ணல.

33:06.570 --> 33:09.489
சரி. உன்னோட நேரத்தை நிறைய எடுத்துட்டோம்.

33:10.741 --> 33:12.034
நன்றி.

33:15.412 --> 33:16.580
நீங்க எங்க இருந்தீங்க?

33:17.456 --> 33:18.582
என்ன?

33:19.374 --> 33:21.460
உங்க தோழி ஒரு மரணத்தோட சுழல்ல இருந்தா.

33:22.252 --> 33:24.337
தன்னோட சொந்த துக்கத்தில மூழ்கிக்கிட்டு இருந்தா.

33:24.338 --> 33:25.672
அதை தான் நான் கவனிச்சேன்.

33:26.256 --> 33:27.673
அதை தான் நான் வரைஞ்சேன்.

33:27.674 --> 33:30.259
சொல்லுங்க, நீங்க அவளுக்கு ரொம்ப தேவை
அப்படிங்கிற சமயத்தில நீங்க எங்க இருந்தீங்க?

33:30.260 --> 33:31.594
அவ அதை மறைக்கல.

33:31.595 --> 33:35.098
நீங்க அதைப் பார்க்கலைன்னா,
நீங்க அதைப் பார்க்க விரும்பலைன்னு அர்த்தம்.

33:36.600 --> 33:38.769
வா. நாம போகலாம்.

33:42.397 --> 33:45.399
நடுவுல உள்ள பொருட்கள்
கொஞ்சம் சீரா இருந்தா நல்லா இருக்கும.

33:45.400 --> 33:48.486
ஒவ்வாரு மூலையிலும் மூணு பேர் இருக்கணும்,
எந்தவொரு இடைஞ்சலும் இருக்கக் கூடாது.

33:48.487 --> 33:50.780
- எல்லா நேரமும். சரியா? நன்றி.
- …உன்னோட தப்பு.

33:50.781 --> 33:52.073
உன்னோட தப்பு.

33:52.074 --> 33:53.908
- அவன் ஒண்ணும்…
- நீதான்.

33:53.909 --> 33:55.160
உன்கிட்ட திரும்பத் திரும்ப…

34:04.294 --> 34:06.129
ஹே. ஒண்ணும் பிரச்சினை இல்லையே?

34:06.672 --> 34:08.381
நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல,

34:08.382 --> 34:11.717
போலீஸ் மேல அழுத்தத்தைக் கொடுக்க,
அந்த க்ரைசிஸ் PR ஃபர்மை பணி அமர்த்தியிருக்காங்க.

34:12.469 --> 34:14.179
அவங்க தான் அந்த ஃபோட்டோவைக் கசிய விட்டிருக்காங்க.

34:14.763 --> 34:16.014
உன்னால நம்ப முடியுதா?

34:16.889 --> 34:19.476
டாவீட் பொயெட் கைதானதுக்குக் காரணம் அவங்க தான்.

34:20.101 --> 34:21.477
அருவருப்பா இருக்கு.

34:21.478 --> 34:24.147
அதை பண்ணா ஊடகங்கள் நம்ம கிட்ட
வரமாட்டாங்கன்னு நினைச்சிருக்காங்க.

34:24.773 --> 34:26.189
ஆனால், ஒரு அப்பாவி மனுஷன்

34:26.190 --> 34:29.069
கம்பி எண்றதுல யாருக்கும் கவலையில்ல.

34:30.362 --> 34:34.533
நீ அவனைப் பார்த்ததில்ல, இல்லையா?

34:35.324 --> 34:36.408
யாரைச் சொல்ற?

34:36.409 --> 34:37.411
டாவீட்.

34:38.203 --> 34:40.289
அவனை நீ முதன் முதல்லா பார்த்தது
செய்திகள்ல தானே?

34:40.998 --> 34:43.541
எலனார், நீ இங்க தான் இருந்த.
நாம சேர்ந்து தான் பார்த்தோம்.

34:43.542 --> 34:44.709
நீ என்ன சொல்ல வர?

34:44.710 --> 34:47.295
நான்… நான் ஒண்ணும் சொல்ல வரல. நான்…

34:49.047 --> 34:52.841
ஒரு சக்தி வாய்ந்த குடும்பத்தில இருந்து வரதுன்னா
என்னன்னு எனக்குத் தெரியும்.

34:52.842 --> 34:56.428
அவங்க பின்னால எப்படி வேலை பார்க்கிறாங்கன்னு
நமக்குத் தெரியாது.

34:56.429 --> 35:01.143
ஆனால், நீ இந்த உலகத்தில உனக்குன்னு
ஒரு பாதை அமைச்சுக்கிட்டியே.

35:01.852 --> 35:03.520
- அப்படின்னு நினைக்கிற?
- ஆமா.

35:04.146 --> 35:08.567
அவங்க எப்பவும் என்னைக் கண்காணிச்சிட்டிருக்கிற
மாதிரி தான் தோணுது.

35:10.444 --> 35:12.529
ஆமா, ஆனால் உனக்கு முக்கியம்னு தோணுற
விஷயங்களை நீ பண்ற.

35:15.073 --> 35:17.075
அதை நான் வியக்குறேன்.

35:17.576 --> 35:18.952
எப்பவுமே.

35:20.287 --> 35:21.288
அப்பா?

35:22.206 --> 35:23.207
அப்பா!

35:26.919 --> 35:28.836
- ஹே.
- அம்மா பொருட்கள் எல்லாம் ஏன் பெட்டியில இருக்கு?

35:28.837 --> 35:30.881
நான்… நான் அதை ஒழுங்கு பண்ணிட்டிருக்கேன்.

35:31.465 --> 35:33.299
நீங்க அதை தூக்கிப் போடக் முடியாது.

35:33.300 --> 35:35.051
கோரா, நீ நினைக்கிற மாதிரி இல்ல இது.

35:35.052 --> 35:36.344
நீ புரிஞ்சுக்கணும்.

35:36.345 --> 35:38.930
அவ பொருள் எல்லா இடத்துலேயும்
இருநக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு…

35:38.931 --> 35:40.933
அதனால? அவங்க நினைவுகள அழிக்கப் போறீங்களா?

35:42.351 --> 35:44.810
இல்ல, இல்ல, அவனால் அதைப் பண்ண முடியாது.

35:44.811 --> 35:46.354
அதுக்கு சாத்தியமே இல்ல, கோரா.

35:46.355 --> 35:48.105
இது தான் என்கிட்ட இருக்கிறதே!

35:48.106 --> 35:51.400
இந்த பெட்டிகள்ல இருக்கிறது தான்
என் அம்மாவோட மிச்சமிருக்கிற நினைவுகள்.

35:51.401 --> 35:52.735
எனக்குப் புரியுது, செல்லம். நான்…

35:52.736 --> 35:54.696
கோரா. இங்க வா.

36:02.955 --> 36:06.959
நான் வச்சிருக்கிற கார் எங்க அப்பாவோடது.
இறக்குறதுக்கு முன்னால அவர் அதை வச்சிருந்தார்.

36:08.335 --> 36:12.339
இந்த நெக்லஸையும் எனக்குக் கொடுத்தாரு.

36:13.757 --> 36:17.844
அவரோட மீன்பிடி தூண்டிலையும்
நான் என் வீட்டில தொங்க விட்டிருக்கேன்.

36:17.845 --> 36:20.179
ஏன்னா அவர் அங்க இருக்கிறதை நான் உணர விரும்புறேன்.

36:20.180 --> 36:22.766
அதனால அந்த பொருட்களை எல்லாம்
எனக்கு நெருக்கமா வச்சிருக்கேன்.

36:24.434 --> 36:25.602
நீயம் அதை பண்ணலாம்.

36:26.436 --> 36:29.272
இந்த பொருட்களை எல்லாம் பாரு.

36:29.273 --> 36:33.110
எது உனக்கு அவள ஞாபகப்படுத்துதோ,
அதை எடுத்துக்கோ. உன்கூட நெருக்கமா வச்சுக்கோ.

36:34.444 --> 36:35.945
மிச்சமிருக்கிறதை,

36:35.946 --> 36:38.949
ஒரு ஸ்பெஷலான இடத்தில வச்சிடலாம்.

36:39.491 --> 36:42.744
ஓஹாய் வீட்ல கூட வச்சிடலாம்.

36:43.912 --> 36:47.249
அவங்க இருக்கிறதை உணரணும்னு விரும்பும் போதெல்லாம்
நீ அங்க போகலாம்.

36:48.458 --> 36:49.459
சரி.

36:51.712 --> 36:53.796
நீ உன்னோட அம்மாவ விட்டுக்கொடுக்க வேண்டாம்.

36:53.797 --> 36:56.633
உங்க அப்பா அப்படி செய்யச் சொல்லி கேட்கவே மாட்டார்.

37:07.436 --> 37:08.437
செல்லமே.

37:11.982 --> 37:13.066
ஹே. நன்றி.

37:19.781 --> 37:21.742
நின்னு போனதுக்கு அவளைக் குறை சொல்ல மாட்டேன்.

37:22.451 --> 37:24.870
ஸ்கூலுக்குப் போனா ஒருவேளை
அங்க அவ சந்தோஷமா இருக்கலாம்.

37:27.289 --> 37:29.123
பிறந்தநாளை நல்லா சொதப்பிட்டேன்.

37:29.124 --> 37:32.084
நான் தான் அந்த பார்ட்டியை நடத்தணும்னு
கட்டாயப்படுத்தினேன்.

37:32.085 --> 37:34.129
நீ உதவி மட்டும் தான் பண்ணியிருக்க.

37:34.713 --> 37:36.465
கோராவுக்கு கொஞ்சம் நேரம் தேவைன்னு நினைக்கிறேன்.

37:37.633 --> 37:39.050
இது இயல்பானது இல்ல, தெரியுதா?

37:39.051 --> 37:41.178
தன்னோட பெற்றோரை இழக்குறதுக்கு
யாரும் ஒரு குழந்தையை தயார் பண்றது இல்ல.

37:41.720 --> 37:43.347
யாரும் நம்மள தயார் பண்ணல.

37:46.141 --> 37:49.561
போலீஸ் வந்து அவளோட பொருட்களை எடுத்துப் போனப்ப,
ஒரு பக்கம் நிம்மதியா இருந்துச்சு.

37:50.395 --> 37:54.106
நான் அவள் நினைவுகளை அழிக்க விரும்பல,
ஆனால் எங்க பார்த்தாலும்,

37:54.107 --> 37:58.819
அவ ரகசிய வாழ்க்கையை ஞாபகப்படுத்துற மாதிரி
அவ பொருள் ஏதாவது இருக்கு.

37:58.820 --> 38:00.948
எனக்குத் தெரியமா மறைச்ச ஒரு தொடர்பு.

38:02.783 --> 38:05.619
கொடுமையா இருக்கு. எல்லா பக்கமும் இருக்கு.

38:09.498 --> 38:13.252
இந்த பொருட்களை எல்லாம் வைக்க
ஒஹாய் வீடு பொருத்தமான இடமா இருக்கும்.

38:14.002 --> 38:15.003
ஆமா.

38:15.629 --> 38:18.048
அங்க தனியா போறது
கஷ்டமா இருக்கும்.

39:15.981 --> 39:17.983
ஓவியப் பொருட்கள்
மற்றவை

39:31.079 --> 39:32.581
ஓவியப் புத்தகங்கள்

40:05.322 --> 40:08.157
அதை எங்க வீட்ல எல்லார் மேலயும் போட்டியிருக்கா.

40:08.158 --> 40:09.826
எல்லாரும் அதை வெறுத்தாங்க.

40:10.327 --> 40:11.994
ஆனால் அது அவளை ரொம்ப சிரிக்க வச்சது.

40:11.995 --> 40:14.915
அதை ஒவ்வாரு முறையும் தூக்கி எறியும் போது
மணிக்கணக்கா சிரிப்பா.

40:22.714 --> 40:24.007
வேடிக்கை.

40:33.976 --> 40:36.395
அவ எவ்வளவு வலியில இருந்தான்னு எனக்குத் தெரியல.

40:37.938 --> 40:43.150
அவளுக்குள்ள என்ன நடக்குதுன்னு
நான் எப்படி தெரிஞ்சுக்காம போனேன்?

40:43.151 --> 40:44.820
நம்ம யாருக்குமே தெரியல.

40:46.196 --> 40:47.447
அதை கவனிக்கத் தவறிட்டேன்.

40:48.198 --> 40:50.200
நான்… நான் அதை கவனிக்கத் தவறிட்டேன்.

40:51.451 --> 40:54.161
ஹே. பரவாயில்ல. நானும் தான் கவனிக்கல.

40:54.162 --> 40:55.247
கடவுளே.

44:06.396 --> 44:09.441
எனக்கு ராபர்ட்டைப் பிடிக்குமான்னு
ஒரு முறை கேட்டா.

44:14.404 --> 44:16.823
நான் வேகமா இல்லேன்னு சொன்னேன்.

44:22.412 --> 44:27.084
நான் பொய் சொல்றேன்னு அவளுக்குத் தெரிஞ்சிருக்கணும்.
எப்படித் தெரியாம இருக்கும்?

44:31.922 --> 44:36.802
அவளைப் போல நடிக்கிறதுக்கு, எனக்குப் பிடிச்ச
பரிணாமத்தில என்னை காண்பிக்கிறதுக்கு

44:37.761 --> 44:40.347
எனக்கு எப்பவுமே தெரியாது.

44:43.308 --> 44:45.894
அதனால, இது எனக்கான வாய்ப்பா இருக்கலாம்.

44:47.521 --> 44:49.398
அவ கூட இதைப் புரிஞ்சிக்கலாம்.

44:50.190 --> 44:53.109
ஏன்னா, அவளும் பொய் சொல்லிட்டிருந்திருக்கா.

44:53.110 --> 44:55.069
ராபர்ட் கிட்ட.

44:55.070 --> 44:56.446
எங்க எல்லார் கிட்டேயும்.

45:07.082 --> 45:11.086
நான்ஸி,
நான் மன்னிப்புக் கேட்டு ஆரம்பிக்கிறேன்.

45:11.837 --> 45:14.256
நான் நடந்துக்கொண்ட விதம் ரொம்ப கொடுமை.

45:15.424 --> 45:16.507
நான் உன்கிட்ட மோசமா நடந்துகிட்டேன்…

45:16.508 --> 45:17.592
ராபர்ட் ஹென்னஸி

45:17.593 --> 45:19.928
…உன்னை ரொம்ப பயமுறுத்துனதுக்கு மன்னிச்சுடு.

45:20.470 --> 45:22.889
ஆனால் நீ வேற ஒருத்தனோட உறவு வச்சிருக்கும் போது

45:22.890 --> 45:24.641
நான் கோபப்படுறதுக்கு
என் மேல தப்பு சொல்ல முடியாது.

45:28.145 --> 45:30.981
ஹே. உனக்கு ஒண்ணுமில்லையே?

46:25.494 --> 46:27.496
தமிழாக்கம்
மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்
